• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடர்பியல்..... பாகம் -36

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
197
78
28
Maduravoyal

தொடர்பியல்..... பாகம் -36

கேஸ்-3 ( பிரகாஷ் - ரோஜா)

வீட்டிற்கு அழைத்து சென்றார் ராகினியின் பெரிய அத்தை.

உள்ளே சென்றதும் அங்கிருந்த தன் அத்தையின் ஃபோட்டோ வை பார்த்து கதறி அழுதாள் ரூபினி. ராகினிக்கும் கண்கள் கலங்கியது. சிறுவயதில் விடுமுறைக்கு வந்துவிடுவார்கள்.... அவர்களுடைய அத்தைகள் இருவரும் அவர்கள் இருவருக்கும் பிடித்த உணவை சமைத்து தருவார்கள்.... பழங்கள்.... பலகாரங்கள் பல சமைத்து வீட்டிற்கு செல்லும் முன் இருவருக்கும் புது துணி மணிகள் எல்லாம் வாங்கி கொடுத்து அனுப்புவார்கள். பக்கத்து ஊரில் இருந்து வரதுக்கே இவ்வளவா மா..... என்பார் ராகினி யின் அப்பா.

பெரிய அத்தை அவர்கள் இருவரையும் சமாதானப் படுத்தி பிறகு அவர்களுக்கு சாப்பாடு பரிமாறினார்.

ரூபி நீ எல்லாம் சாப்பிடலாமா டா கண்ணு?

நாண் வெஜ் மட்டும் கொஞ்ச நாளைக்கு சாப்பிட வேண்டாம்னு டாக்டர் சொன்னாரு அத்தை..... என்றாள் ரூபினி.

அதான் வெறும் நண்டு குழம்பு மட்டும் செஞ்சேன்..... மீதி எல்லாம் வெஜிடேரியன் தான். உனக்கு சாப்பிட கொடுக்கலாமோ இல்லையோ ன்னு யோசனையிலேயே செய்யல.

பரவாயில்லை அத்தை..... நீங்க இவ்வளவு செஞ்சதே போதும்..... என்றனர்.

ஆன்டி..... நண்டு குழம்பு சூப்பரா இருக்கு.....
என்றாள் மம்தா.

மம்தா அக்கா என்னை வெறுப்பேத்தரீங்களா?
என்றாள் ரூபினி.

இல்ல ரூபி.... உங்க அக்காவை வேணும்னா வெறுப்பேத்துவேன்.... ஆனா உன்னை வெறுப்பேத்த மாட்டேன்.... என் செல்லம் நீ.... டாக்டர் உன்னை நாண் வெஜ் சாப்பிடலாம் ன்னு சொன்ன அடுத்த நொடி நானே இங்கு கூட்டிக்கிட்டு வரேன்..... மறுபடியும் அத்தையை செய்து தரச் சொல்லலாம்..... என்ன ஆன்டி செஞ்சு தர மாட்டீங்க?

உங்களுக்கு இல்லாததா மா..... என்றார்.

அனைவரும் சிரித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

கை கழுவும் போது ராகினி மம்தாவின் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.

ஓகே ராகினி.... நான் பார்த்துக்கொள்கிறேன்..... என்று சொல்லி விட்டு வந்து.

ரூபி..... என்றாள்.

சொல்லுங்க அக்கா.....

வீடு பெரிசா இருக்கே..... எனக்கு சுத்திக் காட்டு.... அப்புறம் வா.... உங்க வீட்டுக்கு போகலாம்..... உங்க அக்கா மெதுவா வரட்டும்.....

ஏன் அக்கா.... நீ இப்போ வீட்டுக்கு வரலையா?

இல்ல நான் அத்தைக்கு ஹெல்ப் பண்ணிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்.... நீங்க ரெண்டு பேரும் போங்க.... ஆட்டோவில் போங்க.... நான் நைட்டு வந்திடறேன்.....என்றாள் ராகினி.

ஓகே அக்கா..... நான் கிளம்பட்டுமா அத்தை..... என்றாள் ரூபினி.

நைட்டு இங்க வந்திடுங்க டின்னர் சாப்பிட்டு விட்டு இங்கேயே தூங்குங்க..... அங்க வீடு கிளீனா இருக்காது..... என்றார்.

இல்ல அத்தை நைட்டு அங்கே ஸ்டே பண்ணினா தான் நாளைக்கு காலைல கிளீன் பண்ணி விட்டு டூலெட் போட்டு விட்டு நாளைக்கு நைட்டு ஊருக்கு போக டிரெயின் பிடிக்க முடியும் அத்தை.... என்றாள் ராகினி.

சரி..... அவங்களும் இருக்கட்டும்..... நீங்க மூணு பேரும் ஒண்ணாவே கிளம்பி போங்க.... எதுக்கு அவங்களை ஃபர்ஸ்ட் போக சொல்ற?

இல்ல அத்தை.....ரூபிக்கு புக்ஸ் ஏதோ எடுத்து பேக் பண்ணனுமாம்.... அதான் அவங்களை முதலில் போய் பார்த்து எடுத்து வைக்க சொல்லலாம் ன்னு.....

உனக்கு இங்கு எதாவது வேலை இருக்கா மா.....

ஆமாம் அத்தை....வாணி அத்தை கிட்ட எங்க வீட்டு டாக்குமெண்ட்ஸ் கொடுத்து வச்சிருந்தேன்..... அதை அவங்க பிரோவில் இருந்து எடுத்து தரமுடியுமா அத்தை.....

எடுத்து தரேன் மா..... அதுக்காகவா அப்புறமா போற ன்னு சொன்ன?

அது மட்டுமல்ல அத்தை..... உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்..... என்று மிக மெதுவாக அவரது காதில் மட்டும் கேட்கும் படி சொன்னாள் ராகினி.

ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்ட ராகினியின் பெரிய அத்தை.....

சரிம்மா.... அவங்க வேணும்னா முதலில் போகட்டும்.... நீ இங்கே இருக்கும் வேலை முடிச்சிட்டு போகும் போது அவங்களுக்கும் சேர்த்து டின்னர் செய்து கொடுத்து விடறேன்.... அதே போல நாளைக்கு அங்க வேலையை முடிச்சிட்டு லஞ்ச் க்கு இங்கு வந்து சாப்பிட்டு விட்டு அப்புறமா ஊருக்கு போகனும்.... சரியா?....

சரிங்க அத்தை.... என்றாள் ராகினி.
ரூபினி மற்றும் மம்தாவை ஆட்டோவில் ஏற்றி விட்டாள் ராகினி.

ஆட்டோவில் செல்லும் போது.....

மம்தா அக்கா..... நான் உங்களுக்கு ஊரை சுற்றி காட்டனும் ன்னு நினைச்சேன் ஆனா எனக்கே யாராவது சுத்திக் காட்டனும் போல..... அந்த ஆலமரத்தை தவிர எல்லாமே மாறி போயிருக்கு..... மூணு இல்ல நாலு வருஷத்துக்கு முன்னாடி நானும் அப்பாவும் இங்கே ஒரு பார்க்கிற்கு வந்திருக்கோம்..... அது எங்க ன்னு தெரியல.... என்று சொல்லிக்கொண்டே வெளியே பார்த்து கொண்டு இருந்தாள் ரூபினி.

அந்த பார்க் இந்த பில்டிங்கிற்கு பின்னாடி தான் மா இருக்கு..... என்றார் அந்த ஆட்டோ டிரைவர்.

ஓ.... அப்படியா அண்ணா..... என்றாள் ரூபினி.

ஆமாம் மா..... நீ இந்த ஊர்ல தான் இருந்தியா மா?

ஆமாம் அண்ணா..... எங்க வீடு இந்த ஊர்ல தான் இருக்கு.....

ஓ.... சரிம்மா...... என்றார் ஆட்டோ டிரைவர்.

அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டார் அந்த ஆட்டோ டிரைவர்.

தேங்க்ஸ் அண்ணா..... என்றாள் ரூபினி.

மம்தா காசை கொடுத்தாள்.

அக்கா..... இருங்க நான் பே பண்றேன்.... அக்கா என் கிட்ட காசு கொடுத்து அனுப்பி இருக்கா.....

அதை நீ பத்திரமா வச்சுக்கோ..... நானும் உன் அக்கா தான.... நான் பே பண்றேன் என்று சொல்லி விட்டு ஆட்டோ டிரைவருக்கு காசைக் கொடுத்து அனுப்பி வைத்தாள் மம்தா.

அக்கா.... வாங்க.... இது தான் எங்க வீடு..... என்று சொல்லி உள்ளே அழைத்து சென்றாள் ரூபினி.

இருங்க அக்கா..... மாடியில் உள்ள ஆன்டி வீட்டில் சாவி இருக்கும்.... நான் வாங்கி கொண்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு மாடிக்கு ஏறிச் சென்றாள் ரூபினி.

இரண்டாவது மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தான் ஒரு இளைஞன். ரூபினி படி ஏறி வருவதை பார்த்து விட்டு மறுபடியும் மேலே ஏறி சுவற்றின் பின் பக்கமாக மறைந்து அவளைப் பார்த்தான்.

இவளா?..... இவளுக்கு உடம்பு சரி ஆயிடிச்சா?.... நம்மை அடையாளம் தெரியுமா இவளுக்கு.... என்று நினைத்து மறைந்து இருந்தான்.

ஆன்டி..... என்று குரல் கொடுத்து விட்டு முதல் மாடியில் இருந்த வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தாள் ரூபினி.

அப்போது வெளியே வந்த பெண்.....

ரூபி..... உனக்கு உடம்பு சரி ஆயிடிச்சா மா?
பேசறீயே..... என்றார்.

ஆமாம் ஆன்டி..... சரி ஆயிடிச்சு.....

ரொம்ப சந்தோஷம் மா.....

வா.... வீட்டுக்கு உள்ள வா..... ராகினி எங்கே?

இல்ல ஆன்டி....கீழ மம்தா அக்கா வெயிட் பண்றாங்க..... ராகினி அக்கா அத்தை வீட்ல இருக்கா.... நைட்டு வந்திடுவாங்க.....சாவி கொடுங்க ஆன்டி.....

சாவியா.... இரு மா..... என்று சொல்லி விட்டு உள்ளே சென்று பார்த்து விட்டு....

நேத்து ராத்திரி ராகினி ஃபோன் பண்ணி சொன்னா வருவோம் ன்னு..... நான் கோவிலுக்கு போற நேரத்துல வரப்போறீங்க ன்னு நினைச்சு மாடில இருக்குற பேச்சுலர்ஸ் கிட்ட கொடுத்து விட்டு போனேன்.... இரு மா..... என்று சொல்லி விட்டு.....படிக்கட்டின் பக்கமாக நின்று..... பாண்டி..... பாண்டி..... என்றார் அந்த ஆன்டி....

இரும்மா.... என்று சொல்லி விட்டு மாடி ஏற தன் முட்டியை பிடித்து கொண்டு ஏற முயன்றார்.

இருங்க ஆன்டி.... நான் போய் வாங்கி கொண்டு வருகிறேன் என்று சொல்லி படி ஏறினாள் ரூபினி.

அவள் வருவதை பார்த்து விட்டு வீட்டிற்குள் சென்று தாழ்ப்பாள் போட்டு கொண்டான் பாண்டியன்.

ரூபி.... என்று கூறிக் கொண்டே மேலே ஏறி வந்தாள் மம்தா.

பாதி படி ஏறியவள்..... இருங்க அக்கா.... சாவி மாடி வீட்டில் இருப்பவரிடம் இருக்காம் நான் வாங்கி கொண்டு வருகிறேன் என்றாள்.

வா.... நானும் வரேன்.... அப்படியே மாடியை பார்க்கலாம் என்று சொல்லி அவளும் ஏறிச் சென்றாள்.

பெல் அடித்தாள் ரூபினி. கதவு பக்கத்தில் இருந்தும்..... அவளுக்கு தன்னை அடையாளம் தெரியுமா என்று நினைத்து பயந்தவாறே நின்று கொண்டு இருந்தான் பாண்டியன்.

**************

என்ன விஷயம் மா..... சொல்லு..... என்றார் பெரிய அத்தை ராகினியிடம்.

அத்தை..... நீங்களும் வாணி அத்தையும் எனக்கு ஒண்ணு தான்....

தெரியும் மா.... சொல்லு.....

நான் கேட்பதற்கு கொஞ்சம் நிதானமாக யோசித்து பதில் சொல்லுங்க.....

சொல்லுமா.....

நீங்களும் வாணி அத்தையும் மாத்தி மாத்தி தான ரூபியை பார்த்து கொண்டீங்க....

ஆமாம் மா..... ஏன் மா.....

நீங்க ரெண்டு பேரும் இல்லாத போது யாரு பார்த்துக்கிட்டாங்க....

அந்த மாதிரி எப்பவுமே விட்டது இல்லையே மா..... எதுக்கு மா..... ஏன் இப்படி கேட்குற.....

அத்தை.... நல்லா யோசிச்சு பாருங்க அத்தை.... நிச்சயமா நீங்க ரெண்டு பேரும் போக வேண்டிய விஷயங்கள் இல்லாம இருந்திருக்காது..... முக்கியமா ராத்திரி நேரத்தில எங்கேயாவது அவளை வீட்டில விட்டு விட்டு நீங்க ரெண்டு பேரும் போயிருக்கீங்களா?

பகலில் போயிருக்கோம் மா......... அப்போது ரோஸி நர்ஸ் பார்த்து கொண்டு இருந்தா....

ரோஸி நர்ஸா?

ஆமாம் மா.....

அவங்க எங்க இருக்காங்க?

கொயம்பத்தூர் தான்..... பகல்ல அந்த பொண்ணு பார்த்துப்பா..... ராத்திரியில் நானோ இல்ல வாணியோ ரூபி கூடவே படுத்துப்போம்.... என்றார்.

அந்த நர்ஸோட அட்ரெஸ் இருக்கா.....

அட்ரெஸ் வாணிக்கு தான் தெரியும்.....எதாவது டைரியில எழுதி வச்சிருப்பா..... நான் தேடித் தரேன்.... என்றார்.

சரிங்க அத்தை.....

எதுக்கு மா.... இதெல்லாம் கேட்கிற?

அத்தை..... இவ்வளவு நாளா தப்பான மருந்து கொடுத்திருக்காங்க நம்ம ரூபிக்கு.....

என்னம்மா சொல்ற?..... அந்த ரோஸி பொண்ணை பார்த்தா அப்படி தெரியலையே....

சரி அத்தை.... நீங்க அட்ரெஸ் மட்டும் கொஞ்சம் தேடிக் கொடுங்க.... நான் நேரா போய் பார்த்து விட்டு வரேன்.....

ஓ.... அதுக்கு தான் நீ அவங்க ரெண்டு பேரையும் அனுப்பிட்டியா?

ஆமாம் அத்தை..... ரூபிக்கு தெரியாது.....

சரிம்மா.... புரியுது.....

அத்தை.....

சொல்லுமா.....

வாணி அத்தை இறந்ததிற்கு அந்த நர்ஸ் வந்தாங்களா?

வந்து உடனேயே போயிட்டா..... அவளுக்கு கல்யாணம் ன்னு கேள்விப்பட்டேன்.....

அப்படியா?..... அந்த உட்பீ பேரு என்ன?..... எங்க இருக்காருன்னு தெரியுமா அத்தை?

இல்லமா..... அன்னைக்கு சீக்கிரமா போயிட்டாளே..... ரூபியை பார்த்து கொள்ளவில்லையே ன்னு நான் சொன்னேன்.... அப்போது யாரோ சொன்னாங்க மா..... அவளுக்கு கல்யாணம்..... இதுக்கு மேல வரமாட்டேன் ன்னு வாணி கிட்ட அவ சொல்லிட்டதாகவும் சொன்னாங்க.... வேற நர்ஸ் பார்த்து வச்சிக்கோங்க ன்னு சொன்னாங்க.... அப்புறம் தான் உனக்கு ஃபோன் பண்ணி வரச் சொன்னோம்..... என்றார் அத்தை.

யாருன்னு ஞாபகம் இருக்கா அத்தை?

இல்லையே மா.... என்றார் அத்தை.

யாராக இருக்கும்...... இப்போதைக்கு தன் தங்கை ரூபினிக்கும் நர்ஸ் ரோஸிக்கும் கண்டிப்பாக ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருக்கும் என்று நினைத்து கொண்டாள். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நர்ஸ் ரோஸிக்கும் தன் தங்கையின் கற்பு பரிபோனதற்கும் காரணம் இருக்கும்.... என்று உறுதியாக நம்பினாள் ராகினி.

***************

தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.