10
நேத்ரனை சந்தித்துவிட்டு வீட்டிற்கு வந்த மித்ராவிற்கு ஒன்றும் புரியாத நிலைதான். அவளவனிடம் இப்படி ஒரு முடிவை அவள் எதிர்பார்க்கவில்லை.. மறுப்பான் என்று தெரியும்.. ஆனால் இப்படியான ஒரு சூழ்நிலையை அவள் எதிர்பார்க்கவில்லை.. ஆனாலும் அவனின் மேல் அவள் வைத்த காதல் உண்மை.. யாரிடமும் தோன்றாத உணர்வு இவனைப் பார்த்தும் தோன்றியது.. அவனின் அருகாமையில் அவள் பாதுகாப்பாய் உணர்ந்தது நிஜம்.
வீட்டிற்கு தெரியாமல் எப்படி இதை செய்வது.. அதைவிட வாஹினி என்ன சொல்வாள்.. அவளுக்கு வேற இப்போ எக்ஸாம் பிரிபேர் பண்ணிட்டு இருக்கா.. இப்போ போய் எப்படி சொல்றது.. ஆனா அவரு என்னை ஏமாத்தமாட்டாரு.. என்னோட காதலை நம்ப மாட்டறாரு.. என்னை நான் அவருக்கு நிருபிக்கனும் என்னை பன்றது.. ஆனா அவர் பத்தி நான் யாருகிட்டயும் இன்னும் சொல்லலை.. என்று அவனைப் பற்றிய நினைவிலே இருந்தாள் பெண்ணவள்.
அவளின் நினைவிற்கும் கேள்விக்கும் பதிலளிக்கும் விதமாக வந்தாள் ரூபவாஹினி.
"ஹேய் மித்துமா.. நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்.. கோவிக்க கூடாது.." என்று பீடிகையுடனே தொடங்கினாள்.
"முதல்ல சொல்லுடி... அப்புறம் கோவிக்கறதா வேணாமான்னு யோசிக்குறேன்.."
"வந்து இல்லைடி.. எனக்கு பெங்களூர்ல ஒருவேலை கிடைச்சிருக்குடி.. அதுமட்டுமில்லாமல் அங்கே கோச்சிங் செண்டர் ஒன்னு சூப்பரா இருக்கும்டி.. நல்ல கோச்சிங் குடுக்குறாங்க.. இப்போ நான் மெயின்ஸ் எழுதப் போறேன்.. சோ எப்படி எழுதலாம்னு ஒரு ஐடியா கிடைக்கும்டி.. அதுமட்டுமில்லாமல் இங்கே நான் எக்ஸாம்க்கு மட்டும் வந்தா போதும்னு மேம் சொல்லிருக்காங்கடி.. ஆனா உன்னை தனியா விட்டு எப்படி போறதுன்னு கவலையா இருக்குடா.." என்றாள் கவலையுடன்.
அந்த குரலில் இருந்த கவலையில் தன்னிலையில் இருந்த வெளிவந்த மித்ரா முதலில் தனது தோழியை சமாதானப்படுத்தி
"ஹேய் வாஹிமா நான் திரும்ப ஹாஸ்டல் போறேன் டி.. நீ போய்ட்டு வாடி.. மூனு மாசம் தான.. நான் பாத்துக்குறேன் வாஹிமா.. ஆனா நான் உன்னை அடுத்த முறைபாக்கும் போது கலேக்டரா தான் பாக்கனும் ஓகே வா.. அதுமட்டுமில்லாமல் கலெக்டர் ஆனவுடனே என் அண்ணன் முதல்ல கல்யாணம் பண்ணி எனக்கு சீக்கிரம் அண்ணியா வந்துடு.. அப்புறம் நாம எப்பவும் பிரிய தேவையில்லை.. ஒன்னாவே இருக்கலாம் சரியா.." உங்கள் விஷயம் எனக்குத் தெரியும் என்று தன் சம்மதத்தையும் தனது வார்த்தையில் கூறினாள்.
அதைக்கேட்டவளின் முகம் அந்திவானமாய் சிவந்தது.. அதனை கண்டவள் "அடியே என்னடி எங்க அண்ணன் பேர சொன்னவுடனே முகம் இப்படி சிவக்குது... இதுல தான் கவுந்தாரோ.. ம்ம் அவருகிட்டையே கேட்டுருவோம்.." அவனுக்கு கால் செய்ய சென்றாள்.
அதனைத் தடுத்தாள் "அடியே வேண்டாம்.. நாங்க இன்னும் நேருல பாத்துக்கல.. நான்தான் வேணாம்னு சொன்னேன்.. உன் சம்மதமும் உங்க பேரண்ஸோட சம்மதமும் இல்லாம என்ன பாக்ககூடாதுன்னு சொல்லிருக்கேன்டி.. உனக்கு என்மேல் கோபம் இல்லையா மித்து.. நான் இதுவரைக்கும் உன்கிட்ட சொல்லாததுக்கு.." என்றாள் கேள்வியுடன்.
சிரித்தபடி அவளை அணைத்துக் கொண்டு "சத்தியமா இல்லைடி.. எனக்கே உங்க ரெண்டு பேரையும் பாக்கும்போது பொறாமை வருதுடி.. எப்படிடி இப்படி.. நீ சொன்ன வார்த்தைக்காக உன்னை பாக்காம இங்கிருந்து வெளிநாட்டுக்கு போன என் அண்ணன்.. எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் யோசிக்கிற உன்னை மாறி ஒரு அண்ணி கிடைக்க என் குடும்பம் தான்டி அதிர்ஷ்டம் செஞ்சிருக்கனும்.. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப வருஷத்துக்கு சேர்ந்து வாழனும்டி.. எனக்கும் ஆசையாயிருக்குடி.. உங்களை போல காதலிச்சு கல்யாணம் பண்ணனும்டி.. " என்று கண்ணீர் சுமந்த விழிகளுடனே கூறினாள்.
தன் கண்ணீரைத் வாஹினி அறியாமல் துடைத்துக் கொண்டவள் " சரிடி எப்போ நீ கிளம்புற.. எத்தனை நாள் இருப்பே.. சொல்லு உனக்கு தேவையானதுல்லாம் போய் வாங்கிட்டு வரலாம்.." என்று அவளை அவசரப்படுத்தினாள்.
"இல்லைடி இப்போ எதுவும் வாங்க டைம் இல்லை.. இன்னைக்கு நைட் டென் ஓ கிளாக் டிரைன்டி.. நான் இன்னைக்கே போகனும் மித்து.. நீ ஹாஸ்டல் போயிடு.. பத்திரமா இரு.. நேரத்துக்கு சாப்பிடு.. உங்க அண்ணாக்கு நான் சொல்லல.. வந்து சொல்லிக்குறேன்.. மூனு மாசம் தான்டி வந்துடுவேன்.. " அவளை விட்டு பிரிய மனமில்லாமல் அவள் கண்ணங்களை வருடியவாறு பேசிக் கொண்டிருந்தாள்.
மித்ராவிற்கும் அவள் நிலை புரிந்தது தன்னை தனியே விட்டு போவதை அவள் விரும்பவில்லை என்று.
"அச்சோ என் செல்ல அண்ணியில்ல.. இங்கே பாரு நீ போய்ட்டு சீக்கிரம் வந்தின்னா நான் உனக்கு ஒரு ஹேப்பி நியூஸ் சொல்லுவேன்.. ஓகே வா.. வா உனக்கு தேவையானதுல்லாம் எடுத்து வைக்கலாம்."என்று அவளை பேசவிடாமல் கையோடு அழைத்துச் சென்றாள்.
வாஹினிக்கு தேவையானவற்றை எடுத்து வைத்து அவளை அனுப்பி வைக்கும் நேரம் வாயிலில் வந்தவள் அவளைத் திரும்ப அணைத்து,
"வாஹி நீயும் என் அண்ணனும் கண்டிப்பா சேரனும்டி.... எத்தனை தடை வந்தாலும் சரி அவரோட நீ சேர்ந்து வாழனும்.. என்னோட குழந்தையையும் உங்க கையில் கொடுத்து தான்டி வளர்க்க சொல்லப் போறேன்.. சரியா ஐ மிஸ் யூ டி" தன் மனதில் தோன்றியதை எல்லாம் பேசினாள் இனி அவளைக் காணவே முடியாதோ என்ற எண்ணத்தில்.
"ஹேய் லூசு.. இவ்வளவு நேரம் நல்லாத்தானே இருந்தே.. இப்போ என்னடி.. ஜஸ்ட் மூனு மாசம் தான் சீக்கிரம் முடிச்சிடும்.. நீ இப்படி இருந்தீனா நா எப்படிடி நிம்மதியா போக முடியும்.. என் செல்ல அழகி இல்லை.. அழுகாதடி மை ஸ்வீட் ஹார்ட்".. அவளை சமாதானப்படுத்தினாள் வாஹினி. ஆனால் அவளுக்கு தெரியவில்லை.. இனி தனது வாழ்நாளில் குழந்தைபோல இருப்பவளை மீண்டும் கானப்போவதில்லை என்று. ரஞ்சித் என்னும் கயவனின் சதித்திட்டம் இவர்களின் நிரந்தர பிரிவுக்கு காரணமாக அமைந்துவிட்டது.
என்னதான் இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறினாளும் இருவரின் மனதிற்கும் இந்த பிரிவு ஏனோ பயத்தையே கொடுத்தது. முதலில் மித்ரா சமாளித்துக் கொண்டு வாஹினியை சமாதானம் செய்து அவளை அனுப்பி வைத்தாள்.
அது வரையில் அவளது தோழியைப் பற்றி மட்டுமே சிந்தித்தவள் அவள் கிளம்பியதும் தன் மன்னவன் முகம் நினைவு வந்தது. நாளை அவனுடன் செல்ல வேண்டும் என்ற முடிவுடன் தனது தாய் தந்தைக்கு ஃபோன் செய்து தான் ஹாஸ்டலில் தங்கி போவதாகவும் வாஹினி பெங்களூர் சென்றதையும் கூறினாள். தன் தமையனுக்கும் ஃபோன் செய்து இருவருமே ஹாஸ்டல் போவதாக கூறினாள்.
"டேய் மச்சான் ஹேப்பி நியூஸ்டா.. அந்த வாஹினி பெங்களூர் போயிட்டாடா.. இனிமே அந்த மித்ரா மட்டும் தான்.. அவளை சீக்கிரம் தொடனும்டா.. அதுக்கு ஒரு வழி பண்ணுடா.." தனது வக்கிரத்தை குரலில் காட்டி பேசினான் வினய்.
"டேய் வினய் அவ நமக்கு தான்டா.. அதுக்குத்தான் அவளோட பாதுகாப்பு வளையத்தை உடைச்சேன்.. நான் நெனச்சது எதுவும் நடக்காம போனதில்லைடா.. இவளை மட்டும் விட்டுடுவனா.. என்ன அந்த வாஹினியும் கிடைச்சிருந்தா சந்தோஷம் தான்.. சரி பாக்கலாம்டா" அவன் வினய்க்கு பதில் கூறி கொண்டிருக்கும் போதே அவனுக்கு ஃபோன் வந்தது.. அதை எடுத்து பேசியவன்,
" ஓகே நான் இன்னைக்கே வந்துர்றேன்.. நீங்க ரெடியா இருங்க.." பதிலை மட்டும் கூறிவிட்டு அதனை அணைத்தவனின் முகம் யோசனையை தத்தெடுத்தது..
" ஏண்டா யார் ஃபோன்ல.. ஏதோ யோசனையா இருக்க.." என்றான் வினய்.
"அது ஒன்னுமில்லைடா.. நான் நைட் கொடைக்கானல் போகனும்.. நம்ம புராஜெக்ட் நல்லா போயிட்டிருந்த இந்த நேரத்துல யாரோ புது டிசி வராங்களாம்.. ஆனா அவன் யாருன்னு தெரியாம ரகசியமா வச்சிருக்காங்களாம்.. அது தான் நம்ம ராபர்ட் ஃபோன் பண்ணான்.. நாளைக்கு மார்னிங் நாம் அங்கே இருக்கனும்.. சீக்கிரம் கிளம்பு போலாம்.." அவனை அவசரப்படுத்தினான்.
"டேய் மச்சான் அப்போ இந்த மித்ராடா.. எவ்வளோ ஆசையா இருந்தேன் தெரியுமா... "
" டேய் அந்த மித்ரா இனி எங்கேயும் போக முடியாது.. அவளை கண்டிப்பா அனுப்பவிக்கலாம்.. ஆனா அதுக்கு முன்னாடி இந்த பிஸ்னஸ் முக்கியம்டா இடியட்.."
" ம்ம் சரிடா.. ஆமா எனக்கு ஒரு டவுட்.. அந்த ரூபவாஹினிய எப்படிடா இங்கிருந்து அனுப்புனே.."
இவனுக்கு பதில் கிடைக்கும் வரை தன்னை விடமாட்டான் என்று உணர்ந்தவன் அவனின் மொபைலை எடுத்து ஒரு புகைப்படத்தை காட்டினான். அதில் ரூபவாஹினி ஒருவனிடம் நெருக்கமாக உள்ளது போல இருந்தது.. அதை பார்த்து ஆச்சரியப்பட்டவன்,
"டேய் மச்சான் எப்படிடா இப்படில்லாம்.. ச்சே இந்த இடத்துல நான் இல்லாத போனேனே இருந்திருந்தா ஒரு முறை அவளை தொட்டு தடவிப் பாத்திருக்கலாம்.. பட் டூ லேட்.. டேய் இதை வச்சி எப்படிடா" என்றான் புரியாமல்.
"இதை வச்சி என்னவேணாலும் பண்ணலாம்டா.. இதை கிராபிக்ஸ்ல இன்னும் கொஞ்சம் ஆல்டர்நேட் பண்ணி ஒரு லெட்டரோட அந்த மித்ராவோட பேரன்ஸ்க்கு அனுப்பிவச்சேன். அதுதான் இன்னைக்கு அவளை இங்கிருந்து போக வச்ச அஸ்திரம்" கண்களில் வெறியுடன் கூறினான்.
வினயோ மீண்டும் "ஆனா எப்படிடா..." என்றான் கேள்வியுடன்.
" நீ கேள்வி கேட்டுகிட்டு இங்கியே நில்லு நான் கிளம்புறேன்.. " அவன் கொடைக்கானல் கிளம்பினான்.
" எது மச்சான் நீ இல்லாமையா.. இருடா நானும் வர்றேன்.." அவனுடனே இணைந்து கொண்டான்.
செந்நிறத்தோன் ஒளிவீச துவங்கிடு காலை வேலையில் மித்ரா எழுந்ததும் காலைக்கடனை முடித்தவள் வீட்டை ஒழுங்குப்படுத்தி விட்டு ஒரு கடித்தத்தில் தான் செல்லும் காரணத்தை அவளுக்கு தெரிவு படுத்தியவள் அவளிடம் சொல்லாததற்கு மன்னிப்பும் கேட்டாள்.. அவள் திரும்பி வரும் நாள் தான் இல்லையென்றாலும் தான் போகும் இடத்தையும் அவளுக்கு கடித்தத்தின் வாயிலாக கூறினாள். தனது போனில் உள்ள சிம்மை மட்டும் கலட்டியவள் ஃபோனை அங்கேயே விட்டுவிட்டு வீட்டினை பூட்டி தனக்கும் வாஹினிக்கும் தெரிந்த இடத்தில் சாவியை வைத்து விட்டு தன்னவனை தேடிச் சென்றாள்.
காலையில் எழுந்ததும் ஏனோ இன்று தன்னவளை பார்த்துவிட்டே கொடைக்கானல் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தனது உடற்பயிற்சியை முடித்துவிட்டு குளித்து வந்தவனை காலிங் பெல் சத்தம் அவனை வாயிலுக்கு அழைத்தது.. 'இந்த நேரத்துல யாரு' என்ற எண்ணதுடனே கதவை திறந்தவனுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அங்கே அவனவள் நின்றாள்.
அவளைப் பார்த்து அதிர்ந்து நின்றவன் அவளை உள்ளேயும் அழைக்காமல் கண்ணை சிமிட்டினாள் கூட மறைந்து விடுவாளோ என்ற எண்ணத்தில் அவளை பார்த்துக்கொண்டிருந்தான். அவன் முன் சொடக்கிட்டு அவனை நனவுக்கு கொண்டு வந்தவள்,
"தரன் நான் உங்களோட வரேன்.. நீங்க சொன்னதுக்கு ஒத்துக்குறேன்.. "
அவனோ அதிர்ந்த விழிகளில் அவளைப் பார்த்ததெல்லாம் சில நொடிகளோ என என்னுமளவு இருந்தது அவனின் கேள்வி..
" வெல் அப்போ என்னை கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு சம்மதம்.. இந்த அனாதை வீட்டுல இருக்கவும் உங்களுக்கு சம்மதம் அப்படித்தான.. "
அவளோ பதில் எதுவும் கூறாமல் 'ம்ம்' என்ற தலையசைப்புடனே கூறினாள்.
அவள் அப்படி கூறியதும் அவளை இறுக்கமாக அணைத்துக் கொள்ளும் ஆவேசம் அவனுள் உன்டானது.. அதனை மறைத்துக் கொண்டவன் அவளின் காதுகளில் வைரக்கம்மலும் கழுத்தில் பிளாட்டினம் செயினும் இரண்டு கைகளிலும் தங்கத்தில் சிவப்பும் பச்சையும் கலந்த மெலிதான கல்வலையலையும் அணிந்திருந்தாள்.. ஆனால் உடை மட்டும் சாதாரன காட்டன் சுடிதாரில் நின்றிருந்தாள்.. அவனின் பார்வையின் இடம் புரிந்து அதன் கேள்விகளுக்கு பதில் கூறினாள்,
" இல்லை நீங்க வேற வாங்கி கொடுத்தீங்கன்னா நான் மாத்திக்குவேன்.. அதுக்கு முன்னாடி உள்ளே விட்டிங்கன்னா நான் உள்ளே வருவேன்.." என்று அவள் நெடுநேரமாக வெளியே இருப்பதை அவனுக்கு உணர்த்தினாள்.
அப்பொழுதுதான் அவள் வெளியிலே நிற்பதை அறிந்தவன் 'வா' என்ற ஒற்றைச் சொல்லில் வழியில் இருந்து விலகி உள்ளே சென்றான். இருவரும் சில மனித்துளிகள் பேசாமல் அமர்ந்திருந்தனர்.
சில நிமிடங்களில் தன் தொண்டையை செருமிக் கொண்டு
"நல்லா யோசிச்சிட்டியா.. எனக்கு ஒரு முடிவு எடுத்ததுக்கு அப்புறம் அதை மாத்துறது புடிக்காது.."
" ம்ம் எனக்கு தெரியும்.. நான் என்னோட முடிவுல உறுதியாத்தான் இருக்கேன்.. என்னை கூட்டிட்டு போங்க.. ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு டிரஸ் வாங்கி கொடுத்தீங்கன்னா மாத்திட்டு வந்துருவேன்.." அவளின் வார்த்தைகளில் உறுதி தெரிந்தது.. இனி அவனைவிட்டு செல்ல மாட்டேன் எனும் உறுதி.
மனதிற்குள்ளாகவே சிரித்தவன் "ஒரு நிமிஷம்.." என்று கூறிவிட்டு ஒரு அறைக்குள் நுழைந்தான். சிறிது நேரத்தில் ஒரு கையில் வண்டி சாவியுடனும் மறுகையில் ஒரு துணி கவருடனும் வந்தான். அவளின் கைகளில் அந்த கவரை கொடுத்தவன்,
"நான் வெளியே போயிட்டு வரேன்.. அந்த ரூம்ல குளிச்சிட்டு இதை மாத்திக்கோ.. நான் சாப்பாடு வாங்கிட்டு வரேன்.. கதவை உள்ளார லாக் பண்ணிக்கோ.." என்று அவளிடம் கூறிவிட்டு வெளியில் சென்றான்.
இவள் கதவை அடைத்து விட்டு அவன் சொன்ன அறைக்குள் சென்றவள் முதலில் குளித்து விட்டு வந்தவள் அவன் கொடுத்த கவரில் ஒரு அழகான மயில் வண்ண பட்டுப்புடவை இருந்தது. அதை பார்த்ததும் 'இதை யாருக்கு வாங்கியிருப்பான்' என்ற சாதரணமாக வரும் எண்ணம் தோன்றாத இல்லை.. ஆனால் சிறிது நேரத்திலே அதை தனக்கு தந்தவனின் மேல் அதித காதல் தோன்றியது உண்மை.
மனதினுள் சிரித்தபடியே அதை உடுத்திக் கொண்டவள் வெளியில் வரவும்
நேத்ரன் உள்ளே வரவும் சரியாக இருந்தது. அவளின் முகத்தில் இருந்த மலர்ச்சியை கண்டவன் மனம் நிம்மதி அடைந்தது.. இனி எந்த சூழ்நிலையிலும் தன் உயிரைக் கொடுத்தாவது அவளை காப்பது தான் முதல் கடமை என்று மனதினுள் உறுதி எடுத்துக் கொண்டான்.. ஆனால் அப்போது அவன் அறியவில்லை தன்னுயிரை கொடுத்து தான் தன்னவளையும் அவளின் வயிற்றுக்குள் வளரப்போகும் தன் சிசுவையும் காப்போம் என்று.
அவளிடம் சில பைகளை கொடுத்தான்.. அதில் அவளுக்கு தேவையான புடவை சுடிதார் காதிற்கும் கழுத்திற்கும் தங்கத்தில் தோடும் மெல்லிய செயினும் வாங்கி வந்திருந்தான். கைகளுக்கு கண்ணாடி வளையலும் தலைக்கு மல்லிகப்பூவும் வாங்கி வந்திருந்தான். அதைக் கண்டதும் அவளின் மனம் நிறைந்த புன்னகை வெளிப்பட்டது. ஒவ்வொரு பெண்ணும் தன்னவனிடம் எதிர்பார்ப்பது இதைத்தானே.
அவளின் மலர்ந்த முகத்தை கண்டவனுக்கும் மனம் நிரம்பி வழிந்தது. அவன் கொடுத்தவைகளை அணிந்து கொண்டு வந்தவள் முன்பு ஒரு சிறிய கவரை கொடுத்தான். அதை திறந்து பார்த்தவளின் கண்களில் சந்தோஷம் தாங்கிய கண்ணீர் துளி வெளிப்பட்டது. அதிலிருந்ததை எடுத்து அவன் கைகளில் கொடுத்தாள் பெண்ணவள்.
தேடல் தொடரும்...