தொடர்பியல்..... பாகம் -41
கேஸ்-3 ( பிரகாஷ் -ரோஜா)
சென்னை வந்ததும் தன் புத்தகங்களை ஒரு கப்போர்டில் அடுக்கி வைத்து கொண்டாள் ரூபினி.
திங்கட்கிழமை காலை....
அக்கா.... இன்னைக்கு நீ வேலைக்கு போகனுமா?
ஆமாம் ரூபி.... டூ வீக்ஸா போகலை இல்ல?.... இன்னைக்கு வரேன் ன்னு சொல்லி இருக்கேன்...... எதுக்கு கேட்குற?
இல்ல அக்கா..... இன்னைக்கு கோச்சிங் சென்டர் போய் விசாரிக்கலாம் ன்னு சொன்னீயே.... அதனால கேட்டேன்.....
ஈவினிங் பர்மிஷன் வாங்கி கொண்டு வந்திடறேன்..... போய் பார்க்கலாம்.... சரியா?
ஓகே அக்கா..... தேங்க்ஸ் எ லாட்.....
ஸ்மைல் செய்தாள் ராகினி.
அப்போது பாத்ரூமில் இருந்து குளித்து விட்டு ரெடியாகி வெளியே வந்தாள் மம்தா.
எங்க அக்காவும் தங்கையும் பிளான் பண்றீங்க வெளியே போக..... என்னை விட்டு விட்டு.... சினிமாவுக்கா?
இல்ல அக்கா..... கோச்சிங் சென்டருக்கு.... நீங்களும் வாங்க.... என்றாள் ரூபினி.
என்னது டியூஷன் சென்டருக்கா?.... நான் வரல.... நீங்க ரெண்டு பேரும் போங்க.... என்றாள் மம்தா.
இதுவே சினிமாவா இருந்தா ஊருக்கு முன்னாடி நான் வரேன் நான் வரேன் ன்னு சொல்லி இருப்பா..... என்றாள் ராகினி.
அக்கா.... நீங்களும் வாங்க பிளீஸ்..... என்றாள் ரூபினி.
ஓகே மா.... உனக்காக வரேன்..... என்றாள் மம்தா.
பார்ரா..... என்று சொல்லி சிரித்தாள் ராகினி.
இருவரும் சிரித்தனர்.
வேலையை முடித்துவிட்டு கால் செய்தாள் ராகினி.
ரூபி ரெடியாக இரு..... நான் வந்து கூட்டிக்கிட்டு போறேன்.
ஓகே அக்கா.... மம்தா அக்கா வராங்களா?
வராங்க வராங்க.... என்றாள் ராகினி.
ஓகே அக்கா.... நான் ரெடியாக இருக்கேன்.
ஆன்டி.... என்றாள் ரூபினி சீதாலட்சுமியை பார்த்து.
சொல்லுமா.....
ஆன்டி..... நான் உங்களை ஒரு முறை கட்டி பிடிச்சிக்கவா?
வாம்மா.... என்று சொல்லி கைகளை விரித்தார் சீதாலட்சுமி.
ரூபினி அவரை கட்டி அணைத்து கொண்டாள்.
ஆன்டி.... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..... நான் படிக்க போகிறேன்.....
நல்லா இரும்மா.... நல்லா படிக்கனும் என்று சொல்லி அவளுடைய தலையை கோதி விட்டார்.
உங்க கிட்டேயும் அங்கிள் கிட்டேயும் ஆசிர்வாதம் வாங்கி கொள்ளலாமா?
எங்க ஆசிர்வாதம் உனக்கு எப்பவுமே இருக்கு மா..... என்று சொல்லி கொண்டே வீல் சேரில் வந்தார் ராம்லால்.
பிளஸ் பண்ணுங்க அங்கிள் ஆன்டி..... என்றாள் ரூபினி.
இரும்மா என்று சொல்லி விட்டு உள்ளே சென்று பூஜை தட்டில் குங்குமம் மற்றும் விபூதி வைத்து எடுத்து வந்தார் சீதாலட்சுமி.
அவர்களுடைய காலில் விழுந்தாள் ரூபினி.
சீதாலட்சுமி குங்குமம் வைத்து விட்டார்.
ராம்லால் விபூதி வைத்து விட்டார்.
உன்னோட டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டியா மா?..... என்றார் ராம்லால்.
எடுத்துக்கிட்டேன் அங்கிள்.....
ஆதார் கார்டு, பர்த் சர்டிஃபிகேட், பழைய ஸ்கூல் மார்க் லிஸ்ட், டிசி, .....
எல்லா ஒரிஜினல்ஸூம் அக்கா இந்த ஃபைல்ல வச்சிருக்கா அங்கிள்.... இந்த ஃபைல்ல ஜெராக்ஸ் இரண்டு காப்பி வச்சிருக்கா....
ஓ.... சரிம்மா.... ஆல் தி பெஸ்ட்.... என்றார் ராம்லால்.
தேங்க்ஸ் அங்கிள்.
அதற்குள் வண்டி சப்தம் கேட்டது.
அக்கா வந்திட்டா போல.... நான் போயிட்டு வரேன்..... என்றாள் ரூபினி.
வெளியே வந்ததும்.... அங்கே ஒரு கார் நின்றிருந்தது.
அதில் இருந்து இறங்கி வந்தான் ஒருவன்.
ரூபினியை பார்த்து பிரம்மித்து போய் நின்றான்.
உனக்கு உடம்பு சரி ஆயிடிச்சா.....
யாரு அண்ணா நீங்க?
ஏய்.... அண்ணா ன்னு எல்லாம் சொல்லாத....
என் பேரு சுரேஷ்..... கொயம்பத்தூர்.
கொயம்பத்தூரா....
ஆமாம்.... உங்க அத்தையோட ரிலேட்டிவ்....
வடிவு அத்தையா இல்ல வாணி அத்தையா?
என்ன சொல்வது என்று தெரியாமல்.... வடிவு அத்தை.... என்று சொன்னான் சுரேஷ்.
அதான பார்த்தேன்.... வாணி அத்தையாக இருந்திருந்தால் எனக்கும் எங்க அக்காவுக்கும் தெரிஞ்சிருக்குமே.... ஏன்னா எங்க அப்பாவோட சொந்த தங்கச்சி தான் வாணி அத்தை.... என்றாள் ரூபினி.
அசடு வழிய.... அப்பாடா தப்பிச்சோம்.... என்று நினைத்து கொண்டான்.
சரி....வாங்க உள்ளே வாங்க.... அக்கா இப்போ வந்திடுவா.....
இல்ல வேண்டாம்..... டைம் ஆகுது..... நான் அப்புறமா வந்து பார்க்கிறேன்.... உங்க அக்கா நம்பர் மட்டும் கொடு.... நான் கால் பண்ணி பேசக்கிறேன்.....
ஓகே அண்ணா..... சாரி..... சார்.....
சார் எல்லாம் வேண்டாம்..... ஜஸ்ட் கால் மீ சுரேஷ்.
இல்ல எனக்கு அப்படி யாரையும் கூப்பிட வராது.....
சரி.... அண்ணா மட்டும் வேண்டாம்.... வேற எப்படியாவது கூப்பிடு.....
யாருக்கும் அண்ணா ன்னு சொன்னா பிடிக்காது போல..... என்று நினைத்து கொண்டே....
ஓகே சுரேஷ் சார்.....
சரி அக்கா நம்பர் கொடு.....இந்தா என் ஃபோன்.... இதுல ஸேவ் பண்ணிடு..... என்று சொல்லி ஃபோனை அவளிடம் நீட்டினான்.
எனக்கு இந்த ஃபோன் யூஸ் பண்ண கொஞ்சம் கஷ்டம் சார்.....
ஏன்.... உங்க அக்கா கிட்ட இந்த ஃபோன் இல்லையா?.....
இருக்கு.... நான் அவ்வளவா யூஸ் பண்ணது இல்ல....
நான் சொல்லி தரவா.... என்று சொல்லி அருகில் வந்தான்.
இல்ல சுரேஷ் சார்.... வேண்டாம்.... என்று சொல்லி ஒரு அடி பின்னால் சென்றாள் ரூபினி.
ஓகே.... நம்பர் சொல்லு....
979..... என்று ஆரம்பித்து நம்பரை கொடுத்தாள் ரூபினி.
நம்பரை ஸேவ் செய்து விட்டு.... ஃபோனில் சத்தம் வராமல் அவளை புகைப்படம் எடுத்தான் சுரேஷ். அவளை கண்களாலேயே கர்பழித்தான். அவன் கூலிங் கிளாஸ் போட்டிருந்ததால் அவளுக்கு அவன் எங்கே பார்த்து பேசுகிறான் என்பது தெரியவில்லை.
யாரு ரூபி.... என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்தார் சீதாலட்சுமி.
அப்போது சென்றாள் சந்தேகம் வரும் என்று நினைத்து....
நான் கொயம்பத்தூர் ஆன்டி.... இவங்க அத்தையோட ரிலேட்டிவ்.
வாங்க தம்பி.... உள்ளே வாங்க.....
இல்ல ஆன்டி வேண்டாம்..... வீடு எங்கேன்னு தெரியாம சுத்திக்கிட்டு இருந்தேன்.... இப்போ நைட்டு ஷிஃப்ட் க்கு டைம் ஆகுது. நான் நாளைக்கு வரேன்.... என்றான்.
சரிப்பா.... தண்ணி குடிக்கிறீயா?
இல்ல வேண்டாம்..... இருக்கு ஆன்டி.... தேங்க்ஸ்.... பை ஆன்டி....
பை பா.....
பை ரூபினி....
பை சுரேஷ் சார்.... என்று சொல்லி விட்டு உள்ளே வந்து சீதாலட்சுமியின் ஃபோனில் இருந்து ராகினிக்கு கால் செய்தாள் ரூபினி.
ஃபோனை எடுக்கவில்லை. அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டின் வாசலில் வந்து நிறுத்தினாள் ராகினி.
என்ன அக்கா நீ மட்டும் வந்திருக்க? மம்தா அக்கா எங்கே?
அவ நேரா அங்கே வந்திடுவா.....
ஓ.... ஓகே அக்கா....
பை அம்மா.... என்றாள் ராகினி.
பை ஆன்டி..... என்றாள் ரூபினி.
பிறகு இருவரும் வண்டியில் ஏறிச் சென்றனர்.
100% ரிசல்ட்.... வின்னர்ஸ் கோச்சிங் சென்டர்.... என்று எழுதி இருந்தது.
ஆர்வமாக உள்ளே சென்றாள் ரூபினி.
கேட்டின் அருகில் நின்று கொண்டு இருந்தாள் மம்தா.
ஹாய் மம்தா அக்கா.... நீங்க வரமாட்டீங்களோ ன்னு நினைச்சேன்.
நான் தான் உன் கிட்ட வரேன் ன்னு சொன்னேனே.... அப்புறம் எப்படி வராமல் இருப்பேன்.
வாங்க அக்கா.... என்று சொல்லி அவள் கையை பிடித்து கொண்டு படி ஏறி இரண்டாம் மாடிக்கு சென்றனர்.
அங்கே இருந்த ஆஃபீஸில் ரூபினிக்கு ரெஜிஸ்டர் செய்துவிட்டு அனைத்து டாக்குமெண்ட்ஸூம் சப்மிட் செய்தனர். ஃபீஸ் பே செய்தாள் ராகினி. அனைத்திற்கும் ரெசிப்ட் கொடுத்தார்கள்.
நியூ பேட்ஜ் புதன்கிழமை ஸ்டார்ட் ஆகும்.... அதில் சேர்ந்துக்கோங்க.... என்றாள் அந்த பெண்மணி.
ஓகே.... தேங்க்ஸ்.... என்றாள் ராகினி.
ரூபினி தன் பையில் இருந்து புக்ஸை எடுத்து.... இந்த புக்ஸ் இப்போ இருக்கோ.... ஐ மீன் சிலபஸ்.....
அதெல்லாம் எனக்கு தெரியாது மா.... புதன்கிழமை வரும்போது கொண்டு வாங்க.... டீச்சர்ஸ் இருப்பாங்க.... அவங்க கிட்ட கேட்டுக்கோங்க.... என்றாள் அந்த பெண்மணி.
ஓகே..... தேங்க் யூ.... என்று சொல்லி விட்டு மூவரும் கிளம்பினார்கள்.
அக்கா நான் மம்தா அக்கா பைக்கில் வரவா....
ஓகே ரூபி.... என்றாள் ராகினி.
ராகினி மம்தாவை பார்த்து கண் ஜாடை செய்தாள். அதை புரிந்து கொண்ட மம்தா ஓகே என்று கண் சிமிட்டினாள்.
பத்து நிமிடத்திற்கு பிறகு இருவரும் பீச்சிற்கு சென்று வண்டியை நிறுத்தினார்கள்.
அக்கா.... என்று சொல்லி பைக்கில் இருந்து இறங்கி வந்து சந்தோஷமாக ராகினியை கட்டிக் கொண்டாள் ரூபினி.
ரூபி.... நான் தான் பைக்கை ஓட்டிக் கொண்டு வந்தேன்.... என்றாள் மம்தா.
அக்கா.... என்று சொல்லி அவளையும் கட்டிக் கொண்டாள் ரூபினி.
சிறிது நேரம் கடல் அலைகளில் விளையாடி விட்டு சோளம், மாங்காய், சுண்டல், பானி பூரி, என்று பீச்சிற்கே சொந்தமான உணவு பொருட்களை வாங்கிக் சாப்பிட்டார்கள்.
ரூபினி அலைகளில் விளையாடி கொண்டு இருந்தாள்.
மம்தாவும் ராகினியும் மணலில் அமர்ந்தனர்.
ரொம்ப வருஷம் கழிச்சு என் தங்கச்சியை இவ்வளவு சந்தோஷமா பார்க்கிறேன்.... என்றாள் ராகினி கண்கள் கலங்க.
அவள் தோளை தடவி சமாதானம் செய்தாள் மம்தா.
எப்பவுமே ரூபி இதே மாதிரி சந்தோஷமா இருப்பா நம்ம ரெண்டு பேரும் இருக்கும் வரை.... என்றாள் மம்தா.
தேங்க்ஸ் மம்தா.... என்று சொல்லி அவளுடைய தோளில் சாய்ந்து கொண்டாள் ராகினி.
ரூபி.... போகலாமா?.... என்றாள் மம்தா.
அக்கா.... இன்னொரு டென் மினிட்ஸ்....
ஓகே.... என்றாள் மம்தா.
பதினைந்து நிமிடத்திற்கு பிறகு...
ரூபி.... போகலாம்...
ரொம்ப இருட்டா ஆயிடிச்சு.... நாளைக்கு நாங்க ரெண்டு பேரும் வேலைக்கு போகனும் இல்ல.... என்றாள் ராகினி.
ஓகே அக்கா.... ஓகே.... இதோ வரேன்.... என்று சொல்லி விட்டு வந்தாள் ரூபினி.
திரும்ப வீட்டிற்கு வரும் வழியில் ஒரு கடையில் நிறுத்தினாள் மம்தா.
எதுக்கு இங்க நிறுத்துற மம்தா.... என்றாள் ராகினி.
வா.... என்றாள் மம்தா.
இருவரும் அவளை ஃபாலோ செய்து அந்த பெரிய கடைக்குள் நுழைந்தார்கள்.
வாங்க மேடம்.... வாங்க.... என்ன பிராண்டு பார்க்கறீங்க?
என்ன மாடல் வேணும் ரூபி....
எனக்கா?.... எனக்கு எதுக்கு அக்கா....
ஆமாம்.... நாளை மறுநாளில் இருந்து நீ தனியா கிளாஸ் போவ இல்ல.... ஸோ உன்னை நாங்க காண்டாக்ட் பண்றதுக்கு..... சொல்லு.... எந்த மொபைல் வேண்டும்....
எதுக்கு மம்தா இப்போ....
சும்மா இரு.... நீ அவளுக்கு ஃபீஸ் பே பண்ண இல்ல.... நான் அவளுக்கு கிஃப்ட் தர நினைக்கிறேன்..... நீ சொல்லு ரூபி....
அவளுக்கு என்னடி தெரியும்.... அவளை போய் கேட்குற....
மோட்ரோலா.... என்றாள் ரூபினி.
ராகினி அவளை திரும்பி பார்த்தாள்.
என்னாச்சு ராகினி.... என்றாள் மம்தா.
எங்க அப்பா யூஸ் பண்ணின பிராண்டு.... என்று சொல்லி கண்கள் கலங்கினாள் ராகினி.
சரி சரி வா.... எமோஷனல் ஆகாத.... என்று சொல்லி அவர்கள் இருவரையும் அழைத்து கொண்டு ரூபினி கேட்ட பிராண்டு செக்ஷனுக்கு சென்று ஒரு மொபைல் ஃபோன் வாங்கி கொடுத்தாள் மம்தா.
தேங்க்ஸ் அக்காஸ்.... என்றாள் ரூபினி இருவரையும் பார்த்து.
பிறகு மூவரும் வீட்டிற்கு சென்றனர். இவர்கள் பீச்சில் இருந்ததையும் மொபைல் ஸ்டோர் வந்து சென்றதையும் பார்த்து கொண்டும், ஃபோட்டோ மற்றும் வீடியோ எடுத்து கொண்டும் இருந்தான் சுரேஷ். அவனுடைய நண்பனிடம் ராகினியின் நம்பரை கொடுத்து டிராக் செய்து ஃபாலோ செய்தான்.
*************
தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.