• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தேன் -7

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
170
56
28
Tiruppur
அத்தியாயம்-7

ஜஸ்ரா அருகில் இருக்கும் சுவற்றில் சாய்த்து நிற்க வைக்கப்பட்டு அவள் ஓங்கிய கை சுவற்றில் ஒட்டி நிற்கும்படி அழுத்தமாகப் பிடித்திருந்தான் விஜயன். தனுர் விஜயனின் கன்னத்தில் ஜஸ்ராவின் விரல்கள் அடித்த தடம் எதுவும் இல்லை. அவள் அடியை அவனுடைய முகத்தில் வளர்ந்திருந்த தாடி தடுத்திருக்க, அவள் மீண்டும் கையை ஓங்குவதற்குள் அவளைத் தடுத்துச் சுவற்றில் சாய்த்து நிற்க வைத்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜஸ்ராவின் வெளிர் நிற விழிகள் கோபத்தில் சுடர் விட்டுக் கொண்டிருக்க, மனையாளை அதிக நேரம் விழிகளோடு விழிகளை நோக்கிக் கொண்டிருந்தான் விஜயன்.

“இப்ப எதுக்கு அடிச்ச ஜஸ்ரா?”
மெதுவாக அழுத்தமாக வந்து விழுந்தன கேள்வி.

“நீங்க எதுக்கு வேணாலும் கல்யாணம் செஞ்சுருக்கலாம். ஆனால் எனக்கும் ஒரு மனசு இருக்குனு யோசிச்சுருக்கனும். உங்க தங்கச்சி வாழ்க்கைகாக என்னை பணயமாக யூஸ் பண்ணிக்க நினைச்சுருக்கக் கூடாது. வாழ்க்கை எல்லா நேரத்திலும் நீங்க நினைச்ச மாதிரி போகாது.”

“நான் நினைச்ச மாதிரிதான் போகும்.” துளியும் ஆணவமின்றி ஒலித்த குரல் ஜஸ்ராவை இன்னும் கோபக் கனலை மூட்டியது.

“இனி மேல் நீங்க நினைச்ச மாதிரி எதுவும் நடக்காது. உங்க கையாலே உங்களை டைவர்ஸ் கொடுக்க வைப்பேன்.”

விஜயனிடம் இருந்து ஒரு மெல்லிய சிரிப்பு.

“இப்ப நமக்கு பர்ஸ்ட் நைட் நடந்திரும்னுதானே நீ இவ்ளோ எபர்ட் போட்டு சண்டை கட்டிட்டு இருக்க.”

“என் அனுமதி இல்லாமல் நீங்க என்னைத் தொட முடியாது.”

“இப்பவும் உன்னைத் தொட்டுட்டேதான் இருக்கேன். அதை விடு இன்னிக்கு எனக்கு பர்ஸ்ட் நைட் கொண்டாடற மூட் இல்லை. போ சமத்தாகத் தூங்கு. அதே சமயம், எப்ப உன் கழுத்தில் தாலி கட்டுனேனே அப்பவே நீதான் என் பொண்டாட்டி. அதில் எந்த மாற்றமும் இல்லை. நீ எப்பவும் போல் காலேஜ் போ. வா. ஹேப்பியா இரு. நான் என்ன உன்னைக் கொடுமைப்படுத்த கட்டிட்டு வந்தேனு நினைச்சியா? அப்புறம் கை வைக்கறது இதுவே கடைசியாக இருக்கட்டும்.” என இறுதியாக மிரட்டலுடன் விடுவித்தான்.

ஜஸ்ராவின் விழிகள் தைரியத்தைக் காட்டினாலும் அவள் உடல் லேசாக நடுங்கியது.

“அப்புறம் என்னோட வைஃப் யாராக இருந்தாலும் முதலில் இதைக் கொடுக்கனும் நினைச்சேன். நீ வேற டென்சன் ஆகிடுவ. இருந்தாலும் வச்சுக்கோ. எனக்கும் நீதான் மனைவினு மனசில் பதியனும்.” என சட்டென்று அவள் நெற்றியில் முத்தமொன்றைப் பதித்து விட்டு விலக, ஜஸ்ராவின் விழிகள் அதிர்ச்சியில் விரிய கைகள் தானாக நெற்றியைத் தடவிக் கொண்டன. இதயத்தின் துடிதுடிப்பு அதிகரித்து, இன்னும் உடல் நடுங்கியது.
1000256862.jpg


“அப்புறம் நீ எங்க வேணாலும் படுத்துத் தூங்கு. நான் கீழ எல்லாம் படுக்க முடியாது. பிகாஸ் எனக்குப் பழக்கம் இல்லை. சீன் கிரியேட் செய்யாமல் தூங்கு. டெய்லி பேசிஸ் டிராமாவிலே நான் வாழறவன். ரொம்ப சேட்டை செஞ்ச மாமாகிட்ட சொல்லிடுவேன். குட் நைட் வொய்ஃப்.”

அவனது அலட்டிக் கொள்ளாத பாவனை ஜஸ்ராவின் கோபத்தை மேலும் தூண்டி வெறுப்பாய் எரிய வைக்க ஆரம்பித்திருந்தது.


***

தங்கையின் நிலை இப்படி இருக்க, சிவ சேகரன் தன்னுடைய வீட்டில் படுக்கை அறையில் நின்று தன் மனைவிக்கு அழைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவள்தான் அவனை கருப்பிட்டு வைத்திருந்தாளே.

பல முறை அழைத்து விட்டு ஓய்ந்து படுக்கையில் அழைந்தவளுக்கு தியாவின் அழைப்பு வர அதை ஏற்றுக் காதில் வைத்தான்.

மறு முனையில் அவள் என்ன கூறினாளோ அதைக் கேட்டுக் கொண்டவன்,ண “இங்க பாரு தியா. இன்னும் கொஞ்ச நாள் எனக்குக் கால் பண்ணாத. என்னொட வொய்ஃப்க்கு எல்லாம் தெரிஞ்சுருச்சு. அதோட விஜய் மச்சான் என்னோட தங்கச்சியைக் கல்யாணம் செஞ்சுகிட்டார். எல்லாம் சார்ட் அவுட் ஆகட்டும் அப்புறம் பேசிக்கலாம் தியா. இப்போதைக்கு என்னை கான்டாக்ட் செய்ய வேண்டாம்.” என உறுதியாக கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தவன், கைப்பேசியில் தன் மனைவி தற்போது இருக்கும் இடத்தைக் காட்டும் சிவப்பு அம்புக் குறியை வெறித்தவன் தன் உடைமைகளை ஒரு பையில் அள்ளிப் போட்டுவிட்டு, சாதாரண உடைக்கு மாறிவிட்டு கிளம்பிவிட்டான். இனி அவன் மனைவி மயூராவை வழிக்குக் கொண்டுவருவது மலையைப் புரட்டிப் போடுவது போன்றதுதான். ஆனால் செய்தே ஆக வேண்டும். தன் மகிழுந்தை எடுத்தவன் தன் மனைவியை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தான்.
ஹேமவள்ளி இரவு உணவை அறையிலே முடித்தவள், தன் தங்கை அழைக்க உடனே கைப்பேசியைக் காதில் வைத்தாள்.

“அக்கா.. ஐ மிஸ் யூ.. ஐ லவ் யூ..” என மறு முனையில் அந்தக் குழந்தையின் குரல் கேட்டது தனக்கு அடிபட்ட வலியைக் கூட மறந்து விட்டாள் அவள்.

“சௌக்குட்டி ஐ லவ் யூ டூ. ஐ மிஸ் யூ டூ.” என ஹேமாவின் முகம் மொத்தமும் மாறி இருந்தது.

“நீ எப்போ இங்க வருவனு இருக்குக்கா. உன் கூட விளையாடனும். சுத்திப் பார்க்கனும்.”

“அக்கா லீவ் கிடைச்சதும் வரேண்டா அம்முக்குட்டி. அது வரைக்கும் தங்கப்புள்ளை ஸ்கூல் போவீங்களாம். படிப்பீங்களாம். நான் வரும் போது உங்க ஃபேவரைட் திங்க்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்து தருவேனாம். சாப்பீட்டிங்களா?”

“ம்ம்ம்.. சாப்பிட்டேன். நீங்க சாப்பிட்டீங்களா?”

“நானும் சாப்பிட்டேன். சரி போய் தூங்குங்க. காலையில் ஸ்கூலுக்கு டைம் ஆகிடும்.”

தலையை ஆட்டினாலும் சௌந்தர வள்ளிக்கு வைக்க மனமில்லை. ஹேமாவுக்கும் அப்படித்தான். ஆனால் அவளுக்கு சில வேலைகளும் இருந்தன. அப்போது சரியாகக் கதவைத் தட்டியபடி உள்ளே வந்தான் ராகவன். ஹேமாவின் அறைக்கதவு திறந்து இருந்தாலும் அவன் கதவைத் தட்டவும் நிமிர்ந்து பார்த்தவள் விழிகளை வரும்படி சிமிட்ட அவன் உள்ளே நுழைந்தான்.

“சரிக்கா. ஐ லவ் யூ. குட் நைட்.”

“லவ் யூ டூ சௌக்குட்டி. குட் நைட் பாய்.” எதிரில் அழைப்புத் துண்டிக்கப்பட ஹேமா கைப்பேசியைக் கீழே வைத்தவள் ராகவனைப் பார்த்தாள்.

காலையில் பார்த்தது போல் அப்படியே அச்சுப் பிசகாது, ஒரு தலைமுடி கலையாது இருந்தான். அறையில் இருந்த விளக்கில் அவன் முகம் இன்னும் ஜொலிப்பது போல் இருக்க, அவன் முகத்தில் எப்போதும் போல் எந்த உணர்வுகளும் இல்லை. எப்படித்தான் இவனால் இப்படி இருக்க முடிகிறதோ? என்று தோன்றியது அவளுக்கு. அவள் பணியில் சேர்ந்த நாளில் இருந்து இப்படித்தான் இருக்கிறான்.

அவன் விழிகளை அவளால் படிக்க முடிந்ததே இல்லை. ஹேமவள்ளியின் விழிகள் அவன் முகத்தில் நிலைத்து நிற்பதைத் தடுக்க, “மிஸ் ஹேமவள்ளி இந்த ஃபைல் நாம இரண்டு பேரும் சேர்ந்துதான் பார்க்கனும்.” என அவள் பார்வை தன்னிடமே நிலைத்திருப்பதை உணர்ந்து கூற ஹேமாவும் அவனையே பார்த்திருப்பதை உணர்ந்து உடனே தொண்டையைச் செருமி மேசையில் இருந்து நீரை எடுத்துக் குடித்து விட்டு எழ முயல, அவள் கையைத் தாங்கிக் கொண்டான் ராகவன்.

“இட்ஸ் ஓகே. என்னால் நடக்க முடியுது.”

“கேர்ஃப்புல்.”
இருவரும் அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து மடிக்கணினி, கோப்புகளுடன் வேலையை ஆரம்பித்தனர். நாளை மித்ரவிந்தா செல்லும் ஒரு அலுவல் சந்திப்புக்கு அந்தக் கோப்பிலும், கணினியிலும் அனைத்துச் செய்திகளும் இருக்க வேண்டும். இருவரும் வேலையில் மூழ்கி விட இரவு மணி பதினொன்றைத் தொட்டிருந்தது. ஹேமா அலுவலகம் சென்றிருந்தால் முடித்திருப்பாள். ஆனால் அவள் இங்கேயும், ராகவன் அங்கேயும் இருப்பதால் சேர்ந்து முடிக்க வேண்டிய கட்டாயம். அப்போதும் அவள் பாதி வேலையை முடித்து வைத்திருக்க, ராகவன் வந்ததும் மீதியை முடித்து விட்டாள்.

மாத்திரையை இடையில் போட்டிருந்தால் வேலையை முடிக்க முடிக்க அவளுக்குத் தூக்கம் வேறு சொக்க ஆரம்பித்திருந்தது. இரவும் எப்போதும் போல் விரைவாக உறங்கி விடுவதால் அவளுக்கு உறக்கம் வர ஆரம்பித்தது.
விழிகளைத் தேய்த்தப்படி வேலை பார்த்தவள் ராகவன் சரிபார்க்க ஒரு முறை படிக்கும் போது, அப்படியே உறங்கி அவன் தோளில் சாய்ந்திருந்தாள். சில நிமிடங்கள் அதே நிலையில் இருக்க, மீண்டும் தலை சாய்க்கப் பார்த்தவள் தலையை எதிர்ப்பக்கமாக நகர்த்த அவள் தலையைப் பிடித்துக் கொள்ள சட்டென முகத்தில் பரவிய வெம்மையில் விழிகளைத் திறந்து கொண்டாள் ஹேமவள்ளி.

சட்டென சூழ்நிலையை உணர்ந்தவள் பதட்டத்தில் தன் காலை மறந்து எழ முயல, அவள் சூழ்நிலையை உணர்ந்தது போல் ராகவனும் எழாமல் அவளைப் பிடிக்க முயற்சி செய்ய, பாதித் தூக்கத்திலும், சட்டென்று காலில் தோன்றிய வலியிலும் தடுமாறிய அவளைப் பிடிக்க அவள் முன்பு அமர்ந்திருந்த இடத்திற்கு நகர்ந்திருந்த ராகவனின் காலில் மீது அமர்ந்திருக்க ஹேமவள்ளி எக்குத்தப்பாக அவன் கழுத்தில் முகத்தைப்பதித்து, அவன் தோளை சோபாவின் முனையாய் அழுத்திப் பிடித்திருக்க, அவன் விழிகளை நிமிர்ந்து பார்த்தவளுக்கு, நா மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

மிகவும் கூர்மையாக அவளை நோக்கிக் கொண்டிருந்தான் ராகவன். சட்டென்று என்ன தோன்றியதோ முகத்தை நிமிர்த்தியவள் அவன் இதழில் முத்தம் ஒன்றைப் பதித்து விட்டு மீண்டும் எழ முயல, ராகவன் அதற்கு விடவில்லை. அவளை இழுத்து தன் மடி மீது அமர வைத்தவன், அவள் கழுத்தை வருடியவன், இதழ்களுக்கு வந்தான்.

ஹேமவள்ளி மூச்சு விட மறந்து அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, ராகவன் அவள் இதழ்த் தேனைக் களவாட ஆரம்பித்திருந்தான். சில நிமிடங்களில் அவள் மூச்சுக்கு ஏங்க, அவளை விடுவித்தவன் கிறக்கத்தில் விழிகளை மூடி இருப்பவளைப் பார்த்தப்படியே அவனும் மூச்சு வாங்க, அவள் முகத்தில் படும் வெம்மையான மூச்சை உணர்ந்தவள் லேசாக விழிகளைத் திறக்க, அவளைப் சோபாவின் பக்கவாட்டில் சாய்த்து மேலும் முத்தமிட ஆரம்பித்து இருந்தான் அவன். முதலில் வன்மையாக ஆரம்பித்து இருக்க, இந்த முறை அவள் இதழ்களை பூப்போல் மென்மையாக அவன் இதழ்களால் வருடி அவளை மயக்கிக் கொண்டிருந்தான். மயிலிறகால் வருடுவது போல் வருடிக் கொண்டிருந்தான்.

பெண்ணவளோ முதலில் பதட்டத்திலும், அதிர்ச்சியிலும் இருந்தாலும் அவன் கொடுப்பதை மறுக்காமல் இழைந்து கொடுத்தாள். விழிகளை மூடியிருந்தவளை லேசாக அவன் கடிக்க, விழிகளைத் திறந்து அவனை நோக்கினாள் பாவை. அவன் கூரிய விழிகளை விட்டுப் பார்வையை விலக்க இயலவில்லை. எப்போதும் தேடலில்லாத அவன் விழிகளில் அவளுக்கானத் தேடல் சொட்டிக் கொண்டிருக்க, பெண்ணோ அதில் உறைந்து போனாள். அவளை அப்படியே தூக்கியவன் மெத்தையில் கிடத்தி அருகே நெருங்க, சட்டென கண் விழித்தாள் ஹேமவள்ளி.

அறையில் விடி விளக்கு மட்டும் துணையாக எரிந்து கொண்டிருக்க, கனவில் தான் தேடிய துணையை நினைத்தவளுக்கு அடி வயிற்றில் என்னவோ செய்தது.

‘ச்சே.. நானா.. எப்படி கனவில்?’ என அவளையே கடிந்து கொண்டாள். அவர்கள் வேலை பார்த்ததற்கு சாட்சியாக மேசையில் மடிக்கணினி வீற்றிருந்தது.

‘அவன் கூட நைட் வேலைப்.. எத்தனை டைம் வேலை பார்த்திருக்க.. இப்ப என்ன திடீர்னு? இதெல்லாம் அபச்சாரம்.. அய்யோ.. தப்பு பெருமாளே! பெருமாளே!’ எனக் காலையில் பெருமாளை இழுத்துக் கொண்டிருந்தாள்.
காலையில் குளித்துக் கிளம்பி ஹாலுக்கு மெதுவாக வந்தவள், அங்கு உணவு அருந்தும் மேசையில் அமர்ந்து பால் அருந்திக் கொண்டிருந்த ராகவனைப் பார்த்ததும் கனவு நினைவுக்கு வந்தது. அவளை அவன் சட்டை செய்யாமல் ஏதோ கைப்பேசியில் பார்த்துக் கொண்டிருந்தான்.

மயூரா பெங்களூரில் காஃபி தோட்டத்திற்கு மத்தியில் அமைந்திருந்த அழகிய வீட்டின் நீள் விரிக்கையில் அப்படியே கவிழ்ந்து படுத்திருந்தாள். இன்னும் புடவையில் இருந்தவள் அப்படியே ஒரு சோக ஓவியம் போல் தெரிந்தாள்.
இரவு வந்து சேர்ந்திருக்க, அப்போதில் இருந்து இதே நிலைதான். அவளுடன் வந்திருந்த தங்கம்மா கூட அவளை தொல்லை செய்யவில்லை.

காலையில் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, தங்கம்மா சமையலறையில் இருந்து அவசரமாக ஓடி வந்து திறந்தார். இந்த நேரத்தில் யார் வந்திருப்பார்கள் என்ற குழப்பம் வேறு. விஜயன் ஏற்கனவே வேறு யாரும் அங்கு வரமாட்டார்கள் என்று கூறி இருந்தார்.
கதவைத் திறக்கவும் உறங்காத விழிகளுடன் இருந்த சிவ சேகரன் எதிர்பட்டான்.

“அய்யா…”

“தங்கம்மா கொஞ்சம் அப்படியே வாக்கிங்க் போயிட்டு வாங்க. நான் பார்த்துக்கிறேன்.”
மயூரா லேசாக உறங்கி இருந்தாலும், அவள் உயிர் வரை பதிந்திருந்த அவன் குரல் அவளை உறக்கம் கலைய வைத்திருந்தது.

கதவை அடைத்தவன், மேசையில் கிடந்த அவளுடைய ஆர்ம் ஸ்விங்கைப் பார்த்தான். அவள் விழித்திருப்பது உடல் அசைவில் தெரிந்தாலும், அருகில் சென்று அவளை அப்படியே தூக்கி அமர வைத்தான். அவள் புடவை ஆங்காங்கே கலைந்து மறைவான பிரதேசங்களை வெளிப்படுத்த, தலையைக் கோதியவன் அதையும் இழுத்துச் சரி செய்தான்.

கணவின் தீண்டலில் உடல் விரைத்தவள், இன்னும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. எதிர்ப்பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“மன்னிப்பு என்னால் கேட்க முடியாது மயூரா. நான் என்னோட லவ்வர்டோ இருந்தது உண்மைதான். அவளை நான் காதலிச்சேன்.”

மயூராவின் இதயம் ஏற்கனவே அவனுடைய எழுத்தால் உடைந்து விட்டிருக்க, இப்போது அவன் வார்த்தைகளில் துளித்துளியாக சிதறிக் கொண்டிருந்தது.