தொடர்பியல்..... பாகம் -39
கேஸ் -2 ( பிரகாஷ் - ரோஜா)
அக்கா.... நம்ம வீடு.... நம்ம ஊரு எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு மம்தா அக்காவுக்கு.....அதானால தான் ஹேப்பியா இருக்காங்க.....
ஓ.... அப்படியா..... நீ புக்ஸ் எல்லாம் எடுத்து பேக் பண்ணிட்டியா?
புக்ஸ் எடுத்து வச்சிருக்கேன்....... இன்னும் பேக் பண்ணல....
சரி நீ போய் பேக் பண்ணு..... லேப் விஷயமா மம்தா கூட நான் பேசனும்.....
ஓகே அக்கா..... கொஞ்ச நேரம் படிச்சிட்டு அப்புறமா பேக் பண்றேன்.....
ஓகே ரூபி..... பசிக்குதா?
இல்ல அக்கா..... கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடறேன்....
ஓகே மா.....
அவள் உள்ளே சென்றதும்..... ராகினி அங்கு நடந்தவற்றை கூறினாள்.
ஹூம்.... என்று அமைதியாக கேட்டாள் மம்தா.
என்ன மம்தா.... அமைதியா இருக்க?
ரூபி..... என்றாள் மம்தா.
எதுக்கு இப்போ அவளை கூப்பிடற.....
இரு.....
சொல்லுங்க அக்கா....
நானும் ராகினியும் மாடிக்கு போய் ஒரு முக்கியமான கால் பேசிட்டு வரோம்.... இந்தா ராகினி ஃபோன் நீ வச்சிக்கோ.... எதாவது வேணும்னா கால் பண்ணு..... வீட்டை லாக் பண்ணிக்கோ..... டென் மினிட்ஸ்ல வந்திடுவோம்.
ஓகே அக்கா என்று சொல்லி வீட்டை பூட்டி கொண்டாள் ரூபினி.
என்ன மம்தா.....
வா டி.....
மாடியில் பாண்டியன் வீட்டு கதவை திறந்தாள் மம்தா.....
உள்ளே சென்று கதவை சாத்தி நடந்தவற்றை அவளுக்கு கூறினாள் மம்தா.
என்ன மம்தா இது..... இவன் செத்துப் போயிட்டான்னா போலீஸ் கேஸா ஆயிடும்.....
ஆகட்டும்..... எனக்கு கவலை இல்லை..... இந்த மாதிரி பாவிங்களுக்கு எதோ என்னால முடிஞ்ச தண்டனை கொடுத்தேன்.... இதுக்கு சட்டம் எனக்கு தண்டனை கொடுத்தாலும் பரவாயில்லை..... நான் அதை சந்தோஷமா ஏத்துப்பேன்.....
உனக்கு என்ன பைத்தியமா டி..... என்றாள் ராகினி.
இப்போ தான் எனக்கு நிம்மதியாக இருக்கு..... மனீஷாவை கொன்றவர்களையும் இதே மாதிரி பழிவாங்கிட்டேன்னா அதுவே போதும்..... என்றாள் மம்தா.
ஸ்டாப் இட் மம்தா..... நீ புரிஞ்சு தான் பேசறீயா.... இல்லையா..... தப்பு பண்ணினாலும் தப்பு இல்லாம பண்ணனும்....
வாட்.....
ஆமாம்..... நீ என்ன பிரொஃபஷனல் சர்ஜனா ஆப்பிரேஷன் பர்ஃபெக்டா பண்றதுக்கு..... அதுவும் உன் கிட்ட இருக்குற பேனா கத்தியிலும் ஸ்ம்பிள் பேண்டேஜ் போட்டிருக்க.... இன்னைக்கு ராத்திரியே இவன் செத்திடுவான்.....
செத்தா சாகட்டும்....
அய்யோ மம்தா..... புரிஞ்சிக்கோ.... இவன் செத்தா நாம மாட்டிக்கிறது இல்லாம ரூமிற்கு நடந்த கொடுமை ஊருக்கே தெரிஞ்சிடும்..... இப்போ தான் அவ கொஞ்சம் சரி ஆகுறா.... அவளுக்கு உண்மை தெரிஞ்சா மறுபடியும் பயித்தியம் பிடிச்சது போல ஆயிடுவா.... என் தங்கச்சியை இழக்க நான் தயாராக இல்லை.....
சரி.... இப்போ என்ன பண்ணலாம் ன்னு சொல்ற?
நைட்டு ரூபி தூங்கட்டும்..... ஒரு ஐடியா இருக்கு..... என்றாள் ராகினி.
வீட்டை வெளி பக்கமாக பூட்டிக்கொண்டு கீழே இறங்கினார்கள்..... முதல் தளத்தையும் தாண்டி கீழே இறங்கும் போது மாடி வீட்டு ஆன்டி எதிரே வந்தார்.
ராகினி..... எப்படி மா இருக்க?
நல்லா இருக்கேன் ஆன்டி..... நீங்க எப்படி இருக்கீங்க.... அங்கிள் எப்படி இருக்காரு.....திவ்யா அக்கா எப்படி இருக்காங்க....
நல்லா இருக்காரு மா.....திவ்யா யுஎஸ்ஏ ல இருக்கா..... ரெண்டு பசங்க அவளுக்கு.... இப்போ வீடியோ கால் பண்ணுவா.....
ஓ.... சூப்பர் சூப்பர் ஆன்டி.....
என்னை பார்க்க தான் மேலே ஏறி வந்தியா....
ஆமாம் ஆன்டி.... வீடு பூட்டி இருந்தது.....
நான் கோவிலுக்கு போயிட்டு இப்போ தான் வரேன்..... உன் ஃபிரெண்டு பார்த்தாலே நான் கோவிலுக்கு போனதை.... சொல்லலையா?
இல்ல ஆன்டி நீங்க திரும்பி வந்திருப்பீங்க ன்னு நினைச்சேன்.... என்றாள் மம்தா.
ஓ.... சரி சரி..... வாங்க மூணு பேரும்..... சூடா தோசை ஊத்தி தரேன்.....
இல்ல ஆன்டி வேண்டாம்....... அத்தை கொடுத்து அனுப்பி இருக்காங்க.....
ஓ..... அப்படியா..... சரிம்மா..... வீட்டை பூட்டிக்கிட்டு தூங்குங்க.....கேட்டு பூட்ட வேண்டாம் அங்கிள் லேட் ஷிஃப்ட் முடிச்சிட்டு பதினோரு மணிக்கு மேல வருவாரு.....
ஓ.... ஓகே ஆன்டி.... என்று சொல்லி விட்டு வீட்டிற்குள் வந்து டின்னர் சாப்பிட்டு முடித்தனர்.
ரெண்டு வீடு தான் வாடகைக்கு விட்டிருக்கீங்களா ராகினி.....
இல்ல அக்கா..... நாலு வீடு..... என்றாள் ரூபினி.
மத்த ரெண்டு வீடு எங்கே?
அப்படியே இதோட பின் பக்கம்..... அதுக்கு வழி பின் தெருவில் இருக்கு....
ஓ..... ஓகே..... இந்த பக்கமா அந்த வீட்டுக்கு போக முடியாதா?
டோர் இருக்கு.... ரெண்டு சைடும் ஓப்பன் பண்ணினா போகலாம்..... என்றாள் ராகினி.
ஓ.... ஓகே.....
ராகினி....
சொல்லு மம்தா.....
எனக்கு தூக்கம் வரல..... சும்மா கொஞ்ச நேரம் வெளியே வாக்கிங் போயிட்டு வரேன்..... என்றாள் மம்தா.
எதுக்கு.... என்பது போல புருவத்தை உயர்த்தி கேட்டாள் ராகினி.
அஞ்சு நிமிஷத்துல வந்திடுவேன்..... என்று சொல்லி விட்டு வெளியே சென்றாள் மம்தா.
பத்து நிமிடத்திற்கு பிறகு வந்தாள்....
என்னடி?.... என்றாள் ராகினி.
செமையா காத்து.... வீட்டுக்கு உள்ள வர மனசே இல்ல.... என்றாள் மம்தா.
ரூபினி தூங்கிவிட்டாள். மணி 11.15..... கேட் திறக்கும் சப்தம் கேட்டது.
மாடி வீட்டு அங்கிள் வராரு.... என்றாள் ராகினி.
அவர் மாடி ஏறிச் சென்றதும் அரைமணி நேரத்திற்கு பிறகு அவர்கள் வீட்டு லைட் ஆஃப் ஆனது.
ராகினி வா.... என்றாள் மம்தா.
அமைதியாக சப்தம் போடாமல் வெளியே வந்து வீட்டு கதவை பூட்டி கொண்டு மாடி ஏறி சென்றனர்.
பாண்டியன் அரை மயக்கத்தில் இருந்தான்.
ஏய்.... இவன் இன்னும் சாகல டி.... என்றாள் மம்தா.
உஷ்.... என்றாள் ராகினி.
இருவரும் அவனை இருபக்கமும் பிடித்துக் கொண்டு மெல்ல படி இறங்கினார்கள்.
அவனுடைய பைக் சாவியை எடுத்து கொண்டு வந்து மம்தா ஓட்டினாள் பின்னால் அவனை அமர வைத்து அதற்கு பின்னால் ராகினி அமர்ந்தாள்.
வலது பக்கமாக போ மம்தா.... அங்கே ஒரு ஏரி இருக்கு..... அங்க இவனை தள்ளி விட்டு விட்டு வந்திடலாம்.... என்றாள் ராகினி.
மம்தா இடது பக்கமாக திரும்பினாள்....
மம்தா.... என்ன பண்ற..... இந்த பக்கம் இல்ல.....
அம்மாடி.... நம்ம அந்த சைடு போன.... நாளைக்கே போலீஸ்ல மாட்டிப்போம்.... ஏன்னா அந்த பக்கம் மூணு சிசிடிவி கேமரா இருக்கு..... இந்த பக்கம் இல்ல..... நான் பார்த்திட்டேன்.... என்றாள் மம்தா.
ஓ.... ஓகே மம்தா.
கொஞ்சம் தூரம் போனார்கள்.... ஆள் நடமாட்டம் இல்லாத சாலை அது..... அங்கு வண்டியை நிறுத்தி.... ராகினி நீ இறங்கு.... என்றாள் மம்தா.
ஏன் மம்தா.... சொல்றேன் இல்ல....
மம்தா இறங்கினாள்..... பின்னர் அவனுக்கு போட்டிருந்த பேண்ட் எய்டை பிய்த்து எடுத்தாள் மம்தா....
என்ன மம்தா பண்ற....
இரு.... என்று சொல்லி வண்டியை ஸ்டார்ட் செய்து அவனுடைய இரு கைகளையும் அவளை சுற்றி பிடிக்க வைத்து..... ஒரு கையால் திராட்டில் செய்து மிக வேகமாக வண்டியை ஓட்டினாள்..... சாலை ஓரம் இருந்த மரத்திற்கு மிக அருகில் வரும் போது அவள் குதித்து விட்டாள்.... வண்டியுடன் பாண்டியன் மரத்தில் மோதி தரையில் விழுந்தான்.....
ஆ.... மம்தா..... என்று கத்தினாள் ராகினி.
சிறிது நேரத்தில் மம்தா தாங்கி தாங்கி எழுந்து நடந்து வந்தாள்.... பின்னர் இருவரும் மெதுவாக நடந்து வீட்டிற்கு வந்தனர்.
வீட்டுக்கு வந்ததும் கதவை திறக்க பார்த்தாள் சாவி இல்லை.... பதிறி போனார்கள் இருவரும். பாண்டியன் வீட்டில் போய் பார்த்தனர்.... அங்கு இல்லை....அவனுக்கு உபயோக படுத்திய ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ் மற்றும் அங்கு சிந்தியிருந்த ரத்தம் படிந்த மேட்... அனைத்தையும் எடுத்து கொண்டு..... அவனுடைய வீட்டை பூட்டி கொண்டு கீழே வந்தனர்..... அந்த மேட்டையும் ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸையும் வெளியே இருந்த பெரிய டஸ்ட் பின்னில் போட்டனர்..... சரி பைக் ஆக்ஸிடென்ட் ஆன இடத்தில் விழுந்திருக்கலாம் என்று சொல்லி அங்கு செல்ல காலடி எடுத்து வைக்கும் போது..... அக்கா.... அக்கா.... என்று ரூபினியின் குரல் உள்ளே இருந்து கேட்டது.....
இப்போ என்ன பண்றது மம்தா.... என்று பதட்டமாக கேட்டாள் ராகினி.
டோண்ட் ஒரி.... என்று சொல்லி அவள் தலையில் இருந்த ஹேர் பின்னில் திறக்க முயன்றாள்.
என்னடி.... இன்னும் சின்ன குழந்தை மாதிரி.... என்றாள் ராகினி.
பின்ன என்ன பண்ண சொல்ற.....
ஜன்னல் வழியாக ரூபி.... என்று குரல் கொடுத்தாள் ராகினி.
என்ன அக்கா.... வெளியே என்ன பண்ற....
தூக்கம் வரவில்லை.... அதான் நானும் மம்தாவும் வெளியே நடந்து வந்தோம்.... இருட்டில் சாவி எங்கேயோ விழுந்திடிச்சு.... ஸ்பேர் கீஸ் நம்ம பீரோ லாக்கர்ல இருக்கும் எடுத்திட்டு வா....
ஓகே அக்கா.... என்று சொல்லி அவள் எடுத்து கொண்டு வந்தாள்.
அதை வாங்கி கதவை திறந்து உள்ளே சென்றனர் ராகினி மற்றும் மம்தா.
பிறகு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். ரூபினி மறுபடியும் தூங்க சென்றாள்.
சாவி.... ஆக்ஸிடென்ட் ஆன இடத்தில் கிடைச்சா என்ன பண்றது..... என்றாள் மம்தா.
அதுக்கு என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு.... என்றாள் ராகினி.
என்னடி....
இங்க பாரு....
இது பாண்டியனோட ஹவுஸ் கீஸ்....
இதுவும் என் வீட்டு கீஸூம் ஒரே மாதிரி இருக்கு.... நாளைக்கு போலீஸ் வந்து கேட்டாலும் சாவி மாற்றி எடுத்து போயிருக்காரு பாண்டியன் ன்னு சொல்லிடலாம்.....
நம்புவாங்களா போலீஸ்.....
நம்புற மாதிரி சொல்லலாம்.....
ஹூம்....
சரி வா..... டைம் ஆகுது.... தூங்கலாம்.... என்றாள் மம்தா.
அவளுடைய காதில்.... ஒரு கொலை பண்ணிட்டு நிம்மதியா தூங்கலாம் ன்னு சொல்ற.....
நம்ம தெரியாம கூட யாராவது நல்லவங்க இறப்புக்கு காரணம் ஆயிட்டா ஜென்மத்திற்கும் தூக்கம் வராது.... ஆனா கெட்டவங்களை தண்டிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சாலும் அதை சரியாக பயன் படுத்திக் கொண்டால் மன நிறைவுடன் தூங்கலாம்..... என்றாள் மம்தா.
அம்மா வேதாந்தி.... ஆளை விடு.... நான் தூங்க போறேன்.... என்றாள் ராகினி.
இருவரும் தூங்கினார்கள்.
காலை மணி 7.30.....
காலிங் பெல் சப்தம் கேட்டது....
ராகினி எழுந்து கதவை திறந்தாள்.....
மூன்று போலீசார் நின்று கொண்டு இருந்தனர்.
****************
தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.