அத்தியாயம்-10
அடுத்த நாள் காலை ஜஸ்ராவுக்கு உறக்கம் கலைந்தது.
‘தலைகாணி ரொம்ப கெட்டியாக சூடாக இருக்கு.’ என முகத்தை கண்விழிக்க சோம்பல் பட்டுக் கொண்டு நன்றாகத் தேய்த்தாள் ஜஸ்ரா. எழ விருப்பமில்லாமல் கல்லூரிக்குப் போக வேண்டும் என்ற நினைப்பில் மீண்டும் உறங்க முயற்சிக்க அவள் தலை முடியை யாரோ கோதினார்கள்.
“ம்ம்ம்..” என அவள் சுகமாக விழிகளை மூடினாள். தன் தந்தையாக இருப்பார் என நினைத்த போதே அவன் நினைவு எழுந்தது.
‘அச்சோ..’ என தலையை உயர்த்திப் பார்த்தவளுக்குத் தான் தலையை மட்டும் விஜயனின் மார்பின் மீது வைத்து உறங்குவது புரிந்தது.
அத்தோடு, தலையை அங்கும் இங்கும் நகர்த்தி அவன் தொண்டை அருகே வந்திருந்தாள்.
உடனே வேகமாக அவனை விட்டு விலக முயல, விஜயன் இழுத்து அவன் மீது போட்டுக் கொண்டான்.
“குட் மார்னிங்க் பொண்டாட்டி.” என்றவன் வாயைத் திறந்து அதிர்ச்சியில் இருப்பவளின் இதழ்களைக் கொய்ய ஆரம்பித்தான். முதன் முதலாய் ஏற்பட்ட அனுபவத்தில் திக்கித் தடுமாற ஆரம்பித்தாள் பாவை. சில்லென்று பட்டுப் போன்று மோதிய இதழும், பட்டுப் போன்ற மென்மையாக ஆரம்பித்து மெல்ல வன்மையாக அவள் இதழ்த்தேனை அவன் உறிஞ்சிக் கொண்டிருக்க, ஜஸ்ராவின் உடல் துவண்டது. அதிர்ச்சியில் அவள் இதயத் துடிப்பு எகிறிக் கொண்டிருக்க, சில நிமிடங்கள் கழித்து விடுவித்தனுக்கும் அதே நிலையே.
“மார்னிங்க் நீங்க கிஸ் கொடுத்துட்டீங்க. நான் கொடுக்க வேண்டாமா? இதுக்குத்தான் எல்லாரும் கல்யாணம் பண்ணிப்பாங்க போல. வெரி ஸ்வீட் கிஸ். நெஞ்சிலேயே கொடுத்துட்டீங்க. நானும் கொஞ்சம் மறக்க முடியாத மாதிரி கொடுக்கலாம்னு.” அவள் தலையை மீண்டும் கோதிக் கொடுத்தவனை மார்பிலேயே அடிக்க, “ஏண்டா இப்படி செஞ்ச?” எனக் கத்தினாள்.
“என்னோட வொய்ஃப்கிட்ட நான் எப்படி வேணாலும் இருப்பேன்.” என சிரித்தப்படி அவன் பதில் அளிக்க ஜஸ்ராவின் கோபம் மீண்டும் எகிறியது. அவன் தலை முடியைப் பிடிக்கப் போனவளை அப்படியே கைகளைப் பிடித்து தனக்கு அடியில் போட்டுக் கொண்டான்.
“ரொம்ப கை நீளுது உனக்கு.” கைகளை அவள் தலைக்கு மேலே உயர்த்திப் பிடித்தவன், மீண்டும் முத்தமிட ஆரம்பித்தான்.
இந்த முறை முகம் முழுக்க கொடுத்து அவளை லேசாகக் கடித்தும் வைக்க, ஜஸ்ராவின் முகம் கோபத்திலும், இந்த புதிய அனுபவத்திலும் சிவந்து போனது. அந்த வெள்ளி நிறக் கண்களில் பிரதிபலித்த உணர்வுகளை உணர்ந்தவன் மெதுவாக அவள் கன்னங்களைத் தடவிக் கொடுத்தாள்.
“ஏன் ஜஸ்ரா என்னைத் தூண்டி விடற? ஒரு தடவை கொடுத்தால் எனக்குப் பத்தலை. மறுபடி மறுபடி மனசு கேட்குது. நீ கொஞ்சம் எதுக்கும் என்னை விட்டுத் தள்ளியே இரு.” என்றவன் அவளை விட்டு விலகிச் சென்று விட்டான்.
மணி ஏழைக் கடந்திருக்க, ஜஸ்ராவின் அறைக்கதவு வேகமாகத் தட்டப்பட்டது.
“அத்தை.. அத்தை..” என செம்மொழி தட்ட, ஜஸ்ரா உடனே குழந்தையின் குரல் கேட்டதும் எழுந்து விட்டாள். வேலைக்காரப் பெண்ணும் அவள் பின்னே படி ஏறி அவளைத் தூக்க, ஜஸ்ரா கதவைத் திறக்கவும் சரியாக இருந்தது.
“சாரிங்க அம்மா. பாப்பா கீழ் பால் குடிச்சுட்டு இருந்தவங்க. ஓடி வந்துட்டாங்க.”
“பரவால்லை. வா மொழி.” என அவளை வாங்கித் தன் இடையில் வைத்துக் கொண்டாள்.
“அ..த்..தை.. எனக்குத் தம்பியோ பாப்பாவோ வரப் போறாங்களாம். அப்பா போனில் சொன்னார். அம்மா தூங்கறாங்களாம். நான் எழுந்ததும் அவங்கிட்ட வீடியோகால் பேசுவேன்.
மொழி ஹேப்பி. வெரி ஹேப்பி. மாமாகிட்ட சொல்லனும்.”
“செம்மிக்குட்டி அப்படியே பேசுவோம். இப்ப நீங்க போய் சமத்தாக ஸ்கூலுக்கு ரெடியாகுங்க. அத்தையும் குளிச்சுட்டு வரேன். சரியா?” என அவள் கன்னத்தில் முத்தமிட்டு மீண்டும் அனுப்பிவிட்டாள்.
செம்மொழியை முத்தமிடும் போது, முகத்திலும், இதழ்களில் அவன் வாசனை ஓட்டிக் கொண்டது போல் இருந்தது.
பத்து நிமிடங்கள் அறையின் குறுக்கும் மறுக்கும் நடக்க, குளியலறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் விஜயன்.
அவன் எதிரே வேகமாகச் சென்றவள், விழிகளை வலதுபுறம் பார்த்தப்படி பேச ஆரம்பித்தாள்.
“டேய் முட்டாள் மாமா. அண்ணி கன்சீவா இருக்காங்க. ஒரு நாள் விட்டிருந்தால் அவங்களே சமாதானமாகி சேர்ந்திருவாங்க. அதுக்குள்ள என்னைக் கல்யாணம் பண்ணி இப்படி சொதப்பீட்டியே?” என அவசரமாக அவனிடம் பொங்க,
அவள் கன்னத்தைத் திருப்பி தன்னைப் பார்க்க வைத்தான் விஜயன்.
“ஜஸ்ரா என் தங்கச்சியைப் பத்தி எனக்குத் தெரியும். உங்க அண்ணாவை அவ ஏத்துக்கறது ரொம்ப கஷ்டம். பைத்தியம் மாதிரி உங்க அண்ணன் மேல் லவ். அதெல்லாம் பொய்னு தெரிஞ்சதும் நிச்சயம் ஏத்துக்க மாட்டாள். கடமைக்கும் வாழமாட்டாள். அதனால்தான் உன்னை எங்கிட்ட லாக் பண்ணேன். உன்னோட அண்ணன் உனக்காகவாது எஃப்ர்ட் போடுவான். இல்லைனா எக்ஸ் லவ்வர் கூட போயிட்டாள். என்னோட தங்கச்சி நேத்தே டைவர்ஸ் பேப்பர் ரெடி பண்ணிட்டாள். லாயர் கூப்பிட்டு சொன்னார்.”
“என்ன அதுக்குள்ளயா?” ஜஸ்ரா விழிகளை விரித்தாள்.
“இன்னுமா உன்னோட அண்ணியைப் பத்தித் தெரியாது. உங்க அண்ணனுக்கு அவன் விரும்புன வாழ்க்கையைக் கொடுக்கத்தான் நினைப்பா என்னோட தங்கச்சி. காதல்ங்கிற பேரில் புடிச்சு வச்சுக்கமாட்டாள். காதல் தானாக வரனும். ஃபோர்ஸ் பண்ணி வரக் கூடாது. அவ இது வரைக்கும் காதல்னு நினைச்சுட்டு இருந்தது பொய்னு தெரிஞ்சதும் ரொம்ப உடைஞ்சு போயிருப்பாள்.”
“கரக்ட்.. எங்கிட்ட சாரி கேட்டாங்க.”
“உன்னை வச்சு நான் அவளுக்கு சேகரைக் கல்யாணம் செஞ்சு வச்சதையும் கண்டுபிடிச்சுட்டாள்.”
“திரும்பவும் கேட்கிறேன். லவ்வில் இல்லாத இரண்டு பேரை சேர்த்து வச்சு என்ன நடக்கப் போவுது? இப்ப தேவையில்லாமல் இரண்டு லவ் இல்லாத மேரேஜே நீங்க உருவாக்கி இருக்கீங்க.”
“அப்ப என் தங்கச்சி லவ் பண்ணாங்க. அதுவே போதும். இப்பவும் என் தங்கச்சி லவ் பண்றாங்க. அதுவே போதும்.”
“டேய் லூசாடா நீ? தங்கச்சி பைத்தியங்களுக்கு நடுவில் வந்து சிக்கி உசுரு போவுது. எங்க அண்ணாவுக்கும் அண்ணியைப் பிடிக்கும். ஆனால் எனக்கு உன்னைப் பிடிக்கலை. உனக்கும் பிடிக்கலை. எதுக்கு நமக்கு இந்தக் கல்யாணம்?”
“எனக்கு உன்னைப் பிடிக்காதுனு யாரு சொன்னா? பிடிக்காத பொண்ணையா இப்படி கிஸ் அடிப்பாங்க.”
“டேய்…”
ஜஸ்ராவின் இடையைப் பிடித்துத் தூக்கி மேசையின் மீது அமர வைத்தவன், “நம்மளை விடு. நமக்குள்ள சரியாகிடும். ஆனால் மயூ வாழ்க்கையும், சேகர் வாழ்க்கையும் ரொம்ப கஷ்டம். அதனால்தான் கொஞ்சம் புஷ் பண்ணற மாதிரி உன்னைக் கல்யாணம் பண்ணிகிட்டேன். உன்னை ஏற்கனவே பிடிக்கும். இப்ப பொண்டாட்டியானதும் இன்னும் ரொம்பப் பிடிக்குது.”
“அதெப்படி பிடிக்கும்? நேத்து வரைக்கும் நீ என்னை சொந்தக்காரப் பொண்ணு அப்படினுதானப் பார்த்த. எங்கிட்ட அவ்வளவாக பேசுனது கூட இல்லை. அதிலும் நான் மிக்ஸ்ட் ரேஸ். உங்களை மாதிரி இல்லை. ஊரில் இருக்கற உங்க பாட்டிக்கு என்னைப் பிடிக்காது தெரியுமா? நீயும் அவங்க நடந்துக்கிற மாதிரிதான் நடந்துக்குவ. இப்ப புதுசா பிடிக்குதுனா நம்ப முடியுமா?”
“பாட்டிக்கு உன்னைப் பிடிக்காதா?”
“ஆமா என்னை மாதிரி மட்டமாகப் பார்ப்பாங்க. அண்ணனை நல்லா நடத்துவாங்க. என்னை பார்க்கறதே வேற மாதிரி இருக்கும்.”
“அவங்க அப்படித்தான். அதுக்காக நானும் அப்படினு நீ எப்படி முடிவு செய்யலாம்? அப்படி இருந்தால் உன்னை எப்படி கல்யாணம் செஞ்சுருப்பேன்? நீ சொல்லும் போது நியாபகம் வருது. நாம இன்னிக்குப் பாட்டி ஊருக்குத்தான் போகப் போறோம். போய் நம்ம குலதெய்வக் கோயிலுக்கு ஒரு பூசையைப் போட்டு, உன்னை காட்டிட்டு வந்திடலாம்.” என்றதும் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் ஜஸ்ரா.