• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தேடல் - 07

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
216
220
43
Salem
7

ரஞ்சித் அந்தக் கல்லூரியில் MBA இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். எல்லா வகையான தீய பழக்கங்களுக்கும் அடிமையானவன். பெண்களை போகப் பொருளாய் மட்டுமே பார்ப்பவன். அவன் கண்களில் விழும் பெண்கள் எப்படியேனும் அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். அதற்கு எந்த அளவுக்கும் கீழிறிங்கும் கேவலமானவன். அதுவரை அவன் கண்களில் விழுகாத மித்ரா அன்று விழுந்தாள். அன்றே அவளின் வாழ்வின் திசைமாறியது. அவன் செய்யும் அத்தனை கேவலமான செயல்களும் கல்லூரிக்கு வெளியில் மட்டுமே. கல்லூரியில் அவனை நல்லவன் என்றே எல்லோரும் நம்புபவர்கள். அவனின் நடிப்பு அதை எல்லோராலும் நம்ப வைக்கப்பட்டது. அவனின் உண்மையான குணம் அவனைப்பற்றி நன்கு அறிந்து பணத்திற்காக அவன் பின்பு அலையும் அவன் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.

அன்று வாஹினி மாதாந்திர பிரச்சினையில் கல்லூரிக்கு வரவில்லை. மித்ராவிற்கும் பாடவேளை முடிந்து தலையை வலிப்பது போல உணர்ந்தவள் கேண்டினுக்கு சென்றாள். பொதுவாக வாஹினி இல்லாமல் அவள் கேண்டின் பக்கம் செல்வதில்லை. ஆனால் இன்று தலைபாரம் அதிகம் என்று சென்றாள். ஏதோ நினைவில் வந்தவள் எதிரில் வந்தவனை கவனிக்காமல் அவன் மேலே மோதி கீழே விழும் நிலையில் உள்ளவளை எதிரில் வந்தவனும் தாங்கி பிடித்துக் கொண்டான். அவனின் முகம் பார்க்காமல்,

"சாரி அண்ட் தேங்க்ஸ்.." என்று அவனை விலக்கி விட்டு சென்று விட்டாள் அப்பாவை.

அவள் சென்றும் அவள் போனவழியே பார்த்தவனை உசுப்பிவிட்டான் நண்பனொருவன்.. "டேய் ரஞ்சித்.. போலாம்டா... நேரமாகுது.."

"டேய் வினய்.. யாருடா இந்த பொண்ணு புதுசா இருக்கா..." அவனிடமே பதில் கேள்வி கேட்டான்.

"டேய் புதுசா... அவ இந்த காலேஜ் ல தான்டா நாலு வருஷமா படிக்குறா.. பேரு மித்ரா யாழினி... ரொம்ப சைலண்ட்டா... இவ கூட இன்னொருத்தி இருப்பா இவளோட ஃபிரண்ட்... அவ பேரு ரூபவாஹினி.." அவனுக்கு தெரிந்த விவரங்களை கூறினான் ரஞ்சித்தால் வினய் என்று அழைக்கப்பட்டவன்.‌

மித்ரா யாழினி... பெயரை ஒரு முறை சொல்லிப் பார்த்தவன் "நைஸ் நேம் டா.. ஆனா இவ்வளவு நாளா நம்ம கண்ணுல சிக்கல... நல்லா அழகாகத்தான் டா இருக்கா... யப்பா என்னா ஸ்டரக்சர் டா... சும்மா கும்முன்னு இருக்கா.." அவன் கண்களிலும் பேச்சிலும் விரசம் வழிந்தது.

"டேய் மச்சான் பெரிய குடும்பத்து பொண்ணு டா... அதுமட்டுமல்லாமல் இவகூடவே இருக்கவ பெரிய ஜான்சி ராணிடா... இவள யாராவது பார்த்தாலே அவங்க உண்டு இல்லைன்னு பண்ணிடுவா... இது மட்டும் தெரிஞ்சுது அவ்வளவுதான் பாத்துக்கோ.. இவ பணத்துக்கு மயங்கறவ இல்லைடா.. பாசத்துக்கு மட்டும் தான் மயங்குவா.. இதுலாம் உனக்கு சரிவராது மச்சான்.."


"என்னடா பயமுறுத்துரியா.. நானும் பெரிய இடம் தான்டா... இவளை நான் என் வலையில விழ வைக்கிறேன்டா..." என்று அவனிடம் சவால் விட்டான்.

"சரி வாடா இப்போ போலாம்... எனக்கு இப்பவே கை நடுங்க ஆரம்பிக்குதுடா.." அவனை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றான் போதை மருந்திற்கு அடிமையானவன்.

கேண்டினில் வந்து அமர்ந்த மித்ரா வாஹினிக்கு அழைப்பு விடுத்தாள், "ஹலோ சொல்லு மித்து.. கிளாஸ் முடிஞ்சிதா.."

" ம்ம்... வாஹி கஷ்டமா இருக்குடி.."

" ஏன்டி"

"நீயில்லாமல்‌ எனக்கு புடிக்கவே இல்லைடி... எனக்கு இங்கே தனியா இருக்கவே புடிக்கல.. நீ சரியானதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் போலாம்னு சொன்னேன்.. ஆனா நீ என்னை தொரத்திவிட்டுட்ட.. போடி நான் உன்கூட பேசமாட்டேன்.. "என்று சிறுபிள்ளை போல அவளிடம் கோபத்தை காட்டினாள்.

அவளின் கோபத்தை எதிரிலிருந்தவள் ரசித்தாள். ஐந்து வயது மழலை தன் தாயிடம் காட்டும் கோபமே அதில் வெளிப்பட்டது. அதை நினைத்து சிரித்தவள் தனது மழைலையை சமாதானம் செய்யும் நோக்கத்தோடு

"சரி ஓகே டார்லிங்.. இன்னைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தரத்தான் போ சொன்னேன்.. ஓகே உனக்கு வேணாம் போல நான் வேற யாருக்காவது கொடுத்துர்றேன்... போ..." என்றாள் மனதிற்குள் சிரித்தவாறு.

"ஹைய் சர்ப்ரைஸா என்னாது அது சொல்லுடி... சொல்லு சொல்லு ப்ளிஸ் டி.." அவளிடம் கெஞ்சினாள். இதுதான் மித்ரா. தனக்கு ஒருவரை பிடித்து விட்டாள் போதும் அவர்களிடம் உடனே சமாதானமடைந்துவிடுவாள் குழந்தையுள்ளம் கொண்ட அந்த குமரி.

"அதுதான் சர்ப்ரைஸ்ன்னு சொன்னேன் இல்லை... சீக்கிரம் வீட்டுக்கு வா... வந்து எனன்னு பாத்துக்கோ.." என்றுவிட்டு காலை கட்பண்ணிவிட்டாள்.

இப்பொழுது இருவரும் விடுதியில் இல்லை, இருவரும் தனியாக வாடகை வீட்டில் இருந்தனர். ரூபவாஹினி அருமையாக சமைப்பாள். மித்ராவிற்கும் ஹாஸ்டல் சாப்பாடு அவ்வளவாக ஒத்துக் கொள்ளவில்லை. அதனாலே இந்த ஏற்பாடு. ஆனால் மித்ராவின் வீட்டில் அவ்வளவு சுலபமாக விடவில்லை. மித்ரா போராடித்தான் சம்மதம் பெற்றாள் அவளின் வாஹினிக்காக. யாரும் இல்லாமல் எங்கேயும் செல்லாமல் இருப்பவளுக்கு நானே எல்லாம் என்று செய்கையால் உணர்த்தி விட்டாள். அதுவுமில்லாமல் தனது வருங்கால அண்ணியவள். அதனாலே இந்த முடிவு. வாஹினியும் அவளின் தமையனும் அவளிடம் எதுவும் சொல்லவில்லை என்று போதும் அவளால் அதை புரிந்து கொள்ள முடிந்தது.

கல்லூரி விட்டு அவசரமாய் வீட்டிற்கு சென்றவளை வரவேற்றது என்னவோ பூட்டி கதவு தான். எனை சீக்கரம் வரச்சொல்லிட்டு இவ எங்க போனா, என அவளைத் திட்டிக்கொண்டே தன்னிடம் உள்ள சாவியால் கதவைத் திறந்தாள். கதவை திறந்து உள்ளே நுழைந்ததும் அவளின் மேலே பூமலை தூவியது.. சந்தோஷத்துடன் அதில் நனைந்து கொண்டே அவளின் கால்கள் நின்றது என்னவோ டைனிங்க் டேபிளில் தான். உணவின் மனம் அவளை அங்கே இழுத்து வந்தது. மூடியிருந்த எல்லாவற்றையும் திறந்து அதன் வாசனையை நுகர்ந்து பார்த்தாள். எல்லா வகை உணவுகளும் அவளுக்கு மிகவும் பிடித்தமானவையே.

எல்லாவற்றையும் கண்டவள் இத்தனை ஏற்பாட்டையும் செய்தவளை தன் கயல்விழிகளால் துழாவினாள். ஆனால் அவளின் தேடலானவள் மட்டும் காணவில்லை. எல்லா இடங்களிலும் தன் சிப்பி இமைகளால் துழாவியவளை பின்னிருந்து அவள் கண்களை பொத்தியது ஒரு மென்கரம்.. அக்கரத்திற்கு உரியவளை நொடியில் கண்டு கொண்டவள்

"ஹேய் வாஹி.. எங்கேடி கூட்டிட்டு போற.."

"மூச்.. எதுவும் பேசாம என்னோட வா.. சொல்றேன்.." என்றாள் மற்றவள்.

அமைதியாக அவளை அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குள் நுழைந்தாள்.

" மித்துமா.. இப்போ நான் கை எடுக்க போறேன்... பட் நான் சொன்னதுக்கு அப்புறம் தான் உன்னோட கண்ணை ஓப்பன் பண்ணனும் ஓகேவா.." என்ற வேண்டுதலுடண் அவளின் கைகளை விளக்கினாள் வாஹினி.

" ஒன்.. டூ.. திரி...ஓபன் யுவர் ஐஸ்.."

அவள் இமைகளை மெதுவாக பிரிக்கவும் அந்த அறை மெழுகுவர்த்தியின் ஒளியில் ஜொலித்தது. அதன் நடுவில் அழகான ஒரு டேபிளில் வட்ட வடிவில் கேக் ஒன்று இருந்தது. அதன் நடுவில் அழகான பர்பி டால் ஒன்றும் 4th Year Anniversary என்று இருந்தது. ஆம் அவர்கள் சந்தித்து இன்றுடன் நான்கு வருடம் நிறைவுற்றது. அதைக் கொண்டாடவே இத்தனை ஏற்பாடு,


யாரும் இல்லாமல் தனிமையில் வசித்தவளுக்கு அனைத்துமாய் வந்தவளை கொண்டாடும் நாளை இருவரும் மறந்ததில்லை. அன்று முழுவதும் சந்தோஷத்துடனே சுற்றுவார்கள். இன்று அது முடியாமல் போனதில் வருத்தத்துடனே இருந்தவளுக்கு பரிசாக வீட்டிலேயே அனைத்தும் ஏற்பாடு செய்திருந்தவளைக் மகிழ்வுடன் அணைத்துக் கொண்டாள். அதில் முழுமையான சந்தோஷத்தை கொண்டவள் வாஹினி தான். தான் யாருமில்லை என்று நின்ற வேலையில் அணைத்துமாகி வந்தவளை அதிகப்படியான நேசத்துடன் அணைத்துக் கொண்டாள்.

காரிருளில் நின்றவளுக்கு வெளிச்சத்திற்கான ஒளியை கொடுத்தவள்.. தாயுமாகி தந்தையுமாகி
பிரியத்தினை வாரி வழங்கியவள்..
நேசத்தின் துளிகளை கற்றுத் தந்தவள்..
பூவின் மணம் கொண்ட இந்த பூம்பாவையோ பாசம் நேசத்தின்
இருப்பிடமானால்...
இத்தளிர் கரங்களில் உணரும் நேசத்தினை பெற்றாரிடமும் உற்றாரிடமும் உணர்ந்ததில்லை.. இவளின் இத்தனை பிரியத்திற்கும் நேசத்திற்கும் தகுதியானவளா என்று நான் கலங்கிய வேலையில்... பிரியத்திற்கும் நேசத்திற்கும் தகுதி தேவையில்லை என்று காருண்யத்துடன் கை நீட்டி என்னை அரவணைத்துக் கொண்டவள் நீயடி என் புன்னகை பெண்ணே...

இருவருமே இணைந்து அந்த கேக்கினை வெட்டி தங்கள் சந்தித்த நாளை கொண்டாடினார்கள். அன்றைய நாளின் சந்தோஷம் அதுவரை மட்டும் முற்றுப் பெறவில்லை. கூடுதல் சந்தோஷமாக தனது தமையனும் போன் செய்த சந்தோஷத்தில் இருந்தாள். அவன் ஃபோன் செய்யும் நேரம் வாஹினி அவன் குரலை கேட்பதற்கு அருகிலேயே நின்றிருப்பாள். இன்னுமே அவன் குரலை கேட்டவளுக்கு ஏனோ அவனைப் பார்க்கும் ஆவல் எழுந்தது. ஆனால் அந்த ஆவலை கட்டுப்படுத்தும் வழிகளையும் அவள் கற்றறிந்தாள். மித்துவின் முழு விருப்பமில்லாமல் தான் அவனைக் காணக்கூடாது என்ற எண்ணம் அவளுள் இருந்தது. அதற்கு மித்துவும் ஒப்புக் கொள்வாள் தான் ஆனால் தனது தகுதிக்கு மீறி ஆசைப்படுவதாக உணர்ந்தாள். அதனால் தான் தன் காதலை இதுவரை அவளிடம் வெளிப்படுத்தவுமில்லை.

அவனுக்குமே அவளின் தயக்கத்திற்கான காரணத்தை அறிந்து கொண்டு அவளின் மனம் தெளியட்டும் அதன் பின்பு பேசிக்கொள்வோம் என்று அவளின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து விலகி நின்றான். அவள் தன்னை உணர்ந்து தனது காதைலை வெளிப்படுத்தவே ஒரு வழியையும் கண்டுபிடித்தான். அதன் ஆரம்பப் புள்ளி தனது பிரிவு. அதற்காகவே இந்தப் பிரிவு. ஆம் அவன் வியாபார நிமித்தமாக வெளிநாடு செல்கிறான். அதைக்கூறவே இந்த ஃபோன்கால். அவன் மித்துவிடம் பேசப் பேசப் இவளின் இமையில் இருந்து உருண்டு விடுவேன் என்று கரைக்கட்டி நின்றது இமைத்துளிகள்.


அவள் அருகில்தான் இருப்பாள் என்று தெரிந்தே தான் அவனும் கூறினான். மித்ரா பேசிவிட்டு அவளிடம்

"வாஹிமா கொஞ்சம் இரு வாஸ்ரூம் போயிட்டு வந்துர்றேன்.." தங்களது அறைக்குள் சென்றாள். இவளோ அவனைக் காணத்துடித்தாள். அப்பொழுது அவளின் ஃபோனில் மெசேஜ் வந்ததற்கான அடையாளமாய் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தில் தன்னிலை மீண்டவள் யாரென்று பார்த்தாள் அவளவன் தான். இருவரிடமும் நெம்பர் இருந்தாலும் இதுவரை பேசியதில்லை. அதேபோல போட்டோ பரிபாறிக் கொண்டதுமில்லை. அதற்கு தடா போட்டுவிட்டாள் அவனின் ஹனி. நாம் சந்திப்பது நேரில் மட்டுமே. அதுவும் மித்ரா மற்றும் உங்கள் குடும்பத்தின் சம்மதத்துடன் மட்டுமே. யாருமில்லாமல் இருப்பவளுக்கு குடும்பத்தின் அருகாமை நிரம்பவே பிடிக்கும். அதற்காகவே இந்த சட்டம். அவனவளின் விருப்பத்திற்கும் அவன் செவி சாய்த்தான். அவளின் உணர்வினை மதித்தான். அதுவே இருவரின் காதலுக்கும் அஸ்திவாராம் பலமாக மாற வழிவகை செய்தது.

மெசேஜ் பார்த்தவளின் கண்களில் கண்ணீரி கரைபுரண்டது. அதில்,

"ஹனி லாட்ஸ் ஆஃப் லவ் யூ டி... நான் போறேன் டி.. ஆனா சீக்கிரம் வருவேன்.. என் ஹனிய பாக்க.. உன்னை இதுவரைக்கும் பார்க்காதது பெருசா தோனைல டி.. நான் நேசிச்ச ஒரே பொண்ணு நீதான்டி... என் மனசுல நிரந்தரமா இருப்பதும் நீதான்.. உன்னை ஏன் இவ்வளவு பிடிச்சதுன்னு காரணம் கேட்டா எனக்கு சொல்லத் தெரியலைடி.. ஆனா நிரம்ப பிடிக்கும்டி.. ஐ மிஸ் யூ டி லாட்ஸ் ஆஃப் ஹனி.. நான் நம்ம வாழ்க்கைக்கு யாரையும் எதிர் பார்க்காம வாழனும் டி.. உன்னோட தேவைகள் முழுசா நான் என்னோட சுயசம்பாத்தியத்துல நிறைவேற்றும் ஹனி.. மித்துவுக்கும் நம்ம நிறைய செய்யனும் ஹனி.. அதனால் தான் நான் தனியா பிஸ்னஸ் ஸ்டாட் பண்ணப்போறேன்.. அதுக்கு எனக்கு நிறைய எக்ஸ்பீரியன்ஸ் வேணும் டி.. ஒன் இயர் சடர்னா போய்டும் டி.. அதுதான் இந்த ஜாப்க்கு போறேன் டி.. எனக்குத் தெரியும் என்னைவிட உனக்கு அவ ரொம்ப முக்கியம்னு.. பட் எனக்கு நீங்க ரெண்டு பேருமே ஒன்னு தான் ஹனி.. நீ ஏன் திடீர்னு இந்த முடிவுன்னு கேட்கலாம் டி.. தெரியலை.. ஆனா இங்கே இருந்த கண்டிப்பா உன்னை பாக்க வந்துருவேண்டி.. அதுதான் இந்த முடிவு.. என்னால இனியும் விலகி நிக்க முடியாதுட.. எனக்கு நீ வேணும் டி.. எனக்கே என்ன நெனைச்சா ஆச்சரியமா இருக்குடி.. நான் இப்படி இருந்ததில்லை.. ஒரு பொண்ணுக்கிட்ட இப்படில்லாம் இருப்பேன்னு நெனச்சதில்லைடி.. ஆனா என்னை மாத்திட்டடி... மாயக்காரி.. இந்த பிரிவு நமக்குள்ள அதிகமான நேசத்தை தான் கொண்டு வரும்.. ஹனி லவ் யூ டி.. மை பொண்டாட்டி.. எப்போ எனக்குள்ளே நீ வந்தியோ அப்பவே நீ எனக்கு மட்டுமே சொந்தமானவடி.. என் பொண்டாட்டியத்தான் விட்டுட்டு போறேன்.. மித்துவ பாத்தக்கோடி.. உன்னை நம்பித்தான் விட்டுப்போறேன்.. ஒரு வருஷம் மட்டும் தான்டி... சீக்கிரம் வந்துடுவேன்.. என்னால நீங்க ரெண்டு பேரும் இல்லைன்னா ரொம்ப நாள் இருக்கறது கஷ்டம் டி.. பட் இதுவும் என் ஹனிக்காகத்தான்.. அவ என்னை உணரனும்.. என்கிட்ட அவளா வரணும்.. நீ என்கிட்ட ஒன்னு கேட்ட ஞாபகம் இருக்காடி.. நான் அழகா இல்லை கருப்பா இருந்தா என்னை ஏத்துப்பீங்களான்னு.. அப்போ பதில் சொல்லல.. இப்போ சொல்றேன்டி.. நீ எப்படி இருந்தாலும் உன்னை மட்டும் தாண்டி எனக்கு பிடிக்கும்.. பிகாஸ் நான் உன் மனசை தான்டி நேசிக்கிறேன்.. என்னோட நேசமும் காதலும் உண்மைன்னா அது கண்டிப்பா உன்னை என்கிட்ட சேர்க்கும் ஹனி.. லவ் யூ டி லாட்ஸ் ஆஃப் டைம்.. பாய் ஹனி டேக்கேர்.. என்னோட ஹனி ரொம்ப போல்டானவ.. இதுக்கெல்லாம் கலங்க மாட்டா.. எல்லா சூழ்நிலைகளிலும் கடந்து வருவா.. இப்போ கண்ணைத் தொடைச்சிக்கோ.. எப்பவும் என் நினைப்பு உன்கூட தான்டி இருக்கும்.. மை லவ்.. மை லைஃப் யூ..."

அவனின் காதலில் இவள் கரைந்து தான் போனாள். அவளிடம் பேசிய நாளிலிருந்து அவனின் நீண்ட வரிகள் இதுவே. உடனே தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

' நான் அழமாட்டேன் கண்ணா.. நான் உங்களோட பொண்டாட்டி தான்.. நீங்க வர நாளுக்காக நான் காத்திருப்பேன் கண்ணா..'

பாவம் அவளுக்குத் தெரியவில்லை அவன் திரும்ப வரும் நாளில் அவள் அங்கிருக்கப்போவதில்லை என்று. விதி அதன் கோரத்தாண்டவத்தை துவங்கிவிட்டது ரஞ்சித்தின் மூலம். அவன் வரும் நேரம் இப்பறவைகள் திசைக்கொன்றாய் பறந்திருக்கும் என்று அந்நேசக்காரனும் அறிந்திருக்கவில்லை.


தேடல் தொடரும்...✍️
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
187
43
Tirupur
விதி ரஞ்சித் மூலமா ஆடிருச்சு போல.. 😢
 
  • Like
Reactions: ரமா