• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நண்பர்கள் தினம்

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
*HAPPY FRIENDSHIP DAY :

உங்கள் நண்பர்கள் குழுவில் இந்த குணங்களைக் கொண்ட நண்பர்கள் இருக்கிறார்களா?*



"பிரண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு..." என்பது போல உங்கள் நண்பர்கள், உங்களுக்கு உற்சாகத்தையும் ஆதரவையும் அளிப்பதன் மூலம் மோசமான தருணங்கள் மற்றும் சில கெட்ட நேரங்களை எளிதில் கடந்து செல்ல முடியும். நண்பர்களுடன் ஒன்றாக இருக்கும் தருணங்கள் எப்போதுமே இனிமையானவை தான். நண்பர்கள் இல்லாவிட்டால், வாழ்க்கை மிகவும் தனிமையாகவும், சாதாரணமாகவும் இருக்கும்.



மேலும், உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் வெளியில் பயணம் செய்வது என்பது மிகச் சிறந்த விஷயம்! இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு நண்பருக்கும் வித்தியாசமான ஆளுமை திறன் இருக்கும்.


மேலும் ஒவ்வொருவருக்கும் சில குணாதிசயங்கள் இருக்கும். இன்று உலக பிரண்ட்ஷிப் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் நீங்கள் சந்திக்கும் பல்வேறு வகையான நண்பர்கள் குறித்து பின்வருமாறு காண்போம்.

பெற்றோர் போல அரவணைப்பர்: இந்த வகையான நண்பர் எப்பொழுதும் உங்கள் உடல்நலம், மனநிலை குறித்து விசாரிப்பார். எந்த நேரத்திலும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். அவர்கள் ஒரு பெற்றோரைப் போல செயல்படுவார்கள். சிறந்த ஆலோசனைகளை வழங்குவார்கள். நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் அவர்களிடம் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

வேடிக்கையான நபர்: நண்பர்கள் குழுவில் எப்போதும் இது போன்ற ஒரு நகைசுவையான நண்பர் கட்டாயம் இருப்பார். மேலும் தன்னை சுற்றி இருக்கும் நண்பர்களை கிண்டல் செய்வது, வேடிக்கையாக எதையாவது செய்து சிரிக்க வைப்பது போன்ற விஷயங்களில் ஈடுபடுவர். அவர்களின் அரவணைப்பு, உற்சாகம் மற்றும் சிரிப்பு ஆகியவற்றின் சில ஆற்றல் உங்களின் மனதை உற்சாகப்படுத்தும். அவை உங்களை நிம்மதியாகவும் மகிழ்ச்சியான மனநிலையிலும் வைக்க உதவும்.

எப்போதும் பார்ட்டி செய்யும் நண்பர்: ஒரு சிறிய நீச்சல் குளம் பார்ட்டியாக இருந்தாலும் அல்லது எங்காவது கூட்டமாக சென்றாலும் சரி, இல்லை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துக் கொண்டாலும் சரி, இந்த நண்பருக்கு எப்படி ஒரு பார்ட்டி நேரத்தை அனுபவிப்பது என்பது நன்கு தெரியும். பீர் மற்றும் சியர்ஸுடன் வேடிக்கைக்காக அவர்கள் உங்களைச் சமாதானப்படுத்த வாய்ப்புள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி, அவர்கள் உங்கள் பெற்றோரின் பட்டியலில் மிகவும் விரும்பப்படாத நண்பர்களின் பட்டியலில் தான் இருப்பர்.

சத்தமாக பேசும் நண்பர்: இவர்களால் பேசுவதை நிறுத்தவே முடியாது. அதுவும் உரத்த குரலில் பேசுவர். இதுபோன்ற ஒரு வாயாடி நண்பர் காட்டாயம் உங்கள் பிரண்ட்ஸ் கேங்கில் இருப்பார். இந்த நண்பரிடம் கொஞ்சம் சத்தத்தை குறைக்கும்படி கேட்டுக்கொண்டாலும் அவர் உங்கள் பேச்சைக் கேட்பதில்லை. ஏனெனில் அது அவர்களின் இயல்பான பேச்சு வழக்கம் ஆகும். எந்தவொரு சூழ்நிலையிலும் யாருக்காகவும் அவர்கள் அமைதியாக பேச மாட்டார்கள்.

தொடர்பில் இல்லாத நண்பர்: உங்களது பள்ளி பருவத்திலோ அல்லது கல்லூரியிலோ அல்லது அலுவலகத்திலோ மிக நெருங்கிய நண்பரை கொண்டிருப்பீர்கள். ஆனால் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்து செல்ல நேரிடும் போது, உங்களது தோழமையும் பிரிந்துவிடும். அவர் உங்களை தொடர்புகொண்டிருக்கவே மாட்டார். சமூக ஊடகங்கள் மூலம் அவர்களின் வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளைப் புதுப்பிக்க நீங்கள் அவர்களை கட்டாயப்படுத்தினாலும் அது எதுவுமே நடக்காது.

உணர்ச்சிவசப்படுபவர்: அவர்கள் எப்போதும் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த ஊக்குவிக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் நட்பு அல்லது உறவு என எதுவாக இருந்தாலும் எந்த உறவிலும் உணர்ச்சி ரீதியாக தொடர்பு கொள்வதில் தீவிர நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் மிகவும் உணர்திறன் மற்றும் உணர்ச்சிவசப்படுபவர்.

புத்திசாலி நண்பர் நண்பர் கூட்டத்தில் ஒரு புத்திசாலி எப்போதுமே இருப்பார். அவர்கள் படிப்பு, வேலை ஆகியவற்றில் மிகவும் ஆர்வமாக உள்ளவர். அவர்கள் எப்போதும் தங்கள் தொழில் அல்லது திட்டங்களைப் பற்றி பேசுவதைப் கேட்டால் பிற நண்பர்களுக்கும் உத்வேகம் கிடைக்கும் அல்லது எரிச்சலாக இருக்கும். நீங்கள் நீண்ட காலமாக யோசித்த கேள்விக்கான பதிலை அவர்கள் விரைவாக உங்களுக்குத் தருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நன்கு சாப்பிடும் நண்பர்: எங்கு சென்றாலும் நன்கு சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் உண்மையான உணவுப்பிரியர் உங்கள் கேங்கில் இருக்கிறாரா? நீங்கள் அவர்களிடம் எப்போது கேட்டாலும் தான் பசியுடன் இருப்பதாக கூறுவார்கள்!அவர்கள் நினைப்பது எல்லாம் உணவு மற்றும் ஒரு நல்ல உணவுக்கான சிறந்த கூப்பன்களை எங்கே பெற முடியும் என்பது பற்றித்தான். உணவோடு நண்பர்களுடன் ஹேங்கவுட் செய்யக்கூடிய இடங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், நீங்கள் அணுக வேண்டிய முதல் நபர் இவர்கள் தான்.

எப்போது கேட்டாலும் பணம் இல்லை என்று சொல்லும் நண்பர்: நண்பர்கள்கூட வெளியே செல்லும் போது பணத்தை பகிர்ந்து செலவிடுவது வழக்கம். அதனால், நண்பர்கள் தங்களால் முடிந்த அளவு பணத்தை ஷேர் செய்து செலவழித்து வருவர். ஆனால் எப்போது கேட்டாலும் என்னிடம் பணம் இல்லை என்று சொல்லும் நண்பர் ஒவ்வொரு கேங்கிலும் இருப்பார். இவர்கள் பில்களில் தங்கள் பங்கை செலுத்த முடியாது என்று சொல்லுவார். அவர்கள் எப்பொழுதும் தங்களுக்குச் சொந்தமான வங்கியாக பிற நண்பர்களை நினைப்பார்கள்.

எப்போதும் தாமதமாக வரும் நண்பர்: நீங்கள் எங்கு செல்ல திட்டமிடலும் இந்த ஒரு நபர் மட்டும் மிக தாமதமாகவே வருவார். உங்கள் நண்பர்கள் அனைவரையும் நீங்கள் எவ்வளவு நாள் கழித்து சந்தித்தாலும் சரி, இந்த நபர் மட்டும் எப்போதும் கடைசியாகவே வருவார். நேர விதிகளை கடைபிடிக்காதது மிகவும் சாதாரணமானது என்றாலும், அவர்கள் அதற்காக மன்னிப்பு கேட்காதபோது இது கோபத்தை ஏற்படுத்தும்.

உங்கள் நண்பர்கள் குழுவில் இந்த குணாதியங்களை கொண்ட நண்பர்கள் காட்டாயம் இருப்பார்கள். இல்லையெனில் நீங்கள் கூட மேற்கண்டவற்றில் ஏதேனும் குணாதிசயம் கொண்ட நண்பராக இருக்கலாம். அதை பற்றி உங்கள் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாமே!.

நன்றி
🙏
 
Top