• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடரும்.... (பாகம் 4)

Sri Durga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Sep 20, 2021
39
8
8
Jaffna, Sri Lanka
நாட்கள் இரண்டு கழிந்திருந்தது. ஆதிரா, இனியன் இருவருக்கும் எந்தக் கனவுகளும் வரவில்லை. நிம்மதியான உறக்கம்..... சுகமான விடியல்.... இருவரும் 'எதற்கு' அச்சப்பட்டார்களோ 'அது' எந்த விதத்திலும் அவர்களைத் துன்புறுத்தவில்லை. 'அது' எங்கே சென்றது? ஏன் கனவுகள் வரவில்லை? என யோசிக்கும் மனநிலை அவர்களுக்கு இல்லை. 'விட்டது தொல்லை' என நிம்மதியாகவே இருந்தார்கள். ஆனால் ஆதிரா அகரனிடம் பேசுவது கணிசமான அளவு குறைந்திருந்தது. 'அது' எப்படியும் அவளை வேவு பார்த்த படி தான் இருக்கும். தான் அகரனுடன் பழைய மாதிரிப் பழகத் தொடங்கி, அதனால் அவனுக்கு ஏதேனும் ஆகி விடுமோ என்ற பயம் அவளுக்கு. அகரனும் நிலைமை சற்று சீராகி சாமியாரைப் பார்த்து கதைத்து விட்டு இனியனுடன் தொடர்பு கொள்ளலாமென இருந்தான். அவனுக்குத் தன்னுயிரைப் பற்றிய கவலையை விட ஆதிரா நலமாக இருக்க வேண்டுமே என்ற கவலை. இப்போது இனியன், ஆதிரா இருவருமே தங்கள் வீட்டில் தான் இருக்கின்றனர். அன்று அபியின் வீட்டில் நிகழ்ந்த சம்பவத்திற்குப் பிறகு, அபி-ஆராவின் தொடர்பு கூடத் தொலைபேசி அழைப்புகளுடன் நின்று கொண்டது. ஒவ்வொருவரும் சாமியாரிடம் சென்று ஆலோசனை கேட்கும் வரை தம்மால் மற்றவருக்கு எந்த இடையூறும் வராமலிருக்க வேண்டுமென நினைத்து தம்மிடையேயான இடைத்தொடர்புகளைக் குறைத்துக் கொண்டனர்.

சாமியார் வெளியூர் சென்றிருந்ததால் அவர்களால் நினைத்தபடி சாமியாரைச் சென்று சந்திக்க இயலவில்லை.
இனியனுக்கு தனது மனதை வேறு ஏதாவது விடயத்தில் செலுத்தி மனமாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டுமென்று தோன்றியது. அதனால் ஒரு நாள் வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு தனது தந்தை வேலை செய்த பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்றான். அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த சந்தான மூர்த்தி என்பவர், இனியனுடைய தந்தையின் பால்ய சிநேகிதர். தந்தை இருந்த போது.... ஏன் இறந்த பின்னரும் கூட அவர் இனியனின் குடும்பத்தை அடிக்கடி சென்று காண்பதுண்டு. இனியனின் குடும்பத்திற்குப் பல உதவிகளும் செய்ததுண்டு. இனியன் வளர்ந்து வேலைக்குச் சென்ற பின்னர் தான்..... அவரின் உடல் பலவீனத்தாலும், அந்தக் குடும்பத்தைத் தூக்கி நிறுத்த ஒரு கை ஓங்கிய திருப்தியினாலும் அவர் வருவது சற்றுக் குறைந்து போயிற்று. ஆனாலும் வெளியாட்கள் மூலமாக அவரால் முடிந்தளவு உதவிகளை இன்றும் செய்து கொண்டு தான் இருக்கிறார். அவரைக் காணத்தான் இனியன் விடுப்பு எடுத்துக் கொண்டு வந்திருந்தான். அவனைக் கண்ட சந்தானம் இனியனை வாரி அணைத்துக் கொண்டார். 'அப்பிடியே அப்பாவ உரிச்சு வைச்சிருக்கியேப்பா' என ஆரத் தழுவிக் கொண்டார். தந்தை இறந்து எத்தனையோ காலமாகி விட்ட பிறகும் மாசு மருவற்றிருக்கும் அந்தப் பெரியவரின் பாசம் இனியனை நெகிழ்வடையச் செய்தது.

சுற்றி வளைக்காமலேயே நேரே விஷயத்துக்கு வந்தார் பெரியவர். 'சொல்லுப்பா என்னைத்தேடி என் ஆபீஸுக்கே வந்திருக்க.... காரணமில்லாமல் இருக்காது'....

பெரியவர் கண்டுகொண்டாரே என ஒரு நிமிடம் தயங்கினாலும்.... தாமதிக்காமல் விஷயத்துக்கு வந்தான் இனியன். 'எனக்கு உங்களிட்ட இருந்து கொஞ்சம் தெரிஞ்சுக்கணும் அங்கிள்.... அப்பா கடைசியா பார்த்த கேஸ் டீடெய்ல்ஸ் வேணும்.... அது தொடர்பான சோஸஸ், இல்லனா வேற ஏதாவது விபரம் உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் சொல்ல முடியுமா பிளீஸ்?' இதைக் கேட்ட பெரியவரின் முகம் ஒரு முறை யோசனையில் சுருங்கியது. புரிந்து கொண்டவனாக இனியனே தொடர்ந்தான்....

'இல்ல அங்கிள், இது அப்பாவோட கடைசி ஆசை மாதிரி.... அவர் என் கிட்ட வாயத் திறந்து இந்தக் கேஸோட விபரங்களைக் கண்டு பிடிக்க சொல்லலனாலும் அவர் என்கிட்ட அதை எதிர்பார்த்தார்னு என்னால நல்லாவே புரிஞ்சுக்க முடியுது.... அதுவுமில்லாம இ்ந்தக் கேஸைப் பற்றி தெரிஞ்சுக்கிற ஆர்வம் எனக்கும் கொஞ்சம் இருக்கு. எனக்காகவும், அப்பாவுக்காகவும் இந்த உதவியைச் செய்ய முடியுமா?'

இந்த அளவுக்கு இறங்கிக் கேட்கும் போது யாருக்கேனும் மறுக்கத் தோன்றுமா? அதுவும் தான், இன்னொரு பிள்ளையாகப் பார்த்த மகன் தனது தந்தைக்காக என வேண்டும் போது.... 'சரிப்பா அந்தக் கேஸுக்காக ஆபீஸலா எந்த ஃபைலும் இல்ல இங்க. அது ஒரு சந்தேகக் கேஸ் தான்..... கொலை தான்னு நிச்சயமாத் தெரியும், ஆனா யார் பண்ணாங்கனு தெரியல.... பெரிய பெரிய ஆக்களோட தொடர்பு இருந்திருக்கும் போல.... அவங்க விலை குடுத்து அந்தக் கேஸை ஒண்ணுமில்லாமப் பண்ணீட்டாங்க.... உங்கப்பா அப்போ இருந்த தலைமை அலுவலர்ட எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார், இந்தக் கேஸைக் கண்டு பிடிக்கணும்... தண்டிக்கப் பட்டவங்களுக்கு நியாயம் வேண்டிக் குடுக்கணும்னு...... ஆள் மசியவேயில்லை.....நிறைய வருஷமாச்சு இது நடந்து.... அது சரி.... உங்க அப்பா நம்மளலாம் விட்டுப் போயே எவ்ளோ வருஷமாச்சு....' என்று கூறி வேதனையான ஒரு பெருமூச்சை வெளிவிட்ட பெரியவர், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார். 'அவன் எடுத்து நடத்தும் போதே இந்தக் கேஸ் ரொம்பப் பழசுப்பா..... இப்போ கேக்கவா வேணும்? ஒரு நாள் ஃஆபீஸுக்கு வரும் போது அவன் நல்லாவே இல்ல... ஏதோ டென்ஷனா இருந்தான். எனக்கு நினைவு தெரிஞ்சு உங்கப்பாவை அப்பிடி நான் பார்த்ததே இல்ல.... அவன் இது வரைக்கும் என் கிட்ட இருந்து எதையும் மறைச்சதில்லை... அன்னைக்கு ஏதோ வித்தியாசமாப் பட்டிச்சு.... என்னடானு கேட்டதுக்கு.... 'உன்கிட்ட நான் கொஞ்சம் சொல்லணும் சந்தானம்.... லஞ்ச் அவர்ல கன்டீனுக்கு வா என்றான்' நானும் போனன்.... அப்போ தான் அந்த விஷயத்தை சொன்னான்....
தான் வரும் போது ஒரு பெண்ணைப் பார்த்ததாகவும், அந்தப்பெண் தன்னையே ஒரு ஏக்கத்தோடு பார்த்துச் சென்றதாகவும் சொன்னான். நான் சொன்னன்.... அதில என்னடா இருக்கு? உன்னைத் தெரிஞ்ச மாதிரி இருக்கேனு பாத்திருக்கலாம்... இல்லனா நீ ரிப்போட்டர் என்டதால உண்மையிலேயே உன்கிட்ட ஏதாவது சொல்ல நினைச்சிருக்கலாம்... இப்படி என் அனுமானங்களை நான் அடுக்கிக் கொண்டே போக...
'இல்லடா விஷயம் அதில்ல... என்னை முழுசா சொல்ல விடு' என அவனே தொடர்ந்தான்....
'நான் வரும் போது ஒரு பொண்ணப் பாத்தன்டா..... அவளை முதலே எங்கயோ பாத்திருக்கன்..... ஆனா அப்போ அது நினைவு வரல.... அவ என்னையே ஏதோ ஒரு வித ஏக்கமாப் பாத்துப் பாத்திட்டே போனா... ஒரு வேளை நான் ரிப்போட்டர் என்ற விஷயம் தெரிஞ்சு, என்கிட்ட ஏதும் கேக்கணுமோ இல்லனா ஏதாவது முக்கியமான விஷயம் சொல்லணுமோனு நினைச்சு நானும் அவ பின்னாலயே போனன். திடீர்னு அந்தப் பொண்ணு நின்னா... நானும் அவளுக்கு என்ன தேவையோ நினைச்சு அவ கிட்டப் போனன். அப்போ தான் கவனிச்சன் அவ பக்கத்தில ஒரு குழந்தை இருந்திச்சு. அந்தக் குழந்தைக்கு ஒரு ஐந்து வயது மதிப்பிடலாம்.... எனக்கு நல்லா நினைவிருக்கு அவங்க ரெண்டு பேரையும் நான் முதலே எங்கயோ பார்த்திருக்கன்.... எனக்கு திடீர்னு ஒரு மாதிரிப் போச்சு... அந்தக் குழந்தையை அவ வரும் போது நான் பார்க்கவேயில்லை.... திடீர்னு எங்க இருந்து வந்திச்சு என்று யோசிச்சிட்டே சுத்திமுத்திப் பாத்தா ஒரு புழுப் பூச்சி கூட இல்ல... ஆனால் தூரத்தில் மட்டும் அநேக பனைமரங்கள் வளர்ந்து ஏதோ பேய் வனம் மாதிரி இருந்தது. அந்த இடமே மயான அமைதியா ஒரு மாதிரி இருந்திச்சு.... எனக்கு ஒரே திக்குனு ஆகிப் போச்சு.... பயத்தோட அந்தப் பொண்ணப் பார்த்தன்..... அவ முகத்தில எத்தனையோ உணர்வுகள் அந்த ஒரு நிமிஷத்துக்குள்ள வந்து போச்சு... ஒரு தடவை முகமே இருண்டு அழுற மாதிரி இருந்திச்சு, இன்னொரு தடவை எதையோ நினைச்சு சிரிச்சா, அப்புறம்.... அப்புறம் கோபமா ஒரு பார்வை பாத்தா பார்.... சத்தியமா செத்திட்டன்.... கண்ணெல்லாம் சிவந்து... அந்தக் கண்கள்ல அப்பிடி ஒரு வெறி..... அந்த நேரத்தில பக்கத்தில நின்ன குழந்தை டக்குனு என் கையைப் பிடிச்சுது.... என் கையைப் பிடிச்சுது.... அப்புறம் அப்பிடியே அழ ஆரம்பிச்சிச்சு.... எனக்கு என்ன செய்ய, எப்பிடி சமாதானப் படுத்தனு தெரியல.... என்னோட ஆதிமா அழுதா நான் தாங்கவே மாட்டன்.... அப்பிடித்தான் அந்தக் குழந்தை அழும் போதும் ரொம்பக் கஷ்டமாப்போச்சு.... டக்குனு அந்தக் குழந்தையைத் தூக்கி அவளைத் தட்டாமாலை சுற்றி நாலு விளையாட்டுக் காட்டினன். கொஞ்ச நேரத்தில சமாதானமாகிட்டா.... இடையில ஒரு தடவ அந்தப் பெரிய பொண்ணத் திரும்பிப் பார்த்தன்... எதையோ சாதிச்ச வெற்றி அவ கண்ணுல தெரிஞ்சுது. அந்தக் குழந்தையும் என்னோட நல்லா ஒட்டிக்கிட்டா.... அப்போ தான் அதைக் கவனிச்சன்.... அந்தக் குழந்தை கழுத்தில ஒரு தங்கச் சங்கிலி.... அதில அழகான ஒரு பென்டன்..... அந்தப் பென்டன்ல ஒரு குழந்தையோட உருவப்படத்த அழகாப் பொருத்தி இருந்தாங்க.... எதேச்சையாத் தான் அதைப் பாத்தன்.... ஆனால் பார்க்கும் போதே தெரிஞ்சுது... அது அந்தக் குழந்தையோட உருவப்படமில்லனு.... அதனால கொஞ்சம் தெளிவாப் பார்த்தேன்..... அது... அது... அது என்னோட ஆதிராவோட படம்டா..... இ்ப்போ அந்தக் குழந்தையும் அந்தப் பொண்ணும் என்னைப்பார்த்து வித்தியாசமா சிரிச்சாங்க.... எனக்கு உயிரே போய்டிச்சு... அதுக்கப்புறம் என்னாச்சுனு தெரியல.... ரோட்டோரமா மயங்கிக் கிடந்திருக்கன்.... அந்த வழியாப் போனவங்க தான் என்னை மயக்கம் தெளிவிச்சாங்க.... அவங்களுக்கு நன்றி சொல்லிட்டு ஒரே ஓட்டமா என் வீட்டுக்கு ஓடினன்.... அங்க என்னோட ஆதிராவப் பார்த்தாப் பிறகு தான் போன உயிர் திரும்பி வந்திச்சு.... அப்புறம் தான், வீட்ட நின்டு கண்டதையும் நினைக்காம இங்க வருவம்னு வந்திட்டன்' என்று அவன் சொல்லி முடிச்சதும் எனக்கு ஒரே குழப்பமாப் போச்சு. என்ன சொல்ற என்டே தெரியல... ஒரு மாதிரி அவனை அன்டைக்கு சமாளிச்சு அனுப்பி வைச்சன்... அதுக்கப்புறம் மூன்று நாள் நிம்மதியாத் தான் போச்சு... அவனும் எதுவும் சொல்லல.... நானும் எதுவும் கேக்கல... நாலாம் நாள் எல்லாரும் பரபரப்பா வேலை செய்திட்டிருந்தம். அன்னைக்கு ஒரு கேஸ் வந்திருந்தது... ஒரு ஹோட்டல் உச்சி மாடியில் இருந்து வாலிபர் விழுந்து மரணம்னு.... அது தற்கொலையா? விபத்தா? இல்லனா கொலையானு விசாரிக்க வேண்டியிருந்தது... ஆள் வேற ரொம்பப் பெரிய இடம்.... கட்சித் தலைவர் சேனாதிபதியோட ஒரே பையன்..... கண்டிப்பாக சீக்கிரமே தகவல் குடுக்கணும்.... இல்லனா அவங்க ரொம்பப் பிரச்சினை பண்ணுவாங்க..... அதனால அந்த ஹோட்டலுக்குப் போய் சிசிடிவி பூட்டேஜ் செக் பண்ணம்.... அந்த வாலிபனோட அறைக்குள்ள கூட ஒரு கேமரா வேலை செய்து கொண்டிருந்தது.... முதல்ல அந்த ரூம்ல அவன் மட்டும் தான் இருந்தான்... நேரம் ஆக ஆக அந்த அறைக்குள்ள ஏதோ புகை மாதிரிப் பரவியது... எங்களுக்கு ஒண்ணுமே புரியல.... ஒண்ணும் தெளிவாத் தெரியவும் இல்லை.... ஒரு பத்து நிமிஷம் கழிஞ்சிருக்கும்... இப்போ அந்தப் புகை அறையோட இன்னொரு மூலைக்குப் போச்சு... அந்த மூலையில் தொங்க விடப்பட்டிருந்த பஞ்சாக்க கலண்டர் பக்கங்கள் சட சடனு மாறி பதினோராம் திகதில நின்னிச்சு.... இன்னொரு மூலைல அவன்..... அவன் அலறின சத்தம் வெளில கேக்கலனாலும் அவன் அலறுகிறான் என்று வீடியோவில் தெளிவாகவே தெரிந்தது.... அவன் கண்களைத் தன் கைகளால் மூடி இருந்தான்... அந்தக்கைகள் ஃபுல்லா ரத்தம்.... அவன் கைகளைத் தளர்த்தியது தான் தாமதம்..... அவன் கண்களிரண்டும் நிலத்தில் வந்து விழுந்தது.... எங்களுக்கு மயக்கம் வராத குறை தான்..... அதுக்கப்புறமும் அவன் கைகளைத்துலாவித் துலாவி எதையோ தேடித் தேடிக் கத்தினான்..... அந்த அறைக்குள்ளேயே ஓடினான்.... அப்படி ஓடும் போது அவனறையிலிருந்த இன்னொரு அறை தானாகத் திறந்து கொண்டது..... அப்படியே நேரே ஓடிச் சென்று பால்கனி வழியே விழுந்து அவன் இறுதிப் பயணத்தைத் தொடங்கினான். பெரிய ஹோட்டலோட கடைசி மாடியில்லையா? அவனை வெறும் கூழாகத் தான் பெற முடிந்தது.... ஹோட்டலில் விசாரித்தோம்.... அவர்கள் உறுதியாகச் சொன்னார்கள்..... அவன் இறப்பதற்கு முதல் வருஷம், அதே நாளில் ஒரு பெண் அதே மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டாளாம். அதிலிருந்து அந்த பால்கனி கதவு திறப்பதில்லையாம். அந்தக் குறித்த மாடியில் இருப்போர் யாராவது விருப்பப் பட்டால் ஹோட்டல் சேவகன் ஒருவனின் உதவியுடன் மட்டும் அவர்கள் பால்கனியில் நிற்க அனுமதிக்கப் படுவார்களாம்.... அந்தக் கதவை இவன் திறந்திருக்க வாய்ப்பே இல்லையாம்..... இதை எந்த வகையான இறப்பு என்று சேர்ப்பது? நடந்ததைச் சொன்னால் நம்மைப் பைத்தியம் என்பார்கள்.... நானும் உங்கப்பாவும் பேயறைஞ்ச மாதிரித் திரும்பி வந்தோம்.... அப்போ தான் எங்களுக்கு ஒரு யோசனை தோன்றியது.... உடனே பதினோராம் திகதில இருந்து பதினைந்தாம் திகதி வரையான எல்லாப் பத்திரிகைகளையும் எடுததுப் பார்த்தோம்.... ஏன்னா அந்த ஹோட்டல் கலண்டர்ல பதினோராம் திகதி தான் காட்டிச்சு.... சோ பாதிக்கப்பட்ட யாரும்..... யாரும்னு சொல்றத விட ஏதும்னு சொல்லலாம்..... ஏன்னா அது கண்டிப்பா அமானுஷ்யம் தான்.... 'அது' தான் அவனை ஏதோ செய்திருக்கணும். ஒவ்வொரு பத்திரிகையா எடுத்து விரிச்சம்... எங்கள அதிக நேரம் காக்க விடல.... பர்ஸ்ட் பேப்பர்லயே விஷயம் இருந்திச்சு.... ' அது என்ன விஷயம்னு சுவாரசியமாக அவரைப் பார்த்தான் இனியன்...
 
  • Like
Reactions: Vimala Ashokan