ஆதிரா தன்னிலைக்கு வரச் சற்று நேரமெடுத்தது. அவளுக்கும் மித்ரனைப் பிடிக்காது என்றில்லை. அகரன், ஆதிராவைப் பற்றி மித்ரனிடம் கூறியதை விட... மித்ரனைப் பற்றி ஆதிராவிடம் கூறியது அதிகம். அதனால் அவளுக்கும் மித்ரன் மேல் நல்ல அபிப்பிராயம் உண்டு. இப்போது கூட அவளது கோபம் மித்ரன் மேல் இல்லை. தனது தலைவிதியில் தான். ஆனாலும் சில பல சந்தர்ப்பங்களில் அவளது கோபம் மித்ரன் மேலும் வெளிப்பட்டதுண்டு. அவன் தன்னைக் காதலிக்கும் அளவுக்கு எள்ளளவும் அவள் நடந்து கொள்ளவில்லை. திருமணமானதில் இருந்து இன்றுவரை அவள் சிரிப்பை மித்ரனுக்காக என்றுமே உதிர்த்ததில்லை. மாறாக எரிந்து விழுந்தது தான் அதிகம். அப்படி இருந்தும் அவன் தன்னைக் காதலிக்கிறான் என்பதை எண்ணி அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை அவளுக்கு. சிறிது நேரம் நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவ்விடம் விட்டு அகன்றாள்.
இனியன் வீடு.
'அம்மா'
'சொல்லுப்பா'
'ஆரா இங்க இருந்து போனதில இருந்து நாம அவ குரலைக் கேக்கவே இல்ல. ஃபோன் பண்ணினாலும் அவ எடுக்கிறதில்லை. மித்ரன் மட்டும் தான் எங்க கூட பேசுவார். ஆதிராக்கு அப்பிடி என்னம்மா நம்ம மேல கோபம்? நாம வேணும்னா ஒரு தடவ அவளைப் போய் பாத்திட்டு வந்திடலாமா?
'எனக்கு மட்டும் நான் பெத்த பொண்ணப் பாக்க ஆசையில்லயாப்பா? அன்னைக்கு கொஞ்சம் கை மீறி நடந்திட்டன் தான். அவளுக்கு அது தான் ரொம்பக் கோபமா இருக்கும். நாம எல்லாம் அந்தக் குட்டிப் பொண்ணுக்கு தான் ஆதரவுனு நினைச்சிருப்பா. தன்னோட வாழ்க்கை மாறிப் போனதால கோபப்படுவா. எங்களால பாேக முடிஞ்சாக் கண்டிப்பாப் போவம்பா. ஆனா நாம போறதை அந்தக் குட்டிப் பொண்ணு விரும்புமா? கோபத்தில யாரயாவது ஏதாவது பண்ணிடுச்சுனா..?'
'இல்லம்மா. அந்தக் குழந்தை அப்பிடிப்பட்டதாத் தோணல எனக்கு. நம்ம ஆரா மேல உயிரா இருக்கும்மா. அது யாரோட உயிரையும் காவு வாங்கும்னு தோணல எனக்கு. நாம புறப்பட்டுப் போவோம். இடேல ஏதும் தடங்கல் வந்தாத் திரும்பிடுவோம்.'
'சரிப்பா. நீ சொல்றதும் சரியாத் தான் இருக்கு. நாம இன்னைக்குப் பின்னேரமே புறப்படுவமா?'
'இல்லம்மா... அது ரொம்பத் தூரத்தில இருக்கிற இடம். நாளைக்குக் காலைல புறப்பட்டம்னா பின்னேரம் போல போய்ச் சேர வசதியா இருக்கும்.'
'சரிப்பா. நான் எல்லாம் ரெடி பண்ணி வைக்கிறன். நாளைக்கு வேளைக்கே புறப்படுவோம்.'
'ம்ம்'
காவியன்பட்டு
இருள் கவிந்து கொண்டிருந்த நேரம். தங்களது அறையில் இருந்தனர் மித்ரனும் ஆதிராவும். இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. தத்தம் வேலையிலேயே குறியாயிருந்தவர்களை சாப்பிட வருமாறு அழைத்தார் பூரணி (அவ்வீட்டுப் பெண்மணி). அடுத்த ஐந்து நிமிடங்களில் குடும்பமே டைனிங் ஹாலில் கூடி இருந்தது. சாப்பிட்டு விட்டு அன்றாடமான கலந்துரையாடல்களுடனும் செல்லச் சண்டைகளுடனும் சிறிது நேரத்தை செலவழித்த பின் எழப்பாேனவர்களை இடைநிறுத்தினார் பூரணி.
'கொஞ்ச நேரம் இருங்கப்பா. நானும் அப்பாவும் உங்ககிட்டக் கொஞ்சம் பேசணும். நீங்க எங்களை எப்பிடி நினைக்கிறீங்கனு தெரியல எனக்கு. ஆனா நாங்க ரெண்டு பேரும் உங்களை எங்க சொந்தப் பிள்ளைங்களாத் தான் பாக்குறோம். எங்க கருத்தை நீங்க ஏத்துக்கிறீங்களோ இல்லையோ கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.' என்று இடைநிறுத்த.... பூரணியின் கணவர் சந்திரன் தொடர்ந்தார்.
'நீங்க ரெண்டு பேரும் அரேஞ் மரேஜா (arrange marriage)?
இந்தக் கேள்வியில் திடுக்கிட்டுப்போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் ஆராவும் மித்ரனும். பின்னே அது கட்டாயத் திருமணமல்லவா? எந்த வகையில் சேர்ப்பது?
'அரேஞ் மரேஜ் அப்பா' மித்ரன் சொன்னான்.
'எனக்குத் தெரியலப்பா... உங்ககிட்ட சொல்லணும்னு தோணுது அதனால சொல்றன். நீங்க ரெண்டு பேரும் ஒற்றுமையா சந்தோசமா இருக்கீங்கனு தோணல. உங்களுக்குள்ள நிறையப் பிரச்சினை இருக்கலாம். அதைத் தூக்கி வச்சுக்கிட்டு சண்டை பிடிச்சிட்டிருந்தா புருஷன் பொண்டாட்டிக்குள்ள விரிசல் வந்திடும்மா. அப்புறம் ஒருத்தர் இல்லாம ஒருத்தர் வாழ முடியும்கிற எண்ணம் வந்திடும். அப்பிடி மட்டும் ஒரு எண்ணம் வந்திடவே கூடாதும்மா.
கணவன் மனைவிக்குள்ள சண்டை வர்றது வழமை தான். ஆனா அதுவே வாழ்க்கை ஆகிடக்கூடாது. வந்த அன்னைக்கே உங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஏதோ சரியில்லைனு தோணிச்சு. ஆனா வந்த உடனே உங்ககிட்ட இப்பிடி சொல்ற அளவுக்கு எங்க ரிலேஷன்ஷிப் இருக்கல.... அது மட்டுமில்லாம போகப் போக சரியாகிடும்னு நினைச்சன். நீங்க ரெண்டு பேரும் என்னதான் காட்டிக்குடுக்கக் கூடாதுனு சந்தோசமா இருக்கிற மாதிரி நடந்துக்கிட்டாலும்.... அதைத் தாண்டின ஒரு வெறுமை, கவலை உங்ககிட்டத் தெரியுது. உங்களுக்குள்ள என்ன பிரச்சினைனு எனக்குத் தெரியல. அதை எங்ககிட்ட சொல்லணும்னு அவசியமும் இல்ல. ஆனா நீங்க ரெண்டு பேரும் மனம் விட்டுப் பேசுங்கப்பா. இங்க ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு காட்டுப் பகுதி இருக்குப்பா. காடுனாலும் அவ்ளோ பயமில்லாத மாதிரியான இடம். மனசு சரியில்லனா நாங்க ரெண்டு பேரும் அங்க போய்ட்டுத் தான் வருவோம். அந்த இயற்கைச் சூழலை ரசிச்சாலே மனசு லேசாகிற மாதிரி இருக்கும். அப்புறம் மனம் விட்டுப் பேசினா எல்லாமே ஓகே ஆகிடும். நாளைக்கு நாம அங்க போய்ட்டு வருவம்பா. இது உன்னோட அப்பாவோட வேண்டுகோள்.'
'அட என்னப்பா வேண்டுகோள் அது இதுனு? நீங்க ஆணையா சொல்லுங்க நாங்க ஏத்து நடக்கிறோம். நீங்க சொன்னது சரிதான்பா. நாங்க ஒற்றுமையா இல்லத்தான். அது உங்களுக்குத் தெரியக்கூடானு கவனமா இருந்தும் தப்பு நடந்திடுச்சு. இனி உங்ககிட்ட மறைக்கிறதுக்கு எதுவுமில்ல' என்று கூறி நடந்த அனைவற்றையும் கூறி முடித்தான் மித்ரன்.
அதைக் கேட்டு அதிசயித்த பூரணியும் சந்திரனும்.... 'இவ்வளவு நடந்திருக்காப்பா?' என்று ஆச்சர்யப்பட்டுக் கேட்டனர்.
இது வரை பொறுமையாக இருந்த ஆதிரா... 'என் மனசில அகரனைத் தவிர வேற யாருமில்லம்மா. என்னால இதை ஒரு கல்யாணமா ஏத்துக்க முடியல. பொதுவா தெரியாமக் கூட யாரோட மனசையும் புண்படுத்தக் கூடாதுனு நினைப்பன். ஆனா என்னைப் பற்றி யாருமே அப்பிடி நினைக்கிறதில்ல. குடும்பத்தில எல்லாருமே என் மேல ரொம்பப் பாசமா இருப்பாங்க. ஆனா வெளி இடத்திலனு பார்க்கும் போது எனக்குனு ஒராள் இருந்தது ரொம்பக் குறைவு. அப்பிடி என் மேல பைத்தியமா இருந்த ஒரே ஒருத்தன்னா அது அகரன் தான். அவன் வாழ்க்கையில வந்தாப் பிறகு தான் காதலோட சந்தோசத்தை, வலியை நான் ரொம்ப நல்லாப் புரிஞ்சுக்கிட்டேன். நான் நேசிச்சவனைக் கைபிடிக்க நினைச்சது தப்பா? அவ்ளோ பாசம் வச்சிருந்த ஒருத்தனைக் கொல்ற மாதிரி..... இப்போ நினைச்சாலும் ரொம்ப வலிக்குது. நீங்க சொல்லுங்கப்பா அது என்னோட வயித்துல வளர்ந்த குழந்தையா இருக்குமா? ரொம்ப வலிக்குதுப்பா எனக்கு. இவ்வளவு பாசத்தை ஒருத்தன் மேல வச்சிட்டு இன்னொருத்தர் கூட சிரிச்சுப் பேச முடியல என்னால. வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.. பேசாம செத்திடலாம் போல இருக்கு.'
கதறி அழுதவளை ஆதராவாக மார்பில் சாய்த்து தடவிக் கொடுத்தார் பூரணி. 'அம்மாவுக்கு உன்னோட வலி புரியுதுடா. கவலைப்படாத. உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும்.'
ஒரு ஓரமாக நின்று மனவேதனையுடன் இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தான் மித்ரன். அவனாலும் என்ன செய்ய முடியும்? அதுவும் அவனுக்கும் அவள் மேல் காதல் வந்துவிட்ட பிறகு. எது எவ்வாறாயினும் அவளுடைய சந்தோசம், தன்னுடைய சந்தோசத்தை விட முக்கியமென முடிவு செய்து கொண்டான் மித்ரன். சிறிது நேரம் அன்னையின் மார்பில் சாய்ந்து அழுதவள் 'கொஞ்சம் தலைவலிக்குதும்மா. தூங்கப் போறன். உங்களைக் கஷ்டப்படுத்துறதுக்கு ரொம்பவும் சாரி' என்று மன்னிப்புக் கோரிவிட்டு நேராக மித்ரனிடம் வந்தாள். 'உங்களைக் கஷ்டப்படுத்தனும்னு இல்ல மித்ரன். உங்களுக்கு என்னை ஏன் பிடிக்கும்? எப்பத்தில இருந்து பிடிக்கும்? இதெல்லாம் தெரியாது எனக்கு. ஆனா அதுக்கு நான் எந்த விதத்திலயும் காரணமில்லனு நினைக்கிறன். அதையும் தாண்டி நான் தான் காரணம்னா என்னை தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க. உங்க காதலை ஏத்துக்கிற மனநிலைல நானில்லை. பிடிச்சது போய்டிச்சு; கிடைச்சதை வச்சு வாழுவம்னு இருக்கிறவளும் நான் இல்லை. நீங்க சொன்ன மாதிரி அகரன் இன்னொருத்தங்களக் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒருவேளை மனசு மாறுவனோ என்னமோ? ஏன்னா அடுத்தவளுக்கு சொந்தமானத என்னோட சொந்தமா நினைக்கிற அளவுக்கு அற்பத் தனமானவளும் இல்ல நான். இப்போ கூட என் மனசில அகரன் தான் இருக்கார். நீங்க கேக்கலாம்; ஒருத்தனுக்கு சொந்தமா இருந்திட்டு எப்பிடி மனசில வேற ஒருத்தன நினைக்கலாம்னு. ஆனா என்னோட மனசு முதல்ல எப்பிடி இருந்திச்சோ இப்பவும் அப்பிடியே தான் இருக்கு. ஆனா ஒரேயொரு வித்தியாசம்... முதல்ல அகரன் கூட எப்பிடி எப்பிடியெல்லாம் வாழணும்னு கனவு கண்டிட்டிருப்பன். இப்போ அப்பிடி எதுவுமில்ல. என்னோட காதலை மறக்க முடியலத் தான். அதுக்காக அந்தக் காதலுக்கு சொந்தமானவர என் கணவனா நினைச்சு இப்போ வாழ்ந்திட்டிருக்கல. அந்தக் கனவெல்லாம் எப்போ உங்க கையால என் கழுத்துக்குத் தாலி ஏறிச்சோ அப்பவே கலைஞ்சிடிச்சு. ஏன்னா பிடிச்சாே பிடிக்காமலோ நான் உங்களுக்கு சொந்தமானவள். அந்தக் காதலை முழுசா மறக்காம உங்க கூட சராசரி மனைவியா வாழ முடியல. ஆனாலும் உங்களோட இந்த நிலமைக்கு நானும் ஒரு காரணம். ஏன்னா அன்னைக்கு அகரனோட உயிரக் காப்பத்தணும்னுதான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டன். என்னோட நிலமையை நீங்க புரிஞ்சுப்பீங்க எண்ட நம்பிக்கை எனக்கு இருக்கு. இன்னும் ஒரு கொஞ்சக் காலம் தாங்க எனக்கு. என்னால முடிஞ்ச அளவுக்கு மாற முயற்சி பண்றன். ஒருவேளை மாற முடியலனா கண்டிப்பா உங்க வாழ்க்கைல இருந்து நான் ஒதுங்கிடுவன். நீங்க ரொம்ப நல்லவர் மித்ரன். உங்களுக்கு நான் மனைவியா வந்திருக்க வேணாம். நீங்க ஆசைப்பட்ற வாழ்க்கை உங்களுக்குக் கிடைக்கணும். ஒரு வேளை அதை என்னால உங்களுக்குத் தர முடியலனா.... குறிப்பிட்ட காலத்துக்கப்புறம் நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கோங்க. நான் மனப்பூர்வமா மணவிலக்குத் தாறன்.'
அதுவரை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தவன், அவளின் "மணவிலக்கு" என்ற வார்த்தையைக் கேட்டதும் "நிறுத்து" என்று கத்தினான். அவனுக்கு அது ஏனோ மிகவும் வலித்தது. அந்த அளவுக்கா வெறுக்கிறாள் அவனை?
'வேணாம் ஆதிரா; இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாத. யாரும் உன்னைப் பற்றி யோசிக்கிறதில்லைனு சொன்னியே; நீ என்னைப் பற்றி யோசிச்சியா? உன்னோட மனசு மாறணும்னுதான் நான் நீ என்ன பண்ணாலும் கண்டுக்கிறதில்லை. உன்னோட வலி எனக்குப் புரியுது ஆதிரா. ஆனா உனக்கு என்னோட வலி புரியுதா? ஆம்பிளைனாலும் நானும் சாதாரண மனுசன் தான். நீங்க உங்களோட வலியை உடனவே யார்கிட்டனாலும் சொல்லுவீங்க. ஆனா நாங்க அப்பிடி இல்ல. எங்க வலியை மறைச்சு வாழப் பழகி இருக்கோம். ஒண்ண யோசிச்சியா? நீயும் அகரனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னோட குடும்பத்தையும் அகரனோட குடும்பத்தையும் அழிச்சிடுவன்னுதான் அந்தக் குழந்தை சொல்லிச்சு. என்னையோ என் குடும்பத்தையோ எதுவும் பண்ணுவன்னு சொல்லல. ஆனாலும் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உங்களுக்காகவும், உங்க ரெண்டு பேரோட குடும்பத்துக்காகவும். அதுக்காக நான் பெரிய தியாகினு சொல்ல வரல. என்னோட நிலையையும் புரிஞ்சுக்கோனு சொல்றன். நான் உன்னைத்தானே விரும்புறன். உன்னை விவாகரத்துப் பண்ணி இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ணி அவகிட்டப் போய்.... இப்போ நீ என்கிட்ட டயலொக்கை நான் அவகிட்ட சொல்லிட்டிருக்கவா? உனக்குப் பிடிக்கலயா? நீ என்கிட்ட விலகி இருக்க பூரண அனுமதி தாறன். அதுக்காக என்னோட வாழ்க்கை எப்பிடி இருக்கணும்னு நீ முடிவு பண்ணாத. அத நான் பாத்துக்கிறன். தலை வலிக்குதுனு சொன்னல. போய்த்தூங்கு போ' என்று கூறியவன் அடுத்த கணமே தங்களறைக்குள் சென்று தஞ்சம் புகுந்து கொண்டான்.
ஏனோ அவனின் கடுமையான வார்த்தைகள் ஆதிராவுக்கும் வலியை ஏற்படுத்திற்று. தலை வலி அதிகமாகியிருக்க தனது தலையை இருபுறமும் இறுக்கிப் பிடித்தவள் அப்படியே மயங்கிச் சரிந்தாள். சட்டெனச் சுதாகரித்த பூரணி அவள் விழ முன்னமே தாங்கிப் பிடித்தார். வெளியே சலசலப்பைக் கேட்ட மித்ரன் 'ஏதோ சரியில்லை' என ஊகித்துக் கொண்டு அறையை விட்டு வெளிவந்தவன், தன்னவள் இருந்த நிலையைக் கண்டு பதறிப்போனான். ஓடிச் சென்று ஆராவைத் தாங்கியவன்... அவளைப் பூப்போல தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தினான். அவள் நெற்றியின் இருபுறமும் மிருதுவாகத் தைலம் தேய்த்து விட்டவன், 'சாரி ஆராமா. என்மேல தான் தப்பு. உன்னோட நிலையைப் புரிஞ்சுக்காம நடந்துக்கிட்டன். சட்டுனு "டிவோஸ்"னு சொல்லிட்டியா? ரொம்ப வலிச்சுது எனக்கு. எங்க நீ என்னை விட்டுப் போய்டுவியோனு பயத்தில அப்பிடி நடந்துக்கிட்டேன். நீ இல்லாம ஒரு வாழ்க்கை என்னால வாழ முடியும்னு நினைச்சுக் கூடப் பார்க்க முடியல கண்ணம்மா. ரொம்பவும் சாரிடா. நீ மயங்கிற அளவுக்குனா நான் கதைச்சது உனக்குள்ள எவ்வளவு பெரிய காயத்தை ஏற்படுத்தி இருக்கும்னு புரிஞ்சுக்க முடியுது என்னால. இனிமே உன்னைக் கஷ்டப்படுத்தாம இருக்க முயற்சி பண்றன்டா. நான் பேசுறது உனக்குக் கேக்கும், புரியும்னு நம்புறன். இப்போ எதையும் யோசிச்சுக் குழம்பாமத் தூங்குடா கண்ணா. எல்லாம் மாறும். காலம் போக நீ மாறக் கூடும்னு சொன்ன ஒரே வார்த்தை போதும் எனக்கு. காலம் பூரா அந்த நாளை எதிர்நோக்கியே வாழுவன். நிம்மதியாத் தூங்குமா' என்று கூறி மென்மையாக அவள் தலையைக் கோதி விட்டான். சற்று நேரம் அவளையே பார்த்தவன்.... தன் அருகே நின்ற பூரணி அம்மாவை நோக்கி.... 'அம்மா! ஆரா கொஞ்சம் மூச்செடுக்க கஷ்டப் பட்ற மாதிரி இருக்கு. நான் வெளில போறன். அவளோட உடையைத் தளர்த்தி விடுங்க. நான் ஹால்ல தூங்குறன்.'
'சரிப்பா. நீ வெளில இரு. நான் வாறன்.'
சற்று நேரத்தில் வெளியே வந்தார் பூரணி. 'ஆரா நல்லாத் தூங்குறாப்பா. உன்னோட பாசத்தையும் ஏக்கத்தையும் என்னால புரிஞ்சுக்க முடியுது. கவலைப்படாதப்பா. எல்லாம் சரியாகிடும். அப்பா சொன்னார்ல? அந்த இடத்துக்கு நாளைக்குப் போய்ட்டு வருவம். விஷேசம் என்னனா... அங்க ஒரு துர்க்கை அம்மன் கோயில் இருக்கு. எனக்கும் இவருக்கும் ரொம்பப் பிடிச்ச இடம். அமைதியான அழகான கோயில். உங்க கல்யாணம் துர்க்கை அம்மன் கோயில்ல நடந்ததால.... இதை சொன்னா ஆரா வர மாட்டாவோனு தான் அப்போத உங்கப்பா ஒண்ணும் சொல்லல. நாளைக்கு அங்க போய் அம்மாகிட்ட மனக்குறையை சொன்னாலே எல்லாம் சரி ஆகிடும்பா. நீ தைரியமா இரு. அப்புறம் இன்னைக்கு நீ அப்பா கூடத் தூங்கிக்கோ. நான் ஆரா கூட இருக்கன்.'
'சரிம்மா. அவளைப் பாத்துக்கோங்க.'
'அவ என்னோட பொண்ணுடா'
'எனக்குத் தெரியும்மா. இருந்தாலும் சொல்லத் தோணிச்சு. அதான் தப்பா நினைச்சுக்காதீங்க'
'உங்க லவ்வு எனக்குப் புரியுது தம்பியாரே. நீங்க பொண்டாட்டி ரூமைக் காவல் காக்காமப் போய்த் தூங்குங்க. நாங்க பாத்துக்கிறோம்'
அவர் கேலிப் பேச்சைக் கேட்டு அழகாய்ச் சிரித்தான் மித்ரன்.
'ப்பா. இந்த சிரிப்பு இவ்ளோ நாள் எங்க போச்சு? என் புள்ள சிரிச்சா அப்பிடியே ராசா தான்' என்று நெட்டி முறித்தார் பூரணி.
'விடுங்கம்மா. விட்டா என்னையே வெக்கப்பட வச்சிடுவீங்க போலயே. போங்க போய்த் தூங்குங்க. குட் நைட்'
'குட் நைட்பா'
ஆதிரா அறைக்குள் நுழைந்த பூரணி.... 'கடவுளே சீக்கிரம் இந்த ரெண்டு பேரும் சேர்ந்திடணும்' என்று வேண்டிக்கொண்டு தூங்க.... சந்திரன் அறையில் மித்ரனோ ஆராவின் நினைப்பில் தூங்காமல் உழன்று கொண்டிருந்தான்.