• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடர்பியல்..... பாகம் - 43

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
197
78
28
Maduravoyal

தொடர்பியல்..... பாகம் - 43

கேஸ்-3 ( பிரகாஷ் -ரோஜா)

மறுநாள் காலை வழக்கம் போல......ராகினியும் மம்தாவும் லேபிற்கு சென்றனர்.

ரூபினி டிபன் சாப்பிட்டு விட்டு தன் புதிய மொபைலில் யூ டியூப் வீடியோக்களை பார்த்து கொண்டு இருந்தாள்.

முதலில் தன் பாடங்களுக்கு தேவையான வீடியோக்களை பார்த்து கொண்டு இருந்தாள். பிறகு சிறிது நேரம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்து கொண்டு இருந்தாள். அப்படியே தூங்கி விட்டாள்.

ஃபோன் அடித்தது..... விழித்து கொண்டாள்.

என்ன ரூபி பண்ற?..... என்றாள் ராகினி.

ஃபோன் தான் அக்கா பார்த்துக் கொண்டு இருந்தேன்.... அப்படியே தூங்கிட்டேன்.....

ஓ.... சாரி ரூபி.... கால் பண்ணி எழுப்பி விட்டுட்டேனா?

அதெல்லாம் பரவாயில்லை அக்கா.... இது என்ன தூங்குற டைமா?.... நான் தான் வேலை வெட்டி இல்லாம இருக்கிறதால தூங்கிட்டேன்.... என்றாள் ரூபினி சிரித்துக் கொண்டே.

ரூபி.... உனக்கு பல முறை சொல்லி இருக்கேன்.... டோண்ட் டீகிரேடு யுவர்செல்ஃப் ன்னு.....( தாழ்வு மனப்பான்மை கூடாது).

ஓகே ஓகே சாரி அக்கா..... இனிமே அப்படி பேச மாட்டேன்.....

ஹூம்.... தட்ஸ் மை கேர்ல்..... ஈவினிங் ரெடியாகி இரு.... நான் வந்து கூட்டிக்கிட்டு போறேன்.

ஓகே அக்கா பை.....

பை ரூபி.....

ஃபோனை வைத்து விட்டு கிட்சனுக்கு சென்றாள் ரூபினி.

ஆன்டி.....

சொல்லுமா.....

நான் ஹெல்ப் பண்ணவா?

இல்லமா வேண்டாம்.... முடிச்சிட்டேன்.....

ஆன்டி.... இன்னைக்கு ஈவினிங் அக்கா வந்து என்னை ஷாப்பிங் கூட்டிக்கிட்டு போறேன் ன்னு சொன்னாங்க....

மம்தா சொன்னா மா.....

மம்தா அக்காவும் எங்க கூட வரேன் ன்னு சொன்னாங்க....

தெரியும் மா.... சொன்னா.....

நீங்களும் வரீங்களா ஆன்டி....

இல்லம்மா.... நீங்க போயிட்டு வாங்க..... அங்கிள் தனியா இருப்பாரு இல்ல.....

அதான் நர்ஸ் இருக்காங்களே.....

இல்ல அவங்க ஏழு மணிக்கு கிளம்பிடுவாங்க.... அதுக்குள்ள நம்மலால வரமுடியல ன்னா ரொம்ப கஷ்டம்.....

ஹூம்.... ஓகே ஆன்டி..... உங்களுக்கு எதாவது வேணுமா சொல்லுங்க..... நாங்க வரும்போது வாங்கி கொண்டு வரோம்.

இல்லம்மா..... மம்தா எல்லாமே வாங்கிட்டா.... நான் எதாவது ஒண்ணு வேணும்னு சொல்ல வரதுக்குள்ள அவ வாங்கி வந்திடுவா....

ஆமாம் மம்தா அக்கா ரொம்ப ரொம்ப நல்லவங்க.... எனக்கு அவங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

எங்க எல்லாருக்குமே உன்னையும் உங்க அக்காவையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

எனக்கும் உங்க மூணு பேரையும் ரொம்ப பிடிச்சிருக்கு.... அக்கா உங்களை கூப்பிடற மாதிரி அம்மா அப்பா ன்னு கூப்பிட ஆசையா தான் இருக்கு.... ஆனா.....

நீ எப்படி வேண்டுமானாலும் கூப்பிடு.... உன்னோட விருப்பம் தான்.... எங்களை பொறுத்தவரை நீயும் உன்னோட அக்கா ராகினியும் எங்களுக்கு மம்தாவும் மனீஷாவும் போல தான்.

மனீஷாவா யாரு அவங்க?

மனீஷா.... எங்க சின்ன பொண்ணு.....

அவங்க இப்போ எங்க இருக்காங்க?

ரொம்ப தூரத்தில இருக்கா.... என்று சொல்லி கண்கள் கலங்கினார் சீதாலட்சுமி.

வெளிநாட்டில் படிக்கிறாங்களா?

ஆமாம் மா.... என்றார் ராம்லால்.

குட்மார்னிங் அங்கிள்.

குட்மார்னிங் மா..... நீ தூங்குற ரூம்ல பெரிய ஃபோட்டோ இருக்கே அதில் மம்தாவோட இருக்காளே அவ தான் எங்க சின்ன பொண்ணு.... என்றார் ராம்லால்.

பார்த்திருக்கேன்.... நான் அவங்க வேற மாதிரி இருக்காங்களா...... அதான் கசின் சிஸ்டர் இல்ல வேற யாரோ ரிலேட்டிவ் ஆர் ஃபிரெண்டு ன்னு நினைச்சேன்.

சரிம்மா நீ போய் புக்ஸ் எல்லாம் எடுத்து வச்சிக்கோ.... நான் ஜூஸ் எடுத்து கொண்டு வரேன்.... என்றார் சீதாலட்சுமி.

ஓகே ஆன்டி.... பை அங்கிள்.... என்று சொல்லி விட்டு தன் ரூமிற்கு சென்றாள் ரூபினி.

என்ன சீதா நீ..... அவளே சின்ன பொண்ணு.... அவ கிட்ட நம்ம மனீஷா பத்தி எல்லாம் பேசுவீயா?

இல்லீங்க.... நான் சாதாரணமாக பேசும்போது மனீஷா பெயரை சொல்லிட்டேன்.... அதான்....
என்று சொல்லி அழுதார் சீதாலட்சுமி.

அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்தார் ராம்லால்.

தன் ரூமிற்கு வந்து அவளுடைய பழைய புக்ஸூகளை எடுத்து பார்த்து கொண்டு இருந்தாள் ரூபினி.

அப்போது ரூபினியின் ஃபோன் அடித்தது.

எடுத்து ஹலோ என்றாள்.

மறுமுனையில் அமைதி....

மறுபடியும்

ஹலோ யாருங்க....

பதில் இல்லை....

ஹலோ.... ஹலோ.... என்று சொல்லி விட்டு பதில் இல்லை என்பதால் ஃபோனை வைத்து விட்டாள் ரூபினி.

மறுபடியும் அதே நம்பரில் இருந்து கால் வந்தது.

ஹலோ யாருங்க.... கால் பண்ணிட்டு பேசலைன்னா எப்படி?.....

ஹலோ..... என்றான் சுரேஷ்.

சொல்லுங்க.....

என் பெயர் ரஞ்சித்..... என்றான் சுரேஷ்.

சொல்லுங்க சார்.....

உங்களுக்கு நாளைக்கு நான் தான் பையாலஜி சொல்லி தரப் போறேன்.

ஓ.... ஓகே சார்.... சாரி சார்.... யாருன்னு தெரியாம உங்க கிட்ட சத்தமா பேசிட்டேன்....

பரவாயில்லை மா..... இங்கே சிக்னல் சரியாக இல்லை அதான் உனக்கு நான் பேசினது கேட்கல....

ஓ.... ஓகே சார்..... சொல்லுங்க சார்.....

நீ உடம்பு சரியில்லாம இருந்து இப்போ தான் ஜாயின் பண்ணப் போற ன்னு கோச்சிங் சென்டர்ல சொன்னாங்க.....

ஆமாம் சார்.....

அதான் உனக்கு பயாலஜில எது வரைக்கும் தெரியும் ன்னு தெரிஞ்சிக்கலாம் ன்னு கால் பண்ணேன்.

நாளைக்கு கிளாஸ்லையே கேட்டிருக்கலாமே சார்.....

இல்லம்மா.... நான் எல்லாருக்கும் லிஸ்ட் படி கால் பண்றேன்.... எல்லாரோடதையும் வச்சி காமன்னா ஒரு டாப்பிக் எடுப்பேன்...
அதுக்காகத்தான்.

ஓ... ஓகே சார்..... நான் டென்த் சிலபஸ்ல பாதி படிச்சிருக்கேன் சார்.....

சரி.... நான் சொல்றது எல்லாம் உனக்கு தெரியுமா ன்னு சொல்லு.....

சொல்லுங்க சார்.....

லிவ்விங் ஆர்கனிஸம்ஸ்....

யெஸ் சார்......

ஸ்டடி ஆஃப் பிளாண்ட்ஸ் அன்ட் அனிமல்ஸ்....

எஸ் ஸார்.....

பிளாண்ட்ஸ் ரீப்பிரொடக்ஷன்?

எஸ் ஸார்.....

ஏ- செக்ஷூவல், செக்ஷூவல்?

எஸ் ஸார்.....

ஹீயூமன் ரீப்பிரொடக்ஷன்?

எஸ் ஸார்....

எதுவரைக்கும் தெரியும்?

சார்.... அது வந்து....

இது படிப்பு மா .... இதுல வெட்கப் படக் கூடாது..... தைரியமா உனக்கு தெரிஞ்சதை கிளீயரா சொல்லு....

ஃபங்கஷன்ஸ் ஆஃப் தி ஹீயூமன் ரீப்பிரொடக்டிவ் சிஸ்டம் தெரியும் சார்..... படிச்சிருக்கேன்....

ஓ பரவாயில்லையே.... வெரிகுட்.... எக்ஸ்பிலெயின் பண்ணு.....

சார்.... எனக்கு இன்னொரு கால் வருது.... அப்புறமா பேசறேன்.... பை.... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாள் ரூபினி.

கை கால்கள் எல்லாம் உதறியது அவளுக்கு.

ஃபோனை வைத்த சுரேஷூக்கு....
இன்னைக்கு இது போதும்.... இதுவே போதையா இருக்கு.... அவ நார்மலா ஆயிட்டா இப்போ ஒரே ஒரு முறை அவ சம்மதத்தோட முடிச்சிட்டோம் ன்னா போதும்.... ராஜ போதை கிடைச்ச மாதிரி இருக்கும்.... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான் சுரேஷ். பின்னர் தன் நண்பன் பாண்டியனுக்கு கால் செய்தான்.

இரண்டு நாளாக டிரெய் பண்றேன்.... லைனே கிடைக்கல.... என்ன பண்றான் இந்த பாண்டியன்.... அவன் கிட்ட ரூபினியை கண்டுப்பிடிச்சிட்டேன் ன்னு சொல்லலாம் ன்னு பார்த்தா.... முடியலையே.... என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்த அடுத்த நொடி கால் வந்தது.

ரூபினியாக இருக்குமோ என்று நினைத்து ஆர்வமாக வந்து ஃபோனை எடுத்தான் சுரேஷ்.

ஹலோ.... யாரு.....

நான் கொயம்பத்தூரில் இருந்து ஈ2 கான்ஸ்டபிள் பேசறேன்.

சற்று பதட்டமாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்.....

சொல்லுங்க சார்..... என்றான் சுரேஷ்.

உங்க ஃபிரெண்டு தான பாண்டியன்....

ஆமாம் சார்....

ரெண்டு நாள் முன்னாடி அவருக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடிச்சு.....

அச்சச்சோ..... இப்போ எப்படி இருக்கான்?

ரெண்டு நாளாக கோமாவில் இருந்தாரு இப்போ தான் பத்து நிமிடத்திற்கு முன்னாடி இறந்திட்டாரு....அவரோட ஃபோன் ஆக்ஸிடென்ட் ஸ்பாட்ல இருந்ததால ஆஃப் பண்ணி வச்சிருந்தோம்.....இப்போ அவர் இறந்திடவே கால் பண்ண ஓப்பன் செய்தால் உங்க நம்பர் தான் முதலில் இருந்துச்சு.... அப்பா அம்மா யாரோட நம்பரும் இல்ல....

சார்.... இது அஃபீஷியல் ஃபோன்.... அதான் என் நம்பர் மட்டும் இருக்கும். அவன் பிரைவேட் மொபைல் மே பீ வீட்ல வச்சிருப்பான்.

ஓ.... ஓகே தம்பி.... நீங்க வருவீங்களா?

கண்டிப்பா சார்.... இப்போ கிளம்பறேன்....

நீங்க வரும்போது இந்த நம்பருக்கே கால் பண்ணுங்க....ஸ்டேஷனில் வந்து சைன் பண்ணிட்டு போப்பா....

சரிங்க சார்.....

ஃபோனை வைத்து விட்டு.... ஆக்ஸிடென்ட் ஆயிடிச்சா.... அவ்வளவு ஸ்பீடா கூட ஓட்டமாட்டானே.... எப்படி.... என்று யோசித்தான் சுரேஷ்.

**************

நடுக்கமாக இருந்தாள் ரூபினி.

அப்போது மறுபடியும் கால் வந்தது. பயந்து எடுக்கவில்லை.

ஜூஸை ரூபிக்கு கொடுக்க வந்த சீதாலட்சுமி....

என்னாச்சு மா.... ஃபோன் அடிக்குதே எடு.... என்றார்.

இல்ல ஆன்டி வேண்டாம்..... என்று பயந்தவாறே கூறினாள்.

சீதாலட்சுமி ஃபோனை எடுத்து....

ஹலோ.... அப்படியா.... ஒரு நிமிஷம்.... என்று சொல்லி....

இந்தாம்மா.... என்று ரூபினியிடம் ஃபோனை நீட்டினார்....

வேண்டாம் ஆன்டி.... நான் பேசல.... வேண்டாம் ஆன்டி.... என்று சொல்லி அலறினாள்.

என்னாச்சு ரூபினி.... ஃபோன்ல உங்க அக்கா ராகினி.

அக்காவா.... என்று சொல்லி ஃபோனை வேகமாக வாங்கி.....

அக்கா.... அக்கா..... எனக்கு பயமா இருக்கு அக்கா.... நான் டியூஷன் போகல..... நான் படிக்க போறதில்ல.... எனக்கு படிப்பே வேண்டாம்.... பயமா இருக்கு அக்கா.

ரூபி.... ரூபி.... பதட்டப்படாதே..... என்னாச்சு.... ஏன் பயமா இருக்கு?

அக்கா.... அக்கா.... என்றாள்.

சரி ஃபோனை சீதா அம்மா கிட்ட கொடு....

ஃபோனை வாங்கிய சீதாலட்சுமி....

ராகினி....

என்னாச்சு அம்மா?

தெரியல மா.... நல்லா தான் இருந்தா.....
கிட்சனுக்கு வந்து பேசிக்கிட்டு இருந்தா.... புக்ஸ் எடுத்து வைக்கிறேன்னு ரூமிற்கு வந்தா.... நான் ஜூஸ் கொண்டு வரும்போது பார்த்தா இப்படி பயப்படறா....

ஓகே அம்மா.... நீங்க கவலைப்படாதீங்க.... நான் இப்பவே கிளம்பி வரேன்....என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு..... மம்தாவிடம் விஷயத்தை கூறினாள் ராகினி.

பத்து நிமிடம் தான் இருந்தது டியூட்டி டைம் முடிய.... ஆகையால் டேவிஸ் சாரிடம் பர்மிஷன் கேட்டு மம்தாவும் அவளுடன் கிளம்பி வந்துவிட்டாள்.

வீட்டிற்கு வந்தவுடன் இருவரும் ரூபினியிடம் என்னவாயிற்று என்று கேட்டனர்.

நடந்தவற்றை கூறினாள் ரூபினி.

உனக்கு கால் வந்துச்சா.... கோச்சிங் சென்டர்ல இருந்தா?

ஆமாம் அக்கா....

இரு நான் கோச்சிங் சென்டருக்கு கால் பண்ணி கேட்கிறேன்..... என்றாள் மம்தா.

வேண்டாம் மம்தா....

ஏன்டி....

வெளியே வா ஒரு நிமிஷம்.... என்றாள் ராகினி.

அக்கா.... ஏன் அக்கா அப்படி எல்லாம் பேசறாரு சார்?

நீ கவலைப்படாதே ரூபி.... பேசினது சாரா இருக்காது.... எந்த ஒரு சாரும் அப்படி எல்லாம் பேச மாட்டாங்க.... இது யாரோ ஒரு பொறுக்கி பையன் சும்மாவே கால் பண்ணி பேசி இருக்கான்....என்று அவளுக்கு சமாதானம் செய்தாள் ராகினி.

உண்மையிலேயே இந்த மாதிரியான சார் எல்லாம் கோச்சிங் சென்டர்ல இருக்க மாட்டாங்க இல்ல?

கண்டிப்பா இருக்க மாட்டாங்க.... அப்படியே இருந்தாலும் நீ எங்க கிட்ட சொல்லு.... அவங்களை ஒரு வழி பண்ணிடலாம்.

அத்தான் கிட்ட சொல்லி இவங்களை எல்லாம் ஜெயில்ல புடிச்சு போடனும் அக்கா ....

போடலாம்.... என்றாள் ராகினி எதையோ யோசித்தவாறே.

***********

தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன் .