• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடரும்.... (பாகம் 7)

Saunthu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Sep 20, 2021
52
16
8
Jaffna, Sri Lanka
சற்று இடைவிட்ட குழந்தை தொடர்ந்தது...
'அப்பாவோட சடங்கு முடிஞ்சதும் அம்மாவும் நானும் அந்தத் துக்கத்தில இருந்து மீள ரொம்ப நாள் எடுத்திச்சு... அப்புறம் நிதர்சனத்தைப் புரிஞ்சுக்கிட்டு அம்மாவுக்கு நான்.... எனக்கு அம்மானு வாழ ஆரம்பிச்சோம்.... மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறப்போ எங்க தோட்டத்தில உலாவிட்டு இருப்போம்.... எங்க மாமரத்தில இருந்த குட்டிக் குருவிங்க கிட்டவும், தோட்டத்தில இருக்கிற மரஞ்செடிகளிட்டயும் ஏதோ எங்க மொழில பேசி சிரிச்சிட்டிருப்போம்... அப்பிடி ஒரு நாள் நாங்க தோட்டத்தில இருக்கும் போது தான் வீட்டுக்குப் பின்புறத்தில இருந்து யாரோ பேசுற சத்தம் கேட்டிச்சு.... பொதுவா எங்க வீட்டுப் பக்கம் யாருமே வாறதில்ல... நாங்க மட்டும் தான்..... விதி விலக்கா எங்க வீட்டுக்கு வாற ஒரே ஆள் பாட்டி மட்டும் தான்..... அவங்களும் அவங்க பொண்ணப் பாத்துக்க அவங்க ஊருக்குப் போயிருந்தாங்க.... அவங்களும் இல்லாம இது யாரு புதுசானு.... நானும் அம்மாவும் கொஞ்சம் பயத்தோடவே போய்ப் பாத்தோம்.... அவன் இருந்தான்.... போதை தலைக்கேறி, கண்ணெல்லாம் சிவந்து பாக்கவே அருவருப்பா..... யார் கூடவோ ஃபோன் பேசிட்டு இருந்தான்.... கையில ஒரு சாராயப் போத்தில் வேற... அம்மா என்னைத்தன் கூடவே அணைச்சுக்கிட்டு மெல்ல அவன்கிட்ட போனாங்க..... அவன் அம்மாவையும் கூடவே என்னையும் கேவலமா ஒரு பார்வை பாத்தான்..... அந்தப் பார்வையோட அர்த்தம் புரியிற வயசில்லை எனக்கு..... ஒரு வேளை புரிஞ்சிருந்தா அம்மாவைக் கூட்டிக்கிட்டு அன்னைக்கே வேற எங்கயும் போய்ருக்கலாமோ என்னமோ?' குழந்தை ஆதிராவை அழுகையோட ஒரு பார்வை பாத்திச்சு... "அகிலத்தையே ஆட்டிப் படைக்கிற அம்மனையே ஆட்டிப்படைக்கும் ஒரு பார்வை..."
அம்மா அவன்கிட்டத் தயவாத் தான் சொன்னாங்க..... 'இங்க இப்பிடிலாம் வந்து குடிக்காதீங்கண்ணா..... நாங்க அமைதியா வாழுற குடும்பம்.... கணவர் இல்லாத இடத்தில நீங்க இப்பிடி வந்தாப் பாக்கிறவங்க தப்பாப் பேசுவாங்கண்ணா' அப்பிடினு.....

அதுக்கு அவன் 'பாக்கிறவங்களா? இங்க உங்களப் பாக்கிறதுக்கு யாரு இருக்காங்க?' அப்பிடினு சுத்திமுத்திப் பாத்திட்டு 'கணவர் இல்லையா? என்டு ஒரு மாதிரிச்சிரிச்சிட்டே கேட்டான்....
அதுக்கு அம்மா அவசர அவசரமா 'அப்பிடி இல்லணா.... அவர் வேலைக்குப் போயிருக்கார்.... அவர் வாற நேரம் தான்... அவருக்கு இதெல்லாம் பிடிக்காது' என்டு சமாளிச்சாங்க..... அப்பவாவது நான் பேசாம இருந்திருக்கலாம்....
அவதி அவதியா 'அப்போ அப்பா சாமிக்கிட்டப் போகலயாம்மா? இன்னைக்கு வந்திடுவாரா? சாமிகிட்டப் போய்ட்டார்; இனிமே வரவே மாட்டார்னு ஏன்மா பொய் சொன்னீங்க?' இப்பிடி என் பாட்டுக்கு ஏதோ சொல்லிட்டுப் போக அம்மா என்னை ஒரு பார்வை பாத்தாங்க..... ஏதாவது கதைக்கக் கூடாத விஷயம் நான் கதைச்சிட்டிருந்தா அம்மா அப்பிடித்தான் என்னைப் பார்ப்பாங்க.... அடுத்த நொடி நான் சைலண்ட் ஆகிடுவன்.... அப்பிடித்தான் அன்னைக்கும்.... அம்மா அப்பிடி ஏன் பாத்தாங்கனு புரியலனாலும்... ஏதோ பேசக்கூடாதுனு புரிஞ்சு சைலண்ட் ஆகிட்டன்....
அவன் அம்மாவையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தான்.... அம்மா ஒண்ணும் பேசாம நிண்ணாங்க.... அப்புறம் என்ன நினைச்சானோ தெரியல..... சத்தமே இல்லாமப் போய்ட்டான்.... அப்புறம் நானும் அம்மாவும் உள்ள போய்த் தாழ்ப்பாள் போட்டுக்கிட்டோம்.... அப்புறம் இரவாச்சு அம்மா என்னைச் சாப்பிடச் செய்து தூங்க வச்சிட்டாங்க.... அம்மா தூங்காம எதையோ யோசிச்சிட்டிருந்தாங்க... கொஞ்ச நேரம் பாத்திட்டு நானும் தூங்கிட்டன்... நல்ல தூக்கம் போய்ட்டிருந்தப்போ அழுகையோட ஒரு குரல் கேட்டிச்சு.... அம்மாவோட குரல்தான் சந்தேகமே இல்ல.... தூக்கக் கலக்கம் வேற.... திடுக்கிட்டு எழும்பிப் பாத்தன்.... கனவில்ல நிஜம் தான்.... ஓடிப்போய் என்னனு பாத்தன்.... அம்மா தான் எவனோ ஒருத்தனோட காலைப் பிடிச்சுக் கெஞ்சிட்டிருந்தாங்க... அவனோட கை அம்மாவோட தோளை இறக்கமாப் பிடிச்சிருந்திச்சு.... அவனுக்குப் பக்கத்தில நாங்க மாலைல பாத்த அதே ஆள் நின்னிட்டிருந்தான்.... அப்போதை பாத்த அதே கேவலமான பார்வை.... கூடவே இன்னொருத்தனும் அம்மா அழுறதை ரசிச்சுக்கிட்டு நின்னான்.... சாடிஸ்ட் (sadist)... எனக்கு ரொம்பக் கோவம் வந்திச்சு எங்கம்மா ஒருத்தனோட காலைப் பிடிக்கிறதானு.... கத்திக்கிட்டே அவங்கக்கிட்டப் போனன்.... என்னைப் பாத்து அம்மா திடுக்கிட்டாங்க.... அவங்க என்னை உள்ள போகச் சொன்னாங்க.... நான் போகல.... என்ன நடக்குதுனும் புரியல... அம்மா மறுபடியும் அவன்கிட்டக் கெஞ்ச ஆரம்பிச்சாங்க....
'எங்கள விட்டிடுங்கண்ணே.... நாங்க எங்கயாவது போயிட்றோம்.... உங்க கண்ணுலயே பட மாட்டோம்....' இப்பிடி அம்மா கெஞ்ச, அவன் 'நீ எங்க கண்ணில பட்டிருக்கக் கூடா பேபி.... இனிக் கண்ணில பட மாட்டன்னா எப்பிடி? சும்மா சொல்லக்கூடாது உம் புருஷன் ரொம்பக் குடுத்து வச்சவன் தான்... இப்பிடி அழகான பொண்ணுக்குப் புருஷனா இருக்கிறவன் தன்னோட வீட்டுக்கு ஒழுங்கான கதவு போட்டிருக்க வேணாமா? தட்டினோன விழுது.... பாவம் அவனும் அல்ப ஆயுசுல போய்ச் சேந்துட்டான்ல... அப்பறம் அண்ணானு சொல்லாத.... நம்ம உறவுக்குப் பேர் அதில்ல.... நாளைல இருந்து வேணும்னா எங்கயாவது போ..... இல்லனாக் காணாமக்கூடப் போ.... அதப்பற்றி எங்களுக்கு அக்கறை இல்ல... பட் இன்னைக்கு ஃபுல்லா எங்க கூட இரு' என்டு சொல்லி அம்மாவோட சாறியைப் பிடிச்சு இழுத்தான்....
அப்புறம் அவனும், நாங்க மாலைல பாத்த மற்றவனும் அம்மாகிட்ட மாறித் தப்பா நடந்துக்கிட்டாங்க.... என் கண்ணு முன்னாலயே... அஞ்சு வயசுக் குழந்த பாக்கிற விஷயமா அது? அதுவும் அந்தக் குழந்தையோட அம்மாவை ஒருத்தன் கதறக் கதற அனுபவிக்கிறதை..... எனக்கு என்ன நடக்குதுனு புரியிற வயசில்ல.... ஆனா நடக்கிறது தப்புனு புரிஞ்சுது.... அவங்க ரெண்டு பேரையும் என்னால முடிஞ்ச அளவு தள்ளிப் பாத்தன்.... அவங்க விலகவே இல்ல.... என்னைத் தள்ளிவிட்டாங்க.... பாத்துட்டு நின்ன மூணாவது ஆள் என் நெஞ்சில ஏறி மிதிச்சான்.... ஒரு கட்டத்துக்கு மேல கண்ணெல்லாம் சொருகி மூச்சு விட முடியாம இருந்திச்சு.... அம்மா அவங்களைக் கையெடுத்துக் கும்பிட்டு அழுதாங்க.... 'என்னோட குழந்தையையாவது விட்டிடுங்க பிளீஸ்'னு.. அதுக்கு ஒருத்தன் 'ஆமா அவகிட்ட என்ன இருக்கப் போது? அவள விட்டு இங்க வாடா'னு பேய் மாதிரிச் சிரிச்சுக்கிட்டே மூணாவதாளக் கூப்பிட்டான்.... அவனும் என்னை விட்டு அங்க போய்ட்டான்.... அம்மா அழுகையோடவே ஏக்கமா என்னைப் பாத்திட்டே இருந்தாங்க.... அப்பிடியே அவங்க உயிர் பிரிஞ்சிட்டு.... அவங்க செத்தது கூட எனக்குத் தெரியல.... நெஞ்சில ஏறி மிதிச்சதால எழும்பவும் முடியல.... அம்மாவோட இருந்த ரெண்டு பேரும் தான் சொன்னாங்க 'டேய் அவ செத்துட்டாடானு' அதைக் கேட்ட மூணாவது ஆள் 'என்னடா பாத்துப் பண்ண மாட்டீங்களா? இப்போ நான் என்ன பண்றது? உங்களுக்கு மட்டும் அவ கிடைச்சாப் போதுமா? எனக்கு வேணாமா?' என்டு கொண்டே அம்மாவ நெருங்கினான்....
அவங்களுக்கு அம்மா செத்தது விஷயமில்ல.... அவன் அனுபவிக்கலயே என்ட கவலை....
அவன் அம்மாவ நெருங்க ஒருத்தன் சொன்னான்.... 'டேய் அவ இப்போ பிணம்டா'னு.... அதுக்கு மற்றவன் 'பிணம்னா என்னடா அதுவும் பொண்ணோடது தான.... எனக்கு வேணும்'னு சொல்லி.... செத்தாப் பிறகு கூட என் அம்மாவ விடல....
கொஞ்ச நேரத்தால அவங்க போய்ட்டாங்க... என்னால அப்பவும் எழும்ப முடியல.... நிறைய நேரம் கழிச்சுத் தான் எழும்பினன்.... மெல்லமாத் தவழ்ந்து போய் அம்மாவைப் பாத்தன்... அவங்க கண்ணு ரெண்ணும் ஏக்கத்தோட என்னப்பாத்த திசையிலேயே திறந்திருந்திச்சு.... இடம் முழுக்க ஒரே ரத்தம்.... என் அம்மாவோடது..... ரொம்ப வலிச்சுது எனக்கு... அப்பாவோட சடங்குக்கப்புறம் அம்மா அழுது நான் பாத்ததே இல்ல... எவ்வளவு வேதனைனாலும் என்கிட்டக் காட்டிக்கிறதில்ல.... அன்னைக்கு அப்பிடி அழுதாங்க... இவங்க விட்டாங்களா? எனக்குத் தெரிஞ்ச என்னோட அம்மா நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமா கம்பீரமா அதே நேரம் கனிவா இருப்பாங்க... அன்னைக்குக் கண்டவங்க கால்ல எல்லாம் விழுந்து அழுதாங்க...எனக்காகவும் அவங்களுக்காகவும்.... ஈவிரக்கமில்லா ஈனப்பிறவிகள்.... அம்மாவை எப்பிடி சிதைச்சிட்டாங்க....
நான் என்னால முடிஞ்ச அளவுக்கு, அம்மா என்னை எப்பிடி சுத்தம் செய்வாங்களோ அப்பிடி அவங்கள சுத்தம் பண்ணினன்.. அப்புறம் பக்கத்தில இருந்த அவங்க சாறியை எடுத்து அவங்களுக்குப் போர்த்தி விட்டன்.... இரவெல்லாம் அந்த வீட்டுல தனியாத்தான் இருந்தன்.... தூங்காம அழுதிட்டே இருப்பன்... அப்புறம் என்னை அறியாமத் தூங்கிடுவன்.... சாப்பாடு தண்ணினு எதுவுமில்ல.... பத்து நாள் இப்பிடி இருந்து பதினோராம் நாள் நானும் செத்துப் போயிட்டன்.... ரொம்ப நாளைக்கப்புறம்தான் பாட்டி தகவல் குடுத்து போலீஸ் வந்தாங்க.... எங்க குடும்பத்தைச் சிதைச்சவன்ல ஒருத்தன் பெரிய இடம்.... தலைமைப் போலீஸதிகாரிய அவரோட பொண்ணப் பணயம் வச்சு மிரட்டி அந்த விஷயம் வெளில வராமப் பண்ணீட்டான்.... அதனால அவங்களும் கொலை நடந்துக்குக் குத்துமதிப்பா ஒரு டேற் (date) சொல்லிட்டு, குற்றவாளியைத் தேடுறோம்னு காலம் கடத்தினாங்க... என் ஆத்மா சாந்தியடையல.... அலைஞ்சிட்டே இருந்தன்..... அம்மாவைக் கொன்னவங்களப் பழி வாங்கணும்னு நினைச்சன்.... அதனால தான் கிருஷ்ணமூர்த்தித் தாத்தாக்கு (இனியன்,ஆதிராவின் தந்தை) விஷயத்தைத் தெரிய வச்சு அவங்கள உலகத்துக்கு முன்னால நிக்க வச்சுத் தண்டனை வாங்கிக் குடுக்க நினைச்சன்.... ஆனாலும் அது பத்தாதுனு எப்படியும் நான் கொலை பண்ணிருப்பன் தான்..... ஆனா அவர் கண்டுபிடிக்க முதலே இறந்திடுவார்னு புரிஞ்சுது..... அதனால தான் அந்த மூணு பேரையும் நானே கொன்னன்.....
ஒருத்தனைக் ஹோட்டல்ல வச்சு.... அவன் கண்களைப் புடுங்கி.... ஏன் புடுங்கினன் தெரியுமா? ஏன்னா அவன் தான் எங்கம்மாவைப் பாத்து சொன்னான்.... 'அவங்களோட கண்ணுல எங்கம்மா பட்டிருக்கக் கூடாதுனு...' அவன் கண்ணப் பறிச்சப்போ கத்தின கத்தலைக் கேக்கணுமே.... ஹஹஹா.....'
குழந்தையின் கண்களில் குரூரமேறிப் பேய்ச்சிரிப்புச் சிரித்தது....
'இன்னொருத்தன் என் நெஞ்சில ஏறி மிதிச்சான்ல.... அவனோட நெஞ்சில தலாணியை வச்சு அமுக்கி மூச்சுத்திணறல் ஏற்படுத்திக் கொன்னன்.... சாகும் போது ரொம்பக் கஷ்டப்பட்டான்.... ஆனாலும் அது பத்ததாது.... செத்தாப் பிறகு அவனோட ஒவ்வொரு உறுப்பையும் வெட்டி நாய்க்குப் போட்டன்.... அதுங்க எவ்வளவு சந்தோசமாச் சாப்பிட்டிச்சுத் தெரியுமா? எங்கம்மா செத்தாப் பிறகும் அவன் விடல.... அதனால அவன் செத்தாப் பிறகும் நான் விடல...
மற்றவன்.... அவன் தான் எங்கம்மாவை எல்லாரும் சித்திரவதை செய்யக் காரணமானவன்..... எல்லாரையும் எங்க வீட்டுக்குக் கூட்டி வந்தவன்... அதனால அவனுக்கு எல்லாத் தண்டனையும் சேர்த்துக் குடுத்தன்.... அவனோட நெஞ்சை அமுக்கி நெஞ்சுவலி வரவைச்சு,கண்ணுல மிளகாய்ப் பொடி போட்டு உயிரோடவே அவன் ஆணுறுப்பை சிதைச்சுக் கொன்னேன்....
மூணுமே "இனம் தெரியாதோரால் கொலைனு படிச்சிருப்பீங்க பத்திரிகைல.... அதுங்களப் பண்ணினது அடியேன் தான்..... நாலாவது கொலை யார்னு யோசிப்பீங்க....'

' அது' கேக்கக் கேக்கவே இனியனின் தொலைபேசி சிணுங்கியது.... யாரடா இதுனு கட் பண்ணப் போனவன் "சந்தானம் அங்கிள்" என்பதைப் பார்த்ததும் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான்.... மறுமுனை பதற்றமாகப் பேசியது....

'இனியா! எங்க பத்திரிகை அலுவலகத் தலைமை அலுவலர் சூசைட் பண்ணிட்டாருப்பா.... அதில்ல.... எனக்குத் தெரிஞ்சு அவர் சூசைட் பண்ண ஒரு றீசனும் இல்ல.... உன்கிட்ட இன்னைக்குத் தான் காவியன்பட்டுக் கேஸ் பற்றிச் சொன்னன்.....அவரும் தான் அவங்களுக்கு நியாயம் கிடைக்காததுக்கு ஒரு காரணமா இருந்தார்.... இன்னைக்கு அவரோட சூசைட் கூட அவங்களால நடந்ததோனு பயமா இருக்குப்பா..... நீ கவனமா இரு' என்று அவர் சொல்லச் சொலலவே கலவரமாக குழந்தையைப் பார்த்தான் இனியன்.... 'அது' அவனைப் பார்த்து அர்த்தமாகப் புன்னகைத்தது....