• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடரும்.... (பாகம் 9)

Saunthu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 20, 2021
Messages
52
மயங்கிய நிலையிலிருந்த கலைவாணியின் கண்களிலிருந்து கண்ணீர் தடையின்றி வழிந்து கொண்டிருக்க, உதடுகளோ 'பூர்வீகா' என்ற பெயரையே திரும்பத் திரும்ப முணுமுணுத்துக் கொண்டிருந்தன. அகரன் தான் தண்ணீர் தெளித்து அவரை எழுப்பி ஆசுவாசப்படுத்தினான்.. கலைவாணி சகஜ நிலைக்குத் திரும்ப சில நிமிடங்கள் எடுத்தன. அவரிடம் கேட்கப் பல கேள்விகள் இருந்த போதும் எல்லோரும் யோசனையாக அவரைப் பார்த்தனரே தவிர, அவரின் உடல்நிலை கருதி யாரும் வாய் திறந்து எதுவும் கேட்டாரில்லை. அதனால் கலைவாணியே கூறலானார்..

'அவள் "பூர்வீகா". மாநிறமும், கார்மேகக் கூந்தலும், வாட்ட சாட்டமான உடல்வாகும் கொண்ட ஒரு அழகி. அவ குரல்; அப்பிடி ஒரு தேவாமிர்தமாக இருக்கும்...
எங்க ஊர்ல ரெண்டு பிரிவான ஆக்கள் இருந்தாங்க... யாரும் கூட, குறைவுனு இல்ல... ஆனா பேசிப் பழகிக்கிறதில்லை. எதனால அப்பிடி ஒரு விரிவு வந்திச்சுனு தெரியல. முன்னொரு காலத்தில யாரோ ஒரு பொண்ணு ஒருத்தன ஏமாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்டதாகவும், அதனால வந்த பிரச்சினையால தான் இப்பிடி ரெண்டு பிரிவாகிட்டதாகவும், நிறைய வருஷங்களைக் கடந்திட்டதால இப்போ அந்த ரெண்டு குழுக்களுக்குமிடையில பிரச்சினைனும் ஒண்ணுமில்ல,அதே மாதிரி பரஸ்பர ஒற்றுமையும் இல்ல என்ட மாதிரி ஊரில இருக்கிற வயசானவங்க சொல்லுவாங்க... உண்மை பொய் தெரியல. அந்த ரெண்டு குழுக்களுக்குமிடையில, ஒரு சைட்ல பிறந்தவ நான்; மற்ற சைட்ல பிறந்தவ பூர்வீகா. அதனால எங்களுக்குள்ள உறவு ஏற்படுத்திக்க வாய்ப்பேயில்ல...
எங்க ஊர்ல இருந்து ஒரு பதினைஞ்சு இருபது கிலோமீட்டருக்கு அப்பால ரெண்டு காலேஜஸ்(colleges) இருக்கு. எங்களோட ரெண்டு பிரிவுக்கும் வெவ்வேற காலேஜ் தான். ஏதாவது போட்டினு (competition) வெளில போனாலே தவிர மற்றபடி அவங்கள சந்திக்கிறதுக்குச் சான்ஸ் இல்ல. ரொம்ப ரொம்பக் குறைவு தான். அப்பிடி இருக்கும் போது தான் ஸ்டேட் லெவல் மியூசிக் கொம்பெடிஷன் (competition) கோல்(call) பண்ணினாங்க. அதுக்கு ஃபர்ஸ்ட்(first) காலேஜ் லெவல்ல போட்டி வைச்சு, அதில செலக்ட் (select) ஆகிறவங்க ரெண்டு மாசம் வெளியூர்ல போய் தங்கி நின்னு, அங்க இருக்கிற ஒருத்தங்க கிட்ட ரெயினிங்(training) எடுத்திட்டு, அப்புறமா அங்க இருக்கிற பெரிய ஸ்டேஜ்(stage) ஒண்ணுல அரங்கேற்றம் பண்ணனும். காலேஜ் லெவல்ல செலக்ட் ஆகி அங்க போய் தங்கி நிக்குற அந்த ஒரு ஸ்டூடண்ட்டோட மொத்த செலவையும் காலேஜே பாத்துக்கும். வெளியூர்ல பாேய் தங்கி நிக்கணும்றதால நிறைய பேருக்கு அதில இன்ரெஸ்ட் (interest) இருக்கல. ஆனா எனக்கு அந்த ஒப்பசுனிற்றியை (opportunity) விட மனமில்லை. அதனால காலேஜ் லெவல்ல போட்டி பாேட்டு முதலாவதாவும் வந்திட்டேன். அடுத்த மாசமே வெளியூருக்குப் புறப்பட வேண்டியிருந்தது. வீட்ல யாருக்கும் என்கூட வந்திருக்கிற அளவுக்கு முடியுமா இருக்கல. அதோட காலேஜோட முழுக் கண்காணிப்புக்குக் கீழ நான் போறதால அவங்களுக்கு ஓரளவு ஓகேவா இருந்திச்சு. அடுத்த ஒரு மாசத்தில வெளியூர்ல நின்னேன். தங்குமிடம், சாப்பாடு எல்லாமே பக்காவா அரேஞ்(arrange) பண்ணி இருந்தாங்க. போன முதல் நாள் கொஞ்சம் ஓகேவா தான் இருந்திச்சு. ஆனா ரெண்டாம், மூணாம் நாள் ரொம்ப போரடிக்க(bore) ஆரம்பிச்சுது. எங்கே பார்த்தாலும் தனிமை! தனிமை! தனிமை! சரி இன்னொரு ரெண்டு நாளைக் கஷ்டப்பட்டுக் கடத்திட்டா அப்புறம் ஆறாம் நாள்ல இருந்து சங்கீதப்பயிற்சிக்குப் போக ஆரம்பிச்சிடுவேன். அப்புறம் எல்லாம் சரி ஆகிடும்னு பல்லைக் கடிச்சிட்டே ரெண்டு நாள் கடத்திட்டன். அப்புறம் ஆறாவது நாள் அங்க போய் சேர்ந்தேன். அங்க போனா அடுத்த அதிர்ச்சி. அங்க எங்க மொழினு சொல்லிக்க யாருமே இல்ல. ஸ்டேட் லெவல் கொம்பற்றிசன் இல்லையா? பல்வேறு மொழி பேசுற ஆக்களும் இருந்தாங்க. ஆனா தமிழ்னு சொல்லிக்க யாருமே இல்ல. எனக்கு மயக்கம் வராத குறை தான். சரினு கோடினேற்றர் (co-ordinator) மாதிரி இருந்த ஒராள்கிட்டப் போய் டீரெய்ல்ஸ்(details) கேட்டன்.
அங்க பல்வேறு மொழி சம்பந்தப்பட்ட ஆக்கள் இருக்காங்களாம்; எல்லாரும் ஸ்டூடண்ட்ஸ். ஒவ்வொரு மொழிக்குரிய ஆக்களையும் பயிற்றுவிக்க அந்தந்த மொழிக்குப் பொறுப்பானவங்களும் இருக்காங்க. எல்லாருக்குமே போட்டி ஒண்ணாத்தான் நடக்கும்; ஜட்ஜஸ்கு (judges) எல்லா மொழியிலுமே பாண்டித்தியம் இருக்கும். எனக்கு எல்லாமே புதுசா இருந்திச்சு. முக்கியமா எல்லா மொழிக்கும் ஒண்ணாவே ஜட்ஜ் பண்றது... நான் கேள்விப் படவே இல்ல. அப்பிடியே திரும்பி ஓடிடலாமானு இருந்திச்சு; சரி வந்தது வந்திட்டம். என்னதான் நடக்குதுனு பார்த்திட்டுப் போய்டுவமேனு முடிவு பண்ணன். தமிழுக்குக் கார்த்திகேயன்னு ஒருத்தர் தான் பயிற்றுவிப்பாளர். டீடெய்ல்ஸ் விசாரிச்சிட்டு கார்த்திகேயன் சார் கிட்டப் போனன். அங்க தான் முதல் தடவை என்னோட பூர்வீகாவப் பாத்தன். 'பூர்வீகா', சொல்லும் போதே புன்னகை பூத்தது கலைவாணியின் உதடுகளில்...
அவ அழகு தேவதை; அன்புக்கு அரசி. அவளும் நானும் மட்டும் தான் தமிழ் மொழியில் போட்டிக்குப் போயிருந்த ஆக்கள். யாருமே இல்லனு இருந்த எனக்கு அவ இருந்தது ஒரு பெரிய சப்போட் (support). ரெண்டு பேர் மட்டுமே இருந்ததால எனக்கு அவள்; அவளுக்கு நான்னு இருந்தோம். ஒரே ஹோட்டல்ல தான் ஸ்டே பண்ணி இருந்தோம். அப்புறம் ஹோட்டல் மானேஜர் கிட்டப் பேசி ஒரே ரூம் செயார் (share) பண்ணிக்கிட்டோம். அப்போ தான் நான் அவளைப் பத்தியும் அவ என்னைப் பத்தியும் நிறையத் தெரிஞ்சுக்கிட்டோம். பூர்வீகா ரொம்ப நல்லாப் பாடுவா. அவளும் நானும் ஹோட்டல்லயும் ஒண்ணாப் பயிற்சி எடுத்துப்போம். எங்க ஆளுங்களுக்குள்ள இருந்த வேற்றுமை எங்களுக்குள்ள இருக்கல. பூர்வீகாக்கு என்னை விட ரெண்டு வயசு கூட. ஆனாலும் ஒண்ணுமண்ணாத் தான் பழகினோம். அப்போ ஏதோ காலநிலை ஒத்துவராம எனக்கு காய்ச்சல் வந்திச்சு. ஒரு கிழமை ரொம்பக் கஷ்டப்பட்டேன். பூர்வி தான் என்னோட அம்மா மாதிரி இருந்து என்னைக் குழந்தை மாதிரி பாத்துக்கிட்டா. அப்புறம் காலநிலையும் கொஞ்சம் மாற ஆரம்பிச்சதாலயும் முக்கியமா அவளோட கவனிப்பிலயும் நல்லாவே தேறிட்டேன். இப்பிடியே நாளும் கிழமையும் போகப் போக நானும் அவளும் இன்னும் அதிகமாவே குளோஸ்(close) ஆகிட்டோம். அப்பிடியே ஒரு நாள் போட்டியும் வந்து சேர்ந்திச்சு. ரொம்ப பெரிய போட்டி. எல்லா மொழியும்னா சும்மாவா? எல்லாருமே ரொம்ப நல்லாப் பெபோர்ம் (perform) பண்ணி இருந்தாங்க. இறுதி முடிவு தெரியிறதுக்காக ஆவலோட வெய்ட் (wait) பண்ணிட்டிருந்தோம். முதல் மூன்று பேருக்கு பதக்கம், ரொபீஸ் (trophies) அதோட சான்றிதழ்களும் கொடுத்தாங்க. ஃபர்ஸ்ட் வர்ற அந்த ஒரு போட்டியாளருக்கு ஒரு லட்சம் பணமும் கொடுத்தாங்க; இரண்டாவதுக்கு ஐம்பதாயிரம்; மூணாவதுக்கு இருபதாயிரம். நாலாவதில இருந்து பத்தாவது ஆள் வரை ஆறுதல் பரிசு ஐயாயிரம் படி. அதோட பங்குபற்றின எல்லோருக்குமே சான்றிதழ் கொடுத்தாங்க.
ஒவ்வொருத்தரா பின்னிருந்து பெயர் வாசிக்க ஆரம்பிச்சாங்க. எனக்கும் பூர்விக்கும் கொஞ்சம் பதற்றமா இருந்திச்சு. அதில என்னால ஆறாவதாத் தான் வர முடிஞ்சுது. இன்ப அதிர்ச்சி என்னனா பூர்வி தான் ஃபர்ஸ்ட். ஏதோ நானே ஃபர்ஸ்ட் வந்த மாதிரி ஃபீல் ஆச்சு எனக்கு. அவ்ளோ சந்தோசம். ஏன்னா நாங்க ரெண்டு பேரும் அப்பிடித் தான் பழகினோம்.
போட்டி முடிஞ்ச கையோடவே என்னை ஷொப்பிங் கூட்டிப் போய், இதை சாப்பிடு அதை சாப்பிடுனு வகை வகையா வாங்கித் தந்தா. அப்புறமா ஒரு நகைக் கடைக்குக் கூட்டிப்போய் ரெண்டு செய்ன் (chain) ஓடர் (order) பண்ணா.
'இங்க குடுக்கிறியே. நாளைக்கு நாம கிளம்பிடுவம்ல, எப்பிடி எடுப்ப?' என்று கேட்டதுக்கு, 'அதுக்கென்ன அப்பா அடிக்கடி தொழில் விஷயமா இங்க வருவார். அவரோட நானும் வந்தாப் போச்சு'னு ஒரு மாதிரிச் சிரிச்சிட்டே சொன்னா. அந்த சிரிப்போட அர்த்தம் எனக்குப் புரியல. 'சரி அது ஏன் ரெண்டு செய்ன்?' அப்பிடினு கேட்டதுக்கு, 'அது என்னோட ஆளுக்கு' அப்பிடினு சொன்னா. 'என்னடீ புதுசு புதுசாச் சொல்ற? வந்த இடத்தில யாரயாவது பிடிச்சிட்டியா?'னு கேட்டதுக்கு.... 'செல்லமடி நீ. அப்பிடியே கற்பூரம் மாதிரிப் பிடிச்சுக்கிட்டியே'னு சொன்னாள். என்னோட பூர்வியா அதுனு நான் ஆச்சர்யமாப் பாக்க, அவளே சொன்னாள் 'எனக்கு இங்க ஒருத்தர ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்குக் கலை. அவருக்கும் தான். நாங்க கார்த்திகேயன் சார்கிட்டப் பயிற்சி முடிஞ்சதுக்கப்புறம் சும்மா ஊர் சுத்துவோம்ல? அப்பிடி ஒரு நாள் ஒரு ஷாபெ்பிங் மோல் (shopping mall) ல தான் அவரைப் பார்த்தேன். லவ் அட் பர்ஸ்ட் சைட்லலாம் (love at first sight) எனக்கு நம்பிக்கை இருந்ததே இல்ல. அன்னைக்கு தான் எனக்கு அதோட அருமை தெரிஞ்சுது. அவரும் ஏதோ யோசனையா என்னைப் பாத்திட்டே இருந்தார். ஆச்சரியம் என்னனா அவரே என்கிட்ட வந்து என்னைப் பிடிச்சிருக்குனு சொன்னார். எனக்கு என்ன சொல்றனே தெரில. இப்டிலாம் கூட நடக்குமானு இருந்திச்சு. யோசிக்கவே இல்ல உடனே ஓகே சொல்லிட்டன்' நீ அப்போ ஒரு டெடி பியரைப் பாத்திட்டு (Teddy bear) இருந்தா. அதனால இதைக் கவனிக்கல. அவர் தான் என்னோட வாழ்க்கை கலை. அவரும் நம்ம ஊர் தான். எங்க சைட் ஆள் தான். இங்க ஏதோ மாக்கெட்டிங் (marketing) கு வந்திருக்காராம்.சோ ஒரு பிரச்சினையும் வராது எங்க கல்யாணத்தில....'
'அடிப்பாவி.... நாலு நாளா உன்னை பாத்திட்டுத் தான் இருக்கன். தட்டில கோலம் போடுறதும், தனிமையில சிரிக்கிறதும்.... ஏதோ சரியில்லைனு தோணிச்சு. ஆனா இது தான்னு இப்போ தான் இந்த மரமண்டைக்குப் புரியுது. அது தான் அப்போ நகையைப் பற்றிக் கேட்டதுக்கும் சிரிச்சியா? கள்ளி. ஏதோ நீ நல்லா இருந்தா சரி பூர்வி. உன்னோட செலக்ஷன் தப்பாகாது என்ட நம்பிக்கை எனக்கிருக்கு. வீட்லயும் ஆலோசனை கேட்டுச் செய். நாகை்குக் கிளம்புறோம்னு சொன்னியா அவர்கிட்ட?'
'ஆமா. சொன்னேன். அவருக்கு இன்னைக்கு மீட் பண்ண முடியாதாம். ரொம்ப வேலையாம். நம்பர் வாங்கிட்டேன் கலை. ஃபோன் பண்ணிக் கதைச்சுப்பேன். அவர் இன்னும் ஒரு வருஷத்துக்கு இங்க தான் இருப்பாராம். சோ இந்த ஒரு வருஷமும் அப்பா வரும் போது, அவருக்குத் தகவல் சொல்லிட்டு.... நானும் வந்து அவரைப் பார்ப்பேன்' னு சொல்லி அழகாக் கண் சிமிட்டினா. அது இன்னும் என் கண்ணுக்குள்ளயே இருக்கு. அந்தப் பூர்வி, என்னோட பூர்வி இனிமே இல்லையா? கடவுளே நான் என்ன செய்வேன்? என்று கதறி அழ ஆரம்பித்தார் கலைவாணி.
 
Top