• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தேடல் 3

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
அந்தப் பெரிய வளாகத்தையும் மூடுவது போல தனியொரு கட்டிடமாக வியாபித்து காணப்பட்டது ஐ.டி நிறுவனமொன்று.

"மல்ஹோத்ரா ஐ.டி டிஜிட்டல் ஸ்டோம்."

முழுவதுமாக கண்ணாடியினால் கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம்.

அதன் சி.ஈ.ஓ வாக இருப்பவர் மல்ஹோத்ரா. வயது ஐம்பதுகளில் இருக்கும்.

அந்தப் பதவிக்கு அடுத்து நியமனம் பெறப் போகின்றவன் அவரது மூத்த புதல்வன்.
தற்போது அந்த நிறுவனத்தின் சி.எஃப்.ஓ மற்றும் சி.ஓ.ஓ வாக இருப்பவன்.

உலகம் முழுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் தலைமையகம் இருப்பதோ சென்னையில். அங்கே தான் மல்ஹோத்ராவின் புதல்வனும் தன் பதவியில் காலூன்றி நிற்கிறான்.

அடுத்த சி.ஈ.ஓ என்ற தலைமைப் பொறுப்பும் சுமையும் அவன் மீதிருக்க மல்ஹோத்ராவோ எப்போதாவது இங்கே வந்து செல்வதுண்டு.

மல்ஹோத்ரா, ஓர் சாந்தமானர். பதவிக்கும் அவரது குணத்திற்கும் சம்மந்தம் இருக்காது. ஆனால் அவரது திறமையை அடிக்க ஆளில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

உலகத்திலேயே பிரபலமாக பேசப்பட்டு வந்த இந்த நிறுவனத்தை முதல் மூன்று இடங்களுக்குள் கொண்டு வந்ததென்னவோ இவரது மூத்த மகன் தான்.

இவரிடம் இருக்கும் சாந்தமென்பது அவனிடம் கொஞ்சமும் இருக்காது. ஆறடியில் இருக்கும் சாணக்கியன் இவன்.

கறுகறுவென்ற கலையான கேசம், நீண்ட நாசி, கூர்மையான கண்கள், உடற்பயிற்சி செய்து முறுக்கேறிய உடல் கட்டு, சேர்ட்டையும் மீறித் திமிறிக் காணப்படும் புஜங்கள் என அத்தனையும் பார்ப்பவர்களை அப்படியே வசீகரிக்கும்.

முகத்தில் எப்போதும் ஓர் அழுத்தமிருக்கும். உதடுகளோ சிரிப்பென்பதை மறந்து பல வருடங்களாகி விட்டன. அடுத்தவர்களுடன் பேசும் போது ஓரிரு வார்த்தைகளுடன் கடந்து விடுவான்.

அவனே வம்சி வீர் மல்ஹோத்ரா. மல்ஹோத்ரா பரம்பரையின் இரண்டாவது ஆண்வாரிசு.

உடையை டக்கின் செய்து கொண்டே ப்ளூடூத்தில் அழைத்திருந்தான் அவனது பீ.ஏ விக்ரமிற்கு.

முதல் ரிங்கிலே அழைப்பை ஏற்றவனிடம் சில கட்டளைகளை பிறப்பித்தவன் ப்ளேசரை எடுத்து அணிந்து விட்டு, கோட்டை கையில் எடுத்துக் கொண்டு படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான்.

அந்தக் கோட்டையின் ராஜா போன்ற தோரணையில் இறங்கி வந்தவனை மல்ஹோத்ராவும் அவனது தாயுமான சவிதாவும் வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இறுதியாக மல்ஹோத்ராவிடம் ஓர் பெருமூச்சும் விஞ்சியது.

அது எதற்கானது என அறிந்தவனது உடல் சட்டென இறுகியது.

வந்தவன் தாயை ஆழ்ந்து பார்த்து விட்டு தந்தையிடம் "குட் மார்னிங் டாட்..." என்றதும் அவரும் பதிலுக்கு வாழ்த்தவென்று அந்த நாளும் வழமை போலவே ஆரம்பித்திருந்தது.

எதிரே சோஃபாவில் அவனது தம்பி, அஹான் வீர் மல்ஹோத்ராவும் தங்கை மீராவும் அமர்ந்திருக்க தனக்கு காலை வாழ்த்து சொல்லி புன்னகைத்த தங்கைக்கு தலையசைப்பை பதில் தந்தவனின் பார்வை தம்பியில் படிந்தது.

அஹானோ பிஸ்னஸை விடுத்து மருத்துவத்தில் ஆர்வம் காட்ட அவனது ஆசையை நிறைவேற்றும் முகமாக பிரபல மருத்துவக் கல்லூரியொன்றில் அவனுக்கு சீட்டு வாங்கி கொடுத்திருந்தார் அவனது தந்தை.

இதோ கல்லூரியும் முடிந்து கடந்த இரண்டு அரை வருடங்களாக தங்களது சொந்த ஹாஸ்பிட்டலில் வீ.ஓ.ஜி யாக பணிபுரிந்து வருகிறான்.

அனைவருடனும் இரக்கமாக பழகுபவன். சூதுவாது அறியாதவன். ஆனால் அவனிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் என்றால் அது மிகவும் பிடிவாதக் காரன். ஒருவருடன் பேச வேண்டாமென்று நினைத்தால் நிச்சயம் ஓர் வார்த்தை கூட பேசமாட்டான்.

அப்படித்தான் வம்சியுடன் கடந்த ஐந்து வருடங்களாக அவன் பேசுவதேயில்லை.

மகன்மார் இருவரையும் நினைத்து கலங்குவது என்னவோ அவனது தாயும் தந்தையும் தான்.

மீரா கல்லூரி இரண்டாமாண்டில் கற்கிறாள்.

...

அவனோ இவனை கண்டுகொண்டது போல் தெரியவில்லை. ஓர் வித வெறுப்புடன் பற்களை நறநறுத்துக் கொண்டிருந்தவனுக்கு வம்சியின் முன் அமர்ந்திருப்பதே பெரும்பாடாகிப் போனது.

காபி ட்ரேயுடன் வந்து நின்ற வேலைக்காரப் பெண்மணியிடமிருந்து ஓர் கப்பை எடுத்துக் கொண்ட வம்சி "அஹானுக்கும் கொடுங்க.. ஏதோ டென்ஷன்ல இருக்கான்.." என்றது தான் தாமதம் சட்டென எழுந்த அஹான் விறுவிறுவென மேலே சென்று விட்டான்.

தனது அறைக்கதவை அவன் அறைந்து சாற்றிய விதமே அவனது கோபத்தை பறைசாற்றப் போதுமானதாக இருந்தது.

அவன் செல்லும் வரை அவனையே பார்த்திருந்த வம்சியின் உதட்டில் மில்லி மீற்றர் சைசில் ஓர் கிற்றுப் புன்னகை வந்து அடுத்த கணமே அவனது கோபத்திற்கான காரணத்தை நினைத்து உதிர்ந்து விட்டது.

முடிந்தது என யாரிடமும் சொல்லாமலே எழுந்த வம்சியும் தன் காரில் ஏறி புறப்பட்டு விட்டான்.

அவனைத் தொடர்ந்து இரண்டு கார்கள் பின்னே தூசியைக் கிளப்பிக் கொண்டு சென்றன. அவனின் பாதுகாப்பு அந்த வீட்டிற்கு மட்டுமல்ல முழு நாட்டிற்குமே முக்கியம் தான்.

...


தலைமையகத்திலிருக்கும் அலுவலகத்திற்குள் வம்சி நுழைந்தது தான் தாமதம், ஓர் பக்கம் விக்ரமும் மற்றைய பக்கம் அசிஸ்டன்ட் பீ.ஏ வான கவிதாவும் வந்து அவனது நடைக்கு ஈடுகொடுக்க முடியாவிட்டாலும் ஓட்டமும் நடையுமாக அவனை பின்தொடர்ந்து சென்றனர்.

இருவரும் மாறி மாறி அன்றைய நாள் ஷெடூலை வாசித்துக் கொண்டு வர வம்சியோ முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாவிட்டாலும் அப்படியே உள்வாங்கிக் கொண்டு தான் வந்தான்.

இடையே அனைத்து ஸ்டாப்ஸும் எழுந்து நின்று ஆளாலுக்கு காலை வணக்கம் சொன்னாலும் அவனிடம் எந்த பிரதிபலிப்பும் இருக்காது.

அதில் வேலை செய்யும் ஒருவனோ மற்றையவனின் காதில் "இந்த மனுஷன் சிரிச்சா இன்னும் ஹேன்ஸமா இருப்பாரு போலடா. ஏன்டா பத்து சிங்கத்தை ஒத்தையா வேட்டையாடி தின்டவரு போல விறைப்பா இருக்காரு..?" என்று கிசுகிசுத்தான்.

அருகில் கேட்டுக் கொண்டு நின்றிருந்தவனுக்கு பகீரென்று இருந்தது.

சட்டென சுற்றிமுற்றிப் பார்த்தவன் கோபத்துடன் இவன் பக்கம் குனிந்து "டேய் முட்டாள் கொஞ்சம் மெதுவா பேசு. மனுஷன் கினுஷனு சொன்னே பல்லு பறக்கும். இங்க நீ இப்போ பேசுனது மட்டும் அவர் காதுல கேட்டுச்சு உன் காது மட்டுமில்ல என் காது சவ்வும் சேர்ந்து கிழியும்..." என கடுப்படித்தான். அவன் தலைவலி அவனுக்கு.

இவனோ ஓர் தோள் குலுக்கலுடன் தன் வேலையைப் பார்க்க சென்று விட்டான்.

அடுத்த பத்தாவது நிமிடம் மீட்டிங் ஹாலில் அனைவரும் அசெம்பிலாகி இருக்க, விக்ரமே அதனை ஆரம்பித்து வைத்தான்.

"குட்மார்னிங் லேடிஸ் என்ட் ஜென்டில்மேன். ஹியர், வீ ஹேவ் கம் டு அனௌன்ஸ் அவர் நியூ ப்ராஜெக்ட். அதைப் பற்றி நம்ம கம்பனியோட சி.ஓ.ஓ வான மிஸ்டர் வம்சி வீர் மல்ஹோத்ரா விரிவாக சொல்வார்..." என்றவன் பணிவாக வம்சியின் பக்கம் திரும்பி "சார்..." என்கவும் தன் உயரத்திற்கு எழுந்து நின்றான் ஆடவன்.

பார்வையில் ஓர் தீவிரமும் திமிரும் இருக்க எழுந்தவனோ "குட் மார்னிங் எவ்ரிவன்..." எனத் தொடங்கி தன் திட்டத்தை ப்ரெசன்டேஷன் மூலம் விளக்க, அந்த அறையே ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு அத்தனை நிசப்தமாக காணப்பட்டது.

அவனின் குரலின் அழுத்தமும் அவனின் ஆளுமையும் அப்படிப்பட்டது.

சிறிது நேரத்தில் மீட்டிங்கும் நிறைவிற்கு வர அப்படியே வெளியே வந்தவன் தன்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த விக்ரமிடம் "விக்ரம் நான் சொன்ன விஷயம் என்னாச்சு...?" என்றான்.

விக்ரமோ திடீரென்ற அவனது கேள்வியில் திடுக்கிட்டவனாக பின்னர் தன்னை சமாளித்துக் கொண்டு "சார்.. அது வந்து.." என இழுக்க வம்சியின் நடைத் தடைப்பட்டது.

அதில் சீராகத் துடிக்க ஆரம்பித்த விக்ரமின் இதயம் மீண்டும் அதன் இயக்கத்தை நிறுத்தி விட்டது.. (அட யார்ரா இவன்..?)

நிதானமாக அவனைத் திரும்பிப் பார்த்த வம்சியோ "ம்ம் தயங்காம சொல்லுங்க..." என்றதுடன் மீண்டும் முன்னே நடந்தான்.

உஃப்பென காற்றை குவித்து ஊதிய விக்ரமிற்குத் தெரியும் அந்த நிதானம் எதற்கானதென.
"சார், எஸ் யூசுவல் எந்தத் தகவலும் கிடைக்கல..." என்றதும் ஆடவனின் இதயத்தில் ஓர் வலி.

நெஞ்சைத் தடவிக் கொண்டே தனதறை வந்தவனின் கால்கள் தரையில் நிற்க மறுத்தன. தலையை கோதிக் கொண்டே அங்குமிங்கும் நடந்தவனின் மனக்கண்ணிலோ பல காட்சிகள் படமாக விரிந்தன.

தலை சூடேற அவசரமாக நீரை எடுத்து அருந்தியவனுக்கு அந்த நீரும் மனதை குளிர்விக்கவில்லை. உள்ளுக்குள் ஏதோ உடைந்து விட்ட உணர்வு...

அவனின் ரகசியத் தேடல் அது...!

விக்ரம் நம்பிக்கையானவன். எனவே இந்த தேடலில் அவனையும் தன் பங்கிற்கு அழைத்திருந்தான்.

அது அவனவளிற்கான அவனின் தேடல்.


...


நேரதாமதமாகி வீட்டிற்கு வந்திருந்தான் வம்சி.

அவனிற்காக காத்திருந்தார் மல்ஹோத்ரா.

படியேறச் சென்றவன் ஏதோ உந்த திரும்பிப் பார்க்க அங்கே அவனையே கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் அவனது தந்தை.

புருவ முடிச்சுடன் அவரருகில் வந்தவனிடம் "உட்காருப்பா..." என்றார்.

அவனும் மறுப்பேதும் இன்றி அமர்ந்து விட்டான். அவனது முகத்தில் களைப்பின் சாயல்கள் எஞ்சியிருக்க "என்னப்பா ஹெவி வேர்க்கா...?" என்றார் மீண்டும்.

"நத்திங் டாட்.. என்ன விஷயம் சொல்லுங்க..." என்று உடனே விடயத்திற்கு தாவியிருந்தான்.

அது தான் அவன். அவனிற்கு நின்று நிதானமாகப் பேசிப் பழக்கமில்லை. வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று தான் பேசுவான்.

சிரித்த பெரியவரோ "இன்னும் கொஞ்ச மாசத்துல நம்ம கம்பனிப் பொறுப்பு முழுக்க நீதான் ஏத்துக்கப் போற... ஏதாவது கஷ்டமா இருக்காப்பா..? இருந்தா சொல்லு, அப்பா சமாளிச்சுக்கிறேன்.." என்றார் மகனின் அதீத திறமையில் நம்பிக்கை கொண்டவராக.

அவன் அவரை விட சாணக்கியனல்லவா..!

அவனது பதில் என்னவாக இருக்கும் என்பது தெரிந்தும் இப்படி கேட்டு வைத்தார்.

உதட்டை கோணலாக வளைத்து சிரித்தவன் "டாட் டைம்பாசுக்கு நான் தான் கெடச்சேனா உங்களுக்கு..? உங்க சின்ன மகன் வெட்டியாதான் மூஞ்சிய தூக்கிட்டு திரிறான். அவனை வேணா பிடிச்சு இந்த சில்லி கியொஷ்ஷன்ச கேளுங்க. நவ் ஐ ஹேவ் டூ மூவ்" என எழுந்தவன் அங்கேயே தன்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அஹானைப் பார்த்து கண் சிமிட்டி விட்டு சிட்டாக பறந்து விட்டான்.

"இடியட்..." என அஹானின் சத்தமில்லாத திட்டும் அவனது காதில் தெளிவாக விழுந்தது. உதட்டை மடக்கி சிரித்தவன் சென்று மறைந்தான்.

இருவரையும் பார்த்து மல்ஹோத்ரா சிரித்து விட்டு தூங்க சென்று விட்டார்.

அவர்களின் சிரிப்போ வெறும் வாயளவில் மட்டும் தான். உள்ளுக்குள் அனைவருக்குமே ஓர் கவலை எஞ்சியிருந்தது.


...


இரவு பால்கனியில் நின்று வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான் வம்சி.

பனி ஊசி போல் துளைத்துக் கொண்டு உடலை ஊடுறுவிச் செல்ல மெல்லிய நிலவொளியில் குளிர் காற்றும் கலந்தென அந்த இரவே ரம்மியமாக இருந்தது.

ஆனால் அதனை அவனால் ரசிக்கத் தான் முடியவில்லை.

எத்தனை ஆண்டுகளாகி விட்டன. இன்னும் அவளைத் தேடி கண்டு பிடிக்க முடியவில்லையே. இவ்வளவு பெரிய பொசிஷனில் இருந்தும் அவளை தேடி கண்டுபிடிக்க முடியாத தன்னையே வெறுக்கிறான் ஆடவன்.

அந்த மதிமுகத்தைக் காண அவனது உள்ளம் தவித்துக் கொண்டிருந்தது. அதன் வெளிப்பாடு அவன் பிடித்திருந்த கம்பியில் கொடுத்த அழுத்தம் மேன்மேலும் இறுகியது.

தன் கையில் கிடைத்த அதிஷ்டப் பொக்கிஷத்தை அவனே வேண்டுமென்று தொலைத்த நிலையாகிப் போனது.

"யூ டேம் இடியட்..." என பற்களை நறநறுத்தவனாக தன்னையே திட்டியவனுக்கு சத்தமிட்டு கத்த வேண்டும் போலிருந்தது.

கண்கள் சிவக்க பிடரியை கோதி விட்டவன் வானைப் பார்த்து "எங்கடி இருக்க...?" என்றான் தழுதழுத்த குரலில்.

"நான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது.." என்றவனுக்கு இறங்கியிருந்த கோபம் மீண்டும் வந்து உச்சியில் ஒய்யாரமாய் அமர்ந்து விட்டது.

திரும்பி உள்ளே வந்தவன், கபேட்டில் இருந்த ஒரு பொருளை மனம் வலிக்க வெளியே எடுத்தான்.

"இ..இதை மட்டும் எ..எடுத்துட்டுப் போகட்டுமா..?" என கண்ணில் மொத்த வலியையும் வேதனையும் சுமந்தவளாக உடைந்து போன குரலில் கேட்டு நின்றிருந்தவளின் குழந்தை முகம் அவனை பலவீனமாக்கியது.

கண்கள் கலங்க அந்த டெடியை தடவி விட்டவனின் மனம் வெகுவாக காயப்பட்டிருந்தது.

வெளியே விறைப்பாக திரிபவனின் உண்மை நிலை இது தான்.

அவனின் தேடல் தொடரும்...