• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி 1

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 1

"ப்ச்! யாரது?" எரிச்சலாக கேட்டவன் குரலில் வெளியே நின்றவள் ஒரு நொடி தயங்கி பின் மீண்டுமாய் கதவைத் தட்டினாள்.

"யாருன்னு கேட்குறேன் இல்ல? அதான் யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு சொன்னேனே!" என்றவன் குரல் அழுத்தமாய் வர,

"இல்ல நான்... நான் வந்து.. நான் திக்ஷிதா!" என்ற பெண்ணின் குரலில் இவன் அமைதியாய் இருக்க,

"கொஞ்சம் கதவை திறங்களேன்!" என்றாள் அவள். நிமிடங்கள் சென்றும் கதவு திறக்காமல் இருக்க,

"வாசு! கதவை திற ப்பா.." என்றது அம்மாவின் குரல்.

அதற்கு மேல் முடியாமல் எழுந்து வந்து கதவை திறக்க, அன்னைக்கு பின்புறமாய் முகத்தை மறைத்தபடி நின்றிருந்தாள் அவள்.

"பயந்துட்டேன் ப்பா!" என்ற அன்னையின் விழிகள் அழுது சிவந்திருக்க,

"ப்ச்!" என்று தலை கோதிக் கொண்டவன்,

"சரி போலாம்!" என்று கூற,

"வாசு!" என தயங்கினார் அன்னை.

"இன்னும் என்ன ம்மா?" என்று கேட்டவனுக்கு சுற்றி இருப்பவர்கள் எல்லாம் தன்னைப் பார்க்கும் பார்வையில் அத்தனை ஆத்திரம் வந்தது அவனுக்கு.

"வாசு! இவங்க...." என்று தந்தை கதிர் உமா இருவரையும் முன் நிறுத்த, வாசு தேவன் கோபத்தை காண்பித்து கேள்வியாய்ப் பார்த்தான் தந்தை ரத்தினத்தை.

"அவங்க பொண்ணு..." என்று கூற வந்த அன்னை சிவகாமியை வாசு சட்டென திரும்பிப் பார்க்க, இன்னும் சிவகாமி பின்னே நன்றாய் ஒதுங்கி நின்றாள் அவள்.

"என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு எல்லாம்?" வாசு கேட்கவும் எதுவும் பேச முடியாமல் அனைவரும் நிற்க,

"உமாவும் அவங்க வீட்டுக்காரரும் உன்கிட்ட பேசணும்னு சொல்றாங்க பா" என்று துணிந்து கூறினார் அன்னை.

"என்ன?" என்று அவன் பார்க்க, இன்னும் அவள் முகத்தினை இவனுக்கு காட்டிடவில்லை அவள்.

"நீயும் பேச மாட்ட.. என்னையும் பேச விட மாட்ட.. அவங்க அப்புறமா பேசிக்கட்டும்.. இதை முதல்ல சொல்லு" ரத்தினம் சிவகாமியிடம் கூற,

"நீங்க கொஞ்சம் சும்மா இருங்க!" என்ற சிவகாமி திரும்பி மகனைப் பார்த்தார்.

"போலாம் ம்மா!" மிக அழுத்தமாய் அவன் கூற,

"ஊர் உலகத்துல யாருக்குமே நடக்காததா? உன்னை யாரும் எதுவும் சொல்ல போறதில்ல.. கொழுப்பெடுத்த கழுதை.. யாரையோ கூட்டிட்டு போய்ட்டா.. அதுக்காக நீ இப்படி வீட்டுக்கு போகலாம்னு சொல்லுவியா?" என தந்தை கதிர் கைகளில் அழுத்தம் கொடுத்துவிட்டு கேட்க,

"வீட்டுக்கா?" என்று அதிர்ந்து வாசு கேட்டதில் இன்னும் படபடவென வந்தது அன்னை சிவகாமிக்கு மட்டும் இல்லாது பின்னே நின்ற திக்ஷிதாவிற்கும் தான்.

"வேற எங்க?" என்று தந்தை கேட்க,

"போலீஸ் ஸ்டேஷன்க்கு.." என்று அவன் கூறியதில் மயக்கமே வரும் போல ஆனது திக்ஷிதாவிற்கு.

"எதுக்கு பா?" அன்னை கேட்க,

"ம்மா! மண்டபம் வர வந்து நம்மளை குடும்பத்தோட அசிங்கப்படுத்திட்டு இன்னொருத்தனோட போயிருக்கா.. அவளை எப்படி ம்மா சும்மா விட முடியும்?" என்று வாசு தேவன் நியாயமாய் கேட்க,

"எது?" என்று கண்களை விரித்தாள் திக்ஷிதா.

"தம்பி! தப்பு தான்.. எங்களுக்குமே என்ன பண்றதுன்னு தெரியல..." என்று கதிர் கூற வர,

"நான் யாரு பேச்சையும் கேட்கறதா இல்ல" என்றவனை மெதுவாய் சிவகாமி பின்னிருந்து எட்டிப் பார்த்தாள் திக்ஷிதா.

"இப்படி நின்னன்னா சரி வராது திக்ஷி! ஆட்டத்தை கலைச்சு விடு.." தனக்குள் கூறிக் கொண்டவள்,

"கொஞ்சம் பயமா தான் இருக்கும்.. அவன் கண்ணை பார்க்காம பேசிடு!" என்றும் தனக்குள் கூறிக் கொண்டு,

"இங்க பாருங்க!" என்று சிவகாமிக்கு முன் வந்து நின்று அவன் முன் ஒற்றை விரலை நீட்டி இருந்தவள் மறந்து அவன் கண்களையும் நேருக்கு நேராய் பார்த்துவிட, விக்கித்து நின்றுவிட்டாள் அவன் பார்வையில்.

ஆட்காட்டி விரலால் அவள் விரலை மடக்கும் படி அவன் சைகை செய்ய, சட்டென கையை இழுத்துக் கொண்டவள்,

"அக்கா போனதுக்கு.. என் அம்மா, அப்பா... என்ன பண்ணுவாங்க? நான்... நான் தான்..." என்றவளுக்கு அவன் முகத்தை பாராமலே வார்த்தை தந்தி அடித்தது. எப்படி அக்கா சென்றது தனக்கு தெரியும் என சொல்ல முடியும்? அதுவும் இவ்வளவு உக்கிரமாய் நிற்பவனிடம்.

வாசு கைகட்டி நின்றுவிட்டான் பேசு என்பதாய்.

இன்று வாசு தேவன் சங்கமித்ரா இருவரின் திருமணம் பெற்றோர் விருப்பத்தின் பெயரில் முடிவு செய்யப்பட்டிருக்க, காலை மாப்பிள்ளை அழைப்பு முடிந்து மணமகன் அறைக்கு வந்த பின் மணமகள் அறையில் இருந்த சங்கமித்ராவின் கடிதத்தோடு அழுதபடி ஓடி வந்திருந்தார் உமா.

மனதிற்கு பிடித்தவனோடு செல்வதாய் அதில் இருக்க வேறு எந்த குறிப்பும் யாருக்கும் இல்லை.

அப்பொழுது அறைக்குள் சென்றவன் தான்.. யாருடைய பேச்சுக்கும் செவி சாய்க்காமல் இருக்க, ஒரு மணி நேர முடிவில் உமா கதிர் தம்பதியினர் ரத்தினம் சிவகாமி இருவரின் ஒப்புதலோடு தனது இரண்டாவது மகளான திக்ஷிதாவை வாசு தேவனுக்கு திருமணம் முடிக்க சம்மதித்து இருந்தனர்.

அன்னை தந்தை வாடிய முகமும் சிவகாமியின் அழுது வடிந்த தோற்றமும் திக்ஷிதாவை பெரிதாய் யோசிக்க விடவில்லை.. சரி என அவள் சொல்லி இருக்க, மகனிடம் இதை கூற அத்தனை பயந்தனர் சிவகாமியும் ரத்தினமும்.

"அவங்களும் அய்யோ பாவம் தானே? கல்யாண ஆசையில இருந்திருப்பாங்க இல்ல.." என்று நினைத்த திக்ஷிதா கொஞ்சம் துடுக்குத்தனமானவள் தான்.

"நானே கூப்பிடுறேன்!" என்றவள் கதவை தட்டோ தட்டென்று தட்ட, அவன் ஒற்றை சத்தத்தில் பக்கென்று பயம் ஒட்டிக் கொண்டு வார்த்தை தந்தி அடித்தது.

அவனை பாவமென்று சம்மதித்தவள் வெளியே வந்ததில் இருந்து வாசுவின் பார்வைக்கு அவன் அன்னை தந்தையே பேச தயங்கி நிற்பதைப் பார்த்ததும் இதென்னடா என்று தான் தோன்றியது.

இப்பொழுதும் அவள் கூற வருவது புரிந்தும் அவன் பேசாமல் கை கட்டி நிற்க,

"சொல்றதை கேளு வாசு! அந்த பொண்ணை தண்டிக்குறது இப்ப முக்கியம் இல்ல.. அவளை பெத்தவங்களுக்கும் கஷ்டம் இருக்கும் தானே? அவங்களே வந்து அவங்க ரெண்டாவது பொண்ணை தரேன்னு சொல்றாங்க.. பொண்ணும் சரினு சொல்லிடுச்சு" என்று தந்தை கூறவும் வாசு அவளைப் பார்க்க,

"ம்ம்!" என்று தலையாட்டினாள் அவளும்.

"என்னம்மா பேசறீங்க? இதென்ன பொம்மையா ஒன்னு இல்லைன்னா இன்னொன்னுன்னு மாத்திக்க?" சுள்ளென வந்த வார்த்தையில் திக்ஷிதாவும் மருண்டு விழித்தாள்.

"ஓஹ்! அக்கா மேல ஒரு இன்ட்ரெஸ்ட் வந்திருக்கும் போல!" அதையும் மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்,

இதற்கு மேல் தான் செய்ய எதுவும் இல்லை என்பதாய் அன்னை தந்தையைப் பார்க்க, வாசுவும் அதை கவனித்தான்.

"இப்ப என்ன தான் டா செய்யணும்ன்ற? அந்த பொண்ணு போனதுக்கு அவ அப்பாவும் அம்மாவும் தான் என்ன செய்வாங்க? இவ்வளவுக்கும் அவ காதலிச்சது இந்த லேட்டரை பாக்குற வர அவ வீட்டுக்கே தெரியாதாம்.." என்று ரத்தினம் கூறவும் கொஞ்சம் ஜெர்க்காகியது திக்ஷிதாவிற்கு.

"ஓஹ்! அப்ப என்னை இப்படி ஊர் பார்க்க நிக்க வச்சதுக்கு என்ன நியாயம் சொல்ல போறாங்க?" வாசு கேட்க,

"அதுக்காக தான் பா.. இந்த கல்யாணத்தை நடத்தலாம்னு சொல்றோம்.." என்றார் சிவகாமி.

"மாமியார்! அக்காவை உங்க பையன் லவ்விட்டார் போல.. அதான் சரினு சொல்ல மாட்டுறார்" என்று திக்ஷிதா சிவகாமி காதில் கூற,

"சும்மா இரு டி வாயாடி.. நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக பொண்ணு முகத்தையே பார்க்காம சரினு இவ்வளவு தூரம் வந்தவன் டி.. நானே என் புள்ளை பாவம் மருகி போய் நிக்கிறானே.. சம்மதிப்பானோ இல்லையோனு தவிச்சு போய் நிக்குறேன்.. இவ வேற!" என்றார் மெதுவாய்.

"ஓஹ்! ஆமால்ல.. இவர் அக்காவைப் பார்த்தது இல்லை இல்ல?" என்று திக்ஷிதா கதை பேச, வாசுவிற்கு அவர்கள் பேசுவது கேட்கவில்லை என்றாலும் அவர்களை தான் பார்த்தான்.

சங்கமித்ராவைப் பெண் பார்த்து பேசி பூ வைத்து சென்று என மொத்தம் நான்கு முறை அவர்கள் வீட்டிற்கு சென்றிருக்கிறார் சிவகாமி. அதில் இரண்டு முறை மட்டுமே வீட்டில் இருந்திருந்தாள் இந்த திக்ஷிதா.

சிவகாமியை அக்காவின் மாமியார் என வம்பிழுத்து அப்போதே பேச ஆரம்பித்திருக்க, "எனக்கு பொண்ணு இல்லைனு ரொம்ப கவலையா இருக்கும்.. உங்க ரெண்டாவது பொண்ணை பார்த்தா எனக்கு இன்னும் கவலை ஆகிடுது" என்று கூறும் அளவுக்கு குழந்தைத் தனமாய் எதையாவது செய்து வைத்து அவரை ஈர்த்திருக்க, இப்போது அவளே தன் வீட்டு மருமகளாக வாய்ப்பு கிடைத்தும் மகன் பேச்சில் செய்வதறியாது நின்றார்.

"வாசு! போலீஸ் எல்லாம் வேண்டாம் டா.. போனவ போனவளாவே இருக்கட்டும்.. நமக்கு என்னனு கடவுள் தான் முடிவு பண்ணி இருப்பார்.. நீ கொஞ்சம் அம்மா சொல்றதை கேளு பா!" என்று எடுத்து கூற,

'மகனிடம் கூட இவ்வளவு தயங்கி பேசணுமா? இவங்க கொஞ்சம் கோபமா தான் சொன்னா என்ன.. கேட்க மட்டாராமா?' நினைத்தபடி அவனை கண்களால் திக்ஷிதா அளவெடுக்க,

அங்கே மாறி மாறி கெஞ்சிக் கொண்டிருந்தனர் அன்னையும் தந்தையும் வாசுவிடம்.

"இப்படி எல்லாம் நடக்கும்னு யாரும் நினைக்கல.. அவளை வச்சு திக்ஷியை நீங்க தப்பா எடை போட்டுடாதீங்க.. நேருக்கு நேர் பேசிடுவாளே தவிர மனசுல ஒன்னும் வச்சுக்க மாட்டா திக்ஷி.. அவளுக்கு பிடிக்காததை செய்யவும் மாட்டா.. எங்களை இந்த ஒரு தடவை நம்பி கல்யாணத்துக்கு சரினு சொல்லுங்க தம்பி" என்று கதிர் சென்று வாசு முன் நிற்க,

"ப்பா! அவங்களுக்கு யோசிக்க டைம் குடுங்க.. ஃபோர்ஸ் பண்ணி எல்லாம் பிடித்தத்தை கொண்டு வர முடியாது.. அண்ட் நீங்க அவங்ககிட்ட கெஞ்சுறதும் எனக்கு பிடிக்கல" சட்டென திக்ஷிதா கூறிவிட,

"சும்மா இரு திக்ஷி!" என்று அதட்டினார் உமா.

"ப்ச்!" என்றவன் அறைக்குள் சென்று அமர்ந்துவிட, இந்த முறை அறைக்கதைவை சாற்றிவிடவில்லை.

அதுவே அவன் யோசிக்கின்றான் என்பதை புரியவைக்க, ரத்தினம் அங்கே சுற்றி நின்றவர்களை எல்லாம் அமரவைத்துக் கொண்டிருந்தார்.

"மாமி! இப்ப நான் என்ன பண்ணட்டும்?" என்ற திக்ஷிதா பாவாடை தாவணியில் இருக்க,

"இதுவே நல்லா தான் இருக்கு இல்ல?" என்றாள் சிவகாமியின் பார்வை கண்டு சிரித்தபடி.

"அழகா தான் டி இருக்க.. ஆனா கல்யாணம்ல?" என்றவர் உமாவைப் பார்க்க, உமா வாசுவைப் பார்த்தார்.

"நீ இவளை கவனி.. நான் போய் பேசுறேன் அவன்கிட்ட!" என்ற சிவகாமிக்கு பயம் தான். அவனை சம்மதிக்க வைத்துவிடலாம் தான் என்று ஒரு எண்ணம் இருந்தாலும் அவளைப் பற்றியும் கூற வேண்டுமே! என நினைத்தவர், முதலில் திருமணம் நடக்கட்டும் என்று தோன்றவும் மற்றதை மறைத்து வாசு அருகே சென்றார்.

தொடரும்..
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
வாசு ரெம்ப கோவக்காரனா இருக்கானே 🙄🙄🙄தீக்ஷி துடுக்கு தனமா இருந்தாலும் தெளிவா பேசுறா, ரெண்டுபேருக்கும கொஞ்சம் கொஞ்சம் ஒத்துவரும் போல பாப்போம் பாப்போம் 😃😃😃😃😃😃
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
Tom and Jerry love 😂😂😂
Waiting.....❤️❤️❤️🤩🤩🤩

வாசு ரெம்ப கோவக்காரனா இருக்கானே 🙄🙄🙄தீக்ஷி துடுக்கு தனமா இருந்தாலும் தெளிவா பேசுறா, ரெண்டுபேருக்கும கொஞ்சம் கொஞ்சம் ஒத்துவரும் போல பாப்போம் பாப்போம் 😃😃😃😃😃😃
Ama ama. Pa😂😂