தொடர்பியல்..... பாகம் -38
கேஸ்-3 ( பிரகாஷ் - ரோஜா)
என்னம்மா நான் கொடுத்த பைல்ல வீட்டு டாக்குமெண்ட்ஸ் எல்லாம் இருக்கா?..... என்றார் ராகினியின் அத்தை.
இருக்கு அத்தை.... அதை எடுத்துக்கிட்டேன்.....
அந்த நர்ஸ் அட்ரெஸ் கிடைச்சதா?
அதைத் தான் தேடிக்கிட்டு இருக்கேன் அத்தை.
எதோ ஒரு டைரியில் தான் மா எழுதி வைப்பா வாணி..... என்றார்.
நான் தேடிப் பார்க்கிறேன் அத்தை.... என்று சொல்லி விட்டு தேடிக் கொண்டு இருந்தாள் ராகினி.
அத்தை....
சொல்லுமா.....
வாணி அத்தையோட ஃபோன் எங்கே.....
அது..... அது வந்து..... இரும்மா..... என்று சொல்லி கப்போர்டில் இருந்து எடுத்து கொடுத்தார்.
சார்ஜ் போடாததால் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது. சார்ஜ் போட்டு ஆன் செய்தாள் ராகினி. பத்து நிமிடத்திற்கு பிறகு அந்த ஃபோனை எடுத்து கான்டாக்ட்ஸ் லிஸ்ட் ஓப்பன் செய்து பார்த்தாள். அதில் ரோஸி நர்ஸ் என்று இருந்தது. அந்த நம்பரை தன் ஃபோனில் ஸேவ் செய்து கொண்டாள் ராகினி. பின்னர் அந்த ஃபோனில் மெஸேஜ், வாட்ஸ் அப் மற்றும் மெயில்கள் செக் செய்தாள் ராகினி.
அப்போது அதில் ராகினிக்கு மெஸேஜ் எழுதி இருந்தார் அவளுடைய அத்தை. டைரி படம் .... பட்டாம்பூச்சி சிறகடித்து பறக்கும்..... என்று இருந்தது. ஒன்றும் புரியவில்லை ராகினிக்கு..... பிறகு அங்கிருந்த கப்போர்டில் தேடினாள்.... அப்போது பட்டாம்பூச்சி அட்டையுடன் ஒரு டைரி கிடைத்தது..... அதில் தேடிப் பார்த்தாள்.... எதுவும் இல்லை.... பால் கணக்கு.... வீட்டு கணக்கு.... மருந்து கணக்கு..... என்று எழுதி இருந்தார். பின்னர் அட்டையை பிரித்தாள் ராகினி. அதில் ஒரு கடிதம் இருந்தது. அதை பிரித்து படித்தாள்.
ராகினி.... இந்த லெட்டர் உனக்கு கிடைக்கும் போது நான் உயிரோட இருப்பேனா இல்லையா ன்னு தெரியல..... இங்கு நர்ஸாக வேலை செய்யும் ரோஸி மீது எனக்கு சந்தேகமாக இருக்கிறது.... பகலில் வேலை பார்த்து விட்டுட்டு ரூபிக்கு மாத்திரை கொடுத்து டயாப்பர் போட்டு விட்டு போயிடுவா..... மறுநாள் தான் வருவா..... எனக்கும் வடிவு அக்காவுக்கும்( பெரிய அத்தை) அவ தான் மாத்திரை கொடுப்பா.... நாங்க சாப்பிட்டு விட்டு மாத்திரை போட்டுக்கிட்டு தூங்கிடுவோம். அதுக்கு பிறகு அவ இந்த வீட்டுக்கு வந்து எதோ பண்றா.... என்னன்னு தெரியல.... எதை வச்சு கண்டுப்பிடிச்சேன்னா..... நான் ஒரு நாள் இரண்டு மாத்திரைல ஒரு மாத்திரை தான் போட்டுக்கிட்டேன்..... இன்னொன்று கீழே விழுந்திடிச்சு..... அதை தேடிப் பார்த்தேன் கிடைக்கல.... அப்படியே விட்டுட்டேன்..... நான் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது ஏதோ சப்தம் கேட்டது. கண்களை திறந்து பார்த்தேன்.... அரை மயக்கத்தில் இருந்தேன்.... ஆனால் எனக்கு கண்டிப்பாக தெரியும் அது நர்ஸ் ரோஸி தான்.... கூடவே இரண்டு ஆண்கள் இருந்தது போல தெரிந்தது. நான் அசைவதை கவனித்த அந்த நர்ஸ் என் ரூம் கதவை வெளி பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டாள். ரூபியின் அறைக்கு தான் அவர்கள் சென்றனர். என்ன என்று தெரியவில்லை. கண்டிப்பாக நான் நாளை கண்டுபிடித்து உனக்கு தகவல் சொல்கிறேன்..... நாளை ஒரு மாத்திரை கூட போடாமல் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து உன்னிடம் சொல்கிறேன்.... ரூபினிக்கு மட்டும் அவர்கள் எதாவது தவறு செய்கிறார்கள் என்று எனக்கு தெரிந்தால் அவர்களை கொன்று விடுவேன்.... நீ கவலைப்படாதே ராகினி..... என்று எழுதி இருந்தார் அவளுடைய அத்தை.
அதை படித்து முடித்ததும் ராகினியின் கண்களில் இருந்து நீர் வழிந்தோடியது.
அதையும் எடுத்து கொண்டு அவளுடைய பெரிய அத்தையிடம்....
அத்தை நீங்களும் வாங்க போகலாம்.... என்றாள் ராகினி.
எங்க மா?.... உங்க வீட்டுக்கா?
இல்ல அத்தை.... சென்னைக்கு.....
இல்லமா..... நான் இங்கேயே இருக்கிறேன்..... எனக்கு இங்கேயே இருந்து பழகிடிச்சு..... அதுவும் இல்லாம நான் தனியா இருக்கிறேன்னு உங்க மாமா ரொம்ப கவலைப்பட்டார்.... அதான் வேலையை விட்டுவிட்டு இங்கேயே வந்திடப்போறார்..... அடுத்த வாரம் வந்திடுவார்.
ஓ.... அப்படியா அத்தை..... சரிங்க அத்தை.... நீங்க உங்க உடம்பை பார்த்துக்கோங்க..... நான் கிளம்பவா?
இந்தாம்மா நைட்டுக்கு டின்னர்.... என்று சொல்லி ஒரு பெரிய டிபன் பாக்ஸில் இட்லியும் மற்றும் இன்னொரு பாத்திரத்தில் சாம்பார் வைத்து கொடுத்தார்.
ஓகே அத்தை.... நான் கிளம்பறேன்.....
நாளைக்கு மதியம் லஞ்ச் இங்க வந்து சாப்பிட்டு விட்டு அப்புறமா ரெயில்வே ஸ்டேஷனுக்கு போங்க மா.....
சரிங்க அத்தை..... பை.....
பை ராகினி.....
***************
நானும் என் பிரெண்ட் சுரேஷூம் வாரா வாரம் சனிக்கிழமை ராத்திரி தண்ணி அடிப்போம்..... அதுக்கு அப்புறம் எதாவது ஒரு பொண்ணை புக் பண்ணுவோம்..... எல்லாம் முடிச்சிட்டு அனுப்பிடுவோம்..... ஒருநாள் எங்களுக்கு பொண்ணு கிடைக்கல..... அப்போ அந்த பார்ல இருந்த ஒருத்தர் எங்க கிட்ட எவ்வளவு பணம் இருக்குன்னு கேட்டாரு..... வழக்கமா நாங்க ஆளுக்கு ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி தான் பொண்ணை புக் பண்ணுவோம்..... வேறு வழி இல்லாததால ஆளுக்கு இரண்டாயிரம் ரூபாய் தரோம் ன்னு சொன்னோம்..... ஆறாயிரம் கேட்டாரு அவரு.... அப்புறம் கெஞ்சி கேட்டு ஐந்தாயிரம் கொடுத்தோம்.....
அப்புறம்..... சொல்லுடா.....
ஒரு வீட்டுக்கு கூட்டிகிட்டு போனாரு..... அந்த வீட்டில் ஒரு பொண்ணு இருந்துச்சு.... தூங்கிக் கொண்டிருந்துச்சு..... ஏன் தூங்கறா என்றோம்.... அவ தூங்கினா என்ன.... உங்க வேலையை முடிச்சிட்டு போங்க.... ன்னு சொன்னாரு..... அவர் கூட ஒரு லேடி இருந்தாங்க.... அவங்களை பார்க்க நர்ஸ் மாதிரி இருந்தாங்க..... நாங்க முதலில் பயந்தாலும்.... எங்களுக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சு போச்சு..... அதனால வாரத்துக்கு இரண்டு நாள் போனோம்.....
அடப்பாவிங்களா..... என்று சொல்லி ஓங்கி ஒரு அறை விட்டாள் மம்தா.
அப்புறம்..... என்ன பண்ணீங்க சொல்லு.....
ஒரு நாள் என் ஃபிரெண்டு சுரேஷ் பாதுகாப்பு இல்லாம அந்த பொண்ணு கூட இருந்திட்டான்..... உண்மை தெரிஞ்சு அதுக்கு அப்புறம் எங்களை அவங்க விடவே இல்லை..... டபுள் பேமெண்ட் தரோம் ன்னு சொல்லி ஒரு நாள் போகும் போது அந்த வீட்டில் இருந்த அம்மா கண் விழிச்சிட்டாங்க ன்னு பயந்து.... எங்களை அனுப்பிட்டாங்க..... அந்த பணத்தைக் கூட திருப்பி தரல..... மறுநாளே அந்த வீட்டில் இருந்த அந்த அம்மா இறந்திட்டாங்க..... அதுக்கு பிறகு அந்த நர்ஸையும் அந்த ஆளையும் நாங்க பார்க்கவே இல்லை....
உன் ஃபிரெண்டு சுரேஷ் எங்க இருக்கான்?
சுரேஷ் அந்த ஆளை தேடி பணத்தை வாங்கனும் இல்ல அந்த ரூபினியோட ஒரு நாள் படுக்கனும் ன்னு சொல்லி தேடிக்கிட்டு இருக்கான். அவங்க அக்கா சென்னைக்கு கூட்டிக்கிட்டு போயிட்டாங்கன்னு தெரிஞ்சு அவன் சென்னைக்கு போயிருக்கான்.
சென்னையில இருக்கானா.... அவனை அங்கேயே போய் பார்த்துக்கொள்கிறேன்..... என்றாள் மம்தா.
நீ பண்ணின தப்புக்கு எப்போ தண்டனை கிடைக்கும் ன்னு எனக்கு தெரியாது.... ஆனா உன்னை மாதிரியான ஆம்பளைங்களுக்கு என்னால தண்டனை தரமுடியும்..... என்று சொல்லி அவனுடைய வாயில் துணியை வைத்து மூடினாள். அங்கிருந்த ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸை எடுத்து வந்து..... சிறிது நேரம் அவளுடைய ஃபோனில் எதையோ பார்த்துவிட்டு..... மயக்கம் கொடுக்காமலேயே அவனுக்கு ஆண்மை தன்மையை செயலிழக்கச் செய்தாள்.... முக்கியமான நரம்பை அறுத்துவிட்டாள்..... வலியின் உச்சத்தில் இருந்தான் பாண்டியன்..... பிறகு அவனுக்கு பேண்டேஜ் போட்டுவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
ஃபோனை பேசிக் கொண்டே கீழே இறங்கினாள் மம்தா.
என்ன அக்கா..... ஒருமணி நேரமா ஃபோன் பேசனீங்களா..... என்றாள் ரூபினி.
சிரித்தாள் மம்தா.
பிரவீன் அண்ணா தான?
மறுபடியும் சிரித்தாள் மம்தா.
சரி சரி வாங்க.... வீடு மொத்தமுமே கிளீன் பண்ணியாச்சு..... என்றாள் ரூபினி.
தேங்க்ஸ்..... என்றாள் மம்தா அவர்களை பார்த்து.....
முடிஞ்சிடிச்சு மா.... வேற எதாவது வேலை இருக்கா?
இல்லீங்க.....
பேமெண்ட் என்னோட கூகுள் பேல அனுப்பிடுங்க..... என்றார் அந்த பெண்மணி.
ஓகே.... என்று சொல்லி மம்தா பே செய்தாள்.
அக்கா இருங்க ராகினி அக்கா வந்து கொடுப்பாங்க.....
நோ இஷ்யூஸ் ரூபி.... நான் உங்க அக்கா கிட்ட வாங்கிக்கிறேன் போதுமா..... என்றாள் மம்தா.
அவர்கள் சென்றதும்....
அக்கா.... என்னாச்சு உங்க கை முட்டியில ரத்தம்?
அது ஒண்ணும் இல்ல ரூபி.... மாடியில் நடந்துக்கிட்டே ஃபோன் பேசினேனா அப்போ தெரியாம ஜன்னல் எட்ஜ்ல இடிச்சிக்கிட்டேன்....
இருங்க அக்கா நான் பேண்டேஜ் வாங்கி கொண்டு வருகிறேன்....
இல்லம்மா வேண்டாம்..... அந்த அளவுக்கு அடி படல.... ஓப்பன் ஊண்டு தான் ஆறும்..... என்றாள். நல்லவேளை உண்மையிலேயே அடிப்பட்டதால் அதை காண்பித்து அது தான் அந்த ரத்தத்தின் காரணம் என்று சொல்லி விட்டாள் மம்தா.
ஆட்டோ சப்தம் கேட்டது. ராகினி வந்திறங்கினாள்.
அக்கா.... என்று சொல்லி ரூபினி ராகினியை கட்டிக் கொண்டாள்.
என்னம்மா..... உங்க அக்காவை பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு?.... என்று கிண்டல் செய்தாள் மம்தா.
போங்க அக்கா.... என்று சொல்லி சிரித்தாள் ரூபினி.
கிளீனிங் முடிஞ்சிடிச்சா..... என்றாள் ராகினி.
முடிஞ்சிடிச்சு அக்கா..... பே கூட பண்ணியாச்சு....மம்தா அக்கா கூகுள் பே பண்ணிட்டாங்க....
ஏன் மம்தா.... நான் தான் வந்து தரேன்னு சொன்னேன் இல்ல.....
ஈட்ஸ் ஓகே டியர்.... நோ இஷ்யூஸ்.....
என்ன ஹேப்பியா இருக்க.... என்றாள் ராகினி மம்தாவை பார்த்து.
ஒண்ணும் இல்லையே.... என்று சொல்லி சிரித்தாள்.
***************
தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.