• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடரும்.... (இறுதிப் பாகம்)

Saunthu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Sep 20, 2021
52
16
8
Jaffna, Sri Lanka
தன்முன்னே பூங்கொத்தை நீட்டி, தான் இதுவரை கேட்க வேண்டுமெனத் துடித்த வார்த்தைகளைக் கூறியவளை.... கட்டுக்கடங்காக் காதலுடன் பார்த்த மித்ரன், பூங்கொத்துடன் சேர்த்து அவள் கைகளையும் பற்றிக் கொண்டான்.

'அப்போ உனக்கு என்மேல கோபமில்லையா கண்ணம்மா?'

'எதுக்குக் கோபம்?'

'நான் நினைச்சன், அன்னைக்கு நான் உன்னைப்பாதில விட்டுப் போய்ட்டன்ல? அதுதான் உனக்குக் கோபம். அதனால தான் இந்த ஒரு மாசமா என்கூடக் கதைக்கலனு.'

'என்ன மித்து சொல்ற? எப்போ நீ என்னை விட்டுப்போன?'

'ஆரவ்வா இருந்தப்போ, காவ்யா வீட்டுக்குப் போய்ட்டு திரும்பி வந்ததுக்கப்புறம் உன்கிட்ட ஒண்ணுமே சொல்லாமப் போனனே..... அதுதான் கோபம்னு நினைச்சன். அதோட சாமியார் சொன்ன மாதிரி எங்க என்கிட்ட வந்து... உன்னை அகரன் கூடச் சேர்த்துவைக்கச் சொல்லிடுவியோனு பயம் ஒருபக்கம். என்னதான் உன்னை விட்டுப் பிரியுறன், விவாகரத்துத் தர்றன்னு சொல்லிட்டாலும்... நீ இல்லாம ஒரு வாழ்க்கை என்னால நினைக்கக் கூட முடியல. சாரி ஆரா.'

'ச்சு. மித்து என்ன இது கோயில்ல வச்சு விவாகரத்து அது இதுனு? நான் நினைச்சன் உங்களுக்கு என்மேல ஏதோ கோபமாக்கும்னு.'

'எதுக்கு?'

'அது... முதல்ல உங்க எல்லாருக்குமே நான் தானே பிரச்சினையா இருந்திருக்கன். நான் மட்டும் இல்லாம இருந்திருந்தா.... எத்தனை பேரோட வாழ்க்கை நல்லா இருந்திருக்கும். அப்புறம் உங்ககிட்ட இருந்து விலகணும்னு நான் எப்பவுமே நினைச்சதில்லை. ஆரம்பத்தில அகரனைப் பிரிஞ்சு வரும்போது சத்தியமாப் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருந்திச்சு. அப்போ கூடப் பேசாமச் செத்திடுவம்னு தோணிச்சே தவிர, நீங்க கட்டின இந்தத் தாலியைக் கழட்டணும்னு கனவில கூட நினைக்கல. நீங்கதான் என் புருஷன்னுதான் நினைச்சிட்டிருந்தன். ஏன் மித்து, நாம காதலிக்கிறவன் கிடைக்கலனாலும்.... இப்பிடி ஒரு புருஷன் கிடைப்பான்னு தெரிஞ்சா, யாருமே தேவையில்லாத முடிவு எடுக்க மாட்டாங்கல காவ்யா மாதிரி? அப்புறம் நம்ம பொண்ணும் நானும் கூட சேர்ந்திட்டாேம். அதை சொல்ல நீ விட்டாத் தானே? வாழ்க்கைலயே நீ எனக்குத் தந்த மிகப்பெரிய கஷ்டம், அந்த "டிவோஸ்" என்கிற வார்த்தைதான். எவ்ளோ வலிச்சுது தெரியுமா எனக்கு?'

'ஓஓ சாரிடா. நான் தான் இதுவரை உன்னைப் புரொப்போஸ் பண்ணிருக்கன். நீ ரெஸ்பொன்ஸே பண்ணல. அதோட ஒரு தடவை.... நீயே சொன்னியா டிவோஸ் தாறன்; உங்களுக்குப் பிடிச்சவங்க கூட வாழுங்கனு. அப்போ நான் நினைச்சன் என்கிட்ட இருந்து நீயும் அதையேதான் எதிர்பாக்குறனு. என்கூடவே இருந்து கஷ்டப்படுறியோனு நினைச்சுத்தான் கவலையாப் போச்சு. அதுதான் உங்க வாழ்க்கை சந்தோசமா இருக்கட்டுமேனு அப்பிடிக்கேட்டன்.'

'நல்லாக் கேட்ட போ. சாமியார்கூட பர்ஸ்ட் அகரன் கூட சேர்த்து வைக்கலாம்னு சொல்லிட்டாரா? ஆராவுக்கு அப்பிடி அழுகை கோபம் எல்லாம் வந்திச்சு. அப்புறம் நானாக் கேட்டா மட்டும்தான் நீ அதுக்கு முயற்சி பண்ணணும்னு சொன்னதும்தான் உயிரே வந்திச்சு.'

அவள் கைகளில் தஞ்சம் புகுந்திருந்த பூங்கொத்தை வாங்கித் தன்கைகளுள் அடக்கியவன், ஒரு கையால் அவளைத்தன்புறம் இழுத்து அவளின் நெற்றி வகிட்டில் முதல்முறை தன் முத்த முத்திரையைப் பதிக்க, அந்தி வானமெனச் சிவந்து நின்றாள் பெண்ணவள்.

'ஆரா'

'ம்ம்'

'ஆராமா'

'ம்ம்'

'ஆராக்குட்டி'

'ம்ம்'

'ஆராச் செல்லம்'

'என்னடா?'

'என்னடி புருஷன்கிட்ட எகிர்ற?'

'சும்மா ஆராமா ஆட்டாமா எண்டுகொண்டு'

'ஹே அது ரொமான்ஸ்'

'🙄🙄'

'முழிக்காதடி முட்டைக்கண்ணி. உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்.'

'என்னனு கேட்டாத்தான் சொல்லுவியா? சொல்லுடா லூசு.'

'அப்பிடி மரியாதையாக் கேட்டாச் சொல்லிட்டுப் போறன். நம்ம அகரனுக்கு திருமணம் நிச்சயமாகப் போகுது.'

'நிஜம்மாவா' விழிவிரித்துக் கேட்டவளைப்பார்த்து, ஒரு நிமிடம் தன்னையே மறந்தவன்.... அவள் மூக்கோடு மூக்கை உரசி "அழகி" என்றான்.

பெண்ணவளுக்கே உரித்தான நாணம் மேலோங்க, 'மித்து பிளீஸ்' அழகிய சிரிப்பினூடே கொஞ்சலாக வந்தது வார்த்தை.

'அப்போ நீ மாமாவை ஒழுங்கா இருக்கவிடு'

'நான் என்ன பண்ணேன்?'

'சும்மா சும்மா முழியைப் பிரட்டாத... எனக்கு என்னவோ மாதிரி இருக்கு.'

'ஏன் மித்து, ஊர் உலகத்தில எல்லா ஹஸ்பண்ட்டும் தங்களோட மனைவியை.... நீ என்னை லவ் பண்ற மாதிரி லவ் பண்ணா நல்லாருக்கும்ல?'

'அப்போ உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?'

'பிடிக்காமலாடா லவ் யூ சொன்னன் மக்குப் புருஷா. சரி சொல்லு அகரனுக்கு யாரை நிச்சயம் பண்றாங்க?'

'அகரனுக்கு பர்ஸ்ட் டைம் லவ் போய்ட்டிருக்கும்போதே அவனை ஒரு பொண்ணு ஒருதலையா விரும்பிட்டிருந்திச்சு.'

'ஆமா, கார்குழலி.'

'அவங்களைத்தான். லவ்வோட வேதனை தெரிஞ்சதாலதான் ஒத்துக்கிறான்னு நினைச்சன். ஆனா அவனுக்கு அந்தப் பொண்ணையும் பிடிச்சிருக்கு. அதனால நிச்சயம் பண்ணப் போறாங்க. அதை உன்கிட்ட சொல்ல வரும்போதுதான்.... ஒரு சந்தோசத்தில ஹக் பண்ணிட்டன். சாரி ஆரா. இப்போ உன்னை அணைச்சிருக்கும்போது எனக்கு மட்டுமே சொந்தமானவனு தோணுது. ஆனா அப்போ நீ எனக்கு அந்த உரிமையைத் தந்திருக்கல. என்னோட தப்புத்தான்.'

'இல்ல மித்து. நான் உன்கிட்ட வெளிப்படையா சொல்லலனாலும் உன்னை விரும்பிற மாதிரித்தான் உன்கிட்ட நடந்துக்கிட்டன். அதனால தானே நீ அந்த உரிமையை என்கிட்ட எடுத்துக்கிட்ட. ஆனா நானும் அப்போ இருந்த நிலைல கத்திட்டன். சாரிடா. எவ்வளவு தடவ உன்னைக் கஷ்டப்படுத்தியிருக்கன்.'

'அதுக்குத் தானே வட்டியும் முதலுமா உன்கிட்ட வசூலிக்கப் போறேன், அவளது முகத்தை வருடி, கண்ணடித்துச் சொன்னவனின் மார்பில் செல்லமாய்க் குத்தினாள் ஆதிரா.'

பின்னர் இருவரும் மனதுருகி அம்மனைத்தரிசித்து விட்டு வீடு திரும்ப, அங்கே அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தான் அகரன். சற்று இளைத்திருந்தான் போலும். ஆனாலும் அழகாக இருந்தான். அவனைக் கண்டதும் என்ன செய்வதெனப் புரியவில்லை ஆராவுக்கு, மெல்ல அடியெடுத்து அவனை நோக்கி வந்தாள்.

'எப்பிடி இருக்க ஆரா?' சந்தோசமாவே கேட்டான் அகரன்.

'ரொம்ப நல்லாருக்கேன்.'

'நீ எப்பிடி இருக்க?'

'சமீப காலமா ரொம்பச் சந்தோசமாயிருக்கேன். வர்ற வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தம் வச்சிருக்கோம் ஆரா. என்னோட அனுபவத்தில சொல்றன். காதலிச்சவங்க கிடைக்கலனு சாகிறதெல்லாம் முட்டாள்தனம். ஒரு வேளை அன்னைக்கு நீ இல்லனு நான் ஏதாவது பண்ணிக்கிட்டிருந்தா, என்னை நேசிக்கிறவங்க எவ்வளவு வேதனைப் பட்டிருப்பாங்க? இப்பிடிப்பட்ட ஒரு வாழ்க்கை எனக்கு அமைஞ்சும் இருந்திருக்காது. நம்மள நேசிக்கிறவங்களைச் சுத்தி நாம இருந்தா வாழ்க்கை ரொம்ப அழகாயிருக்கும் ஆரா. மித்து ரொம்ப நல்லவன். நீ நல்லாப் பாத்துப்பனு எனக்கு நம்பிக்கை இருக்கு. இன்னும் நிறையப் பேரை இன்வைட் பண்ணணும், நான் கிளம்புறன். நீங்க ரெண்டுபேரும், பூரணிமா-சந்திரனப்பா ரெண்டு பேரையும் கூட்டிட்டு வரணும். ரொம்ப முக்கியமா அந்தக் குட்டி வாயாடியக் கூட்டிட்டு வரணும். என்கிட்ட மன்னிப்புக் கேக்கிறன்னு கிஸ் பண்ணியே கன்னத்தைச் சிவக்க வச்சிட்டா. வந்து பத்து நிமிசமாத்தான் அவங்க கூட இருந்தன். ஏதோ நிறைய காலமாப் பழகின உணர்வு. மறக்காம வந்திடுங்க எல்லாரும்' சொல்லிவிட்டு புறப்படத் தயாரானவனை மறித்து, கட்டாயப்படுத்தி, உணவுண்ணச் செய்துதான் அனுப்பினர் மித்ரன் தம்பதியினர்.

நேற்று-இன்று-நாளை என மெதுவாகக் கடந்து அந்த வெள்ளிக்கிழமையும் வந்து சேர்ந்தது. அவளது பிறந்தநாள் பரிசாக வந்த பிங்க் நிற சாரியில் அழகுமயிலாக வந்து நின்றவளை இமைக்க மறந்து பார்த்தான் மித்ரன். அவனருகே வந்தவள் மெல்லக் காதில் கிசுகிசுத்தாள், 'இந்த டிரெஸ்ல செம்மயா இருக்க மை டியர் வெட்டர் ஹாஃப்.' அந்த வார்த்தைகளில் ஸ்தம்பித்து நின்றவனை நிஜ உலகிற்கு வரவழைத்தது பூரணியின் குரல். 'ஏம்பா கிளம்பலாமா?

'கிளம்பலாமே' என்றவன், ஆராவைக் கூப்பிடத் திரும்பும்போதுதான் கவனித்தான்.... அவனது செல்ல மகள் ரிஷ்வியை. தாய் தந்தையின் உடையின் நிறத்திற்கேற்பவே பாட்டி புரொக் போட்டு குட்டித்தேவதையாக வந்து நின்றவளைக் கண்டவன், ' ஆரா, குட்டிமாக்குக் கன்னத்தில பொட்டு வச்சுவிடு, திருஷ்டி படப்போகுது' என்றான். ஆனால் திருஷ்டிக்கென வைத்த பொட்டு அவளழகை இன்னும் மெருகூட்டிக் காட்டியது.

ஆடம்பரமான அந்த ஹோட்டலில் நின்றிருந்த காரிலிருந்து இறங்கினர் நம் ஐவரும். ஹோட்டலில் பணக்காரத்தன்மை அப்பட்டமாகத் தெரிந்தது. நிச்சயதார்த்தத்திற்கு மட்டும் இப்படி ஒரு ஏற்பாடு. கல்யாணம், எல்லோர்ககும் வசதியாகக் கோயிலில் வைகக வேண்டுமென்பதுதான் அகரனின் எண்ணம். கோலாகலமாக ஆரம்பித்த விழாவில், அகரனருகே நின்றிருந்த பெண்ணைச் சந்தோசமாகப் பார்த்தபடி நின்றிருந்தாள் ஆரா. என்றோ ஒருநாள் அவளுக்கென இருந்த ஸ்தானம். இன்று இன்னொருவளுக்கென; என்றோ ஒரு நாள் இவளருகே அகரனுக்கென இருந்த ஸ்தானம்; இன்று மித்ரனுக்கென. வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானதென எண்ணி வியந்து கொண்டாள் ஆரா.
அன்றைய நிகழ்வு இனிதே முடிந்ததும், அகரனிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டனர் மித்ரன் மற்றும் பூரணி குடும்பத்தினர். மித்ரன் மட்டும் அடிக்கடி சென்று அகரனுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருவதாக ஏற்பாடு.

பூரணியையும் சந்திரனையும் அவர்கள் வீட்டில் இறக்கிவிட, குழந்தை என்ன நினைத்ததோ.... அன்று அவர்களிடம்தான் தங்குவேனென அடம்பிடிக்க, வேறு வழியின்றி பூரணிமாவிடம் அவளை விட்டுவிட்டுச் சென்றனர் ஆராவும் மித்ரனும். தமது வீட்டின் வாசலில் காரை நிறுத்தியதும், முயல்குட்டியெனத் துள்ளியோடியவளின் கரம் பிடித்து நிறுத்தியவன் கேட்டான். 'சந்தோசமா இருக்கியா பட்டு?'

'ரொம்ம்ம்ம்பபபபப'

அவளின் விரல்களிடையே தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டவன் மிக மிக மென்மையாக அவளை அணைத்து, அவளின் பிறை நெற்றியில் முத்தமிட்டான். அவனின் கண்கள் என்ன கதை பேசியதோ, அதற்கு மருதாணியாய் சிவந்த முகத்துடன் அவளது கண்கள் சம்மதம்தர, இனிமையான தாம்பத்யம் ஒன்று அங்கே இனிதே நடந்தேறியது. முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆசிர்வதிக்க, மேன்மையான இறையருளோடு, தனது இத்தனை ஜென்மத் தண்டனைகளையும் தாண்டும் விதமாக.... ஆன்மாவாக அலையும் இரு உயிர்களையும் ஓருயிராக்கித் தனது மணிவயிற்றில் தாங்கிக் கொண்டாள் ஆரா. அன்றிலிருந்து ஒன்பதரை மாதங்கள் கழித்து ஒரு நன்னாளில் அழகாய் மண்ணில் உதித்தது ஆரா-மித்துவின் இளரத்தம். இறையருளால் தம் பிள்ளை அம்பிகா மற்றும் ரிஷ்வியின் கலவை என உணர்ந்தவர்கள், எல்லாத் துன்பத்தையும் நோக்க மூலகாரணமான அந்தப் பெயரை தம் பிள்ளைக்கு இட்டு தம் பாவத்தைப் போக்கிக் கொண்டனர். இரு மாதங்கள் முன்னரே திருமணமான நிலையில் அகரன் மற்றும் கார்குழலி இணைந்திருக்க, இனியன், வாணி, அபி, அபியின் தந்தை தாய், பூரணி, சந்திரன் என அத்தனை உறவுகளும் காவியன்பட்டில் மித்ரன் வீட்டில் குழுமியிருக்க, அனைவர் கையிலும் குட்டி இளவரசியாக உலா வந்தாள் நம் புதிய "காவ்யா"

💞💞 முற்றும் 💞💞

(ஆரம்பத்திலேயே கூறியது போல், இது என் முதல் கற்பனைக்கதை சகோஸ். தொடர்ந்து இந்தக் கதையில் பயணித்து ஆதரவளித்த அத்தனை உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல ☺️🙏)