அத்தியாயம்-8
மௌனம் அவ்வளவு கனமாய் இருக்கும் என்பதை அந்த வீடு காட்டிக் கொண்டிருந்தது. சிவ சேகரனின் விழிகளை நிமிர்ந்து நோக்கினாள் மயூரா. அவள் விழிகளில் இருந்த வேதனை எதிரில் இருந்தவனைத் தாக்கவே செய்திருந்தது.
“அதெல்லாம் கொஞ்ச நாளிலேயே மறந்துட்டேன். நீதான் என்னோட வாழ்க்கைனு ஏத்துகிட்டேன்.”
“செம்மொழி.. கன்சீவ் ஆகிருக்கும் போது நீங்க…”
“அது.. எமோசனாலா.. அப்ப..”
“சொல்ல வேண்டாம். என்னோட அந்த மூணு மாசமும் வாழ்ந்தது போலினு தெரிஞ்சுருச்சு. அதுக்கப்பறமும் குழந்தைக்காக, என்னோட அண்ணனுக்காக நடிச்சுருக்கீங்க.”
அவன் கைகளைப் பிடித்தான் சேகரன்.
“இல்.லை மயூரா. நான் நடிக்கலை. நான் உன்னை நிஜமாவே நேசிக்கிறேன்.”
“..ம். நீங்க என்னைப் பிடிக்கலைனு ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் நான் நமக்குக் கல்யாணம் கூட நடக்க விட்டிருக்க மாட்டேன். நான் காதலிச்சவர் எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்னு நினைச்சிருப்பேன். இப்படி பொய்யான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டியது இருந்திருக்காது. உடம்பெல்லாம் கூசுது. எப்பவும் எங்கிட்ட அதிகம் பேசக் கூட மாட்டீங்க. அது உங்க நேச்சர், வொர்க் நேச்சர்னு நினைச்சுட்டேன். ஆனால் நீங்க தியாகிட்ட எல்லாமே பேசுறீங்க. எல்லாத்தையும் ஷேர் பண்ணி இருக்கீங்க. நான் உங்களுக்கு ஜஸ்ட் ஒரு பொருள். அவ்வளவுதான். டைவர்ஸ் தந்துடறேன். நிம்மதியாக அவகூட வாழுங்க.”
அவள் கன்னத்தைப் பிடித்து விழிகளை நோக்க, அவன் கையினைத் தட்டி விட்டாள்.
“..ப்ச்ச்.. இப்ப கூட இன்னொரு பொண்ணு மேல காதலை வச்சுட்டு என்னை லவ் பண்ணற மாதிரியே பாக்கிறீங்க பாருங்க. இதுக்குக் கூட எனக்கு மனசு உருகுது. பிளீஸ் கைய எடுங்க.”
அவன் கையை விடுவித்ததும் வேகமாக படியேறி அறைக்குள் செல்ல முயன்றாள்.
சிவசேகரனின் முகம் ஒரு நொடி பிரகாசித்தது.
வேகமாக அவள் பின்னால் சென்று அறையைச் சாற்றியவன், அவளைச் சுவற்றில் சட்டென இழுத்துச் சாய்த்து இதழைக் கொய்ய, மயூராவின் உடல் லேசாகத் துடித்தது. விழிகளை மூடியவள் அவனின் தாக்குதலை ஏற்றுக் கொண்டாள். எப்போதும் மென்மையாக அணைப்பவனுக்குள் அத்தனை வேகம்.
அவளுக்குள்ளும் உள்ளே இதயம் எரியத் தொடங்கியது. அவளது இடைப்பகுதியை அவ்வளவு அழுத்திப் பிடித்திருந்தான். எப்போதும் இல்லாமல் எதையோக் காட்டி விடும் வேகம் அவனுக்கு.
இதழ்கள் கழுத்து வளைவில் இறங்க ஆரம்பித்திருக்க, மனம் தடுமாறத் தொடங்க, கைகள் உடையில் அத்துமீறலைத் தொடங்க மயூராவின் விழிகளில் இருந்து நீர் கொட்ட ஆரம்பித்திருந்தது.
சட்டென அவன் நெற்றியில் விழுந்த கண்ணீரில் நிமிர்ந்து பார்த்தான். மயூராவின் விழிகளில் முதன் முதலாக நீர் வழிந்து கொண்டிருந்தது.
“இப்பக் கூட உங்க விருப்பம்னா நான் இதுக்கு ஒத்துக்கிறேன். ஆனால் அவளை நினைச்சு என் கூட வேண்டாம்.” என்றாளே மயூரா.
சிவ சேகரன் அவளிடம் இருந்து முற்றிலுமாக விலகி இருந்தான்.
அவன் அப்படித்தான் எழுதி இருந்தான். அவர்கள் திருமணம் முடிந்தாலும், அவளை தியாவாக நினைப்பதாக எழுதி இருந்தான்.
“நான் தியா இல்லாத இடத்தில் சப்ஸ்டியூட் கிடையாது. உங்களை மட்டும் முழுசாக காதலிச்ச ஒருத்தி. அந்தக் காதலை நீங்க ஏத்துக்கக் கூட வேண்டாம். மரியாதை கொடுங்க. அதுதான் இத்தனை வருசம் உங்க கூட வாழ்ந்ததுக்கு கிடைக்கற ஒரு விஷயம்னு நினைச்சுக்கிறேன்.”
“ஏய்.. உனக்கு எப்படி சொல்லிப் புரிய வைக்கிறது. என் வாழ்க்கையில் நீ மட்டும்தான் எல்லாமே. நீ யாருக்கும் சப்ஸ்டியூட் கிடையாது. எனக்கு நீ ஒருத்தி மட்டும் தான்.”
சிவ சேகரன் முதன் முறையாக அவளிடம் குரலை உயர்த்திப் பேசியதில் மயூரிக்கும் அதிர்ச்சிதான்.
“நீங்க எங்கிட்ட இப்படி சொல்லலைனாலும் உங்க தங்கச்சி பத்திரமாக இருப்பாள். என் அண்ணன் அப்படியே எங்க அப்பா மாதிரி. கடைசி வரைக்கும் ஒரு பொண்ணுதான்.
யாரைக் கல்யாணம் செய்யறாரோ அந்தப் பொண்ணை காலம் முழுக்கப் பார்த்துப்பாரு. எனக்கு அப்படினு நினைச்சேன்.
ஜஸ்ராவுக்காக நீங்க என் கூட இருக்க வேண்டியது இல்லை. நீங்க தொட்டால் நான் உருகிறேன்தான். மை ஹார்ட், மை சோல், மை பாடி லவ்ஸ் யூ. ஆனால் அறிவு இது உண்மை இல்லைனு சொல்லுது. பிளீஸ் இங்க இருந்து போங்க.”
“நான் இங்கதான் இருப்பேன். நீ என்னை நம்புற வரைக்கும்.”
“சாரி. அது இனி நடக்காது. உங்க வாழ்க்கையில் இனி நான் தலையிட மாட்டேன். லாயர்கிட்ட டைவர்ஸ் பேப்பர்ஸ் ரெடி பண்ண சொல்லிட்டேன். இப்பவாவது அப்பா, தங்கச்சினு பார்க்கமால் உங்களுக்குப் பிடிச்ச வாழ்க்கையை வாழுங்க.”
மயூரா இதை அவனைப் பார்த்துக் கூறாமல் எங்கோ பார்த்துக் கொண்டு கூற சிவ சேகரன் அவள் கன்னத்தைப் பிடித்துத் திருப்பி அவனைப் பார்க்க வைத்தான். அவன் பிடியில் கன்னம் வலிக்க ஆரம்பித்திருந்தது.
“அதை என்னோட கண்ணைப் பார்த்து சொல்லு. நான் இன்னொருத்தி கூட வாழறதில் உனக்கு சம்மதமா?”
மயூரி விழிகளைச் சுழற்றினாள்.
“உன்னால் கற்பனை கூட செய்ய முடியாததை என்னை செய்யச் சொல்லாத. நான் எங்கேயும் போக மாட்டேன். நீ என்னை மன்னிச்சு ஏத்துக்கற வரைக்கும் இங்கேதான்.”
“ஜஸ்ராவைக் காரணம் காட்டி, பணத்தை வச்சு உங்களைக் கல்யாணம் செஞ்சுகிட்டதால் எனக்கு எஸ்கார்ட் வச்சுக்கற ஆம்பளைங்க மாதிரி பீல் ஆகுது. நீங்க என்னை சந்தோஷப்படுத்த வந்த ஜிகுளோ இல்லை.”
“மயூரா…” சிவ சேகரன் கையை ஓங்கி விட்டான்.
“என்ன வார்த்தைடி சொல்ற? திட்டறதுனா என்னைத் திட்டு. அதுக்காக உன்னையே ஏண்டி அசிங்கப்படுத்திக்கற. உன்னோட காதலை ஏண்டி அசிங்கப்படுத்தற. நீ எனக்குக் கிடைச்சது வரம். முதல்ல அது தெரியாமல் தப்புப் பண்ணிட்டேன். என்னை மன்னிச்சுடேன்.”
அவன் கை ஓங்கியது, அவளை ‘டி’ சொல்லி அழைப்பதும் இன்றுதான். அவளை ‘மயூரா.. இல்லை மயூ’ என மட்டுமே அழைப்பான். இன்று அவன் முகமே வேறு போல் இருந்தது.
“நீங்கதான் என்னை மன்னிக்கனும். உங்க வாழ்க்கையில் இன்னொரு பொண்ணு இருக்கானு தெரியாமல் குறுக்க வந்ததுக்கு. உங்க காதல் எப்படினு எனக்குத் தெரியாது. ஆனால் நான் உங்களை எப்போதும் மனசார நேசிக்கிறேன். அதான் உங்களை இந்தப் பந்தத்தில் இருந்து விடுவிக்கறேன்.” எனக் கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறி, அந்த வீட்டை விட்டும் வெளியேறி காஃபி தோட்டத்திற்குள் நடக்க ஆரம்பித்தாள் மயூரா.
***
ஹேமவள்ளி தன்னுடைய அறைக்குச் சென்றிருந்தாள். ராகவன் அவளைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. எப்போதும் போல் இருந்தான். இவளுக்குத்தான் அவனைப் பார்த்ததும் கனவு நினைவுக்கு வந்து நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது. அதனால் உடனே அறைக்குத் திரும்பியிருந்தாள்.
அலுவலகம். மித்ரா எதிரில் இருக்கும் நவீன பலகையில் தெரியும் திட்டத்திற்கான வரைபடத்தையும், விளக்கத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நீள்வட்டமுள்ள அறையில், அவளைப் போல் சிலரும் அமர்ந்திருந்தனர். அவர்கள் குழுமத்தின் முக்கியமான பங்குதாரர்கள் ஆவார்கள்.
ஆனால் மித்ரா குடும்பத்தின் பங்குகள் அறுபது சதவீதம் இருக்க, அவர்கள் குடும்பத்து ஆட்கள்தான் எப்போதும் தலைமையில் இருப்பது. அவர்கள் குழுமத்தின் தலைமைப் பதவியை அன்னை வகிக்க, தலைமை நிர்வாகியாக மித்ரா வீற்றிருக்கிறாள்.
திட்ட வரைபடத்தை விளக்கி முடித்தவுடன் இதுவரை இருட்டாக இருந்த அறை ஒளிர மித்ராவின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.
அவள் வாயிலிருந்து வந்து விழுந்த முதல் வார்த்தை, “ஈஸ் திஸ் தி பெஸ்ட் யூ கேன் டூ?” என்பதுதான்.
எதிரில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் விழிக்க, “அந்த இடத்தோட என்விரான்மெண்ட் அசஸ்மெண்ட் ரிப்போர்ட்டைப் படிச்சீங்களா முதல்ல?” எனப் பேனாவை கையில் சுழற்றியபடி கேட்டாள்.
“மித்ரா அதில் எதுவும் பெரிசா பிராபளம் இல்லையே.”
இளமையின் பாதியை வயது விழுங்கி விட்டதற்கு அடையாளமாக அவர் தலையை வழுக்கை விழுங்கி விட்டிருக்க, ரங்கநாதன் என்ற பங்குதாரர் கேள்வியைக் கேட்டார்.
“இல்லை அங்கிள். அந்த இடத்திற்கு இந்த பில்டிங்க் தாங்காது. ஏர்த் குவேக் பிரோன் கோஸ்டல் ஏரியா. எதாவது பின்னாடி பிரச்சினை வந்தால் நமக்குத்தான் லாஸ். ஒன்னும் வேற இடத்தில் இதை செய்யனும். இல்லை பில்டிங்க் பிளானை மாத்தனும்.” என உறுதியாகக் கூறினாள்.
“ஆனால் இது பிரைம் லெகோசன்.” என இன்னொரு பங்குதாரர் தன்னுடைய கருத்தைக் கூறினார்.
“யெஸ் அங்கிள். ஆனால் சேஃப் கிடையாது. இப்ப சென்னையில் அடிக்கடி ஃபிளட்ஸ் வருது. இன்னும் என்ன இம்பாக்ட் ஆகும்னு சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரை வேற ஒரு லோகசன் பெஸ்ட்.”
அவள் தன்னுடைய கருத்தையும், தான் பார்த்திருக்கும் வேறொரு இடத்தைப் பற்றியும் விளக்கிக் கூறினாள். இறுதியில் பங்குதாரர்கள் அனைவரும் அவள் கூறுவதற்கு ஒத்துக் கொண்டனர்.
ஒரு வழியாக அந்தச் சந்திப்பு முடிந்திருக்க, அடுத்து தான் செல்ல வேண்டிய சிமெண்ட் தொழிற்சாலைக்குச் சென்றவள், அப்படியே வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கும் சென்றிருந்தாள்.
எப்போதும் அவள் அருகில் நிழலாய்த் தொடரும் ராகவன் அலுவலகத்தில் இருக்கும் ஒரு கோப்பை எடுக்கச் சென்றிருக்க, தரிப்பிடத்தில் இருக்கும் மஞ்சள் நிற மலர்கள் நிரம்பிய மரத்தின் அடியில் நடந்தப்படி தன் கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.
அப்போது காலணி சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தவளுக்கு, தன் மோலாடையைக் கையில் பிடித்தப்படி நடந்து வரும் பாரதி தெரிந்தான்.
அந்தக் கண்ணாடி அவனை அப்பாவி போலும், புத்திசாலி போல் இருவிதமாய் தோன்ற வைத்தது. வெண்ணிறச் சட்டை, கருப்பு பேன்ட், கருப்பு கோட் கையில் வைத்திருந்தான்.
“ஹலோ மேம். நீங்க இங்க?”
“ஒருத்தரை மீட் பண்ண வந்தேன்.”
“ஓகே மேம். நானும் உங்க கம்பெனி லாயர் ஆகிட்டேன். ஹேமவள்ளி மேம்தான் ரெபர் பண்ணாங்கனு கேள்விபட்டேன். நானும் முதல்ல வேணாம்னு யோசிச்சேன். ஹெ.ஆர் ஹெட் ஒரு மாற்றமாக இருக்கும்னு சொன்னாரு. அதனால் ஜாயின் பண்ணிட்டேன். இப்ப நாம எல்லாம் ஒரே கம்பெனி எம்பிளாயிஸ். உங்க கார்ட் கொடுங்க. நீங்க எல்லாரும் ஃபிரியா இருக்கும் போது ஒரு டின்னர் போலாம். ஹேமவள்ளி கியூர் ஆகிட்டால் எல்லாரும் சேர்த்து போயிடலாம்.”
அவன் இயல்பாகப் பேசி முடிக்க, மித்ரா இவனுக்குத் தான் யாரென்று தெரியவில்லையோ எனப் பார்த்தாள். அவன் பார்வையில் அவள் மேல் எந்தப் பயமும் இல்லை எனத் தெரிந்தது.
“உங்களுக்கு கம்பெனி சி.இ.ஒ தெரியுமா?”
“பிக்சர் எங்கேயும் இல்லை. இப்ப இண்டர்னிம் சி.இ.ஒ ஒரு லேடினு கேள்விபட்டேன். இதுக்கு முன்னாடி அவங்க பிரதர் சி.இ.ஒவா இருந்துருக்கார். அவங்க பிக்சர் எங்கேயும் இல்லை. மீட் பண்ண வேண்டிய அவசியம் வந்தால் பார்த்துக்கலாம்.”
மித்ராவின் முகத்தில் லேசாக புன்னகை ஒன்று உதித்தது.
“ஓகே. கார்ட் எனக்கு இல்லை. ராகவன், ஹேமாகிட்ட சொல்லுங்க. நானும் ஜாயின் பண்ணிக்குவேன்.” என்றாள்.
அதற்கும் எதிரில் இருந்தவன் முகம் மலர, அவன் மேல் மரத்திலிருந்து ஒரு மஞ்சள் மலர் தோளில் விழுந்தது.
அவன் அதை கவனிக்காமல் இருக்க, மித்ரா இயல்பாகக் கையை நீட்டி அதை எடுத்து விட்டாள்.
“தேங்க்ஸ்.” மீண்டும் அதே முக மலர்ச்சி.
அந்த மொத்தக் குழுமத்தில் வேலை செய்பவர்களில் அவளைத் தோழமையுடன் பார்க்கும் ஒரு முகம் அவளுக்குப் புதிது.
“யது நந்தன் எனக்கு ஒரு ஹெல்ஃப் பண்ணறீங்களா?”
“சொல்லுங்க. என்னால் முடிஞ்சால் செய்யறேன்.”
“நீங்க எப்படி இங்க வந்தீங்க?”
“பைக்.”
“என்னை அப்படி ஹெட் ஆபிஸில் டிராப் பண்ணறீங்களா? என்னோட வண்டி ரிப்பேர்.”
“ஓ.. சுயர். வாங்க.”
“தேங்க்ஸ் அ லாட். இதுக்கு நான் உங்களை ஒரு டைம் டிரீட் கொடுக்கறேன். ஒரு நிமிஷம் ஒரு போன்கால் மட்டும் செஞ்சுட்டு வந்திடேறேன் இஃப் யூ டோண்ட் மைன்ட்.”
“இட்ஸ் ஓகே மேம்.”
மித்ரா கைப்பேசியை எடுத்தவள் ராகவனுக்கு ஒரு செய்தியை அனுப்பினாள். அடுத்து அலைபேசியை எடுத்து யாருக்கோ பேசியவள் மீண்டும் யது நந்தனின் அருகில் வந்து நின்றாள்.
“கிளம்பலாம் யது நந்தன்.”
ஐ.என்.எஸ் விக்ராந்த் வாகனத்தை அவன் உயிர்ப்பிக்க, அவன் பின்னே ஏறி அமர்ந்தாள் மித்ரா.
ராகவன் அங்கிருந்த ஒரு மரத்தின் பின்னே இருந்து வெளியே வந்தவன், மகிழுந்தை எடுத்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர ஆரம்பித்தான்.
தொழிற்சாலை தலைமை அலுவலகத்தில் ஒரு புற நகரில் அமைந்துள்ளதால் கிட்டதட்ட ஒன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். முக்கால் மணி நேரம் அமைதியாய் கழிய, அதற்குப் பின் லேசாக மழைத்தூரல் போட ஆரம்பித்தது.
இடையில் ஒரு சிறிய பேக்கரி வரவும், “மேடம் மழைத்தூரல் இன்னும் அதிகம் ஆகும் போலிருக்கு. இந்த பேக்கரியில் ஒரு டீ சாப்பிட்டு வெயிட் பண்ணலாமா?”
மித்ராவும் தலைக்கவசத்தை அணிந்த தலையை ஆட்ட, இருவரும் வாகனத்தை ஓரம் கட்ட, மித்ரா இறங்கி நடக்க, யது நந்தனும் அவளைப் பின் தொடர்ந்து அங்கிருக்கும் நாற்காலியில் அமர்ந்தனர். அவர்களைப் போல் வேறு சிலரும் மழைக்கு ஒதுங்கி இருந்தனர்.
தலைக்கவசத்தைக் கழற்றி தலைமுடியை அழகாக இருவரும் ஒதுக்கிக் கொள்ள, கடைப் பணியாளன் அவர்கள் அருகில் வந்து நின்று இருப்பனவற்றைக் கூறினான்.
“நீங்க என்ன சாப்பிடறீங்க மேம்? இந்த மாதிரி இடத்தில் சாப்பிட்டு பழக்கம் இருக்கா?”
“அண்ணா ஒரு பிளாக் டீ. அப்படியே அந்த புடிங்க் கேக் கொண்டுவாங்க.”
இவன் பக்கம் பணியாளன் திரும்ப, “எனக்கு ஒரு பால் மட்டும். இரண்டுமே ஸ்பெஷல்.” தனக்கு வேண்டியதைக் கூற கடைப்பணியாளன் அதை சத்தமாகக் கூறியபடி முன்னே சென்றான்.
***
மயூரா தேயிலைத் தோட்டத்தின் சரிவில் நடக்க ஆரம்பித்திருந்தாள். விழிகளில் வழியும் நீரைத் துடைத்தபடி சென்று கொண்டே இருந்தவளின் கால் இடர மலைச் சரிவில் உருள ஆரம்பித்தாள்.
“