• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தொடர்பியல்..... பாகம் -52

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
197
78
28
Maduravoyal

தொடர்பியல்..... பாகம் -52

கேஸ்-3 முடிவு( பிரகாஷ் -ரோஜா)

சொல்லு மாதவா.....

எப்படி டி இருக்க?

என்னடா.... ரொம்ப நாளா பார்க்காத மாதிரி கேட்குற....

ஆமாம் டி.... அப்படித்தான் இருக்கு....

நேத்து ராத்திரி தான பார்த்தோம்......

நான் கொடைக்கானல் போக வேண்டி இருக்கு.....

எப்போ டா போற?

நாளை மதியமா.....

என்ன டா எதாவது கேஸ் விஷயமாவா?

ஆமாம் டி.... நம்ம ரூபி கேஸ் விஷயமா தான்..... அந்த கேஸை என்ன டீல் பண்ண ஆர்டர் வந்திருக்கு..... காலைல ஹாஸ்பிடலுக்கு போய் அந்த சுரேஷிடம் வாக்குமூலம் வாங்கனும்.... மதியமா கொடைக்கானல் போகனும்....

ரூபிக்கு எந்த பிரச்சனையும் இல்லையே.....

கவலைப்படாதே ராகினி..... அவளுக்கு பிரச்சனை வர நான் விடமாட்டேன்..... அந்த வீடியோவை டெலீட் பண்ண வேண்டாம் ன்னு சொன்னதுக்கு காரணம்..... அந்த சுரேஷ் இவளை மிரட்டி தான் அவனுடைய இடத்திற்கு கூட்டிச் சென்றான்.... அவள் தன்னை காப்பாற்றிக் கொள்ளவே அவனை தாக்கி இருக்கா ன்னு ஆதாரமாக கோர்ட்டில் சமர்பிக்கத்தான்.

அந்த வீடியோ லீக் ஆயிடிச்சுன்னா?

கண்டிப்பா ஆகாது..... இந்த மாதிரியான கேஸை பாதுகாப்பாக ஹியரிங்கிற்கு வரவழைப்பார்கள். எந்த வகையிலும் விக்டிமிற்கு மன உளைச்சலோ அல்லது வேறு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதில் நமது இந்திய சட்டம் உறுதியாக இருக்கிறது. மேலும் இந்த மாதிரியான கேஸ்களுக்கு பெண் ஜட்ஜை நியமனம் செய்கின்றனர்.

ஹூம்.....
அது சரி.... இப்போ யாருக்காக நீ கொடைக்கானல் போற?

பிரகாஷ் -ரோஜா..... அவங்க ரெண்டு பேரும் தான் ரூபி இந்த நிலையில் இருக்க காரணம்..... அவர்களை அரெஸ்ட் பண்ணி கூட்டிக்கிட்டு வரேன்.....

ஆதாரம் இல்லாம எப்படி டா அரெஸ்ட் பண்ணுவ?

சந்தேகத்தின் பேரில் அரெஸ்ட் செய்யலாம்..... அதுவும் இல்லாம அவங்க பேசிய கால் ரெக்கார்டிங் இருக்கு.... அதை வச்சு அரெஸ்ட் பண்ணலாம்.

சரி டா..... ஜாக்கிரதையா போயிட்டு வா..... அடிக்கடி எனக்கு கால் பண்ணு.....

சரி டி..... டேக் கேர்.... பை.....

ஃபோனை வைத்து விட்டு....

மாதவா.... கஷ்டப்பட்டு அவ்வளவு தூரம் போறீயே டா..... நீ எவ்வளவு டிரை பண்ணாலும் அவர்களை அரெஸ்ட் பண்ண முடியாது..... என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். அவளுடைய கனவு பலித்துவிடும் என்பதில் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தாள் ராகினி. அவர்கள் யாரென்று தெரியாத போது அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தவள் தன் தங்கையின் வாழ்க்கை சீர்குலைத்தவர்கள் என்று தெரிந்ததும் அவளுடைய கையாலே அவர்களை கொல்ல வேண்டும் என்று ஆதங்கம் கொண்டாள். ஆனால் அவர்கள் எப்போது கொடைக்கானல் போவார்கள்.... எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாததால்.... தன் கனவு எப்படியும் பலிக்கும் என்று நினைத்து கொண்டாள்.

****************

சுரேஷிடம் வாக்குமூலம் வாங்க ஹாஸ்பிடலுக்கு சென்றான் மாதவன்.

சுயநினைவுடன் அமர்ந்து இருந்தான்.

மாதவனை பார்த்து முறைதான் சுரேஷ்.

நாளை வாக்கு மூலம் வாங்க வந்திருக்கேன்.

உன் பேர் என்ன?.... என்றான் மாதவன்.

மரியாதையா பேசுங்க மிஸ்டர்....

ஆத்திரம் தலைக்கு ஏறினாலும் அதை அடக்கி கொண்டு.....

தன் கான்ஸ்டபிளிடம் கண்கள் காட்டினான் மாதவன்.

ஓகே சார்.... என்று சொல்லி விட்டு அவருடைய ஃபோனில் வீடியோ ரெக்கார்டு செய்தார் அவர்.

உங்க பேரு என்ன?

சுரேஷ்.

என்ன வேலை பாக்கறீங்க?

பிஸ்நஸ்....

என்ன பிஸ்நஸ்?

ஊர்ல மொபைல் ஷாப் வச்சிருக்கேன்.

எதுக்கு சென்னை வந்தீங்க.....

பிஸ்நஸ் விஷயமா....

எவ்வளவு நாளாச்சு நீங்க சென்னை வந்து.....

பத்து நாள்.....

எங்கே தங்கி இருக்கீங்க.....

என் ஃபிரெண்டோட வீட்ல.....

யாரெல்லாம் அங்கே இருக்காங்க.....

யாரும் இல்லை..... அவனோட அப்பா அம்மா வெளிநாட்டில் இருக்குற அவங்க பொண்ணு வீட்டுக்கு போயிருக்காங்க..... அவன் டெல்லி போயிருக்கான் அவனோட பிஜி பண்றதுக்கு.

அப்போ நீ.... மிச்.... நீங்க மட்டும் தான் அங்கே இருக்கீங்க.... சரியா.....

ஆமாம்......

எதுக்கு ரூபினியை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனீங்க.....

அவ ஒரு கால் கேர்ல்.... நான் கூப்பிட்டதால வந்திட்டா.... வந்த பிறகு அதிகமாக பணம் கேட்டா.... அதை தரமாட்டேன் ன்னு சொன்னதால பிளேடை எடுத்து என்னை சரமாரியா கிழிச்சிட்டா.....

அவங்களை நீங்க மிரட்டி கூட்டிக்கிட்டு போனதா கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்காங்க.... அவங்களை காப்பாற்றிக்கொள்ள தான் உங்களை தாக்கியதாக சொன்னாங்க.....

இல்ல.... எல்லாமே பொய்.... அவ கூட ஏற்கனவே நானும் என் ஃபிரெண்டும் போயிருக்கோம்.....

ஆத்திரம் வந்தது மாதவனுக்கு..... அதை அடக்கி கொண்டு.....

அவங்க உடம்பு சரியில்லாத போது நீங்க அவங்க கூட இருந்ததால அவங்க விருப்பத்தோட இருந்ததா அர்த்தம் இல்லை மிஸ்டர்.....

விருப்பம் இல்லேன்னு எதை வச்சு சொல்றீங்க.....

எங்களிடம் ஆதாரம் இருக்கிறது சுரேஷ்.... வீடியோ ரெக்கார்டு இருக்கு....

அப்படியா..... நீங்க அதை கோர்ட்டில் சப்மிட் பண்ணுங்க..... என் கிட்ட இருக்கிற ஆதாரத்தை நான் சப்மிட் பண்றேன்.....

என்ன ஆதாரம் ?

அதை உங்க கிட்ட காட்டனும் ன்னு ஒண்ணும் அவசியம் இல்லை.....

ஓகே சுரேஷ்..... கோர்ட்டிலேயே சப்மிட் பண்ணுங்க..... உடம்பை ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க..... என்றான் மாதவன்.

ரெக்கார்டு செய்ததை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள் மாதவன் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள்.

அவர்கள் சென்றதும் சிரித்தான் சுரேஷ்.
அவன் கிராஃபிக்ஸில் ரூபினியுடன் இருந்த வீடியோவை எடிட் செய்ததை நினைத்து பார்த்து கொண்டான். அவள் விருப்பத்துடன் அவனுடன் இருப்பது போல கண்கள் திறந்திருப்பது போலவும்..... சிரித்துக் கொண்டே அவனை அணைப்பது போலவும் எடிட் செய்து வைத்திருந்தான்.

******************

ராகினி ரூபினியை கோச்சிங் சென்டரில் விட்டு விட்டு லேபிற்கு சென்றாள்.

ரூபி..... இருப்ப இல்ல?

அக்கா.... நீ கவலைப்படாதே..... நான் பார்த்துக்கொள்கிறேன்.....

ஹாய் அக்கா..... என்றாள் சுந்தரி.

ஹாய் மா..... ரூபி உன்னை பத்தி சொன்னா.....

நான் ஃபெயில் ஆனதையா?..... என்று வருத்தமாக கேட்டாள்.

சீ சீ இல்லம்மா..... நீ அவ கிட்ட நல்லா பேசி பழகுற ன்னு.....

ஓ..... ஓகே அக்கா..... நீங்க கவலைப்படாதீங்க அக்கா....
நான் ரூபியை பார்த்துக்கொள்கிறேன்.

தேங்க்ஸ் மா..... என்று அவளுடைய தோளை தடவிக் கூறினாள் ராகினி.

லஞ்ச் மிச்சம் வைக்காம சாப்பிடு.....

கண்டிப்பா அக்கா.... நான் சாப்பிட வச்சிடறேன்..... தமிழ் கிளாஸ் மட்டும் தான் நான் இல்லாம அட்டெண்ட் பண்ணுவா..... அதுவும் நான் வெளியவே தான் உட்கார்ந்து இருப்பேன்.

சரிம்மா.... பை.... என்று சொல்லி சிரித்தாள் ராகினி.

பை அக்கா.... என்றனர் ரூபினி மற்றும் சுந்தரி.

பை ரூபி.... பை சுந்தரி....

கிளாஸ் ஆரம்பித்தது.

முதலில் மேத்ஸ், பிறகு சயின்ஸ்.... பிரேக்கில் காஃபி குடிக்க பார்க் பக்கத்தில் இருந்த டீக்கடைக்கு சென்றனர் ரூபினி மற்றும் சுந்தரி.

அப்போது அங்கே டீ குடிக்க வந்தான் நிரஞ்சன்.

ரூபினியை பார்த்தான்....
சுந்தரி குட்மார்னிங் சார்....
என்றாள் அவனை பார்த்து.

குட்மார்னிங் சுந்தரி.... என்றான் நிரஞ்சன்.

சார்.... என் பெயர் நியாபகம் வச்சிருக்கீங்களா?

உன்னோட பெயர் என் தங்கச்சியோட பெயர்.... அதான் மறக்கல.....

ஓ.... ஓகே சார்......

உன் ஃபிரெண்டு பேர் என்ன?

ரூபினி.....

ரூபினி பேசமாட்டீங்களா?

அப்படி எல்லாம் இல்லை சார்.....

இல்ல குட் மார்னிங் கூட சொல்லையே.....

கிளாஸ்ல சொல்லிக்கலாம்ன்னு....

ஓகே கேர்ல்ஸ்..... யூ கேரி ஆன்......

பத்து அடி நடந்து சென்றான் நிரஞ்சன்.

சார்.... என்றாள் ரூபினி.

நின்று திரும்பி பார்த்தான்.

ஒரு நிமிஷம்.... என்று சுந்தரி யிடம் சொல்லிவிட்டு அவனருகில் சென்று.

சாரி சார்.....

எதுக்கு.....

நான் உடம்பு சரியில்லாம இருந்த போது நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணி இருக்கீங்க.... அது எனக்கு தெரியாது.... நேத்து நீங்க கேட்டதும்.... நான் தப்பா நினைச்சிட்டேன்.... முதலில் உங்க கிட்ட சாரி சொல்லிட்டு அப்புறமா குட் மார்னிங் சொல்லலாம் ன்னு நினைச்சு தான் சுந்தரி உங்களுக்கு விஷ் பண்ணும் போது நான் அமைதியாக இருந்தேன்.

இட்ஸ் ஓகே ரூபினி....

குட் மார்னிங் சார்.... என்று சொல்லி சிரித்தாள் ரூபினி.

குட் மார்னிங்....
என்று சொல்லி சிரித்தான் நிரஞ்சன்.

அவன் கிளாஸிற்கு சென்றதும்....

என்ன ரூபி.... உனக்கும் சோஷியல் சாருக்கும் என்ன நடக்கிறது?..... என்றாள் சுந்தரி.

சீ சீ..... அதெல்லாம் ஒண்ணும் இல்லை..... நான் உடம்பு சரியில்லாம இருந்தேன்னு சொன்னேன் இல்ல.....

ஆமாம்.....

அப்போ இவர் எனக்கு ஹெல்ப் பண்ணி இருக்காரு ன்னு அக்கா சொன்னாங்க..... அது தெரியாம நான் நேத்து இவர் கிட்ட கொஞ்சம் கடுமையா பேசிட்டேன்.... அதான் முதலில் சாரி சொல்லிட்டு அப்புறமா குட் மார்னிங் சொன்னேன்.... அதுக்கு தான் சிரிச்சாரு.... நானும் சிரிச்சேன்..... நீ உன் கற்பனை குதிரையை தட்டி விடாதே.... என்று சொல்லி சிரித்தாள் ரூபினி.

சீ.... அவ்வளவு தானா.... என்றாள் சுந்தரி.

சரி சரி வா.... இங்கிலீஷ் கிளாஸ்.... என்று சொல்லி விட்டு உள்ளே சென்றனர்.

அந்த கோச்சிங் சென்டர் தலைமை ஆசிரியரான மோகன் ராம் தான் இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்தார். அவரும் நன்றாக சொல்லிக் கொடுத்தார்.

ரூபினிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது....
அனைத்து ஆசிரியர்களும் அவளுக்கு புரியும் படி சொல்லிக் கொடுத்தார்கள். அடுத்து சோஷியல் பீரியட்.....

நிரஞ்சன் கிளாஸ் எடுத்தான்.

ஏனோ அவனது கண்கள் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ரூபினியை பார்த்தது. அவளுக்கும் அது பிடித்திருந்தது. இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அதை கவனிக்க தவறவில்லை சுந்தரி.

அடுத்து தமிழ் கிளாஸ் தொடங்கியது.

சுந்தரி வெளியே சென்றாள்.
வேறு சிலர் புதிதாக வந்திருந்தார்கள்.

என்ன கொடுமை அதிலும் யாரும் பெண்கள் இல்லை.

ஹாய்.... என்றான் ஒரு மாணவன்.

ஹாய்..... என்றாள் ரூபினி.

என் பெயர் சரவணன்....

தெரியும்.... சார் கூப்பிடும்போது பார்த்தேன்.

ஓ.... ஃபிரெண்ட்ஸ்.... என்று கையை நீட்டினான்.

ஒரு நிமிடம் யோசித்து விட்டு....
ஓகே.... என்று சொல்லி கைக் குளுக்கினாள் ரூபினி.

தமிழ் கிளாஸ் முடிந்ததும்..... ரூபினி வெளியே சென்று சுந்தரியுடன் ரெஸ்ட் ரூம் சென்றாள்.

மச்சி.... எடு டா நூறு ரூபாய்..... என்றான் சரவணன்.

இந்தா டா..... என்று சொல்லி சோகமாக பணத்தை கொடுத்தான் குகன்.

கை தான கொடுத்தா.... அதுக்கு எதுக்கு டா இவ்வளவு சீனு..... என்றான் ராஜா.

சரி.... இப்போ என்ன.... இன்னும் மூணு மாசத்துல அவள ஐ லவ் யூ சொல்ல வைக்கிறேன் டா.... எவ்வளவு டா பெட்டு?

ஆயிரம் ரூபாய் டா.... என்றான் ராஜா.

சரி டா.... என்று சொல்லி சேலன்ஜ் செய்தான் சரவணன்.

மச்சி..... அந்த பொண்ணு சுந்தரி இல்லாத போது பேசு டா.... அப்போ தான் ஒர்க் அவுட் ஆகும்..... என்றான் குகன்.

ஆமாம்..... அவ பக்கத்துல இருந்தா இந்த பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டேங்குறா இந்த ரூபினி.... என்றான் சரவணன்.

******************

தொடரும்......
அ. வைஷ்ணவி விஜயராகவன்.