• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி 19

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 19

"கிளம்பு மா.. நான் பார்த்துக்குறேன்!" வாசு கூற,

"போகலைனா விடவா போறீங்க.. வைவா சாம்பிள் இல்லைனா நான் போக வேண்டியதே இல்லை!" என்றவளுக்கு கல்லூரி செல்ல விருப்பமே இல்லை.

காய்ச்சல் சுத்தமாய் இல்லை என்றாலும் வாசுவிற்கு இன்னும் ஓய்வு தேவை என்பதை போல முகம் அத்தனை சோர்வாய் இருந்தது.

கல்லூரி சென்று தான் ஆக வேண்டிய கட்டாயம்.. வேறு வழி இல்லாமல் கிளம்பியவள் மாத்திரை மருந்து தூக்கம் என அவனுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்க, அவனும் சலிக்காமல் கேட்டுக் கொண்டான் அவள் தவிப்பை அறிந்து.

"சாப்பிட்டாச்சு இல்ல.. ஒரு பத்து நிமிஷம் போனதும் மாத்திரை போட்டுட்டனும்.. நான் போய்ட்டு போன் பண்றேன்!" திக்ஷிதா கூற,

"திக்ஷி! அல்மோஸ்ட் நான் ஆல்ரைட்.. ஜஸ்ட் டையார்ட் தான்.. நான் பாத்துக்குறேன்.. நீ பிரிப்பர் பண்ணவே இல்லை.. கொஞ்சம் அதை கவனி.. அப்புறம் இன்னும் ஒரு வருஷத்துக்கு இழுத்து வைக்காதே! அப்புறம் உனக்கு தான் கஷ்டம்!" என்றவன் கிண்டல் பேச்சு புரிந்தாலும் அவள் மனநிலை இவன் உடல்நிலையில் இருக்க, இதை கண்டுகொள்ளவில்லை.

"சரி நான் மதியம் வந்துடுறேன்.. உங்களுக்கு இந்த பிவேர் இல்லைனா நானும் பிரிப்பர் பண்ணி இன்னைக்கு நல்லபடியா முடிச்சுட்டு ஈவ்னிங் ஊருக்கு கிளம்பி இருப்போம்.. எல்லாம் உங்களால தான்" என்று புலம்பிவிட்டு காரில் ஏறி செல்ல, அவளுக்கு வாழ்த்து சொல்லி அனுப்பி வைத்துவிட்டு அமர்ந்தான் வாசு.

மாத்திரையை கையில் எடுத்தவன் மனைவி கூறிய நேரம் ஆனதும் அதை போட்டுக் கொள்ள, சிவகாமியும் அழைத்துவிட்டார் சரியாய் அந்நேரம்.

"சொல்லுங்க ம்மா!"

"வாசு! இப்ப எப்படி இருக்கு டா.. நான் வேணா வரவா? நேத்தே வரணும்னு இருந்தேன்.. அம்மு தான் என்னை வேண்டாம்னு சொல்லிட்டா" கவலையாய் சிவகாமி கூற,

"இப்ப நான் ஓகே தான் ம்மா.. நானுமே வேண்டாம்னு தான் சொல்லி இருப்பேன்.. நாங்க தான் வர்றோம் இல்ல.. விஷ்வா என்ன பன்றான்?" என கேட்க,

"அவனுக்கு எக்ஸாம் இன்னைக்கு முடியுதாம்.. இல்லைனா அவனாச்சும்
நேத்து உன்னை பார்த்துக்க வந்திருப்பான்" என்று கூற,

"இட்ஸ் ஓகே ம்மா! நாங்க வர்றோம்.." என மீண்டும் ஒரு முறை ஒன்றும் இல்லை என கூறி வைத்துவிட்டான்.

அடுத்த கால் மணி நேரத்தில் திக்ஷிதா அழைத்துவிட்டாள்.

"இப்ப பிவேர் இருக்கா? இன்னும் ஒரு ரெண்டு மணி நேரம் தான்.. நான் வந்துடுறேன்!" என்றவளை நினைத்து சிரிப்பு வந்தாலும்,

"ஓய்! என்ன பண்ற திக்ஷி நீ? இங்க தான் பிரிப்பர் பண்ணல.. அங்க கிடைக்குற டைம்ல அதை பாரு.. நீ போகும் போது எப்படி இருந்தேனோ அப்படி தான் இருக்கேன்.. நல்லபடியா முடிச்சுட்டு வா" என்றவன்,

"இனி முடிச்சுட்டு தான் எனக்கு கால் பண்ணனும்!" என அதட்டலாய் கூற,

"ம்ம் சரி!" என கேட்டுக் கொண்டவள், அரைமணி நேரத்திற்கு ஒரு முறை என குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருக்க,

"இவளை!" என நினைத்தவனுக்கும் புன்னகை தான் வந்தது.

மதியம் முடிந்ததுமே துள்ளி குதித்து திக்ஷிதா ஓடிவர சமையல் வாசத்தில் சமையலறை நோக்கி செல்ல, வாசு தான் சமைத்துக் கொண்டிருந்தான்.

"நான் எல்லாம் செஞ்சு வச்சிருந்தேன் தானே?" சொல்லியபடியே அவனை பரிசோதிக்க கைவைக்க, அப்படியே கட்டி அணைத்தவன்,

"இப்ப தெரியுதா?" என்று கேட்க,

"நல்லாவே தெரியுது!" என்று தள்ளிவிட்டாள்.

"இப்ப என்ன பண்றீங்க நீங்க?" என்று கேட்க,

"டேஸ்ட் எதுவும் தெரியல திக்ஷி.. கஞ்சி சாப்பிட இஷ்டம் இல்ல.. அதான் லைட்டா ரசம் செஞ்சேன்.. வா வந்து கம்பெனி குடு" என அனைத்தையும் எடுத்து வைக்க, திக்ஷிதா இருவருக்குமாய் பரிமாறினாள்.

"காலேஜ்ல என்ன பண்ணின அதை சொல்லு!" வாசு கேட்க,

"அதெல்லாம் பண்ணியாச்சு.. பெர்பெக்ட் இல்ல.. பட் ஓகே தான்!" என்று முடித்துக் கொண்டாள்.

"என்னால தான் இல்ல?" என்று வாசு கேட்க,

"இல்லைனு சொல்லனுமா?" என்று திக்ஷிதா திருப்பி கேட்க,
வாசு அமைதி.

"அம்மா கால் பண்ணினாங்க திக்ஷி.. நாம வேணா இன்னைக்கே கிளம்புவோமா?" வாசு கேட்க,

"ஏன்? காய்ச்சல் போய்டுச்சுன்னு ரொம்ப கவலையா இருக்கோ? அலைச்சல் எப்படி ஒத்துக்கும்?" என முறைத்தாள் திக்ஷிதா.

"டிரைவர் வச்சுக்கலாம்.. நீயும் ரொம்ப ஆசைபட்டியே!" என்று கூற,

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நாளைக்கே போகலாம்.. ஆனா நீங்க டிரைவ் பண்ண வேண்டாம் டிரைவர் தான்.." என்றாள்.

"அதை இன்னைக்கே வச்சுக்கலாம்.. எனக்கு இப்ப ஓகே தான்.. இரு நான் சாமி அண்ணாகிட்ட பேசுறேன்!" என ட்ரைவரை அழைக்க போக, திக்ஷிதா யோசித்தாள்.

"வேணாம்ங்க! போன காய்ச்சலை இழுத்து வச்சுக்க கூடாது.. இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துக்கலாம்" என்று சொல்ல, வாசு கேட்பதாய் இல்லை.

"எல்லாமே அடம்.. அங்க போய் மட்டும் எதாவது ஆகட்டும் அப்ப இருக்கு உங்களுக்கு" என்று கூற,

"திக்ஷி இருக்கும் போது எனக்கென்ன ஆகும்..?"

"ம்ம்க்கும்ம்! எனக்கு தானே பக்கு பக்குன்னு இருக்கு.. உங்களுக்கு என்ன? இழுத்து மூடி தூங்கிடுவீங்க.." என்றவளை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்து அன்றே ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்துவிட்டான் வாசு.

"மாமி! என்னனு பையனை வளத்து வச்சிருக்கீங்க? சொல்ற பேச்சை கேட்கவே மாட்றார்.." என வாசு முன்பே வீட்டில் இரங்கவும் சிவகாமியிடம் திக்ஷிதா குதிக்க, சிவகாமி ஷாக் அடித்தது போல தான் நின்றார் மருமகளின் பேச்சினில்.

வாசு என்ன சொல்வானோ ஏன பயந்து பார்த்த சிவகாமி கணவரை திரும்பிப் பார்க்க அவருமே மகனை என்னவோ இன்று தான் பார்ப்பதை போல பார்த்து வைத்தார் அவன் புன்னகையில்.

சிவகாமி தான் இன்னும் அதிகமாய் விழி விரித்தார்.

"என்ன டி காய்ச்சல்னு தான சொன்ன? சிரிக்கிறான்.. பேய் எதுவும் புடிச்சிருக்குமோ?" என்று புதிதாய் மகனைப் பார்க்க, இருவரையுமே நின்று முறைத்துவிட்டு வீட்டின்னுள் சென்றான் வாசு.

"அது சரி! அம்மாவும் புள்ளையும் இருக்கீங்களே!" என்று திக்ஷிதாவும் உள்ளே செல்ல,

"எப்படி இருக்கு பா இப்ப?" என்று ரத்தினம் மகனிடம் கேட்க,

"நல்லாருக்கேன் ப்பா.. இப்ப ஒன்னும் ப்ரோப்லேம் இல்லை" என்றான் வாசு.

"மாமி! சுடுதண்ணி ரெடியா? வைக்க சொன்னேன் தானே? அவருக்கு குடுக்கணும்.. இல்லைனா அலர்ஜி ஆகிடும்.. நீங்க முதல்ல குளிச்சுட்டு வாங்க" என நிற்க விடாமல் அனைவரையும் திக்ஷிதா வேலை வாங்க,

"ம்மா! நாலு நாள் நீங்க தான் சமாளிக்கனும்" என்று கிண்டலாய் சிரித்துவிட்டு உள்ளே சென்றான் வாசு.

"அம்மு! என்ன டி பண்ணின இவனை? சிரிக்கிறான், கிண்டல் பன்றான்.. என்னவோ புதுசா இருக்கு.. பயமாவும் இருக்கு.. காய்ச்சல்ல புத்தி எதுவும்..." என்று சிவகாமி இழுக்க,

"மாமி! நக்கலா?" என்றாள் திக்ஷிதா முறைத்து.

"இருபத்து ஒன்பது வருஷம் வளத்த பையனை ஒரே நாள்ல வேற மாதிரி பாக்குற நிலைமை இருக்கே..." என்று மகிழ்ச்சியாய் இருந்தாலும் கவலை போல சிவகாமி கூற,

"எப்படி வேற மா..றி இருக்கா!" என்று இழுத்து குறுஞ்சிரிப்போடு கூறினாள் திக்ஷிதா.

"ரொம்ப சந்தோசப்பாட்டுக்காத! கோபம் வந்தா அத்துக்குட்டு போய்டும்!" என்ற மாமியாரை,

"காலங்காத்தல ஒரு நல்ல வார்த்தை சொல்லுங்களேன் மாமி!" என்றவளை,

"திக்ஷி!" என்று வாசு அழைக்க,

"அச்சோ! உங்ககிட்ட பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கேன் பாருங்க!" என்றவள்,

"தோ வர்றேன்ங்க!" என்று ஓட, ரத்தினம் சத்தமாய் சிரித்தார்.

"பார்த்திங்களா இவளுக்கு கொழுப்பை.. ஆனாலும் என்னங்க இப்படி மாறிட்டான்? நாலு நாள் முன்னாடி நான் பார்க்கும் போது கூட ரெண்டு பேரும் ஏதோ பக்கத்து பக்கத்து வீட்டுல சண்டைக்காரங்க மாதிரி மூஞ்சை வச்சுட்டு இருந்தாங்கங்க.. அதுக்காக தான் பூஜையே தயார் பண்ணினேன்!" என்று சிவகாமிக்கு ஆச்சர்யம் தான்.

"பூஜைக்கு பலன் கிடைச்சதா நினச்சு சாமிக்கு நன்றி சொல்லிடு சிவகாமி.. புள்ளைங்க சந்தோசமா இருக்கனும் அது தானே வேணும்?" ரத்தினம் கூற,

"சரியா சொன்னிங்க! முதல்ல இதுங்களுக்கு சுத்தி போடணும் இல்லைனா என்னோட கண்ணே பட்டுடும்!" என்றவர் சமையலறைக்குள் சென்றார்.

"உன் அலம்பல்க்கு அளவே இல்லாம போச்சு.. ஹீட்டர் போட்டா தண்ணி சுட்டுட போகுது.. கீழே அம்மாகிட்ட வேணும்னு தானே சீன் போட்ட?" வாசு திக்ஷிதாவிடம் கேட்க,

"ஆமா! அப்ப தானே அவங்க புள்ளையை எப்படி பத்தரமாத்து தங்கமா நான் பாத்துட்டு இருக்கேன்னு அவங்களுக்கு தெரியும்?"

"அதுக்கு இப்படி பாத்துக்குறதுல தான் தெரியணும்னு இல்ல.. கிட்ட வா சொல்றேன்!" என்ற வாசு கள்ளப் புன்னகை புரிய,

"புரிஞ்சிடுச்சு மிஸ்டர் வாசுதேவன்.. முதல்ல போய் குளிச்சுட்டு வாங்க.. அம்மா உங்களைப் பார்க்க வந்துட்டு இருக்காங்க!" என்றாள் அவளை தள்ளியபடி.

"டிப்ஸ் சொன்னா கேட்டுக்க மாட்டேன்ற!" என்று பேசி முடிக்கும் முன் வாயைப் பொத்தி தள்ளி இருந்தாள் குளியலறைக்குள்.

வந்தவர்களுக்கு உப்பு வரமிளகாயை வைத்து சுற்றி பின்பக்கமாய் சிவகாமி கொண்டு செல்ல,

"சரி ப்பா! கோவில்ல நாளைக்கு என்னென்ன தேவனு போய் கேட்டு வாங்கி குடுத்துட்டு வர்றேன்!" என ரத்தினம் கூற,

"நானும் வர்றேன் ப்பா.. போலாம்!" என்றான் வாசு.

"ஏன் உன் அம்மா திக்ஷிகிட்ட வாங்கினது போதாதா? நான் வேற வாங்கணுமா? முதல்ல போய் ரெஸ்ட் எடு.. நாளைக்கு பூஜைக்கு வந்தா போதும்!" என்று ரத்தினம் சிரித்தபடி கூற, அசடாய் சிரித்து வைத்தாள் திக்ஷிதா.

"மாமா! அது மாமிகிட்ட மட்டும் தான்.. உங்களுக்கெல்லாம் நான் நல்ல பொண்ணு தான்!" என்று கூற,

"திக்ஷி!" என்று செல்லமாய் முறைத்து வைத்தான் வாசு.

"கஷாயம் போட்டு வச்சிருக்கேன்.. அவனுக்கு எடுத்து குடுத்து குடிக்க வச்சுட்டு தூங்க சொல்லு.. அப்ப தான் அலுப்பு போகும்.. சூப்பு வச்சு குடுக்கணும்னா பூஜையை முடிச்சுட்டு தான் பண்ண முடியும்.. சரி முதல்ல இதை பார்ப்போம்!" என்றபடி சிவகாமி கடந்து செல்ல, திக்ஷிதாவும் கஷாயத்தை வாங்கி வந்தாள்.

திக்ஷியால் சிவகாமிக்கா இல்லை சிவகாமியால் திக்ஷிதாவிற்கா என சொல்ல முடியாமல் நேரம் அழகாய் கடந்தது.

அன்றைய நாள் வாசுவிற்கு ஓய்வாய் செல்ல, திக்ஷிதா அத்தையுடன் நன்றாய் பொழுதை ஓட்டினாள். மாலை உமாவும் கதிரும் வந்து வாசுவைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு அடுத்த நாள் பூஜைக்கு வந்துவிடுவதாய் கூறி சென்றனர்.

தொடரும்..
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,105
679
113
Ariyalur
வாசு தீக்ஷிதாசன் ஆகி ரெம்ப நாள் ஆச்சுன்னு சிவகாமி அண்ட் கோ க்கு தெரியலையே 😁😁😁😁😁😁😁😁😁