• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீயாய் சுடும் என் நிலவு 32

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
"போதுமா இது தான் நடந்தது? உங்க கடந்தகால வாழ்க்கையை எதுவுமே எனக்கு தெரியாதப்ப நீங்க பேசினதையும் பண்ணத்தையும் மன்னிச்சு உங்க கூட வாழறதுக்கு நான் ஒண்ணும் மகான் இல்ல உயிரும் சதையும் மனசும் உள்ள சாதாரண மனுஷி. எல்லா பொண்ணுங்களை மாதிரி எனக்கும் ஆசை கனவு எல்லாம் இருந்துச்சு.உங்க முகத்தை கூட பார்க்க கூடாதுன்னு தான் இங்க வந்துட்டேன்.

என்ன தான் நீங்க பண்ணது தப்புன்னாலும் என்னோட காதல் உண்மை தானே? அதனால என்னோட பொன்னை ஆனந்தமா பெற்றெடுத்தேன். நான் இங்க வந்தனாள்ள இருந்து இன்னைக்கு வரைக்கும் என்னோட ஒவ்வொரு அழுகளையும் சிரிபூலையும் ஸ்ரீஷாவும் அமுதனும் என்னோட என்கூடவே இருந்தாங்க இருக்காங்க." என்று நிறுத்தினாள்.

"எல்லாத்துக்கும் மேல நான் பிள்ளைதாசியா வெளிய போய் வேலை செய்யா கூடாதுன்னு அவங்க ரெண்டு பேரும் எங்காக இந்த கேஃபை வாங்கி கொடுத்தாங்க. பணம் வேணா எண்ணுதா இருக்கலாம். ஆனா, வாங்கி கொடுத்து உன்னால முடியும்னு தைரியம் கொடுத்தது அவங்க தான். " என்று தன் தோழனை நினைத்து சிரித்தாள்.

சில நொடிகள் விழிகள் மூடி அமைதியாய் இருந்தவள் பேரு மூச்சை வெளிபடுத்தி அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.

"இப்போ சொல்லுங்க இவ்ளோவும் தெரிஞ்சபுரம் உங்கக்கூட சேர்ந்து வாழ என்னால முடியும்னு நினைக்கிறீங்களா? நீ தான் என்னை விரும்புறியே? என்கூட சேர்ந்து வாழ்ரதுல உனக்கென்ன கஷ்டம்னு கேட்காதீங்க. அதுவேற. நான் உங்களை விரும்புறேன் உண்மை தான். ஆனால், என்னோட காதல் என்னைக்கும் நினைவுகளாவே இருக்கட்டும்னு முடிவு பண்ணிட்டேன்." என்றாள் நிதானமாக.

"என்ன சொல்...ற நீ?" என்றான் தீரன் தடுமாற்றமாக.

"இந்த முடிவுக்காக காலத்துக்கும் நான் அழுவேன்னு நல்லா தெரியும். இருந்தாலும் இதுக்கு மேலையும் என்னால உங்கக்கூட நிச்சயமா வாழ முடியாது. " என்றாள் மிருதி விழிகளில் நீரோடு கனத்த மனதோடு.

"இல்ல.." என்றான் தீரன் அதிர்ச்சியாய்.

"உங்களை என் உயிருக்கும் மேலா விரும்புறேன். நான் இந்த மண்ணுக்குள்ள போகிற வரைக்கும் அது மாறாது. உங்களை விரும்பினாதாள இப்போ கூட உங்களை மன்னிச்சு ஏத்துக்காதான் என் மனசு மல்லுக்கட்டுது." என்றாள் மிருதி சோகமாய் புன்னகைத்து.

'ஆனா, நீங்க எனக்கு ஏற்படுத்தின காயம் அதைவிட ரொம்ப பெருசு. இதெல்லாத்தையும் விட நீங்க அடிச்சதுல இன்னைக்கு வரைக்கும் எனக்கு ஹெல்த் சரி இல்லாம இருக்கு. எப்போ சரியாகும்னு சொல்ல முடியாது. என்ன வேணா நடக்கலாம். அதனால தான் இப்போ உங்களை கூப்பிட்டு என் பொண்ணை உங்கக்கூட அனுப்ப முடிவு செஞ்சேன்" என்றாள்.

அவளின் ஒவ்வொரு வார்த்தையும் இதயத்தில் சம்மட்டியாய் விழ, பேசமுடியாமல் அவளிடம் மன்னிப்பு கேட்கும் குழந்தையாய் மண்டியிட்டு கண்ணீரில் கரைந்தான்.

"மிரு! நான் எவ்ளோ பெரிய தப்பு பண்ணிருக்கேன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. உனக்கு எவ்ளோ வலிகளை கொடிதிருக்கேன்னு என்னால உணர முடியுது. ஏற்கனவே உன்னை இந்த மூணு வருஷம் பிரிஞ்சு வாடுறேனே இது போதலையா? ப்ளீஸ் அதுக்காக என்னை இப்படி ஒரேடியாய் ஒதுக்கி வச்சிராத. எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு. உன்னோட காயத்துக்கு மருந்தா இருக்க முயற்சி பண்றேன்" என்றான் தீரன்.

ஓடி சென்று அணைத்துகொள்ள மனம் துடித்தாலும், விழிகளை மூடி ஒரு சில நிமிடங்கள் அமைதியாய் இருந்தவள். "இல்ல எனக்கு இந்த கல்யாணத்தை நினைச்சாலே சொல்ல முடியாத தூக்கம் தொண்டையை அடைக்குது. அந்த கசப்பான நினைவுகளோட உங்களோட என்னால வாழமுடியாது. அது தான் உண்மையும்கூட.

அதனால,..." என்று தடுமாறியவளை ஒரு முடிவோடு பார்த்தான் தீரன்.

"நீங்க திஷாவை கூட்டிக்கிட்டு கிளம்புங்க. உங்களுக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சிக்கோங்க. பாப்பாவை பத்திரமா பார்த்துக்கோங்க. எங்கூடயே இருந்ததால கொஞ்ச நாள் என்னை கேட்பா. அவ குழந்தை புரிஞ்சுப்பா. அடிக்கடி அவகிட்ட பேசுறேன். எனக்கு என்னைக்காவது அவளை பார்க்கணும்னு தோனினா நான் பார்க்க வரேன்" என்றவள் அதற்குமேல் தாளமுடியாமல் தனதறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள்.

அவளின் வார்த்தைகளில் பலமாய் தாக்கபட்டவன் அதிர்ச்சியாய் நிற்க சுயத்திற்கு வந்து கதவை தட்டினான்.

"நீ எப்படி என்னை மறக்க முடியாதோ என்னாலையும் உன்னை மறக்க முடியாது. எத்த்நை முறை மினாலும் திரும்ப திரும்ப முயற்சிபென். என் வாழ்க்கைல இனி ஒரு பொண்ணுக்கு மட்டும் தான் இடம் உண்டு அது நீ மட்டும் தான் மிரு. " என்றான் தீர்க்கமாய்.

ழுகையில் கரைந்து கொண்டிருந்தவள் முகத்தை கோவமாக துடைது கொண்டு,

"சும்மா இங்க தேவை இல்லாததை பேசி நேரத்தை வீணடிக்காதீங்க. கிளம்புங்க. உங்க வீட்டுக்கு டைவோஸ் பேப்பர்ஸ் வரும். ஒழுங்கா சைன் பண்ணுங்க. அப்படி இல்ல இங்கிருந்து யாருக்கும் சொல்லாம போய்டுவேன்" என்றாள் முடிவாய்.

ஏது செய்வது என்று தெரியாமல் அங்கேயே அமர்ந்திருந்தவன் நீண்ட நேரம் கழித்து வெளியேறினான்.

"என்ன பா. என்ன தான் சொன்னா அந்த சண்டி ராணி?" என்றான் அமுதன் சிரித்து போனில்.

"என்ன சொன்னா?" என்று தன் தலையை லேசாக கோதியவன்.

தொண்டை அடைக்க, "என் வாழ்க்கையை புரட்டி போட்டுட்டா" என்றான் வேதனையாய்.

"தீரன்! என்ன நடந்தது? எங்க இருக்கீங்க? என்ன சொன்னா மிருதி?" என்றான் அமுதன்.

"மொத்தமா இத்தனை வருஷமா அவ் மனசுல இருந்த எல்லாத்தையும் கொட்டிட்டா. என்னையும் வெளியே தள்ளிட்டா" என்று சிரித்தான் விரக்தியாய்.

"என்ன வீட்டை விட்டு வெளிய தள்ளிட்டாளா?" என்றான் அமுதன் அதிர்ச்சியாய்.

"அட நீங்க வேற பாஸ். என்னை வ வாழ்க்கைல இருந்தே வெளியே தள்ளிட்டான்னு சொல்றேன். வீட்டை விட்டு தள்றது பெரிய விஷயமா?" என்றான் தீரன்.

"ப்ளீஸ் தீரன் எனக்கு டென்ஷன் ஏறுது. என்ன நடந்தது சொலுங்க?" என்றான் அமுதன் பதட்டமாய்.

"நான் திஷாவை கூட்டிட்டு போகனுமாம். இனி எங்க வாழ்க்கைல அவ இருக்க போறதில்லையாம். அதோட அவளுக்கு டைவோஸ் கொடுக்கணுமாம். இல்லன்னா.." என்று பேச முடியாமல் திணறினான்.

"இல்லன்னா" என்றான் அமுதன்.

"இல்லன்னா யாருக்கிட்டையும் சொல்லாம இங்க இருந்து போய்டுவாளாம்" என்றான் தீரன்.

"இப்போ எங்க இருக்கீங்க?" என்றான் அமுதன்.

"எங்க இருப்பேன்? நடுரோட்டுல" என்றான் தீரன்.

"இங்க என் வீட்டுக்கு வாங்க. அவகிட்ட நான் பேசுறேன். எங்க இருக்கீங்க சொல்லுங்க நான் வரேன்" என்றான் அமுதன் உடனே.

"இல்ல அமுதா. அவ ஏற்கனவே என்னால நிறைய இழந்துட்டா. ஸ்ரீஷாவையும் உங்களையும் இழக்க கூடாது. நான் இங்க பக்கத்துல ஹோட்டல்ல தங்கிக்கிறேன். நாளைக்கு ஊருக்கு போறேன். திஷாவை ஒரு முறை அவகிட்ட காட்டிட்டு உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுங்க. நாங்க அங்க இருந்து கிளம்புறோம்" என்று எதுவும் பேசுவதற்க்கு முன் துண்டித்தான் தீரன்.

உடனே ஸ்ரீஷாவிற்கு போன் செய்தவன். "உடனே வீட்டுக்கு போ. நா வரேன்" என்றான்.

"ஏன் என்னாச்சு? இந்த நேரத்துல போக சொல்ற?" என்றாள் ஸ்ரீஷா.

"ஸ்ரீ சொன்னா உடனே செய். இன்னும் அரைமணி நேரத்துல நீ அங்க இருக்கணும். நானும் இருப்பேன். உங்கக்கா என்ன வேலை செஞ்சு வச்சிருக்கானு போய் தெரிஞ்சுக்க" என்று பட்டென்று வைத்தான் அமுதன்.

அமுதன் இதுவரை கோபமாக பேசி பார்திராத ஸ்ரீஷாவிற்கு என்ன நடந்திருக்கும் என்று ஒன்றும் புரியாமல் கிளம்பினாள்.

வீட்டின் வாசலில் நின்று மணியை அடிக்க திறக்காமல் போனதால் மிருதிக்கு போன் செய்தாள்.

"என்னடா எந்த நேரத்துல? சாப்டியா ?" என்றாள் மிருதி தன் தூக்கத்தை மறைத்து.

"அக்கா! நான் வீடு வாசல்ல தான் நிக்குறேன். எவ்ளோ நேரமா பெல் அடிக்கிறேன். ஏன் திறக்கமாட்டேன்றிங்க?" என்றாள் ஸ்ரீஷா.

"அடடா! இரு வரேன்" என்று வந்து கதவை திறந்தவள்.

"நாளைக்கு தானே வறேன்னு சொன்ன? இன்னைக்கே வந்துட்ட?" என்றாள் மிருதி.

"ஆமா ஒரு நாள் முன்னதாவே கூட்டிட்டு வந்துட்டாங்க அக்கா" என்றவள் அவளின் முகத்தை பார்த்து எதுவோ சரியில்லை என்று புரிந்து கொண்டாள்.

"என்னாச்சு கா? ஏன் அழுதுருக்கிங்க? முகம் இவ்ளோ வீங்கிருக்கு?" என்றாள் ஸ்ரீஷா.

"அதெல்லாம் எதுவும் இல்லை நான் நல்லா தான் இருக்கேன்" என்றாள் மிருதி.

"எது ஒண்ணுமில்லை தி" என்று உள்ளே வந்தான் அமுதன்.

தூங்கும் கைகளில் திஷாவை தோள் மேல் கிடத்தியிருக்க, குழந்தையை வாங்கி கொண்டு உள்ளே சென்று படுக்க வைத்தாள் ஸ்ரீஷா.

இந்த நேரத்தில் அமுதனை எதிர்பார்க்காதவள் சற்று அதிர்க்கியானாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல், "என்ன இந்த நேரத்துல நீ வந்துருக்க?" என்றாள் மிருதி.

"எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைக்காத தி? " என்றான் அமுதன் காட்டமாய்.

இதுவரை அமுதனை கோபமாய் பார்த்திராதவள் சற்று துணுக்குற்றாலும், "என்ன தெரியும் உனக்கு? என்ன இன்னேறதிர்க்கு வினதுருக்கேன்னு கேட்டேன்? அதுக்கு இது தான் பதிலா?" என்றாள் மிருதி.

"பேச்சை மாத்தாத தி? நான் ரொம்ப கோவத்துல இருக்கேன். நாங்க நல்லா இருக்கணும்னு நீ நினைக்கும் போது நீ நல்லா இருக்கணும்னு நாங்க நினைக்க கூடாதா?" என்றான் அமுதன்.

"யார் சொன்னது அப்படின்னு? தாராளமா நினைக்கலாமே" என்றாள் மிருதி என்ன பேசுகின்றான் என்று புரிந்து.

"அப்போ ஏன் தீரன்கிட்ட டைவர்ஸ் கேட்ட தி? நீ உன் புருஷன் கூடவும் குழந்தை கூடவும் சேர்ந்து வாழனும் நாங்க நினைக்கிறதுல ஏதாவது தப்பிருக்கா? அவர் பண்ண தப்புக்கு தான் ஏற்கனவே தண்டனை கொடுத்திட்டியே அப்புறம் இது எதுக்கு" என்றான் அமுதன்.

"அமு! ப்ளீஸ் நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன். என் முடிவை மாத்தா முயற்சிக்காத" என்றாள் மிருதி முடிவாய்.

ஒரு சில நிமிடங்கள் அமைதியாய் அவளை பார்த்தவன். "சரி. என்ன காரணம்னு தான் கேட்டேன். அதைக்கூட சொல்ல விருப்பம் இல்லன்னா பரவால்லை. நான் கிளம்புறேன்" என்று கிளம்பினான் அமுதன்.

"நில்லு அமு. சொல்றேன். ஆனா நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்." என்று தீரனின் கடந்தகால வாழக்கையும் நடந்த அணைத்தையும் கூறியவள் தேம்பி தேம்பி ஆழ ஆரம்பித்தாள்.
 
Top