• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீயாய் சுடும் என் நிலவு 35

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
"அம்மா" என்ற குரலில் தான் உயிர் தந்த அழகு மலர் விழிகள் துருத்துருவென மின்ன வண்ண பட்டாம்பூச்சியாய் ஓடி வருவதை கண்டு உள்ளம் நெகிழ மடங்கி மண்டியிட்டு விழிகளில் நீர் பெருக கரம் விரித்து "திஷா குட்டி! " என்றாள்.

இந்த காட்சியை காண தான் மனம் இவ்வளவு நாள் ஏங்கியிருந்தவனுக்கு நெஞ்சம் நிறைந்திட்டாலும் ஒருநொடி கல்லானவன். தன்னை தாண்டி செல்லும் மகளை "திஷா செல்லம்" என்றான்.

ஓடிக்கொண்டிருந்த குழந்தை ஒரு நொடி திரும்பி அப்பாவையும் அம்மாவையும் மாறி மாறி பார்த்துவிட்டு தீரனின் விரிந்த கரங்களுக்குள் அடைகலமானது.

"செல்லக்குட்டி எந்திரிச்சிட்டீங்களா என்று அணைத்து கொண்டவன் நிஷாவின் கன்னத்தில் முத்தமிட்டு சிறுகுரலில், "அப்பா சொன்னது ஞாபகம் இருக்கில்லடா செல்லாம். ப்ளீஸ் அதுமாதிரி செய்டா குட்டிமா" என்றான் யாருக்கும் கேட்காவண்ணம்.

தந்தையின் முகத்தை ஒரு முறை பார்த்து சிரித்த குழந்தை தலையாட்டியது.

குழந்தை தன்னிடம் வரவில்லை என்பதை உணர்ந்தவள் இருவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு உள்ளே வேகமாய் சென்றுவிட்டாள்.

இவையனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீஷா என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தாலும் பின், "திஷாகுட்டி! எப்படி இருக்கீங்க?" என்று குழந்தையை தூக்கவர, குழந்தையை தராமல் பின்னுக்கு இழுத்த தீரன் மிருதி தங்களை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள் என்று அறிந்து, "இங்க பாருடா. நீ எப்போ வேணா திஷாகுட்டியை தூக்கலாம் கொஞ்சலாம்.. ஆனா உன்னை தவிர வேற யாரும் தூக்கக்கூடாது. உனக்கு பாப்பாகூட விளையாடனும்னா நம்ம வீட்டுக்கு வந்து நாள் முழுக்க விளையாடு. எந்த காரணத்துக்காகவும் என் பொண்ணை உன் வீட்டுக்கு கூட்டிட்டு போகக்கூடாது." என்று அழுத்தி மிரட்டும் குரலில் கூறினான்.

முதலில் சற்று தடுமாறினாலும் சரி என்று தலையசைத்தால் ஸ்ரீஷா.

இதனை பார்த்துக்கொண்டிருந்த மிருதிக்கு நெஞ்சம் கனத்தது.

'நீதானே அவங்க வேண்டாம்னு ஒதுக்கி வச்ச? இப்போ அழுதுபெண்ணா பிரயோஜனம். நீ பார்க்கிற தூரத்துளையாவது ரெண்டு பேரும் இருக்காங்களே என்று ஆறுதல் படுத்திக்கொண்டு சமயலறை ஜன்னலில் இருந்து நகர்ந்துவிட, அதனை கவனித்த தீரன்.

'நல்லா அழுடி பொண்டாட்டி. நீயா எடுத்த முடிவு தான். உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா என்னையும் என் பொண்ணையும் வேணாம்னு சொல்வ? அதுக்காக தான் வந்துருக்கேன். இவ்வளவு நாள் நான் செஞ்ச தப்புக்கு நீ என்னை வெறுகிறேன்னு உன்கிட்ட இருந்து ஒதுங்கி இருந்தேன். ஆனா, நீ உன் உயிரைவிட என்னை அதிகமா நேசிக்கிறேன்னு தெரிஞ்ச பிறகு ஒரு முடிவுக்கு வந்துட்டேன். உன்கிட்ட இருந்து விலகியே உன்னை நெருங்க போறேன். இப்போ நீ செஞ்சிருக்க வேலைக்கு உன் ஒவ்வொரு அணுவிலையும் நான் தானே இருக்கேன். அதான் அணுஅணுவா உன்னை கொல்ல போறேன். இனி தான் உனக்காக உன் புருஷன் என்ன பண்ண போறேன்னு பார்க்க போற. இனி தான் உன்னை விரும்புற தீரன் யார்னு பார்க்க போறடி என் பொண்டாட்டி' என்று தனக்குள் கறுவி கொண்ட8ருந்திருந்தான்.

"மாமா" என்ற குரலில் களைந்தவன்.

"வா ஸ்ரீஷா உள்ள போகலாம்" என்று உள்ளே நடந்தான்.

"மாமா நீங்க வரபோறதா அமுதன் என்கிட்ட சொல்லவே இல்லையே" என்று சோபாவில் அமர்ந்தாள்.

"சொன்னா நீ தான் உடனே உங்கக்காக்கு சொல்லிருவியே? அதான் சொல்ல வேணாம்னு நான் தான் சொன்னேன்" என்று அவளுக்கு பழச்சாறு ஊற்றி கொடுத்தான்.

தீரனை பார்த்து குறும்பாக சிரித்தவள்.

" எனக்கு தெரிஞ்சுருச்சு. இன்னும் கொஞ்ச நாள்ல எங்க அக்காவும் குடும்பதோட சந்தோஷமா இருக்க போறா" என்று சிரித்தாள்.

தலையை சொறிந்தவன், "அப்டி உங்க அக்கா சந்தோஷமா இருக்கணும்னு நீ நினைச்சா என்ன நடந்தாலும் வேடிக்கை மட்டும் தான் பார்க்கணும். உங்க அக்கா அழறான்னு என்கிட்ட சண்டைக்கு வரக்கூடாது." என்றான் தீரன்.

"இவ்ளோ நாள் அழுதா மனசு தாங்கலை ஆனா இப்போ அழுத்தான்னாலும் மனசு கேக்காது தான் ஆனாலும் உங்ககிட்ட வந்து நிக்கமாட்டேன். சில குழந்தைகளுக்கு கூட்டட் சொல்லி கொடுத்தா தான் புரியும். உதவி வேணும்னா கேளுங்க மாமா. இந்த முறை நான் உங்க கட்சி." என்று சிரித்தாள்.

"நிச்சயமா கேட்பேன் டா. எனக்கு அமுதனையும் உன்னையும் விட்டா வேற யார் வருவா உதவி பண்ண?" என்று சிரித்தான்.

"சரி மாமா. நான் வரேன்." என்று எழுந்தாள் ஸ்ரீஷா.

"இருடா சாப்பிட்டு போகலாம்" என்றான் தீரன்.

" அங்க என் அக்கா கண்ணகசக்கிட்டு உக்கார்ந்திருப்பா. நான் போய் சமாதனப்படுத்தனும். இன்னொரு நாள் சாப்பிடறேன் மாமா" என்று நடந்தாள்.

"அதுவும் சரி தான். இனி நீ அடிக்கடி உங்க அக்காவை சமாதனப்படுதனும்" என்றான் மெல்லிய புன்னகையோடு.

"எல்லாம் சரி தான். இதெல்லாம் சீக்கிரம் சரி பண்ணிட்டு எனக்கு ஒரு ஹீரோவை பெத்துக்கொடுங்க ரெண்டு பேரும். இந்த அமுதன் பய வேற நான் சொல்றதை கேட்கவே மாட்றான். அவனை டீல்ல விட்டுட்டு உங்க பையனையாவது கட்டிக்கிறேன்." என்று கண்ணடித்து சிரித்தாள்.

"உன்னை..." என்று துரத்துவதற்குள் வாசலை தாண்டியிருந்தாள் ஸ்ரீஷா.

'வாலு' என்று நகைத்துக்கொண்டே உள்ளே சென்றான் தீரன்.

*******

முந்தானையில் முகத்தைதுடைத்து கொண்டிருந்த மிருதியிடம் வந்தாள் ஸ்ரீஷா.

"அக்கா இப்போ எதுக்கு அழற..?" என்று மிருதியின் அருகில் அமர...

"உங்க மாமாவையும் பாப்பாவையும் பார்த்துட்டு என்னை விட்டுட்டு போயிடல்ல என்கிட்ட பேசாதே. " என்று முகத்தை திருப்பினாள்.

" எங்க இப்படி என் முகத்தை கொஞ்சம் பார்த்து சொல்லு கா. நான் உன்கூடயே வந்திருந்தாலும் என்னை அங்க போய் பார்த்துட்டு வர சொல்லிருப்பிங்க. அதான் நானே போய் பார்த்துட்டு வந்தேன்." என்றாள் ஸ்ரீஷா.

"நல்ல சமாளிடி." என்று மிருதி முறைக்க.

"நம்பலைன்னா போங்க" என்று எழுந்து உள்ளே நடக்க, "என்னவாம்?" என்றாள் மிருதி.

"என்னதுக்கா என்னவாம்?" என்றாள் மிருதி புரியாதது போல் வேண்டுமென்றே.

"உங்க மாமாக்கு என்னவாம்? எதுக்கு இங்க வந்துருக்கார்?" என்றாள் எங்கோ பார்த்தபடி.

உள்ளுக்குள் சிரித்தாலும், " அது எனக்கு தெரியலைக்கா. நான் போய் பாப்பாகூட விளையாடிட்டு வந்தேன். அவ்ளோ தான்" என்று வேகமாய் உள்ளே சென்றாள் ஸ்ரீஷா.

**********
 
Top