• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தேடல் - 14

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
230
43
Salem
14
தன்னவள் குரலும் அதைத் தொடர்ந்து அவள் கூறிய சந்தோஷமான செய்தியும் அவனுக்கு புதியதொரு பலத்தை கொடுத்தது. தன்னவளையும் அவளின் வயிற்றுக்குள் வளரும் தன் வாரிசு விவரமறியா குழந்தைகள் இதுவே அவனுக்கு முக்கியமானதாய் தோன்றியது.

அவர்களை காப்பாற்றும் முதல் படியாக தனக்கு மிகவும் நம்பிக்கையானவர்களை இதில் ஈடுபடுத்த தனது மேலதிகாரியிடம் பேசினான். அவரின் ஒப்புதலின் பேரில் சீக்ரெட் ஆக அதை நடத்தினான். குழந்தைகளை ஏற்றுமதி செய்யப்படுவதற்கு ஒரு கன்டெய்னரில் கடத்தப்படுவதாக தகவல் வந்தது அவனுக்கு. உடனடியாக தனது மேற்பார்வையில் சிலரை அழைத்துக் கொண்டு முதலில் அந்த குழந்தைகளை காக்கச் சென்றான்.

மலைபாதையில் யாருடைய குறுக்கீடும் இல்லாமல் அந்த கன்டெய்னர் சென்றது.. அதன் பின்பு நான்கைந்து கார்கள் அந்த கன்டெய்னர்க்கு பாதுகாப்பாய் வந்தது. அந்த கன்டெய்னர் முன்புறம் டிரைவருக்கு அருகில் ராபர்ட் அமர்ந்திருந்தான். அவர்களை வழியில் எந்த ஒரு செக்போஸ்டிலும் நிறுத்தாமல் பார்த்துக் கொண்டான் நேத்ரன்.

முதல் இரு செக்போஸ்டிலும் அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. மூன்றாவது செக்போஸ்ட் அடர்ந்த வனப்பகுதியுடன் இருந்தது. அங்கு போக்குவரத்து நடவடிக்கை அதிகம் இல்லை.. தீவிரவாதிகள் மட்டுமே அந்த வழியை பயன்படுத்துவர்.அங்கு என்ன நடந்தாலும் வெளியே யாருக்கும் சீக்கிரம் தெரியாது. அந்த நடந்த நிகழ்வு வெளியே தெரியுவதற்குள் தன்னவளை காக்கும் பொருட்டு இந்த இடத்தை தேர்வு செய்தான் நேத்ரன். அந்த இடத்தில் கன்டெய்னர் வரும் நேரம் அங்கே யாரும் காவலுக்கு இல்லை இனி தங்களை யாரும் தடுக்க இயலாது என்று நினைத்து அங்கே நிறுத்த சொன்னான் ராபர்ட். எதுவும் புரியாமல் டிரைவரும் நிறுத்தினார். பின்னால் வந்த வண்டிகளும் அதை பின்பற்றி நிறுத்தினர்.

ஏனென்று தெரியாமல் எல்லோரும் வண்டியிலிருந்து இறங்கினர். எல்லோரையும் அங்கே சிறிது தூரத்தில் இருந்த சிறு வீடு அமைப்பு போல் இருந்த இடத்திற்கு அழைத்து சென்றான். அங்கே போகவும் அவர்களுக்கும் விளங்கியது எதற்கென்று. அந்த இடத்தினுள்ளே ஒரு பெண் மயக்க நிலையில் பிதற்றிக்கொண்டிருந்தாள். அந்த பெண் போதைக்கு அடிமையானவள் என்று அவளின் உலறியதிலே தெரிந்தது. போதைக்கு வந்தவளை தங்கள் உடல்போதைக்கு பயன்படுத்தினர் அந்த மனித மிருகங்கள்.. அவளை கண்ட அனைவரும் இன்று தங்களுக்கு சிறந்த வேட்டைதான் என்று நினைத்தனர்.

"டேய் இருங்கடா... நான் முதல்ல போயிட்டு வரேன்.. அப்புறம் ஒவ்வொருத்தரா போவிங்க.." அவன் முன்னே அந்த வீட்டினுள் நுழைந்தான்.

இவர்களுக்குள் இது பழக்கம்தான்.. செய்யும் ஈனத்தொழிலுக்கு இது அவர்களுக்கு பெரிய விஷயமில்லை. பாதிப்பேர் இங்கேயிருக்க மீதி பேர் வண்டியின் அருகில் இருந்தனர். அங்கே வந்த நேத்ரன் குழுவினர் அமைதியாக ஒவ்வொருவரையும் சத்தமில்லாமல் தாக்கினர். வண்டி அருகில் எவரும் இல்லை என்ற நிலையில் தனது நம்பிக்கையானவர்களை அழைத்து அந்த சிறுமலர்களை காத்து அவர்களை அனுப்பிவிட்டு மீதமிருந்தவர்களை தேடினான் சிலரை வைத்து.

எல்லா இடங்களிலும் தேடியவன் கண்களுக்கு தூரத்தில் சிறு வெளிச்சம் தென்பட்டது. அதை தேடி நகர்ந்தவனுக்கு தூரத்தில் கேட்ட சத்தம் ஏதோ தவறு நடப்பது போல் உணர்த்தியது. அங்கே சென்று பார்த்தவன் ஸ்தம்பித்து நின்றான்.

அவன் யாரைத் தேடி சென்றானோ அவர்களெல்லாம் அங்கே வாயெல்லாம் ரத்தத்துடன் தங்களது உயிரை விட்டிருந்தனர். அவர்களின் அருகே ஒரு பெண் தனது கைகளில் பீர்பாட்டிலுடன் அமர்ந்திருந்தாள். அவன் மெதுவாக அவளருகில் சென்று அவளை அழைத்தான். அவளோ எதற்கும் பதிலளிக்காமல் அமர்ந்திருந்தாள். அவன் மெதுவாக அவள் தோளை தொட்டான். அந்த தொடுதலில் உணர்வு பெற்றவள் மெதுவாக நிமிர்ந்தாள். அவள் முகத்தில் எதையோ சாதித்த நிம்மதி தெரிந்தது. அவனை யூனிஃபார்மில் பார்ததவளின் கண்களில் சிறிது பயம் தோன்றியது. ஒரு நிமிடம் தான் அதுவும். மறுநொடி அதுவும் மாறியது.

அவன் எதுவும் அவளிடம் கேட்காமல் அவளின் கைகளில் உள்ள பாட்டிலை வாங்கி வைத்துவிட்டு அவளின் முகத்தை பார்த்தான். அவன் பார்வையின் அர்த்தம் கண்டு,

"அய்யா என் பேரு மலர்.. நான் பிறந்து வளர்ந்தது கல்யாணம் செய்தது எல்லாம் இதே ஊரு தான். எனக்கு ஒரு பெண் குழந்தை இருந்துச்சி.. என் புருஷன் நல்லவன்னு நினைச்சி நான் அவனை காதலிச்சி எங்க வீட்ட எதிர்த்து கல்யாணம் பண்ணேன். நல்லா போயிட்டுருந்த எங்க வாழ்க்கைய வசந்தமாக்க வந்தவ தான் என் பொண்ணு இனியாள்... அவளோட பத்து வயசு வரைக்கும் நாங்க ரொம்ப சந்தோஷமாத்தான் இருந்தோம். அப்போ தான் என் புருஷன் என்ன வேல செய்யறான்னு தெரிஞ்சுது.. அது தெரிஞ்சதுல இருந்து தெனம் சண்டை.
என்னால அவனை திருத்த முடியலை.

அதுனால நான் அவனை விட்டு தனியா வந்துட்டேன் என் பொண்ணோட... ஆனா அவன் தொடர்ந்து என்கிட்ட தினமும் வந்து சண்டை போட்டான். அப்போ ஒருநாள் என்பொண்ண பக்கத்து வீட்டுல விட்டுட்டு வேலைக்கு போயிருந்தேன். அந்த நேரத்துல என் பொண்ணு அந்த நாயி தூக்கிட்டு போயிட்டான். அவன் தூக்கிட்டு போய் நல்லா வளத்திருந்தானாலும் சந்தோஷப்பட்டுருப்பேன்.

ஆனா அந்த கேடுகெட்ட நாய் பெத்த பொண்ணுன்னு கூட பாக்காம இந்த நாயிங்களுக்கு தாரவாத்து குடுத்துருக்கு அந்த பொறம்போக்கு நாயி.. அத கேட்டதுலருந்து என் நெஞ்சே வெடிச்சிருச்சியா வெடிச்சிருச்சி.. எந்த தாயால தாங்கிக்க முடியும்.. அதுதான் அவன் திரும்ப வீட்டுக்கு வரும்போது சோத்துல விஷத்தை வச்சி கொன்னேன்.. எம்பொண்ணு சாவுக்கு காரணமான யாரையும் விடக்கூடாதுன்னு முடிவு பண்ணி இந்த நாய்கிட்ட போதை மருந்து வாங்குறவ மாறி நடிச்சி அவனே என்னை கூட்டிட்டு வரமாறி செஞ்சு அவனுங்கு குடிக்க வாங்கி வச்சிருந்த சரக்குல வெஷத்தை கலந்துட்டேன்.. ஒரு பொம்பளை இவனுங்களை எதிர்த்து நான் சண்டை போட முடியுமா.. அதுதான்யா இவனுங்களை நானே கொன்னுட்டேன். நான் இப்போ சந்தோஷமா ஜெயிலுக்கு போறேன்யா.. என்னை அரஸ்ட் பண்ணுங்க.." நடந்ததை விவரித்தாள் மலரவள்.

அவளையே சிறிது நேரம் பார்த்தவன் தனது கைகளை உயர்த்தி சல்யூட் அடித்தான். "அம்மா நீங்க கொலை செய்யலை. வதம் பண்ணிருக்கீங்க.. அசுரவதம்.. இதுக்கு உங்களை கோவில் கட்டிதானமா கும்பிடனும்.. உங்களை கூண்டுக்குள்ள அடைக்கக்கூடாது. நீங்க சுதந்திரமா வாழலாம்.. சட்டத்தின்படி நீங்க செஞ்சது தப்புன்னாலும் நீதிதேவதையின் முன்பு நீங்க செய்தது சரிதான்மா.. இங்கே நடந்தது கெட்ட கனவா நினைச்சி மறந்துடுங்க.. நான் பாத்துக்குறேன்.. " என்று அவளை அனுப்பி வைத்தவன் தன்னுடன் வந்தவர்களிடம் அந்த இடத்தை சுத்தம் செய்ய சொன்னான். அவர்கள் அந்த இடத்திலிருந்து கிளம்பிய அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த இடம் வெடித்து சிதறியது. அங்கே இருந்த கன்டெய்னர் மற்ற வண்டிகளை மலைசரிவுகளில் பாதாளத்தில் தள்ளி விட்டான்.

அங்கே அவர்கள் வந்ததற்கான எந்த தடயமும் இல்லாமல் அழித்துவிட்டு தன்னவளையும் தன் வாரிசையும் காக்கச் சென்றான். இங்கே நடந்தது எதுவும் தெரியாமல் தனது மெட்டீரியல் சென்ற செருக்கில் வினயும் ரஞ்சித்தும் மதுபானம் அருந்தினார்கள். வினய் அதிக போதையுடன் ரஞ்சித்திடம்

"டேய் மச்சி நான் அந்த மித்ராவ ஒரு தடவை தொட்டுக்குறேன் டா.. அவளை பார்த்ததுல இருந்து என் உணர்ச்சியை தூண்டுறாடா.. ப்ளிஸ் டா... ஒரே ஒரு தடவை மட்டும்.." என தன்னுடைய அழிவுக்கு வழிதேடி சென்றான்.

அவளின் அறைக்குள் நுழையவும் தன்னவனின் நினைவில் இருந்தவளுக்கு யாரோ அறையில் நுழைவதை கண்டவள் யாரென்று பார்த்தாள்.. வந்தவனின் முகத்தில் இருந்த வக்கிரத்தில் அவளின் நம்பிக்கை ஆட்டம் கண்டது இருந்தும் தன்னவன் மேல் உள்ள நம்பிக்கையில் தைரியமாகவே நின்றாள். அவன் அவளருகில் வந்து அவளைத் தொடும் நேரம் எங்கிருந்தோ வந்த துப்பாக்கி சத்தம் அவன் கையை பதம் பார்த்தது.

துப்பாக்கி சூடு வந்த திசையை இருவரும் பார்த்தனர். அங்கே நேத்ரன் கைகளில் தனது துப்பாக்கியுடன் நின்றிருந்தான். அவனைக் கண்டதும் மங்கையவளே தாயைத் தேடும் மழலையாய் ஓடிவந்து அணைத்துக் கொண்டாள் அவளவனை. தன்னை கட்டிக்கொண்டவளை இறுக அணைத்துக் கொண்டான். ஒருநாளோ ஆனாலும் இருவரும் ஒருவரையொருவர் கானாமல் தவித்து தான் போயினர்.

துப்பாக்கி சத்தம் கேட்டு வந்த ரஞ்சித் இவர்களை கண்டுவிட்டு கோபமாக அவர்களை தாக்க வந்தான். அதை கடைசி நிமிடத்தில் கண்ட நேத்ரன் தன்னவளை மறுகையால் அணைத்துக் கொண்டு ரஞ்சித்தின் வயிற்றிலே ஓங்கி உதைவிட்டான். அதில் கிழே விழுந்தவன் தலையில் தனது துப்பாக்கியை வைத்து,

"பொறுக்கி நாயே.. அப்படி ஒரு அப்பனுக்கு எப்படி ஒரு புள்ளை.. உன்னோட ஆணிவேரே தெரியும்டா நாயே... உங்க அப்பனுக்கு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே அவரு கையால் தான் உனக்கு சாவு... உன்னை மாறி ஒருத்தன் இந்த பூமிக்கே பாரம்டா.. ஒன்னுமறியா பச்சை மண்ணுங்களை இப்படி சிதைக்கற நீயெல்லாம் வாழவே கூடாதுடா... நீ அனுப்புன எல்லா குழந்தைகளையும் காப்பாத்திட்டோம் டா.. நீ யாரை வச்சி உன்னோடு இல்லீகல் பிஸ்னஸ் பண்ணுனியோ அவன் இருக்கற இடமே இல்லாம பண்ணிட்டேன் டா.. மொத்தமா உன் சாம்ராஜ்யத்தையோ இல்லாம பண்ணிட்டேன்.. இனி நீயும் இருக்க வேணாம் போயிடு...." துப்பாக்கியை அவனின் நெற்றிப்பொட்டில் வைத்து டிரிக்கரை அழுத்து போகும் நேரம் ரஞ்சித் அவன் கைகளில் உள்ள துப்பாக்கியை பறிக்க முனைந்தான்.. அதில் இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டதில் ரஞ்சித்தின் விரல் டிரிக்கரை அழுத்தியது.. அதிலிருந்து வந்த குண்டு சத்தத்தில் மித்ரா "அத்தான்" என்ற அலறழுடன் கிழே விழுந்தாள். இடத்திலிருந்த டேபிளின் கூர்மையான முனை அவளின் தலையில் அடிபட்டது.. ஏற்கனவே நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் இருந்தவளுக்கு அடிபட்டதும் உடனே மயங்கி விட்டாள்.

அங்கே சில நொடிகள் நிசப்தமாக இருந்தது.. நேத்ரன் மித்ராவை தாங்கிக் கொள்ளும் நேரம் ரஞ்சித் தான் யாரை சுட்டோம் என்று பார்த்தான். அங்கே வினய் குண்டடிப்பட்டு ரத்த வெள்ளத்தில்
துடிதுடித்த படி அவன் உயிர் போனது. அதை பார்த்த ரஞ்சித் ஒரு நிமிடம் சிலையாகித்தான் போனான். அடுத்த நிமிடம் தெளிந்தவன் முதலில் அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றான். அதற்குள்ளாகவே நேத்ரனின் ஆட்கள் வந்துவிட்டனர். ஆனாலும் அனைவரையும் தாக்கிவிட்டு தடுக்க வந்த நேத்ரனையும் தனது கையில் இருந்த சிறு கத்தியால் தாக்கிவிட்டு தப்பித்து விட்டான். அவனை யாரும் தொடர வேண்டாம் என்று விட்டான். அவன் எங்கே செல்வான் என்றும் யூகித்திருந்தான். முதலில் தன்னவளையும் தன் வாரிசையும் முதலில் காக்க வேண்டும். பின்பு அந்த அரக்கனை தன் கையால் அழிக்க வேண்டும்.

தனக்கும் அடிபட்டதும் நினைவில்லாமல் தன்னவளை காப்பதே நினைவிலிருந்தவனுக்கு தன் வழி தெரியவில்லை போலும். அவளை தன் கரங்களில் ஏந்தி சென்றவன் ஒரு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தான். அங்கே அவளை சேர்த்தவனின் அருகே ஒருவர் வந்து அவனின் தோளை தொட்டார். அவரைக் கண்டவனின் கண்களில் இதுவரை இருந்த திடம் சென்றது.. "அப்பா" என்று அணைத்துக் கொண்டான்.

" கலங்காதப்பா.. எம்பேரனும் எம்பொண்ணும் நல்லபடியா நம்மகிட்ட வருவாங்கப்பா... " என்று அவனுக்கு ஆறுதலளித்தார்.


அவர் அவனை வளர்த்த இல்லத்தின் நிர்வாகி.. அவன் தான் அவரை வரச்செய்தான் தன்னவளுக்கு துனையாக... "அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது.... கடவுளே பாசத்தை மட்டுமே தேடினவனுக்கு எல்லாமாவும் வந்த என் தேவதை இன்னைக்கு போராடிட்டு இருக்கா.. என் உயிரைகூட எடுத்துக்கே.. ஆனா என்னவளை என்கிட்ட குடுத்துரு இறைவா.." கடவுள் நம்பிக்கையே இல்லாதவன் இன்று தன்னவளுக்காக வேண்டினான். ஆனால் அவனின் வேண்டுதல் விழலுக்கு இறைத்த நீரானது.


ஐசியு விலிருந்து வெளிவந்த மருத்துவர் சொன்ன செய்தியில் அவனின் உயிர் துடித்தது.. தன்னவளின் நிலமைக்கு காரணமானவன் மேல் அவனைக் கொள்ளும் அளவு ஆக்ரோஷம் வந்தது.



தேடல் தொடரும்...✍️
 

Mayuri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 2, 2024
36
11
8
Bangalore
ஒரு சந்தோஷமான விஷயத்தைக் கூட கொண்டாடவிடாம எத்தனை பிரச்சனைகள் நேத்ரனுக்கும் யாழினிக்கும்...