• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தேடல் 5

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
அன்று சித்தார்த் சொல்லியது போல அதாஹ்வின் வீட்டில் தான் அவர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவளிற்கு சிரமம் தராமல் சித்துவே வெளியே சென்று காய்கறிகளையும் வாங்கித் தந்தான்.

அவள் எவ்வளவோ மறுத்தும் அவன் பிடி கொடுத்தானில்லை.

கூடவே யாதவையும் அழைத்துச் சென்றிருந்தான். அவளிடம் கேட்க அதாஹ்வோ அதிர்ந்தே விட்டாள்.

முன்னப் பின்ன இப்படி யாரும் அவர்களின் வீட்டிற்கு வந்ததேயில்லை. அப்படியிருக்க, சித்தார்த் கூடவே அவனையும் அழைத்துச் செல்லக் கேட்க மெய்யாகவே அவளிற்கு அதில் உடன்பாடில்லை.

நேற்று தன்னை நம்பியவள் இன்று நம்பாமல் இருக்கிறாளே என்றெல்லாம் அவன் நினைக்கவில்லை. அவளது நிலையிலிருந்து சிந்தித்தான்.

வீட்டிற்குள் நுழைந்ததும் அந்த வீட்டில் ஆண்வாசம் இருப்பதற்காக சுவடுகள் இல்லையென்பதை கவனித்து விட்டான்.

ஆக, இவள் கணவனை இழந்து அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காக அவனைப் பிரிந்து இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவனுக்கு அவள் குழந்தையை தன்னுடன் அனுப்ப மறுப்பது எதற்கானது என்பது புரியாமல் இருக்குமா...!?

அடுத்த கணமே "இட்ஸ் ஓகே..." என கடந்து விடத் தான் முயன்றான்.

இருந்தும் யாதவின் முகத்தில் தெரிந்த ஏக்கத்தில் அவனுக்கு அப்படியே சென்றிட முடியவில்லை.

அவனுக்காக ஒரு முறை பேசிப் பார்ப்போம் என நினைத்த சித்தார்த் அதாஹ்விடம் வந்து "நீ எதுக்காக என் கூட அனுப்பமாட்டிக்கிறேனு எனக்குத் தெரியாது. ஆனால் அந்த சின்னப் பையன்ட முகத்தைப் பாரு. அவனை அப்படிப் பார்த்தும் என்னால சாதாரணமா கடந்து போக முடில.." என்றவனே தொடர்ந்து "ஒரு, ஒரு மாசமா என்னைத் தெரியுமா..? சோ என்னை நல்லா வாட்ச் பண்ணி இருப்ப. உனக்கு நான் தப்பானவனா பட்டா அவனை என் கூட அனுப்ப வேண்டாம். இத்தோட நம்ம ரிலேஷன்ஷிப்ப முடிச்சுக்கலாம். ஆனால் அன்னைக்கு என்ன நம்பின அதே அதாஹ்வா இருந்தா என்னை நம்பி அவன அனுப்பி வை. சத்தியமா உன் நம்பிக்கைய காப்பாத்துவேன்..." என்றவன் இவ்வளவு லென்த்தா பேசியதும் வீண் என்பது போல அவள் யோசனையுடன் நின்றிருக்க சித்துவிற்கு ஏதோ போல் இருந்தது.

தலையைக் கோதி தன்னை சமப்படுத்திக் கொண்டே தோளை உலுக்கியவன் திரும்பி தன் தாயைப் பார்த்து போகலாம் என கண்ணால் அழைக்க அவரோ அவனைப் போலவே அவனைத் தாண்டி கண்ணால் காட்டினார்.

இவன் திரும்ப, அங்கே அதாஹ்வோ யாதவை அழைத்துக் கொண்டு தங்களது அறைக்குள் நுழைந்திருந்தாள்.

சிறிது நேரத்தில் வெளியே வந்தவள் கையோடு யாதவ்வையும் ரெடியாக்கிக் கொண்டு வந்திருந்தாள்.

இறுகிப் போயிருந்த சித்துவின் உடல் மெல்லத் தளர உதடும் அழகாக புன்னகைத்தது. பேண்ட் பாக்கெட்டில் கையிட்டு நின்று கொண்டு அவன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க, யாதவோ அந்நாந்து தன் தாயைப் பார்த்தான்.

அவளோ "போ" என்ற ரீதியில் அவனது கையை தன் பிடியிலிருந்து விட்டது தான் தாமதம் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பென சித்தார்த்திடம் ஓடிச் சென்றான் அந்த சின்னப் பையன்.

தூக்கு என கைகள் இரண்டையும் உயர்த்தியவனை வாரி அணைத்தவன் கன்னத்தில் முத்தமிட்டு அவனை குதூகலமாக்கி, பார்த்துக் கொண்டிருந்த அதாஹ்வின் உள்ளத்தையும் அவனறியாமல் குளிர்வித்திருந்தான்.

தந்தையை தவிர்த்து தனக்கொரு சகோதரன் இருந்திருந்தால் தன்னையும் தன் குழந்தையும் இந்த நிலைமைக்கு விட்டிருக்க மாட்டானோ என்று தோன்ற கண்களை கரித்துக் கொண்டு வந்தது.

எதேச்சையாக அதாஹ்வை நிமிர்ந்து பார்க்க, அவளோ கண்ணீருடன் நின்றிருந்தாள்.

அவளருகில் வந்தவன் "உனக்கொரு அண்ணனா நல்ல ஃப்ரெண்டா எப்போவும் நான் இருப்பேன்.. கேன் ஐ?" என அதையும் உணர்ந்து அவளிடமே கேட்டவன் அவளிடத்தில் உயர்ந்து நின்றான்.

முகம் விகசிக்க கண்ணீருடன் சம்மதமாக தலையாட்டியவளின் தலையை பாசமாக ஆட்டி விட்டவன், சந்தோஷத்துடன் வெளியேறப் போக அவனது கையிலிருந்த யாதவ் "மம்மி ஏன் அழுறாங்க..?" என்றான் விட்டால் அழுது விடுபவன் போல.

"அது சும்மா கண்ணா. உன் மம்மிட கண்ணுல தூசி விழுந்துட்டா அது தான் கண்ண கசக்கிட்டு நிற்கிறா..." என்ற சமாளிப்புப் பேச்சுவார்த்தையெல்லாம் அவனிடம் எடுபடவில்லை.

நம்பாத பார்வை அவளைப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தையின் கண்ணும் கலங்கியிருக்க கண்களை துடைத்துக் கொண்ட அதாஹ், அவர்களினருகில் வந்து "ம..மம்மி அழலடா கண்ணா. உன் சித்து சொன்னது போல தூசி தான் விழுந்துட்டு...நீங்க ஹேப்பியா சித்து கூட வெளியே போய்ட்டு வாங்க..." என்றதும் அவனை சிந்திக்க விடாமல் சித்து பேச்சுக்களை கொடுத்துக் கொண்டே அழைத்து சென்று விட்டான்.

யாதவும் புதுக் கார், புதிதாக வெளியே ஓர் பயணம் என அதில் ஐக்கியமாகி விட்டான்.

அன்றைய பொழுது அப்படியே சென்று கொண்டிருக்க சித்துவிற்கோ அவசரமான அழைப்பொன்று வரவும் போக வேண்டிய கட்டாய நிலை அவனிடத்தில்.

"அப்போ கிளம்புறோம்..." என்று சொன்ன சித்தார்திடம் மறுக்க வந்த வாயை மூடிக் கொண்டாள் காரிகை.

ஏனோ அவன் போகிறேன் என்று சொன்னதும் யாதவின் முகம் வாடுவதை தாயவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த வன் "இம்போர்டன்ட் வேர்க். அது தான் போக வேண்டி இருக்கு. இல்லைன்னா யாதவ் கூட நைட் வர இருப்போம். அவனை விட்டுப் போகவும் எங்களுக்கு மனசில்ல தான்..." என்றவனிற்கு அதற்கு மேல் என்ன சொல்வதென தெரியவில்லை.

அவனின் நிலையை புரிந்து கொண்டவள் சம்மதமாக தலையாட்ட, யாதவின் அருகில் வந்து அவனுயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தவன் "யாதவ் குட் போய் இல்லையா. அங்கிள்க்கு முக்கியமான வேலை இருக்கு. போய்ட்டு நாளைக்கு உங்கள பார்க்க வரேன். அதுவரைக்கும் அம்மாவ நல்லபடியாக பார்த்துக்கனும் சரியா...? நீங்க அழுதா அம்மாவும் அழுவாங்க இல்லையா..?" என்றதும் குளம் கட்டி நின்ற கண்ணீரை தன் பிஞ்சு விரல்களால் துடைத்த பையனோ சரியென தலையாட்டி விட்டு சித்துவின் கழுத்தை கட்டிக் கொண்டான்.

அவனிற்குமே அவனது அன்பில் லேசாக கண்கள் கலங்கி விட்டன.

யதார்த்தமாக கிடைத்த அன்பு என்றாலும் அப்பழுக்கில்லாத அன்பல்லவா அவர்களது...

சிறிது நேரம் அப்படியே இருந்தவர்கள் பின்னர் கிளம்பி விட்டனர்.

யாதவ் மீண்டும் விளையாட்டில் ஐக்கியமாகி விட தாயை காரில் அமர வைத்தவன் ஏதோ நினைத்தவனாக மீண்டும் அதாஹ் நிற்கும் இடத்திற்கு வந்தான்.

திரும்பி உள்ளே போகப் போனவளை "அதாஹ்.." என்ற சித்தார்த்தின் குரல் தடுத்திருந்தது.

யோசனையாக திரும்பி அவனைப் பார்த்தவளின் முன் வந்தவன் "இதை கேட்காம போக என் மனசு விடமாட்டிக்கு. என்னடா இன்னைக்குத் தான் பார்த்தோம், பழகினோம் அதுக்குள்ள அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டான்னு நினைச்சிராத..." என்றவனின் பேச்சில் அவளது உள்ளம் தடதடத்தது.

அவளது மௌனத்தைப் பார்த்துக் கொண்டே "உன் வீட்டுக்கு இதுவரைக்கும் யாரும் வந்ததில்லையா..? யாதவ்வ யாரும் இதுவரைக்கும் வெளியே அழைச்சிட்டு போனதில்லையா..?" என்றதும் சுருக்கென்றது அவளுக்கு.

இதை மீறி யாதவின் அப்பா பற்றி கேட்க சித்துவின் மனம் ஏனோ இடம் கொடுக்கவில்லை.

தான் கேட்டும் அமைதியாக நிற்பவளை யோசனையாக பார்த்தவன் மீண்டும் "அதாஹ்" என்றழைத்தான்.

முயன்று தன்னை தேற்றிக் கொண்டவள் "ஏ..ஏன் யா..யாது ஏதாவது...?" என்றிழுத்தவளை சட்டென தடுத்தவன் "இல்லை இல்லை. யாது எதுவும் கேட்கவில்லை. நானாதான் கேட்குறேன். பிகாஸ் காலைல நாங்க வந்தப்ப நீ ஃப்ரீஸாகி நின்ன. அப்பறம் யாதவ் திரும்பத் திரும்ப கேட்டான் எங்க வீட்டுக்கா வந்திருக்கிங்கனு. அப்பவே எனக்கு புரிஞ்சு போச்சு யாரும் உங்க வீட்டுக்கு வந்ததில்லைனு. அப்பறம்.." எனத் தயங்கியவன் இப்போது தன்னை யோசனையாக பார்ப்பவளிடம் "நான் வெளியே கூட்டிட்டு போனப்ப யாதவ் அவ்ளோ ஹேப்பியா இருந்தான். என் கையையே பொத்தி பிடிச்சுக்கிட்டு ஆசையா அந்த மால்லை சுத்தி வந்துட்டு இருந்தான். அவனை அப்படிப் பார்த்ததும் எனக்குள்ள என்னவோ போல இருந்துச்சு. அவனை யாரும் இதுவரைக்கும் வெளில அழைச்சுட்டு போனதில்லைனு விளங்கிச்சு... அதற்காக அவனா எதுவும் எனக்கிட்ட வாங்கியும் கேட்கல.. நானா தான் வாங்கித் தந்தேன். அதையெல்லாம் ஆசையா பார்த்தான். தட்ஸ் வை இப்படி கேட்டேன்.. ஏதாவது உன் மனச காயப்படுத்துறது போல கேட்டிருந்தா ஐ எம் ரியலி சாரி..." என்றவன் உதட்டை வளைக்க, அவளுக்கோ உள்ளுக்குள் ஏதோ உடைகின்ற உணர்வு..

கண்களும் அவளை மீறி கலங்கியிருக்க சித்துவையே பார்த்துக் கொண்டிருக்க அவனுக்குமே வலித்தது அவளது நிலை.

இப்படி தான் பேசியிருக்கக் கூடாதோ என்றும் தோன்றியது.

அவளை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லாமல் நின்றவன் ஓர் கட்டத்தில் மெதுவாக அவளை அசைத்து விட திடுக்கிட்டு சுயத்தையடைந்தாள். அவனுக்குமே பாவமாகி விட்டது.

"ஐ..ஐ எம் சாரி..." என்றவனைப் பார்த்து இப்போது சிரித்தாள் அவள்.

ஆனால் அந்த சிரிப்பில் உயிர்ப்பிருக்கவில்லை.

"எ..எங்க வீட்டுக்கு இதுவரைக்கும் யாரும் வந்ததில்லை. கூடவே, என்னைத் தவிர யாதுவை வெளியே அழைச்சிட்டு போக எங்களுக்குன்னு யாரும் இல்லை..." இதைச் சொல்லும் போது மட்டும் அவளது பார்வை வேறெங்கோ வெறித்துக் கொண்டிருந்தது.

குரலிலும் அப்படி ஓர் அழுத்தம்.

அதன் பிறகும் அங்கே நிற்பது சரியில்லை எனத் தோன்ற சொல்லி விட்டு கிளம்பிச் சென்றான் ஆடவன்.

ஓரெட்டு வைத்தவன் மீண்டும் அவள் பக்கம் திரும்பி "அவன் உன்னைத் தவிர யாரையோ ரொம்ப எதிர்பார்க்கிறான். அவன்ட ஒவ்வொரு அசைவுலையும் நான் அதைப் பார்த்தேன். இனி அந்த ஏக்கத்தை அவனிடம் நான் பார்க்க கூடாது. அவனுக்கு எப்போவெல்லாம் தோனுதோ அப்போ அவன்ட கண் முன்னாடி ஒரு தாய் மாமனா நான் நிற்பேன். திஸ் இஸ் மை விசிடிங் காட். அதுல என் நம்பர் இருக்கு. அவன் எப்போவெல்லாம் என்னைக் கேட்குறானோ அப்போ எனக்கொரு கால் பண்ணு, அடுத்த நிமிஷம் நான் இங்கே இருப்பேன்.. ட்ரஸ் மீ என்ட் பாய்..." என்றதுடன் விறுவிறுவென சென்று விட்டான்.

....


அவன் போய் அரை மணி நேரம் கடந்தும் அவள் அப்படியே அவ்விடம் நின்றிருந்தாள்.

என்னவெல்லாம் பேசி விட்டு சென்று விட்டான்.

"யாரிவன்...? அவனுக்கும் தங்களுக்கும் என்ன சம்மந்தம்?" என்று நினைக்காமல் இருக்கமுடியவில்லை அவளால்.

ரத்த சம்பந்தம் இல்லாவிட்டாலும் அவனுக்கும் அவர்களுக்கும் ஓர் மிகப் பெரிய சம்மந்தம் இருக்கிறது.

இனி காலம் அதனைச் சொல்லும்.

...


இரவு யாதவ்வை தூங்க வைத்துக் கொண்டிருந்தவளின் எண்ணம் முழுக்க வியாபித்திருந்தது என்னவோ சித்து தான்.

அவனது முகம் மூளையின் ஏதோ ஓர் மூலையில் மங்கலாக தெரிந்தது அவளுக்கு. என்னவென்று சரியாக உணர முடியவில்லை அவளால்.

அது அனைத்தையும் மீறி இன்று அவன் கூறிய அனைத்தையும் மெல்ல அசை போட்டாள்.

அவன் யாரையோ எதிர்பார்ப்பதாக அவன் சொன்னதில் குனிந்து யாதவைப் பார்த்தவள் அவனது தலையைக் கோதி விட்டு நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டே "உன் அப்பாவ தேடுறியா கண்ணா...? அவர இனிப் பார்ப்பியானு கூட எனக்குத் தெரியலையே கண்ணா..." என்று நினைத்த மாத்திரமே ஒற்றைக் கண்ணிலிருந்து சலேரென எட்டிப் பார்த்தது கண்ணீர்.

மீண்டும் "ஒரு அண்ணனா நல்ல ஃப்ரெண்டா நான் எப்போதும் இருப்பேன்.." கூடவே "அவனுக்கு எப்போவெல்லாம் தோனுதோ அப்போ அவன்ட கண் முன்னாடி ஒரு தாய் மாமனா நான் நிற்பேன்" என்று சித்தார்த் கூறியதும் அழையா விருந்தாளியாக அவள் நினைவில் வந்து போனது.

எவ்வளவு ஆழமான வார்த்தைகள். சாதாரணமாக ஒருவனால் முன்னப் பின்னத் தெரியாதவளிடம் இப்படி சொல்லி விட முடியுமா..!?

முடியுமே.. இதோ சித்தார்த் வர்மன், அதாஹ் என்ற முன்னப் பின்னத் தெரியாதவளிடம் சொல்லி விட்டானே..

உணர்ச்சிவசத்தில் அவளின் உதடுகள் நடுங்கின..

"அவர் எனக்கு அண்ணனா...?" என்று மெல்ல உதட்டசைத்து முணுமுணுத்தவளுக்கு நெஞ்சத்தை பிசைந்தது.. கூடவே கண்ணீருடன் புன்னகையும் வந்தது.

அன்றிலிருந்து அவர்களின் உறவு ஆரம்பமானது.

சுமார் ஒன்றரை வருடங்களாகி விட்டன.

அவர்கள் இவர்களின் இல்லம் வருவதும் இவர்கள் அவர்களின் வீட்டிற்கு செல்வதும் என நெருங்கிய சொந்தங்கள் ஆகினர்.

அன்று அவன் வாக்கு கொடுத்தது போல யாதுவிற்கு தன் தந்தை நினைவு வருகின்ற போதெல்லாம் அவன் முன் சித்து என்ற சித்தார்த் வர்மன் ஓடி வந்து நின்றான்.

அதன் விளைவு இதோ அந்தக் குழந்தையின் கண்களில் இப்போதெல்லாம் தந்தையில்லை என்ற ஏக்கத்தை அதாஹ் காண்பதில்லை.

இதை நினைத்து வருந்துவதா சந்தோஷப்படுவதா என்று அவளுக்குத் தெரியவில்லை.

நாளை என்ன நடக்கும் என்பது நிச்சயமில்லாத ஒன்று..

அப்படியிருக்க இந்த சித்தார்த்தும் தங்களை விட்டுச் சென்று விட்டால்... !?

ஏன் நாளைக்கே அவனுக்கு திருமணம் நடக்கலாம். இவன் எப்படியோ, வருபவள் தங்களது உறவை புரிந்து கொள்வாளா? அப்படியேயிருந்தாலும் அவனை பழையபடி இவர்களுடன் இருக்க விடுவாளா..?

நினைக்கையில் "இதுவும் கடந்து போகும்" என்ற பெருமூச்சுத் தான் அவளிடத்தில்.

ஆனால் சித்தார்த்தின் விடயம் அப்படியில்லை என்பதை அவளும் புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை...