பகுதி – 8.
பாண்டிச்சேரிக்கு வந்தபொழுது சர்வஜித்தின் தோற்றம் வேறாக மாறிப் போயிருந்தது. ‘இவருக்கு எத்தனை முகங்கள்? இதில் எது உண்மையான முகம்?’ என எண்ணியவாறு ஹரீஷ் சற்று குழம்பிப் போயிருந்தான்.
அதைவிட அவன் தன் தாயிடம் அவன் காட்டிய அந்த முகம்... அப்படியே ஒரு பத்து அல்லது பதினைந்து வயது பாலகனின் ஒரு உடல்மொழியும், பேச்சுமாக மாறிப் போயிருந்தான்.
“ம்மா... ம்மா... எப்படிம்மா இருக்கீங்க?” என்றவனுக்கு தொண்டை கட்டிக்கொண்டு குரல் வெளிவரத் தடுமாறியது.
அதைக் கேட்ட ஹரீஷ், ‘இவருக்கு இப்படி கூட பேசத் தெரியுமா? நிஜமாவா? பேசறது இவர்தானா? இல்லைன்னா வேற யாராவது இவருக்கு டப்பிங் கொடுக்கறாங்களா?’ அப்படியே சிலைபோல் நின்றுவிட்டான்.
சிங்கம்போல் கர்ஜித்துக் கொண்டே, முழு நேரமும் பிபி எகிறி குதிக்க கொந்தளித்துக் கொண்டு இருக்கும் சர்வஜித்தை தான் அவனுக்குப் பழக்கம். பொறுமையாக எல்லாம் அவன் பேசி இவன் கேட்டதே இல்லை.
பொறுமைக்கும் அவனுக்கும் பல மைல் தொலைவு இருக்கும். அப்படிப்பட்டவன், பொறுமையாக, நிதானமாக, குறிப்பாக பாசமாக பேசுகிறான் என்பது எல்லாம் ஹரீஷ் கனவிலும் அவனிடம் எதிர்பாராத குணங்கள்.
இந்த மூன்று வருடங்களில் அவனுக்கு தாய் இருக்கிறார் என்பது கூட அவனுக்குத் தெரியாது. அப்படி இருக்கையில் இன்று திடுமென பாண்டிச்சேரிக்கு தாயைப் பார்க்கச் செல்ல வேண்டும் என அவன் அழைத்த பொழுது அவன் நிஜத்தில் நம்பவில்லை.
ஆனால் இப்பொழுது பாசமே உருவாக சர்வஜித்தின் முன்னால் நின்ற தாயைப் பார்க்கையில், ‘இந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்?’ என்றுதான் பார்த்திருந்தான்.
“எப்படிப்பா இருக்க? உன்னைப் பார்த்து எத்தனை வருஷமாச்சு? இந்த அம்மாவைப் பார்க்க உனக்கு இப்போதான் மனசு வந்ததா?” என்ற விசாலாட்சி தன் மகனை ஆரத் தழுவிக் கொண்டார். அவன் தலை வருடி, கன்னம் வழித்து, உச்சி முகர்ந்து கண்கள் கலங்க அவனைக் கட்டிக்கொண்டதைப் பார்த்த பொழுது ஹரீஷுக்கே கண்கள் கலங்கிப் போனது.
“ம்மா... எப்படிம்மா இருக்கீங்க? சாரிம்மா...” என்றவன் தாயை கட்டிக்கொண்டு விடவே இல்லை.
“அதான் இப்போ நீ வந்துட்டியே, எனக்கு இது போதும்ப்பா... நீ நல்லா இருக்கற தானே... இந்த அம்மாவுக்கு அதுதான் வேணும்” என்றவரின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழித்தது.
“ம்மா... நான்... இல்லம்மா...” என்றவன் ஒரு மாதிரி திணறியவாறு தாயின் முகம் பார்த்தான்.
“ஓ... சரிப்பா இன்னும் எத்தனை காலம் ஆனால் என்ன? என் பிள்ளை இருக்கிறான் என்ற தைரியத்தில் நான் என் வாழ்க்கையை வாழ்ந்துடுவேன்ப்பா. நீ வா... இப்படி வந்து உட்கார். ஏதாவது சாப்பிடறியா?” தன் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு கேட்டார்.
ஆனால் அந்த தாயின் ஏமாற்றம் இருவருக்கும் அப்பட்டமாகப் புரிந்தது. “நீயும் வாப்பா... உன் பேர் என்ன? எப்படிப்பா இருக்க? வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா? வா... வா... உள்ளே வாப்பா, எதுக்கு இப்படி வாசல்லேயே நின்னுட்ட?
“இவனைப் பார்த்த சந்தோஷத்தில் உன்னை கூப்பிடவே மறந்துட்டேன். என்னை மன்னிச்சுடுப்பா...” விசாலாட்சி சொல்ல, பதறிப் போனான்.
“ஹையோ அம்மா... என்கிட்டே எதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க? என் பேர் ஹரீஷ். நான் ரொம்ப நல்லா இருக்கேன், நீங்க எப்படிம்மா இருக்கீங்க?” என்றவாறே உள்ளே வந்தான். அந்த வீடு வெளிப்பார்வைக்கு பழைய வீடுபோல் இருந்தாலும், வெள்ளைக்காரன் கட்டிய வீடு எனப் பார்த்தாலே தெரிந்தது.
உள்ளே இன்டீரியர் மொத்தமும் மாறிப் போயிருக்க, உள்ளுக்குள் அத்தனை நவீனமாக இருந்தது. அங்கே ஒளிர்ந்த மெல்லிய விளக்குகளும் சரி, பழைய ஓவியங்கள், ஆங்காங்கே இருந்த பூஜாடிகள் நவீன சோபா, தொலைகாட்சி என பார்க்கவே டாம்பீகமாக இருந்தது.
நிச்சயம் அவருக்கு வேலை செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் என பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது.
“உட்காருப்பா...” விசாலாட்சி சோபாவை கை காட்ட, அவன் சர்வஜித்தை தான் பார்த்தான்.
“உட்கார சொல்றது நான்... நீ எதுக்கு அவன் முகத்தைப் பார்க்கற? இங்கே நான்தான் பாஸ்... அவன் எதுவும் சொல்ல மாட்டான்” அவர் சொல்ல, ஹரீஷ் சர்வஜித்தைப் பார்க்க, அவன் முகம் அப்படி ஒரு இளக்கத்தைக் காட்டியது.
அவன் கண்களில் இருந்த கண்ணாடி விடைபெற்றுச் சென்றிருக்க, அந்த கண்களில் தெரிந்த பாசம்... ஹரீஷ் பார்த்தபடியே இருந்தான். அந்த பார்வையே அவன் தன் தாய்மேல் கொண்டிருக்கும் பாசத்தை அப்பட்டமாக எடுத்துக் காட்டியது.
‘இவ்வளவு பாசம் வச்சிருக்கறவர், எதுக்காக தன் அம்மாவை இப்படி தனியா விட்டு வச்சிருக்கார்?’ எண்ணியவன், உடனே தன் நினைப்பை அழித்தான். அதற்கு ஆயிரம் இல்லை, லட்சம் காரணங்கள் இருக்கும் என அவனுக்குத் தெரியாதா என்ன?
விசாலாட்சி காட்டிய சோபாவில் அவன் அமர்ந்துகொள்ள, தாயும் மகனும் இரட்டை சோஃபாவில் அமர்ந்தார்கள். விசாலாட்சி மகனின் கரத்தை விடவே இல்லை.
“சரு... ஏதாவது சாப்பிடறியாப்பா? குடிக்க ஏதாச்சும் கொண்டு வரவா? ஃப்ரிஜ்ஜுக்கு உள்ளே ஃப்ரஷ் ஜூஸ் போட்டு வச்சிருப்பாங்க. இரு நான் எடுத்துட்டு வர்றேன்...” என்ற விசாலாட்சி எழுந்து உள்ளே செல்லப் போக, தாயின் கரம் பிடித்து தடுத்தான்.
“இப்போ எனக்கு எதுவும் வேண்டாம்மா... கொஞ்ச நேரம் இப்படி உட்காருங்க” என்றான். மகனின் கன்னத்தை அத்தனை பாசமாக வருடி, அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். மகனை இத்தனை அருகே வைத்துப் பார்த்து எத்தனை காலமாயிற்று என அவருக்குள் ஓடியது. தாயின் அந்த நினைப்பு புரிய, தாயின் கரத்தை தன் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டான்.
“உன்னைப் பார்த்தால் பசியிலே இருக்கறவன் மாதிரி இருக்கேப்பா. இந்த அம்மாவுக்காக...” தாய் கெஞ்ச, அதற்கு மேலே அவன் பிடிவாதம் பிடிக்கவில்லை.
“நீயாவது ஏதாவது சாப்பிடறியாப்பா?” ஹரீஷிடம் கேட்டார்.
“இல்லம்மா... எனக்கு எதுவும் வேண்டாம்...” ஹரீஷ் வேகமாக மறுத்தான்.
“அப்படியெல்லாம் எதுவும் சொல்லக் கூடாது. அம்மா வீட்டுக்கு வந்தால் சாப்பிடாமல் போகக் கூடாது” என்றவர், கிச்சனுக்கு எழுந்து செல்ல சர்வஜித்தும் தாயின் பின்னாலேயே சென்றான். ஹரீஷுக்கு தன் தாயின் நினைவு வந்தது. அவரும் இப்படித்தான், அவனது வயிற்றைதான் முதலில் கவனிப்பார், மற்றது எல்லாம் பிறகுதான்.
சர்வஜித் தாயின் பேச்சுக்கு சிறு மறுப்பு கூட சொல்லாமல் அமர்ந்திருக்கும் சர்வஜித்தைப் பார்க்கப் பார்க்க அத்தனை திகைப்பு.
‘என்னங்கடா நடக்குது இங்கே?’ என்பதுபோல் பார்த்திருந்த ஹரீஷுக்கு மர்மப்படம் பார்க்கும் உணர்வுதான். எவ்வளவு நேரம்தான் அவனும் அங்கேயே தனியாக அமர்ந்திருக்க முடியும்? அவர்களது பேச்சு சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றான்.
அங்கே அவன் கண்ட காட்சியில் அப்படியே வாசலோடு நின்றுவிட்டான். சர்வஜித் கிச்சன் மேடையில் ஏறி அமர்ந்திருந்தான். ‘டேய்... நீ டான் டா...’ என்றவாறு அவனைப் பார்த்திருந்தான்.
‘இவரை அந்நியனா எத்தனையோ விதங்களில் பார்த்துவிட்டேன். இது அம்பி... அப்போ ரெமோ? ச்சே ச்சே... அதுக்கு வாய்ப்பே இல்லை...’ இந்த சர்வஜித்தை ‘ரெமோ’ மோடில் கற்பனை கூட அவனால் செய்து பார்க்க முடியவில்லை.
அந்த நள்ளிரவிலும் வேகமாக முட்டை தோசை வார்த்து, ஃப்ரிஜ்ஜுக்குள் இருந்த சாம்பார், ஒரு உடனடி சட்னி என சமைத்துவிட்டார்.
“வாப்பா ஹரீஷ்... வந்து தோசை சாப்பிடு... உனக்கு தோசை பிடிக்குமா?” அவனிடம் கேட்டார்.
“உங்களுக்கு எதுக்கும்மா சிரமம்? எனக்கு...” வேண்டாம் எனச் சொல்ல வந்தவன், அவர் முகத்தில் இருந்த கனிவில், பாசத்தில் அங்கே இருந்த சாப்பாட்டு மேஜை முன்னால் வந்து அமர்ந்துவிட்டான்.
சர்வஜித் தன் தாயின் கையால் சாப்பிட்டு பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. அதுவே ஹரீஷுக்கு, அவனது தாய் இறந்த பிறகு எப்பொழுதுமே ஹோட்டல் சாப்பாடு தான். சர்வஜித் இருக்கும் வேகத்துக்கு, கோபத்துக்கு எல்லாம் சமையலுக்கு ஆள் வைத்தால் அவ்வளவுதான்.
அவன் வீட்டு வேலைக்கு, காவலுக்கு என இருக்கும் ஆட்களே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்கும் நிலையில்தான் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அதைவிட அவன் எந்த நேரம் எங்கே இருப்பான் என்று அவனுக்கே தெரியாது.
அப்படி இருக்கையில் எந்த வீட்டில் சமைத்து, அவன் எந்த வீட்டில் சென்று சாப்பிடுவதாம்? அவன் மும்பையில் இருப்பானா? சென்னையில் இருப்பானா? சர்வஜித்தாக இருப்பானா? சர்வாவாக இருப்பானா? என்றே தெரியாமல் போகையில், என்ன செய்வது?
ஹரீஷ் அப்படியே யோசனையில் இருக்க, “என்னப்பா, என் கைப்பக்குவம் பிடிக்கலையா? வேற ஏதாவது செய்து தரவா?” விசாலாட்சி கேட்க, கண் கலங்க அவரைப் பார்த்தான்.
“இல்ல... இல்ல... இல்லம்மா... அம்மா கையால் சாப்ட்டு பல வருஷம் ஆகிப் போச்சு அதான்... அம்மாவோட கையால் எதை சமைத்துக் கொடுத்தாலும் அது தேவாமிர்தம்தான்ம்மா. எவ்வளவு பெரிய ஹோட்டலில் சாப்ட்டாலும் இந்த ருசி வேற எதிலும் கிடைக்காது” தன் கண்ணீரை நாசூக்காக துடைத்துக் கொண்டான்.
“ஏன் அம்மா கையால் சாப்ட்டு பல வருஷமாகுது? இவன் உனக்கு வீட்டுக்குப் போக லீவ் கொடுக்கலையா? என்னப்பா சொல்ற?” தன் மகனை சிறு கண்டிக்கும் பார்வை பார்த்தவாறே அவனிடம் கேட்டார்.
“ஐயோ அம்மா அப்படி இல்லை... என் அம்மா இப்போ இல்லை, நான் அதை மீன் பண்ணேன்...” வேகமாகச் சொன்னான்.
“இனிமேல் உனக்கு அம்மா நான் இருக்கேன். எனக்கு நீயும் இன்னொரு மகன்தான். இனிமேல் யார் கேட்டாலும் எனக்கு அம்மா இருக்காங்கன்னு சொல்லணும். இவன் வரலைன்னாலும், நீயாவது இந்த அம்மாவை வந்து பார்க்கணும்” என்றவரின் கன்னத்தில் கண்ணீர் கடகடவென இறங்கியது.
“ம்மா...” சர்வஜித் அழைக்க, “அம்மா... அம்மா... அழாதீங்கம்மா ப்ளீஸ். எந்த பிள்ளைக்கும் அவங்க அம்மாவோட கண்ணீரை பார்க்கும் சக்தி எல்லாம் கொஞ்சமும் இருக்காது” ஹரீஷ் தான் வேகமாகச் சொன்னான்.
“நான் ஒரு பைத்தியக்காரி, சாப்பிடற நேரத்தில் போய் என்னென்னவோ சொல்லிட்டு இருக்கேன். நான் அழலை... நீங்க சாப்பிடுங்கப்பா” என்றவர் அவர்கள் போதும் எனச் சொல்லும் வரைக்கும் தோசை வார்த்துக் கொடுத்தார்.
அந்த தாய்க்குள் இப்பொழுது என்னவெல்லாம் ஓடிக் கொண்டிருக்கும் என சர்வஜித்துக்குப் புரிய, உணர்வுகளின் தாக்கத்தில் அவன் கண்கள் சிவந்து போனது. விசாலாட்சியுமே தன் மகனுக்காக என்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தார்.
“ம்மா... நான் சீக்கிரமே உங்ககிட்டே வந்துடுவேன்ம்மா...” என்றவனின் குரலில் இருந்தது என்ன? ‘வர முடியவில்லையே’ என்ற தவிப்பா? ‘வர முடியாமல் செய்துவிட்டார்களே?’ என்ற கோபமா?
‘எங்கள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே?’ என்ற ஆற்றாமையா? இல்லையென்றால் இது அனைத்தும் சேர்ந்த கலவையா? சர்வஜித் பலவீனமாகி ஹரீஷ் பார்த்த நொடி அதுவாகத்தான் இருக்கும். பார்த்தது பார்த்த வண்ணம் இருந்தான்.