• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீயாய் சுடும் என் நிலவு 27:

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
அவளின் வார்த்தைகள் அவனுக்குள் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்க, மூன்று நாட்கள் மிருதியை சந்திக்காமல் தவிர்த்து நடமாடினாலும் அவளின் உடல்நிலையை அறிந்தவன் என்பதால் தூரத்தில் இருந்து கண்காணித்து வந்தான்.

அவ்வப்பொழுது மிருதி வலியில் துடிக்கும்பொழுது அருகில் சென்று தேவையானவற்றை செய்து சற்று குணமானதும் விலகி நிற்பான்.

அவளின் கோபம் ஒருபுறம் இருந்தாலும் தீரனின் மேல் இருந்த காதல் அதைவிட பெரியது என்றபோதும் அவன் தன்னிடம் அனைத்தையும் மனம்விட்டு பேசி மன்னிப்பு கேட்டு சரியான காரணத்தை கூறவேண்டும் என்று எதிர்பார்த்தாள் மிருதி.

மிதிஷாவின் முன் இருவரும் பிணக்கம் இருப்பது போல் காட்டிக்கொள்ளாமல் இருந்தார்கள்.

தீரனின் கிளை அலுவலகம் திறக்கும் வேலைகளும் ஒரு வழியாய் முடிந்துவிட இன்னும் இரண்டு நாளில் கிளம்பவேண்டும் என்று தவித்தான்.

மிருதியும் தீரனிடம் முகம் கொடுத்து பேசினாலே எங்கே அவனை மன்னித்து ஏற்றுக்கொள்வோமா என்று பயந்து அவளும் நெருங்காமல் அவனையும் நெருங்கவிடாமல் தனிமை எனும் வலையில் நுழைந்து தவித்துக்கொண்டிருந்தாள்.

நேரில் தீரனை தனியாக சந்தித்த அமுதன்.

"தீரன் பேசுனிங்களா தி கிட்ட? அவளை சமாதானம் பண்ணிட்டீங்களா?" என்று கேட்டான்.

"இல்ல அமுதன். எங்க என்னை பார்த்தாலே ஒண்ணு எரிக்கிற மாதிரி முறைக்கிறா இல்ல என் கண்ணுலையே படாம ஓடிட்றா? அதுவுமில்லாம அவளுக்கே உடம்பு முடியாத இந்த நேரத்துல நானும் சேர்ந்து டென்ஷன் பண்ணனுமான்னு யோசிக்கிறேன்?" என்றான் தீரன் மெதுவாய்.

"ஓஹ் அப்படியா சொல்றிங்க? எனக்கு வேற மாதிரி தோணுதே?" என்றான் அமுதன்.

"என்ன?" லேசாக திணறியபடி.

"அது... எனக்கென்னவோ தி எப்படி உங்களை கிட்ட நெருங்க விட்டா எதுக்காக இப்படி தன் வாழ்க்கை உங்களால மாறுச்சுன்னு தெரியாம போய்டுமோன்னு தள்ளி நிக்கிறாளோ அதே போல தான் நீங்களும் அவகிட்ட நெருங்க பயபட்றிங்கன்னு தோணுது?" என்றான் கேலியாக அமுதன்.

"நான் எதுக்கு பயப்படணும்? எனக்கு எதுவும் பயமில்லை?" என்றான் தீரன் மிகவேகமாய்.

"இருங்க எதுக்கு இவ்ளோ பதட்டம்? உண்மையை பார்த்து பயபட்றிங்க நீங்க ரெண்டு பேரும். உங்க கடந்த காலத்தை பற்றி நிச்சயமா திகிட்ட சொல்லவேண்டி வரும்னு உங்களுக்கு பயம். அதோடு மட்டுமில்லை அவளோட கேள்வி எவ்ளோ பயங்கரமானதா இருக்கும்னு உங்களால நினைச்சுக்கூட பார்க்க முடியலை. அதான் இந்த தடுமாற்றம். உண்மையை ஏத்துக்கோங்க. நானும் ஒரு ஆண் தான். என்னால உங்களை புரிஞ்சுகிட முடியுது தீரன். ஆனா?" என்று அமுதன் நிறுத்த கேள்வியாய் என்ன என்பது போல் பார்த்தான் தீரன்.

"இது தான் உங்களுக்கு கிடைச்சிருக்குற பெரிய வாய்ப்பு. இவ்ளோ நாள் இருந்துட்டீங்க. இப்போ பேசாம நாளைக்கு போய்ட்டிங்கன்னா இதுக்கப்புறம் தி கிட்ட உங்களுக்கு இது மாதிரி பேச வாய்ப்பு கிடைக்குமான்னு என்னால சொல்ல முடியாது. அதனால இன்னைக்கு எப்படியாவது பேசிடுங்க." என்றான் அமுதன்.

"அமுதன் .." என்று தீரன் இழுக்க.

"அஸ் எ ஃப்ரெண்டா சொல்றேன். தி உங்களுக்கு கிடைச்ச பொக்கிஷம். ஒரு தடவை அவளை மிஸ் பண்ணிட்டீங்க. மறுபடியும் அதே தப்பை பண்ணிடாதீங்க. வேற ஒரு பொண்ணு அவ நிலைமைல இருந்தா இந்நேரம் மண்ணோடு மக்கி போய்ருப்பா இல்ல உங்களை உங்க சொந்தக்காரங்க முன்னாடி ரொம்ப அவமான படுத்தி தலைகுனிய வச்சிருப்பா. ஆனா என் தி உங்களை அவ உயிரை விட அதிகமா நேசிக்கிறா. நீங்க, அவளுக்கு உங்களை அறியாமலே கொடுத்த பொக்கிஷமா மிதிஷாவை நினைக்கிறா. மிதிஷா ரூபத்துல உங்களை பார்க்கிறா." என்று தீரனை பார்க்க ஆச்சர்யத்தில் வாய் பிளந்து நின்றான்.

"என்ன இதெல்லாம் தீ என்கிட்ட சொன்னாளான்னு கேக்குறீங்களா? இல்ல எதையுமே பொண்ணுங்க அவ்ளோ சீக்கிரம் வாய திறந்து மனசுல இருக்கிறதை சொல்ல மாட்டாங்க. அவங்க மனசுல இருக்கிறதை நாம புரிஞ்சுகிட்டு செய்யணும்னு நினைப்பாங்க. ஆனா, தி இன்னும் ரொம்ப அழுத்தக்காரி அவ மனசுல இருக்கிற சந்தோஷம் மட்டுமில்லை சோகத்தை கூட வெளிய சொல்லமாட்டா. நீங்க அவளை உங்க உண்மையான காதலால மறுபடியும் உங்களுக்கு சொந்தமாக்கிக்கோங்க. எனக்கு என்னோட தி குடும்பமா சந்தோஷமா நல்லா இருக்கணும். அவ இதுவரைக்கும் ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்தது போதும். அதுக்கான முயற்சி உங்ககிட்ட தான் இருக்கு." என்றான் விழிகளில் ஒரு துளி கண்ணீரோடு.

"உங்களை மாதிரி ஒரு ஃப்ரெண்ட் கிடைச்சத்துக்கு மிருதி ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும்." என்று அமுதனை தழுவிக்கொண்டான்.

"நீங்க வேற தீரன். தி மாதிரி ஒரு ஃப்ரெண்ட் கிடைக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கனும். என்னோட சின்ன வயசு ரொம்ப கொடுமையானது தீரன். அப்பா இல்லாம அம்மா மட்டும் தான். எல்லோரும் கிண்டல் பண்ணி என்னை ஒதுக்கினப்ப தேவதையா வந்தா. எனக்கு அப்பப்போ படிப்புன்னு மட்டும் இல்ல நிறைய வகைல உதவி செஞ்சுருக்கா. நான் நல்ல நிலமைல இருக்கேன். அதை பார்க்க எங்கம்மா இன்னைக்கு இல்ல. எங்கம்மாவுக்கு அப்புறம் அவங்க இடத்துல மரியாதையா வச்சு பார்க்கிற ஒரே ஆள் தி தான்." என்று தன் கண்ணீரை மறைக்கும் விதமாக வேறு புறமாக முகத்தை திருப்பினான்.

"என்னோட கடந்த காலத்தை பற்றி மிருதிகிட்ட சொல்ல எனக்கு கொஞ்ச தயக்கமா இருந்தது. ஆனா இனியும் தாமதிச்சா மிருதியோட நான் சேர்ந்து வாழ முடியாம போய்டும்னு தெளிவா புரியவச்சிட்டிங்க. இன்னைக்கே நான் பேசுறேன். மிருதி என்னை ஏத்துப்பாளா? " என்றான் தீரன்.

"உங்களுக்கு மிருதி மனசுல இருக்கிறதை தெரிஞ்சிக்கணும் அவ்ளோதானே? அப்போ" என்று நிருதினான்.

"இப்போ நான் என்ன செய்யனும் அமுதன்?" என்றான் தீரன்.

"ஒண்ணுமில்லை தீக்கு போன் பண்ணி இன்னைக்கு வீட்டுக்கு வரமுடியாதுன்னு சொல்லுங்க" என்றான் அமுதன்.

"வீட்டுக்கு போகலைன்னா மிருதிக்கிட்ட எப்படி பேச முடியும்?" என்றான் குழப்பமாய் தீரன்.

"சொல்றேன்ல? செய்ங்க" என்று சிரித்தான் அமுதன்.

"சரி" என்று தன் போனில் மிருதிக்கு போன் செய்து, "ஹலோ! மிருதி இன்னைக்கு என்னால வீட்டுக்கு வரமுடியாதுன்னு நினைக்கிறேன்" என்றான் அமுதன்.

"ஹிம்ம சரி " என்றாள் மிருதி.

"நீ தனியா இருப்பல்ல." என்றான் தீரன்.

"இத்தனை வருஷம் தனியா தானே இருந்தேன். நான் இருந்துப்பேன்." என்று வைத்துவிட்டாள் மிருதி.

"சொல்லிட்டேன் " என்று நிமிர்ந்தான் தீரன்.

"தி பத்தி எனக்கு நல்லா தெரியும். நீங்க பார்க்கிற தீ வேற. ஆனா தி இயல்பா எப்படி இருப்பான்னு இன்னைக்கு நீங்க பார்க்க போறிங்க." என்று புன்னகையோடு கூறும் அமுதனை வியப்பாய் பார்த்தான் தீரன்.

"என்ன அப்படி பார்க்குறிங்க? இப்போ என்ன நடக்கும்னு சொல்லட்டா?" என்று குறும்பாய் கேட்டான் அமுதன். 'சரி' என்று தலையசைத்தான்.

'நீங்க வீட்டுக்கு வரமாட்டேன்னு சொன்னதால எப்பவும் எட்டறை மணிக்கு வீட்டுக்கு வர்ரவ இன்னைக்கு ஆறு மணிக்கெல்லாம் போய்டுவா." என்றான் அமுதன் விஷமமாய் புன்னகைத்து.

விழிகளை அகல விரித்து ஆச்சர்யமாய் அமுதனை தீரன் பார்க்க.

"நீங்க என்ன பண்றிங்க? ஏழு மணிக்கு வீட்டுக்கு போங்க." என்றான் அமுதன்.

"நான் தான் வரமாட்டேனு சொல்லிட்டேனே அப்புறம் ஏன் போகணும்?" என்று எதுவும் புரியாமல் தீரன் கேட்க.

"யோவ் மக்கு! நான் சொல்லி முடிக்கிறதுக்குள்ள என்ன அவசரம்?" என்று கேட்க தீரன் அமுதனை வாயை பிளந்து பார்த்தான்.

"சாரி! ஏதோ கொஞ்சம் உரிமையா சொல்லிட்டேன்" என்று மழுப்பலாக சிரித்து தலையை சொறிந்து நின்றான் அமுதன்.
 
Top