• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடர்பியல்...... பாகம் -49

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
197
78
28
Maduravoyal

தொடர்பியல்...... பாகம் -49

கேஸ் -3 ( பிரகாஷ் -ரோஜா)

மறுநாள் காலை.....

அக்கா.... என்றாள் ரூபினி.

ராகினி மற்றும் மம்தா இருவரும் திரும்பி பார்த்தனர்.

ராகினி அன்று வேலைக்கு செல்லவில்லை.
மம்தா கிளம்பி கொண்டு இருந்தாள்.

நான் கோச்சிங் சென்டருக்கு போக முடியாதா?

ரூபி.... உனக்கு கையில அடிப்பட்டிருக்கே எப்படி போவ.... அதுவும் இல்லாம.... என்று பேசத் தொடங்கிய ராகினி அமைதியாக இருந்தாள்.

இல்லக்கா.... எனக்கு கையில பெயின் இல்ல.... நான் சமாளிச்சுப்பேன்.....

இருந்தாலும் ரூபி..... நான் உன்னை நெக்ஸ்ட் பேட்ச்ல சேர்த்து விடறேன்.....

அக்கா அதுக்கு இன்னும் மூணு மாசம் ஆகும்.....

பரவாயில்லை ரூபி.... அது வரைக்கும் ரெஸ்ட் எடு.....

மூணு மாசம் ரெஸ்ட் எடுக்குற அளவுக்கு எனக்கு பெரிய அடி எல்லாம் படல அக்கா.....

ரூபி..... சொன்னா கேளு..... என்று ஆரம்பித்த ராகினியின் தோளை தன் கையை வைத்து தடுத்தாள் மம்தா.

இரு ரூபி.... நான் அக்கா கிட்ட பேசறேன்.... நீ போய் குளிச்சிட்டு வா.... என்றாள் மம்தா.

ஓகே அக்கா.... என்று சொல்லி விட்டு குளிக்க சென்றாள் ரூபினி.

என்ன மம்தா.... நீ கூட புரிஞ்சிக்காம பேசுற.... எப்படி அவளை இப்போ தனியா அனுப்பறது.... என்றாள் ராகினி.

நீ கூட போன போதே அவ உன்னை கூட கேட்காம அவன் கூட போயிருக்கா..... அதுவும் இல்லாம தைரியமா அவனை தாக்கி இருக்கா.... அப்படி இருக்க உன்னோட துணை அவளுக்கு தேவை இல்லை.....

ரூபி சின்ன பொண்ணு டி.....

ராகினி..... அவளை அவளே பார்த்துக்கிற அளவுக்கு வளர்ந்த பொண்ணு தான் அவ..... ஸோ.... பயப்படாத.....

ஹூம்.....

அதுவும் இல்லாம..... அவ வீட்டிலேயே உட்கார்ந்து இருந்தா ரொம்ப டிஸ்டர்ப்டா(disturb) ஆயிடுவா.... ஏன் அவ டிப்ரெஸ்டு (depressed/ depression) கூட ஆகலாம்..... அவளுக்கும் அந்த டிரோமா( trauma) வில் இருந்து வெளியே வர ஒரு டைவர்ஷன்( diversion) வேண்டும் இல்ல.....

ஓகே மம்தா..... நீ சொல்றதும் சரி தான்.... என்றாள் ராகினி.

ரூபினி குளித்து விட்டு ரெடியாகி வெளியே வந்தாள்.

ரூபி.....

சொல்லு அக்கா.....

இன்னையிலிருந்தே கோச்சிங் சென்டருக்கு போகலாம்.

தேங்க்ஸ் அக்கா என்று சொல்லி ராகினியை கட்டிக் கொண்டாள் ரூபினி.

அவள் தலையை கோதி விட்டாள் ராகினி.

தேங்க்ஸ் அக்கா என்று சொல்லி மம்தாவையும் கட்டிப் பிடித்து கொண்டாள் ரூபினி.

எனக்கு எதுக்கு மா தேங்க்ஸ்..... என்றாள் மம்தா.

எனக்கு தெரியும் அக்கா.... நீங்க தான் என்னோட அக்கா கிட்ட பேசி எனக்கு கோச்சிங் சென்டருக்கு போக பர்மிஷன் வாங்கி கொடுத்திருப்பீங்க ன்னு.... அதுக்கு தான்.

அப்படி எல்லாம் இல்லை மா..... அவ ரொம்ப பயப்படுறா.... அதுக்கு தான் தைரியம் சொன்னேன்..... அவ ஓகே சொல்லிட்டா.....

எனக்கு தெரியும் அக்கா..... ராகினி அக்காவை பத்தி..... அப்பா அம்மா இறந்த பிறகு எனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டா ன்னு.... என் மேல உயிரையே வச்சிருக்கா.....

ஹூம்.... அப்புறம் என்ன?

இல்ல..... அக்காவுக்கு தைரியம் கொடுத்தீங்க இல்ல.... அதுக்கு தேங்க்ஸ்.

ஓகே ஓகே தேங்க்ஸ் அக்ஸப்டட்..... நீ போய் ரெடியாகு..... நான் போய் டிபன் எடுத்து வைக்கிறேன்.

ரூபினிக்கு தலையை வாரி விட்டாள் ராகினி. பின்னர் மூவரும் சென்று டிபன் சாப்பிட்டு விட்டு கிளம்பினார்கள்.

ரூபினி மம்தாவின் அம்மா அப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு கிளம்பினாள்.
இருவரும் மனதார வாழ்த்தினார்கள்.

தன் தங்கையை நினைத்து பெருமிதம் கொண்டாள் ராகினி.

பெரியவளாயிட்டா ன்னு இப்போ தான் புரியுது மம்தா.....

எப்படி சொல்றே?

அம்மா அப்பா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கனும் தோணுதே.....

ஸ்மைல் செய்தாள் மம்தா. பிறகு மூவரும் கிளம்பி சென்றனர்.
மம்தா ஒரு பைக்கிலும் ரூபினி மற்றும் ராகினி ஒரு பைக்கிலும் கிளம்பினார்கள்.

****************

சுரேஷ் மொபைலில் இருந்த கான்டாக்ட்ஸில் பிரகாஷ் நம்பரை எடுத்தான் மாதவன்.

அவனுடைய பிரைவேட் நம்பரில் இருந்து பிரகாஷூக்கு கால் செய்தான்.

ட்ரூ காலரில் மாதவன் சி.ஐ. என்று வந்தது.
பிரகாஷ் ஃபோனை எடுக்கவில்லை.

யாருடா.... என்றாள் ரோஜா.

போலீஸ்.....

போலீஸா?..... எதுக்கு கால் பண்றாங்க..... எடுத்து பேசு......

ஒரு வேளை நாம ரூபினியோட அத்தையை போட்டு தள்ளினோமே அதை கண்டுப்பிடிச்சு இருப்பாங்களோ?

சேன்ஸே இல்ல டா.....

எப்படி அவ்வளவு கான்ஃபிடென்டா சொல்ற?

ஏய்.... நான் போட்ட இன்ஜெக்ஷன் வெறும் காத்து.... அது வெயின்ல போனா ஹார்ட் அட்டாக் ஆயிடும்.... போஸ்ட் மார்ட்டம் பண்ணியிருந்தா கூட அவங்களால கண்டு பிடிக்க முடியாது..... என்றாள் ரோஜா.

ஹூம்..... என்று சொல்லி விட்டு அன்று நடந்ததை சிந்தித்து பார்த்தான் பிரகாஷ். எதாவது தடையம் விட்டுவிட்டோமா என்று.

வழக்கம் போல ரோஜா இரண்டு அத்தைகளுக்கும் மாத்திரை கொடுத்து விட்டு ரூபினிக்கும் மைல்டான மயக்க மருந்தை சிரப் கொடுத்துவிட்டு கிளம்பினாள்.

அம்மா.... நாளைக்கு காலைல வரேன்..... பாப்பா தூங்கிட்டா.... என்றாள் ரோஜா.

வடிவக்கா....

அவங்களுக்கும் மாத்திரை கொடுத்து விட்டேன் மா..... அவங்களும் படுத்திட்டாங்க....

ஓகே மா.... காலைல சீக்கிரமா வா.... சுகர் டெஸ்ட் எடுக்கலாம்....

சரிம்மா.... என்று சொல்லி விட்டு கிளம்பி பிரகாஷ் வீட்டிற்கு சென்றாள்.

ஒருமணி நேரம் கழித்து....

அவனுங்களுக்கு ஃபோன் பண்ணிடு பிரகாஷ்....

சரிடி.... என்று சொல்லி விட்டு பிரகாஷ் அவர்களுக்கு கால் செய்தான்.

இருவரும் அடுத்த பத்து நிமிடத்தில் ரூபினியின் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தனர்.

ரூபினியின் வாணி அத்தை அன்று மாத்திரை போட்டுக்கொள்ள வில்லை மறந்துவிட்டார்.
புக் படித்து கொண்டிருந்தவர் அப்படியே தூங்கிவிட்டார்.

மெதுவாக உள்ளே நுழைந்தனர் பிரகாஷ் -ரோஜா, பாண்டியன் மற்றும் சுரேஷ்.

பிரகாஷ் சைகை செய்ய வழக்கம் போல இருவரும் ரூபினியின் அறைக்குள் சென்றனர்.

அவளையே வெறியோடு பார்த்து கொண்டு சென்ற சுரேஷ் அங்கிருந்த பூந்தொட்டியை தட்டி விட்டான்.

சத்தத்தில் எழுந்தார் வாணி அத்தை.

சத்தத்தை கவனிக்காமல் இதழ் முத்தம் கொடுத்து கொண்டார்கள் பிரகாஷ் மற்றும் ரோஜா.

ரூபினி எழுந்து நடந்து வெளியே போகிறாளோ என்று பயந்த வாணி அத்தை.....

எழுந்து வெளியே நடந்து வந்தார். அப்போது ஜன்னல் வழியாக பாண்டியன் மற்றும் சுரேஷ் இருவரும் ரூபினியின் அங்கங்களை தடவுவதை கவனித்த வாணி அத்தை.....

டேய்.... யாருடா நீங்க.... என்ன பண்றீங்க.... என்று கத்தினார்.

பயந்து போன இருவரும் வெளியே வந்தனர்.

ரோஜாவும் பிரகாஷூம் சப்தம் கேட்டு திடுக்கிட்டனர். பிரகாஷ் ஒளிந்து கொண்டான். ரோஜா அங்கே வந்தாள்.

ரோஜா.... நீயா?

அம்மா.... என்ன சொல்றீங்க.... எனக்கு ஒண்ணுமே புரியல.... யாரு இவனுங்க..... என்றாள் ரோஜா அவர்களை ஓடும் படி கண்களால் ஜாடை செய்து கொண்டே.

அவர்கள் இருவரும் வெளியே போய் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பினார்கள்.

ஓ.... நீ தான் இதற்கெல்லாம் காரணமா?

என்னம்மா சொல்றீங்க.... எனக்கு ஒண்ணுமே புரியல.... என்று நடித்தாள் ரோஜா.

இரு.... இப்பவே போலீஸூக்கு ஃபோன் பண்றேன்.... என்று சொல்லி விட்டு....

அக்கா அக்கா.... என்று கூப்பிட்டுக் கொண்டே காலடி எடுத்து வைத்தார் வாணி அத்தை.

அதற்குள் பின் பக்கமாக இருந்து அவரை பிடித்து வாயை பொத்தினான் பிரகாஷ்.

அவன் கண் ஜாடை செய்ய.... ரோஜா வெறும் ஊசியை வாணி அத்தைக்கு போட்டாள்.

அடுத்த கால் மணி நேரத்தில் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டார் வாணி அத்தை.

அவரை பெட்டில் படுக்க வைத்து விட்டு.... இயற்கையாக இறந்தது போல செட் செய்து விட்டு பிரகாஷ் மற்றும் ரோஜா இருவரும் கிளம்பி சென்றனர்.

எல்லா தடயங்களையும் அழிச்சிட்டோமே..... எதுவும் கிடைக்க வாய்ப்பே இல்லையே..... என்று நினைத்து கொண்டான் பிரகாஷ்.

என்னடா..... ரொம்ப நேரமா எதையோ யோசிச்சிக்கிட்டே இருக்க....

இல்ல அன்னைக்கு எதாவது தடையங்களை மிஸ் பண்ணிட்டோமா ன்னு.....

அதுக்கு சேன்ஸே இல்ல டா.... நம்ம தான் எல்லாம் கிளியர் பண்டிட்டோமே..... என்றாள் ரோஜா.

ஹூம்.... என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே மறுபடியும் கால் செய்தான் மாதவன்.

எடு டா.... என்னதான் ன்னு கேளு....

இருடி..... என்ன கேள்வி கேட்டா....
என்ன பதில் சொல்வது ன்னு யோசித்து கொள்கிறேன்.

மிச்..... என் கிட்ட கொடு.... என்று சொல்லி ஃபோனை வாங்கி.....

ஹலோ..... யாரு..... என்றாள் ரோஜா.

பிரகாஷ் இருக்காறா?

இருக்காரு..... குளிச்சிக்கிட்டு இருக்காரு..... என்ன விஷயம் சொல்லுங்க.....

நான் அவர் கிட்டேயே பேசிக்கிறேன்.....

ஓகே.... டென் மினிட்ஸ் கழிச்சு பண்ணுங்க...

ஓகே மேடம்.... உங்க பேரு?

ரோஸ்.....

ஓ.... ஓகே மேடம்.....

உங்க பேரு என்ன சார்?

மாதவன்.....

உங்களுக்கு எப்படி பிரகாஷை தெரியும்.....

தெரியும்.... நான் அவர் கிட்ட பேசிக்கிறேன்.... என்றான் மாதவன்.

ஃபோனை வைத்து விட்டு.....

இவன் சரியான ஆளாக இருப்பான் போல..... பிடி கொடுத்து பேச மாட்டேங்குறான்..... என்றாள் ரோஜா.

சரி விடு.... நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன்..... என்று சொல்லி விட்டு ஐந்து நிமிடத்திற்கு பிறகு பிரகாஷே கால் செய்தான்.

நீயே எதுக்கு டா கால் பண்ற?..... என்றாள் ரோஜா.

நாம கால் பண்ணலைன்னா தான் நம்ம மேல சந்தேகம் வரும்..... என்றான் பிரகாஷ்.

ஹலோ.....

யாருங்க நீங்க?

நான் மாதவன்..... சுரேஷோட ஃபிரெண்டு.....

சுரேஷா.... அது யாரு.....

சுரேஷ் கொயம்பத்தூர்.....

அப்படி யாரும் தெரியாதுங்க.... என்றான் பிரகாஷ்.

உங்க நம்பர் அவர் ஃபோன்ல இருந்துச்சு.....

என் நம்பர் வச்சிருக்கிற எல்லாரையும் எனக்கு தெரிஞ்சிருக்கனும்ன்னு என்ன இருக்கு?

அப்படி இல்ல.... இம்ப்பார்டன்ட் கான்டாக்ட்ஸில் இருந்துச்சு.....

சார்.... நான் ஒரு பில்டிங் கான்ட்ராக்டர்..... அதனால என் நம்பர் எல்லாரும் வச்சிருப்பாங்க..... சரி.... நீங்க எதுக்கு எனக்கு கால் பண்ணீங்க......

நான் சி.ஐ. மாதவன்.....

சி.ஐ. ன்னா?

சர்கில் இன்ஸ்பெக்டர்.....

ஓ சாரி சார்..... தெரியாம பேசிட்டேன்..... சொல்லுங்க சார்.... என்று பவ்யமாக பேசுவது போல நடித்தான் பிரகாஷ்.

சுரேஷ் ஒரு கிரிமினல்..... அவனை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்திருக்கிறோம்.

வாட்.....

யாருன்னே தெரியாத ஒரு ஆளுக்கு ஏன் இவ்வளவு ஷாக் ஆகறீங்க.....

ஷாக் எல்லாம் ஆகல சார்..... யாருன்னே தெரியாதவன் இருந்தா என்ன செத்தா எனக்கு என்ன,?

பின்ன?

அவன் கிரிமினல் ன்னு சொல்லிட்டு.... என் கூட அவனுக்கு சம்மந்தப்படுத்த பார்க்கறீங்களே ன்னு தான் ஷாக் ஆகினேன்.
.... என்றான் பிரகாஷ்.

ஏய் சூப்பரா பேசுற டா ..... என்று ஆக்ஷன் செய்தாள் ரோஜா.

என்கொயரிக்கு நீங்க வரணும்.....

இல்ல சார்.... சாரி.... அதெல்லாம் என்னால வரமுடியாது..... எனக்கு வேலை இருக்கு.....

உங்களை நேரா பார்த்து பேசியே ஆகனும்.... நீங்க வரணும்.... லொகேஷனும் டைமிங் அனுப்பறேன்.... வாங்க அவ்வளவு தான்..... என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்தான் மாதவன்.

என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தனர் ரோஜா மற்றும் பிரகாஷ் .

**************

தொடரும்......
அ. வைஷ்ணவி விஜயராகவன் .