• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தேன்-5

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
170
56
28
Tiruppur
அத்தியாயம்-5

சாமூண்டிஸ்வரி குழுமத்தின் தலைமை மனித வளத் துறை அலுவலர் பாரதி யது நந்தனின் முன்னே அவன் வீட்டில் அமர்ந்திருந்தார். நடுத்தர அளவிலான அவன் வீடு, அழகாய் நேர்த்தியாய் அமைந்திருந்தது. அவன் விழிகள் கண்ணாடி வழியே அவர்கள் கொடுத்த கோப்பை ஆராய்ந்து கொண்டிருந்தன. கோப்பை மூடி மேசையில் வைத்தவன்,
“என்னை ஏன் செலக்ட் பண்ணுங்க? எப்படி என்னோட காண்டாக்ட் கிடைச்சது?”

“ஹேமவள்ளி மேம்தான் ரெபர் பண்ணாங்க. எங்க கம்பெனிக்கு இப்ப ஒரு கார்ப்பரேட் லாயர் தேவைப்படறாங்க. கோர்ட் பக்கம் விசாரிச்சேன். நீங்க முன்னாடி பெரிய ஃபிர்மில் வொர்க் பண்ணது தெரிஞ்சுது. அங்கேயும் விசாரிச்சோம். இப்ப வரைக்கும் அவங்க உங்களை கூப்பிடறது தெரிஞ்சுகிட்டோம்.”

“தேங்க்ஸ் பார் யுவர் ஆஃபர். ஆனால் என்னால் இந்த வேலையில் சேர முடியாது. இப்ப இருக்கற என்னோட லைஃபே ஓகே.”

“மிஸ்டர். பாரதி நீங்க உடனே மறுக்க வேண்டியது இல்லை. இரண்டு நாள் டைம் எடுத்துக்கோங்க. யோசிச்சு சொல்லுங்க.”

“நீங்க சொல்ற மாதிரியே அந்த வேலையை நான் விட்டதுக்கு ரீசன் இருக்கு. என்னோட சிஸ்டர் என் கூட இல்லாததுக்கு அந்த வேலைதான் காரணம். என்னால் சரியான நேரத்திற்குப் போக முடியலை. அவங்க இறந்துட்டாங்க. அதனால் தான் வேலையை ரிசைன் பண்ணிட்டு ஹைகோர்ட் லாயரா பிராக்டீஸ் பண்ண வந்துருக்கேன். பணம் எப்போதும் உயிரை விட முக்கியமில்லை. நான் குடும்பம் இல்லாமல் தனியாக நிக்கறதுக்கு அந்த வேலையில் நான் பிசியாக இருந்ததுதான் காரணம்.”

“தேங்க்ஸ் ஃபார் டெல்லிங்க் மி. உங்களை நான் ஃபோர்ஸ் செய்யலை. எனக்கு உங்க மனசு புரியுது. ஆனால் எதுக்கு ஓடறது சொல்யூசன் கிடையாது. உங்களுக்கு வொர்க் டைமும் நார்மல் ஆபிஸ் டைமிங்க்தான். ஒரு சில நேரங்களில் மேம் எதாவது கேஸில் இன்வால்வ் ஆனால் மட்டுமே. உங்களுக்கு கீழே ஒரு அசிஸ்டெண்ட்டும் இருப்பாங்க. சாமூண்டிஸ்வேரி குரூப் பெண்களுக்காக ஒரு டிரஸ்ட்டும் நடத்திட்டு இருக்காங்க. அது சம்பந்தமான வழக்குகளுக்கு நீங்க கன்சல்டேசன் கொடுக்க வேண்டியும் இருக்கும். யோசிச்சு பாருங்க. உங்க சிஸ்டர் மாதிரி பலருக்கும் உதவி செய்யலாம்.”

அந்த மனிதவளத் துறை அதிகாரி கையில், அவனைப் பற்றிய அனைத்து தகவல்களும் இருந்தன. அவருடைய நோக்கம் அவனை வேலைக்கு ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும். ஆனால் அழுத்தம் கொடுக்கக் கூடாது. வாழைப்பழத்தில் ஊசி இறக்குவது போல் பதமாக இருக்க வேண்டும்.

“என்னோட டீட்டெய்ல்ஸ் மொத்தமும் உங்ககிட்ட இருக்கு சரியா?”
எதிரில் இருந்தவர் அவன் கண்டுபிடித்ததில் மெல்லிய புன்னகை புரிந்தார். பார்ப்பதற்கு பழம் மாதிரி அப்பாவித்தனமாக இருந்தாலும் வேலை என்று வந்தால் யது நந்தன் வேறு மாதிரி.

“உங்களை மாதிரி ஸ்மார்ட் பர்சன் எங்க குரூப்பில் இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்.” அவர் ஆம் என்றும் கூறவில்லை. இல்லை என்றும் கூறவில்லை.

“நான் யோசிச்சு சொல்லறேன்.”

“உங்க பதிலுக்காக நான் காத்திருப்பேன் மிஸ்டர். பாரதி. உங்கள மாதிரி ஒரு டேலண்ட் எங்க இருந்தாலும் அது நல்லதுதான். அது எங்க குரூப்ஸா இருந்தால் இன்னும் நல்லது. கண்டிப்பா வாங்க. நிச்சயம் உங்களுக்கு இது ஒரு மாற்றமாக இருக்கும். அப்ப நான் கிளம்புறேன். நாம அடிக்கடி பார்க்கற சூழ்நிலை இனிவரும்னு நம்புறேன்.” என எழுந்து கொண்டார்.

யது நந்தனும் அவருக்கு விடை கொடுத்து அனுப்பினான்.
தன் காரில் ஏறி அமர்ந்ததும், ராகவனுக்கு அழைத்தார் அந்த அலுவலர்.

“ நோ சொல்லிட்டார் பாரதி. ஆனாலும் யோசிச்சு சொல்றேன் சொல்ற அளவுக்கு பேசி வச்சுருக்கேன். பிப்டி, பிப்டி சான்ஸ்தான்.” நடந்த அத்தனையும் கூறி முடிந்தார்.

“ஓகே நான் மேம்கிட்ட சொல்லிடறேன்.”

“சார் நான் இரண்டு நாள் கழிச்சு சொல்றேன். அவசரப்பட்டு மேம்கிட்ட சொல்ல வேண்டாம்.”

“ஓகே பார்த்துக்கலாம்.”
அவரிடம் பேசிவிட்ட பிறகு வீட்டு மாடியில் கணினியுடன் அமர்ந்திருந்த மித்ராவின் முன் நின்றான் ராகவன்.

“சொல்லுங்க ராகவன்.”
நடந்த அத்தனையும் கூற, மித்ராவின் புருவங்கள் உயர்ந்தது.

“ஒத்துவந்தால் பாருங்க. இல்லை அடுத்து செய்ய வேண்டியதை செஞ்சுருங்க.”

“ஒகே மேம்.”
***
மயூரா காரில் பயணம் செய்து கொண்டிருந்தாள். விழிகளில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. தான் நேசித்த கணவன், தனக்கு மட்டும்தான் என்றிருந்த கணவன், தன் உலகம் என நம்பி இருந்தவன், எந்தாளும் தன்னைத் தவிர வேறு பெண்ணைப் பார்க்க மாட்டான் என்றிருந்தவளின் தன் என்ற கர்வம் அனைத்தும் சுக்கல் நூறாக உடைந்து நொறுங்கி இருந்தது.

அவளை சிறிதும் பிடிக்கவில்லை என்ற உண்மை ஓங்கி முகத்தில் அறைந்தது.
அவளுடைய கர்ப்பம் உறுதியான சில நாட்களுக்கு முன்பு அவன் வேறு பெண்ணுடன் இருந்திருக்கிறான் என்ற தகவல் அவள் காதல் கொண்ட இதயத்தில் ஒவ்வொரு துளையிலும் உதிரத்தைக் கொட்ட வைத்துக் கொண்டிருந்தது. தன்னிடம் காதல் இல்லாமல் அவன் கூடியதும், குழந்தைப் பெற்றுக் கொண்டதையும் நினைத்தால் அவள் உடல் கூசியது.

அண்ணன் எப்படியாவது தன் திருமணத்தை நடத்தித் தருவேன் என உறுதி கொடுத்த போது, ஏற்பாட்டுத் திருமணமாக சிவசேகரனுக்கு இருக்கும், தனக்குக் காதல் ஏற்பாட்டுத் திருமணம் என நினைத்திருக்க, இது கட்டாயத்தினால் நடந்த திருமணம் என தெளிவாக இப்போது புரிந்திருந்தது.
என்ன காரணத்தைக் கூறி திருமணம் நடந்திருக்கும் என அவள் யோசித்த போது காரணம் புரியவில்லை.
அப்போதும் கைப்பேசியில் வரிசையாக செய்தி வந்த அறிகுறியாக ஒலிக்க, அவள் கைகள் தானாக எடுத்துப் பார்த்தது.
பார்த்தவளின் விரல்கள் அதிர்ச்சியில் தவறியது. அவளுடைய சகோதரன்தான் அனுப்பி இருந்தான். ஜஸ்ரா மாலையும், கழுத்துமாக தன் அண்ணனுடன் நின்று கொண்டிருக்க, கழுத்தில் மஞ்சளில் கோர்த்த தங்கத் தாலி மின்னிக் கொண்டிருந்தது.

புகைப்படங்களுக்கு கீழே, ‘மயூ சரியோ தப்போ, நம்ம குடும்பம் எப்போதும் உடையாது. சிவசேகரன் எப்போதும் உன்னை விட்டுப் போக முடியாது. நீ நினைச்ச வாழ்க்கை எப்போதும் கைவிட்டுப் போகாது.’ என்ற செய்தி கீழே இருந்தது.
உடனே ஜஸ்ராவுக்கு அழைத்தாள் மயூரா.

சில நொடிகளில் அழைப்பு ஏற்கப்பட, “மஹா…”

“சொல்லுங்க அண்ணி. இல்லை இனி நானும் உங்களுக்கு அண்ணி.”

“ம..ஹா.. ஐம் சாரி அண்ணா இப்படி பண்ணுவார்னு நினைக்கலை.”

“அண்ணி உங்க அண்ணன் உங்களுக்காக எந்த எல்லைக்கும் போவார். என் அண்ணனும் எனக்காக எந்த எல்லைக்கும் போவார்.”

“இல்..லை உன்னோட ட்ரீம்ஸ்..”

“பர்கெட் ட்ரீம்ஸ் அண்ணி. என்னோட லைஃப்பக் காப்பாத்தினது உங்க காதல் காரணம்னு எனக்குத் தெரியும். எப்பவும் ஸ்டேட்டஸில் குறைவு அப்படிங்கறதுக்காக என்னை நீங்க குறைவாக நடத்துனதில்லை. சொந்த தங்கச்சி மாதிரி அன்பா பார்த்துகிட்டீங்க. என் அண்ணனோட மொத்த குடும்பத்தையும் நேசிச்சீங்க. அண்ணாவோட பாஸ்ட்டில் வேற ஒருத்தங்க இருந்தாங்க. ஆனால் இப்ப அண்ணா எந்தத் தப்பும் செய்யலை. அவருக்கு உங்களைத்தான் பிடிக்கும்.”

“என்னோட காதல் செத்திருச்சு மஹா. நான் இப்ப பேருக்குத்தான் அவரோட மனைவி. இல்லை எப்போவும் நான் அவருக்கு அப்படித்தான் இருந்திருக்கேன். அதை விடு. நீ ஏன் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட? வேணாம்னு சொல்லி இருக்கலாம்ல. நீ மறுத்திருந்தால் இந்தக் கல்யாணம் நடந்திருக்காது.”

“அப்படியே உங்க அண்ணன் விட்ருவாரு பாருங்க. என்னோட அப்பாவுக்காவும், அண்ணனுக்காகவும் நான் இந்தக் கல்யாணத்தை பண்ணிகிட்டேன். அதுக்காக எல்லாம் விஜயை சும்மா விட மாட்டேன். நீங்களும் பஞ்சாயத்துக்கு வரக் கூடாது.”

“மஹா சாரி.”

“அதுவா இனி உங்க அண்ணன் டெய்லியும் கேட்பார். கவலைப்பட வேண்டாம். மொழி எங்கிட்டதான் இருக்காள். நீங்க அண்ணா கூட பேசுங்க.”

“பார்க்கலாம் மஹா. நான் அண்ணாகிட்ட பேசி டைவர்..”

“அதெல்லாம் முதலில் வாய்ப்பில்லைனு சொல்லிட்டார். இந்த ஆம்பிளைங்களே இல்லாத உலகம் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும் அண்ணி.”

“கரக்ட்தான் மஹா.”

“நீங்க அப்படி எல்லாம் சொல்லக் கூடாது. உங்களுக்கு எங்க அண்ணன் இருக்கார். ஐம் டிராப்ட் இன் அ லவ்லெஸ் மேரேஜ். ஏன் அண்ணி இவ்வளவு நடந்தும் நீங்க என்னை வெறுக்கவே இல்லை?”

‘உங்க அண்ணனையே இன்னும் என்னால் வெறுக்க முடியலை. இதில் பகடைக்காயாக மட்டும் இருக்கும் இந்தச் சிறிய பெண்ணை எவ்வாறு வெறுக்க இயலும்’ என மனதில் ஒரு கேவல் எழுந்து அடங்கியது.

“மஹா நான் போகனும். பாய்.” அழைப்புத் துண்டிக்கப்பட்டது. ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டாள் மஹா. பட்டுப்புடவையுடன் ஹாலில் அமர்ந்திருக்க, அவள் அருகில் மொழி உறங்கிக் கொண்டிருந்தாள்.
ராமச்சந்திரன் அருகில் வந்து மகளை அழைத்தாள்.

“மஹா வாம்மா விளக்கேத்தலாம்.”
சலித்தப்படி எழுந்து சென்ற மஹா விளக்கினை ஏற்றினாள். எங்கிருந்து வந்தானோ தனுர் விஜயனும் அவள் அருகே நின்று கொண்டான். பாலும், பழமும் உண்டு முடித்ததும்,” மாமா எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் வெளிய போகனும். நீங்க எல்லாரும் ரெஸ்ட் எடுங்க. எந்த டென்சனும் வேண்டாம். எல்லாம் சரியாகும்.” என்றான்.

பூசை அறையில் வைத்துக் கூறியதில் ராமசந்திரனின் மனமும் சமாதானம் அடைந்தது. தன் மகளின் திருமணத்திற்கு அலைந்து திரிந்து மாப்பிள்ளை தேட வேண்டி இருக்கும் என நினைத்திருந்தார். ஏற்கனவே வந்த சில மாப்பிள்ளைகள் சரியில்லை. அவள் நிலையை அறிந்து வரதட்சிணை அதிகமாகக் கேட்டனர். ஆனால் அவர்கள் மகளை பணத்திற்காகவும், சிவசேகரன் மற்றும் விஜயன் மூலம் வரும் ஆதாரத்திற்காகக் கொடுமைப் படுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அந்த பணம் பிடுங்கிகளுக்குத் தன் பாச மகளைத் தாரை வார்த்துக் கொடுக்க விருப்பமில்லை.

காசு கொடுத்து தன் மகளை மருமகளாக்கி, அவளை வேலைக்காரி போல் நடத்த அவர் மனம் ஒப்பவில்லை. மகளை உள்ளங்கையில் தாங்குவன் ஒருவன் வேண்டும் என நினைத்தார். ஆனால் தனுர் விஜயன் மருமகனாகி அவர் கவலையைப் போக்கி இருந்தான்.

தனுர் விஜயன் என்றால் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மகள் மிகவும் பாதுகாப்பாக இருப்பார். தன் மகளிற்காக அவன் ஏற்கனவே செய்ததை அனைத்தும் நினைத்துப் பார்த்தார் அவர். முருகனின் சிலையும், சிவன் சிலையும் கை கூப்பிப் வணங்கியவர் தன் மகள் வாழ்க்கைக்கு மனதார வேண்டிக் கொண்டார்.

மகளுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்றாலும் தனக்காவும், சகோதரனுக்காகவும் ஒப்புக் கொண்டிருந்தாள். அவள் இந்த வாழ்வில் பொருந்திப் போய் நன்றாக வாழ வேண்டும் என தகப்பனாக கடவுளிடம் வேண்டிக் கொண்டார். அத்தோடு மகனுக்காகவும் வேண்டிக் கொண்டார். மகனின் செயல் அறிந்து அவன் மீது கோபத்தில் இருந்தார். லட்சுமி கடாட்சம் நிறைந்த மயூரா கண் முன் வந்து போனாள். எவ்வளவு அருமையான பெண்? மாமா மாமா என அப்படிப் பார்த்துக் கொள்வாள். பணக்காரப் பெண் என்ற கர்வம் ஒரு சிறு துளியும் கிடையாது. தன் வீட்டில் கூட சமைக்காதவள், சந்திரன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் மஹாவுடன் சேர்ந்து சமைத்து எடுத்து வருவாள்.
மஹாவையும், அவரையும் மாதாந்திர பரிசோதனைக்கு அழைத்துச் செல்வது மருமகள்தான்.

ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் அவள் உள்ளத்தை வருத்திவிட்ட கோபம் அவர் மனதில் கனன்று கொண்டிருந்தது.

“அப்பா பாப்பா தூங்கிடுவா. அவளை ரூமில் விட்டுட்டு நானும் அவ கூட தூங்கிடறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க.”


“மஹா உன்னோட திங்க்ஸ் ஏற்கனவே மாப்பிள்ளை ரூமுக்குப் போயாச்சு. கிளம்பு.”
இறங்குவாள்..
.