• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி - 26

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,136
643
113
Tirupur
நதி - 26

கார்த்தியும் புவனனும் அபியின் அறைக்கு வர, வெளியில் சற்று தள்ளி அங்கிருந்த சேரில் பார்கவி தனியாக அமர்ந்திருந்தாள்.

இவர்களைப் பார்த்ததும் எழுந்த பார்கவி “அபியோட அண்ணனும் அபி ஃப்ரண்டும் பேசிட்டு இருக்காங்க. அதுதான் நான் வெளிய வந்துட்டேன்..” என விளக்கம் கொடுக்க, ‘சரியென்று’ தலையசைத்த கார்த்தி முன்னால் செல்ல, அவனுக்கு பின்னே இருவரும் ஓடினார்கள்.

“மாமா அந்த பொண்ணு, அவ அண்ணன்கிட்ட எதாவது பேசிட்டு இருக்கும் போது இவன் ஏன் இடைஞ்சலா போறான். அவனை கொஞ்ச நேரம் பிடிச்சு வைக்கலாம்ல..” என கணவனின் காதைக் கடிக்க, அது சரியாக கார்த்தியின் காதிலும் விழுந்து தொலைத்தது.

அதில் வேகமாக திரும்பி இருவரையும் முறைத்தவன், அறைக்கதவில் அந்த கோபத்தைக்காட்டி திறந்து கொண்டு உள்ளே போக, அங்கே முரளியின் தோளில் சாய்ந்து அழுதபடி இருந்தாள் அபிராமி.

சென்டி மீட்டர் அளவு இருந்த கோபம், இப்போது மீட்டரையும் தாண்டி கிலோ மீட்டரில் வந்து நிற்க, அதை யார் மீது காட்டுவதென தெரியாமல் சுவற்றில் ஓங்கி குத்தி தணித்துக் கொண்டிருந்தான் கார்த்தி.

“ஏற்கனவே ரொம்ப பயத்துல இருக்கா அந்த பொண்ணு..? இவன் போய் இப்படி மான்ஸ்டர் மாதிரி நின்னா இன்னும் பயந்துக்கும்..” என அப்போதும் கணவணின் காதைக் கடிக்க,

“ஷ்ஷ் சும்மா இருடி.. சுவத்துல குத்துறதை நம்ம மூஞ்சில குத்திட போறான்..” என புவனன் மனைவியை எச்சரிக்கை செய்தபடியே, “கார்த்தி உள்ள போ..” என சத்தமாக குரல் கொடுத்து உள்ளே இருப்பவர்களை அலார்ட் செய்தான்.

புவனனின் சத்தத்தில் மனோகரி திரும்பி வாசலை பார்க்க, முரளியும் அவர்களைத்தான் பார்த்தான். ஆனால் பார்க்க வேண்டிய அபியோ அவனைத் திரும்பியும் பார்க்கவில்லை. அதில் கார்த்தியின் கோபம் தாறுமாறாக ஏற, வேகமாக உள்ளே வர பார்க்க, அவனை இழுத்துப் பிடித்தான் புவனன்.

‘விடு… விடு..’ என திமிறியவனை இழுத்து பிடித்த புவனன், “கொஞ்ச நேரம் சும்மா இருடா, நீ பண்ற சேட்டையில அந்த பொண்ணு அப்படியே அவங்க அண்ணன் கூட ஓடிட போறா.. என பல்லை கடித்துக் கூற, அப்போதும் தன் திமிறலை விடவில்லை கார்த்தி.

“கார்த்தி ரெண்டு பேரும் உன்னைத்தான் பார்க்குறாங்க, அமைதியா இரு.” என்ற பார்கவியின் அதட்டலில் அமைதியை முகத்தில் காட்டினாலும், உள்ளம் எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தது.

கார்த்தியின் செய்கையை கவனித்துக் கொண்டிருந்த மனோகரி, சூழ்நிலை புரிந்து “அண்ணா அபியை நாங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம். ஏற்கனவே ரொம்ப பயத்துல இருக்கா, இன்னும் இங்கேயே இருந்தா பயத்துல மறுபடியும் மயக்கமானாலும் ஆகிடுவா, இந்த ஆஸ்பிடல் சூழல் தாண்டி இருந்தா நல்லாருக்கும்.” என அவன் என்ன சொல்வானோ என்று பயத்திலே பேச,

புவனனும், பார்கவியும் மனோகரியைப் பார்த்து ‘தைரியம்தான்’ என்ற பார்வையைக் கொடுத்தாலும், கார்த்தி என்ன சொல்வானோ என்ற பயத்திலேயே அவர்களும் பார்க்க,

“ஹான் சரிமா.. நானும் அதைத்தான் நினைச்சேன். இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்னு சொன்னா கூப்பிட்டு போங்க.” என மிகவும் சாதாரணமாக சொன்னவனை ‘நிஜமாவா சொல்றான், இவன் அவ்ளோ நல்லவன் இல்லையே’ என மற்றவர்கள் சந்தேகமாக பார்க்க,

“ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு அபிக்கிட்ட கொஞ்சம் பேசனும்..” என கார்த்தி முடித்துவிட,

‘அதானே பார்த்தேன், இவனாவது இவளை அப்படியே விடுறதாவது’ என எரிச்சலாக பார்த்தனர் புவனனும், பார்கவியும்.

கார்த்தியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் மனோகரி, முரளியைப் பார்க்க, அவனோ “பேசுங்க..” என வேறொன்றும் சொல்லாமல் மனோகரியோடு வெளியே செல்ல,

“பாவம் மாமா அந்த பொண்ணு, என்ன சொல்லி மிரட்ட போறானோ தெரில, நாம இங்கேயே இருப்போம்.” என பார்கவி கணவனின் காதைக் கடிக்க,

“சும்மா இருந்து தொலைடி… அவன் காதுல விழப்போகுது..” என புவனனும் குசுகுசுக்க,

“இன்னும் இங்க என்ன பண்றீங்க.?” என இருவரையும் பார்த்து கார்த்தி கத்த, அதில் அபியின் உடல் பயத்தில் தூக்கிப்போட ஆரம்பிக்க,

“டேய் எதுக்கு கத்துற, அங்க பாரு அபி பயப்படுறா?” என்ற புவனனை கண்டுகொள்ளாமல் அபியைப் பார்த்து முறைத்தான் கார்த்தி.

“நாம சொன்னா உடனே கேட்டுடுவானா? வந்து தொலடி.” என மனைவியோடு வெளியில் சென்றவன், மறக்காமல் கதவையும் அடைத்துவிட்டு சென்றுவிட்டான் புவனன்.

அதில் அபிக்கு மேலும் பயம் வர, கால்கள் பின்னோக்கி நகர, அதைப் பார்த்த கார்த்தியின் உடலும், முகமும் ஏகத்துக்கும் இறுகிப் போக, “ஏய்..” எனக் கத்தியவனைப் பார்த்து சுவரோடு சுவராக பல்லியாக ஒட்டிக்கொண்டாள் அபிராமி.

“ஹேய்.. இப்போ எதுக்குடி ஓவர் ரியாக்ட் பணணிட்டு இருக்க, அப்படி என்ன பண்ணிட்டேன் உன்னை. இல்ல என்ன பண்ணிடுவேன்..” என கடுப்பாக கேட்டபடியே அருகில் வர,

“ஹான் நீங்க.. நீங்க.. நீங்க ஏன் இப்படி கத்திட்டே இருக்கீங்க. திட்டிக்கிட்டே இருக்கீங்க.. முரளி என்னைத் திட்டனதே இல்ல. அம்மாவும் தான். நீங்க பார்க்கும் போதெல்லாம் திட்டுறீங்க. மிரட்டுறீங்க..” என பேசிக்கொண்டிருக்கும் போதே ‘ஓவென’ சிறுபிள்ளைபோல் அழ ஆரம்பிக்க,

“அடச்சீ வாயை மூடு..” எனக் கத்தியவனைப் பார்த்து மேலும் அபி அழ, “ஹேய் இப்போ வாயை மூடுறியா என்னடி? இப்போ மட்டும் நீ வாயை மூடல, லிப் டூ லிப் கிஸ் பண்ணி நானே மூடுவேன்..” என்றதும், கப்பென தன் கைகள் கொண்டு வாயை மூடியவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்துக் கொண்டே போனது.

“என்ன செய்யமாட்டேன்னு மட்டும் நினைக்காத? கண்டிப்பா செய்வேன்.?” என முறைத்தபடியே கார்த்தி மிரட்ட மிரட்ட, அபியின் விழிகள் மேலும் மேலும் விரிந்து கொண்டே போனது பயத்தில்.

அதுவரை அவனை ஆட்டிப்படைத்த கோபம், பெண்னவளின் விழிகளில் தெரிந்த ஜாலத்தில் காற்றைப்போல காணமால் போயிருந்தது.

இரும்பை வைத்து அழுத்தியது போல் கனத்து கிடந்த இதயம் கூட இறகைப் போல் லேசாகி மெல்லிய சிரிப்பு கூட உண்டானது ஆடவனின் முகத்தில்.

“ஹேய் அம்மு.. என்னடி நீ..” என சிரித்தவன், அவளை வழுக்கட்டாயமாக இழுத்து வந்து கட்டிலில் அமரவைத்து தானும் அமர்ந்துகொண்டான்.

“நான் உங்கிட்ட பேசிட்டு மட்டும் போய்டலாம்னு நினைக்கிறேன். நீதான் என்னை இப்படியெல்லாம் செய்ய வைக்கிற..” என அபியின் இடையோடு கைவிட்டு தன்னருகில் இழுக்க,

“ஹான் இல்ல.. இல்ல இனி அழமாட்டேன். ப்ராமிஸ். இப்படியெல்லாம் வேண்டாம் ப்ளீஸ்..” என தன் இடையில் இருந்த அவனின் கையைக் காட்டி வேகமாக சொல்ல,

“ஓ..” என்றவனின் குரல் லேசாக மாற, அபியின் உடலும் மீண்டும் இறுக ஆரம்பிக்க, “ப்ச்” என சலித்தவன்,

“இங்க பாரு அபி.. எனக்கு ரொம்ப முக்கியமான வேலை இருக்கு, அதைவிட்டுட்டு உங்கிட்ட பேச வந்துருக்கேனா அது எவ்வளவு முக்கியம்னு யோசிச்சுக்கோ.. இப்படி எல்லாத்துக்கும் ரியாக்ட் பண்ணா, அப்புறம் எங்க வீட்டு ஆளுங்ககிட்ட இருந்து உன் அண்ணனை காப்பாத்துறது கஷ்டம்..” என பட்டென சொல்ல,

“முரளிக்கு என்ன பிரச்சினை.? அவன் என்ன பண்ணான்? அந்தாளுதானே எல்லாம் பண்ணார்.?” என பதட்டமாக கேட்க,

“ஹான் அதுக்காக அந்தாளுக்கா என் தங்கச்சியை கட்டி வைக்க முடியும். உன் அப்பனால என் தங்கச்சி வாழ்க்கை நாசமா போச்சு. அதுக்கு நீங்க ரெண்டு பேரும்தான் பொறுப்பு. இப்போ எங்க வீட்டுல எல்லாரும் உன் அண்ணனுக்கு மதியை முடிக்கலாம்னு பேசுறாங்க.” என்றான் கொஞ்சமும் அலட்டல் இல்லாமல்.

“என்ன என்ன சொல்றீங்க.? முரளியும் மனோவும் விரும்புறாங்க. அவங்க வாழ்க்கை என்னாகும்.? மனோ ரொம்ப பாவம். அவளுக்கு முரளின்னா உயிர். இது தெரிஞ்சாலே தாங்கிக்கமாட்டா.. இதுக்கு நீங்க நீங்க என்ன சொன்னீங்க?” என பரிதவிப்பாக கேட்க,

“ஹான் நான் என்னம்மா செய்ய முடியும்? இது பெரியவங்களோட முடிவு. என்னால என்ன செஞ்சிட முடியும்? ஏற்கனவே உங்க அப்பன் செஞ்சதை மறைச்சதுக்கே எங்கூட யாரும் வீட்டுல பேசுறது இல்ல. இப்போ இதுக்கும் எதிர்ப்பு சொன்னா, என்னை வீட்டை விட்டே அனுப்பிடுவாங்க..” என அதே அலட்டல் இல்லாத குரலில் பேச,

“உங்களுக்குத்தான் அவங்க லவ் பன்றது தெரியும்ல. நீங்களும் ஏன் அப்படி பேசுறீங்க… இதுல நீங்க ஒன்னுமே பண்ண முடியாதா.?” என கலக்கமாக கேட்டவளின் கைகள் இப்போது கார்த்தியின் கைகளை இறுக்கமாகப் பிடித்திருந்தது.

‘தன்னை தொட விடாதவள்’ இப்போது பயத்தில் கைகளைப் பிடித்திருப்பதைப் பார்த்து சிரிப்பு வந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் “எனக்கு ஒரு ஐடியா இருக்கு, பட் அது ஒர்கவுட் ஆகுமா தெரில? முதல்ல அதுக்கு நீ ஓக்கே சொல்லனும் பேபி. அடுத்துதான் அதை செய்ய முடியுமா, முடியாதான்னு யோசிக்கலாம்.” என அபியின் முகத்தைப் பார்த்தபடியே பேச,

“என்ன ஐடியா? எதுவா இருந்தாலும் எனக்கு ஓக்கேதான். இந்த ஐடியாவால முரளியும் மனோவும் சேர்ந்துடுவாங்க இல்ல..” என வேகமாக கேட்க,

“இப்படி அவசரப்பட்டு ஓக்கே சொல்லிட்டு பின்னாடி ஃபீல் பண்ணக்கூடாது பேபி. அப்புறம் இந்த கார்த்தியோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி வரும்.” என்றவனை கேள்வியாக பார்த்தாள் அபிராமி.

“ம்ம்ம் என்ன சைலன்ட் மோடுக்கு போய்ட்ட..” என புருவத்தை உயர்த்த,

“இல்ல நீங்க என்ன ப்ளான்னு சொல்லுங்க..” என மென்று விழுங்கினாள்.

“இதை நீ முன்னாடியே கேட்டுருக்கனும். இனி அதுக்கு வாய்ப்பில்ல. நீதான் எந்த ஐடியாவா இருந்தாலும் ஓக்கே சொல்லிட்ட இல்ல. இப்போ உனக்கு மனோவும் முரளியும் சேரனுமா வேண்டாமா?” என எரிச்சலாக கேட்க,

“ஆமா ஆமா சேரனும்..” என அபியும் வேகமாக தலையை ஆட்ட,

“ஓக்கே இனி நான் பார்த்துக்குறேன். அப்புறம் பேச்சு மாறக்கூடாது..” என்றவன், “உன் அப்பன் என்ன ஆனான்னு தெரிஞ்சிக்க வேண்டாமா.?” என்றான் இறுகிப் போனக்குரலில்.

அதைக் கேட்டதும் அபியின் உடல் இறுக, பிடித்திருந்த கைகளிலும் இறுக்கம் கூட, தலை வேகமாக ‘வேண்டாம்’ என்பது போல் ஆடியது.

அந்த உடலில் இருந்த நடுக்கமும் இறுக்கமும் கார்த்திக்கு வலிக்க, அடுத்து அவள் யோசித்து விலகும் முன்னே இழுத்து இறுக்கியவன் “அவன்.. அவன்… உன்னை தப்பா எங்கேயும்..” என கேட்கும் போதே அபியின் இறுகிய அனைப்பு ‘ஆம்’ என பதில் கொடுக்க, கார்த்தியின் உடல் கோபத்தில் விரைத்து நிமிர்ந்தது.

‘அவனை’ என பல்லைக் கடித்தவன், அபியின் அனைப்பைத் தனதாக்கிக் கொண்டான்.

“ஒன்னுமில்ல ஒன்னுமில்ல அம்மு.. அவனை நான் பார்த்துக்குறேன். இனி யார் வாழ்க்கையிலையும் அவன் இல்லை. சரியா? பயப்படக்கூடாது. தைரியமா இருக்கனும். இப்படி பயந்துட்டே இருந்தா எப்படி. இந்த கார்த்தியோட பொண்டாட்டி தைரியமா இருக்க வேண்டாமா.?” என சமாதானம் செய்வது போல் தன் திட்டத்தை சொல்லிவிட,

“ஹான்..” என அதிர்ச்சியில் விழித்தவளைப் பார்த்து “உன் அண்ணனும் மனோவும் சேரனுமா? வேண்டாமா?” என முறைக்க, ‘வேணும்’ என்பது போல் பரிதாபமாக அபி தலையை ஆட்ட,

“அப்போ இன்னும் ரெண்டு நாள்ல நம்ம கல்யாணம்..” என்றவனைப் பார்த்து மயங்கி விழாத குறையாகப் பாவமாக பார்த்தாள் அபிராமி.





 
Last edited: