தொடர்பியல்..... பாகம் -50
கேஸ் - 3 ( பிரகாஷ் -ரோஜா)
கோச்சிங் சென்டரில்.....
நிறைய பேர் இருந்தார்கள்.... ஆண் பிள்ளைகள் இருபது பேர் மற்றும் பெண் பிள்ளைகள் பதினெட்டு பேரும் இருந்தார்கள் ரூபினியையும் சேர்த்து.
மம்தா ரூபினிக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி விட்டு கிளம்பி விட்டாள். ராகினி அவளுடன் அமர்ந்து இருந்தாள். மாணவ மாணவிகளை ஒரு அறைக்கு அழைத்தனர்.
ஃபர்ஸ்ட் டே என்பதால் பேரண்ட்ஸ் மற்றும் கார்டியன்ஸ் மீட்டிங் வைத்திருந்தனர். மாணவ மாணவிகளை ஒரு அறையில் அமர வைத்து விட்டு பேரண்ட்ஸூக்கு மீட்டிங்கை தொடங்கினார் அந்த கோச்சிங் சென்டர் தலைமை ஆசிரியர்.
எல்லோருக்கும் வணக்கம்.
என் பெயர் மோகன் ராம். நான் ஆங்கிலத்தில் எம்.ஏ., எம். எட்., எம். ஃபில் முடிச்சிருக்கேன்..... காலேஜில் வேலை செய்யும் போது இரண்டு மாணவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு படிப்பதை பார்த்தேன்.... அவர்களால் சரளமாக ஆங்கிலம் பேச முடியவில்லை.... எழுதத் தெரியவில்லை.... பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு எப்படி அவர்கள் தேர்ச்சி பெற்றார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போது முடிவு செய்து பலவித காரணங்களால் தேர்ச்சி பெற முடியாத மாணவ மாணவிகளுக்கு நான் நல்ல முறையில் அவர்கள் பிரச்சனயை அறிந்து அவர்களுக்கு புரியும் சொல்லிக் கொடுத்து தேர்ச்சி பெற வைக்கிறோம்..... இது நாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக கற்பித்த மாணவர்களின் ரிசல்ட்ஸ்.... இது அவர்கள் பள்ளியில் படித்த போது எடுத்த மார்க்ஸ்.... இது எங்களிடம் படித்த போது எடுத்த மார்க்ஸ்.... என்று சொல்லி அட்டவணையை பிரொஜக்டர் மூலம் காண்பித்தார்.
அனைவரும் கை தட்டினார்கள்.
நீங்கள் உங்கள் பிள்ளைகள் வருங்காலத்தை நினைத்து கவலைப்பட வேண்டாம்..... அவர்கள் விரும்பும் தொழிலுக்கு செல்ல நாங்கள் அவர்கள் பாதையில் இருக்கும் கற்களை தாண்ட உதவி செய்வோம்..... என்றார்.
தேங்க்ஸ் சார்..... என்றனர் பெற்றோர்களில் சிலர்.
அனைவருக்கும் டீ காஃபி இருக்கிறது அருந்திவிட்டு செல்ல வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தினமும் காலை 9 மணி முதல் 4 மணி வரை கிளாஸஸ் எடுக்கப்படும். சனி மற்றும் ஞாயிறு விடுமுறை. பரீட்சை நேரங்களில் காலை 7 முதல் மாலை 6 வரை.... சனிக்கிழமையும் உண்டு. ஞாயிற்றுக்கிழமை அரை நாள் 9 முதல் 1 மணி வரை. இப்போது நான் சொன்ன விஷயங்கள் அனைத்தும் இந்த பேம்லெட்டில் இருக்கும். இது அனைவருக்கும் கொடுக்கப்படும். டைம் டேபில்.... அதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் ஃபோன் நம்பர் என அனைத்தும் அந்த பேப்பரில் இருக்கும்.
சார் ஃபீஸ் டீடெயில்ஸ்.... என்றார் ஒருவர்.
அது ரிசப்ஷனில் கேட்டுக் கொள்ளுங்கள். அது மாணவர்களின் சப்ஜெக்ட்ஸை பொறுத்தது.... என்றார்.
அனைவரும் கலைந்து சென்றனர். ஜன்னல் வழியாக ரூபினிக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி விட்டு வெளியே இருந்த வெயிட்டிங் ரூமில் காத்திருந்தாள் ராகினி.
ரூபினியின் பக்கத்தில் ஒரு பெண் வந்தமர்ந்தாள்.
ஹாய்.... உங்க பேரு என்ன.... என்றாள் ரூபினி.
என் பெயர் சுந்தரி..... உங்க பேரு என்ன அக்கா?..... என்றாள் அந்த பதினாரு வயது பெண்.
என் பெயர் ரூபினி.... என்றாள்.
என்ன கிளாஸ் அக்கா +2 வா?
இல்லம்மா.... 10த் தான்..... நான் மூணு வருஷமா உடம்பு சரியில்லாம இருந்தேன்.....அதனால 10த் +2 எக்ஸாம் எழுத முடியல......
ஓ.... ஓகே அக்கா.....
அக்கா எல்லாம் சொல்லாத சுந்தரி..... உன்னை விட ஒரு வருஷம் தான் பெரியவ நான்.
சரிங்க ரூபினி....
ஜஸ்ட் கால் மீ ரூபி....
நீங்க இங்கிலீஷ் நல்லா பேசுவீங்களா?
வாங்க போங்க எல்லாம் பேசாத சுந்தரி.....
வா போ ன்னே பேசு....
ஓகே ரூபி.... இங்கிலீஷ் நல்லா சரளமா பேசுவீயா?
ஹூம்.... பேசுவேனே.....
எனக்கு இங்கிலீஷ் சரளமாக பேச வராது..... எனக்கு கொஞ்சம் சொல்லி தரீயா?
கண்டிப்பா..... நாம இதுக்கு மேல இங்கிலீஷ்லையே பேசிக்கலாம்..... ஓகே வா.....
ஆனா.... எனக்கு கஷ்டம்.....
டிரை பண்ணு...... தெரியலைன்னா நான் சொல்லி தரேன்.....
ஓகே ரூபி..... என்னாச்சு கையில.... என்றாள் சுந்தரி.
அடிப்பட்டுடிச்சு......
எப்படி?
அதெல்லாம் எக்ஸ்பிலெயின் பண்ற அளவுக்கு பெரிய விஷயம் இல்லை.....
இருவரும் இடது கையை குளுக்கிக் கொண்டனர்.
நான் உனக்கும் நோட்ஸ் எழுதி தரேன்.....
டோன்ட் ஒரி.... நான் இடது கையிலும் எழுதுவேன்.
ஓ.... சூப்பர் ரூபி....
தேங்க்ஸ்..... என்று சொல்லி விட்டு திரும்பும் போது ஒருவன் நின்றிருந்தான்..... ரூபியையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
யார் நீங்க..... என்றாள் ரூபினி.
என் பெயர் நிரஞ்சன்..... பி.சி.ஏ ஃபைனல் இயர் படிக்கிறேன்.
ஓகே.....
நான் இங்கு சோஷியல் சப்ஜெக்ட் சொல்லிக் கொடுக்கிறேன்.
ஓ.... சாரி சார்.... யாருன்னு தெரியாம பேசிட்டேன்.....
இட்ஸ் ஓகே..... நோ இஷ்யூஸ்..... உங்களுக்கு உடம்பு சரி ஆயிடிச்சா?
புரியாமல் விழித்தாள் ரூபினி.
அப்போது உள்ளே வந்த மோகன் ராம்.....
அட்டென்ஷன் மை டியர் ஸ்டூடேன்ட்ஸ்...... என்றார்.
அனைவரும் அவரவர் இருப்பிடத்திலிருந்து எழுந்து நின்றனர்.
வாங்க மிஸ்டர் நிரஞ்சன்..... என்றார் மோகன் ராம்.
இவரு தான் உங்க சோஷியல் சார்.... எல்லாருமே 10த் ஸ்டூடேன்ட்ஸ் தான?
யெஸ் சார்.... என்றனர்.
ஓகே..... ஆல் தி பெஸ்ட் ஃபார் ஆல் ஆஃப் யூ.... ரீட் வெல்.... பை.... என்று சொல்லி விட்டு வெளியே சென்றார்.
நிரஞ்சன் தன்னை அறிமுகம் செய்து கொண்டு..... பின்னர் அனைவரையும் அறிமுகபடுத்திக் கொள்ள சொன்னான்.
அனைவரும் அவரவர்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
கடைசியாக முதல் பெஞ்சில் இருந்தவர்களிடம்......
நீங்க..... என்றான் நிரஞ்சன்.
சார்.... என் பெயர் சுந்தரி.....
சார்..... என் பெயர் ரூபினி.....
ஓகே..... இன்னைக்கு கிளாஸ் ஆரம்பிக்கலாம்..... என்று சொல்லி விட்டு.....
பிசிக்கல் டிவிஷன்ஸ் ஆஃப் இந்தியா..... என்ற ஒரு தலைப்பில் சோஷியல் சப்ஜெக்ட்டை சொல்லிக் கொடுத்தான். அனைவருக்கும் நன்றாக புரியும் படி நன்றாகவே சொல்லி கொடுத்தான் நிரஞ்சன்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு பத்து நிமிடம் இடைவேளை கொடுக்க பட்டது.
ரூபினி ரெஸ்ட் ரூம் போய்விட்டு வந்து அங்கிருந்த வெயிட்டிங் ஹாலில் உட்கார்ந்து இருந்த ராகினியை பார்க்க சென்றாள்.
அக்கா..... என்றாள் ரூபினி.
ஹாய் ரூபினி..... எப்படி இருந்துச்சு ஃபர்ஸ்ட் பீரியட் கிளாஸ்.....
நல்லா இருந்துச்சு அக்கா..... அந்த சார் சூப்பரா டீச் பண்ணாரு.....
அப்படியா?.... உனக்கு கிளியர்ரா புரிஞ்சதா?
ஆமாம் அக்கா..... ரொம்ப ரொம்ப நல்லாவே புரிஞ்சது..... ஆனா.....
ஆனா..... என்ன ?
அந்த சார்..... என்னிடம்.... உங்களுக்கு உடம்பு சரி ஆயிடிச்சா.... ன்னு கேட்டார்.
என்ன?
ஆமாம் அக்கா......
சரி..... நான் பார்த்துக்கொள்கிறேன்.... நீ போய் அடுத்த கிளாஸை கவனி.....
ஓகே அக்கா..... பை..... என்று சொல்லி விட்டு கிளாஸ் ரூமிற்கு சென்றாள் ரூபினி.
அவர்கள் இருவரும் பேசுவதை பார்த்த நிரஞ்சன்..... ரூபினி உள்ளே சென்றதும்......
ஹலோ மேடம்.... என்றான் ராகினியை பார்த்து.
ஹலோ.... நீங்க யாரு...... என்று யோசித்தவாறே ...... கேட்டாள் ராகினி.
என் பெயர் நிரஞ்சன்.... இங்கே சோஷியல் டீச்சர்.
ஓகே..... சொல்லுங்க.....
உங்க கூட பேசிக்கொண்டு இருந்தாங்களே.... அவங்க உங்களுக்கு என்ன வேண்டும்?
என்னோட சிஸ்டர்.....
ஓ ஓகே..... என்றான்.
எதுக்கு கேட்கறீங்க சார்..... என்றாள் ராகினி.
உங்க சிஸ்டருக்கு உடம்பு சரி ஆயிடிச்சா?
நீங்க யாரு.....அவ உடம்பு சரியில்லாம இருந்தது உங்களுக்கு எப்படி தெரியும்?.... என்றாள் ராகினி.
என் பெயர் நிரஞ்சன்..... ஸ்விக்கில ஃபுட் டெலிவரி பண்ற வேலைல இருந்தேன்.
அப்போது ராகினிக்கு புரிந்து விட்டது.
நீங்க தான் அன்னைக்கு கால் பண்ணீங்களா ?
ஆமாம் மேடம்..... மாதவன் சார் வரலையா?
மாதவனை தெரியுமா?
இல்ல மேடம்..... நான் அவர்கிட்ட ஃபோன்ல பேசி இருக்கேன்.....
ஓ.... ஓகே.....
நீங்க மாதவன் சாரோட தங்கச்சியா அக்காவா?....
வாட்.....
இல்ல...... சார் தான்...... ரூபினியை அவரோட தங்கச்சி ன்னு சொன்னாரு.... நீங்களும் தங்கச்சி ன்னு சொன்னீங்க.... அதானல தான் கேட்டேன்......
இவ என்னோட தங்கச்சி..... நான் மாதவனோட உட்பீ..... என் சிஸ்டரை தான் அவரோட சிஸ்டர் மாதிரி ன்னு சொல்லி இருப்பார்.
ஓ.... ஓகே..... சாரி மேடம்.....
இட்ஸ் ஓகே சார்..... நீங்க இங்க டீச் பண்றீங்களா?
ஆமாம்.....
என்ன சப்ஜெக்ட்......
சோஷியல்....
ஓகே சார்.....
சார் என்றெல்லாம் கூப்பிட வேண்டாம் மேம்....
நிரஞ்சன் என் பேரு.... பேர் சொல்லியே கூப்பிடுங்க......
இட்ஸ் ஓகே..... சார்..... என்று சொல்லி விட்டாள் ராகினி.
அதற்கு மேல் அவன் வற்புறுத்த வில்லை.
என் தங்கச்சி இப்போ நார்மலாக ஆயிட்டா.... சப்ஜெக்ட் வைஸ் என்ன ஹெல்ப் வேண்டுமோ அது பண்ணுங்க.....
ஷியூர்.... நீங்க கவலைப் பட வேண்டாம்.
ஓகே சார்.... எனக்கு இப்போ ஒரு ஆஃபீஸ் கால் இருக்கு.... நான் பேசிட்டு வரேன்..... பை தி பை.... அன்னைக்கு கால் பண்ணி பேசினதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.....
இட்ஸ் ஓகே மேம்.... என்றான் நிரஞ்சன்.
பை சார்.... என்று சொல்லி விட்டு தன் ஃபோனில் ஏதோ ஒரு நம்பருக்கு கால் செய்தாள் ராகினி.
மதியம் லஞ்சுக்கு வந்தாள் ரூபினி.
ராகினி பக்கத்தில் இருந்த ஹோட்டலில் இருந்து வாங்கி வந்தாள்.
இருவரும் அங்கிருந்த பார்க் பெஞ்சில் அமர்ந்து சாப்பிட்டனர்.
கிளாஸ் எல்லாம் நல்லா இருக்கா ரூபி.....
நல்லா இருக்கு அக்கா.... சுந்தரி ன்னு ஒரு பொண்ணு.... நல்லா பேசுறா..... அவ நாலு சப்ஜெக்ட்ல ஃபெயில் போன வருஷம்..... ஸோ...... அந்த நாலு கிளாஸ் மட்டும் இருக்கா.... ஒரு கிளாஸ் நானும் இன்னும் மூன்று பையன்கள் மட்டும் தான் அட்டென்ட் பண்றோம்.....
என்ன சப்ஜெக்ட் மா.....
தமிழ்.....
ஓ.... ஓகே...... அவங்க எல்லாம் ஆல்ரெடி அட்டெண்டு பண்ணி இருக்காங்களா?..... இல்லையா?
என்னை மாதிரியே இரண்டு பையன்கள் எக்ஸாம் எழுதவே இல்லை..... ஒரு பையன் மட்டும் ஃபெயில் ஆகி இருக்கான்.
ஓ..... ஓகே.... ஒண்ணும் பிரச்சனை இல்லையே ரூபி.
ஒண்ணும் இல்லை அக்கா....
ஓகே மா..... நாளைல இருந்து நான் உன்னை கிளாஸில் விட்டு வேலைக்கு போகட்டுமா?
கண்டிப்பா அக்கா....
ஓகே ரூபி..... என்று சொல்லி விட்டு வெளியே அமர்ந்து இருந்தாள் ராகினி.
மதிய உணவிற்கு பிறகு மறுபடியும் கணக்கு மற்றும் சோஷியல் கிளாஸ் நடந்தது.
சோஷியல் பீரியட் முடிந்தவுடன் நிரஞ்சன் சுந்தரியை அழைத்தான்.
சுந்தரி..... என்றான் நிரஞ்சன்.
எஸ் ஸார்.....
இது தான் டைம் டேபிள்.... எல்லார் கிட்டேயும் கொடுத்திடுங்க மா.... முடிஞ்சா போர்டில் ஓரமாக எழுதி வைத்து விடு..... என்றான்.
ஓகே சார்.... என்று சொல்லி விட்டு.....அதை வாங்கி கொண்டு சென்று ரூபினியிடம் கொடுத்து.... நீ எழுதறீயா?..... என்றாள் சுந்தரி.
ஏன்.....
உன் ஹேண்ட் ரைட்டிங் சூப்பரா இருக்கு..... அதுவும் லெஃப்ட்லேயே இவ்வளவு சூப்பரா எழுதரன்னா.... ரைட் ஹேண்ட்ல எவ்வளவு அழகாக எழுதுவ.... என்றாள்.
அதுவரை துப்பட்டாவால் தன் வலது கையை மறைத்து இருந்தாள் ரூபினி..... ஆகையால் நிரஞ்சன் கவனிக்கவில்லை.
சுந்தரி பேசியதை கேட்டு அவளுடைய கையை பார்த்தான் நிரஞ்சன்.
பேண்டேஜ் சுற்றப்பட்டு இருந்தது.
என்னாச்சு ரூபினி?..... என்று அவளுடைய கையை பார்த்து கேட்டான்.
ஒண்ணும் இல்ல.... சின்ன அடி பட்டிருச்சு.....
ஓ.... ஓகே.... டேக் கேர்.... என்று சொல்லி விட்டு வெளியே சென்றுவிட்டான் நிரஞ்சன்.
*************
தொடரும்......
அ. வைஷ்ணவி விஜயராகவன்.