• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடர்பியல்.... பாகம் -34

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
197
78
28
Maduravoyal

தொடர்பியல்.... பாகம் -34

கேஸ்-3 ( பிரகாஷ் - ரோஜா)

வீட்டிற்கு வந்த பிறகும் ரங்கசாமியை நினைத்து மிகவும் வருந்தினாள் ராகினி.
அவங்க வீட்டில் இருப்பவர்களையாவது பார்த்து பேசி இருக்கலாம்.... என்று நினைத்து கொண்டாள்.

அக்கா, ஏன் டல்லா இருக்க?.... என்றாள் ரூபினி.

அதெல்லாம் ஒண்ணும் இல்லை ரூபி..... லேசா தலைவலி.

தைலம் தேய்த்து விடவா....

இல்ல வேண்டாம்.....

சரி, வா அக்கா சாப்பிடலாம்....

இல்ல ரூபி.... எனக்கு பசிக்கல.... நீ சாப்பிடு....

வா அக்கா.... நான் மட்டும் தனியா சாப்பிட ஒரு மாதிரி இருக்கு.....

சரி இரு.... ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வரேன்.

சரி அக்கா.....

இது என்ன பேக்?.... என்று ரூபியை பார்த்து கேட்டாள் ராகினி.

நம்ம சனிக்கிழமை ஊருக்கு போறோம் இல்ல.... அதுக்காக பேக் பண்ணி வச்சிருக்கேன்.

அதுக்குள்ளேயே வா.....

அக்கா.... இன்னைக்கு வியாழக்கிழமை.... நாளைக்கு ஒரு நாள் தான் இருக்கு.....

சனிக்கிழமை காலையிலேயே போனா தான நாம திரும்ப மறுநாளே வர முடியும்.... என்றாள்.

ஏதோ யோசனையில் இருந்தாள் ராகினி. தலைவலி இன்னும் அதிகமாக ஆவது போல இருந்தது.

ராகினிக்கு சூடாக டீயை எடுத்து வந்து கொடுத்தாள் மம்தா.

தேங்க்ஸ் மம்தா.... பயங்கர தலைவலி.... நானே டீ கேட்கலாம் ன்னு நினைச்சேன்.....

உன் முகத்தை பார்த்தவுடனே தெரிஞ்சது.... அதான் அம்மா கிட்ட கேட்டு டீ வாங்கி வந்தேன்.

ஸ்மைல் செய்தாள் ராகினி.

ரூபி.... பேக்கிங் எல்லாம் ஆயிடிச்சு போல?

ஆமாம் அக்கா.... நீங்களும் பேக் பண்ணிக்கோங்க....

எனக்கு டென் மினிட்ஸ் போதும் பேங்கிங்க்கு.... என்றாள் மம்தா.

நான் கிட்சனுக்கு போய் ஆன்டிக்கு ஹெல்ப் பண்றேன்..... என்று சொல்லி விட்டு வெளியே சென்றாள் ரூபினி.

அவள் சென்றதும்.....

என்ன மம்தா.... எதுக்கு இப்போ ஊருக்கு அவளையும் கூட்டிக்கிட்டு போக சொல்ற?

ஏய்.... நான் எங்கே சொன்னேன்....அவ தான் என்னையும் வர சொன்னா.....

யாருன்னு தெரியல.... இப்போ எப்படி இவளை கூட்டிக்கிட்டு போறது?.... அங்கே போய் அவனால இவளுக்கு எதாவது ஆபத்து வந்துச்சு ன்னா....

உன் ஊர் தான.... நீ ஏன் பயப்படற?

என் ஊர்ல தான இப்படி ஒரு கொடுமை என் தங்கச்சிக்கு நடந்திருக்கு.....

எனக்கு தெரிஞ்ச வரைக்கும் உன்னோட கிளோஸ் ரிலேட்டிவ்ஸால ரூபிக்கு பிரச்சனை ஆகி இருக்கும் ன்னு எனக்கு தோணல.....

என்னடி சொல்றே?

ஆமாம் ராகினி..... நீ சொல்றதை வச்சு பார்க்கும் போது..... ரூபிக்கு நடந்த இந்த கொடுமைக்கு காரணம் இறந்து போன உன்னோட அத்தையோ இல்ல அவங்க ஓரகத்தியோ இல்ல அவங்க வீட்டுக்காரரோ இல்ல.......வேற யாரோ தான்.... அவன் யாருன்னு நான் கண்டுபிடிக்கிறேன்.... நீ கவலைப்படாதே.... இந்த ரெண்டு நாள் நம்ம வாழ்க்கையிலேயே ரொம்ப ரொம்ப முக்கியமான நாள்..... அவனை கண்டுபிடிக்கிறது மட்டும் இல்லாம.... அவனுக்கு தண்டனையும் கொடுத்து விட்டு தான் வருவோம்.

என்ன சொல்ற மம்தா.... ஏற்கனவே எனக்கு தலைவலி அதிகமாக இருக்கு.... இப்போ மண்டையே வெடிக்குது.... என்றாள் ராகினி.

டோண்ட் ஒரி.... நான் பார்த்துக்கொள்கிறேன்.... என்றாள் மம்தா.

***************

மறுநாள் காலை.....

ரூபி....

சொல்லு அக்கா....

நான் இன்னைக்கு லேபுக்கு போகனும்.... லீவு முடிஞ்சிடிச்சு.....

போயிட்டு வா அக்கா..... நான் ஆன்டியோட இருந்துக்கிறேன்.....

சரி ரூபி..... பசிச்சா கேட்டு சாப்பிடு.... வெட்கப் படாத..... அவங்க நம்ம அம்மா மாதிரி தான்....

சரிக்கா.... நீ கவலைப்படாதே....

ஓகே.... நான் கிளம்பவா?

அக்கா.... இன்னைக்கு ஈவினிங் டாக்டர் வரச் சொன்னார் இல்ல?

ஆமாம்....

செக்கப் போகும் போது.... டாக்டர் கிட்ட நான் படிக்க போகலாமா ன்னு கேட்டு 10த் 12த் எக்ஸாம் எழுதவா? .....

இது ஏன் நமக்கு தோணல.... என்று நினைத்து தன்னையே நொந்து கொண்டாள் ராகினி.

சரி ரூபி..... கண்டிப்பா கேட்கலாம்..... டியூஷன் சென்டர்ல சேர்த்து விடறேன். நீ படிச்சு எக்ஸாம் எழுது..... காலேஜ்ல சேர்க்கிறேன்.

ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா.... ஐ லவ் யூ.... என்று சொல்லி ராகினியை கட்டிக் கொண்டாள் ரூபினி.

அக்கா..... ஒண்ணு கேட்க மறந்திட்டேன்..... அத்தானும் நம்ம கூட ஊருக்கு வராரா?

இல்ல ரூபி.... அவருக்கு வேலை இருக்கும்.....நாம போகலாம்.....

அக்கா.... என்னோட 10த் புக்ஸ் நம்ம வீட்ல இருக்கும் அதெல்லாம் எடுத்து வந்திடலாம்....

சிலபஸ் மாறி இருக்குமா ன்னு தெரியல ரூபி.... எதுக்கும் நீ வேணும்னா அதை ரெஃபரன்ஸூக்கு எடுத்து வந்துக்கோ.... நம்ம கீழ் வீட்டில் இருக்கும் முக்கியமான சாமான்களை மட்டும் ஒரு ரூம்ல போட்டுட்டு வீட்டை காலி பண்ணி அதையும் வாடகைக்கு விட்டுவிட்டு வந்திடலாம்.

ஏன் அக்கா.... அப்புறம் நம்ம ஊருக்கு போனா எங்கே ஸ்டே பண்றது....

அது.... வந்து....

நம்ம அத்தை வீட்டில் ஸ்டே பண்ணிக்கலாம் இல்ல?.... அதை மறந்திட்டேன்.... என்று அவளே சொல்லிக் கொண்டாள்.

ரூபி....

என்ன அக்கா?

ஒண்ணு சொல்றேன்.... நீ டென்ஷன் ஆகாம பதட்டப் படாம கேட்கனும்.... சரியா?

சொல்லு அக்கா....

நம்ம அத்தை இறந்திட்டாங்க....

என்ன அக்கா சொல்ற.... என்று அதிர்ச்சி ஆனாள் ரூபினி.

ஆமாம் ரூபி.... அவங்க இறந்ததால தான் நான் உன்னை இங்க கூட்டிக்கிட்டு வந்தேன்....

அக்கா.... என்று சொல்லி அவளுடைய தோளில் சாய்ந்து அழுதாள் ரூபினி.

ரூபி.... எமோஷனல் ஆகாத....

அத்தை எப்படி இறந்தாங்க?

ஹார்ட் அட்டாக்....

மறுபடியும் அழுதாள் ரூபினி. சிறிது நேரத்திற்கு பிறகு அவளே சமாதானம் ஆனாள்.

பெரிய அத்தை எப்படி இருக்காங்க?

அவங்க நல்லா இருக்காங்க....

சரிக்கா.... நீ கிளம்பு.... சீக்கிரமா வா....

சரி ரூபி.... டேக் கேர்.... பை.... 4 மணிக்கு வந்து உன்னை செக்கப்புக்கு கூட்டிக்கிட்டு போறேன்.... ஓகே வா?

ஓகே அக்கா.... பை.... என்று சொல்லி விட்டு ரூமில் அமர்ந்து அழுதாள் ரூபினி.

***************

லேபிற்கு சென்றனர் ராகினி மற்றும் மம்தா.
ராகினியை அனைவரும் நலம் விசாரித்தனர்.
டேவிஸ் சார் ராகினியிடம்...

ஏன் மா நெக்ஸ்ட் வீக்ல இருந்து வரவேண்டியது தானே.... இப்போ பரவாயில்லையா?.... என்றார்.

ஐ ஆம் ஆல் ரைட் சார்.... தேங்க்ஸ்....

ஓகே மா.... கேரி ஆன் வித் யுவர் ஒர்க்.... என்று சொல்லி விட்டு அவருடைய கேபினுக்கு சென்று விட்டார் டேவிஸ் சார்.

வேலைகளை மும்முரமாக பார்த்து கொண்டு இருந்தார்கள் அனைவரும்.

லஞ்ச் பிரேக்கில் டேவிஸ் சாரிடம் ஈவினிங் டாக்டர் அப்பாயின்மெண்ட் இருப்பதால் இரண்டு மணி நேரம் பர்மிஷன் தருமாறு கேட்டாள் ராகினி.

சரி என்றார் டேவிஸ் சார்.

3 மணி அளவில் ம்தாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள் ராகினி.

ஆட்டோவில் செல்லும் போது மாதவனுக்கு கால் செய்தாள்.

ஹலோ....

ராகினி.... எப்படி டி இருக்க?..... டயர்டா ஆகல இல்ல?

இதை தவிர உனக்கு வேற டயலாக்கே தெரியாதா டா.....

உன் மேல அக்கறையா இருக்கிறது தப்பா.....

இல்ல டா.... சும்மா தான் சொன்னேன்..... கோச்சிக்காத.... திகட்டற அளவுக்கு லவ்வை பொழியாத டா.....

சரி டி.... இதுக்கு மேல அப்படி பேசல போதுமா?

மாதவா.... என் செல்லம் இல்ல.... கோச்சிக்காத டா.... நான் சொன்னேன் இல்ல பிரவீன் தாத்தா தான் நடேசன் தாத்தா ன்னு.... அவரை போய் பார்த்து விட்டு வந்தேன்.....

ஹூம்.... ஓகே....

அவர் நல்லா ஆயிட்டாரு.....

ஓ ஹோ.....

ஆனா அந்த கார்ல இருந்த ரங்கசாமி தான் இறந்திட்டாறாம்.....

அப்படியா..... என்று மிக சாதாரணமாக கேட்டான்.

என்னடா.... பட்டும் படாம பேசுற....

பின்ன எப்படி பேச சொல்ற....

சரி.... விடு நீ கோபத்தில இருக்க..... நானும் ரூபியும் டாக்டர் செக்கப் போறோம்.

சரி போயிட்டு வாங்க....

நீ வரவேண்டாம்.....

ஓகே.....

மாதவா.....என்று கோபமாக சொன்னாள் ராகினி.

என்னடி நீ சொல்றதை தான கேட்கிறேன்.... அது கூட தப்பா?

அப்படியா?..... சரி..... பை..... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாள் ராகினி.

அவனும் கோபத்தினால் திரும்ப கால் செய்யவில்லை.

திகட்டற அளவுக்கு லவ்வை பொழியாத என்று ராகினி சொன்னதே அவனுடைய மூளையில் ஓடிக் கொண்டிருந்தது. ஏஞ்சல் சூசைடு கேஸை மர்டர் தான் என்பதை ஆதாரங்களுடன் எஸ்.பி ஆஃபீஸில் சப்மிட் செய்துவிட்டு வெளியே வரும்போது தான் ராகினி கால் செய்தாள். அவளுடன் டாக்டர் வீட்டிற்கு செல்வதற்காகவே அவசரமாக தன் வேலைகளை முடித்திருந்தான். மதிய உணவை கூட அவன் சாப்பிடவில்லை. அவள் ஃபோனை வைத்த பிறகு தன் ஸ்டேஷனிற்கு சென்று அமர்ந்தான். தலைவலி வந்துவிட்டது.

சார்( கான்ஸ்டபிளிடம்).... ரொம்ப தலைவலிக்குது.... நான் வீட்டுக்கு போறேன்.... எதாவது ன்னா எனக்கு கால் பண்ணுங்க..... என்றான் மாதவன்.

சரிங்க சார்.... என்றார் கான்ஸ்டபிள்.

பிறகு வண்டியை எடுத்து கொண்டு வீட்டிற்கு வந்து படுத்தான்.

***************

ஆஸ்பிட்டலில்.....

வெளியே சேரில் அமர்ந்து இருந்தனர் ராகினி மற்றும் ரூபினி.

ஏன் அக்கா டல்லா இருக்க?

அதெல்லாம் ஒண்ணும் இல்லை ரூபி.... லேசா தலைவலி....

நேத்திலிருந்தே உனக்கு இன்னும் சரி ஆகலையா?

இல்ல ரூபி.... மார்னிங் பரவாயில்லையா தான் இருந்துச்சு.... இப்போ மறுபடியும் வலிக்குது.....

அக்கா.... நான் படிக்கிறதை பற்றி டாக்டர் கிட்ட கேட்கலாமா?

கண்டிப்பா ரூபி.... கவலைப்படாதே..... எனக்கு தெரிஞ்ச வரைக்கும் டாக்டர் ஓகே தான் சொல்லுவார்.

ஹூம்.... என்று சொல்லி சந்தோஷ பட்டாள் ரூபினி.

அக்கா.....

சொல்லு.....

அத்தான் வரல?

ஏன் நான் தான் வந்திருக்கேனே.... அப்புறம் என்ன.... என்றாள் சற்று கோபமாக.

இல்ல அக்கா.... நீ தானே சொன்ன ஊருக்கு வரமாட்டாரு வேலை இருக்கும்னு.... அதனால இப்போ ஹாஸ்பிடலுக்கு வருவாரோ ன்னு நினைச்சு கேட்டேன்.... என்றாள் ரூபினி.

அவள் வருத்தப்படுவதை புரிந்து கொண்ட ராகினி....

சாரி ரூபி.... அவருக்கு வேலை இருக்கும்.... சும்மா அவரை தொல்லை பண்ணக் கூடாதுன்னு தான்.... நான் தான் அவரை வர வேண்டாம்னு சொன்னேன்.....

ஓ.... ஓகே அக்கா.... என்றாள் ரூபினி.

நெக்ஸ்ட் நீங்க உள்ள போகலாம் என்று நர்ஸ் ராகினியிடம் சொன்னார்.

ஓகே சிஸ்டர்.... என்று சொல்லி விட்டு தன் ஃபைலையும் ரூபினியின் ஃபைலையும் எடுத்து கொண்டு எழுந்தாள் ராகினி.

அவர்கள் முன்னே வந்து நின்றான் மாதவன்.

***************

தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.