• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி - 19

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
நதி -19

கார்த்தியின் வீட்டில் அனைவரும் இரவு உணவிற்காக டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தனர்.

அனைவரும் அங்கு அமர்ந்திருக்க கார்த்திக்கும் பூமதியும் மட்டும் இன்னும் வரவில்லை.

அதை கவனித்த பார்வதி “வர வர இந்த வீட்ல என்ன நடக்குதுன்னு எனக்கு ஒன்னும் தெரியல, எல்லாரும் அவங்க இஷ்டத்துக்கு பண்ணிட்டு இருக்காங்க.” என தன் இரண்டு மருமகள்களையும் பார்த்து எரிச்சலாக பேசினார்.

“என்ன பாரு? என்ன ஆச்சு? ஏன் பசங்க சாப்பிடும்போது, கோபப்படுற உனக்கு என்ன ஆச்சு?” என சிவனேசன் மனைவியிடம் விசாரிக்க,

“இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை? என் ஆதங்கத்தையும் கோபத்தையும் கூட காட்டகூடாதா, அதுக்குகூட இந்த வீட்ல எனக்கு உரிமை இல்லையா.?” என மேலும் எரிச்சலாக பேச,

“என்னம்மா என்னம்மா” என் மகன்கள் இருவரும் ஒரு பக்கம் கேட்க,

“என்னாச்சு பாட்டி என்ன ஆச்சு பாட்டி” என பேரன்களும் ஒரு பக்கம் துடிக்க ஆரம்பித்தனர்.

“எனக்கு மனசே சரியில்லடா மகேஸ்வரா, இந்த மதி பொண்ணு ஒரு பக்கம் பிரச்சினையாகி வீட்டில் வந்து இருக்கா, அவளுக்கு அடுத்து என்ன செய்யலாம்னு யாரும் பேசின மாதிரியே தெரியல. பெத்தவளுங்களும் கொஞ்சம் கூட அக்கறையே இல்லாம எனக்கு என்னன்னு சுத்திகிட்டு இருக்காளுங்க, இதுல இந்த கார்த்தி பையன் வேற, நாலஞ்சு நாளா வீட்டுக்கு வரதே இல்ல. கேட்டா ஏதோ முக்கியமான வேலைன்னு சொல்லிட்டே இருக்கான். நீங்களும் அவன்கூடதான் இருக்கீங்க, ஆனா நீங்க மட்டும் எப்படி வீட்டுக்கு வந்துடுறீங்க, அவன் போக்கே சரியில்லை.. இவனும் புதுசா ஏதும் பிரச்சினையை இழுத்துட்டு வந்துடுவானோன்னு பயமா இருக்கு மகேஸா..” என பயமும் ஆதங்கமுமாக பேச,

“ம்மா நம்ம கார்த்தியை பத்தி உங்களுக்கே தெரியுமில்ல, அவன் அந்த மாதிரி பையனெல்லாம் இல்லம்மா. நீங்க கவலைப்படாம இருங்க. நான் அவனை கூப்பிட்டு விசாரிச்சு பார்க்கிறேன்.” என்று தாய்க்கு சமாதானம் சொன்னவர் தன் பெரிய மகனை யோசனையாக பார்த்தார்.

தந்தையின் பார்வை தன்னில் விழுவதை உணர்ந்த ருத்ரன், “ப்பா.. ஆபீஸ்க்கு நாலு நாளா வரலைன்னுதான் குமரன் சொன்னான், அவனுக்கு ரொம்ப வேண்டியவங்க யாரோ ஆக்சிடென்ட் ஆகி, ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிருக்காங்களாம். அதுல கொஞ்சம் டென்ஷனா சுத்திட்டு இருக்கான். சரியாகிவிடுவான் ப்பா. பாத்துக்கலாம்..” என தந்தைக்கு பதில் சொன்னவன்,

தன் தாத்தாவிடம் திரும்பி “தாத்தா, ஃபர்ஸ்ட் அவன் என்ன சொன்னாலும் ஏன் எதுக்குன்னு கேட்காம சரின்னு சொல்லாதீங்க. நீங்க கொடுக்கிற செல்லம்தான், அவன் யாரையும் மதிக்க மாட்டேங்கிறான்.” என்றதும்,

“அத சொல்லு ருத்ரா, எல்லாம் இவர் கொடுக்குற இடம்தான்” என்ற புவனனும் கூற, பார்வதியம்மா தன் கணவரை முறைத்தார்.

“ம்மா விடுங்க, அதுதான் பார்த்துக்கலாம்னு சொல்றேன்ல..” என இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே தளர்ந்த நடையுடன், மிகவும் சோர்வாக வீட்டிற்குள் வந்தான் கார்த்தி.

அவனைப் பார்த்ததும் தண்ணீரைக் கொண்டு போய் பார்கவி நீட்ட, “தேங்க்ஸ் அண்ணி.. தேவைப்பட்டுச்சு..” என்றவாறே வாங்கி அருந்த, அங்கிருந்த அனைவரின் பார்வையும் அவன் மீது தான் இருந்தது.

ஆனால் அவன் பார்வையோ அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, பூமதி இல்லாததை குறித்துக்கொண்டது.

“மதி எங்க அண்ணி?, அவளை ஏன் தனியா விடுறீங்க.?” என்று கோபமாக கேட்க,

“தனியா எல்லாம் விடல கார்த்தி, இவ்வளவு நேரம் அத்தைங்க ரெண்டு பேரும் அவ கூடத்தான் இருந்தாங்க, அவளை சாப்பிட வச்சுட்டு தான் ரெண்டு பேரும் கீழ வந்தாங்க” என்றதும்,

“ஏன் ரெண்டு பேரும் தனித்தனியா சாப்பிட மாட்டாங்களா? ஒருத்தர் எப்போதும் அவ கூட இருங்கன்னு சொல்லிருக்கேன்தானே, சொல்ற எதையுமே கேட்காதீங்க” என வெடுக்கென்று பேசியவன், விருவிருவென பூமதியின் அறைக்கு சென்றான்.

கார்த்தியின் பதட்டத்தை கவனித்த ருத்ரனும் புவனனும் அவனுக்கு பின்னாடியே சென்றனர்.

“இப்ப எதுக்கு இவன் இவ்ளோ கத்திட்டு போறான், அவ சாப்பிட்டு நல்லாத்தான் இருக்கா. இனி எந்த பிரச்சனையும் பண்ண மாட்டா.. அவளுக்கு எல்லாத்தையும் சொல்லி புரிய வச்சிருக்கேன். எல்லாம் இவனுக்குத்தான் தெரிஞ்ச மாதிரி பேசுறது. கொஞ்சம் கூட பெத்தவன்னு மரியாதையே இல்ல..” என அம்பிகா சூழ்நிலை புரியாமல் பேச,

“அத்தை காரணம் இல்லாமல் கார்த்தி கோபப்படமாட்டார், கொஞ்சம் பொறுங்க என்னனு விசாரிக்கலாம்.” என சாம்பவி பட்டென்று சொல்ல, அவளை அம்பிகாவும் பவானியும் முறைத்து பார்த்தனர்.

அதை கவனித்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், தன் கணவனுக்கு உணவை பரிமாற ஆரம்பித்தாள்.

இவர்கள் இங்கே வழக்காடி கொண்டிருக்க, “மாதவ் காரை எடு, குவிக் குவிக்..” என ருத்ரனின் கத்தலில் அனைவரும் வேகமாக திரும்பி மாடியை பார்த்தனர்.

மதியை தூக்கியபடி புவனன் வர, அவனுக்கு பின்னே வந்த கார்த்தியின் தலையிலும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது, தூக்கிக்கொண்டு வந்த புவனனின் கையிலும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

கார்த்தியை பிடித்தபடி ருத்ரன் வர, மதியை தூக்கிக்கொண்டு புவனன் வர, என்ன நடந்தது என தெரியாத கீழிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

“ஐயோ மதி.. மதிக்கு என்னாச்சு? என்ன ஆச்சு ருத்ரா..” என அம்பிகா பதறியப்படியே ஓடி வர, அதற்குள் மாதேஷ் காரை எடுக்க, இருவரையும் காருக்குள் ஏற்றி மருத்துவமனைக்கு பறந்தது கார்.

பெரியவர்கள் அனைவரும் அதிர்ந்து நிற்க, “கவிக்கா நீங்க இங்க எல்லாம் பாருங்க, நானும் பவியும் அங்க போயிட்டு என்னனு பார்த்துட்டு சொல்றோம். அதுக்குப் பிறகு மாமா ரெண்டு பேரும் வந்தா போதும்..” என்றவள் பதட்டமாக நின்றிருந்த தன் மாமியார்களை நோக்கி,

“அத்தை நீங்களும் வரிங்களா?” என்றதும்,

“அங்க முடியாம போறது என் பசங்க என்னையவே நீ வேண்டாம்னு சொல்லுவியா.?” என பவானி ஆரம்பிக்க,

“ம்ச்..” என்ற சலித்த அவள் வேகமாக தன் மாமானார்களை பார்க்க,

“இங்க என்ன நடந்துட்டு இருக்கு, நீ என்ன பண்ணிட்டு இருக்க, இப்பதான் உன்னோட மாமியார்தனத்தை காமிக்கணுமா.?” என ஜெகதீசன் மனைவியை அதட்ட,

“பவி நீ ஒரு கார்ல அத்தைகளை அழைச்சுக்கோ, பவித்ரா ஒரு கார்ல மாமாங்களை அழைச்சுக்கட்டும். நான் தாத்தாவையும் பாட்டியையும் பாத்துக்குறேன். சீக்கிரம் கிளம்புங்க அவங்க போய் ரொம்ப நேரம் ஆயிடுச்சு இன்னும் இங்கேயே நின்னு வாதாடிட்டு இருக்காதீங்க.” என பார்கவியும் சற்று எரிச்சலாக சொல்ல, சூழ்நிலையை உணர்ந்த இருவரும் கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியில் விரைந்தனர்.

“அப்பா பயப்படுற அளவுக்கு ஒன்னும் பெருசா இருக்காது, அதுதான் உடனே ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்டு போயாச்சே, நீங்க இதெல்லாம் யோசிச்சு டென்ஷன் ஆகாதீங்க சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டு ரெஸ்ட் எடுங்க நான் அங்க போயிட்டு, நிலவரம் என்னன்னு பார்கவிக்கு கூப்பிட்டு சொல்றேன்..” என்றவர் பெரியவர்களின் முகம் தெளியாமல் இருக்கவே, மருமகளிடம் கண்ணை காட்டி விட்டு வெளியில் சென்றுவிட்டார்.

பார்கவியும் இருவரையும் அதட்டி உருட்டி மிரட்டி, சாப்பிட வைத்தவள் கையோடு மாத்திரையும் கொடுத்து விழுங்க வைத்தாள்.

“என்ன நேரமோ தெரியலையே? ஏன் இப்படி வீட்டுல பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்துகிட்டு இருக்கோ, நானும் இந்த நாலு நாளா சொல்லிக்கிட்டுதான் இருக்கேன், யார் என் பேச்சை கேட்குறா?” என்ற பார்வதியின் புலம்பலை கேட்கத்தான் வருத்தமாக இருந்தது.

“பாட்டி.. எல்லாம் சரியாகிடும் பாட்டி. நீங்க அமைதியா இருங்க. பயப்படுற அளவுக்கு எதுவும் இருக்காது.” என பேசிப்பேசியே அவரை சமாதானம் செய்து உறங்க வைத்தவள், பூமதியின் அறைக்குள் சென்றாள்.

அறைக்கதவின் பிடி உடைந்து ஒருபக்கம் தொங்கிக் கொண்டிருக்க, அறை முழுவதும் கண்ணாடி துகள் சிதறிக் கிடக்க, மின்விசிறியில் ஒரு புடவை சுருக்கோடு காற்றில் ஆடிக்கொண்டிருந்தது.

அதைப் பார்த்ததுமே என்ன நடந்திருக்குமென பார்கவியால் உணர முடிந்தது.

கவனமாக உள்ளே வந்தவள், அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். அதே நேரம் மருத்துவமனையில் மூவருக்குமே முதலுதவி நடந்து கொண்டிருந்தது.

கார்த்தியின் முகம் மிகவும் இறுக்கமாக இருந்தது, அவன் அருகில் நிற்கவே அனைவருக்கும் பயமாக இருக்க, மாதேஷ்தான் “கார்த்தி என்னாச்சு..?” என கேட்க,

அவன் கையைத் தட்டிவிட்டவன் “இத்தனை பேர் வீட்டுல என்ன கிழிச்சிட்டு இருக்காங்க. அவளை தனியா விடாதீங்கன்னு அத்தனி தடவை சொல்லியும் கேட்காம..” என கத்தியவன்,

“உன் ப்ரண்ட் யாஷிக்கிட்ட பேசி இவளை அங்க அனுப்ப முடியுமா பாரு..” என்றதும்,

“டேய் நாம இத்தனை பேர் இருக்கும்போதே சாக போனவ, அங்க தனியா இருக்கும்போது என்ன என்ன யோசிப்பா.? அதெல்லாம் சரிவராது.” என்ற மாதேஷிடம்,

“அவன் சொல்றது சரிதான் மாது. நீ பேசிப்பாரு. அவங்க ரெண்டு பேருக்கும் செட்டாகும். கொஞ்சநாள் அங்க இருந்துட்டு வரட்டும். வந்ததும் கல்யாணம் செய்ற மாதிரி பார்த்துக்கலாம்.” என ருத்ரனும் சொல்ல, புவனனும் அதுவே சரியென்று சொல்ல, பெற்றவர்கள் அங்கு பார்வையாளர் ஆகிவிட்டார்கள்.

பூமதியின் அருகில் அமர்ந்திருந்த பவித்ராவும், சாம்பவியும் “ஏன் மதி இப்படியொரு முடிவுக்கு வந்த, நீ எப்பவுமே யோசிச்சு நிதானமா முடிவெடுக்க மாட்டியா.? உன்னோட அவசரத்தனம் நம்ம குடும்பத்தை எங்க கொண்டுவந்து நிறுத்திருக்கு பார்த்தியா.? ஒரே பொண்ணுனு உனக்கு செல்லம் கொடுத்து வளர்த்ததுக்கு நீ நல்லா செஞ்சிட்ட.” என கோபமாக பேச,

“நான் இருந்தா மட்டும் என்ன நடக்கும் அண்ணி.. இந்த குற்றவுணர்ச்சியிலேயே நான் செத்துடுவேன் போல, அதான் மொத்தமா செத்துடலாம்னு..” என்றவள் தேம்பி தேம்பி அழ,

அவள் முதுகை ஆதரவாக வருடிய பவித்ரா “உயிரை விடுறது எல்லாத்துக்கும் ஒரு சாதகமான முடிவா இருக்காது மதி. இது கோழைத்தனம். உன் பிரச்சினையை ஃபேஸ் பண்ண பயந்துட்டு இப்படியொரு முடிவு எடுத்திருக்க.. அது தப்பில்லையா.? உன்னை அப்படியா வளர்த்தாங்க..” என நிதானமாக கேட்க,

“எனக்கு யாரையும் பார்க்கவே முடியல அண்ணி, எல்லோரும் என்னை ஒதுக்கிட்டாங்க, யாருமே.. ஏன் அம்மாக்கூட எங்கிட்ட நல்லா பேசல, நான் ஏதோ உடம்பு சுகத்துக்கு..” என்ற வார்த்தையோடு குழுங்கி குழுங்கி அழ, அடுத்து என்ன சொல்ல வந்தாள் என இருவருக்கும் மட்டும் அல்ல, அப்போதுதான் அறைக்குள் வந்த கார்த்திக்கும், ருத்ரனுக்குமே புரிந்தது.

ருத்ரன் பெண்கள் இருவரையும் பார்க்க, அது புரிந்தது போல, அவர்கள் வெளியே செல்ல, மாதேஷும், புவனனும் உள்ளே வந்தனர்.

நால்வரும் தங்கையை சுற்றி நிற்க, பூமதியின் உடல் அவமானத்தில் கூசிப்போனது.

எப்படியான வாழ்க்கையை கெடுத்துக்கொண்டாள். அவளால் அவர்களை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை. தன் கைகளில் முகத்தைப் புதைத்து அழுதவளை நால்வருமே ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து அனைத்துக்கொண்டனர்.

அந்த நொடி வெடித்து அழுதாள் பெண்.. “ஸாரிண்ணா.. ஸாரிண்ணா..” என்ற வார்த்தைகளைத்தாண்டி வேறொன்றும் அவள் வாயிலிருந்து வரவில்லை.

தங்கையின் கண்ணீரில் அவர்களின் விழிகளும் நனைந்து தான் போனது.

“ஒன்னுமில்ல ஒன்னுமில்லடா.. இங்க பாரு… நீ செய்தது தப்பு. அதுக்காக எங்களுக்கு கோபமே வரக்கூடாதா.? ஹான் சொல்லு. கோபப்பட்டாத்தானே உன்மேல எங்களுக்கு உண்மையான பாசம் இருக்குன்னு அர்த்தம். அதை தப்புன்னு சொல்வியா.? ம்ம்” என ருத்ரன் மிகவும் பொறுமையாக எடுத்து சொல்ல,

“இல்லண்ணா… யாருமே பேசல.” என்றவள் மீண்டும் அழப்போக,

“அப்போ நீ செஞ்சதுக்கு உன்னை தூக்கி வச்சு கொஞ்சுவாங்களா.?” என மாதேஷ் கத்த,

“டேய்..” என அவனை அடக்கிய புவனன், “குட்டிம்மா.. இன்னொரு முறை நீ இப்படி செய்யக்கூடாது. அதுக்கான ஒரு பாடமா இதை எடுத்துக்கோ. இனி எங்கே போனாலும் யாருக்கிட்ட பழகினாலும் கவனமா இருந்துப்பதானே, இதெல்லாம் ஒரு அனுபவம்தானே.. ம்ம்.” என்றவன், இன்னும் தெளியாமலே இருப்பவளைப் பார்த்து பெருமூச்சு வந்தது.

“இன்னொரு தடவை இப்படி செய்யட்டும், நானே பாய்சன் வாங்கி வாயில ஊத்தி விடுறேன்.. எவ்ளோ திமிர் இருக்கனும்.. சாகுறதுக்கு எங்க இருந்து தைரியம் வந்தது..” என மாதேஷ் மேலும் கத்த,

“மாது… கொஞ்சம் அமைதியா இரு. இனி தப்பான முடிவு எடுக்க மாட்டா,” என்றவன் “எடுக்கமாட்ட தானே” என அவளிடமும் கேட்க, ‘இல்லை’ என வேகவேகமாக தலையை ஆட்டினாள் மதி.

அதைப்பார்த்து நால்வருக்கும் லேசாக சிரிப்பு கூட வந்தது. அவள் தலையை வருடியவன், ருத்ரனை பார்க்க, அந்த பார்வை எதற்காக என்று புரிந்தவன், சரியென்பது போல கண்ணை மூடித் திறக்க, அப்போது கார்த்தியின் மொபைல் அடிக்க ஆரம்பித்தது.

எடுத்துப்பார்க்க அதில் டாக்டரின் எண் இருக்க, “ஹலோ” என்றவன் அந்தப்பக்கம் என்ன சொன்னாரோ, “ஹான் இதோ நான் வந்துட்டு இருக்கேன், பத்து நிமிசத்துல அங்க இருப்பேன்.” என பதட்டமாக சொன்னவன், மற்றவர்களிடம் தலையை மட்டும் அசைத்துவிட்டு கிளம்பிவிட்டான்.

“என்ன ருத்.. இவன் முகமே சரியில்ல. எதும் பிரச்சினையா.?” என புவனன் கேட்க, புவனனும் அவனுக்கு தெரிந்த அனைத்தையும் சொல்லி, “அந்த பொண்ணோட அப்பாதான் பணத்தை எடுத்துருக்கார். அது கன்ஃபார்ம். அந்தாளையும் தூக்கிட்டான். ஆனா எதுக்கு அந்த பொண்ணை பிடிச்சி வச்சிருக்கான்னு தெரில. அவன்கிட்ட தான் கேட்கனும்..” என்றதும்,

“இவன் சொல்லிட்டாலும்..” என்றனர் கோரசாக.














 

gomathy

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 16, 2022
103
0
28
chennai
Intha mamiyar thollai thanga mudiyaa villai