• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி - 11

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
893
453
93
Tirupur
தீராநதி - 11

அன்று தன் ஆஃபிசில் இருந்து கார்த்தி கிளம்பும் போதே நேரமாகியிருந்தது. வீட்டிற்கு வந்தவன் சரியாக காரை நிறுத்தும் நேரம் வாட்ச்மேன் அவனை நோக்கி ஓடிவந்தார்.

என்ன என நின்று பார்த்தவனிடம், “தம்பி காலையில கார் துடைக்கும் போது இந்த சீட்டு இருந்துச்சுங்க. நான் அதை உங்ககிட்ட கொடுக்கனும்னு பாக்கெட்ல வச்சிட்டு மறந்துட்டேன் தம்பி. இங்க வந்து யூனிஃபார்ம் மாத்தும் போதுதான் ஞாபகமே வந்துச்சுங்க.” என ஒரு சீட்டை கொடுக்க,

“என்ன சீட்டு கந்தண்ணா..” என வாங்கியவன் அது லாட்டரி சீட் என்று தெரிந்ததும், நெற்றி சுருங்கி யோசித்தவனுக்கு காலையில் ஆஃபிஸ்க்கு வந்தவளின் முகம் மின்னலென வந்து போனது.

முகம் மட்டுமா.? ‘ஷப்பா… அவளின் முன்னழகும் தான் தாராளமாக காட்சி கொடுத்ததே’ என யோசித்தவன் தலையைக் கோதி தன் உணர்வுகளை அடக்க பாடுபட்டான்.

‘ஷிட்’ என்றவன் “இதை தேடித்தான் ஒருத்தி இன்னைக்கு வந்து என் உயிரை எடுத்துட்டு போனா.” என தனக்குள்ளே புலம்பியவன், தன் ஆஃபிஸ் பையனுக்கு உடனே அழைத்தான்.

எடுத்ததுமே “டேய் மார்னிங்க் நம்ம ஆஃபிஸ்க்கு ஒரு பொண்ணு வந்தாளே அவ அட்ரஸ் தெரியுமா.?” என்றான் எரிச்சலாக.

“அண்ணா யாரு யாருண்ணா..” என அவன் திணற,

“அதான்டா காலையில் ஒருத்த வந்து டென்சன் பண்ணிட்டு போனாளே அவதாண்டா..” என கடித்து துப்ப,

“ஓ.. அந்த அழுதுட்டே போனாங்களே அந்தக்காவா.? என கேட்க,

“ஹான் அவதாண்டா. அவ அட்ரஸ் உனக்கு தெரியுமா.?” என மேலும் கத்த,

“ஆமா அண்ணா தெரியும். ஆனா எதுக்குண்ணா.. வீட்டுக்கே வந்துட்டாங்களா..? என்றான் தெரிந்து கொள்ளும் குரலில்.

“முதல்ல அட்ரசை சொல்லு. மத்ததை நாளைக்கு ஆஃபிஸ்க்கு வா தெளிவா சொல்றேன்.” என அழுத்தமாக கூற,

“ண்ணா” எனத் திணறியவன் அட்ரசை கூற, கேட்டுக் கொண்டவன் பதில் சொல்லாமல் போனை வைத்துவிட்டு மீண்டும் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

‘என்ன வந்தவுடனே தம்பி கிளம்பிடுச்சு..’ என யோசித்தபடியே நகரப் போன வாட்ச்மேனை நிறுத்தினார் பார்வதி.

“கந்தா வந்தது கார்த்தி தானே, என்னாச்சு வந்த உடனே கிளம்பிட்டான். எதுவும் பிரச்சினையா..” என யோசனையாக கேட்க,

பிரச்சினை மாதிரி தெரியல அம்மா. ஏதோ முக்கியமான வேலையை மறந்து வந்துட்ட மாதிரி இருக்கு..” என நடந்ததை கூற,

“லாட்டரி சீட்டா? அதை எடுத்துக்கிட்டா அவசரமா போனான்” என யோசித்தபடியே கேட்டவர், “சரி நான் போன்ல கேட்டுக்குறேன், நீ சாப்பிட்டியா.?” எனவும்,

“ஆச்சும்மா.. பவானியம்மா கொடுத்தாங்க..” என பதிலுரைக்கவும்,

“சரி பாரு..” என உள்ளே நுழைந்தவர் கார்த்தியின் தாய் அம்பிகாவிடம் செய்தியைக் கூறிவிட்டு அறைக்குள் அகன்றுவிட்டார்.

ஒருவழியாக அவளின் அட்ரசைக் கண்டுபிடித்து வீட்டின் முன் காரை நிறுத்தலாம் என்று நினைக்கும் போதுதான் கதிரவன் குடித்துவிட்டு ஒருவரிடம் கத்திக் கொண்டிருப்பது தெரிந்தது.

‘இந்தாளுக்கு இதேதான் வேலையா? மொடாக்குடி குடிப்பான் போல, இவனை நம்பி எப்படி அவ இருக்கா.’ என அபியின் எண்ணத்தில் யோசித்தபடியே இறங்கி என்னதான் செய்கிறான் என்று பார்க்கலாம் என காரில் சாய்ந்து நிற்க, அதற்குள் பெரும் களேபரமே நடந்து கதிரவன் கார்த்தியை இழுத்து பேசியிருந்தார்.

அவருக்கு மகளை வைத்து எப்படியும் பெரியாளாகி விடவேண்டும் என்று பேராசை. அன்று காலைதான் கார்த்தியைப்பற்றி அவன் குடும்பம் பற்றி விசாரித்திருந்தார். வசதி வாய்ப்புகளுக்கு கொஞ்சமும் குறைவில்லை.

எப்படியும் மகளை கார்த்தி குடும்பத்தில் தள்ளிவிட வேண்டும் என்று முடிவே செய்துவிட்டார். ஆனால் அவர் எதிர்பார்க்காதது கார்த்தி அங்கு வந்தது.

இப்போது விட்டால் அடுத்து அவனை இதில் இழுக்க முடியுமோ முடியாதோ என்று யோசித்து, சட்டென்று கார்த்தியை அந்த பிரச்சினையில் இழுத்து விட்டார்.

ஆனால் அவர் எதிர்பார்க்காதது அவன் கழுத்தில் காலை வைத்தது.

அதைக் கண்டதும் “தம்பி தம்பி விடுங்க, செத்துட போறான். விடுங்க.” என அவனைப் பிடித்து இழுக்க, அதற்குள் வீட்டிலிருந்த பெண்கள் மூவரும் வெளியில் வந்துவிட, அதிலும் அபிராமி அந்த இடத்தில் கார்த்தியைப் பார்த்ததும் நடுங்கியே விட்டாள்.

அவன் பார்க்கும் முன் வேகமாக மனோகரியின் பின் மறைய, அதற்குள் அவன் பார்த்துவிட, “ஹேய் இங்க வாடி..” என வேகமாக அவளிடம் விரைந்தான்.

அவன் வந்த வேகத்தைப் பார்த்து, திக் திக்கென்று வேகமாக துடித்துக் கொண்டிருந்த.. இதயத்தை ஆசுவாசப்படுத்தும் பொருட்டு.. ஏறி இறங்கிய நெஞ்சு கூட்டின் மீது கை வைத்து உள்ளும் புறமும் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்..

அருகில் வந்தவன் மனோகரிக்கு பின்னே இருந்தவளை இழுத்து, “அன்னைக்கு உன்னை அப்படியோ அம்போன்னு விட்டுட்டு வந்துருக்கனும். பாவம் பொண்ணாச்சே இந்த குடிகாரனோட விட்டுட்டு வரவேண்டாம்னு உதவினதுக்கு நல்ல பாடம் கத்துக் கொடுத்துருக்க..” என கோபமாய் கத்த, இழுத்த கையில் அவனது பிடி இறுகி வலி உயிரை எடுத்தது.

அதற்குள் மனோகரியின் தந்தை அபிராமியை அவனிடமிருந்து பிரிக்க நினைக்க, அவரால் முடியவே இல்லை. அவன் பிடி உடும்பு பிடியாக இருந்தது.

வலியிலும், அவன் பேச்சிலும் அபியின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் கொட்ட,

“தம்பி தம்பி விடுங்க. விடுங்க தம்பி. ஊரே பார்க்குது. பொம்பள புள்ள நாளைக்கு ஊரே நாக்கு மேல பல்ல போட்டு அசிங்கமா பேசும். அந்த குடிகாரனுக்காக உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். மன்னிச்சுடுங்க தம்பி. புள்ளைய விடுங்க் தம்பி..” என அவர் கெஞ்சவும் தான் சுயத்திற்கே வந்தான் கார்த்தி.

அப்போதும் அவளை முறைத்தபடியே நின்றவன் தலையைக் கோதி தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்றான். ஆனாலும் முடியவில்லை.

அவளைப் பார்த்த ஒரே நாளில் எத்தனை டென்சன். இன்று முழுவதும் அவனை புலம்ப வைத்துவிட்டாளே. ஆழ்ந்த மூச்செடுத்து ஓரளவிற்கு நிதானத்திற்கு வந்தவன் தன் பாக்கெட்டில் இருந்த லாட்டரி சீட்டை அவளுக்கு முன்னே எரிந்துவிட்டு “இதுக்காகத்தானே இன்னைக்கு என்னைத் ட்ஹேடி வந்த, இந்தா பொறுக்கிட்டு போ. இனி உன்னை நான் பார்க்கவே கூடாது. என் கண் முன்னாடி வந்த கொன்னுடுவேன்டி..” என ஆக்ரோசமாக கத்திவிட்டு, அந்த கத்தலில் அவள் உடல் ஒருமுறை தூக்கிப் போடுவதை பார்த்தபடி காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அரை போதையில் இருந்த கதிரவனுக்கு அந்த லாட்டரி சீட்டு பேச்சு காதில் விழ, “டேய் காலையிலயே என் பொண்ணு இதை கேட்டுத்தான வந்தா. அப்பவே கொடுத்து அனுப்ப வேண்டியதுதானே. இந்த நடுராத்திரி அதுவும் வீடு தேடி வந்து ஏன் கொடுக்கனும். நீயா வந்தியா இல்ல அவ வர சொன்னாளா.?” என வாய் குளறியபடியே தடுமாற்றத்துடன் எழ,

“டேய்..” என கார்த்தி அவன் மேல் பாய, அபியோ தந்தையின் பேச்சில் மொத்தமாக அதிர்ந்து போயிருந்தாள். உடலெல்லாம் கூச, அங்கு நிற்கவே அசிங்கமாக பட, வேகமாக வீட்டுக்குள் சென்றவள், வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றுக்குள் குதித்திருந்தாள்.

அபிராமி சென்ற வேகத்தை வைத்து பின்னாடியே வந்த மனோகரி அவளின் செயலைப் பார்த்து “அய்யோ அபி.. அபி..” எனக் கதறியவள், “அப்பா அப்பா சீக்கிரம் வாங்க அபி கிணத்துல குதிச்சிட்டா..” என சத்தமாக அழ,

அய்யோ அபி என்ற சத்தத்திலேயே எல்லோரும் உள்ளே வந்திருக்க, நிலமையை உணர்ந்து சற்றும் யோசிக்காமல் தானும் குதித்திருந்தான் கார்த்தி.

அதற்குள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கயிற்றுக் கட்டிலை எடுத்து, அதில் நாலுபக்கமும் கயிறைக் கட்டி கீழே இறக்கினர். அதுவரை அவளை அனைத்து பிடித்திருந்தவனின் உடலும் அவள் மேனியோடு நடுங்கியது.

அபியின் இந்த செயலை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு எதுவும் ஆகியிருந்தால் என்ற கேள்வியே அவனை உலுக்கியிருந்தது. மேலும் அவளை இறுக்கியனைத்தவனுக்கு அப்போதுதான் அவளின் நிலை புரிந்தது.

குளிர்ந்த நீரில் விழுந்தது, அன்றைய நாளின் அதிர்ச்சிகள், பயமெல்லாம் சேர்ந்து அவள் உடலை ஒருவழி செய்திருக்க, அது அவளை ஜன்னியில் கொண்டு பீய் விட்டிருந்தது. அவன் அனைப்புக்குள் இருந்தாலும் கைகளும் கால்களும் ஒவ்வொரு பக்கமாக இழுக்க, வாயிலும் நுரை வந்துவிட்டது. அதைப் பார்த்தவனுக்கும் உடல் நடுங்க ஆரம்பிக்க, “சீக்கிரம் சீக்கிரம் போடுங்க, பக்கத்துல டாக்டர் இருந்தா கூப்பிடுங்க..” என கத்த, அதற்குள் மனோகரி ஆம்புலன்சிற்கு அழைத்திருந்தாள்.

கட்டில் விழுந்ததும் அதில் அபியைக் கிடத்த, அவள் நிலை தனியே விட்டாலும் கண்டிப்பாக மீண்டும் அவள் விழுந்து விடும் அபாயம் இறுக்க, “தனியா அவளை அதில் விடமுடியாது. கொஞ்சம் கஷ்டம் பார்க்காம என்னையும் சேர்த்து தூங்குங்க..” என கீழிரிந்து கத்தியவன், கைகால்கள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அவளை இறுக்கியனைத்துக் கொண்டான்.

ஒருவழியாக மேலே தூக்கிவிட, மனோகரியும் அவள் அம்மாவும் அபியின் கன்னத்தைத் தட்டிப் பார்த்தனர்.

“உடனே ஹாஸ்பிடல் கொண்டு போகனும். இங்க பக்கத்துல யாரும் டாக்டர்ஸ் இருக்காங்களா.?” என மனோகரியின் தந்தையிடம் கேட்க,

“இல்ல தம்பி, தேனிக்குத்தான் கொண்டு போகனும். மனோ ஆம்புலன்ஸுக்கு சொல்லிட்டா..” என்றதும்,

“ஓ மைகாட்.. ஆம்புலன்ஸ் வர வரைக்கும் இப்படியே வச்சிருக்க முடியாது. என் கார்ல எடுத்துட்டு போகலாம் சார். முதல்ல வேற ட்ரெஸ் மாத்த சொல்லுங்க. இந்த ஈரத்துக்கு இன்னும் குளிர் அதிகமாகும்..” என விட்டால் அவனே துணியை மாற்றி விடுவான் போல பதட்டப்பட்டான்.

கார்த்தி சொல்வதும் சரியெனப்பட, “மனோ முதல்ல அபிக்கு வேற துணியை மாத்துங்க. இந்த தம்பியோட கார்லயே போயிடலாம்.” என்றவர், மற்ற அனைவரையும் அழைத்துக்கொண்டு வெளியில் சென்றார்.

மனோவும் அவள் அம்மாவும் அபியின் கால் கைகளை தேய்த்து சூடேற்றியதில் அவளது கைகால்கள் ஓர் நிலைக்கு வந்திருந்தது, ஆனால் மயக்கம் மட்டும் தெளியவில்லை.

“என்னம்மா இப்படியெல்லாம்..” என்ற மனோகரியின் அழுகுரலில் அவள் அம்மாவிற்கும் அழுகை வந்தது.

“இவளுக்காச்சும் ஒரு நல்லது பண்ணிட்டு போயிருக்கலாம் இந்த சந்திரா. எப்படியெல்லாம் கஷ்டபடுறா பாரு. முதல்ல முரளியை வந்து இவளை கையோட கூட்டிட்டு போக சொல்லு மனோ. இங்கே இருந்தா யாருக்காச்சும் வித்தாலும் வித்துடுவான் அந்தாளு..” என்றவரின் குரலில் அத்தனை ஆதங்கமும், கோபமும்.

“சரிம்மா இப்போ கூப்பிட்டா பயந்துக்குவாங்க. காலையில பேசுவோம். இப்போ அப்பாவை கூப்பிடுங்க..” என்ற மனோவின் பேச்சும் சரியெனப்பட, வெளியில் சென்று அவரை அழைக்க, அவருக்கு முன்னே உள்ளே வந்தான் கார்த்தி.

அவனின் பதட்டத்தையும், அலைப்புறுதலையும் யார் கவனித்தார்களோ இல்லையோ மனோவின் அம்மா கவனித்திருந்தார். அது உறுத்தவும் செய்தது. ஆனால் இப்போது கேட்க முடியாதே. அதனால் அமைதியாக வேடிக்கை பார்த்தார்.

இன்னும் சுயநினைவுக்கு வராதவளை அள்ளிக்கொண்டு வெளியில் வர அதற்குள் ஆம்புலன்சும் வந்திருந்தது. அதில் ஏற்றியவன் மருத்துவமனை பெயரைச் சொல்லிவிட்டு மனோவையும் அவன் தாயையும் ஏற்றிவிட்டான்.

ஆம்புலன்சுக்கு பின்னே காரை எடுத்தவன், மனோவின் தந்தையை தன்னோடு ஏற்றிக் கொண்டான்.

அப்போதும் “பார்த்தீங்களா அவளுக்கு ஒன்னுன்னா எப்படி துடிக்கிறான்னு. இவ வர சொல்லித்தான், அவன் வந்துருக்கான். கூட்டத்தை பார்த்ததும் ரெண்டு பேரும் நடிக்கிறாங்க..” எங்க் கதிரவன் அப்போதும் கார்த்தியைப் பார்த்து வனமமாக கூற, அதை கேட்ட கார்த்திக்கு ஆத்திரத்தில் உடல் விறைத்தது.

பக்கத்தில் இருந்த மனோவின் தந்தையிடம் “இந்தாளு கண்டிப்பா உயிரோட இருக்கனுமா அங்கிள். யோசிச்சு சொல்லுங்க..” என கோபத்தில் வார்த்தைகளைக் கடித்து துப்ப,

“அவன் இருந்தாலும் இல்லைன்னாலும் ஒன்னுதான் தம்பி. இந்த பொண்ணு வாழ்க்கையை என்ன செய்ய காத்திருக்கானோ.” என வருத்தமாக கூற,

“அப்போ அந்தாளை முடிச்சி விட்டுரலாமா அங்கிள், யோசிச்சு சொல்லுங்க..” என தீர்க்கமாக கேட்டான்.

கார்த்தியின் இந்த கோபத்தில், அவன் கூறிய வார்த்தையில் அவன் குரலில் இருந்த உறுதியில் இவன் நிஜமாகவே கேட்கிறான் என்று புரிய “என்ன.. என்ன தம்பி சொல்றீங்க..” என அதிர்ந்து போய் கேட்டார்.

அவருக்கு முகமெல்லாம் வியர்த்து போனது. அதிர்ச்சியில் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்போதும் அவன் முகத்தில் மாற்றமில்லை. அது இறுகிப் போயிருந்தது. சொன்னதை செய்வேன் என்பது போலிருந்த அவன் தோற்றம் அவருக்கு பீதியைக் கிளப்பியது உண்மை.

“அது அதெல்லாம் வேண்டாம் தம்பி. கொஞ்ச நாளைக்கு பொண்ணை காபந்து பண்ணிட்டா போதும். அவளோட அண்ணன் வந்ததும் கூட அனுப்பி விட்டுடலாம்..” என்றதும் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்த, அதிலேயே அவன் முழுக்கோபமும் அவருக்கு புரிந்தது.

அடுத்து அவர் வாய் திறக்கவில்லை. ஆனால் அமைதியான கார்த்தியோ கதிரவனுக்காக ஒரு திட்டத்தை மனதில் வகுத்துக் கொண்டதை அப்போது அவர் அறியவில்லை.

 

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
154
5
28
Hosur
Anda aaala enna Panna porane
Enna manuan Avan vazharathe waste karthi
Padama panni vidu