• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடர்பியல்..... பாகம் -47

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
197
78
28
Maduravoyal

தொடர்பியல்..... பாகம் -47

கேஸ் -3 (பிரகாஷ் -ரோஜா)

ரூபினியின் வருகைக்காக காத்திருந்தான் சுரேஷ்.

பாத்ரூமுக்குள் சென்ற ரூபினி....

அழுதாள்.... கதறினாள்.... கடவுளே இந்த கொடியவன் கிட்ட இருந்து என்னை காப்பாற்றிக்கொள்ள எனக்கு தைரியமும் தெம்பும் கொடு....அத்தானை சீக்கிரமா வரவழைத்து விடு..... என்று வேண்டிக் கொண்டாள்.

ஏய்.... சீக்கிரமா வா.....என்று கத்தினான் சுரேஷ்.

மெதுவாக கதவை திறந்து கொண்டு வந்தாள்.

அவளின் அருகில் சென்று அவளை அரவணைத்து கொண்டே அவளை கட்டில் வரை அழைத்து வந்தவன் அவளுடைய கழுத்திலும் முகத்திலும் முத்தங்கள் கொடுக்க ஆரம்பித்தான்.

ஏய் கட்டிப்பிடி டி.... என்று சொல்லி அவளுடைய கைகளை அவனுடைய முதுகில் கோர்த்து விட்டான்.

கண்களை மூடிக் கொண்டாள் ரூபினி.....
பின்னர் தன் கையில் வைத்திருந்த பிளேடால் அவனுடைய முதுகை சரமாரியாக கிழித்தாள்..... ரத்தம் வழிந்தோடியது.... வலியில் துடித்தான் சுரேஷ்....அவளை ஓங்கி ஒரு அறை விட்டான். அவள் சுருண்டு விழுந்தாள். ஆழமாக நான்கு ஐந்து பெரிய கோடுகள் போட்டுவிட்டதால் அவனால் வலியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அங்கிருந்த டவளை எடுத்து ரத்தம் வழியாமல் சுற்றிக் கொண்டான்.

நினைச்சேன் டி.... நீ பிரச்சனை பண்ணாம என் கூட ஏறி வரும்போதே நீ எதோ பிளான் பண்ணி தான் வர ன்னு.... என்று சொல்லி அவள் கழுத்தை நெறித்தான்.

அவளுக்கு மூச்சு முட்டியது.... கீழே விழுந்திருந்த பிளேடை எடுத்து அவனுடைய கைகளை கிழித்தாள்..... இம்முறை இன்னும் ஆழமாகவும் அழுத்தமாகவும் அறுத்தாள்.
அவனுடைய கை நரம்புகள் அறுந்தது.

வலியில் துடித்தான்.... அவனை எட்டி உதைத்தாள்.... பொம்பளைன்னா எப்பவுமே உங்களை விட வலு இல்லாதவர்களாக தான் இருப்பாங்க ன்னு நினைச்சியா..... என்று காலால் அவனை மூன்று நான்கு முறை உதைத்தாள் ரூபினி.

ஏய்.... உன்னை கொன்னுடுவேன் டி.....

ஏற்கனவே என்னை கொன்னுட்டீங்க டா.... பொறுக்கீங்களா..... இன்னும் எத்தனை பேரை என்னை மாதிரி பண்ணுவீங்களோ ன்னு பயந்து தான் உன் கூட வந்தேன்.... நான் செத்தாலும் பரவாயில்லை உன்னை கொன்று விட வேண்டும் என்ற முடிவோடு தான் வந்தேன்..... நீ சொன்னீயே என்னோட அக்கா நீ அனுப்பின வீடியோ பார்த்து தூக்கு மாட்டிக்குவா ன்னு.... அவளுக்கு மட்டும் இது தெரிஞ்சதுன்னா உன்னையும் உன் கூட இருந்தவனையும் மத்த இரண்டு பேரையும் கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடுவா.... அவளுக்கு எந்த வித பிரச்சனையும் வரக்கூடாது ன்னு தான் நான் வந்தேன்.....

வலியில் துடித்தான் சுரேஷ்..... ரத்தம் வழிந்தோடியது.....

அங்கிருந்த பொருட்களை எல்லாம் அவனுடைய தலையில் போட்டு உடைத்தாள்..... அங்கிருந்த அவனுடைய லேப்டாப்பையும் அவனுடைய செல் ஃபோனையும் எடுத்து கீழே ஓங்கி போட வந்தாள் ரூபினி.

ரூபினி.... வேண்டாம்..... என்றான் மாதவன்.

அத்தான்.... என்று அழுதுகொண்டே அவனருகில் ஓடி வந்து அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டாள் ரூபினி.

அவளுடைய தலையை கோதி விட்டான் மாதவன்.

பயப்படாதே மா.... நான் வந்திட்டேன் இல்ல..... என்றான்.

அத்தான்.... இவனை கொன்னுடுங்க..... இல்லன்னா என்னை மாதிரி இன்னும் நிறைய பேரோட வாழ்க்கையை நாசம் செய்வான்..... என்றாள் ரூபினி.

இல்ல ரூபி..... இவனை மாதிரி ஆளுங்களை ஊரு உலகத்துக்கு அடையாளம் காட்டனும்.... இவனுங்களுக்கு கிடைக்கிற தண்டனையை பார்த்து இதுக்கு மேல யாரும் அப்படி ஒரு தப்பை செய்யக் கூடாது ன்னு நினைக்கனும்....

அத்தான்.... இவனெல்லாம் சீக்கிரமா வெளியே வந்து அதே தப்பை மறுபடியும் செய்வான்..... என்றாள் ரூபினி.

என்னை நம்பு ரூபி.....

அத்தான்.... என்று கெஞ்சினாள் ரூபினி.

நீ உனக்கு நடந்த கொடுமைகளை தைரியமா சொல்லு.... சட்டப் படி அவனுக்கு தண்டனை வாங்கித் தரலாம்.... இந்த ஆதாரங்களை அழிச்சிடாத.... என்றான் மாதவன்.

ஓகே அத்தான்.... என்றாள் ரூபினி.

ரூபினியின் கைகளிலும் பிளேடால் அடிப்பட்டு ரத்தம் வழிந்தோடியது..... தன் கர்சீஃபை எடுத்து கட்டு போட்டு விட்டான் மாதவன்.

தன் பேக்கப்பை வரவழைத்து ஆம்புலன்சில் சுரேஷை ஏற்றி ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்தான் மாதவன். இரண்டு போலீஸ்காரர்கள் அவனை அட்மிட் செய்த ஆஸ்பத்திரியில் காவலுக்கு இருந்தனர்.

ரூபினிக்கு கையில் பேண்டேஜ் போட்டுவிட்டு.... நேராக அவளை போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்து சென்றான் மாதவன்.

ஒரு லேடி போலீஸிடம் அவளை அமர வைத்து கம்ப்ளெயின்ட் எழுதி வாங்கிக் கொண்டான்.
பின்னர் ராகினிக்கு கால் செய்தான் மாதவன்.

ராகினி.... ரூபி என் கூட தான் இருக்கா.... அவளுக்கு ஒண்ணும் ஆகல நீ பயப்படாத.... நான் கூட்டிட்டு வந்து விடறேன்.....

ஓகே டா.... தேங்க்ஸ்.... தேங்க் யூ ஸோ மச் டா..... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு மம்தாவிடம் ரூபி கிடைச்சிட்டா..... என்று சொல்லி அவளைக் கட்டிப் பிடித்து கொண்டாள் ராகினி.

மம்தாவும் மிகவும் சந்தோஷ பட்டாள். நான் அம்மாவிடம் எதுவும் சொல்லல.... பயப்படுவாங்க.... கவலைப்படுவாங்க ன்னு....

சரி சரி.... எதுவும் சொல்ல வேண்டாம்.... என்றாள் ராகினி. இப்போ மாதவன் அவளை கூட்டிக்கொண்டு வந்து விட்டு போனதும் நாம வீட்டுக்கு போயிடலாம்.... என்றாள் ராகினி.

ஓகே டி..... என்றாள் மம்தா.

இரவு பத்து மணி அளவில் ராகினியின் ரூமிற்கு வந்தார்கள் ரூபினி மற்றும் மாதவன்.

அக்கா.... என்று அழுதுகொண்டே ராகினி மற்றும் மம்தாவை கட்டிப்பிடித்து கொண்டாள் ரூபினி.

இருவரும் அவளை சமாதானம் செய்தனர்.

ராகினி மாதவனை பார்த்து ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டா.... என் ரூபியை என் கிட்ட பத்திரமா கொண்டு வந்து சேர்த்ததற்கு.... என்றாள்.

ரூபினியை நான் காப்பாற்றல.....

பின்ன?

அவளே அவளை காப்பாற்றி கொண்டாள்.

என்ன சொல்ற டா.... என்றாள் ராகினி.
அப்போது தான் ரூபினியின் கையை பார்த்தாள் ராகினி.

என்னாச்சு.... ரூபி.... என்று பதறினாள்.

எனக்கு ஒண்ணும் இல்ல அக்கா.... என்றாள் ரூபினி.

என்னாச்சு டா.... என்றாள் ராகினி மாதவனை பார்த்து....

நான் போகும் போது அந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் இருந்தான்.

ரூபி.... என்ன பண்ண டி.... என்றாள் ராகினி பதட்டமாக.

அவளுக்கு வீடியோ வந்ததையும்.... அவன் மிரட்டியதையும் அவனுடன் அவள் சென்றதையும்.... பின்பு அங்கு நடந்ததையும் விளக்கமாக கூறினாள் ரூபினி.

தலையில் கையை வைத்து அமர்ந்தாள் ராகினி.

அக்கா.... நீ கவலைப்படாதே அக்கா.... அவனை மாதிரி ஆளுங்களை உயிரோட விடக்கூடாது ன்னு முடிவு பண்ணி தான் போனேன்..... அத்தான் தான் தடுத்தாரு.... இல்ல அந்த ஆதாரங்களை அழிச்சிட்டு இருப்பேன்.... என்றாள் ரூபினி.

அப்படீன்னா.... அந்த வீடியோ எல்லாம்?

அத்தான் கிட்ட கொடுத்திட்டேன்.... அவர் பத்திரமா ஆதாரங்களோட கேஸ் ஃபைல் பண்ணிட்டார்.....

வாட்?

ஆமாம் ராகினி.... அவனை சும்மா விடக்கூடாது.... அவனை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.... என்றான் மாதவன்.

ராகினி வேகமாக சென்று அவனுடைய சட்டையை பிடித்து உளுக்கினாள்.

ஏய்.... லூசாடா நீ..... என் தங்கச்சியோட வாழ்க்கையை பத்தி நீ யோசிச்சு பார்த்தியா?.... ஒரு போலீஸ்காரனா மட்டும் நடந்துக்கிட்டியே.... உன்னையே நம்பி இருந்தேனே.... என் நம்பிக்கையை உடச்சிட்டியே.... என்று கத்தினாள் ராகினி.

ராகினியை சமாதானம் செய்ய முயற்சி செய்தான் மாதவன்.

ராகினி.... நான் சொல்றதை பொறுமையா கேளு....

என் தங்கச்சிக்கு நடந்த கொடுமையை ஊரே பார்க்குமே.... இவளோட எதிர்காலம் என்னாகும்.....

மம்தா ராகினியை பிடித்து இழுத்து வந்தாள்.

என்னடி பண்ற.... பிரோ என்ன சொல்ல வராருன்னு தான் கேளேன்...
என்றாள் மம்தா.

ரூம் கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு வந்தான் மாதவன்.

நீங்க ரெண்டு பேரும் ஊர்ல கொலை பண்ணிட்டு வந்தீங்களே.... அதை போலீஸ் கண்டு பிடிச்சா.... அதுவும் திட்டமிட்ட கொலை ன்னா தண்டனை அதிகம்..... நியாயம் உங்க பக்கத்தில் இருந்தாலும்.... அது தெரியுமா?.....
நான் கொஞ்ச லேட்டா போயிருந்தாலும் ரூபியை கொலைக்காரியா தான் இந்த உலகம் பார்த்திருக்கும்.... அதுவும் அந்த ஆதாரங்களை அவ அழிச்சிட்டிருந்தா ன்னா.... அவன் கூட காரில் அவனோட வீட்டுக்கு இவ போனதால தப்பு முழுவதும் ரூபி பேர்ல் வந்திருக்கும்.....

தேம்பி தேம்பி அழுதாள் ராகினி.

கொஞ்சம் கூட என்னை புரிஞ்சிக்கவே மாட்டியா ராகினி.... உண்மையிலேயே என்னை நீ லவ் பண்றீயா இல்லையா..... என்றான் மாதவன்.

சாரி டா.... ஏதோ கோபத்திலேயும் கவலையிலும் அப்படி நடந்துக்கிட்டேன்.... உன் மேல உயிரையே வச்சிருக்கேன் டா.... அதனால தான் உன் மேல இருக்குற உரிமையில கோபப் பட்டுட்டேன்..... என்று சொல்லி அவனை கட்டி பிடித்து கொண்டு அழுதாள் ராகினி.

அவள் மேல் கோபம் இருந்தாலும்.... யாராக இருந்தாலும் அந்த மாதிரி தான் நடந்து கொள்வார்கள் என்பது அவன் நன்றாக புரிந்து வைத்திருந்ததால்....
இட்ஸ் ஓகே..... நோ இஷ்யூஸ்.... நீ ரூபினியை பார்த்துக்கோ.... நான் அந்த சுரேஷ் என்ன ஆனான் என்று பார்த்து விட்டு வருகிறேன்..... நீங்க மம்தா வீட்டுக்கு போங்க..... யாரு கிட்டேயும் எதுவும் சொல்ல வேண்டாம்..... என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான் மாதவன்.

அவன் சென்றதும்..... கார் புக் செய்து மம்தா வீட்டிற்கு சென்றனர் ராகினி ரூபினி மற்றும் மம்தா.

ரூபினியின் கையை பார்த்த சீதாலட்சுமி.....

என்னாச்சு மா.... எப்படி அடிப்பட்டுச்சு..... என்று பதட்டமானார்.

ஒண்ணும் இல்ல மா.... சின்ன அடி தான்..... நீங்க கவலைப்படாதீங்க.... என்றாள் ராகினி.

ஆமாம் அம்மா.... நீங்க கவலைப்படாதீங்க.... சின்ன ஆக்ஸிடென்ட்..... என்றாள் ரூபினி.

முதல் முறையாக தன்னை அம்மா என்று ரூபினி அழைத்ததால மிகவும் சந்தோஷ பட்டார் சீதாலட்சுமி. ரூபினியை கட்டி பிடித்து கொண்டு அவளுடைய கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டார்.

ரொம்ப வலிக்குதா மா.....

இல்லம்மா.....

சாப்பிட்டீங்களா மூணு பேரும்?

இல்ல மா.... என்றாள் மம்தா.

இருங்க நான் தோசை ஊத்தி தரேன்.... மணி 11 ஆகுது.... இவ்வளவு நேரமா.... ஷாப்பிங் பண்ணிட்டு.... சாப்பிட கூட இல்லையா?.... என்று சொல்லியவர்.... யார் கையிலும் எந்த பொருளும் இல்லையே என்று நினைத்து திரும்பி பார்த்தார்.

என்னம்மா பார்க்கறீங்க.... என்றாள் மம்தா.

ஷாப்பிங் பண்ண பொருட்கள் எல்லாம் எங்கே....

இல்லம்மா நாங்க ஷாப்பிங் பண்ணும் போது தான் ரூபிக்கு அடிப்பட்டுச்சு.... அப்புறம் டாக்டர் கிட்ட போய் கட்டு போட்டு கொண்டு வர இவ்வளவு நேரம் ஆச்சு.... என்றாள் மம்தா.

தன் மகள் தன்னிடம் எதையோ மறைக்கிறாள் என்பது நன்றாகவே தெரிந்தது சீதாலட்சுமிக்கு.... அதற்கு மேல் அதை பற்றி பேசாமல்.....

சரி சரி.... கை கால் கழுவிட்டு வாங்க.... டிபன் தரேன் ன்னு சொல்லி கிட்சனுக்கு சென்றார் சீதாலட்சுமி.

அம்மா.... நானும் வரேன்..... என்று சொல்லி அவர் பின்னால் சென்றாள் ரூபினி.

ராகினி.... ஏன்டி அப்படி பேசின பிரோ கிட்ட?

இல்ல மம்தா.... இந்த விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சா ரூபிக்கு ஏதாவது ஆயிடுமோ.... ன்னு பயந்து தான் அப்படி பேசிட்டேன்..... என்றாள் ராகினி .

நான் பயந்தது ரூபிக்கு இந்த விஷயம் தெரிஞ்சா என்னவாகுமோ.... அதை எப்படி அவ எடுத்துப்பாளோ.... தப்பான முடிவுக்கு போவாளோ ன்னு மட்டும் தான்..... எப்போ அவ தைரியமா உன் கிட்ட கூட சொல்லாம அந்த பொறுக்கியை கொல்ல போனாளோ அப்பவே அவ தைரியமானவ ன்னு தெரிஞ்சிடிச்சு.... இதுக்கு அப்புறம் அவளை நினைச்சு கவலைப்பட வேண்டாம்..... என்றாள் மம்தா .

ஆமாம் மம்தா.... நீ சொல்வது சரிதான்.... என்றாள் ராகினி .

***************

தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.