சிறிது நேரம் அன்னையவளைத் தியானித்த மித்ரன், தன்னை அறியாமல் தான் கண்கலங்கியதை எண்ணி நொந்து கொண்டே கண்களைத் திறந்தான். ஆதிரா வேறெங்காே பார்த்தபடி ஏதோ யோசனையில் நிற்க.... அவள் தன்னைப் பார்க்கவில்லை என உறுதிப்படுத்திக் கொண்டவன் கண்களைத் துடைத்து தன்னைச் சமன்படுத்திக் கொண்டான். சுற்றிமுற்றிப் பார்த்தாலும் பூரணியையும் சந்திரனையும் காணவில்லை. இவர்களிருவரும் சாதாரணமாகக் கதைத்தபடி அமர்ந்திருந்தனர். இடைக்கிடையே அகரனின் பேச்சும் எட்டிப் பார்த்தது.
'எனக்கெல்லாம் அவ்ளோ பெரிய ஸ்டோரி இல்ல மித்ரன். அம்மா, அண்ணா இவங்க தான் என்னோட உலகம். அப்பா சின்ன வயசிலேயே தவறிட்டார். சின்ன வயசுங்கிறதால அவ்ளோ மெமரிஸ் (memories) இல்ல. ஆனா அப்பா இல்லாத நேரம் அப்பா எங்க அப்பா எங்க? னு அம்மாட்ட கேட்டுட்டே இருப்பனாம். இப்போ அதெல்லாம் ஞாபகமே இல்ல எனக்கு. மற்றப் பசங்களைப்பார்க்கும் போதெல்லாம் அவங்க அப்பா மாதிரி எங்கப்பாவும் இருந்திருப்பாரேனு எனக்கு ஏக்கம் வந்ததே இல்ல; வர இனியன் விட்டதில்லை. அம்மா என்னை அதட்டிக்கூட ஒண்ணும் கேக்க மாட்டாங்க. சொன்னவளின் கண்கள் கலங்கியது; (அவள் எதை நினைத்து கலங்குகிறாள் என்பது மித்ரனுக்கும் புரிந்தது. ஆனாலும் செய்வதறியாமல் பேசாதிருந்தான்.) எனக்கு கவலைனு பெரிசா எதுவுமே இருந்ததில்ல. அப்பப்போ சின்னச் சின்னக் கவலைகள் இருந்திருக்கு. எக்ஸாம்ல (exam) மாக்ஸ் (marks) குறைஞ்சா, போட்டி எதிலயாவது தோத்திட்டா, ஃபிரண்ட்ஸ் கூட சண்டை பிடிச்சா... இந்த மாதிரியான விஷயங்களுக்குக் கொஞ்சம் கவலை வரும்; ஆனா நிறைய நாள் நிலைச்சிருக்காது. வாழ்க்கையோட முதலோட அடி விழுந்தது அன்னைக்கு ஒருநாள் மித்ரன். நான் அப்பாே அபி வீட்ல இருந்தன். அபி எனக்குச் சின்ன வயசில இருந்தே ஃபிரண்ட். அவள் வீட்டுக்கு அடிக்கடி வருவன். வந்தா ரெண்டோ மூணு நாள் தங்கிட்டுத்தான் எங்க வீட்டுக்குத் திரும்பிப் போவன். ஆனா அப்போலாம் உங்கள அங்க நான் பாத்ததே இல்லையே? மதிய வேளைல எப்பவாவது திடீர்னு வந்தா... ஒண்ணோ ரெண்டு தடவ உங்களைப் பாத்திருக்கன்.'
'அபி வீட்ட நீ வரப்போற என்டா அவகிட்ட சொல்லிட்டுத்தானே வருவ. அவளுக்கு அது ஒரே புழுகமா இருக்கும். உனக்குப் பிடிச்ச ஐய்ட்டம் (item) எல்லாம் என்கிட்டச் சொல்லித்தான் வாங்கிவைப்பா. நீ அங்க வாற அன்னைக்கு எனக்கு வேற வேலை இருக்கிறதாப் பொய் சொல்லிட்டு நான் எங்க வீட்லயே நின்னிடுவன். ஏன்னா நான் ஆம்பிளை. எனக்கு ஒரு பிரச்சினையும் வராது. ஆனா நீ பொண்ணு; யாராவது ஒருத்தர் நீயும் நானும் ஒரே இடத்தில தங்குறதப் பாத்துத் தப்பாக் கதைச்சா அது உன்னை ரொம்பவும் பாதிக்கும். அபி தங்கைச்சி. அதனால பிரச்சினை இல்ல. ஆனா நீ அப்பிடி இல்லல. சோ நீ வாற நாள்ல நான் நிக்கிறதில்லை.'
ஆராவுக்கு ஆச்ரியமாக இருந்தது. முன்னபின்ன தெரியாத பொண்ணுக்காக இவ்வளவு யோசித்து நடந்திருக்கிறானே. எதேச்சையாக அவள் நிற்கும் போது அவன் வந்தால் கூட நிறைய நேரம் அங்கு நிற்க மாட்டான். நாகரிகம் கருதி ஒன்றோ இரண்டு வார்த்தை பேசிவிட்டு உடனே கிளம்பி விடுவான். 'உங்க அண்ணன் கால்ல என்ன சில்லுக் கட்டி வச்சிருக்காரா? நிக்காம ஓடிட்டே இருக்காரே' என்று அபியிடம் விளையாட்டாகச் சொல்லிச் சிரித்தது ஞாபகம் வந்தது ஆதிராவுக்கு. ஆனால் அது தனக்காக என்று கொஞ்சமும் எண்ணவில்லையே அவள். அவள் எண்ணத்தைக் கலைத்தது மித்ரனின் குரல்.
'அபி கூட இருக்கும் போதுதான் வாழ்க்கையோட முதல் அடி விழுந்ததா சொன்னியே. அது என்னனு நான் கேக்கலாமா?'
'கண்டிப்பா. ஏன்னா நான் தான் உங்கள என் ஃபிரண்ட்னு சொன்னனே. அது அகரனை நிச்சயம் பண்ணி ஒரு ஒரு மாதத்துக்கப்புறம் மித்ரன். நம்ம மார்க்கண்டேய ஐயா இருக்காருல்ல. உங்க ஊர்ப் பெரியவர். அவர் அபியோட வீட்டு்க்கு வந்திருந்தார். அன்னைக்கு தான் அவரை முதல் தடவை பார்த்தேன். பாத்த அன்னைக்கே கொஞ்சம் வித்தியாசமா விஹேவ் (behave) பண்ணார். எனக்கு ஒண்ணுமே புரியல. அன்னைக்குப் பின்னேரம் நானும் அபியும் அவரைப் போய்ப் பாத்தோம். அப்போ சொன்னார் அகரனைக் கல்யாணம் பண்றதத் தள்ளிப் போடச் சொல்லி. அவர் அப்போ தள்ளிப் போடுங்க எண்ட மாதிரி சொன்னாலும் எங்க கல்யாணத்தில அவருக்குச் சம்மதமில்லைனு புரிஞ்சுது. அப்போ ரொம்ப வலிச்சுது. வாழ்க்கைல முதல் தடவை காதலோட வலியை அன்னைக்குத் தான் உணர்ந்தன். அப்புறம் தொடர்ந்தும் அதே ஃபீல் (feel) இருந்திச்சு. முழுசா வெறுமையானதுனா அது நம்ம கல்யாணம் நடந்த அன்னைக்குத்தான். நீங்க என்னை நல்லாவே புரிஞ்சு நடந்துக்கிறீங்க மித்ரன். உண்மையாவே எனக்குத் தோணுது உங்க மனைவி ரொம்பக் குடுத்து வச்சவங்கனு. ஆனா அது நான்னு தான் யோசிக்க முடியல. இப்போ தான் நாம நல்ல ஃபிரண்ட்ஸா மாறிட்டமே. போகப் போகப் பாக்கலாம்.'
அவர்கள் பேசியபடி இருக்கவே வந்து சேர்ந்தனர் பூரணியும் சந்திரனும்.
'என்னப்பா... ஒரே லவ்ஸ் தான் போல?' என்று கேட்டபடி வந்தார் பூரணி.
' இந்த ரணகளத்தில இப்பிடி ஒரு கிலுகிலுப்புத் தேவைதானா?' என்று மனதினுள் சிலாகித்துக் கொண்டான் மித்ரன்.
'ஆமா, இது யார் யாரக் கேக்க வேண்டிய கேள்வி? நாங்களாவது கோயில்ல வந்து தஞ்சம் புகுந்திருக்கோம். உங்க ரெண்டு பேரையும் ஆக்களையே காணமே?' என்று நக்கலடித்தாள் ஆதிரா.
இவள் இப்பிடியெல்லாம் கதைப்பாளா என்று ஆச்சரியத்துடன் பார்த்தனர் பூரணியும் சந்திரனும். மித்ரனுக்குமே அது ஆச்சரியம்தான். வந்ததிலிருந்து ஏறெடுத்துமே பார்க்காதவள் இப்படித் தன்னுடன் உட்கார்ந்து கதைத்ததும், பூரணி சந்திரனை விளையாட்டுக்கு சீண்டுவதும் நினைக்க நினைக்கவே ஆனந்தமாக இருந்தது அவனுக்கு. கூடிய சீக்கிரமே அவள் தன்னைப் புரிந்துகொண்டு தன்னை ஏற்றுக் கொண்டிட வேண்டுமென மனதார வேண்டிக் கொண்டான்.
'ச்ச ச்ச; நீங்க இப்போ கல்யாணமான ஜோடி. சோ கொஞ்ச நேரம் தனியா இருக்கட்டுமேனு உங்கள விட்டுட்டுப் போனம்' மனைவிக்கு வக்காளத்து வாங்கினார் சந்திரன்.
'சரி சரி. உங்கள மாதிரித் தான நாங்களும். எங்களுக்கும் உணர்ச்சி, பாசம்லாம் இருக்கும் தானே?' இது பூரணி.
'அடியே உளறிக் கொட்டாத. அவங்க நம்மள ஒண்ணும் சொல்லல. நீயே தான் உளறிட்டிருக்க.' சந்திரன்.
அவர்களது நிலையைப் பார்த்த இருவருக்கும் சிரிப்பு வர, இருவரும் இணைந்து கலகலவெனச் சிரித்தனர். அவர்கள் இருவருமாக இவ்வாறு சிரிப்பதைக் கண்டு அகமகிழ்ந்தனர், அவர்களைப் பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொண்ட தாய்தந்தை இருவரும்.
மேலும் சிறிது நேரம் அன்னையைத் தியானித்து விட்டு, காட்டில் கொஞ்சம் உலவிவிட்டு மாலை நேரம் போல் வீடு திரும்பினர் அனைவரும். எது எப்படியோ அங்கு சென்று வரும்போது ஒரு அமைதியான மனநிலை அவர்களுள் தோன்றுவதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டனர்.
வீடு திரும்பியவர்களுக்கு மற்றுமோர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தனர் இனியனும் கலைவாணியும். அவர்களை ஓடிச்சென்று ஆரத்தழுவிக் கொண்டாள் ஆதிரா. அவளது சந்தோசத்தைக்கண்டு தனக்குள் முறுவல் பூத்துக் கொண்டான் மித்ரன்.
எங்கே தங்களைக் கண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு போவாளோ என நினைத்து வந்தவர்களுக்கு அவளின் செயற்பாடு மிகவும் சந்தோசமாக இருந்தது. அவர்களை உள்ளே அழைத்து அத்தனைநாள் கதைக்காத அவ்வளவு கதையையும் ஒரேநாளில் கொட்டித்தீர்த்தாள் அவள். வாணிக்கும் இனியனுக்கும் அவள் கதைப்பதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது. அவர்கள் வீட்டுச் செல்லக்குழந்தை அல்லவா? பூரணியின் வற்புறுத்தலால் அவர்கள் அன்றிரவு அங்கேயே தங்கும்படி ஆனது. ஆரா இரவு உணவைத் தயார்செய்ய பூரணியுடன் சமையலறைக்குச் சென்றுவிட, மித்ரனிடம், ஆராவின் மாற்றத்தை வினவினர் வாணியும் இனியனும். அவனும் நடந்தவற்றைக் கூற, 'எப்படியோ நீங்க ரெண்டுபேரும் ஒண்ணு சேர்ந்தாப் போதும்' என்று ஒருசேரக் கூறினர் இருவரும்.
'எப்பிடியோப்பா அவ இந்தளவுக்கு மாறினதே பெரிய விசயம். அகரன்தான்பா கதியில்லாம இருக்கான். நீயும் இனியனும் சேர்ந்துதான் அவனுக்கு நல்லதுபண்ணி வைக்கனும். அவனும் நான் பெத்த பிள்ள மாதிரித்தானே' என்றார் கலைவாணி.
'கண்டிப்பாம்மா. அவனோட எவ்வளவு கதைச்சாலும் மாறவே மாட்டன்னு அடம்பிடிக்கிறான். அவன் என்னவும் சொல்லட்டும். இன்னும் கொஞ்ச காலத்தில அவனுக்கும் ஒரு நல்ல இடமாப்பாத்துக் கல்யாணம் பண்ணி வைக்கணும். அவன் எப்பவும் என்னோட உயிர் நண்பன் தாம்மா. நான் கைவிட்டிட மாட்டேன். ஆனா இனியன் நீங்க தான் அடிக்கடி அவன்கிட்டப் போய்க் கதைச்சு கொஞ்சம் கொஞ்சமா மைண்ட் வோஷ் (mind wash) பண்ணனும். நான் ஃபோன் (phone) பண்ணிக் கதைச்சாலும் நேர்ல போக முடியாதில்லையா?'
'கண்டிப்பா மித்ரன். "நீங்க நாங்க" போமாலிடீஸ்லாம் (formalities) வேணாம். உன்னோட ஃபிரண்ட் மாதிரியே "நீ நான்"னு என்கூட சகஜமாப் பழகு. வீடு கட்ட ஆரம்பிச்சாச்சுனு சொன்னீல. அது எந்த மட்டில இருக்கு?'
'இப்போ ஒரு 75% ஓகே. அங்க போய்த் தங்குற அளவுக்கு இருக்கு. அநேகம் வாற மாதம் அங்க போய்டுவம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மிச்ச வேலையைப் பாத்துக்கலாம். அந்தக் குழந்தை நாங்க அங்கதான் இருக்கணும்னு ஏன் சொல்லிச்சுனு தெரியல. அத நாங்க இப்போ பாக்குறதும் இல்ல. அங்க போய்ட்டாத்தான் மிச்சம் என்ன செய்யணும்னு தெரியும். நாளைக்குக் காலமை எல்லாரும் போய்ப் பாத்திட்டு வருவம் வீட்டை'
'சரிப்பா. அப்பப்போ இப்பிடி வெளில போங்க; தனியா கொஞ்ச நேரம் ஸ்பென்ட்(spend) பண்ணுங்க. அப்போதான் இன்னும் கிளோஸ் (close) ஆக முடியும்.
அவர்கள் கதைத்துக் கொண்டிருக்கும் போதே சாப்பிட வருமாறு அழைத்தார் பூரணி. எனவே அவர்களது உரையாடலைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு இரவுணவில் கலந்துகொண்டனர் அனைவரும். உணவு உண்டு முடித்ததும், வழமையான வேடிக்கைப் பேச்சுகளும், கலந்துரையாடல்களும் இடம்பெற அந்தநாள் இன்னும் சந்தோசமாகிப் போனது. எப்போதும் புன்னகை முகமாகக் கலகலப்புடன் இருக்கும் பூரணியையும் சந்திரனையும் கலைவாணிக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. அதிலும் ஏறத்தாழ தன் வயதை ஒத்த பூரணியை ஒரு சகோதரியாகவே பார்க்கத் தொடங்கிவிட்டார். பூரணிக்கும் வாணியை மிகவும் பிடித்திருந்தது. அத்துடன் தான் தனது கணவருடன் சந்தோசமாக இருக்கும் போது... இள வயதிலேயே கணவனை இழந்து நின்ற வாணியை நினைக்க அனுதாபமும், அப்படிக் கணவன் இல்லாத போதும் கூட தன் இரு பிள்ளைகளையும் சமுகம் போற்றக்கூடிய நற்பண்புள்ளவர்களாக வளர்த்து நல்ல நிலைக்குக் கொண்டு வந்ததை நினைக்கப் பெருமையும் உண்டானது. அந்த நாள் அவர்கள் அனைவருக்குமே மிகவும் சந்தோசமான நாளாகிப் போனது. எஸ்பெசலி (especially) மித்ரனுக்கு.
இரவு வெகுநேரம் கழித்தே அனைவரும் உறக்கத்துக்குச் சென்றனர். மேல்மாடியில் கலைவாணிக்கும் இனியனுக்கும் இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட அனைவரும் நித்திரைக்காகத் தத்தம் அறைகளில் தஞ்சம் புகுந்து கொண்டனர்.
மித்ரன் படுக்கை அறையினுள் நுழையும் போது அவனது படுக்கை விரிப்பும் நேர்த்தியாக எடுத்து வைக்கப்பட்டிருந்தது. பொதுவாக ஆதிரா மித்ரனுடைய உடைமைகள் எதையும் தொடுவதில்லை. மாறாக அன்று, அவனதையும் எடுத்து வைத்தது கூடுதல் சந்தோசத்தைக் கொடுத்தது அவனுக்கு. அதைப் பார்த்துப் புன்னகை செய்துகொண்டே உறங்கச் செல்ல.... "குட்நைட்" மித்ரன்; சங்கீதமாக ஒலித்தது ஆரவின் குரல்.
"குட்நைட்" ஆராமா.
தூக்கம் கண்களைத் தழுவ அன்றைய நிகழ்வுகளை அசைபோட்டபடியே உறங்கிப் போனான் மித்ரன்.
எல்லோரும் நித்திரையில் ஆழ்ந்திருக்க, இரவு தன் ஆட்சியைச் செலுத்திக்கொண்டிருந்த நடுநிசி நேரம். எங்கும் அமைதி அமைதி அமைதியென மயான அமைதி நிலவிக் கொண்டிருக்க..... பூரணி வீட்டிற்குச் சற்றுத் தொலைவில் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த மித்ரன் வீட்டின் மேல்மாடியில் நின்று நிலவை ரசித்துக் கொண்டிருந்தது குழந்தை.