மறுநாள் காலை.
காரை ஓட்டிக்கொண்டிருந்த மித்ரனருகே கல்லாய்ச் சமைந்திருந்தாள் ஆரா. அவள் மனம் முழுதும் நேற்றைய சம்பவத்திலேயே நிலைத்திருந்தது. தான் "விவாகரத்து" எனும் வார்த்தையைக் கூறும்போது கொதித்தெழுந்தவன், அவனாகவே அதற்கு முன்வருகிறான். எனக்கென்ன சாபமா என் காதல் சேரவே கூடாதென்று?.... அவள் மனம் அங்கலாய்த்துக் கொண்டது. தந்தையையும் தாயையும் கலக்கமாகப் பார்த்தபடியே தாயின் மடியில் அமர்ந்திருந்தது குழந்தை. மித்ரனுக்கு அது கூடக் கொஞ்சம் கோபத்தைக் கிளறியது. 'அவவே இது தன்னோட குழந்தை இல்லைங்கிறா, இவ போய் அவவோட மடில இருக்கிறா. ஆனா ஆதிரா அதுக்கெல்லாம் விடமாட்டாவே, ஒரு வேள இவ இருக்கிறது அவளுக்குத் தெரியலயோ?... ஆனா அவ ஏத்துக்கலனா இவ போய் மடில இருக்க மாட்டாவே' என்று குமுறியவன் திரும்பிப்பார்க்க, வெளிவானை பார்வை வெறித்தபோதும், ஆராவின் விரல்கள் தன் குழந்தையின் சிகையை அழகாகக் கோதி விட்டுக்கொண்டிருக்க, தன்னை அவள் பொறுப்பில் விட்டுவிட்டு ஆராவின் மார்பில் வாகாகச் சாய்ந்திருந்தது குழந்தை. மித்ரனுக்கு நடப்பவை எதுவுமே புரியவில்லை. 'இவங்க எப்போ ஒண்ணு சேர்ந்தாங்க? ஒருவேளை ஆரா என்கிட்டச் சொல்ல நினைத்தது இதைத்தானோ? ச்ச அவள நேற்றுப் பேசவே விடல நான். பரவால்ல, இன்னும் கொஞ்ச நாள்ல விட்டுப் போகப் போறவ தானே. சொல்லுறதுக்கு இனி என்ன இருக்கு? ஆனாலும் நான் விவாகரத்து தாறன்னு சொன்னதுக்கு சந்தோசமாத்தானே இருக்கணும்; ஏன் உம்முனு இருக்கா? நம்ம பிரண்ட்ஷிப் பிரிஞ்சிடும்னா? இட்ஸ் ஓகே. அவள வெறும் பிரண்ட்டா மட்டும் என்னால பாக்க முடியாது. சாரி ஆரா, அகரனுக்கும் சரி, உனக்கும் சரி நான் நல்ல நண்பனா இருந்ததே இல்ல. உன் கூட பிரண்ட்னு சொல்லிட்டு, உன்னை என் வழிக்கு எப்பிடிக் கொண்டுவரலாம்? இம்ப்ரெஸ் பண்ணலாம்னு யோசிச்சிட்டிருந்தன். அகரன், எவ்ளோ வலியோட உன்னை என்கிட்ட விட்டிருப்பான்? அவனோட வலிக்குக் காரணமான ஒண்ணோட சந்தோசமா இருக்கணும்னு நினைச்சன். என்னோட சுய நலத்துக்குத்தானா இந்தத் தண்டனை? ஆனா நான் தப்பானவனா ஆரா, நீ சொல்லு. அகரனை உனக்குப் பிடிக்கும்போது ஒருநாள் கூட உன்னை எனக்குனு நான் யோசித்ததே இல்லையே. உன்னை என்கிட்ட அனுப்பி வெச்சது விதி. என்னோட மனைவிக்குனு சேர்த்து வச்ச பாசத்த உனக்குக் குடுத்தன். நான் தப்பா? சுயநலவாதியா?' விடைகாண முடியாத ஏராளமான கேள்விகள் மாறி மாறி வந்து மண்டையைக் குடைந்தன.
இருவர் மனமும் எதையோ யோசித்தபடி இருக்க, போய்ச்சேர வேண்டிய இடம் வந்து சேர்ந்திருந்தது. அது புதிதாக வேறொரு இடமும் இல்லை. வழமையாகச் செல்லும் அதே அம்மன் கோயில்.
'இங்கேயாப்பா சாமி வர்றன்னு சொன்னார்?'
'ரொம்ப நடிக்காதடி என் செல்லக்குட்டி, அம்மாக்கும் எனக்கும் துர்க்கை அம்மன்னா உயிர். அதான் போகும்போது அவங்கள ஒரு தடவ பாத்திட்டுப் போய்டுவம்னு. மத்தபடி சாமி நீ சொன்ன முருகன் கோயிலுக்குத்தான் வர்றார் போதுமா?' கூறியவன் குழந்தையைத் தூக்கி முத்தமிட்டான்.
'நாம அம்மனைக் கும்பிட்டு வரலாம் ஆரா. நல்லா வேண்டிக்கோ. உன்னோட வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கணும்னு நானும் வேண்டிக்கிறன்.'
அவனை நோக்கி ஒரு வெற்றுப் புன்னகையை உதிர்த்தவள், அம்மனைச் சரணடைந்தாள்.
அம்மனைத் தரிசித்துவிட்டு, முருகன் கோயில் சென்று சாமியாரைக் காணும் வரையில்கூட இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை.
முருகன் கோயில்....
அந்த அதிகாலை வேளையிலேயே களை கட்டியிருந்தது. ஏற்கனவே பிரபலமான கோயில், அத்துடன் இப்படி முருக பக்தரும், நல்ல வழிகாட்டியுமாக ஒருவர் வரும்போது அது இன்னும் விஷேஷம் தானே?
இறைவன் சந்நிதானத்திற்கு அருகே மிக மிக எளிமையாக அமர்ந்திருந்தார் வெறும் ஆறே வயது மதிக்கத்தக்க அந்தச் சாமியார். முகத்தில் சாந்தமும் கருணையும் நீயா? நானா? எனப் போட்டி போட்டுக் கொண்டு நின்றன. நெற்றியில் பூசப்பட்ட திருநீற்றுப்பட்டை இடையே சந்தனத்தாலான வேல் குத்தப்பட்டிருந்தது. அதுவும் அவருக்கு முருகன் அளித்த பரிசாகச் சொல்லப்படுகிறது. எல்லோருக்கும் ஆச்சர்யம், குமாரவேல் சாமியார் ஒரு சிறுவனா என்று. ஆனால் யார் முகத்திலும் அலட்சியம் சிறிதுகூட இல்லை.
இறைவனை அடைவதற்கு வயது ஏது? அவனாக அழைத்துக் கொள்ளும்போது அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நன்னெறியில் சென்றால் வாழ்க்கை சிறப்புத் தானே? அதுவும் அவனடியிலேயே வாழ்வென்றால் கசக்குமா? நம்முடைய ஞானசம்பந்தர் மூன்றே வயதில் அன்னையிடம் தாய்ப்பாலுண்டு, தேவாரமும் படிக்கவில்லையா? அது ஆலாலகண்டனின் லீலை போன்று இது அவன் குமாரனின் லீலை போன்றும். மித்துவுக்கு அவரைப் பார்க்க கிட்டத்தட்ட ரிஷ்வி மாதிரி இருந்தது; இதனால் மரியாதையோடு கூடவே பாசமும் வந்து ஒட்டிக் கொண்டது. சற்றும் சளைக்காமல் ஒவ்வொருவராகக் கூப்பிட்டு, அவர்களுக்குச் சொல்ல வேண்டிய அனைத்தையும் கிளிப்பிள்ளைக்குச் சொல்லுவது போல அழகாகச் சொல்லிக் கொண்டிருந்தார் குமாரவேல் சாமியார். நேரம் மிக ஆனபோதும் யாருக்கும் சலிப்புத் தட்டவில்லை. எல்லோரும் பொறுமையுடன் காத்திருந்தனர். அத்துடன் ஒருவரது விபரம் மற்றவருக்குத் தெரிய வாய்ப்பில்லாது தனித்துவமும், ரகசியமும் பேணப்பட்டது.
நம்மளுக்குத்தான் ஆரா-மித்து வாழ்க்கைல இன்ரெஸ்ட். ஆனா சாமியாருக்கு எல்லாரும் ஒண்ணுதான? அவர் கூப்பிடும் வரை பொறுமை காக்கத்தான் வேணும். ஒருமாதிரி ஒவ்வொருவராக அனுப்பிவிட்டு, ஆரா-மித்து-ரிஷ்வியை அழைத்தார் சாமியார். அவர்கள் மூவரையும் உற்றுப்பார்த்துவிட்டுக் கண்களை மூடிக்கொண்டார். கண்கள் மூடியபடியே இருக்க அவர் பேச ஆரம்பித்தார்.
'நீங்க கேக்க விரும்பிறதைத் தாராளமாக் கேக்கலாம். மேலதிகமா நான் ஏதும் சொல்லணும்னா கடைசியாச் சொல்றேன்.'
ஆராவைப்பேசச் சொல்லி ஜாடை காட்டினான் மித்ரன். 'எங்க குடும்பத்தில நடக்கிற விஷயங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ஏதோ ஒரு வினை எங்களத் துரத்திட்டே இருக்கு. என்னனு புரியல. நாங்க சந்தோசமா இல்ல' ஆரா மேலே என்ன கூறுவதெனத் தெரியாது தயங்கினாள்.
'நீங்க சந்தோசமா இல்லையா? அல்லது சந்தோசமா இருக்க முயற்சி பண்ணலயா?'
'அது..... அது வந்து எங்களுக்கு நடந்தது ஒரு திடீர் கல்யாணம்; அதுக்கு முதல் நான் வேறொருத்தரை விரும்பிட்டிருந்தன். அதனால இந்தக் கல்யாணத்தில மனம் ஒட்ட முடியல.'
'வேறொருத்தரை விரும்பினீங்க சரி. இன்னொருத்தர்கூட ஏதோ காரணத்தால கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. ஆனா அந்தக் காரணம் என்னனு யோசிச்சுப் பாத்தீங்களா?'
'எனக்குப் பிடிச்சவரைப் பணயம் வெச்சதால ஒத்துக்க வேண்டியிருந்தது.'
'உங்களால அவரோட இழப்பைத் தாங்கமுடியல. சோ அவருக்கு ஒண்ணுமாகக்கூடாதுனு நினைச்சு இன்னொருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?'
'ஆமா சாமி'
'அப்போ அது உங்க சுயநலம் இல்லையா? உங்களுக்குப் பிடிச்சவர் உயிரோட இருக்கணும்னு இவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. அவர் நல்லா இருக்கணும்னு லவ் தான் பண்ணல. அட்லீஸ்ட் அட்ஜஸ்ட் பண்ணி, கஷ்டப்படுத்தாம நடந்திருக்கணும். இது முடிஞ்சதுக்கப்புறம் சொல்லி ஒண்ணும் ஆகப்போறதில்ல. இன்னொரு தடவ இப்பிடி நடந்திடக் கூடாதுனு சொல்றன்.'
ஆதிரா கவலையோடு மித்ரனை ஏறிட, மூடியிருந்த கண்களைத் திறக்காமலேயே சாமியார் கூறினார்; 'கவலைப்படாதீங்க, நான் உங்களுக்கு மட்டும்னு சொல்றது அவருக்குக் கேக்காது.'
'இனிமே இப்பிடி ஆகாமப் பாத்துக்கிறன் ஐயா'
'ம்ம். வேற ஏதாவது கேக்கணுமா?'
இம்முறை மித்ரன் ஆரம்பித்தான்.
'நம்ம பொண்ணு.....'
'தெரியும். நீங்க கவலைப்பட வேண்டாம். அவ சாந்தியடையாமத்தான் உங்களை ஒரு சாபத்தில இருந்து விடுவிக்கணும்னு இருக்கு. இனிமே எல்லாம் ஓகே ஆகிடும். ரெண்டு பேருக்கும் ஒரு அட்வைஸ். கணவன்-மனைவி விட்டுக் குடுத்து வாழணும். ஒருத்தர் என்ன சொல்ல வர்றாங்கனு மற்றவங்க காது குடுத்துக் கேளுங்க. அதுவே உங்களோட பெரிய பிரச்சினைங்களுக்குத் தீர்வா இருக்கும். உங்க பொண்ணப் பத்திக் கவலைப்படாதீங்க. அவளுக்குரிய ஸ்தானத்தைக் கண்டிப்பா அவ அடைவா.'
'என்னோட மனைவி ஏற்கனவே ஒருத்தர விரும்பிட்டிருந்தா. அவர் கூட சேர முடியாமப் போச்சுனு உங்ககிட்ட ஆல்ரெடி சொன்னா. நாங்க ரெண்டுபேரும் கணவன்-மனைவியா வாழ ஆரம்பிக்கல. ஒரே ஒரு தடவையைத் தவிர (குரல் சற்று சுருதி குறைந்தது), நான் அவங்களைத் தேவையில்லாமத் தொட்டதில்லை. அவங்களுக்கான ஒரு வாழ்க்கையை, ஐ மீன் அவங்க விரும்பிற வாழ்க்கையை அவங்களுக்குக் குடுக்கலாமா? அகரன் கூட அவங்களைச் சேர வைக்க முடியுமா?'
பாலகனின் மூடிய கண்களிடையே ஒரு புன்சிரிப்புத் தோன்றியது. 'கண்டிப்பா, கண்டிப்பாக் குடுக்க முடியும். உங்க ஃபிரண்ட் கூட அவங்களைச் சேர்த்து வைக்கவும் முடியும்.'
இந்தப் பதில் மித்ரனுக்கு எவ்வளவு பெரிய வலியைக் கொடுத்ததோ தெரியாது, ஆனால் ஆராவுக்குத் தூக்கி வாரிப்போட்டது. ஆராவின் கடைசி நம்பிக்கை அந்தச் சாமியார்தான். அவர் மித்ரனைத் தவிர வேறு யாருடனும் ஆரா சேரக்கூடாதென்று சொல்லுவாரென்றுதான் அவள் எதிர்பார்த்திருந்தாள். விட்டால் இவர் தலைமையில் திருமணத்தையும் நடத்தி விடுவார் போலல்லவா அவர் கதை இருக்கிறது. மித்ரன் தனது வலியை வெளிக்காட்டாமலே பேசினான்.
'எப்போ ஐயா? நாங்க திடீர்னு இந்த முடிவெடுத்தா அது நம்ம குழந்தையைப் பாதிக்காதா?'
'குழந்தைக்கு இத்துடன் விமோசனம் கிடைப்பது உறுதி. அது உங்கள் மூலமாகவோ அல்லது வேறு யார் மூலமாகவோ கட்டாயம் கிடைக்கும். ஆகையால் அதைப்பற்றி கவலைகொள்ள வேண்டாம். ஆனால் ஒரு நிபந்தனை; தன்னை தன் முன்னாள் காதலனுடன் சேர்த்துவைக்கும்படி உன் மனைவியாகக் கேட்காத வரை, நீ அந்த முயற்சியில் ஈடுபடக்கூடாது.'
ஆராவுக்கு வந்த சந்தோசத்துக்கு அளவேயில்லை. அவளென்ன பைத்தியமா தன் காதலனை விட்டு இன்னொருவனிடம் சேர? ஆனால் அகரன்? அவன் வாழ்க்கை சிறப்படைய என்ன வழியென்று கேட்க வேண்டுமல்லவா? அவள் அதைக் கேட்க வாயைத் திறந்த வினாடியே சிறுவனிடமிருந்து பதில் வந்தது; 'அதற்குவழி உன் கணவன் சொல்வான்.' ஆராவுக்கு எவ்வாறெனப் புரியாவிடினும் மித்ரனால் அகரனுக்கு நல்வாழ்வு கிடைக்கப் பெற்றால் சந்தோசமென இருந்து விட்டாள். இப்போது மித்ரன் தொடர்ந்தான்.
'ஆராவை யாரோ கொல்லப் பாக்கிறாங்களா? அவளோட முன் ஜெனமப் பகை ஏதாே தொடர்ந்திட்டிருக்கா?'
'அதுதானே எல்லாத்துக்கும் காரணம். அதை உங்ககிட்ட சொல்லணும்னு எனக்கு உத்தரவு. அதனால நீங்க கேக்கலனாலும் நான் சொல்லித்தான் ஆகணும்.'
அவர் சொல்லச் சொல்ல அவர்கள் மனத்திரையில் அது படமாக விரிந்தது.
பல ஆண்டுகளுக்கு முன்பு....
திருவிழாப்போல களைகட்டியிருந்தது அந்தக் கல்லூரி. மேடையை பல வண்ண விளக்குகளும், பலூன்களும் அலங்கரித்திருக்க.... மைக் முன் நின்ற அந்த இருபதே வயதான அழகி, தன் மென் குரலால் மிழற்றினாள்.... (சாமி இப்பிடித்தான்.... "அழகி", "மென்குரலில் மிழற்றினாள்" எண்டெல்லாம் சொன்னாரானு என்னைக் கேக்கக் கூடாது. அவர் சொன்னதைக் கொஞ்சம் வடிவா நான் உங்களுக்கு சொல்றன் அவ்ளோதான்.)
'நமது கல்லூரியின் நூற்றுஐம்பதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு, கல்லூரியின் அருமை பெருமைகளையும், சாதனைகளையும் உரையாற்ற வருகிறார் "பைந்தமிழ்ச்செல்வி" காவ்யா. காவ்யா... பேச்சுப் புயல். பொதுவாகப் பேச்சென்றால் இன்டெரஸ்ட் இருக்காது. ஆனால் காவ்யாவின் பேச்சுக்காகவே கல்லூரியின் நிகழ்வுகளனைத்திற்கும் தவறாமல் கலந்துகொள்ளும் பெரியோர்களுமுண்டு. அவள் திறமைக்கு வழங்கப்பட்ட அழகிய அடைமொழிதான் "பைந்தமிழ்ச்செல்வி." அவள் பேரைச் சொன்னதுமே சபையினரிடத்தில் பலத்த கரகோசம் எழுந்தது. மேடையில் வந்து நின்றவள் கரகோசத்தினூடே பேச ஆரம்பிக்க, அவள் பேச்சைக் கேட்கும் ஆவலில் சபை அடங்கி குண்டூசி விழுந்தால்கூடக் கேட்குமளவிற்கு அமைதியாகிப் போனது. ஏறத்தாழ மூன்று நிமிடங்கள் பேசியவள், நன்றி கூறி விடைபெற.... எழுந்த கரகோசம் அண்ணளவாக அரை நிமிடங்களுக்கு நீடித்தது.
அவள் சென்றதும் முன்னர் நின்ற அதே பெண் வந்து மைக்கைப் பிடித்துக் கொண்டாள். அனைவரையும் கவரும் வண்ணம் உரையாற்றிச் சென்ற காவ்யாவிற்கு நன்றியைக் கூறிக் கொண்டு, அடுத்துக் கல்லூரி பற்றிய பாடலைப் பாட வருகிறார், "இன்னிசையழகி" ஆரபி. ஆரபி.... பேச்சுக்குக் காவ்யா போல, பாட்டுக்கு ஆரபி. தனது இனிய குரலால் பல மனங்களைக் கவர்ந்தவள். பொதுவாகவே பாடல் என்றால் எல்லாருக்கும் பிடிக்கும்; இவள் நன்றாகப் பாடுவாள் என்பதால் இவளுக்காகவும் ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். இப்போது இவளுக்கான கரகோசம் நீண்டுகொண்டிருக்க மேடையில் ஒயிலாக நடந்து வந்து வணக்கம் தெரிவித்தாள் ஆரபி; இப்போது நம்முடைய ஆதிரா. (பிறப்புத்தோறும் ஒவ்வொருவகையான கலை அவளுக்கு வரம் போன்றும். முன்னிரு ஜென்மங்களில் பாடல். இப்போது சித்திரம்) இவ்வாறு பலவித நிகழ்வுகள் அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தன. பாடி முடித்து வெளியே வந்த ஆரபியைக் கட்டித்தழுவிக் கொண்டாள் காவ்யா. 'செம்மயா இருந்திச்சுடா உன் வொய்ஸ். அப்பிடியே மெல்ற்(melt) பண்ற மாதிரி. சூப்பராப் பாட்ற. நீ பாரேன் ஒரு நாள் இல்லனா ஒருநாள் நீ ரொம்பப் பெரிய ஆளா வருவ. அப்போ நான் எல்லார்கிட்டவும் கூப்பிட்டுக் கூப்பிட்டு சொல்லுவன் இவ என்னோட ஆரபினு.'
'ஹே, கம்மோன். உன்னோட பேச்சுக்கு முன்னாடி என் பாட்டெல்லாம் ஒண்ணுமே இல்ல. நீ பேசி முடிச்சதும் என்னால உன் கிட்ட வர முடியாமப்போச்சு; அடுத்து என் புரோகிராம் இருந்ததால. ஆனா உன்னைப் பாத்ததும் எப்பிடிக் கைதட்டினாங்க தெரியுமா? எனக்கு அப்பிடியே புல்லரிச்சுது.'
அவள் கதைக்கு மறுமுனையில் பதிலில்லை. மௌனமாக ஆரபியையே ஒரு அன்பான பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் காவ்யா.
'என்னாச்சுக் காவ்யா?'
'நான் ஒண்ணு கேக்கவா?'
'ஹே என்னடி, என்கிட்டப் புதுசாப் பெர்மிசன்லாம் கேக்கிற? என்ன வேணாலும் என்னோட செல்லம் என்னைக் கேக்கலாம்.'
'உனக்கு என்னை எவ்ளோ பிடிக்கும்?'
'என்னடாம்மா திடீர்னு? நீ என்னோட உயிர் கண்ணம்மா. உனக்குத் தெரியும் உன்னையும், உங்கம்மாவையும் தவிர இந்த உலகத்தில எனக்குனு யாருமில்ல. வாழணும்ன பிடிப்பு எனக்குள்ள இருக்குனா.... அதுக்குக் காரணம் நாலு விசயம். முதலாவது நீ, ரெண்டாவது உங்கம்மா, மூணாவது நான் லவ் பண்ற என்னோட ஆரவ், நாலாவது என்னோட வொய்ஸ், அதுதான் என்னையும் ஒரு ஆளா மத்தவங்களை மதிக்க வச்சிருக்கு.. என்னோட உலகத்தில நீ எப்பவுமே பர்ஸ்ட் தான் கண்ணம்மா' கூறிய படியே காவ்யாவின் உச்சந்தலையில் முத்தமிட்டாள்.
அவளைக் கட்டியணைத்துக் கொண்ட காவ்யா, 'தாங்க்ஸ்டா, உனக்கு நான் இவ்ளோ முக்கியமா இருப்பன்னு நினைக்கல. என்னோட வெற்றியை உன்னோட வெற்றியாக் கொண்டாடுற; நான் சிரிச்சா சிரிக்கிற; அழுதா அழுற; என்னோட லைஃப்ல நீ கண்ணாடி மாதிரி; உன்னை என் கண்ணுக்குள்ள வச்சுப் பாத்துப்பன் நான். ஆனா ஆரவ்காக என்னை விட்டிட மாட்டல '
'சொன்னன்ல, என்னோட உலகத்துல பர்ஸ்ட் இந்தக் குட்டி ராட்சசி தான்னு?' முகவாயைப் பிடித்து ஆட்டியவள்.... 'ஆனா நீ உன்னோட ஆரணனுக்காக என்னை விட மாட்டல?'
'கண்டிப்பா மாட்டன். ஆரண்கிட்ட ஆல்ரெடி சொல்லியாச்சு, அவனளவுக்கு நீயும் எனக்கு முக்கியம்னு.'
'அந்தப்பயம் இருக்கட்டும்'
'சரிங்க மகாராணி'
இவர்கள் நிகழ்ச்சியில் இருந்ததால் மேடையின் பின்புறம் நின்றிருந்தார்கள். அதனால்தான் இவ்வாறு கதைக்க முடிந்ததே. இல்லாவிடில் "சைலன்ஸ்" சொல்லியே சீனியர்ஸ் சலித்திருப்பார்கள்.
காவ்யா, ஆகா ஓகோவென்ற அழகென்று சொல்ல முடியாது. மாநிறத்துக்குச் சற்றுக் குறைவான நிறம். அளவான உயரம். நல்ல உடல்வாகு. பெண்களுக்கே உரித்தான அனைத்து மென்மைக் குணங்களும் நிரம்பப்பெற்றவள். சற்றுப் பயந்த சுபாபவம். ஆராவிடம் மட்டும் பயங்கர வில்லத்தனம் காட்டுவள். தன்னவளிடம் எடுத்துக் கொள்ளும் உரிமை அது.
ஆரபி, பார்ப்போரைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகி. மென்னைமயானவள் எனினும் சற்றுத் திமிரானவள். "திமிர்", அவளுக்கான குடும்பத்துணை இல்லாதால் அணிந்து கொண்ட சட்டை.
இருவரும் இணைபிரியாத் தோழிகள். காவ்யாவிற்குத் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது; அவளது அத்தை மகன் ஆரணனுடன். ஆரபிக்கு ஒருதலைக் காதல் ஆரவ் மேல். முதல்முறை அவள் மியூஸிக் கென்டெஸ்ட் (music contest) சென்ற போதுதான் அவனைப் பார்த்தாள். ஆரவ், ஆணழகன். ஆண்மையைத் தாண்டிய ஒரு மென்மை அவனிடத்தில் உண்டு. வெளியூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் பங்குபெற்ற ஒரே ஊர்ப்பெண் நம் ஆரபி தான். அதைத் தெரிந்து கொண்டு, அவளுக்கு முற்று முழுதாக சப்போட்டாக இருந்தவன் அவன்தான். உணவு உடை உறையுள் என அனைத்திற்கும் ஏற்பாடு செய்தான். அவனிடம் கைத்தொலைபேசி எண்ணை மாற்றிக் கொண்டவள், இன்றுவரை தன் காதலைச் சொல்லவில்லை. ஆரவ் அவளிடம் பழகும் விதம், அவள் மேல் அக்கறை கொள்ளும் விதம், உரிமை எடுத்துக் கொள்ளும் விதம் நண்பனைத் தாண்டிய ஒரு காதலைப் பறை சாற்றியது அவளுள். அவ்வப்போது கல்லூரிக்கும் அவன் வருவதுண்டு, அவனைக்காணும் நாட்களில் பூரித்துப் போவாள் ஆரபி. ஆரவ் சமுகத்தில் ஒரு பெரிய புள்ளி. சிறு வயதிலிருந்தே உழைத்து, தற்போது கல்லூரியில் படிக்கும்பொழுதே தொழிலதிபராக உயர்ந்துவிட்டவன். தனது பணம், பல்வேறுவகையில் உதவ வேண்டுமென்ற நோக்கில், கல்லூரிகளுக்கும் டொனேஷன் செய்வது வழக்கம். இதைச் சாட்டியே தன்னைக்காண வரும் அவனை ஆரபிக்கு மிகவும் பிடிக்கும். அவன்.... இப்போது நம் மித்ரன்.
------------------------------------------------------------------------
காவ்யா வீட்டில் மிகப்பெரிய சண்டை நடந்து கொண்டிருந்தது. 'இதுங்களுக்கு வேற வேலையே இல்லை' என்று சிரித்துக் கொண்டார் காவ்யாவின் தாய் அம்பிகா.
காவ்யாவிடம் போராடித் தோற்றுவிட்டு தாயிடம் சரணடைந்தாள் ஆரபி. 'அம்மா பிளீஸ் நீங்களாவது சொல்லுங்க. ஆரவ்கிட்ட லவ் சொல்லச் சொல்லி இவ சொல்றா. ஆனா எனக்கு ரொம்பப் பயமா இருக்கு.'
'நல்லா நடிக்கிறடி நீ. உனக்குப் பயம். அதை நாங்க நம்பணும். அம்மா இந்தத் தடவ நீங்க இவளுக்கு சப்போட் பண்ணாதீங்க. நம்ம ரெண்டு பேர் கல்யாணமும் ஒரே மேடைல தான் நடக்கணும். கல்யாணத்தேதி குறிச்சாச்சு. இன்னும் ரெண்டே மாசம் தான் இருக்கு. அதுக்குள்ள அவர்ட சம்மதத்தை வந்து சொல்ற. அப்புறம் வர்ற சனிக்கிழமை ஆரணைப் பாக்க கூட்டிப்போறன்னு சொன்னன்ல. நாம போகல. நான் மட்டும்தான் போறன். அதுக்குள்ள நீ ஆரவ்வோட முடிவ என்கிட்ட சொன்னா மட்டும்.... கூட்டிப் போவன்'
'காவ்யா இப்பிடிப் பண்ணா என்ன?'
'எப்பிடி?'
'ஸ்டோரி ஒண்ணு படிச்சன். அதில ஹீரோய்னுக்கு ஹீரோ மேல செம லவ். ஆனா ஹீரோக்கு லவ்னா பிடிக்காது. அவ என்ன பண்றான்னா, ஹீரோவும் தானும் ஒரு ரூம்ல மாட்டிக்கிறதா ஒரு செட்டப் பண்ணிட்டா. ஹீரோ ஒண்ணும் பண்ண முடியாததால அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறார். லாஸ்ட்ல தான் தெரியவருது.... அவரும் அவளை லவ் பண்ணிருக்கார், ஆனா அவருக்கிருந்த பிரச்சினை ஒண்ணாலதான் அவொய்ட் பண்ணார்னு. அந்த மாதிரியே நானும் பண்ணீட்டா என்ன?'
'எந்த மாதிரி?'
'ஒரே ரூம்ல இருந்து லொக் பண்ணிட்டா என்ன?'
'வாட் நான்சென்ஸ் ஆரா. நீ ஹீரோயினா இல்லனா வில்லியா? ஸ்டோரி வாசிச்சா மட்டும் பத்தாது. அதில இருக்கிற நல்லது கெட்டதும் அலசி ஆராயணும். கடைசியா ஹீரோவும் லவ் பண்ணினதாத்தான் முடிப்பாங்க. ஏன்னா அது ஸ்டோரி. இது அப்பிடியா? வாழ்க்கை. ஒரு வேள.... ச்ச அப்பிடி இருக்காது; ஏன்னா உன் சொய்ஸ் தப்பாப் போகாது. ஆனாலும் நூற்றில ஒரு சதவீத வாய்ப்பா..... ஆரவ் உன்னை விரும்பலனா? உன்னை கஷ்டப்படுத்த சொல்லலமா. என்னோட ஃபிரண்ட் நேர்வழில போறதுதான் எனக்கு விருப்பம். லவ் காக அவள் தப்பான பாதைல போறது எனக்குப் பிடிக்கல. அடுத்து எப்போ மீட் பண்ணுவீங்க?'
'தெ... தெரியல.'
'சரி, பரவால்ல. அடுத்த தடவ நீ மீற் பண்றப்போ தெளிவா சொல்லிடு. அவர்ட பதிலோட.... அடுத்த ரெண்டு மாசத்தில ரெடியா இரு. நமக்கு கல்யாணம்.' சிரித்தபடி சொல்லிக்கொண்டே தயாரானாள்.
கல்லூரிக்கு அவளுடன் சென்று கொண்டிருந்த ஆராவுக்கு மனம் பதைபதைத்தது. ஏனெனில் அவள் காவ்யாவிடம் கூறிய விதம் தனது காதலைச் சாதித்துக் கொள்ள ஏற்பாடு செய்துவிட்டாள். இன்று ஆரவ் கல்லூரிக்கு வருவான். அவள் ஃபிரண்ட் ரேஷ்மா வேறு அங்கு எல்லா ஏற்பாட்டுடனும் தயாராக இருப்பாள். 'இவளுக்கு முன்னால ஃபோன் பண்ணியும் சொல்ல முடியாது. வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாள். அங்க போனதும் முதல்ல எல்லாத்தையும் கான்சல் பண்ணிடனும். அதுவும் இவளுக்குத் தெரியாம' மனதுள் நினைத்துக் கொண்டாள்.
ரேஷ்மா, காவ்யா-ஆரபி இருவருக்குமே நெருங்கிய தோழி. மிகவும் நல்லவள். சாது. அதனாலேயே எல்லோரும் அவளிடம் காரியம் சாதித்துக் கொள்வர். இது ஆரபி, காவ்யா மற்றும் ரேஷ்மாவின் உண்மையான நண்பர்கள் பலருக்குப் பிடிக்காது. அறிவுரை சொன்னாலும் அந்த நேரம் கேட்பதாேடு சரி. அடுத்த நிமிடம் 'எல்லோரும் பாவம், நல்லவர்கள்' என்ற மனநிலைக்கு மாறி விடுவாள். அப்படிப்பட்டவளைத் தான் இந்த ஏற்பாட்டைச் செய்யச் சொல்லியிருந்தாள் ஆரபி. முதலில் முரண்டுபிடித்தவள், 'என் வாழ்க்கை உன் கைலதான் இருக்கு.... பிளீஸ்' என்ற ஆராவின் கெஞ்சலில் வழிக்கு வந்தாள். முதலில், தானும் ரேஷ்மாவைப் பயன்படுத்துகிறோமோ என்ற எண்ணம் வந்த போதும், 'அவளுக்கு ஒரு உதவினா நான் செய்ய மாட்டனா?' என்று நியாயம் கற்பித்துத் தன்னைத் தேற்றிக் கொண்டாள் ஆரபி.
இருவரும் கல்லூரிக்குள் நுழைந்தாயிற்று.
வகுப்பறைக்குள் நுழைந்ததும்.... 'காவ்யா எனக்கு லைட்டா வயிறு வலிக்குதுடி; வோஷ் ரூம் போய்ட்டு வர்றன்.'
'ஓஓ... ஓகேடி. நானும் கூட வர்றன். வா. உனக்கு உதவியா இருக்கும்.'
'இல்லடி, இல்ல. நான் மட்டும் போய்ட்டு வர்றன். மிஸ் வந்திட்டா.... நீ விசயத்தை சொல்லு'
சொல்லிவிட்டு அவள் பதிலுக்குக் கூடக் காத்திராமல் வெளியேறினாள்.
வராந்தாவைக் கடந்ததும் முதலில் ரேஷ்மாக்கு அழைக்க, அது நொட் ரீச்சபிள் என்றது.
'அச்சோ, இவ வேற நேரம் காலம் தெரியாம' என்று யோசித்தபடி சென்று கொண்டிருந்தவள் திடீரென ஒரு அறையினுள் தள்ளப்பட்டாள். என்ன நடக்கிறதெனப் புரிந்து கொள்ளவே சற்று நேரமெடுத்தது அவளுக்கு. பதறி அடித்துத் திரும்பிப் பார்க்க அவளைப் போன்றே பதற்றத்துடன் நின்றிருந்தான் ஆரவ். இருவரும் சேர்ந்து கதவைத் திறக்க முயற்சி செய்ய அதற்குப் பலனில்லாது போயிற்று. எவ்வளவு கத்தியும் வெளியே யாருக்கும் கேட்டது போல இல்லை. ஆரபியை உள்ளே தள்ளிய வேகத்தில், அவளது ஃபோன் வெளியே விழுந்திருந்தது. ஆரவ் அன்றுபார்த்து ஃபோனை மறந்துவிட்டிருந்தான். எனவே அவர்களால் அவ்விடத்தை விட்டு அசைய முடியாது போயிற்று. இதற்குள் வகுப்புத் தொடங்கியிருக்க, நொடிக்கொருமுறை வாசலைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள் காவ்யா. 'ஒரு வேளை உடல்நிலை சரியில்லாமப் போய் இருக்குமோ? ரொம்பக் கஷ்டப்படுறாளோ' என நினைத்துக் கலங்கிக் கொண்டே இருந்தாள். அன்றைக்கென முதலிரு பாடங்களும் ஒரே ஆசியருடையதாக இருக்க அவளால் அசையவே முடியாது போயிற்று. இரண்டாம்பாட நிறைவுமணி ஒலித்து, ஆசிரியர் சென்றதும் ஒரே ஓட்டமாக வெளிச் சென்றவள்.... கழிப்பறை இருக்குமிடத்தை நோக்கி ஓடினாள். அங்கே வெறிச்சோடியிருக்க எல்லா இடமும் தேடி விட்டாள். கல்லூரி முழுதும் அலசியும் ஆரபியைக் காணவில்லை. ஃபோன் பண்ணினால் றிங் போய்க்கொண்டே இருந்ததே தவிர யாரும் எடுக்கவில்லை. அவள் இவ்வாறு பதைபதைத்துக் கொண்டிருக்க.... கல்லூரிக்கு வெளியே இருந்த அம்மனின் சந்நிதானத்தில், ஆரவ் கட்டிய புதுத்தாலி கழுத்தில் மணம்வீச நின்றிருந்தாள் ஆரபி.