தொடர்பியல்.... பாகம் -46
கேஸ்-3 ( பிரகாஷ் -ரோஜா)
சார்.... உங்களுக்கு தெரிஞ்சு பையனா?
அப்படி சொல்ல முடியாது சார்.... என்னோட உட்பீ தான் ராகினி.... நீங்க அவங்க கிட்ட கூட விசாரிச்சதா சொன்னாங்க....
ராகினியா?.... என்று யோசித்து விட்டு....
ஆமாம் ஆமாம்.... அந்த பையன் வாடகைக்கு இருந்த வீட்டு ஓனர்.
ஆமாம் சார்.... அதான்.... என்ன ஏதுன்னு கேட்க கால் பண்ணினேன்.
அந்த கேஸ் சரியான ஜவ்வாகும் போல சார்....
ஒரு மொபைல் ஃபோன் கிடைச்சுது.... அதில் மொத்தமே நாலு நம்பர் தான் இருந்துச்சு.... அதில் ஒருத்தன் தான் ஃபோனை எடுத்தான். அவனும் உடனே வரேன்னு சொன்னான்.... மறுபடியும் கால் பண்ணினா ஸ்விட்சிடு ஆஃப்ன்னு வருது.... பாடியை யார் கிட்ட ஒப்படைக்கிறதுன்னு தெரியல.... என்று புலம்பினார்.
ஏன் அவனுடைய அப்பா அம்மா நம்பர் எதுவும் இல்லையா?
அந்த மொபைலில் இல்ல.... வேற ஃபோன் வச்சிருந்தான்னு அவன் ஃபிரெண்டு சொன்னான்....ஆனா எல்லா இடங்களிலும் செக் பண்ணியாச்சு..... எதுவுமே கிடைக்கல....
ஓ.....
சரிங்க சார்.... வேற எதாவது தகவல் வேணுமா?
அந்த ஃபிரெண்டு பேரு என்ன?
அந்த பையன் பேரு..... சுரேஷ்.... என்றார்.
ஓகே சார்.... தேங்க்ஸ்.... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான் மாதவன்.
பழைய கதையை விடு டா.... இப்போ ரூபி எங்கிருக்காளோ.... அதை முதலில் கண்டுப்பிடிக்கலாம்.... என்றாள் ராகினி.
ஏய்.... அதுக்காக தான் டி கால் பண்ணேன்.... அந்த சுரேஷ் எங்க இருக்கான்னு தெரிஞ்சிக்க.... என்றான் மாதவன்.
சாரி டா.... டென்ஷன்ல பேசிட்டேன்.... என்றாள் ராகினி.
இட்ஸ் ஓகே டி.... ரூபினிக்கு ஒண்ணும் ஆகாது.... நீ கவலைப்படாதே.... என்றான் மாதவன்.
அப்போது மாதவனுக்கு கால் வந்தது.
எடுத்து ஹலோ சொல்லுங்க.... என்றான்.
சார் நீங்க சொன்ன டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி வச்சிருக்கோம்.....
கார் பார்க்கிங்கில் இருந்து இரண்டு கார் நீங்க சொன்ன டைம்ல வெளியே வந்திருக்கு.... அதில் ஒண்ணு ரெட் செடான் அதில் ஒரு ஃபேமிலி இருந்தாங்க.... அது கிளியர்ரா வெளியே இருந்த சிசிடிவி கேமராவில பதிவாகி இருக்கு.... அந்த கார் இப்போ அண்ணாநகர் ஏரியாவில் ஒரு ஹோட்டல் வாசலில் நின்னுகிட்டு இருக்கு.
இன்னொரு கார் பிளாக் ஹாட்ச் பேக்....
அதில் இரண்டு பேர் போன மாதிரி தெரிஞ்சது.... ஆனா கிளயர்ரா தெரியல.... ஏன்னா கூளிங் ஷீட் ஒட்டியிருந்தது அந்த வண்டியில.... ரெண்டு ஃபூட்டேஜையுமே உங்களுக்கு அனுப்பி இருக்கேன்.... என்றார்.
சார்.... தேங்க் யூ ஸோ மச்..... இந்த பிளாக் ஹாட்ச் பேக் கார் போன ரூட்டை மட்டும் டிரேஸ் பண்ணி சொல்ல முடியுமா?..... என்றான் மாதவன்.
ஓகே சார்.... டிரை பண்ணி பார்க்கிறேன்.....
தேங்க்ஸ் சார்.... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான் மாதவன்.
அரை மணிநேரத்திற்கு பிறகு மாதவனுக்கு கால் வந்தது.
சார்.... ஸ்விட்ச் ஆஃப் ஆன நம்பருக்கு கடைசியாக வந்த கால் சுரேஷ் என்ற பெயரில் பதிவாகி இருந்தது. அது இவ்வளவு நேரமாக ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது..... இப்போது ஆன் ஆகி இருக்கிறது.... அதுவும் இல்லாம அந்த நம்பரில் இருந்து உங்க மொபைலுக்கு மெஸேஜ் வந்திருக்கு....என்றனர் சைபர் டிபார்ட்மெண்ட்டில் இருந்து.
வாட்.... என் நம்பருக்கா?..... என்று சொல்லி தன் ஃபோனை எடுத்து பார்த்தான் மாதவன்.
ஃபோன் பேசிக்கொண்டு இருக்கவே மெஸேஜை பார்க்க முடியவில்லை..... ஓகே சார்.... நான் பார்த்துக்கொள்கிறேன்.... முடிஞ்சா லொகேஷன் மட்டும் ஷேர் பண்ணுங்க சார்?.... என்றான் மாதவன்.
ரெட் ஹில்ஸ்.... சார்....
ஓகே சார்.... தேங்க்ஸ்.....என்று சொல்லி காலை கட் செய்து விட்டு அந்த மெஸேஜை ஓப்பன் செய்தான் மாதவன்.
ஐ ஆம் இன் டேண்ஜர்.... பிளீஸ் கம் சூன்.... ரூபினி.......என்றிருந்தது.... கூடவே கரெண்ட் லொகேஷனும் இருந்தது. பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டு வேகமாக கிளம்பினான் மாதவன்.
****************
காரில் இருந்து இறங்கினர் சுரேஷ் மற்றும் ரூபினி.
அமைதியாக அவனுடன் நடந்து சென்றாள் ரூபினி.
நீ இவ்வளவு சுலபமா ஒத்துழைப்பு தருவ ன்னு நினைச்சு கூட பார்க்கல.... என்றான் சுரேஷ்.
அமைதியாக இருந்தாள் ரூபினி.
என்ன டார்லிங்.... ஒண்ணுமே பேச மாட்டேங்குற?.... உன் குரலை கேட்டாலே போதை ஏறுச்சு தெரியுமா....
நிமிர்ந்து பார்த்தாள் ரூபினி....
ஆமாம்.... நேத்து உன் கிட்ட ஃபோன்ல பேசினது நான் தான்.....
முறைத்தாள் ரூபினி....
ஏன்டி செல்லம் கோப படுற.....நேத்து தியரி.....இன்னைக்கு பிராக்டிக்கலஸ்.... என்று சொல்லி கண் அடித்தான்.... என்ன ஒண்ணு பாண்டியனும் உன் மேல வெறியா இருந்தான்.... பாவம் ஆக்ஸிடென்ட்டில் செத்திட்டான்.... இல்லன்னா அவனும் இப்போ வந்திருந்தா.... மூணு பேரும் ஒண்ணா ஜாலியா இருந்திருக்கலாம்.... எதாவது பேசு.... ஏன் அமைதியா இருக்க?....என்றான்.
எத்தனை முறை.... என் கூட..... பண்ணீங்க.... என்றாள் ரூபினி.
எத்தனை முறையா இருந்தா என்ன?....
சொல்லு....
சரியா கணக்கு வச்சிக்கல.... மூணு மாசத்துல ஒரு பத்து இல்ல பன்னிரெண்டு முறை.... அதெல்லாம் எதுக்கு டி செல்லம்?
உங்க ரெண்டு பேரையும் தவிர வேற யாராவது?
இல்ல இல்ல.... நாங்க பிரகாஷ் கிட்ட உன்னை புக் பண்ணிட்டோம் ஆறு மாசத்துக்கு.... மூணு மாசம் தான் முடிஞ்சது.... அதுவும் வாரத்துக்கு ஒரு முறை தான் விடுவான் அந்த பிரகாஷ்.... அதுக்கு மேல நீ தாங்க மாட்ட ன்னு அவனோட உட்பீ ரோஜா சொன்னாளாம்.... அதனால அலோ பண்ண மாட்டான்.....
ரோஜா யாரு.....
ஓ.... அதுவே உனக்கு தெரியாது இல்ல.... உன்னை பார்த்துக் கொண்ட நர்ஸ் ரோஸி தான் ரோஜா.
அத்தைங்க ரெண்டு பேரும் வீட்ல இருக்கும் போது.... நீங்க எப்படி வந்தீங்க....
அதெல்லாம் இப்போ எதுக்கு.... வா.... வந்த வேலையை பார்க்கலாம்..... என்று சொல்லி அவளை கட்டிப் பிடிக்க வந்தான் சுரேஷ்.
இரு.... எனக்கு எல்லா விவரமும் சொன்னா தான் வருவேன்.... என்றாள் ரூபினி.
பரவாயில்லையே.... நீ வர ன்னு சொன்னதே போதும்.... உன் விருப்பத்தோட வந்தா தான் எனக்கு சந்தோஷம்.... சரி கேளு.... உனக்கு என்னவெல்லாம் தெரிஞ்சிக்கனும்?
அத்தைங்களுக்கு இது தெரியுமா?
இல்ல.... நர்ஸ் ரோஜா சனிக்கிழமை ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் தூக்க மாத்திரை கொடுத்திடுவா..... அவங்க தூங்கின பிறகு நாங்க வருவோம்....
வாணி அத்தை இறந்ததிற்கும் உங்களுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா?
எனக்கும் பாண்டியனுக்கும் சம்பந்தம் இல்லை..... பிரகாஷ் -ரோஜா வுக்கு சம்பந்தம் இருக்கா ன்னு எனக்கு தெரியாது.....
என்ன சொல்ற....
ஆமாம்..... அன்னைக்கு நாங்க வந்தோம்.... அப்போது உங்க அத்தை மாத்திரை போடல போல.... சத்தம் கேட்டு வந்திட்டாங்க.... பிரகாஷூம் ரோஜாவும் எங்களை போகச் சொன்னாங்க.... நாங்க பே பண்ணதால போக மாட்டோம் ன்னு சொன்னோம்.... அப்புறம் எங்களை வெளியே துரத்திட்டாங்க.... மறுநாளே உங்க அத்தை இறந்திட்டாங்க.... பிரகாஷ் ரோஜா அங்கே இல்லை.... அவங்க எஸ்கேப்.... அதுக்கு மேல அங்கிருந்தா நாங்களும் மாட்டிக்குவோம்னு கிளம்பிட்டோம்.... உன்னை பார்க்காம என்னால இருக்க முடியல.... நான் உன்னை தேடி வந்தேன்.... ஆனா உன்னோட அக்கா சென்னைக்கு கூட்டிக்கிட்டு போயிட்டதா கேள்விப்பட்டேன்.... பாண்டியன் எவ்வளவு சொல்லியும் கேட்காம உன்னை ஒரு மாசமா தேடிக்கிட்டு இருந்தேன்.... உங்க அக்கா தங்கியிருந்த ரூமை காலி செஞ்சு போயிட்டாங்க ன்னு சொன்னாங்க.... அந்த நிமிஷம் எனக்கு பைத்தியம் பிடிக்கிறாப்புல இருந்துச்சு.... ஆனாலும் எப்படியோ நீ உங்க அக்கா கூட வேலை செய்யுறவங்க வீட்ல இருக்க ன்னு தெரிஞ்சு வந்தேன்.... உன்னை நேரா பார்த்தேன்.... அப்போ தான் எனக்கு நிம்மதியா ஆச்சு..... போதை சும்மா சுள்ளுன்னு மூளைக்கு ஏறிச்சு.... என்றான் அவள் தோளை முகர்ந்து..... போதுமா.... ஆரம்பிக்கலாமா?..... என்றான் சுரேஷ்.
எனக்கு அந்த பிரகாஷ் ரோஜா ஃபோன் நம்பர் வேணும்.....
இதுக்கு மேல அவங்க எதுக்கு..... நான் எப்போ வேணும்னு நினைக்கிறனோ அப்போ உன்னை கூப்பிடறேன்.... உனக்கு வேணும்னாலும் என்னையே கூப்பிடு....என்று சொல்லி அவள் இதழ்களின் அருகில் வந்தான் முத்தமிட.....
சொல்லு.... என்றாள் ரூபினி.
மிச்.... மூடை ஸ்பாயில் பண்ணாத டி செல்லம்.... ஏற்கனவே போதை தலைக்கு ஏறிடிச்சுன்னு சொன்னேன் இல்ல..... என்றான் சுரேஷ் சற்று கோபமாக.
பிளீஸ்.... இது மட்டும் தான்.....
சரி இரு.... என்று சொல்லி தன் ஃபோனை ஆன் செய்தான் சுரேஷ்.... பிரகாஷ் நம்பர் மட்டும் தான் இருக்கு.... என்று சொல்லி தன் மொபைலில் இருந்து எடுத்து காண்பித்தான்.
சோஃபாவில் அமர்ந்து இருந்தனர் இருவரும்.
அவள் ஃபோனை வாங்கி நம்பரை பார்த்து மனப்பாடம் செய்து கொண்டு இருந்தாள். சுரேஷ் அவள் அருகில் வந்து அவளுடைய கழுத்தில் முத்தம் கொடுக்க ஆரம்பித்தான்.....உள்ளத்தில் நடுக்கம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அவனை முத்தமிட அனுமதித்தாள் ரூபினி. அவனுடைய ஃபோனில் இருந்து மாதவனுக்கு மெஸேஜ் செய்தாள் ரூபினி. மாதவனின் எண்ணை மனப்பாடம் செய்து வைத்திருந்தாள்.
டோண்ட் கால் மீ அத்தான்..... ஐ ஆம் இன் டேண்ஜர்.... பிளீஸ் கம் சூன்.... ரூபினி.... ஐ வில் டெலீட் திஸ் மெஸேஜ்.... என்று டைப் செய்து அனுப்பினாள் ரூபினி..... மேலும் கரெண்ட் லொகேஷனும் ஷேர் செய்து விட்டு அதை டெலீட் செய்தாள்....மெஸேஜ் செண்டானதும் அதையும் டெலீட் செய்து அந்த நம்பரையும் டெலீட் செய்தாள்.....இதை கவனிக்கவில்லை சுரேஷ். அவன் அவளை அடைவதிலேயே குறியாக இருந்தான்.
செல்லம்.... கட்டிப்புடி டி.....என்று சொல்லி அவள் கைகளை தன் மேல் வைத்தான்.....
எனக்கு பயமா இருக்கு.... என்றாள்.
எதுக்கு பயம்.....
எங்க அக்காவுக்கு தெரிஞ்சா...
கவலையே படாத.... தெரிய வாய்ப்பே இல்லை.....
அந்த வீடியோ.... என் ஃபோனுக்கு அனுப்பினியே.... அது.....
அதை உன்னை வரவழைக்க தான் அனுப்பினேன்.... மத்தபடி.... அதெல்லாம் வெளியிட மாட்டேன்.... வெளியிட்டா நானும் தான மாட்டுவேன்..... என்றான் சிரித்தபடியே.
நீ அதை டெலீட் பண்ணிட்டா.... எனக்கு நிம்மதி.....
இங்க பாரு.... இப்போ ஒரு முறை உன் சம்மதத்தோட எல்லாம் முடிச்சிட்டா.... அப்புறம் உன் மேல நம்பிக்கை வந்திடும்..... உடனே டெலீட் பண்ணிடறேன்....
எங்க இருக்கு?
மிச்.... ஓவரா பண்ற டி.... என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.... வா.... என்று சொல்லி அவளை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தான் சுரேஷ்.
இரு இரு.... நானே வரேன்...
பிளீஸ்.... பிளீஸ்.... என்றாள் ரூபினி.
சரி வா..... ரூமுக்கு போகலாம் என்று சொல்லி அவளை இறுக்கமாக அணைத்து கொண்டே நடந்து சென்றான்.
உள்ளே சென்றதும்.... ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்.... என்றாள் ரூபினி.
ஏய்.... என்று கோபப்பட்டான் சுரேஷ்.
அர்ஜெண்டா பாத்ரூம் போகனும்.... பிளீஸ்....
சரி..... போ.... என்று சொல்லி கதவை திறந்துவிட்டான் .
அவள் வருவதற்குள் ரூமில் ரூம் ஃபிரெஷ்னர் அடித்து விட்டு தனக்கும் பர்ஃபியூம் அடித்துக் கொண்டு ரெடியாக பெட்டில் அமர்ந்து இருந்தான் சுரேஷ் .
***************
தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.