• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தேடல் - 05

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
216
220
43
Salem

"நீ என்ன நெனச்சுட்டு இப்படி பண்ண அகிலேஷ்... கொஞ்சம் உன் கைய வச்சிட்டு சும்மா இருக்க மாட்டியா.. நீ கை வச்சது யாரு மேல் தெரியுமா... வி கே பொண்ணு மேல டா.. அவனுக்கும் எனக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தம்... ஏதோ என் அப்பா மேல உள்ள மரியாதைக்காக அவன் அமைதியா இருக்கான்.. ஆனா நீ இந்த நேரத்துல இப்படி பண்ணி வச்சிருக்க... இடியட் இடியட்.. நீ எனக்கு நம்பகமான ஆள் அதுதான் நீ எதுலேயும் சிக்கக் கூடாதுன்னு நான் உன்னை காப்பாத்திட்டிருக்கேன்... ஆனா நீ எனக்கு மேல பிரச்சனைய இழுத்து விட்டுருக்க... உனக்கு அப்படி ஒரு பொண்ணு வேனும்னா அவ வெளிய வந்ததுக்கு அப்புறம் அவள என்னவென்னாலும் பண்ணிக்க.... இப்போ ஸ்கூல்ல வச்சி நீ அவ மேல கைய வைக்கவும் இந்த குட்டிச் சாத்தன் பாத்துருச்சி.. சரி அதோட வந்து தொலைஞ்சிருக் வேண்டியது தான... அது மேல் கையவச்சி அது கீழ் விழுந்து இப்போ அது எழுந்து பேசுச்சின்னா... உன்னோட வண்டவாளம் வெளில வரும்... ஏற்கனவே நீ பண்ணி வச்ச வேலைகளை மறைக்க எங்கப்பா பேர யூஸ் பண்ணேன்.. ஆனா இப்போ அதுவும் முடியாதபடி பண்ணி வச்சிருக்கே..." கோபமுகத்துடன் கத்தினான் ரஞ்சித்.

எதிரிலிருந்தவனோ தலைகுணிந்தபடி "சாரி பாஸ்.." ஒற்றை வார்த்தையுடன் முடித்துக் கொண்டான்.

"சாரி பாஸ்...நான்சென்ஸ்..." என்று தலையை கோதியபடி நடந்தவன் அகிலேஷிடம் திரும்பி,

"நீ நம்ம பீச் லாட்ஜ் ல இரு... நான் ரூம் ஏற்பாடு பண்ணிட்டேன்.. நானா சொல்ற வரைக்கும் நீ வெளிய வரக்கூடாது.. ஓகே"

"ஓகே பாஸ்.. பாஸ் அப்புறம்...??" என்ற கேள்வியுடன் அசிங்கமாய் தலையை சொறிந்தான்.

" நீ பண்ணி வச்சிருக்க வேலைக்கு அதுதான் இப்போ முக்கியம் பாரு.. போட இடியட்... எல்லாம் உன் ரூம் தேடி வரும்.." ரஞ்சித் சொல்லவும் அசிங்கமான சிரிப்புடன் அவன் சென்றான். படித்து நல்ல வேலையில் இருந்தும் இவர்களைப் போல பணத்திற்காகவும் அவர்களின் சந்தோஷம் மட்டும் இருக்கும் மனிதர்கள் வரையில் மனிதம் அழிந்து கொண்டே தான் இருக்கிறது. ரஞ்சித் வி கே வை எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் அமர்ந்திருந்தான்.


செங்கதிரோன் நிலவுவளை மறைத்து தான் சுடர்விட தொடங்கினான். இரவெல்லாம் தூங்காமல் தூங்கும் தன் மகளின் அருகிலிருந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் விவேக். ஒரே நாளில் வாடிய கொடி போல ஆகிவிட்டாள். விழித்திருக்கும் போது யாரையும் அருகில் நெருங்க விடவில்லை. தன்னைத் தவிர யாரிடமும் நெருங்காதவள் இன்று தன்னையே அருகில் சேர்க்காதது அவன் மனதில் அதிக பாரத்தை ஏற்றியது.

'நேதுமா உனக்கு என்னாச்சி டா... என்னால் முடியல டா... உன்னோட ஒதுக்கத்த தாங்க கூடிய சக்தி இந்த அப்பாக்கு இல்லைடா பாப்பா... நீதான் டா என் வாழ்க்கையோட ஆதாரம்... வந்துருடா.. அப்படி என்னடா நடந்தது இரண்டு மணி நேரத்தில்...' ஆயிரம் முறையாவது தன் மகளிடம் மனதார பேசியிருப்பான். ஆனால் அவனுக்கு விடை தான் கிடைத்தபாடில்லை. அதன் விடையை எப்படி கண்டுபிடிப்பது புரியாமல் குழம்பிய படி அமர்ந்திருந்தான். அப்பொழுது அங்கே வந்த நர்ஸ் "ஸார் உங்களை டாக்டர் பாக்கனும்னு சொன்னாரு... நான் பாப்பவ பாத்துக்கிறேன் ஸார்..." என்றாள்.

"ம்ம்... கொஞ்சம் பாத்துக்கோங்க.. நான் வந்துர்றேன்..." என்று அவளிடம் சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

அங்கேயே இருந்த அவனின் அறைக்கு செல்லவும் ரிஷி வரவும் சரியாக இருந்தது. "சொல்லுங்க ரிஷி... என்கிட்ட என்ன சொல்லனும்... நேத்ராக்கு என்னாச்சி.."

"ஸார் பாப்பா எதையோ பார்த்து பயந்துருக்காங்க... அதுமட்டுமில்லாம ஏதோ அதிர்ச்சியான சம்பவம் நடந்துருக்கு... அதை பார்த்தத அதிர்ச்சியில தான் கீழே விழுந்துருக்காங்கன்னு நினைக்குறேன்... ஆனா எனக்கு ஒரு சந்தேகம் பாப்பாவ யாரோ தள்ளிவிட்டுருக்கலாம்.. எதிர்பாராத நடந்த ஏதோ இன்சிடென்ட் தான் பாப்பாவோட இந்த நிலைக்கு காரணமாகவும் இருக்கலாம்... பட் இதெல்லாம் என்னோட யூகம் தான்... ஆனா நடந்தது நீங்க தான் கண்டுபிடிக்கனும்..." என்றதுடன் முடித்துக் கொண்டான்.

விவேக் ரிஷி சொன்னதை யோசித்துப் பார்த்து மீண்டும் ரிஷியிடம் ஒரு கேள்வியை முன் வைத்தான். " இதை எப்படி ரிஷி கொலை முயற்சின்னு சொல்றீங்க... ஏன் இது ஆக்ஸிடென்ட் ஆ இருக்க கூடாது... உங்களுக்கு ஏன் அப்படி தோனுது..."

"சார் அது... இது ஆக்ஸிடென்ட் னா நேத்ரா குட்டி எழுந்து நார்மலாயிருப்பா... கொஞ்சம் பயம் இருக்கும் ... ஆனா அது உங்கள் பார்த்த உடனே போயிருக்கும்.. ஆனா இப்போ யாரையும் நெருங்க விடமாட்றா... அதுவே சந்தேகத்தை உண்டு பண்ணுது சார்... அதுவுமில்லாமல் மேல் மாடிக்கு நேத்ரா போக வேண்டிய அவசியம் இல்லைனு நெனக்குறேன் சார்.." என்றான்.

" ஓகே ரிஷி... நான் பாக்க சொல்றேன்..." என்று அவனிடம் விடைபெற்றான். அவன் நேத்ரா அறைக்கு வரவும் அங்கே ரூபவாஹினி வரவும் சரியாக இருந்தது.

அவளைக் கேள்வியுடன் பார்த்தான்... அவளின் பின்னாலே கரணும் வந்தான். அவன் பார்வையில் இருக்கும் கேள்வியை உணர்ந்தவள் "நான் நல்லாருக்கேன்.. பாப்பாக்கு என்னாச்சி.." அவனிடம் கேள்விக்கனைத் தொடுத்தாள். அவளை முதலில் அம்மா என்று அழைத்தவள் அல்லவா. தான் பெறாமலே தன்னை தாய்மையடையச் செய்தவள். அதுவும் அவளின் நேசத்திற்கு சொந்தக்காரனின் மகள் அல்லவோ. நேற்று முழுவதும் கரண் அவளிடம் எதுவும் கூறவில்லை. ஆனால் அவளின் மனம் ஏதோ தவறாக நடப்பது போல் உணர்த்தியது. ஆனால் அது அவளுக்கே அப்படி நடந்ததால் வந்த ஒரு உணர்வு என்று அமைதியாகிப் பார்த்தாள். ஆனால் மனம் அமைதியடைய மறுத்தது. அதுவும் காலையில் இருந்து மனம் நிலக்கொள்ளாமல் துடித்தது. கரணிடம் இதுபற்றி பேச வேண்டும் என்றுதான் நினைத்தாள். ஆனால் எதேர்ச்சையாக
அவன் யாரிடமோ பேசக் கண்டு அருகில் சென்றவள் அவன் உதிர்த்த பேரைக் கேட்டு அப்படியே நின்றுதான் போனாள்.


" என்ன சார் சொல்றீங்க.. வி கே பொண்ணுக்கு ஆக்ஸிடென்ட் ஆ... ஆனா எப்படி ஸ்கூல்ல இப்படி நடந்தது.. சாதரனமா தோனலையே... ம்ம்.. ஓகே சார் கொஞ்சம் அத பத்தி விசாரிச்சு சொல்லுங்க..." என்று பேசிவிட்டு திரும்பவும் எதிரில் அதிர்ச்சியான முகத்துடன் நின்றிருந்தாள் ரூபவாஹினி.

அவளைப் பார்த்து அதிர்ந்த முகத்துடன் "வாஹி அதுவந்து..."என வார்த்தை தடுமாறினான்.

" சொல்லு கரண்.. ஏன் தடுமாறர யாருக்கு என்னாச்சி...ஏன் இப்போ அவரு பேர் சொன்ன.. அவரோட பொண்ணுக்கு என்னாச்சி... நீ இதுவரைக்கும் என்கிட்ட எதுவும் மறைச்சிதில்லை... ஆனா இன்னைக்கு என்கிட்ட என்ன மறைக்கற.." அவளின் குரலில் உள்ள அழுத்தமே அவனிடம் உண்மையை எதிர்பார்த்தது.

அதற்கு மேல் அவளிடம் உண்மையை மறைக்க விரும்பாதவன், "நேத்து உன்னை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணிட்டு நீ மயக்கத்துல இருக்கும் போது அவருக்கு ஃபோன் வந்துச்சி.. அதுல தான் அவரோட பொண்ணு கீழ் விழுந்துட்டான்னு ஃபோன் வந்துச்சி.. அப்போ அவரு அவசரமா உன்னை பாத்துக்க சொல்லிட்டு வேகமா போனாரு.. நான் கேட்டதுக்கு அவரு பொண்ணுக்கு ஆக்ஸிடென்ட் மட்டும் சொன்னாரு.. நானும் நீ இப்படி இருந்ததுல பெருசா எதுவும் நினைக்கல.. ஆனா நீ வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் அவருக்கு தேங்க்ஸ் சொல்லாம்னு கால் பண்ணும் போது தான் தெரிஞ்சுது அவரோட பொண்ணு ரொம்ப சீரியஸ் ஆ இருக்கான்னு... அது தான்டி விசாரிக்க சொன்னேன்... அது பத்தி பேசனத தான் நீ கேட்டடி..." என்றான்.

"ஏன்டா நேத்தே என்கிட்ட சொல்லல... சரி வா போய் பாத்துட்டு வரலாம்.. எனக்கு மனசே சரியில்லை கரண்... வா போலாம் என்னவோ அங்கே போகனும் போல இருக்கு டா..." என்று அவனை வற்புறுத்தி அழைத்து வந்தாள்.

அதை நினைத்து பார்த்தவன் இவர்கள் இருவரிடமும் திரும்பினான். வி கே வின் மனநிலையோ தான் மனதில் உள்ள கேள்விக்கு எப்படி தன் முகம் பார்த்து பதிலளித்தாள் என்று ஆச்சரியத்துடனே தன்னிலை மறந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரின் நிலையை கண்ட கரண் 'அய்யோ கடவுளே பக்கத்துல ஒரு பச்சபிள்ளைய வச்சிட்டு இப்படி சைட்டடிக்கிறாங்களே.. ஏன்மா நீ பாப்பாவ பாக்க வந்தியா.. இல்லை இவர பாக்க வந்தியா..' என் மனதினுள் நினைத்தவன் இருவரையும் அழைத்தான்.

"ஹலோ பாஸ் கலெக்டர் மேடம்.. ரெண்டு பேரும் இங்க தான இருக்கீங்க.." இருவரின் அருகிலும் சென்று அழைத்தான். அவனின் அழைப்பில் இருவரும் தன்னிலை அடைந்தனர்.

இருவரின் நிலையையும் யூகித்தவன் "இல்லை பாப்பாவ பாக்க போலாம்னு தான் கூப்பிட்டேன் போலாமா.." என இருவரையும் சேர்த்தே கூப்பிட்டான்.

விவேக் "சாரி வாங்க போலாம்" என இருவரையும் அழைத்து சென்றான். அவர்கள் நேத்ராவின் அறையை நெருங்கும் நேரம் அறையிலிருந்து பாட்டில் உடையும் சத்தம் கேட்டது. மூவரும் அவசரமாக அந்த அறைக்குள் நுழையவும் குளுக்கோஸ் பாட்டிலை உடைத்த நேத்ரா அருகிலிருந்த மற்ற பொருட்களையும் தூக்கி எறிந்தால். 'நேத்ரா' என கத்தினான் விவேக். அவளின் நிலையை அவனால் கண்கொண்டு கான முடியவில்லை. அவன் பின்னோடே வந்த ரூபிக்கும் அச்சிறு மலரின் நிலையைக் கான மனம் வலித்தது. அவனின் கத்தலில் பயந்து அமைதியானவள் அவன் அருகில் நெருங்கவும் மீண்டும் அருகிலிருந்த கத்தியை எடுத்து அவனைத் தாக்க முயன்றாள். அதில் பயந்த ரூபவாஹினி 'நேதுமா' என அழைத்து அவள் கையை பிடித்து கொண்டாள். அவளின் ஸ்பரிசத்தில் அந்த நிலவு எதைக் கண்டதோ அமைதியடைந்து அவளை 'அம்மா' என்று அணைத்துக் கொண்டது.

அங்கு மருத்துவர் செவிலியரிலிருந்து அனைவருக்கும் அது ஆச்சரியம் தான்.. ஏன் விவேக்கிற்கும் கூட. யாரையும் தன் அருகில் நெருங்க விடாதவள் இன்று தாயைத் தேடும் கன்றாய் அவளிடம் அடங்கி போனாள் நிலவுப் பெண். "நேதுமா அம்மா வந்துட்டேன் இல்லே.. அழக்கூடாது... ஏன்டா என் தங்கத்துக்கு என்னாச்சி... பாப்பா ப்ரேவ் கேர்ல் தான.. இங்க பாருங்க ஏஞ்சல் சாப்டிங்களா டா.." என்று முதலில் குழந்தையை சமாதானம் செய்தாள். அப்பெண்நிலவும் சற்று சமாதானம் ஆகி "அம்மா பாப்பா பசிக்குது..." என்று தன் சிப்பி வாய் திறந்து மொழி உதிர்த்தாள். அதை கேட்ட தந்தையானவனின் மனம் வருந்தி துடித்தது. பசி என்னவென்று அறியாமல் வளர்த்த மகள் இன்று பசி என்று கேட்டதும் தான் இத்தனை சம்பாதித்து என்ன. தன் மகளை கவனிக்காமல் விட்டேனே என மற்ற மனம் வலிக்க நின்றான்.

அதற்க்குளாகவே நேத்ரா வை தன்னிடம் இன்னும் இயல்பாக பேச வைத்தவள் கரணிடம் கண்களாலே உணவை கொண்டு வரச்செய்தவள் பேசிக் கொண்டே உணவூட்டி முடித்தாள். அவளிடம் மட்டும் குழந்தை இயல்புடனே பேசினாள்.

"அம்மா நீங்க என்னை விட்டு போக மாட்டிங்கள்ள..."என பயத்துடனே கேட்டாள்.

" இல்லைடா இனி அம்மா உன்ன விட்டு போக மாட்டேன் டா... அம்மா ஆஃபிஸ் போயிட்டு சீக்கிரம் பாப்பாட்ட வந்துடுவேன்.. சரியா அதுவரைக்கும் என்னோட ஏஞ்சல் அழாம அப்பாகிட்ட இருக்கனும் டா... இத்தனை நாளா பாப்பாவ பத்திரமா பார்த்துக்கிட்டது அப்பா தானே டா தங்கம்... அப்பாகிட்ட பாப்பா பத்திரமா இருங்க அம்மா சீக்கிரம் வந்துற்றேன் டா ஏஞ்சல்.. சரியா டா தங்கம்.." என்று அவளுக்கு முதலில் தந்தை மேல் உள்ள பயத்தை போக்க முனைந்தாள்.

அவள் குரலில் இருந்த அழுத்தம் உன் தந்தை உனக்கு நன்மையை மட்டுமே செய்வான் என்று உறுதி தெரிந்தது. அதுவே நேத்ரா வை தந்தையை நாடச்செய்தது. 'அப்பா' என்று அழைத்தாள்.. நேற்றிலிருந்து இந்த ஒற்றை வார்த்தைக்குத்தான் தவமிருந்தான். நேதுமா என்று வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டான். அவர்கள் இருவரிடமும் பேசியபடியே இருந்தவள் உறங்கி போனாள். அவள் உறங்கியதும் மூவரும் வெளியில் வந்தார்கள். வந்தவுடன் அவனை பிடித்துக் கொண்டாள்,

"எப்படி இப்படி ஆச்சு விசாரிச்சிங்கள இல்லையா... என்னதான் சொல்றாங்க.." என்று படபடப்புடனே கேட்டாள்.

அவளின் கேள்விக்கு பதில் கூறாதவன் திடீரென அவளை அணைத்துக் கொண்டான். திடிர் தாக்குதலில் அவள் ஒன்றும் புரியாமல் பேச்சற்று நின்று போனாள். பின்னோடு வந்த கரணுமே அவன் செயலில் அதிர்ந்து போனான்.. எதுவரை நீடித்ததே குரு மற்றும் ராக்கி யின் 'பாஸ்' குரலில் இருவரும் தன்னை மீட்டுக் கொண்டனர். அவளிடம் 'சாரி' என்று கூறியவன் குரு ராக்கி யின் புறம் திரும்பினான். சிறிது நேரத்தில் தன்னை சரிபடுத்திக் கொண்டவளும் அவர்களின் பேச்சினை கவனிக்க ஆரம்பித்தாள்.

"பாஸ் நம்ம பாப்பா வோட நிலமைக்கு நம்ம ஸ்கூல் பீ டி மாஸ்டர் அகிலேஷ் தான் பாஸ் காரணம்..."

" என்ன ராக்கி சொல்ற... அவனா அவன் அந்த ரஞ்சித்தோட கையால் தான... அவன் ஏன் இத பண்ணான்.. எனக்கு தெளிவா சொல்லு ராக்கி.." பற்களை கடித்து தனது கோபத்தை அடக்கிய குரலுடனே.

'ரஞ்சித்' என்ற பெயரை கேட்டதும் ரூபவாஹினியின் நினைவலைகள் எங்கெங்கே சென்றது. அவளின் கைகள் நடுக்கத்துடனே கரணின் கரங்களை பற்றிக் கொண்டாள். அவளின் நடுக்கத்தை உணர்ந்தவன் தன் விரலில் அழுத்தம் கொடுத்தான். அதில் தெளிந்தவள் விவேக்கிடம் திரும்பி,

"ரஞ்சித்னா பரமேஸ்வரன் குருஃப் ஆஃப் கம்பெனிஸ் எம்டி பரமேஸ்வரன் சன் தான.." என்றாள் குரலில் உறுதியுடன்.

"ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்.."
அவளை கேள்வியுடன் பார்த்தான்.

"தெரியும் ஒரே காலேஜ் ல தான் படிச்சோம்.. அவனுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை.. ஏன் அவன் நேத்ராவ பழிவாங்கனும்..."

ராக்கி தலையிட்டு "இல்லை மேடம் பகைலாம் எதுவும் இல்லை... ஆனா அவனோட ரிலேட்டிவ் ஒருத்தன் பாப்பா ஸ்கூல்ல ஓர்க் பன்றான்.. அவன் தான் மேடம் ஸ்கூல் ஸ்டாப் கிட்ட தப்பா நடந்துக்க டிரை பண்ணிருக்கான்... பாப்பா அத பாத்து கத்துனதில கீழே தள்ளிவிட்டுட்டான் மேடம்.. பாப்பாவோட நிலமைக்கு அவன் தான் பாஸ் காரணம் அதுமட்டுமில்லாமல் லேடிஸ் ஸ்டாப் கிட்ட இன்டீசன்டா நடந்துட்டுருக்கான்.. ஏற்கனவே அவன் மேல நிறைய கம்பளைன்ட் நிறைய வந்துருக்கு பாஸ்.. ஆனா அத உங்களுக்கும் பரமேஸ்வரன் சாருக்கும் கொண்டு போகாதையே அந்த ரஞ்சித் முடிச்சிருக்கான் பாஸ்.. பரமேஸ்வரன் சார் தான் கரெஸ்பாண்டட்ங்கறதால அவனோட வேலைய காட்டியிருக்கான் பாஸ்.." என்று விளக்கினான்.

அதற்குள்ளாகவே விவேக் குருவிடம் திரும்பி "குரு அந்த ஸ்கூல் முழுசா நம்மகிட்ட வரணும்.. பரமேஸ்வரன் கிட்ட பேசு குரு எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை.. ஆனா அந்த ஸ்கூல்ல இனி நம்ம கட்டுப்பாட்டுல தான் இருக்கனும்.. அதுக்கு என்ன பண்ணணுமோ பண்ணு... ராக்கி நீ அவனை பாலோ பண்ணு.. அந்த அகிலேஷ் பத்தின அத்தனை நியூஸிம் எனக்கு வேணும்... ஓகே போங்க போய் பாருங்க.." அவர்களை அனுப்பியவன் "கரண் உங்ககிட்ட எனக்கு ஒரு ஆப்ளிகேஷன்" என்றான்.


"சொல்லுங்க சார் நா என்ன பண்ணனும் இவனை மாறி ஆட்களை விடக்கூடாது.. நான் எதுவும் தடை சொல்லல சார்... இது எனக்கு தெரியாத மாறியே இருக்கட்டும் சார்..." அவன் கேட்கும் முன்னமே பதிலளித்தான்.

"தேங்க்யூ தேங்க்யூ சோ மச் மிஸ்டர் கரண்... அன்ட் ஒன் ரிக்வெஸ்ட் நீங்க என்ன விவேக் னு பேர் சொல்லியே கூப்பிடலாம்..."

"இட்ஸ் ஓகே விவேக்...கேரி ஆன்.. பட் நான் உங்ககிட்ட ஒன்று கேட்கலாமா... தப்பா நினைச்சுக்க வேணாம்.."

"பரவால கேளுங்க கரண்... நோ மோர் பார்மாலிட்டிஸ்..."

"அது நேத்ராவோட அம்மா எங்க... ஐ மீன் உங்க ஒய்ஃப்..."

வலிகளை தாங்கிய புன்னகையுடன் "நேத்ரா அம்மா இப்போ உயிரோட இல்லை.."

"சாரி விவேக்... நான் கேட்டது உங்க மனசு புண்படும் படி இருந்தா..."

" பரவாயில்லை கரண்.."

" அவங்க பேரு சொல்ல முடியுமா விவேக்.."

"ம்ம்... அவங்க பேரு மித்ரா யாழினி.. என்னோட தங்கை... அவளோட பொண்ணு தான் நேத்ரா...." அவன் பாட்டிற்கு சொல்லிக் கொண்டே போக அவர்கள் பினபுறமிருந்த 'மித்து' என்ற சத்தத்தில் இருவரும் திரும்பினர்.

அங்கே வேறற்ற கொடியாய் விழுந்திருந்தால் ரூபவாஹினி. எத்தனை தான் திடத்துடன் இருந்தாலும் அடுத்தடுத்த அதிர்ச்சி தாக்கும் பொழுது அவர்களும் சாதாரண மனிதன் தானே.

தேடல் தொடரும்...🌹
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
187
43
Tirupur
ஓ.. அப்ப விவேக் தங்கை மித்ரா ரூபியோட ஃப்ரெண்டா?
 
  • Like
Reactions: ரமா