அத்தியாயம்-9
இருவரும் மழையை வேடிக்கைப் பார்த்தப்படி துளித்துளியாய் பானங்களைப் பருக, மழை வேகமாக அடித்துக் கொண்டிருந்தது.
“மழை விட எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியலை.”
“விட்ரும் பாரதி சார். வெயிட் பண்ணுவோம்.” என மித்ரா மென்மையாகக் கூறினாள். அவள் குரலில் அப்படி ஒரு இதம் வந்திருந்தது.
அவள் மெதுவாகக் குடித்துக் கொண்டிருந்தாள். இன்னொரு தேநீரும் கூறிவிட, இரட்டை தேநீருடன் மழையை வேடிக்கைப் பார்க்கும் அவளையும் சில நொடிகள் கண்ணெடுக்காமல் பார்த்து வைத்தான் யது நந்தன்.
அரை மணி நேரம் கழிய, வானம் தன் கண்ணீரை நிறுத்திக் கொள்ள இருவரும் எழுந்தனர். நந்தன் முன் சென்று, பணத்தைக் கொடுத்துவிட்டு தன் வாகனத்தில் ஒட்டியிருந்த மழைத்துளிகளை ஒரு துணி கொண்டு துடைத்துக் கொண்டிருந்தான். மித்ரா கூறியும் கேட்கவில்லை.
வாகனம் நிறுத்தி இருந்த இடத்தில் மழை நீர் தேங்கி இருக்க, சிறிது தூரம் உருட்டிக் கொண்டே சென்ற ஏற அவன் விரல்களை சைகையாய்க் காட்ட, மித்ராவும் சரி என தலை அசைத்தாள்.
இருவரும் ஒன்றாக நடந்து செல்ல ஆரம்பிக்கும் போது மித்ராவை நோக்கி வேகமாக ஒரு இருசக்கர வாகனம் வருவதைக் கவனித்த யது நந்தன், அவர்கள் முகத்தை மறைத்திருப்பதையும் கவனித்தான். சட்டென்று மித்ராவை தன் பக்கம் இழுத்து விட, இதை எதிர்பாராத மித்ரா அவன் மார்பில் வந்து மோதினாள்.
வாகனத்தில் வந்த இருவரில் ஒருவன் அதிலிருந்து இறங்கி மித்ராவை நோக்கி வேகமாக ஓடி வர, அவன் கையில் ஏதோ கத்தி போன்ற பொருள் இருந்தது.
வேகமாக வாகனத்தை நிறுத்திய யது நந்தன், அதை இயக்கியும் வைத்தான்.
“மித்ரா பயப்படாமல் இருங்க.”
அருகில் வந்தவன் கத்தியைக் காட்டி, “செயினைக் கழட்டு. இல்லை குத்திடுவேன்.” என மிரட்டினான். மித்ரா எதிரில் முகம் மறைத்திருப்பவனை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உன்னை நான் எங்கேயோப் பார்த்திருக்கேன்.” எனக் கூறிவிட, அவன் இன்னும் கத்தியை அவள் அருகில் வைத்துக் கொண்டு நெருங்க, அடுத்த நொடி யது நந்தன் தூக்கிப் போட்டதில் அவன் கத்தியும், அவனும் கீழே கிடந்தனர்.
மித்ரா நடப்பனவற்றை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அவனைப் பிடிங்க சார். போலீஸில் ஒப்படைச்சிடலாம்.” எனக் கைப்பேசியை எடுத்து அழைக்கப் போக, யது நந்தன் பிடிப்பதற்குள் அவன் எழுந்து ஓடிவிட்டான்.
யது நந்தனும் பின்னால் துரத்த, “யது சார். விடுங்க. நான் நேராகப் போய் கம்பிளையிண்ட் கொடுத்துக்கிறேன்.” என்றான்.
“இல்லை மேம்.”
“நீங்க இங்க வாங்க.”
“ஒரு நிமிஷம் இருங்க.”
உடனே எதிரில் இருந்த கடையில் சென்று, சிசிடிவி பதிவுகளை வாங்கிக் கொண்டு வந்திருந்தான்.
“வாங்க. ஒன்னாப் போய் கம்பிளையண்ட் கொடுத்துட்டு வரலாம்.”
“உங்களுக்கு எதுக்கு சார் சிரமம். நீங்க என்னைக் காப்பாத்துனதே போதும். ஆபிஸ்ல மட்டும் டிராப் பண்ணுங்க.”
“இந்த நிலையில் நீங்க ஆபிஸ்க்குப் போகனுமா?”
“கண்டிப்பா, எந்த டேமேஜூம் எனக்கு இல்லை.” என அவனை முழுமையாக ஆராய்ந்தவளுக்குக் கண்ணில் பட்டது அவனுடைய வெண்ணிறச் சட்டை லேசாகக் கிழிந்திருப்பதோடு, ரத்தமும் கசிந்து கொண்டிருந்தது.
உடனே அவன் அருகில் சென்று கையைப் பிடித்த மித்ரா அவனை சோகத்தோடு நோக்கினாள்.
“என்னால் உங்களுக்கு அடிப்பட்டிருச்சு. வாங்க ஹாஸ்பிட்டல் போலாம்.”
“இது சின்ன ஸ்கிராட்ச் தான். நான் வீட்டில் போய் பார்த்துக்கிறேன்.” பாரதி மறுத்தான்.
“அப்படி எல்லாம் விட முடியாது. நீங்க இங்கேயே இருங்க.” மித்ராவின் விழிகளில் இருந்த துடிப்பை யது நந்தன் பார்த்துக் கொண்டிருந்தான்.
உடனே தாங்கள் சாப்பிட்ட அடுமணையை நோக்கி ஓடியவள், அங்குள்ள உரிமையாளரிடம் பேசி முதலுதவிப் பெட்டியை வாங்கினாள். நல்லவேளை அந்த உரிமையாளர் முதலுதவிப் பெட்டி வைத்திருந்தார்.
தன் வாகனத்தில் லேசாக சாய்ந்து அமர்ந்திருந்தான் யது நந்தன். பெட்டியுடன் அருகே வந்தவள் அவன் கையைப் பிடித்து முதலுதவி செய்து, கட்டுப் போட்ட பின் முதலுதவிப் பெட்டியைத் திருப்பிக் கடையில் கொடுத்துவிட்டான்.
தனக்காக இத்தனை செய்யும் அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் யது நந்தன்.
“தேங்க்ஸ் மித்ரா.”
“உங்களுக்குத்தான் நான் தேங்க்ஸ் சொல்லனும். செயில் ராபரியில் இருந்து நீங்கதான் என்னைக் காப்பாத்தி இருக்கீங்க. ரொம்ப தேங்க்ஸ். வண்டி ஓட்ட முடியுமா? கேப் புக் பண்ணிடலாமா?”
“அதெல்லாம் ஓட்ட முடியும். நீங்க ஏறுங்க.”
மித்ரா வரும் வழியெல்லாம் அவன் கையை அடிக்கடிப் பார்த்துக் கொண்டே வந்தாள். அவள் முகத்தில் தேநீர் குடிக்கும் போது இருந்த மகிழ்ச்சி மறைந்து சோகம் குடி வந்திருந்தது.
அலுவலகம் வரவும், அவன் வாகனத்தில் இருந்து இறங்கிக் கொண்டாள்.
“தேங்க்ஸ் பாரதி சார்.”
“இட்ஸ் ஓகே.” எனப் புன்னகைத்தவன், “எப்ப கம்பிளைண்ட் கொடுக்கலாம்?” என்றான்.
“வொர்க் முடியட்டும். நான் போய்க் கொடுத்துக்கிறேன். நீங்க இன்னிக்கு ரெஸ்ட் எடுங்க. டாக்டரைப் பார்க்கலாமா?” என அக்கறையுடன் விசாரித்தாள்.
“டாக்டர் தேவையில்லை. தானே சரியாகிவிடும். நீங்க தனியாகப் போய்க்குவீங்களா?”
“ராகவன் இருக்கார். கூட்டிட்டுப் போகச் சொல்றேன். எனக்கு லிப்ட் கொடுத்ததுக்கு உங்களுக்கு இப்படி ஒரு காயம். இப்படி ஒன்னு நடந்ததுக்கு ஐம் சாரி.”
“இதில் உங்க தப்பு என்ன இருக்கு? சாரி எல்லாம் வேண்டாம். ஓகே. நான் கிளம்பறேன்.” அவள் அலுவலகத்தினுள் செல்வதைப் பார்த்தப் பின் தன்னுடைய வாகனத்தைக் கிளப்பினான் யது நந்தன்.
அலுவலகப் படிக்கட்டுகளில் ஏறும் போதே ராகவனுக்கு அழைக்க, புளூடூத்தைக் காதில் மாட்டிக் கொண்டாள்.
“மேம் எதுக்குத் தனியாக அவரோட போனீங்க? என்னையும் வர வேண்டாம்னு சொல்லிட்டீங்க?”
“ரிலாக்ஸ் ராகவன். அவன் நான் நினைச்ச ஆள்தானா?”
“அவனேதான் மேம். நீங்க கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஹராஸ்மெண்ட் விஷயத்தில் ஃபையர் பண்ண ஆளு.”
“காட் இட். யது நந்தன் ஈஸ் ஹர்ட். மேக் சுயர் எவ்ரிதிங்க் ஈஸ் ஓகே.”
“யெஸ் மேம்.”
“இன்னிக்கு லேட் நைட் வொர்க் இருக்கு. இதெல்லாம் முடிச்சுட்டு வாங்க.”
“ஓகே மேம்.”
***
அன்றைய இரவு.
பாலாஜி தன் வீட்டில் கட்டிலில் அமர்ந்தப்படியே நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தான். அவனுடைய கைப்பேசியில் அழைப்பொலி வந்ததும் உடனே எடுத்தான்.
“ஒரு விஷயத்தைக் கூட உன்னால் உருப்படியாக செய்ய முடியாதா?”
“இல்..லை.. அங்க வேற ஒருத்தன்..”
“வெட்கமாக இல்லை. பொம்பளைங்களை எல்லாம் ஹாரஸ் பண்ணத் தெரியுது. ஆம்பிளைங்ககிட்ட அடிவாங்க மட்டும்தான் உன்னால் முடியும். அவளுக்கு ஒரு ஸ்கிராட்ச் கூட இல்லை. வேடிக்கைப் பார்த்துகிட்டு ஜாலியாக நின்னா.”
“இன்னொரு தடவை..”
“ஒரு ஆணியும் நீ புடுங்க வேண்டாம். முதல்ல நீ காய்ச்சலில் இருக்கற மாதிரி அந்த ஊசியை எடுத்துப் போட்டுக்கோ. அப்பத்தான் யாருக்கும் சந்தேகம் வராது. நீதான் அங்க இருந்தனு எந்த எவிடென்ஸும் இல்லை. அதனால் நீயும் உளறி வைக்காத. உள்ளப் போற வரையும் சைலண்டா இரு.”
“சரி.”
அழைப்புத் துண்டிக்கப்பட்டது.
***
மலைச் சரிவில் மழை பெய்தால் வழியும் நீர் போல், மலைச் சரிவில் நடந்து கொண்டிருந்த மயூராவின் மனதிலும் துக்கம் பெருகி வழிந்து கொண்டே இருந்தது. தன் கணவனின் இதழ்களின் வெம்மை இன்னும் அவள் முகத்தில் இருப்பது போன்றே இருந்தது.
‘அவர் தொட்டதும் இப்படி உருகி போயிடற நீ.’ என தன் மேல் எழுந்த கோபமும் ஒரு காரணம். அவன் மேல் அப்படி காதல் எதற்கு? முதன் முறையாக அவனைக் காதலித்தற்கு தன்னைத் தானே கடிந்து கொண்டாள். இந்தக் காதல் அவளைப் பலவீனப்படுத்தி விடுகிறது எனத் தோன்றியது. குழப்பம், சோகம், கோபம், தாபம் என அனைத்தும் கலந்த மன நிலை அது. மலைச் சரிவில் நடந்துக் கொண்டிருந்தவளின் கவனம் சிதறியது. வழக்கமாக இந்த மாதிரி தேநீர், காஃபித் தோட்டங்களில் பாம்புகள் இருப்பது இயல்பு.
பசுமை இருந்தால் பாம்பும் இருக்குமே. கவனம் எதுவுமின்றி நடந்து கொண்டிருந்தவளுக்கு பாம்பின் சத்தம் கேட்கவே பார்த்தாள். தனக்கு மிக அருகில் செடியின் மீது படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பாம்பைப் பார்த்ததும் பயந்து பின் வாங்கினாள் மயூரா.
பாம்பும் கொஞ்சம் முன்னே அசைய நன்றாக வேகமாக நகர, காலணியை அந்த நேரம் பார்த்து சேற்றில் வைக்க, அது பிடி கொடுக்காமல் நழுவ, தன் நிலை வழுவி மலைச் சரிவில் உருள ஆரம்பித்தாள் மயூரா.
பயத்தில் விழிகளை மூடியவளுக்கு மொத்தமும் இருளாகிப் போனது.
விழிகளைத் திறந்தாள் மயூரா.
உடல் முழுக்க வலி பின்னி எடுத்தது. எதிரில் மருத்துவர் ஒருவர் அமர்ந்திருந்தார். எழுந்து அமர முயற்சித்தவளுக்குத் தங்கம்மா உதவ, மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.
அவள் கண் முன் விரல்களைக் காட்டி எண்களைக் கூறச் சொல்லவும் சரியாகக் கூறினாள்.
“மயூரா நீங்க மலைச்சரிவில் விழுந்துட்டீங்க. உங்களுக்கு ஏற்கனவே அடிபட்ட கையில் மறுபடியும் அடிபட்டிருக்கு. அத்தோட உங்களுக்கு இன்னொரு சந்தோஷமான விஷயமும் இருக்கு.”
இதைக் கேட்டதும் மயூராவின் முகம் முற்றிலும் மாறியது.
“டாக்டர் எனக்குத் தூங்கனும்.”
“சரி ரெஸ்ட் எடுங்க. பெயின் ரீலிவர் கொடுக்க முடியாது.”
“நீங்க பெயின் ரீலிவர் கொடுத்தாலும் சில வலிகளைத் தடுக்க முடியாது. தேங்க்ஸ்.” என்றவள் அப்படியே சிலை போல் அமர்ந்திருக்க அப்போது உள்ளே நுழைந்தான் சிவ சேகரன்.
அவள் அடிபடாத கையைப் பிடித்தவன், “என் மேல் இருக்கற கோபத்தை எதுக்கு உன் மேல் காட்டிக்கற. நான்தான் இங்க இருக்கேன்ல. என் மேல் காட்டுடி.” என்றான்.
“மறுபடியும் நமக்கு ஒரு பேபி. கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு தெரியுமா?”
“ஆனால் எனக்கு இல்லை. நான் இந்தக் குழந்தையை அபார்ட் பண்ணப் போறேன்.” சுரத்தின்றி ஒலித்த குரலில் சிவசேகரின் மொத்த உடலும் அதிர்ந்தது.
“என்ன மயூ பேசற?”
“ஆமா இந்தக் குழந்தையும் நீங்களும் எனக்குத் தேவை இல்லை. இந்தக் குழந்தையை சாக்கு காட்டி உங்களை என்னோட லைஃபில் வச்சுக்க விருப்பமில்லை. அதோட அப்பா இல்லாமல் இந்தக் குழந்தை நானும் எங்க அண்ணாவும் வளர்ந்த மாதிரி வளர வேண்டாம்.” என உறுதியுடன் கூறினாள்.
அவள் இரு
கன்னங்களையும் தாங்கிப் பிடித்த சிவசேகரன் அவள் விழிகளோடு தன் விழிகளைக் கலந்தான்.
“மயூரா நான் உன்கூடதான் இருக்கப் போறேன். அதுக்கு பேபி ரீசன் இல்லை. உன் மேல் இருக்கற காதல் மட்டும்தான்.”
“இதெல்லாம் நம்ப நான் பழைய மயூரா இல்லை. நீங்க சொல்ற எதையும் அறிவு ஏத்துக்க மாட்டீங்குது. நான் இந்த பேபியை வச்சு உங்களை என் கூட வச்சுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மொழிக்கே நீங்க, ‘தெரியாமல் பேபி ஆகிடுச்சு. ரெஸ்பான்சிபிளாக இருக்க வேண்டிய கட்டாயம்னு. நம்ம சொசைட்டியில் இருக்கற மத்த ஆளுங்க மாதிரி இனி மயூரா கூடதான் வாழ்க்கைனு’ எழுதி இருந்தீங்க. நீங்க அவ கூட இருந்ததை கூட என்னை அந்த வார்த்தை அனு அனுவாகக் கொன்னுட்டு இருக்க. இப்ப இந்த பேபியைக் காரணம் காட்டி நீங்க என் கூட இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு அப்படி மொழிதான் வேணும்னா அவளைக் கூட நான் தந்திடறேன். தினமும் அவளைப் பார்க்க மட்டும் பர்மிஷன் தந்தால் போதும்.”
அந்த வார்த்தையில் சிவ சேகரனின் சர்வமும் அதிர்ந்தது. மெத்தையில் அமர்ந்திருப்பவளைப் அப்படியே அணைத்துக் கொண்டான்.
“மொழி நம்ம பொண்ணுடி. நான் எப்படி அவளைத் தனியாக வளர்க்க முடியும்? நாம இரண்டு பேரும் சேர்ந்து வளர்க்கறதுதான் அவளுக்கு நல்லது.”
“ஏன் மாமா ஜஸ்ராவை வளர்க்கலை? அப்படித்தான். நீங்க இரண்டு பேரும் சேர்ந்து ஜஸ்ராவை நல்லபடியாக வளர்த்து இருக்கீங்க. ஹான் ஜஸ்ராவுக்கு எப்படியாவது பேசி டைவர்ஸ் வாங்கித் தந்திடறேன். நீங்க கவலைப்பட வேண்டாம். அண்ணா ஏதோ அவசரப்பட்டுட்டாரு.”
பேசும் போதே அவனை விலக்க முயன்றாலும், அவன் உடலில் வெம்மை அவளுக்கு ஆறுதல் அளிப்பது போலிருந்தது. மனமும், உடலும் அன்புக்கு ஏங்கியது.
ஆனாலும் மறுநொடியே அந்த டைரியில் இருப்பவை எல்லாம் மனதில் புகுந்து அவளை அலைக்கழிக்க ஆரம்பித்தன.
மீண்டும் விழிகளில் கண்ணீர் வழிந்து அவன் சட்டையை நனைக்க ஆரம்பித்தது.
“அழாதடி. இந்த நேரத்தில் கண்டதையும் யோசிக்கறது நல்லது இல்லை. உனக்கு எந்தக் காலத்திலும் டைவர்ஸ் கொடுக்கமாட்டேன். மறந்திடு. அதே மாதிரி உங்க அண்ணனும் என் தங்கச்சிக்கு டைவர்ஸ் கொடுக்கமாட்டார். அவரு அவளை நல்லாப் பார்த்துப்பாருனு எனக்கு நம்பிக்கை இருக்கு.”
***
மணி பத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் போது, மித்ரா, யதுநந்தன் மற்றும் ராகவன் மூவரும் காவல் நிலையத்தில் இருந்து வெளியில் வந்தனர். மித்ரா புகாரை யது நந்தன் கூறியபடி எழுதிக் கொடுத்திருந்தாள்.
“தேங்க்ஸ் பாரதி.” ராகவன் கை குலுக்கினான்.
“நீங்க இரண்டு பேரும் வொர்க் பிரண்ட்ஸா? இல்லை முன்னாடியே தெரியுமா?”
“எனக்கு ராகவன் அண்ணாவை சைல்ட்குட்டில் இருந்தே தெரியும். என்னோட அண்ணாவுக்கு பிரண்ட். அப்புறம் இரண்டு பேரும் ஓரே ஆபிஸ். அண்ணா கூட இல்லை. சோ இவருதான் பார்த்துக்கிறார்.”
ஒரு கண நொடி மித்ராவின் முகத்தில் தோன்றிய சோகத்தை ஆடவர் இருவருமே கவனித்து இருந்தனர்.
“ஓகே. எனக்கு இப்ப ஒரு வொர்க் இருக்கு. நான் முன்னாடி கிளம்பறேன்.”
“நான் மித்ராவை வீட்டில் விட்டறேன்.” என ராகவன் கூறினான்.
மூவரும் தலை அசைத்து விடை பெற்றனர்.
ராகவனின் மகிழுந்தில் மித்ரா ஏறுவது வரை பார்த்த யது நந்தன் தானும் தன் இரு சக்கர வாகனத்தில் கிளம்பினான்.
“மேம் நீங்க பாரதிகிட்ட ரொம்ப சீக்கிரம் குளோஸ் ஆன மாதிரி இருக்கு.”
“ம்ம்ம். கரக்ட்தான்.”
“இருந்தாலும்..”
மித்ரா தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.
ராகவன் அமைதியாய் வாகனத்தைச் செலுத்த ஆரம்பித்தான்.
அன்றைய இரவும், ஹேமாவுடன் சேர்ந்து ராகவன் வேலை செய்ய வேண்டும். அவள் நீள் விரிக்கையில் பதட்டத்துடன் அமர்ந்திருந்தாள். ராகவன் அருகில் வந்தாலே அவள் இதயம் எகிறிக் குதித்துக் கொண்டிருந்தது. ராகவன் தன்னுடைய மடிக்கணினியுடன் அறைக்குள் நுழைந்தான்.
-இறங்கும்..