• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தேடல் -13

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
216
220
43
Salem
13

நேத்ரனிற்கு வந்த செய்தி அவனவளை ரஞ்சித் கடத்திவிட்டான் என்பதுதான்.. எது நடக்கக்கூடாது என்று நினைத்தானோ இன்று அதுவே நடந்துவிட்டது. ஆனால் எப்படியும் தன்னவளை காக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுள் ஆழப்புதைந்தது. உடனடியாக இதற்கு ஒரு தீர்வை எடுத்தே ஆகவேண்டும்.

'ரஞ்சித் தப்புபண்ணிட்ட... நீதான் இவ்வளவுக்கு காரணமாக இருக்கும்போதே உன்னை விடக்கூடாதுன்னு நின்னைச்சேன்.. ஆனா இன்னைக்கு என் யாழு மேல கை வைக்குற அளவுக்கு வந்துட்டியா.. இனி உன்னை என்ன பன்றேனு மட்டும் பாரு.. உன்னை இந்த ஊரு விட்டு மட்டும் இல்லை இந்த நாட்டைவிட்டே ஓடவிடலை நான் நேத்ரன் இல்லைடா' மனதினுள் உறுதி எடுத்துக் கொண்டவன்.

உடனடியாக தனது மேலதிகாரியை சந்திக்க ஏற்பாடு செய்தவன் ‌ரஞ்சித் பற்றிய தகவல்களை அனைத்தும் ஓரளவுக்கு திரட்டியிருந்ததை கொடுத்தான். ஆனால் அதிலும் சிக்கலாக அதை அவனால் நிருபிக்க முடியாமல் போனது.. ஆம் அத்தனை அவனது இல்லீகல் தொழிலும் அவனுடைய பெயரே இல்லை. பக்காவாக பிளான் செய்து அதை ராபர்ட் பேரில் நடத்தி வருகிறான்.

அவனதிகாரியிடம் அனுமதி வாங்கியவன் மூர்த்திக்கு ஃபோன் செய்து மித்ராவை பற்றிக் கேட்டான். அவனுடையை பங்காளாவில் வைத்திருப்பதாக கூறினான் அவன்.

"அய்யா நான் வேனும்னா அம்மாவ இங்கிருந்து கூட்டிட்டு வரட்டுமா.." என்றான்

"இல்லை மூர்த்தி.. எனக்கு ஒரு உதவி மட்டும் செய்யுங்க.. நான் அவகிட்ட பேசனும்.. அவளுக்கு நான் வருவேன்னு சொல்லனும்.. அதை மட்டும் செய்யுங்க போதும்..." என அவனிடம் கேட்டான்.

"சரிங்க அய்யா.. நான் அவங்ககிட்ட போயிட்டு கூப்பிடுறேன் அய்யா.." என்று கூறி கால் கட் செய்தான்.

அவன் மித்ரா இருக்கும் அறைக்குள் யாருமறியாமல் நுழைந்தவன் பார்த்தது மயங்கிய நிலையில் உள்ள மித்ராவைத்தான். முதலில் அவளை மேல் நீர் தெளித்து எழுப்பினான். மயக்கும் தெளிந்து எழுந்தவள் அங்கிருந்தவனை கண்டு பயத்தில் மான்விழிகள் படபடக்க கத்துவதற்கு வாயைத்திறக்கப் போனாள். அதற்குள்ளாகவே அவளிடம் கையெடுத்தவன்,

" அம்மா கத்தாதிங்க மா... இப்போ நீங்க கத்தினீங்கனா ரெண்டு பேருமே மாட்டிப்போம்மா... இந்தாங்க லைன்ல உங்க புருஷன் இருக்காரு.. பேசுங்க மா.. " அவளின் கைகளில் மொபைலை தினித்தான்.

அவனை நம்பாமல் பார்த்தவள் நடுங்கும் விரல்களுடன் அந்த மொபைலை வாங்கி காதினுள் வைத்தாள் அதில்,

"யாழுமா" என்று தன்னவன் குரலில் கொஞ்சம் தெளிந்தவள் "அத்தான்" என்று அழுதாள்.

" யாழுமா.. பயப்படறியாடி.. உன் அத்தான் மேல உனக்கு நம்பிக்கை இருக்கு இல்லை.. நீ இப்படி பயந்தா என்னை நீ நம்பலைன்னு அர்த்தம்டி.. "

" அய்யோ அத்தான் நா உங்களை நம்பறேன் அத்தான்.. நீங்க சீக்கிரம் வாங்க நா அழுகலை அத்தான்.. எங்களை கூப்பிட நீங்க வருவீங்க ரத்து எனக்கு தெரியும் அத்தான்.." அவனிடம் பேசும்பொழுதே கண்களில் அருவி பெருகியது.

அதற்குள்ளாக யாரோ வரும் சத்தம் கேட்க அவளிடமிருந்து ஃபோனை வாங்கிய மூர்த்தி

"அய்யா யாரோ வராங்க.. நான் அப்புறம் பேசுவேன்" என்றான்.

" மூர்த்தி கால் கட் பண்ணாத.. எனக்கு அங்கே என்ன நடக்குதுன்னு தெரியனும்.." என்றான் கட்டளையுடன்.

" சரிங்க அய்யா.." என்று கால் கட் செய்யாமல் தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

அப்பொழுது அந்த கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தனர் ரஞ்சித் , வினய் மற்றும் ராபர்டு மூவரும்.

வந்தவர்களின் பார்வை நிச்சயமாக அவளின் மேல் நல்விதமாக பதியவில்லை. அவர்களின் பார்வை அவளின் மேனியில் ஒவ்வொரு அங்கங்களையும் துளைத்தது.. அதில் கூனிக்குறுகி போய் அமர்ந்திருந்தாள் அவள்.

"ஹாய் பேபி... எப்படி இருக்க... உனக்கு இந்த வசதி ஓகே வா... நீ வசதியா வாழ்ந்துட்டு இப்போ ஏன் அவன மாறி ஒருத்தனோட வாழற... உன்னோட தேவைகள் எல்லாம் அவனால் நிறைவேத்த முடியுமா.. உன்னை அடையனும்னு எவ்வளவு ஆசைப்பட்டேன்.. அதற்குத்தான் டி உன் ஆருயிர்த்தோழி ரூபவாஹினிய பிரிச்சேன்.. ஆனா நீ அவனை போய் உங்க வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணியிருக்க.. கேவலம் உனக்கு ஒரு அனாதையாடி கெடச்சான் காதலிச்சி கல்யாணம் பண்ண.. ஆனா நீ தப்பு பண்ணிட்ட மித்ரா.. உன் புருஷன் என்னை பிடிக்கனும்னு நினைச்சி வந்துருக்கான்டி.. அவன் நினைச்சது எதுவும் நடக்க போறதில்லை.. நீனா அவனுக்கு ரொம்ப பிடிக்குமோ.. அதான் உன்னை அவன்கிட்ட சேர்க்க போறதில்லை.. அவனோட உயிரா இருக்க உன்னை அவன்கிட்ட இருந்து பிரிச்சி அவனை தவிக்க விடலை நான் ரஞ்சித் இல்லைடி.. உன்னை நான் ராணி மாறி வச்சி அனுபவிக்கனும்னு நினைச்சேன்.. ச்சீய் இனிமே உன்னை தொடமாட்டேன்டி.. சந்தோஷப்பட்டுக்காத உன்னை நான் தொடமாட்டேன் தான்.. ஆனா உன்னை பலபேர் தொடறமாறி பண்ணுவேன்டி.. அதை நெனச்சி நெனச்சி உன் குடும்பமும் உன் புருஷனும் தவிப்பாங்கடி... அது போதும் எனக்கு..." அவன் பேசப் பேச தன்னைச் சுற்றி இத்தனை நடந்துள்ளதா..? இவை எதுவும் அறியாமல் இருந்திருக்கிறோமே என்று தன்னையே நொந்தவளுக்கு அவனின் கடைசி வரிகள் பெண்களின் இயல்பான பாதுகாப்புணர்வும் தன்னவர்களின் நிலையும் அதிக கோபத்தை ஏற்படுத்தியது.

"ச்சீய்... நிறுத்துடா நீயெல்லாம் மனுசனாடா.. நீ யாருன்னே எனக்குத் தெரியாது.. என் புருஷனுக்கும் உனக்கும் பிரச்சனைனா அவருகிட்ட நேரடியா மோதுடா... அதை விட்டுட்டு என்னை கடத்தி அவர அடிபணிய வைக்க நினைக்குற நீயெல்லாம் ஆம்பளையாட.. தூ.." தனது கோபத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தினாள்.

அவளின் வார்த்தையில் கோபப்பட்டவன் அவளின் தலைமுடியை இழுத்து அவளின் கண்ணத்தில் ஓங்கி அறைந்தான். அவள் கீழே விழும் முன் தன்னிச்சையாகவே அவளின் கைகள் வயிற்றை அணைத்திருந்தன.

"என்னடி விட்டா ரொம்ப துள்ளற.. ஓ உன் புருஷன் வருவான்னு நினைக்குறியா.. வரமாட்டான்டி.. அப்படி அவன் வந்தா அவனோட பிணம் தான் இங்கிருந்து போகும்...டேய் மூர்த்தி இவளை பத்திரமா பாத்துக்கோ.. இவ புருஷன முதல்ல தீர்த்துக் கட்டிட்டு இவளை கவனிச்சிக்குறேன்".. என்று மூவரும் வெளியேறினர்.

அவர்கள் வெளியே சென்றதும் அவளின் அருகில் சென்றவன் அவள் மயக்கநிலையில் உள்ளதை கண்டு அவளின் மேல் தண்ணீர் தெளித்தான்.

அவள் எழுந்ததும் "அண்ணா என் புருஷனுக்கு ஃபோன் பண்ணித்தாங்கண்ணா.. நான் அவருகிட்ட பேசுனும்.. ப்ளிஸ் அண்ணா.. ப்ளிஸ் " என்று அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள்.

"அம்மா இப்படி பேசாதிங்க மா... இந்தாங்க அய்யா லைன்ல தான் இருக்காங்க பேசுங்கமா.." அவளிடம் ஃபோனை கொடுத்துவிட்டு நாகரிகம் கருதி சென்றுவிட்டான்.

அவன் சென்றதும் தனது காதில் ஃபோனை வைத்தவள் தன்னவன் குரலுக்கும் அருகாமைக்கும் ஏங்கினாள் பெண்ணவள்.

"அத்தான்" என்ற அவளின் ஒற்றை அழைப்பில் அவனின் ஆவி துடித்தது.. மழலை மனம் கொண்டவளை தானே தண்டித்து விட்டதாக நினைத்தான். அவன் நெஞ்சில் பாரம் கூடியது. அவன் மெல்லிய குரலில்,

" பாப்பு..." என்றழைக்க இதுவரையில் அவன் குரலில் இல்லாத மென்மையில் அந்த மென்மையானவளும் கரைந்து தான் போனாள்.

"அத்தான்.. இங்கே வராதிங்க... நீங்க இங்கிருந்து போயிருங்க அத்தான்.. உங்களுக்கு ஏதாவதுன்னா அதை தாங்கிக்க என்னால முடியாது அத்தான்..."
அவனிடம் கெஞ்சினாள்.

"உனக்கு எதாவதுன்னா மட்டும் என்னால தாங்கிக்க முடியுமாடி.. நீ என் உயிரோட கலந்தவடி... நான் தேடியும் கிடைக்காத அன்பு தேடாமலே உன்னருவில எனக்கு கிடைச்சதுடி.. உன்னை நான் காப்பாத்துவேன் யாழுமா.. என் மேல் நம்பிக்கை இருந்தா எனக்காக காத்திரு டி... ஐ லவ் யூ டி.. என் மொத்த ஜென்மத்துக்குமான வாழ்வு உன் மூலமா எனக்கு கிடைச்சிருக்குடி.. அதை தக்க வச்சிக்க நினைக்காத நான் என்ன புருஷன்டி.. நான் உன் புருஷன் மட்டுமில்லடி உன் வயித்துல இருக்குற நம்மை குழந்தையோட அப்பன் டி" என்றான் தனக்கு தெரியும் என்பதாக.

அதைக்கேட்டவளோ சந்தோஷத்துடன் "அத்தான் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது.. நான் வீட்டுக்கு வந்து உங்ககிட்ட சொல்லனும்னு நெனச்சேன் அத்தான்.. ஆனா அதுக்குள்ள எப்படி உங்களுக்கு தெரிஞ்சுது.." என்றாள் சிறிது வெட்கத்துடனே.

எல்லா பெண்களும் தன் தாய்மையடைந்ததை முதலில் கணவனிடம் சொல்லவே விரும்புவார்கள். அதற்கு இவளும் விதிவிலக்கல்ல... ஆனால் சூழ்நிலை அவன் கண்களை பார்த்துக் கூற முடியாமல் போனது. அதற்குள் அவனே கண்டுபிடித்தது அவளுக்கு மகிழ்வை கொடுத்தது. இருக்குமிடம் மறந்து மகிழ்ந்து போனாள் பாவை.

"யாழுமா... ஐ லவ் யூ டி.. நீ எனக்கு எவ்வளவு பெரிய ஹேப்பினஸ் குடுத்துருக்க தெரியுமா.. நானும் முதல்ல யோசிக்கலைடி... ஆனா நீ லெட்டர்ல சொன்னியே ஒன்னு நாங்க சீக்கிரம் வரோம்னு... நான் யாரோன்னு நெனச்சேன்டி.. ஆனா உன்னை தேடி கிளம்பும் போது தான் பாத்ரூம்ல அந்த கிட் பாத்தேன்.. நா அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை கண்ணம்மா.. நீ பத்திரமா இரு.. மீதிய உன் அத்தான் பாத்துப்பேன்.. நீ ஃபோன உன்னோட வயித்ததுக்கிட்ட கொண்டு போ.. நான் என் பொண்ணு கிட்ட பேசனும்" என்றான் தன்னவளை வம்பிழுத்து அவளின் மனநிலையை மாற்றும் நோக்கத்துடன்.

"முதல்ல என்கிட்ட பேசுங்க அப்புறம் உங்க பொண்ணுகிட்ட பேசுவிங்க.. இருங்க அது என்ன பொண்ணு பையனா ஒத்துக்க மாட்டீங்களா.. எனக்கு உங்களை மாறி பையன் தான் வேணும் அத்தான்.." அவன் நினைத்ததை போலவே அவனவள் இருக்குமிடம் மறந்து குழந்தையை பற்றி பேசத் தொடங்கிவிட்டாள்.

" ம்ம் சரிடா பாப்பு... என் யாழுமாக்கு என்னை குழந்தை வேணுமோ அதுவே பிறக்கட்டும்.. சரி நான் உன்னை கூட்டிட்டு வரணும் இல்லைடா.. நீ அழாத இருந்தீன்னா தானா அத்தான் தைரியமா என் பாப்புவ வந்து சேர முடியும்.." என்று அவளை குழந்தையாய் நினைத்து சமாதானப்படுத்தினான்.

"சரிங்க அத்தான் நீங்க சீக்கிரம் வாங்க.." அவனிடம் பேசிவிட்டு வைத்துவிட்டாள். தனது வயிற்றின் அருகே கைகளை கொண்டு சென்று தடவிகொடுத்தவள் 'கண்ணா அப்பா நம்மலை சீக்கிரம் வந்து கூட்டிட்டு போவாரு டா.. பயப்படாத' தனக்கும் சேர்த்தே தைரியம் கூறிக்கொண்டாள்.


"ராபர்ட் அந்த மெட்டீரியல் அனுப்ப ஏற்பாடு பண்ணு உடனே பாஸ்ட்" என்று அவசரப்படுத்தினான்.

" பாஸ் அந்த நேத்ரன்.." என்று இழுத்தான்.

"இப்போ அந்த நேத்ரன் பல்லுபுடங்குன பாம்பு.. அவன் பொண்டாட்டி நம்மகிட்ட இருக்கா.. இப்போ என்னை பண்றதுன்னு தெரியாம தவிப்பான்.. இந்த சந்தர்ப்பத்த தான் நாம பயன்படுத்திக்கனும்.. சோ சீக்கிரம் நான் சொன்னதுக்கு ஏற்பாடு செய்.. " என்று கட்டளையிட்டான்.

ஆனால் அவனுக்கு தெரியவில்லை.. தன்னவளை மீட்கவும் விவரமறியா மழலைகளை காப்பாற்றவும் எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துவிட்டான் அந்த காவலன் என்று. அதை அறியும் நேரம் நேத்ரனிற்கு பயந்து அவன் நாட்டை விட்டே செல்வான் என்றும் அவன் எதிர்பார்க்காத ஒன்று.

தேடல் தொடரும்...✍️
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
187
43
Tirupur
நேத்ரன் யாழினி ரெண்டு பேரும் தப்பிச்சிருவாங்களா?