• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடரும்.... (பாகம் 8)

Saunthu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 20, 2021
Messages
52
இனியன் ஏதேதோ கூறிச் சந்தானம் அங்கிளைச் சமாளித்து விட்டு ஃபோனை வைத்தான்....

குழந்தை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தது....
'ஒரு அநியாயம் நடந்ததை அறிந்தும் அந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்காதவர்கள் அந்த அநியாயத்துடனே பயணிக்கிறார்கள்னு சொல்லுவாங்க..... அப்பிடி இருக்கும் போது எங்களுக்கு நடந்த அநியாயத்தை ஒருத்தர் வெளிக்கொணர முன்வந்த போதும் கெட்டவங்ககிட்ட காச வாங்கிட்டு அதை மறைச்ச ஒருத்தனை எப்பிடி விடலாம்? இப்பிடி எத்தனை உயிர்களுக்கு அநியாயம் பண்ணுவான்? அது தான்..... அவனுக்கும் வாழத்தகுதி இல்லனு முடிவு பண்ணினேன்..... இத்தனைக்கும் அவனுக்கும் ஒரு பொண்ணு இருக்கு.... அவனோட பொண்ணு மாதிரித்தானே என்னோட அம்மாவும்னு அவன் யோசிக்கவேயில்ல; அம்மாவை அவன் சித்திரவதை பண்ணல... அதனால அவனுக்கு அவன் செய்த தப்பை உணர வைக்கணும்னு மட்டும் நினைச்சன்... சித்திரவதை பண்ண நினைக்கல... அதனால இங்க வாறதுக்கு முதலே அவன் வீட்டுக்குப் போய் என்னோட அம்மா, அவனோட பொண்ணுனு ரெண்டு பேரையும் ஒப்பிட்டுக் கதைச்சு அவனோட மைண்ட பிரெய்ன் வோஷ் (brain wash) பண்ணன்... நிறைய நேரமா அழுதிட்டே இருந்தான்... இப்போ தற்கொலை செஞ்சுக்கிட்டான்.... அவனோட ஃபமிலிய நினைக்கக் கஷ்டமா இருக்கு.. ஏன்னா அப்பா இறந்தப்போ அம்மா அவ்ளோ கஷ்டப்பட்டாங்க.... ஆனாலும் அவங்கவங்க தப்புக்குத் தண்டனைனு ஒண்ணு இருக்குல... என்ன கேட்டீங்க உயிரோட மதிப்பு எனக்குத் தெரியுமாவா? அப்பாவை இழந்த வலியை அம்மாவோட சேர்ந்து நிறையவே அனுபவிச்சிருக்கன்... அம்மாவைக் கண்ணு முன்னாடி சித்திரவதை செய்யும் போது எத்தனையோ தடவை செத்தன்.... என் கையாலாகாத் தனத்தை நினைச்சா இப்பவும் வலிக்குது.... நானும் தானே செத்துப் போய்டன்.... அஞ்சு வயசிலேயே.... உயிரோட மதிப்புத் தெரிஞ்சதால தான் கொன்னேன்....
உங்களுக்குத் தோணலாம்..... ஏன் அந்தப் போலீஸ் அதிகாரியைக் கொல்லலனு.. ஏன்னா அவரை மிரட்டித்தான் உண்மையை வெளில வர விடல... ஆனாலும் எங்களக் கொலை செஞ்சவங்களத் தெரிஞ்சும் தன்னால ஒண்ணும் பண்ண முடியலையேனு ரொம்ப வருத்தப்பட்டார்.... அதனால அவர் மேல கோபம் வரல.... அவருடைய இயலாமையை நினைச்சு வருந்தத் தான் தோணிச்சு.... தண்டனை குடுக்க நினைக்கல.... இப்போ உங்க சந்தேகம் எல்லாம் தீர்ந்திடிச்சா?' என்று கேட்ட குழந்தையைப் பார்த்து அதிசயித்துத் தான் போயினர் எல்லோரும்.... தோற்றத்தில் குழந்தையாயினும் எவ்வளவு துல்லியமாக ஒவ்வொன்றையும் செய்திருக்கிறது.... அதுவும் தாய் மேல் எவ்வளவு பாசம் வைத்திருத்தால் தாய் இறந்த பின்னரும் வெளியேறாமல் அவருடனேயே இருந்து இறந்திருக்கும்...

குழந்தை கூறியதைக் கேட்ட புதிய சாமியார்.... 'இல்லை அம்மா... எனக்கு உன்னிடம் தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன... இனியன், ஆதிராவுக்கு வரும் கனவுக்குக் காரணம் நீங்களா? அதாவது நீயும் உன் தாயாருமா? அந்தக் கனவுகள் ஏன் அவர்களுக்கு வருகிறது? அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? அவர்களுக்கு வரும் கனவின்படி உங்களுடைய இடம்,அதாவது காவியன்பட்டில் நீங்கள் இருந்த இடம் ஆள்நடமாட்டம் இருந்ததற்கு அறிகுறியே இல்லாமல் பனங்காடாகிப் போயிருக்க அந்த மாமரம் மட்டும் எவ்வாறு நன்றாகவே இருக்கிறது; அது வெறும் கனவில் வந்தது மட்டும் தானா; இல்லனா அதுவும் நிஜமா? உன்னோட அம்மா இப்போ எங்க? அவங்க ஏன் இங்க வரல?' ஆதிராவோட கல்யாணம் நடக்கக் கூடாதுனு நீ நினைக்கிறியா? சாமியார் கேள்விகளை மீண்டும் அடுக்க குழந்தை மீண்டும் கையுயர்த்தி அவரை அமைதியாக்கியது....

' முதலே சொன்னன்ல.... நிறைய கேள்வி கேட்டா எனக்கு மறந்து போய்டும்.... இந்தக் கொலை எல்லாமே நான் தான் செஞ்சேன்.... நான் மட்டும் தான்.... அம்மாக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல...' சொல்லும் போதே தன்னாேட அம்மா இதை செய்யல என்கிற ஆதங்கம்.... அம்மா எந்தத் தப்பும் பண்ணலங்கிறத வெளிப்படுத்துற வேகம்; இவை அனைத்துமே சொல்லியது குழந்தை அம்மா மேல் வைத்திருந்த அன்பை....
'அம்மா இப்போ இங்க தான் இருக்காங்க'னு ஆதிராவை நோக்கிக் கையை நீட்டியது... எல்லோருக்குமே அதிர்ச்சி தான்... யாருக்குமே எதுவும் தெளிவாகப் புரியாமலிருக்க.... கலைவாணிக்கோ அடி நுனி என எள்ளளவுக்கும் ஒன்றும் புரியவில்லை..... அவர் மனவோட்டம் 'இங்கே பூசைக்காகத் தானே அழைத்து வந்தார்கள்; பார்த்தால் பெரிய அதிர்ச்சியாக குழந்தை ஒன்று ஆன்மாவாகி வந்து நின்று ஏதேதோ சொல்கிறது... பத்தாததுக்கு ஆதிரா, இனியன், கனவுனு என்ன இதெல்லாம்?' என்றவாறு இருந்தது... தன்னுடைய பிள்ளைகள் எதையோ தன்னிடம் மறைத்திருக்கிறார்கள் என்று மட்டும் நிதர்சனமாயிற்று.... ஆனால் ஏன்? பிள்ளைகள் இருவருமே கலைவாணியிடம் எதையுமே மறைத்ததில்லை... இப்போது மறைத்திருந்தாலும் கூட அது தனது நன்மைக்காகத் தான் இருக்குமென்பதில் எள்ளளவும் ஐயமில்லை அவருக்கு.... ஆனாலும் தன்னுடைய பிள்ளைகளுக்கு பிரச்சினை என்று, பூசைக்கு ஏற்பாடு செய்து ஒரு பட்டாளமே கூடி நிற்கிறது... ஆனால் பெற்ற தாய்க்கு என்ன நடக்கிறதென்பது சிறிதும் புரியவில்லை.... நினைக்கும் போதே அழுகை வருமளவு வலித்தது அந்தப் பேதைப் பெண்ணுக்கு.... ஆனால் தன் பிள்ளைகளுக்குக் கனவு வந்திருப்பதும் அந்தக் கனவில் வந்த நிறைய விடயங்கள் உண்மையாக இருந்திருக்கின்றன என்பதும் ஊர்ஜிதமாகிற்று.... ஆனால் யாரந்தக் குழந்தை? யார் அதன் தாய்? ஏன் ஆதிராவைத் தாய் என்கிறது? இவற்றை விட அந்தக்குழந்தையைத் தெரிந்த உணர்வொன்று தனக்குள்ளும் எழுவதைக் கலைவாணியால் உணர முடிந்தது.... ஆனால் அது எதனால் எனப் புரியவில்லை...

இப்போது நம் பழைய சாமியார் கேட்டார்....' புரியவில்லையேம்மா? உனது அம்மா ஆதிராவா? எங்களுக்குப் புரியுமாறு சொல்லேன்'

'என்னோட அம்மா உங்க ஆதிரா இல்ல.... என்னோட அம்மாவோட மறு ஜென்மம் தான் ஆதிராம்மா..... அப்போ அவங்க தானே என் அம்மா.... அம்மாக்கு என்னை மாதிரி ஆன்மாவா அலையுறதுக்கு எழுதப்படல..... அவங்க நல்ல மனசு.... அவங்க அலையாமலே மறு ஜனனம் எடுத்திட்டாங்க... எனக்குத் தான் இறந்தும் மோட்சம் கிடைக்கல.... அதுவும் நல்லதுக்குத் தான்; இல்லனா அம்மாவக் கொன்னவன் இந்நேரம் அடுத்த பொண்ணைத் தீர்த்துக் கட்டப் பிளான் பண்ணிட்டு இருந்திருப்பான்.... என்ன பண்ண? எனக்கும் அவங்களைப் பழி வாங்கிறதுக்கான சக்தி கிடைக்க இவ்வளவு காலம் எடுத்திடுச்சு.... அது வரைக்கும் தூங்க இடம் வேணும்லயா? வீடு வேற தூர்ந்து போய்டிச்சு.... என்ன தானிருந்தாலும் அம்மா கூட இருந்த இடம்.... அதனால அங்கயே இருக்கணும்னு தோணிச்சு.... சோ (so) அந்த மாமரத்தில இருக்கிற தாழ்வான கிளைல தான் தூங்குவேன்.... அது தான் என் வீடு.... அதனால தான் அந்த மாமரம் மட்டும் ஒண்ணுமாகாம நல்லா இருக்கு....
அம்மா உடனேயே மறு ஜென்மம் எடுத்திட்டதாலே அவங்க மாயத்தோற்றத்தை மட்டும் தான் என்னால உருவாக்க முடிஞ்சுது.... அவங்க முகபாவனைகளைக் கொண்டு வர முடியுமே தவிர அவங்களைப் பேச வைக்க முடியாது..... பேசுற மாதிரிக் காட்டினாலும் அவங்க சொல்லுறது மற்றவங்களைக் கேக்க வைக்க முடியாது..... கிருஷ்ணமூர்த்தி தாத்தாகிட்டப் போகும் போது கூட அம்மாவோட தோற்றத்தை உருவாக்கி அவங்களக் கூட்டிப் போற மாதிரிப் போனன்; ஆனா நான் தான் பேசினேன்.... '

இப்போது எல்லோருக்கும் சிறிது தெளிவு ஏற்பட, சாமியாரே தொடர்ந்தார்... ' இப்போ உன்னோட அம்மாவோட தோற்றத்தை உருவாக்கிக் காண்பிக்க முடியுமா உன்னால?'
குழந்தையும் 'முடியும்' எனக்கூறி தாயின் தோற்றத்தைக் காட்டியது..... அனைவரும் ஸதம்பித்துத் தான் போயினர்... உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியும் சிறுசிறு வித்தியாசங்கள் தவிர அந்தத் தாய் அச்ச அசல் ஆதிரா தான்..... அனைவரும் அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்க அந்தப் பெண்ணைப் பார்த்து 'பூர்வீகாஆஆஆஆஆஆ' எனக் கதறியபடியே மயங்கிச் சரிந்தார் கலைவாணி....
 
Top