• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடர்பியல்...... பாகம் -51

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
197
78
28
Maduravoyal

தொடர்பியல்...... பாகம் -51

கேஸ் -3 ( பிரகாஷ் -ரோஜா)


பிரகாஷ் மற்றும் ரோஜா இருவரும் கொடைக்கானல் செல்ல துணிகளை பேக் செய்து கொண்டு கிளம்பினார்கள். சில பொருட்களை வாங்கிக் கொண்டு வர கடைக்கு சென்றான் பிரகாஷ்.

ஹலோ பிரகாஷ்....

சொல்லு ரோஸ்.....

என்னோட பர்ஃபியூம் காலி டா.... வாங்கிட்டு வா.....

ஓகே டி.....

அந்த போலீஸ்காரன் மறுபடியும் ஃபோன் பண்ணினானா?

இல்ல.... நாளைக்கு நேரா வரச் சொல்லி இருக்கான்.....

அச்சச்சோ.... இப்போ என்ன பண்றது?

ஏன்?

நம்ம டிக்கெட் கேன்சல் பண்ணனுமா?

அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..... நம்ம எதுவும் சொல்லாமல் ஹனிமூன் கிளம்பிடலாம்.....

நாம போயிட்டு வந்த பிறகு அந்த போலீஸ்காரன் நேரா வந்து என்கொயரி பண்ணினா?

அதெல்லாம் பண்ண மாட்டான்.....
நாம திரும்ப வந்தா தான?

என்னடா சொல்ற?

ஆமாம் டி..... நாம அங்கிருந்து அப்படியே வேறு எங்காவது போயிடலாம்..... இந்த ஜென்மத்துக்கு போலீஸால நம்மை கண்டுப் பிடிக்க முடியாது.....

அப்போது வீட்டில் பல்லி சப்தம் போட்டது....

ஐடியா நல்லா தான் இருக்கு..... ஆனா.....

நீ கவலைப்படாதே ரோஸ்..... நாம செஞ்சதையும் யாராலேயும் கண்டுப் பிடிக்க முடியாது..... நீ தானே சொன்ன......

ஹூம்.....

சரி சீக்கிரம் ரெடியாகு.... நம்ம ஹனிமூன் மூடை ஸ்பாயில் பண்ணிக்காத..... என்றான் பிரகாஷ்.

அவன் வந்த பிறகு....

பின்னர் இருவரும் கொடைக்கானல் சென்றனர்.

ஃபிளைட்டில் ஏறும் போது இருவரும் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்தனர்.....

கொடைக்கானலில்.....

கால் டாக்சி புக் செய்து ரிசார்ட்டிற்கு சென்றனர்.....பிரகாஷ் கண்களை காட்டினான். தலை அசைத்த ரோஜா அவர்கள் இருவருடைய ஃபோனையும் தன் கால் கீழே உள்ள கார் மேட்டின் அடியில் வைத்து விட்டாள்.

இதுக்கு மேல நமக்கு பயம் இல்லை..... என்று அவள் காதில் பிரகாஷ். இருவரும் ரூமிற்கு சென்றனர்.

பாத் டப்பில் இருவரும் வெண்ணீரில் குளித்து விட்டு வந்து பெட்டில் படுத்தனர்.

கட்டிலில் படுத்து கொண்டு பேசிக் கொண்டு இருந்தனர் இருவரும்.

பிரகாஷ்.....

சொல்லுடி.....

உனக்கு பையன் வேணுமா? இல்ல பொண்ணு வேணுமா?

நீ செலக்ட் பண்ணி பெத்து தர மாதிரி கேட்குற?

ஏய்.... அது இல்ல..... உனக்கு எந்த குழந்தை பிடிக்கும் ன்னு கேட்டேன்.

என்னை கேட்டா இப்போதைக்கு எதுவும் வேண்டாம்..... இப்போதைக்கு மட்டும் இல்ல எப்பவுமே வேண்டாம்.... நல்லா சம்பாதிச்சோமா.... செலவு பண்ணோமா ன்னு இருந்திட்டு போகலாம்.... அதை விட்டிட்டு ஒரு குழந்தையை பெத்துக்கிட்டு அதை படிக்க வச்சு ஆளாக்கி.... கல்யாணம் பண்ணி..... எப்பா.... நினைச்சாலே தலை சுத்துது.... என்றான் பிரிகாஷ்.

அமைதியாக இருந்தாள் ரோஜா.....

ஏய்.... என்னாச்சு?..... ஏன் டல்லா ஆயிட்ட?
உனக்கு குழந்தை பெத்துக்க ஆசையா?

இப்போதைக்கு இல்லை.... ஆனா கொஞ்ச வருஷம் கழிச்சு ஒரு பையன் பெத்துக்கனும்னு ஆசை.....

இப்போதைக்கு இல்லைல.... விடு.... உனக்கு எப்போ ஆசை வருதோ அப்போ பார்க்கலாம்.
சரி.... வா..... என்று சொல்லி அவளை போர்வைக்குள் இழுத்து ஆட்கொண்டான் பிரகாஷ்.

பிறகு இருவரும் மறுபடியும் குளித்து விட்டு சைட் சீயிங்கிற்கு சென்றனர்.

அனைத்தையும் பார்த்து விட்டு கடைசியாக சூடைடு பாயிண்ட்டிற்கு சென்றனர்.

அங்கிருந்த கம்பிகள் சில நெலிந்து உடைந்து இருந்தது. அதை பார்த்த பிரகாஷ்..... அங்கிருந்த காவலர்களை பார்த்தான் அவர்கள் அனைவரையும் கம்பிகள் இல்லாத பக்கம் போகக்கூடாது என்று சொல்லி விட்டு டீ குடிக்க சென்றனர்.

ரோஜா.....

என்ன பிரகாஷ்....

நம்ம ஒரு ரீல்ஸ் பண்ணலாமா?

என்ன?

புன்னகை மன்னன்ல கமல் சார் ரேகா மேடம் ஒன் டூ த்ரீ சொல்லிட்டு குதிப்பாங்களே அந்த மாதிரி அங்க நின்று வீடியோ எடுத்திட்டு நம்ம ஜம்ப் பண்ணும் போது கீழே பூக்கள் போட்டு அதில் குதிச்ச மாதிரி போடலாம்.....

நம்ம கிட்ட தான் ஃபோன் இல்லையே.....

ஏய் கேமரா வச்சிருக்கேன் டி..... டி எஸ் எல் ஆர்.....

ஓ.... ஓகே..... ஆனா.....

ஏய் வாடி.....

வேண்டாம் பிரகாஷ்.... எனக்கு ரொம்ப பயமா இருக்கு.....

ஏய்.... இங்க பாரு.... யாரும் இல்லை.... போலீஸ் கூட டீ குடிக்க போயிட்டாங்க..... என்றான் பிரகாஷ்.

பயம் அதிகமாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனுடன் சேர்ந்து அந்த முனையில் நின்று கொண்டு ஒன் டூ த்ரீ.... என்று சொல்லி ஜம்ப் என்றதும் ஜம்ப் பண்ணவது போல ஆக்ஷன் செய்தனர்..... பின்னாலிருந்து அவர்கள் மேலே கை பட்டது. இருவரும் திரும்பி பார்த்தனர்..... நீயா..... என்றான் பிரகாஷ்.

நீ என்னடி பண்ற இங்க..... என்றாள் ரோஜா.

அக்கா.... என்னால முடியல.... தயவு செஞ்சு என்னை விட்டுடிங்க.....

லதா.... வளர்மதி..... என்னை வெறுப்பேத்தாதீங்க.....

அக்கா.... வளருக்கு அடுத்த மாசம் கல்யாணம்..... அவளோட அப்பா அம்மா முடிவு பண்ணி இருக்காங்க.....

ஏய்.... சூப்பர் டி......கங்கிராட்ஸ்..... இந்த தொழிலுக்கு அது தான் பெஸ்ட்..... பகல்ல கேக்குற கஸ்டமருக்கு உன்னை அனுப்பறேன்..... ராத்திரி உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்..... கவலைப்படாதே.....

இல்ல அக்கா..... என்னால இதுக்கு மேல இந்த தொழிலை பண்ண முடியாது... எனக்கு வரப்போறவனுக்கு.... நான் உண்மையாக இருக்கனும்னு நினைக்கிறேன்...... என்றாள் வளர் மிகவும் கோபமாக.

ஏன் அப்பா அம்மாவ ஏமாத்துனா பரவாயில்லை.... யாருன்னே தெரியாத ஒருத்தனுக்கு உண்மையாக இருக்கப்போறீயா.... என்றாள் ரோஜா.

இவர்கள் பேசுவதை கவனித்து கொண்டே.... அங்கிருந்த இயற்கை காட்சிகளை தன் கேமராவில் ஃபோட்டோ எடுத்து கொண்டு இருந்தான் பிரகாஷ்.

அக்கா.... ரொம்ப பேசாதீங்க..... உங்களுக்கு கூட கல்யாணம் ஆயிடிச்சு..... நீங்க போவீங்களா பகல்ல..... என்றாள் வளர்.

வளர்.... கம்முனு இரு.... என்றாள் லதா.

என்னடி வாய் ரொம்ப நீளுது..... என்றாள் ரோஜா.

வாய் மட்டும் இல்ல..... காலும் நீளும்..... என்று சொல்லி ரோஜாவை எட்டி உதைத்தாள் வளர். இதை சற்றும் எதிர்பார்க்காத பிரகாஷ். பதறிப்போனான்..... பிரகாஷ் சுயநினைவுக்கு வருவதற்குள் லதா அவனை எட்டி உதைத்தாள். அந்த படு குழியில் பலத்த சத்தத்துடன் இருவரும் விழுந்தனர்..... போலீஸ் சத்தம் கேட்டு அங்கு ஓடி வரவதற்குள் அந்த இருவரும் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து ஓடிச் சென்று பக்கத்தில் இருந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.... பின்னர் அவர்கள் ஊருக்கு கிளம்பிச் சென்றனர்.

***************

சார்..... நீங்க கேட்ட டீடெயில்ஸ்..... என்று சைபர் கிரைம் டிபார்ட்மெண்ட்டில் இருந்து ஃபோன் வந்தது மாதவனுக்கு.

எஸ் ஸார்..... சொல்லுங்க.....

நீங்க கொடுத்த மொபைல் டீடெயில்ஸ்..... கால் ரெக்கார்டு பண்ணி இருக்கோம்..... அதையும் உங்கள் மொபைலுக்கு சென்டு பண்ணி இருக்கேன்.....

ஓகே சார் தேங்க்ஸ்.....

மொபைல் இப்போது ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கு..... ஐ எம் ஐ ஈ.... நம்பர் வச்சு டிரேஸ் பண்ணா கொடைக்கானலில் இருக்கிறது....

ஓ.... ஓகே.... தேங்க்ஸ் எ லாட் சார்..... என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்து விட்டு அந்த கால் ரெக்கார்டிங்கை கேட்டான்.....

"ஹலோ பிரகாஷ்....

சொல்லு ரோஸ்.....

என்னோட பர்ஃபியூம் காலி டா.... வாங்கிட்டு வா.....

ஓகே டி.....

அந்த போலீஸ்காரன் மறுபடியும் ஃபோன் பண்ணினானா?

இல்ல.... நாளைக்கு நேரா வரச் சொல்லி இருக்கான்.....

அச்சச்சோ.... இப்போ என்ன பண்றது?

ஏன்?

நம்ம டிக்கெட் கேன்சல் பண்ணனுமா?

அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..... நம்ம எதுவும் சொல்லாமல் ஹனிமூன் கிளம்பிடலாம்.....

நாம போயிட்டு வந்த பிறகு அந்த போலீஸ்காரன் நேரா வந்து என்கொயரி பண்ணினா?

அதெல்லாம் பண்ண மாட்டான்.....
நாம திரும்ப வந்தா தான?

என்னடா சொல்ற?

ஆமாம் டி..... நாம அங்கிருந்து அப்படியே வேறு எங்காவது போயிடலாம்..... இந்த ஜென்மத்துக்கு போலீஸால நம்மை கண்டுப் பிடிக்க முடியாது.....

அப்போது வீட்டில் பல்லி சப்தம் போட்டது....

ஐடியா நல்லா தான் இருக்கு..... ஆனா.....

நீ கவலைப்படாதே ரோஸ்..... நாம செஞ்சதையும் யாராலேயும் கண்டுப் பிடிக்க முடியாது..... நீ தானே சொன்ன......

ஹூம்.....

சரி சீக்கிரம் ரெடியாகு.... நம்ம ஹனிமூன் மூடை ஸ்பாயில் பண்ணிக்காத..... என்றான் பிரகாஷ்."

கொடைக்கானல் போலீஸ் ஸ்டேஷனிற்கு கால் செய்தான் மாதவன்.

ஹலோ.... நான் ஈ1 போலீஸ் ஸ்டேஷனில் இருந்து சர்கில் இன்ஸ்பெக்டர் மாதவன் பேசுறேன்.....

சொல்லுங்க சார்.....

எனக்கு ஒரு டீடெயில்ஸ் தெரியனும்.....

சொல்லுங்க சார்......

நான் சொல்லும் பெயரில் இரண்டு பேர்..... ஹனிமூன் புக்கிங் செய்து எந்த ரிசார்ட்டில் தங்கி இருக்காங்க ன்னு கண்டுபிடிக்க முடியுமா?

டீடெயில்ஸ் செண்டு பண்ணுங்க சார்......

ஓகே சார் என்று சொல்லி விட்டு டீடெயில்ஸ் அனுப்பி வைத்தான் மாதவன்.

அரைமணி நேரத்திற்கு பிறகு.....

சார்.....

சொல்லுங்க சார்.

ஆதார் கார்டு வச்சு தான் ரூம் புக் பண்ணி இருக்காங்க..... அஆ ரிசார்ட்..... என்றார்.

அந்த ரிசார்ட் நம்பரை கொஞ்சம் வாட்ஸ் அப் பண்ணுங்க சார்.

ஓகே சார்.... என்று சொல்லி விட்டு கட் செய்தார் சைபர் கிரைம் போலீசார்.

ரிசார்ட் நம்பர் வந்தது.

அதற்கு கால் செய்தான் மாதவன்.

ஹலோ.... நான் சென்னையில் இருந்து பேசுறேன்..... சர்கில் இன்ஸ்பெக்டர் மாதவன்.

சொல்லுங்க சார்.....

பிரகாஷ் -ரோஜா என்ற பெயரில் ரூம் புக் பண்ணி இருக்காங்களே.....

ஆமாம் சார்.... இப்போ தான் சைபர் கிரைம் டிபார்ட்மெண்ட்டில் இருந்து கால் பண்ணி டீடெயில்ஸ் கேட்டாங்க.....

தெரியும் சார்.... அவங்க தான் உங்க ரிசார்ட் நம்பர் கொடுத்தாங்க..... அவங்க ரெண்டு பேரும் இப்போ ரூம்ல இருக்காங்களா?.... வெளியே எங்கேயாவது போயிருக்காங்களா?

ஒரு நிமிஷம் சார்.... செக் பண்ணி விட்டு சொல்றேன்.....

ஐந்து நிமிடத்திற்கு பிறகு....

சார்.... சைட் சீயிங்கிற்கு போயிருக்காங்க.....

அவங்க மொபைல் நம்பர் எதாவது கொடுத்திருக்காங்களா?

இருக்கு சார்...... என்று சொல்லி விட்டு பிரகாஷ் நம்பரை கூறினார்.

இதைத் தவிர வேறு எதாவது நம்பர் கொடுத்தாங்களா?..... அவங்க ஒயிஃப் நம்பர் எதாவது?

இல்ல சார்..... எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவங்க கிட்ட ஃபோன் இல்ல.....

எப்படி அவ்வளவு கான்ஃபிடென்டா சொல்றீங்க?

ஆமாம் சார்.... ரூம் புக் பண்ற வரைக்கும் அந்த மேடம் பத்து நிமிஷமா லாபில உட்கார்ந்து இருந்தாங்க..... ஆனா ஃபோனை எடுத்து பார்க்கவில்லை.... செல்ஃபி எடுக்கவில்லை.... புக் படித்து கொண்டிருந்தாங்க.....

அதை வச்சு அவங்க கிட்ட ஃபோன் இல்லன்னு எப்படி சொல்ல முடியும் சார்.....

இல்ல சார்.... அவங்க ரெண்டு முறை தான் ஹேண்ட்பேகின் சைடில் கையை விட்டு ஃபோனை எடுப்பது போல தேடி.... பின்னர் தன் தலையில் மிக லேசாக தட்டிக் கொண்டு மறந்துவிட்டோமே.... என்று சொல்லி சிரிச்சாங்க.....

அப்போ நீங்க அவங்களையே தான் பார்த்து கொண்டு இருந்தீங்க..... அப்படித்தானே.....

சார்..... அந்த லேடி போட்டிருந்த ஜுன்ஸ் ஸ்லீவ் லெஸ் சின்ன டாப்ஸூம் போட்டிருந்தாங்க.... யாரா இருந்தாலும் அவங்களை பார்ப்பாங்க.....எனக்கு அவங்களை பார்த்தா உண்மையிலேயே கல்யாணம் ஆனவங்க தானா ன்னு ஒரு டவுட்....ரூம் கொடுக்க யோசிச்சேன்..... அப்புறம் மேரேஜ் ஃபோட்டோவை காண்பிச்சாங்க..... அப்புறம் தான் ரூம் கொடுத்தேன்.

பிரகாஷ் ஃபோன்லையா?

இல்ல சார்..... கேமராவில்.....

ஓ.... ஓகே.....
சரி.... அவங்க வந்ததும்.... எனக்கு கால் பண்ணி சொல்லுங்க....

ஓகே சார்..... அதனால எங்க ரிசார்ட் க்கு எதுவும் கெட்ட பெயர் வந்திடாதே.....

கண்டிப்பா இல்லை.... கவலைப்படாதீங்க.....
சரி.... எத்தனை நாளைக்கு ரூம் புக் பண்ணி இருக்காங்க....

திரீ டேஸ் அன்ட் ஃபோர் நைட்ஸ்..... இன்னைக்கு காலைல தான் வந்தாங்க....

மோஸ்ட்லி நாளைக்கு மதியமோ இல்ல ஈவிங்கோ நான் வருவேன்....

ஓகே சார்.....

ஓகே.... தேங்க்ஸ்.... ஃபார் தி இன்ஃபர்மேஷன்.

இட்ஸ் ஓகே சார்.....

ஃபோனை வைத்து விட்டு ராகினிக்கு கால் செய்தான் மாதவன்.

****************

தொடரும்......
அ. வைஷ்ணவி விஜயராகவன்.