• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தென்றல்-5

Indhu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 10, 2021
8
6
3
Coimbatore
அன்று எல்லோரும் ஆவலாய் எதிர்பார்த்த சக்தியின் விருது வழங்கும் நாள்...

எப்போதும் போல் அஷ்வத் அன்று அதிகாலையிலேயே அம்மாவை அழைத்து விட்டான்...

"ம்ம்மா...எப்பவும் சொல்றதுதான் அங்க போய் எதுவும் அழுதுறாத.. அழுதுறாதமா... நீ அழுதா எனக்கு பிடிக்காது...செமயா கோவம்தான் வரும்னு தெரியும்ல...மா அப்புறம் சக்திய நா அனுப்புன அந்த வயலட் கலர் சர்ட் போட சொல்லு...சரியாமா..."

"சரிடா சரிடா....வாடான்னா வராம அங்க இருந்துட்டு கால் பண்ணியே என்னை டென்ஷன் பண்ணு... இரு அவன்கிட்ட தர்றேன்..."

போன் இப்போது சக்தியிடம் கைமாற...

"நீ வரல....அஷ்வத் வரல...சக்தி பங்ஷன்கு அஷ்வத் வரல.."

தன்னிடம் கோவம் கொண்டு பேச மறுத்த தனயனை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்து..அண்ணனாய் அவனுக்கு ஆயிரம் பத்திரம் சொன்னவன் ஒரு வழியாய் போனை வைத்தான்...

அஷ்வத்தின் மனதிருந்த வெறுமைக்கு அடுத்து தேஜூவிற்கு அடித்து பேச வேண்டுமென உள்ளே ஒரு குரல் ஓவென இரைந்தது...."நீ பேச வேண்டாம் அவள் குரலையாவது கேளேன்டா"... என உடலின் ஒவ்வொரு செல்லும் துடித்தது... "அன்னைக்கு அப்படி அழுதுட்டே பேசினாளே இப்ப சாதாரணமா ஒரு வார்த்தை பேசி கேட்டுட்டா போதுமே"... என்ற மனதின் அலறலுக்கு இறுதியில் செவி சாய்த்தவன் ஒரு முடிவாய் கைநடுங்க போனை எடுத்து நம்பரை அடித்தும் விட்டான்...அந்த பக்கம் ரிங் போன சில நொடிகளில் இவனுக்கு இதயம் தொம் தொம்மென்றாக...மூச்சை இழுத்து பிடித்து கொண்டான்...

"ஹலோ..."

எதிர்முனை பெண்ணவளின் குரல் ஙஞயநமன போட்டது...வெகுவாய் அழுதிருப்பாள் என குரலே சொல்ல.. இங்கு இவன் துடித்து போனான்...

"தேஜூ...."

"ம்ம்ம்..."

"ஏய்...அழறியா..."

"ம்ம்ம்.."

சில நிமிடம் இவன் பேசாமல் இருக்க...அவளும் அமைதியாய் இருந்தாள்...

"ஸாரி தேஜூ..."

"ம்ம்ம்..."

"அன்னைக்கு அங்கிள் சொன்னப்ப ரொம்ப கில்டியா பீல் பண்ணேன்...ஆக்சுவலா அதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணகூட தெரியல..அதான் உன்கிட்ட அப்படி சொல்லி வச்சுட்டேன்..பட் நிஜமா சொல்றேன்... இங்க நா செத்துட்டேண்டி அத சொல்லும் போது...நிஜமா முடியல..."

"ம்ம்ம்..."

"உனக்கு புரியுதா....வெறும் அஷ்வத்தா உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன்..ஆனா சக்தியோட அண்ணாவா உன்னை விட்டு தள்ளிப்போறேன்..என் நிலைமை உனக்கு புரியுதாடாமா...ப்ளீஸ் ஏதாவது சொல்லேன்.."

"ம்ம்ம்..."

"ஏய் ஏதாவது பேசேண்டி...உன் வாய்ஸ் கேட்காம உயிரே போகுதுன்னுதான் கால் போட்டேன்...சும்மா இப்படி ம்ம்ம் கொட்டியே மனுசன கொல்ற.."

அவன் அங்கு சீற...இங்கு பதிலுக்கு பெண்ணும் சீறினாள்..

"ஹலோ மிஸ்டர் லண்டன் பெல்...இங்க உங்க ஸ்வீட் ஹார்ட் உங்க கால் வந்தா அட்டெண்ட் பண்ணி எப்பவும் ம்ம்ம் மட்டும்தான் சொல்லணும்னு சொல்லிட்டு போயிருக்கா... அப்ப ம்ம்ம் கொட்டாம... நா வேற என்ன பேசுறது...வேணும்னா அவகிட்ட கேட்டுட்டு வந்து நல்லா வண்ண வண்ணமா பேசட்டா..."

ஆம் பதிலுக்கு சீறியது தேஜூ அல்ல....கல்பனா...

"அடச்சீ நீயா...உங்கிட்டயா நா இவ்ளோ நேரமா பேசிட்டு இருந்தேன்...லூசு லூசே...என் தேஜூ எங்க.."

அஷ்வத்திற்கு அதுவரை மனதை அழுத்திய பாரமெல்லாம் ஒரு நொடியில் ஒன்றுமேயில்லாமல் போயிருக்க... கல்பனாவின் அலப்பறையில் இப்போது சிரிப்புதான் வந்தது..

"ஆங்...அவ கிளம்பிட்டு இருக்கா...இருங்க தர்றேன்.."

"ஏய் இரு இரு..ஆமா உன் வாய்ஸ் ஏன் இப்படி இருக்கு...உடம்பு சரியில்லயா.. என்ன நேத்து மழைன்னு அம்மா சொல்லுச்சே...வழக்கம் போல மழைல நனைஞ்சு கோல்ட் வாங்கிட்டயா... நீயெல்லாம் அடங்கவே மாட்டியா...ஆமா ஹாஸ்பிடல் போனியா இடியட்..நீ டேப்லேட்டும் போடமாட்ட...பேசாம போய் பர்ஸ்ட் ஒரு இன்ஜெக்ஷ்ன் போட்டு வா பைத்தியமே...சொல்றது கேக்குதா.."

கல்பனாவிற்கு ஏனோ நெஞ்சம் கனமாக சட்டென எதுவோ தொண்டையில் வந்து அடைத்து நின்றது ... அழுதே இராத விழிகளில் இப்போது கண்ணீர்கூட வரும்போல் இருந்தது பெண்ணவளிற்கு.. எப்போதும் அஷ்வத்தின் இதுபோன்ற மிரட்டலில் கோவம் கொண்டு வசைபாடி சட்டென போனை கைமாற்றுவதால் பெரிதாய் அவன் அன்பு முகத்தை கண்டதில்லை சிறியவள்...தேஜூ அவனை பற்றி சொல்லியும்கூட இருமனமாய் இருந்தவள் இன்று முழுமனதாய் அவன் பாசத்தில் வீழ்ந்தே போனாள்...

இங்கு இவள் மவுனமாய் இருந்த சிலநொடியில் அஷ்வத் அங்கு பலமுறை கத்தியிருக்க...சுதாரித்தவள்...

"இல்ல அத்தான்...நா..ஐயம் ஓகே...இருங்க தேஜூகிட்ட தர்றேன்"....என்றவள் அக்காவிடம் போனை கொடுத்துவிட்டு வெளியில் போக...தேஜூதான் ஒன்றும் புரியாமல் குழம்பி போனாள்.

"என்னாச்சு ஏதோ அத்தான் பொத்தான் செத்தான்னு எல்லாம் கேட்டுச்சு...யார் யாருக்கு அத்தான்...எவன்டா என் சட்டை பொத்தான்"...என்றவள்..."ஹலோ".. என்க...

"இப்ப தேஜூவா பேசுறது..."

அஷ்வத்தின் குரலில் சுர்ரென உற்சாகமானவள் குரலை மாற்றிக் கொண்டாள்..."ஆமா தேஜூதான் என்ன விஷயம்...எதுக்கு இப்ப போன் பண்ணீங்க...அன்னைக்கு சொன்னதுல சொல்ல மறந்து ஏதாவது விட்டு போயிடுச்சா..."

தேஜூவின் நக்கலான குரலில் தன்னை போல் சிரித்தவன்...

"ஆமா.."

"என்ன சொல்லணும்... சொல்லுங்க.. எனக்கு வேலையிருக்கு..ம்ம்..ம்ம்... சீக்கிரம் ஆகட்டும்.."

"ம்ம்ம்...இன்னைக்கு சக்தி பங்ஷனுக்கு நா இருக்கணும்னு ஆசப்பட்டேன் தேஜூமா...ப்ச்...பட் முடியல...இங்க லீவ் கிடைக்கல..."

"ம்ம்..ஆமா ஆன்ட்டி சொன்னாங்க... அதுக்கு..."

"இல்ல...என்னாலதான் போகமுடியல.. எனக்கு பதிலா நீ போய்ட்டு வர்றியா... அதாவது என் சார்பா என்...என்னோட வைப்பா போய்ட்டு வர்றியா"...என்றவன் சிலநொடி நிறுத்தி..."போவேல்ல தேஜூமா" .... என்க...சில நொடி அமைதிக்கு பின்அந்த பக்கம் அவள் விசும்பும் சத்தம் கேட்டது... பெண்ணவளுக்கு புரிந்தது இவனின் சமாதான முயற்சி..ஆனால் அன்று அவன் இறுதியாய் சொன்ன.."நாம பிரிஞ்சுடலாம்".. என்ற வார்த்தை சரியாய் நினைவில் வந்து இந்த நொடி வலிக்க இவள் முறுக்கி கொண்டாள்...

"ஹலோ நீங்க சொல்லியெல்லாம் இல்ல...நா போறது சக்திக்காக...ஆமா என்ன மிஸ்டர் நினைச்சுட்டு இருக்கீங்க உங்கள பத்தி... இங்க நம்ம அபார்ட்மெண்ட்ல உங்க பேர் என்னன்னு தெரியும்ல.. சக்தி அண்ணா...இதான் உங்க பேரு... பேர்லகூட நீங்க சக்திக்கு அப்பறம்தான்...சோ இதுலயும் அதான்...நாங்க சக்திக்காக மட்டும்தான் போறோம்....உங்களுக்காக ஒன்னும் இல்ல... அதோட இப்டில்லாம் சொல்லி ஒன்னும் என்னை சமாதானம் பண்ண வேண்டாம்....சரியா...வேணும்னா நீங்க பீல் பண்ணதால அங்க இருந்து வீடியோ கால்ல நடக்கறத காட்டறேன்...இப்ப கிளம்பறேன்.."

"ஹே சரி சரி...நீ கோவமாவே இரு..ஆனா உந்தங்கச்சிக்கு ஜூரம் அதிகமாயிடுச்சுன்னு நினைக்கறேன்... எதுனா டேப்லெட் வாங்கி குடு...என்னை அத்தான்னு எல்லாம் கூப்பிட்டு பக்குன்னு ஆக்குறா.... பார்த்துக்க..."

சிரிப்புடன் சொன்னவன் போனை வைத்துவிட...அவள் அவசரமாய் தங்கையை தேடிப் போனாள்..

"அடியேய் ஏண்டி நீ அவர அத்தான்னு எல்லாம் கூப்டியாம்..."

"ஏன் இப்ப அதுக்கு என்னவாம்..."

"மனுசனுக்கு கைகால் வாயெல்லாம் இழுத்துக்குச்சாம் நீ அப்படி கூப்பிட்டதும்...உன்னை விபூதி போட்டு மந்திரிக்க சொல்றாரு...வா வா நல்லா மந்திரிக்கறேன்..."

இங்கு இருவரும் வாயடித்து பேயோட்டிக் கொண்டிருக்க...அங்கு காயத்ரி ஜோசப்பிடம் நிதானமாய் பேசிக்கொண்டிருந்தார்..

"என் வீட்ட எதிர்த்து உங்கள நம்பி நா வந்தப்ப எனக்கு பதினெட்டு வயசுதான் ஜோசப்...உலகமே தெரியாது....படிக்கல... ஏன் சமைக்க கூட வரல..ஆனா எவ்ளோ மாறுச்சு என் லைப்... அதுக்கப்புறம் உங்ககூட மனசார வாழ்ந்தேன்.... நிமிர்வா வளர்ந்தேன்... படிச்சேன்... வேலைக்கு போனேன்...என் வீட்ல என்னை கண்டிச்சு அடிமையா வளர்த்துனதால என் பொண்ணுங்ககிட்ட ஜாலியான அம்மாவா இருந்து அவங்கள சுதந்திரமா தைரியமான பொண்ணுங்களா வளர்த்துனேன்... என்னால இதையெல்லாம் எப்படி செய்ய முடிஞ்சது...படிக்காத ஒரு பட்டிகாட்டு பொண்ணு இதெல்லாம் எப்படி பண்ணா ஜோசப்..."

அவர் தலைகுனிந்து மனைவியின் பேச்சை உள்வாங்கி கொண்டிருக்க... நீண்ட ஒரு அமைதிக்கு பின் காயத்ரி தொடர்ந்தார்...

"லவ் ஜோசப்...ஆல் பிகாஸ் ஆப் லவ்..அந்த மேஜிக்தான் என் லைப்ல வந்து என் பிளாக் அன்ட் வொயிட் லைப்ப கொஞ்சம் கொஞ்சமா இவ்ளோ கலர்புல்லா மாத்துச்சு...இப்ப அதே லவ் என் பொண்ணு லைப்ல வர்றப்ப மட்டும் நா எப்படி வேண்டாம்னு சொல்வேன் ஜோசப்.. அதுவும் உங்களோட முட்டாள்தனமான ரீசன்காக..."

"இல்ல காயத்ரி...நா சொல்றத கொஞ்சம்..."

ஜோசப் மேலே பேசும் முன்..கையை தூக்கி நிறுத்தியவள்..

"ஸாரி ஜோசப்...உங்க பேச்சு எனக்கு பிடிக்கல..சோ மறுபடி அந்த பாயிண்ட் வச்சு பேசாதீங்க...ஒரு அம்மாவா எனக்கு அத கேட்க அவ்ளோ வலிக்குது... சைன்ஸூம் மெடிக்கலும் எவ்ளோ வளர்ந்தாலும் உங்கள மாதிரி ஆளுங்க மூளை மட்டும் வளரவே மாட்டேங்குது... விவேக் சார் சொன்ன மாதிரி எத்தனை பெரியார் வந்தாலும் உங்கள எல்லாம் திருத்தவே முடியாது போல... என்ன பண்ண...இங்க பாருங்க... இப்பகூட சொல்றேன்...இந்த பங்ஷன்கு சக்தியோட பக்கத்து வீட்டுக்காரரா இல்லாம தேஜூவோட அப்பாவா கிளம்பி வர்றதுன்னா வாங்க...இல்லையா நீங்க வரவே வேண்டாம்...இங்கயே இருங்க..ஆனா உங்கள விட்டுட்டு இப்ப இந்த பங்ஷன்கு போற மாதிரி தேஜூ கல்யாணத்துக்கும் நாங்கள்ளாம் ஒருநாள் போவோம்...அப்பவும் இப்படியே தனியா இருங்க...சரியா நாங்க போய்ட்டு வரட்டா..."

சொன்னவர் பெண்களை அழைத்து கொண்டு கிளம்ப ஜோசப்தான் உண்மையில் தனித்திருந்தார்..

பாவம் மது மாது புகை என எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல மனிதர்... தன் சிறு குடும்பமே உயிர்மூச்சு என்றிருந்த வீட்டுபறவை அவரை....கடந்து போயிருந்த அந்த இருவாரங்களும் வெகுவாய் மிரட்டியிருந்தது...அன்று கடைசியாய் சக்தியை வைத்து முடித்து கொண்ட பேச்சு வார்த்தை....அதன்பின் யாருமே இவருடன் பேச்சின்றி இருக்க ...பெண்களின் இருவார ஒதுக்கத்திலேயே வெகுவாய் ஒடிந்து போனார்..இன்று காயத்ரி பேசும்போதுகூட அதனாலேயே மவுனம் காத்தவர்...இப்போதும் வெகுநேரம் யோசனையிலேயே இருந்தார்...

"ம்ம்மா அப்பா" ....கிளம்பிய பெண்கள் அப்பா அறை வாசலில் வந்து தயங்கி நிற்க...

"கண்டிப்பா வருவாருடா.... தேஜூவோட அப்பாவா சீக்கிரமா வருவாரு..இப்ப வாங்க போலாம்..."

அதன்பின் பெண்கள் மூவரும் அரக்க பரக்க அங்கு போக...அதற்குள் விழா தொடங்கியிருந்தது...

மதுவும் சக்தியும் இருவரிசை முன்னால் அமர்ந்திருக்க...கையாட்டி தாங்கள் வந்ததை சொல்லிக்கொண்டு...இவர்கள் போய் அங்கிருந்த அபார்ட்மெண்ட் ஆட்களுடன் சேர்ந்து அமர்ந்து கொண்டனர்....

விழாவில் ஒவ்வொரு பிரிவினருக்கும் விருதுகள் வழங்கப்பட.....அங்கிருந்த திரையில் விருது வாங்குபவர்களை பற்றிய ஒரு விளக்கமான குறும்படமும்...அதில் அவர்கள் கடந்து வந்த பாதை.. தற்போதைய சாதனை வரை எல்லாமே இருக்க...தொடர்ந்து அந்த அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்து கொண்டேயிருந்தது..... நிறைய இளைஞர்கள் சிறிய வயதிலேயே பல்வேறு துறையில் சாதித்திருக்க... அவர்களின் குறும்படம் மூலம் அதற்கு அவர்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் விளக்கி சொல்லும்போது நிஜமாகவே அங்கிருந்த பார்வையாளர்களுக்கு பிரமிப்பாய் இருந்தது ...ஆர்வமாகவே அந்த விழாவை அனைவரும் ரசித்து பார்த்தனர்...

நேரம் செல்ல...இறுதியாய் இப்போது சக்தியின் முறையும் வந்தது...

"அடுத்த விருது சவால்களை வென்ற சாதனையாளன் விருது...இந்த விருது மிக முக்கியமான விருது...கூடவே கொஞ்சம் ஸ்பெஷலான விருதுகூட...நா ஏன் அப்படி சொல்றேன்னா...இந்த விருத வாங்குற மிஸ்டர் சக்தியும் கூட கடவுளின் குழந்தைகள்னு சொல்லப்படுற ஒரு ஸ்பெஷல் சைல்ட் பர்சன்தான்....எஸ்...ஹி ஈஸ் அ ஆட்டிசம் பர்சன் கம் ஸ்டூடண்ட்....அவர பத்தி விரிவா தெரிஞ்சுக்கலாம்....அதுக்கு முன்னாடி அவர வெல்கம் பண்ணிடலாம்....சோ லெட்ஸ் வெல்கம்....மிஸ்டர் சக்தி ஆன் ஸ்டேஜ் ப்ளீஸ்..."

நிகழ்ச்சியின் வரவேற்பாளர் அறிமுகப்படுத்த...தன் அம்மாவின் கைபி
டித்து இழுத்தபடி முகமெல்லாம் சிரிப்புடன் சற்று அதிகமான உற்சாகத்தோடு மேடையேறி கொண்டிருந்தான் சக்தி....

தென்றல் தாலாட்டும்...