• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி - 20

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
920
481
93
Tirupur
நதி - 20

அந்த மருத்துவமனையில் இருந்து எத்தனை வேகமாக வந்தானோ, மருத்துவர் அழைத்த பத்து நிமிடத்தில் இந்த மருத்துவமனையில் இருந்தான் கார்த்தி.

அவனின் பதட்டத்தை உள்வாங்கியபடியே, “கார்த்தி அபியோட பல்ஸ் ரேட் குறைஞ்சிட்டே போகுது. இப்படி தொடர்ந்து அவங்க மயக்கத்துல இருக்குறது சரியும் கிடையாது. இப்படியே இருந்தா அவங்க கோமாவுக்கு போறதை தடுக்க முடியாது.” என்று திட்டவட்டமாக சொல்ல,

“என்ன என்ன சொல்றீங்க டாக்டர். இப்போ என்ன செய்யலாம். வேற என்ன ட்ரீட்மென்ட் கொடுக்கலாம். வேற ஹாஸ்பிடல் ஷிஃப்ட் பண்ணலாமா.?” என பதட்டமாக கேட்க,

“கார்த்தி எங்க ஷிஃப்ட் பண்ணாலும், இதேதான் நடக்கும். முதல்ல அவங்களுக்கு வாழனும்னு ஆசை வரனும். அது அபிக்கிட்ட கொஞ்சமும் இல்லை. முதல்ல அதை வர வைக்க என்ன செய்யனுமோ செய்ங்க, இது மெடிசினால சாத்தியப்படல..” என்றவர் பின்,

“கார்த்தி அபி வீட்டுக்கு சொல்றது தான் சரி, உடனே அவங்க ரிலேடிவ்ஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க கார்த்தி, அபி இப்போ கிரிட்டிகள் ஸ்டேஜ்ல இருக்காங்க.” என்ற மருத்துவரின் வார்த்தைகள் அவன் காதை சென்று அடைந்ததா என்றுகூடத் தெரியவில்லை.

அவனின் அதிர்ந்த முகம் பார்த்தவர், தான் கூறிய செய்தியில் இருந்தே இன்னும் கார்த்தி வெளிவரவில்லை என்று புரிந்து கொண்டார்.

அவர் பார்த்த கார்த்தி அல்ல அவன். அடுத்து என்ன என்று யோசிக்கக்கூட மாட்டான். அவ்வளவு அறிவுக்கூர்மையுடன் இருப்பவன், இன்று மூளை செயலிழந்தது போல அமர்ந்திருப்பதை பார்க்க அவருக்கே வருத்தமாக போய்விட்டது.

அவன் சற்று தெளியட்டும் என அப்படியே விட்டுவிட்டு வெளியில் சென்றுவிட்டார் மருத்துவர்.

தனிமையில் தேற்றுவாரின்றி கண்கள் மூடி கிடந்தவளின் கையைப் பிடித்து, பைத்தியம் போல் எத்தனை நேரம் அமர்ந்திருந்தானோ, கதவு திறக்கும் ஓசையில்தான் நிதானத்திற்கு வந்தான்.

உள்ளே வந்த நர்ஸ், ஏறிக்கொண்டிருந்த சலைனிலேயே ஒரு இஞ்செக்ஷனை ஏற்றி, “நான் வெளிய இருக்கேன் சார், எமர்ஜென்சின்னா இந்த பெல்லை அமுக்குங்க..” என்று வெளியேறியவளுக்கும், எந்தப்பதிலும் சொல்லவில்லை அவன்.

தன் கைகளுக்குள் இருக்கும் தன்னவளின் கையை வருடியபடியே ஒரு பெருமூச்சை விட்டு தன்னை ஆசுவாசப்படுத்த முயன்றான்.

முடியவில்லை. ஆனாலும் முயன்றான். அவளிடம் பேசவேண்டும். தன்னை விளக்க வேண்டும். அவளை தனக்கே தனக்காக வாங்கிக்கொள்ள வேண்டும்.

இந்த எண்ணங்கள் அவனை துரிதப்படுத்த மீண்டும் ஒரு பெருமூச்சைவிட்டு, “அம்மு..” என்றான் உயிரிலிருந்து புறப்பட்ட குரலோடு.

அம்மு என்றதும் அவனின் மூளை கெக்கரித்தது அவனுக்கே புரிந்தது.

பார்க்கும் நேரமெல்லாம் கண்டதையும் பேசி அவளை விரட்டியடித்துவிட்டு இப்போது அம்மு என்றால், மூளை மட்டுமல்ல பாழாய்போன மனமும் கூட அவனைக் காரித்தான் துப்பும்.

துப்பினால் துப்பட்டும் என்பதுதான் அவன் மனநிலை. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல, அவன் நிலை ஆகிவிடக்கூடாதே, அந்த தவிப்பு அவனை ஒருநிலையில் இருக்கவிடவில்லை.

அதை நினைக்க நினைக்க பயத்தில் அவன் உடல் இறுகிப்போனது. தான் பிடித்திருந்த கையிலேயே முகத்தை புதைத்தவன் “அம்மு… சாரிடி.. உன்னை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன், அது எனக்கே தெரியுது. என்னோட வெறுப்பு வார்த்தைகளால் உன்னை சிதைச்சிட்டேன். தப்புத்தான்., நான் செஞ்சது தப்புத்தான். அது எனக்கே புரியுது. ஆனா அதுக்கு காரணம் இருக்கு. அதை உங்கிட்ட சொன்னாதான் புரியும். என்னை புரிஞ்சிக்கோ அம்மு. என்னை விட்டு போய்டாதடி..” என்றவனுக்கு உடல் குழுங்க ஆரம்பித்தது.

என்ன முயன்றும் அவனால் அழுகையை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

“இங்க பாரு அம்மு.. என்னைவிட்டு நீ எங்கேயும் போக முடியாது. உனக்கு நான் எப்படியோ தெரியாது. ஆனா எனக்கு நீதான் நீ மட்டும்தான். என்னைவிட்டு போகனும்னு நினைச்சா நானே உன்னை கொன்னுடுவேன்டி.. அப்புறம் நானும் உன்கூடவே வந்துடுவேன். போயிடாத அம்மு… ப்ளீஸ் வந்துடுடீ..” என்றவனுக்கு வேறு என்ன பேச வேண்டும் என்றும் தெரியவில்லை.

ஆனால் அவன் மனம் தாளமுடியாத வேதனையில் தத்தளித்தது. அவளை முதன்முதலாக பார்த்த நாள் இப்போதும் அவன் மனதை மயிலிறகாக வருடத்தான் செய்கிறது.

மனம் தானாக அவளைப் பார்த்த நாட்களையும், அவள் மீது அவனுக்கு உண்டான காதலையும் அசைபோட ஆரம்பித்தது.

மனம் தித்திப்பாய் பூக்க, வாய் அவனின் உண்மைகளை உளரிக் கொண்டிருந்தது.. அன்றொரு நாள் காதலர்தினம். பூமதியை பஸ்ஸ்டாப்பில் விடுவதற்காக வந்திருந்தான். கல்லூரி மாணவர்களின் கூட்டம் இளம் பெண்களை சுற்றி சுற்றி வந்திருந்தது.

அதைப் பார்த்ததும் கார்த்திக்கு கோபம் மூக்குக்கு மேல் வந்தது. அவர்களை போய் கேட்கலாம் என்று கிளம்ப போனவனை பூமதிதான் தடுத்து நிறுத்தினாள்.

“அண்ணா பசங்க ஜாலிக்காக பன்றது. எதுவும் சீரியஸ் கிடையாது. இப்படி வம்பு பன்றவங்கதான் எங்களை சேஃபா பார்த்துக்கவும் செய்வாங்க. நீங்க போய் அடிச்சு, அதனால காலேஜ்ல பிரச்சினை ஆகிடும்.” என்றவளை கார்த்தி முறைக்க,

“ப்ராமிஸ் அண்ணா.. உங்களுக்கு டவுட்டா இருந்தா நாளைக்கு வந்து பாருங்க. எவ்ளோ அமைதியா, எங்களை செகியூரா பார்த்துப்பாங்கன்னு.” என்றும் கூட கார்த்திக்கு நம்பிக்கை வர மறுத்தது.

தங்கையின் அருகிலேயே பஸ் வரும் வரை நின்றிருந்தான். அப்போது மஞ்சள் நிற சுடிதாரில், அவசரம் அவசரமாக ஒரு இளம்பெண் மூச்சிரைக்க ஓடிவர, அதைப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம், “ஏய் அங்க பாரு சமி, இந்த அபி இன்னைக்கு பார்த்து எல்லோ சுடி போட்டுட்டு வந்துருக்கா. ஏற்கனவே அவளுக்கு ஏகப்பட்ட ஜொல்லு பார்ட்டி ஃபேன்ஸ் இருக்காங்க. இதுல இவ வேற..” என சிரிக்க, கண்களை சுருக்கி அந்த பெண்ணை பார்த்தான் கார்த்தி.

இதுவரைக்கும் அவன் அறியாத ஒருவகை ரசாயன மாற்றம்.. அவள் மீது ஏதோ ஈர்ப்பு சட்டென தோன்றியது.. எங்கோ பார்த்த நினைவுகள் உள்ளுக்குள் பரபரத்தது.. ஜென்ம ஜென்மமாய் பழகிப்போனது போலொரு உணர்வுகள்.. அத்தனையும் சேர்ந்து அவனை மொத்தமாக சுழட்டி போட.. இனம்புரியாத அந்த படபடப்பில் ஒருவித அவஸ்தைக்கு உள்ளானான்..

இப்படியான உணர்வுகளை தனக்குள்ளே உணர்ந்தவன் சட்டென திடுக்கிட்டுப் போனான்.

அவள் யாரோ ஒரு பெண். பார்த்த சில நொடிகளில் தன்னுள் அசிங்கமாக என்ன ஒரு எண்ணத் தோன்றல்கள், இது சரி கிடையாது. சற்று முன் அந்த இளைஞர்களை அவன் பேசியது சரியென்றால், இப்போது அவன் செய்வது தவறுதானே. ச்சூ.. இனி இப்படியான எண்ணங்களை வளர்க்கக்கூடாது என முடிவெடுத்தவன், தன் வாட்சை பார்த்தான்.

பஸ் வரும் நேரம் நெருங்கிவிட்டது. உடனே தங்கையிடம் “மதி நான் கிளம்பறேன்.. நீ கவனமா போ..” என்று கூற, ஆனால் மதியின் பார்வையும், கவனமும் அவனிடமில்லை.

‘யாரை பார்க்கிறாள்?’ என யோசித்தபடியே தனக்கு பின்னே திரும்ப, ஒரு இளைஞன் கையில் கிரீட்டிங்க் கார்டும் ரோஸுமாக அந்த எல்லோ சுடிதாரை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

அதைப் பார்த்ததும் கார்த்தியின் முகத்தில் அத்தனை கோபமும் வெறுப்பும் அந்தப் பெண் மேல் வந்தது. அவளுக்கு என்ன நடந்தாலும் உனக்கென்ன, உனக்கு ஏன் இவ்ளோ கோபம் வருது’ என தனக்குத்தானே கேள்வி கேட்டபடியே, இறுகிப்போய் வண்டியில் அமரப்போனவனின் காதில், “நான் தான் சொன்னேன்ல இவ அதுக்கெல்லாம் செட்டாக மாட்டான்னு” என ஒருபெண் சிரித்துக்கொண்டே கூறுவது விழுந்தது.

சட்டென்று அவன் மனதில் சில்லென்ற மழை பெய்தது போலொரு வானிலை மாற்றம். வேகமாக அந்த எல்லோ சுடிதாரை பார்க்க, அவளோ “அண்ணா அண்ணா சாரிண்ணா. இன்னைக்கு என்னோட பர்த்டே, அம்மா தெரியாம எல்லோ கலர்ல ட்ரெஸ் எடுத்துட்டாங்க. நான்.. நான் அப்படியெல்லாம், இல்ல இல்ல இதெல்லாம் தப்புங்க அண்ணா..” என பயமும் பதட்டமும் எழ, தன்னைச்சுற்றி பார்த்துக்கொண்டே அழுகுரலில் பேச,

ப்ரபோஸ் செய்ய வந்த அந்த இளைஞன் அவள் தலையில் கையிலிருந்த ரோஸால் தட்டிவிட்டு சிரித்தபடியே போக, கார்த்தியின் முகத்திலும் சிறு புன்னகை உண்டானது.

‘எவ்ளோ பயம்’ என சிரித்துக்கொண்டே, அந்த புது உணர்வை உள்வாங்கினான்.

இத்தனை வருட அவன் முரட்டுத்தனமான கடுமையான காட்டு பயணத்தில்.. மென்மையயான பூக்களின் வருடல் போன்ற இந்த அழகான உணர்வுகளை தாள முடியவில்லை.. போதும் இதற்கு மேல் திரும்பி பார்க்காதே!!.. அவள் படிக்க வேண்டிய சிறுபெண்..

சட்டென மூளைக்குள் மின்னதிர்வு போல் ஒலித்த அசரீரியில் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.. உண்மை விளங்கியது..

இப்போது அவள் மீது தன் பார்வைப்படுவது தவறு.. தனக்குள் இளகியமனதை கட்டுப்படுத்திக் கொண்டு தன் வேலையில் கவனம் செலுத்தலானான்..

அதன்பிறகு அவளை அதிகம் பார்த்ததில்லை. ஆனால் அவளைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் உள்ளுக்குள் பூ பூப்பது நிச்சயம்.

அன்று குடிபோதையில் இருந்த கதிரவனோடு நடுரோட்டில் அவள் தனியாக நின்றிருக்கும் போது, அவ்வளவு ஆத்திரம் வந்தது.

ஆனால் ஏற்கனவே பயத்தில் இருப்பவளிடம் எதையும் பேசவேண்டாம் என்றுதான் அமைதியாக இருந்தான்.

அடுத்தநாள் அவனே அபியிடம் பேசவேண்டும் என்றுதான் நினைத்திருந்தான். அதற்காக கதிரவனைப்பற்றியும் விசாரித்திருந்தான்.

கதிரவனைப்பற்றி அவனுக்கு வந்த செய்திகள் ஒன்றும் அத்தனை நல்லதாக இல்லை. கதிரவனைப் போலவே அபியும் இருந்தால்? அதனால் அபியைப்பற்றி அதிகம் யோசிக்க வேண்டியிருந்தது.

ஆனால் அவனுக்கு யோசிக்கவே நேரம் கொடுக்காமல் அன்றே அந்த லாட்டரி சீட்டைக் கேட்டு அபி வந்து நிற்க, கார்த்தியால் அவளைப்பற்றி நல்ல முறையில் யோசிக்க முடியவில்லை.

அப்படித்தான் அன்றும் ஏதோ ஒரு பெண் தனக்காக காத்திருக்கிறாள் என்று நினைத்துதான் ஆஃபிசிற்கு சென்றான்.. ஆனால் சென்றவனுக்கு கண்முன்னே நின்றிருந்த அபியை கண்டு பேரதிர்ச்சி..

தன் மனம் கவர்ந்தவள்.. கனவினில் தினம் வந்து அவனை தூங்க விடாமல் இம்சிப்பவள்.. என்னை விட்டு போடி என்று நினைவுகளை விரட்டி அடித்தாலும் ஓடி வந்து அணைத்துக் கொண்டு தும்பை பூவாக சிரிப்பவள்..

தான் பார்த்து, தனக்குள் ஆசையையும் காதலையும் விதைத்த பெண் இப்படி பணத்திற்காக என்று வந்து நிற்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்த இடத்தில் யார் இருந்தாலும் சென்று இருப்பாளோ? என்ற கேள்விதான் அவனுக்குள் அபி விசயத்தில் மூர்க்கமாய் நடக்க காரணம்.

ஆனால் பொறுமையாக யோசித்து, அவளிடம் பேசலாம் என்று போக, அங்கு கதிரவன் மீண்டும் ஒரு பிரச்சினையை இழுத்து தன்னவளை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்க, தாள முடியவில்லை அவனால்.

அவனும் பதில் பேச, அதற்காக அபி தற்கொலை வரை போவாள் என்று அவனுமே நினைக்கவில்லை. அந்த நேரம், அவளை கிணற்றுக்குள் பார்த்த அந்த நேரம் தான் அவனுக்குள் இருந்த முழு காதலை அவனும் உணர்ந்த நேரம்.

எப்படி அந்த கிணற்றுக்குள் விழுந்தான், எப்படி அவளை மேலே கொண்டுவந்தான் எதுவும் அவனுக்கு தெரியாது. எப்படியாவது அவளை காப்பாற்றி விடவேண்டும் என்ற வெறிமட்டும்தான் அவனுக்குள் கொதித்து கொண்டு வந்தது.

காப்பாற்றியும் விட்டான். அந்த நொடி அவளை யாருக்கும் தராமல் தன்னிடமே பொத்தி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பேராசை எழுந்ததை அவனால் தடுக்க முடியவில்லை.

தடுக்கவும் முயற்சிக்கவில்லை. அபியைப்பற்றி எந்த பிரச்சினையும் இல்லை. அவன் வீட்டிலும் முதலில் முரண்டு பிடித்தாலும் பின் அவனின் பிடிவாதத்தில் ஏற்றுக் கொள்வார்கள்தான். ஆனால் அவனுக்குள் இருந்த சிறு நெருடல் கதிரவன் தான்.

அவனை எப்படி அபியின் வாழ்க்கையில் இருந்து தூர நிறுத்துவது? யோசிக்க ஆரம்பித்தான். அவனுக்கு விடையும் கிடைத்தது. ஆனால் அவன் மறந்தது மதியை. தன் தங்கையை. அவள் ஏற்கனவே கதிரவனிடம் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு அப்போது தெரியவில்லை.

 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
118
52
28
Tirupur
பூமதி எப்படி கதிரவன்கிட்ட மாட்டினா?
 

Vimala Ashokan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 9, 2021
303
119
43
Tanjur
இதென்ன இவன் இவ்ளோ பீல் ஆகிட்டு இருக்கான்
 

Samithraa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 16, 2022
131
71
28
Karur
இவன் அழறதை பார்க்கும் போது அப்படியே மனசு குழுகுழுன்னு இருக்கு..
இன்னும் நிறைய அழ வைக்கனும்
 

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
168
5
28
Hosur
Mathi epdi Anga sikkuna
Nice update