துளி துளியாய் துரோகம் 24
வர்ஷா ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்தாள். கண்கள் சிவந்து எரிச்சல் ஏற்பட்டது. சிரமத்துடன் எழுந்து கோபமாகக் கதவைத் திறந்தாள்.
“சிந்து பைரவி வந்திருக்காங்க. காலேஜ் நேரம் ஆச்சுனு ...” என வேலைக்காரி மிகுந்த பயத்துடன் பவ்யமாக வர்ஷாவிடம் சொன்னாள்.
வர்ஷா கடிகாரத்தைப் பார்த்தாள் நேரம் ஒன்பதை நெருங்கி இருந்தது. அதை கவனித்த வேலைக்காரி மீண்டும் “நான் அப்பவே வந்து கதவைத் தட்டினேன். நீங்க நல்ல உறக்கம் போல” என இழுத்தாள். தன் மேல் தவறு இல்லை என நிரூபிக்கப் பெரும்பாடுபட்டாள்.
“சிந்து பைரவியை என் ரூமுக்கு அனுப்புங்க. இன்னிக்கு நான் காலேஜ் போகலை” என்றாள்.
வேலைக்காரி சென்றதும் கதவை சாற்றி மீண்டும் படுக்கையில் விழுந்தாள் வர்ஷா. இரண்டு நொடிகளில் மீண்டும் கதவு தட்டும் சத்தம் “கம் இன்” எனப் பதில் கொடுத்தாள்.
கதவைத் திறந்து சிந்து பைரவி உள்ளே வந்தனர். “வர்ஷா எழுந்திரு என்ன இவ்வளவு தூக்கம்?” எனப் பைரவி எழுப்பினாள்.
“டுடே நோ காலேஜ்”எனக் கண்ணைத் திறக்காமல் படுத்த நிலையில் பதிலளித்தாள் வர்ஷா. “ஜாலி” என பைரவி மகிழ்ந்தாள்.
“வர்ஷா ஒரு பிரேக்கிங் நியூஸ்” எனச் சிந்து சொல்ல
ஒரு கையை தலைக்கு முட்டுக் கொடுத்து ரங்கநாதர் போலப் படுத்தபடி “என்ன?” கேட்டாள் வர்ஷா.
“வெண்பா டிரைன் ஏக்சிடெண்ட்ல இறந்துட்டாளாம்” சிந்து சொன்னதுதான் தாமதம்
“வாட்?” என அதிர்வுடன் ஒன்றுமே தெரியாதது போல எழுந்தமர்ந்தாள்.
“ இதுக்கே ஷாக்கானா எப்படி? துஷ்யந்த வெண்பாவுடைய இறுதி சடங்குல கூட கலந்துக்கல” பைரவி பின் பாட்டு பாடினாள்.
வர்ஷா “அப்படியா?” எனக் கண்களை பெரிதாக்கி இன்னமும் அதிர்ச்சியை அதிகமாகக் காட்டினாள்.
இன்று அனைவரும் பேசும் இந்த நிகழ்வுகளை நேற்று இரவு சர்வ சாதாரணமாய் தன் தாய் சுந்தரி நடத்தி இருக்கிறாள் என நினைக்கையில் பெருமையாய் இருந்தது. அன்னையை மருத்துவமனையில் விட்டு அதிகாலையில் தான் வீடு திரும்பினாள் வர்ஷா.
இந்நேரம் துஷ்யந்தும் வெண்பாவும் வானுலகில் காதல் காவியம் பாடிக் கொண்டிருப்பார்கள் என நினைக்கச் சந்தோஷத்தில் குபீர் எனச் சிரிப்பு வந்துவிட்டது. அவசரமாகக் குளியலறைக்குள் புகுந்து சிரித்தாள்.
துஷ்யந்த் உயிரோடு இல்லை என தனக்கு மட்டுமே தெரியும். வெண்பா அமிலத்தால் துடித்தது கண் முன்னே தோன்றக் கோப சிரிப்பை உதிர்த்தவள் .. உள்ளம் கொதித்தது. அவளால் தானே துஷ்யந்தை இழக்க நேரிட்டது.
அரைமணி நேரத்தில் தயாராகி வந்தாள். “ அம்மாக்கு உடம்பு சரியில்ல .. ஹாஸ்பெட்டல்ல இருக்காங்க .. கிளம்பலாம்” என வர்ஷா செல்ல இருவரும் பின் தொடர்ந்தனர்.
அந்த வீட்டில் யாருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டாலும் சுந்தரியின் மருத்துவமனைக்குச் செல்வார்கள். அதனால் எந்த மருத்துவமனை என்னும் கேள்விக்கு அங்கு இடமில்லை.
வாழ்க்கை விசித்திரமானது நொடியில் அனைத்தும் மாறிவிடும். வெண்பா மற்றும் துஷ்யந்த் ரகசியங்களைத் தெரிந்து கொண்டதால் உயிருடன் இருக்கக் கூடாது எனத் தனிச்சட்டம் இயற்றினார் சுந்தரி. அதன் படி செய்ததாகவும் நம்பினார். ஆனால் இப்போது மருத்துவமனையில் கடும் வலி வேதனையுடன் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
வெண்பா அடித்ததில் கண்ணாடி குப்பிகளில் கருமுட்டை வளர்ச்சிக்கான மருந்து மற்றும் வேறு சில மருந்துகளும் அடக்கம். அவை கண்ணாடி குப்பி உடைந்து சுந்தரிக்கு காயங்கள் ஏற்படுத்தின. அக்காயங்கள் வழியே ரத்த ஓட்டத்தில் சிலபல மருந்து துளிகள் கலந்தன.
காயம்பட்ட உடன் சிகிச்சை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் காயம் தாக்கி சில மணி நேரத்திற்குப் பின் சிகிச்சை எடுத்துக் கொண்டதால் அது அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லை.
அதுவும் இல்லாமல் சுந்தரிக்குச் சர்க்கரை நோய் உள்ளது. அதன் தாக்கத்தால் காயங்கள் விரைவாகக் குணமாவதில் தாமதம் ஏற்பட்டும் என மருத்துவர்கள் கூறினார்கள். சுந்தரியும் மருத்துவர் அவருக்கும் இதுத் தெரிந்திருந்தது.
சுந்தரி ஆயாசமாகப் படுத்திருந்தார். வலி நிவாரணிகள் கொடுக்கப்பட்டிருந்தது. அப்போது போன் அலறியது. சுந்தரியால் எடுத்து பேச முடியவில்லை. ஆனாலும் சமாளித்துத்தானே ஆக வேண்டும்.
அடியாட்களில் ஒருவன்தான் அழைத்திருந்தான்.
“ம் சொல்லு” என்றார் சுந்தரி
“அந்த பொண்ணு பையன் இரண்டு பேரும் செத்துட்டாங்க” என்றவன் ரயில் விபத்து பற்றி முழுவதுமாக கூறினான்.
“ பொண்ணு பாடி யாருதுனு போலீஸ் விசாரிச்சாங்களா? யார்கிட்ட பாடி கொடுத்தாங்க” அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கினார்.
“ பாடிய போஸ்ட் மார்டம் பண்ணி அந்தப் பொண்ணு அப்பாகிட்ட கொடுத்திட்டாங்க. கேஸ் முடிஞ்சிப் போச்சு . அதுல பிரச்சனை இல்ல. நீங்க நினைச்ச மாதிரி நடந்திருச்சி” என்றான்
“அந்த பையன் பாடி?” தன் வலியை வெளிக்காட்டாமல் பேசினார்
“பையன் பாடிய எரிச்சிட்டேன்” என்றான்
“சரி பணம் வாங்கிக்க .. உங்க இரண்டு பேர் சிம் கார்டும் உடைச்சிப் போடு. எங்காவது கண்காணாத இடத்துக்கு போங்க இன்னும் ஒரு வருஷத்துக்கு இந்த பக்கம் வராதீங்க”
“சரிங்க மேடம்” என்று போனை வைத்தான். சுந்தரிக்கு உண்மை தெரியும் முன் விரைவில் தப்பிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினான்.
சுந்தரி தான் அதிமேதாவி நினைத்ததைச் சாதிப்பவள் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தவருக்குத் தெரியாது. இது மிகப் பெரிய சறுக்கல் என்று. அவன் கூறியதில் பாதி தான் உண்மை என்று.
முன்பு யாரேனும் ஒரு தகவலைக் கூறினால் அதை வேறொருவரிடம் கேட்டு சுந்தரி உறுதிப்படுத்துவார். ஆனால் இன்றைய நிலையில் அது சாத்தியமற்றுப் போயிற்று. கேட்டிருக்கலாம் ஆனால் உடலும் உள்ளமும் சோர்வாக இருந்தால் விட்டுவிட்டார். அதிலும் எப்போதும் மிடுக்காக தெரிபவர் இன்று நோயாளி போல ஆகிவிட்டார்.
அதைக் காட்டிலும் வெண்பாவிடம் அடி வாங்கியது வெளியேத் தெரிந்தால் தான் கட்டிய கோட்டைச் சரிந்துவிடும். அதனால் தன்னைப் பற்றி வெளியே தெரியக் கூடாது என்பதால் யாரிடமும் பேசவில்லை. வர்ஷாவிடமும் இதையே கூறியிருந்தார். ஒரு சில மருத்துவர்கள் மட்டுமே சுந்தரியை அணுகலாம் என இங்கும் பல கட்டளைகள்.
அன்றைய இரவு அடியாட்கள் இருவரும் துஷ்யந்த் இறந்துவிட்டான் அவன் பிணத்தை எடுக்க மீண்டும் விடுதிக்குச் சென்றனர். ஆனால் அங்குப் பிணம் இல்லை.
பதற்றத்துடன் நாலா பக்கமும் தேடிப் பார்த்தான். சுந்தரியைப் போலவே காயம்பட்டிருந்த நண்பனிடம் “டேய் பாடிய காணம் டா” எனப் பதறினான்.
“முதல்ல ஆஸ்பத்திரிக்கு போ டா .. இல்லைனா நான் பாடி ஆயிடுவேன். ஐயோ வலிக்குது ” என வெண்பாவிடம் முதல் அடியைப் பெற்ற அடியாள் புலம்பினான்.
“நாசமா போச்சு” பிணம் கிடைக்காமல் போனால் சுந்தரி தன்னையல்லவா பிணம் ஆக்கிவிடுவாள் தவித்தான் அடியாள். நண்பனைக் காண அவன் உடல் மோசமாகிக் கொண்டிருந்தது.
இனிமேலும் தாமதித்தால் நண்பன் உயிருக்கு ஆபத்து என்பதால் அவனை மருத்துவமனையில் சேர்த்தான். அவனுக்குச் சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது ஒரு எண்ணம் தோன்றவே சுந்தரிக்கு போன் செய்து அவள் சொன்னபடி அனைத்தும் செய்தாயிற்று என்று கட்டுக் கதையை அவிழ்த்தான். சுந்தரியும் அனைத்தையும் உண்மை என்று நம்பிவிட்டார்.
உடனே நண்பனை அழைத்துக் கிளம்ப ஆயத்தமானான். “ஐயோ டிரீட்மெண்ட்” என நண்பன் புலம்ப
“நான் உனக்கு டெல்லி எய்ம்ஸ்ல டிரீட்மெண்ட் தரேன் .. கிளம்புடா” என அவனை இழுத்துக் கொண்டு கிளம்பினான்.
பிறகு நண்பனுக்கு விஷயத்தைக் கூறியதும் “ஐயோ கிளம்பு” என அவனும் பதறினான். இருவரும் தலைமறைவாயினர். இன்னும் பத்து வருஷத்துக்கு இந்த பக்கம் வரக் கூடாது என முடிவெடுத்தனர்.
இருவருக்கும் சுந்தரி வங்கிக் கணக்கில் அதிக தொகையைப் போட்டிருந்தாள். இருவரும் பெரிய ரவுடியெல்லாம் இல்லை. கடந்த ஓன்றரை வருடமாக விடுதியை நோட்டம்விட வேண்டும். சந்தேகப்படும் படி இருந்தால் தட்டி கேட்க வேண்டும். இதுதான் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணி.
அவர்களுக்கு உள்ளே என்ன இருக்கிறது என எதுவும் தெரியாது. ஆனால் காவல் காக்க வேண்டும். முதல் மூன்று மாதத்தில் சலிப்பு உண்டானது.
மது மாது என உல்லாசமாக இருந்தனர். கேள்வி கேட்க யாருமில்லை. எப்பொழுதாவது சுந்தரியின் வேறு ஆட்கள் வருவார்கள்.
அவர்களுக்கென ஒரு தனி கார் அதில் அறுவாள் போன்ற சில ஆயுதம் மறைத்து வைத்திருக்க வேண்டும். அப்படியே அமிலமும் வைத்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். இந்த வேலைக்குச் சேர்ந்த அன்று வைத்த அமிலத்தை வெண்பாவிற்காக எடுத்தார்கள்.
வெண்பா மேல் வீசத்தான் பயன்பட்டது. அமிலத்தின் வீரியம் வெகுவாக குறைந்துவிட்டது. ஊசி போன ஏசிட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பது மட்டும் சுந்தரிக்கு தெரிந்தால் இவர்கள் கதி அதோ கதிதான். இருவரும் கிடைத்த பணத்துடன் ஓடிவிட்டனர்.
துஷ்யந்த் மருத்துவமனையில் மெல்லக் கண் விழித்தான். அஸ்வத் அவனிடம் நலம் விசாரித்தான். “வெண்பா எங்க?” துஷ்யந்தின் முதல் கேள்வி . அஸ்வத் நிதானமாக வெண்பா பற்றிக் கூறினான்.
இதயமே நடுங்கிவிட்டது “நான் இப்பவே வெண்பாவை பார்க்கணும்” எனத் துடித்தான்..
அஸ்வத் துஷ்யந்தை சக்கர நாற்காலியில் அமர்த்தி வெண்பா அறைக்கு அழைத்துச் சென்றான்.
வெண்பாவை கண்ட நொடி “வெண்பா” என அவளை அணைத்தான். முத்தமிட முனைந்தான் அவளுக்கு வலிக்குமோ என்று விட்டுவிட்டான்.
வெண்பாவும் அவனைக் கட்டியணைத்து அழுதாள். தன்னால் தானே துஷ்யந்திற்கு இத்தனை பிரச்சனை என்று “சாரிடா என்னால உனக்கு எத்தனை பிரச்சனை” என விசும்பினாள்.
இந்த காட்சியைக் கண்ட அஸ்வத்திற்கு இருவரும் காதலர்கள் என்ற உண்மை புரிந்தது. இருவரையும் தன் பொருட்டு பிரிக்கக் கூடாது என முடிவெடுத்தான்.
அடுத்த முறை வெண்பா தந்தையைக் காண்கையில் “வெண்பா துஷ்யந்தை காதலிக்கிறாள்” என்று கூறினான்.
அவரோ முதலில் வெண்பா முகம் அமில வீச்சினால் பாதிப்படைந்த காரணத்தால் மறுக்கிறான் எனச் சந்தேகித்தார். ஆனால் அவரும் வெகு விரைவில் உண்மையைப் புரிந்து கொண்டார்.
துஷ்யந்த் வீட்டிற்குத் தகவல் சொல்லப்பட்டது. அவன் பெற்றோர் அலறி அடித்து வந்து மகனைப் பார்த்தனர். அவர்களிடமும் வெண்பா இறந்துவிட்டாள் என்றே கூறப்பட்டது. “நான் இங்க இருக்கிறது இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம். என்னை அடிக்கடி வந்து பார்க்காதீங்க” என்றான்.
பெற்றோர் சென்றதும் வெண்பாவுடன் பேச வந்துவிட்டான் துஷ்யந்த்.
“துஷ்யந்த் உன்னை .. நீ ..” என அந்த அடியாள் கூறிய வார்த்தைகளைக் கூடச் சொல்ல வெண்பா தயங்கினாள்.
“நான் செத்துட்டேன்னு சொன்னானா?” துஷ்யந்த் சொல்லி முடிக்கவில்லை அவன் வாயில் கை வைத்து “அப்படிச் சொல்லாத என்னால தாங்க முடியாது” எனக் கண்ணீர் வடித்தாள்.
“இல்ல டா ஆறாவது மாடியில் இருந்து நான் விழ இருந்தேன் பக்கத்துல ஓட்டினார் போல ஒரு மரம் இருந்தது. அதை பிடிச்சிதான் கிழ இறங்கினேன். கடைசில மட்டும் இருட்டா இருந்த்தனால ஸ்லிப் ஆகிடுச்சி. அதான் எலும்பு முறிவுக்கும் காரணம்” என்றான்.
“ஆனா அவன் உன்னை செக் பண்ணதா சொன்னான்” என வெண்பா கேட்க
“அவன் கீழ வரும் சத்தம் கேட்டுச்சி .. அவன்கிட்ட இருந்து தப்பிக்கத்தான் செத்த மாதிரி நடிச்சேன். மரப்பட்டை எடுத்து இதயத்துக்கு மேல , அதாவது சட்டைக்குள்ள மறைச்சி சொருகிட்டேன். அதனால இதயதுடிப்பு கேட்காது. மூச்சை இழுத்து பிடிச்சேன். அவன் மூச்சும் இல்ல இதயத் துடிப்பும் இல்ல அதனால செத்துட்டேன்னு நினைச்சான்.”
“கடவுளே நான் ரொம்ப பயந்துட்டேன்” என்றவள் அவனைக் கையை இறுக பற்றினாள்.
அஸ்வத் “சரி அடுத்து என்ன செய்யப் போறோம்? இது கொலை முயற்சி வேற ” என்று கேட்டான்.
“கருமுட்டை மோசடி பத்தி தெரியுமா?” துஷ்யந்த் கேட்டான்.
“ம்ம் ..தெரியும் வெண்பா சொன்னா. இதை எல்லாம் போலீஸ்ல சொல்லலாமா?” அஸ்வத் கூறினான்.
“சுந்தரிக்குப் பணம் செல்வாக்கு இருக்கு. காவல் சட்டம் எல்லா இடத்திலும் ஆள் இருக்காங்க” வெண்பா தொடங்கினாள்.
“நாம கேஸ் பைல் பண்ணா அதை ஒன்றுமில்லாமல் பண்றது ஒரு விஷயமே இல்ல. அப்படியே கேஸ் நடந்தாலும் ஒரு முப்பது வருஷம் நடக்கும்”
“நிச்சயமா” என்றனர் இரு ஆண்களும்.
“சுந்தரிக்குத் தண்டனை கிடைக்கணும். ஆனா அதை நாம கொடுக்கணும். அதுவும் வேற மாதிரி” எனக் கண் சிமிட்டினாள்.
“ஒண்ணுமே புரியலையே”
“அஸ்வத் எனக்கும் துஷ்யந்துக்கும் சரியாக எத்தனை மாசமாகும்” வெண்பா வினவினாள்.
“உனக்குக் காயம் ஆறி மேல் தோள் உரிஞ்சி விழணும். அப்புறமா பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிடலாம். இதுக்கு மூணு மாசம் ஆகும். துஷ்யந்துக்கும் அதே கால அளவு சொல்லலாம்”
“மூணு மாசம் காத்திருக்க முடியாது” என சிந்தித்தவள்
“சுந்தரி பக்கத்திலே யாராவது இருக்கணும். ஆனா அவங்க நமக்கு விசுவாசமா இருக்கணும். அப்படி யாராவது?” என அஸ்வத்தைக் கூர்ந்து பார்த்தாள்.
“சுந்தரி சித்திக்கு எல்லாரோடும் சண்டை நல்ல உறவு அவ்வளவா இல்ல. அவங்களுக்கு கமலானு ஒரு தங்கை இருக்காங்க. ”
“நீ உன் அப்பா மூலமா தங்கையை வேலைக்குச் சேர்க்க சொல்லு. அதாவது வர்ஷா காலேஜ் போகணும். மோகன் சார் ஆபீஸ் போகணும். அப்ப யார் பாரத்துப்பாங்க? அதனால தங்கை இருக்கட்டும்னு சொல்லி பாரேன்”
“அதுக்கு தங்கை சம்மதிக்கணுமே?” துஷ்யந்த் வினவ
“கண்டிப்பா சம்மதிப்பாங்க. சுந்தரி மேல அவங்களுக்கு கோபம் அதிகம்” இது அஸ்வத்
“சரி அப்பச் சுந்தரி இனி ஆஸ்பெட்டல் விட்டு வெளியே வரக் சுடாது. அவர்கள் காயம் பெருசாகணும்.”
“அதெப்படி?”மீண்டும் துஷ்யந்த்
“அவங்க எடுக்கப் போகும் மருந்தெல்லாம் இங்க இருந்து அஸ்வத் மூலமா தங்கை கைக்கு போகணும். அதைச் சுந்தரி சாப்பிடணும். சுந்தரி சுயநினைவில்லாமல் பாத்துக்கோ அஸ்வத்”
“சுந்தரி தங்கையை முதல்ல பார்த்து கூடிட்டு வரேன்” எனச் சென்றான்.
தங்கை கமலா முழுமனதோடு சம்மதித்து இந்த கூட்டணியில் இணைந்தார். சுந்தரியால் பல இன்னல்களுக்கு ஆளானவர். அவரும் மருத்துவம் படித்தார். ஆனால் வீட்டிலும் வெளியிலும் அவருக்கான அங்கீகாரம் என்றுமே கிடைத்ததில்லை. அவைகளைச் சுந்தரி தட்டிப் பறித்தார்.
வெளிநாட்டிலிருந்து திரும்பிய மோகனுக்குச் சுந்தரியின் நிலைக்கான காரணம் புரிந்துவிட்டது. நேர்மையான விஷயமாக இருந்தால் சுந்தரி உடனே போனில் கூறியிருப்பார்.
வர்ஷா மட்டும் சுந்தரி தன் காதலுக்காகத் தான் இதைச் செய்தார் என நினைத்து வெண்ணெய்யாக உருகிக் கொண்டிருந்தாள்.
அஸ்வத் தன் தந்தை மோகனிடம் பேசி சுந்தரியின் தங்கையை வேலைக்குச் சேர்த்துவிட்டான். இது அஸ்வத்தின் பரிந்துரை எனத் தாய்க்கும் மகளுக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார் மோகன்.
தொடக்கத்தில் சுந்தரியைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார் தங்கை. அதனால் அவர் தொடரட்டும் என விட்டுவிட்டனர்.
அஸ்வத் கொடுத்த மருந்துகளைக் கொடுத்தார். அதனால் சுந்தரி பெரும்பாலும் உறக்கத்திலிருந்தார். தங்கை மருத்துவர் கொடுத்த மருந்துகள் எனச் சுந்தரியிடம் முதலில் காட்டுவார். பின்பு சுந்தரிக்குத் தெரியாமல் மாற்றினார். சுந்தரியும் மருந்துகளை சரிப் பார்க்கும் மனநிலையில் இல்லை.
தினமும் மோகனும் வர்ஷாவும் வந்து பார்த்துக் கொண்டனர். பின்பு மோகன் வேலை என மெல்ல மெல்ல வருவது நின்றது.
கருமுட்டை சேகரிப்பு வெகுவாக குறைந்தது. சுந்தரி தங்கை அதில் பணியாற்றுபவர்களைக் கண்டறிந்தார்.
அதனோடு வெண்பா துஷ்யந்த் சிகிச்சையும் ஒரு பக்கம் நடைபெற்றது.
“இப்ப அடுத்தது மோகன் சாரை திசைதிருப்பணும்” என்றாள் வெண்பா.
“என்ன செய்யணும்?”
“கல்பனானு ஒரு நடிகை”
“ஐயோ இன்னொரு சித்தியா? ஒரு சித்திய சமாளிக்கவே நாக்கு தள்ளுது” அஸ்வத் அலறினான்.
“சும்மா திசைதிருப்பத் தான்” என துஷ்யந்த் சமாதானப்படுத்தினான்.“அவங்க ரெண்டு பேரையும் மீட் பண்ண வைக்கலாம்” எனத் தோளைக் குலுக்கினான்.
“இது எங்க போய் முடிய போகுதோ” என அலுத்துக் கொண்டான் அஸ்வத். அவனுக்கு அவன் அப்பாவை பற்றித் தெரியாதா?
துஷ்யந்தின் நெருங்கிய நண்பனின் உறவினர் தான் கல்பனா. மோகன் மற்றும் கல்பனாவை அறிமுகம் செய்து வைத்தது நண்பன்.
மோகன் கல்பனா நெருக்கம் அதிகரித்தது. “எனக்கு ரெண்டாவது சித்தி கண்டிப்பா உண்டு” என இருவரிடமும் புலம்பினான் அஸ்வத்.
“அஸ்வத் பயப்படாத கல்பனாவுக்கு செக் வைக்க ராகேஷ்னு ஒருத்தன் இருக்கான். அவன் நம்ம ஆள்தான். கல்பனாவை சமாளிக்க அவன் இருக்கான்” என துஷ்யந்த் தைரியம் சொன்னான்.
மோகன் ஒரு நாள் அஸ்வத்தை அழைத்தார். “உனக்கு உன் தங்கைக்கும் நல்ல வரன் வந்திருக்கு” என தன் பிள்ளைகளுக்குத் திருமணம் முடிக்கத் துடித்தார்.
“அப்பா உங்களுக்கும் நடிகை கல்பனாவுக்கும் ஏதோ அப்பயர்னு (affair) கேள்விப்பட்டேன்” எனக் கேட்டான்.
“அதெல்லாம் பொய் அவங்க என்னோடு நல்ல பிரெண்ட்” என அப்போதைக்கு சமாளித்தார் மோகன்.
விரைவிலேயே மகனுக்கும் மகளுக்கும் நல்ல வரன் பார்த்து கோலாகலமாகத் திருமணம் முடித்தார் மோகன்.
“அம்மாவை பார்த்துகனும்” என்று வர்ஷா திருமணத்திற்குப் போகவில்லை.
மோகன் அடுத்து வர்ஷாவிற்குத் திருமணம் செய்ய முனைந்தார். தான் கல்பனாவை கரம் பிடிக்கையில் தன் குழந்தைகள் தனித்து இருக்கக் கூடாது என்பது அவர் எண்ணம்.
அஸ்வத் வர்ஷாவின் திருமணம் பற்றிக் கூறியதும் “ஐயோ இது நடக்கக் கூடாது” என்றாள் வெண்பா.
“ஏன்?”
“சுந்தரி ஊர்ல இருக்கிற எல்லா பொண்ணுங்க வாழ்க்கையும் நாசம் செய்வாங்க. ஆனா இவங்க பொண்ணுக்கு மட்டும் ஜோரா கல்யாணம் பண்ணுவாங்களா?” வெடித்தாள்.
“உன் பிளான் தான் என்ன?” துஷ்யந்த் பொறுமை இழந்து கேட்டான்.
“வர்ஷா லவ் ஸ்டோரி தொடரணும்”
“புரியலையே” அஸ்வத் முழித்தான்.
“துஷ்யந்த் வர்ஷா வாழ்க்கைல நுழையணும் சிம்பிள். எனக்கு வெண்பாவைத் தவிர எதுவும் நினைவு இல்ல. அப்படினு சொல்லி நடிகனும். ஆனா ஹீரோ கணக்கா லுக் விடு … பைத்தியம் மாதிரி இருக்கணும் ஆனா இருக்கக் கூடாது” வெண்பா விளக்கினாள்.
“சுந்தரிக்கு விஷயம் தெரிஞ்சா துஷ்யந்த் உயிருக்கு ஆபத்தாகிடுமே” அஸ்வத் கேட்க
“சுந்தரிகிட்ட அதிர்ச்சியான தகவல்கள் சொல்லக் கூடாதுனு. சுந்தரி தங்கை மூலமா வர்ஷாகிட்ட சொல்ல வைக்கணும். துஷ்யந்த் பத்தி சுந்தரிக்கு தெரியவேக் கூடாது” வெண்பா விளக்கினாள்.
“இது அநியாயம் அக்கிரமம்” எனப் பொய்யாக துஷ்யந்த் கோபப்பட்டான்.
உனக்கு லைட்டா இதுணுன்டு” என தன் விரலில் சிறு அளவைக் காட்டியபடி “அம்னிஷியா ப்ளஸ் கொஞ்மா பைத்தியமா நடி போதும்” என்றாள்.
இதைக் கேட்டு அஸ்வத் சிரித்துவிட்டான். துஷ்யந்த் ஏற்றான் காதலுக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா? அடுத்து சிந்துவின் மேல் வெண்பாவின் எண்ணங்கள் நிலைகுத்தின.
துளிகள் தெறிக்கும்…