நதி - 27
“என்னடா பேசிட்டு இருக்கான் இவன்? நான் என்ன சொல்லிட்டு வந்தேன்..” என புவனனைப் பார்த்து சிவநேசன் கத்திக் கொண்டிருக்க, அதை சற்றும் கண்டுகொள்ளாமல் தன் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான் கார்த்தி.
“தாத்தா இதுக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்ல.. வைபவ் வந்து என்கிட்ட கேட்டான், நான்தான் கார்த்தியை கூப்பிட்டு பேசினேன்.” என்று புவனன் சிவனேசனுக்கு பதில் கொடுக்க, ருத்ரேஷும் மாதேஷும் இவர்களை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
அவர்களுக்கு இன்னும் விஷயமே சொல்லப்படவில்லை.
“தாத்தா வைபவை பத்தி என்ன பிரச்சனை உங்களுக்கு. அவன்தான் மதிக்கு சரியான ஆளு. சும்மா உங்க பாட்டுக்கு எதையாவது பேசிட்டு இருக்காதீங்க..” என்றதும்,
“என்னடா எல்லாரும் பேசி வச்சிட்டு வந்து, என்னை சமாளிச்சிடலாம்னு நினைச்சீங்களா?” என நால்வரையும் பார்த்து கோபமாக கேட்க
“என்ன பேசி வெச்சோம்.? யார் பேசினது? இங்க என்ன நடக்குது.?” என குழப்பமாக ருத்ரேஷ் கேட்க
“அதானே இங்க என்ன நடக்குது?” என மாதேஷும் குழப்பமாக கேட்க ,
“டேய்..” என்ற சிவனேசன் பல்லை கடிக்க, அவர் சத்தத்தில் வீட்டின் மற்ற ஆட்களும் ஹாலுக்கு வர, அப்படியே அமைதியாகிவிட்டார் மனிதர்.
“என்ன புவன் எதுக்கு அப்பா டென்ஷனா கத்திக்கிட்டு இருக்கார்? என்ன நடந்தது.? கடைல எதுவும் பிரச்சினையா?” என மகேஸ்வரன் கேட்க
“ப்பா இது பிஸினஸ் பிரச்சினை இல்ல, நம்ம மதியைப்பத்தி” என்றவன், வைபவ் வந்து தன்னிடம் பேசிய அனைத்தையும் கூறிவிட்டு “தாத்தாக்கு அதுல இன்ட்ரஸ்ட் இல்ல போலப்பா, அதனால டென்சன்ல கத்திட்டு இருக்கார், இன்னும் என்னதான் வேணுமோ..” என கவனமாக முரளியை பத்தி சொல்லாமல் விட்டு விட்டான்.
மொபைலில் கவனமாக இருந்தாலும், இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருனத கார்த்திக்கு, புவனன் தாத்தாவை மாட்டிவிட்டதை நினைத்து சிரிப்பு வந்துவிட்டது.
அதேநேரம் கிச்சனுக்குள் வேலையாக இருந்தாலும் பார்கவியின் மனதிலும் சிரிப்புத்தான். ‘உருட்டு ராசா உருட்டு.. உன் வாய் உன் உருட்டு..’ என கணவனை மனதுக்குள்ளே கிண்டலடித்தபடி வேலை செய்து கொண்டிருந்தாள்.
“என்னப்பா என்ன பிரச்சனை வைபவ் நல்ல பையன் தான் நானும் பார்த்திருக்கேன். நம்ம அளவுக்கு வசதி இல்ல தான். ஆனா நல்ல குடும்பம். அவன் குடும்பத்தை பத்தி நல்லா தெரியும். எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. அதோட நம்ம மதியை பத்தி எல்லாம் தெரிஞ்சவனும் கூட. அவன் கூட இருந்தா மதியும் பழசை மறந்து நிம்மதியா இருப்பான்னு எனக்கு தோணுது..” என்ற மகனிடம் என்ன பேசுவது என தெரியாமல் திணறி போனார் சிவனேசன்.
அவர் பார்வை கார்த்தியைத் தொட்டு தொட்டு மீழ, அதை கவனித்த ருத்ரேஷ் “ஏன் தாத்தா இவன் எதாவது அந்த சம்மந்தம் வேண்டாம்னு சொல்லி, உங்களை ப்ரைன் வாஷ் பண்றானா.?” என நேரம் தெரியாமல் என்ட்ரி கொடுக்க,
“டேய்..” என வேகமாக எழுந்த கார்த்தி, “என்னை ஏன்டா இதுல இழுக்குற, அவர்தான் இனி மதி பிரச்சினையில நீ தலையிடாதன்னு சொல்லிட்டாரே. இனி அவரா பார்த்து எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு ஓக்கேதான்.” என சிவநேசன் பேசும் முன்னே பேசியவன், ‘ஷப்பா’ என யாரும் அறியாமல் மூச்சுவிட, விசயம் தெரிந்த புவனனுக்கும், பார்கவிக்கும் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. ஆனால் சிரிக்க முடியாதே! அமைதியாகவே நின்றிருந்தனர்.
சிவநேசனுக்கு எதையும் வெளிப்படையாக பேசமுடியாத நிலை. பேசினால் கதிரவனைப்பற்றி அனைத்தையும் கூற வேண்டும். அதோடு அந்த பெண் அபியைப்பற்றியும் பேசவேண்டும். இந்தப் பேச்சை எடுத்தால் கார்த்தியும் அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்வான் என்று புரிய, “எடுத்தோம் கவுத்தோம்னு எல்லாம் முடிவெடுக்க முடியாது. யோசிச்சு பண்ணுவோம்..” என எரிச்சலாக பேச,
“இன்னும் இதுல யோசிக்க என்ன இருக்கு.? பையனும் நல்ல பையன். குடும்பமும் நல்ல குடும்பம். வசதி இல்லைன்றது ஒரு பிரச்சினையா? எங்க போனாலும் உங்க புத்தி போகாதா?” என பார்வதி பேச ஆரம்பிக்க,
“பாட்டி அந்த பையனும் இங்க இருக்க போறது இல்ல. நம்ம மதியைக் கூப்பிட்டு ஜெர்மனிக்கு போய்டுவான். இங்க இருந்தா மதி நடந்ததை நினச்சு வருத்தப்பட்டுக்கிட்டே இருப்பா? அங்க போனா எல்லாத்தையும் மறந்து அவன்கூட இருப்பான்னு நினைக்கிறான். இதுவும் மதிக்காகத்தான் யோசிக்குறான். இதுக்கு மேல என்ன வேணுமோ இவருக்கு. அவன் தப்பானவன்னா நாங்க நாலு பேரும் சும்மா விட்டுடுவோமா..?” என கார்த்தி பேச,
“ஆயிரம் குறை சொல்ற உனக்கே பிடிச்சிருக்கு, உங்க தாத்தாவுக்கு என்னடா? அவர் அதெல்லாம் சம்மதிப்பார். நீ அந்த பையன்கிட்ட வீட்டுல பேசி வர சொல்லு..” என பார்வதி முடித்துவிட, பேரனை ஏகத்துக்கும் முறைத்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டார் சிவநேசன்.
‘அவன் ரூட் கிளியராகனும்னா எல்லாம் தான் பண்ணுவான்..’ என புவனன் வாய்க்குள் முனக, அது அருகில் இருந்த மாதேஷுக்கும் ருத்ரேஷுக்கும் அப்படியே கேட்க “அடப்பாவி” என்பது போல் பார்த்தனர்.
ஆண்கள் இருவரும் வெளியில் செல்ல, பவானியும் அம்பிகாவும் பூஜை அறைக்குள் நகர, ருத்ரேஷும் மாதேசும் புவனனை பிடித்துக்கொண்டனர்.
“ஹேய் ரெண்டு பேரும் சேர்ந்து என்ன பண்ணீங்க? தாத்தா இந்தளவுக்கு டென்சன் ஆகுற ஆளே இல்லையே.?” என இருவரும் மாறி மாறி கேள்வியை அடுக்க,
“டேய் என்னை ஏன்டா போட்டு படுத்துறீங்க. பனை மரத்துக்கு பாதி வளர்ந்துட்டு ஒன்னுமே செய்யாத மாதிரி இருக்கான் பாருங்க. அவனைப் போய் கேளுங்க..” என புவனனும் கடுப்படிக்க,
“இப்போ எதுக்கு கோபப்படுறீங்க? இப்போதான் பையன் பார்க்க லட்சனமா அழகா இருக்கான். அப்படியே இருக்கட்டும் விடுங்க..” என கார்த்தியை நெட்டி முறித்த பார்கவி நடந்த அனைத்தையும் ஓவர் பில்டப்போடு கூற, சாம்பவிக்கும் பவித்ராவிற்கும் அதிர்ச்சியில் நெஞ்சுவலியே வந்துவிட்டது.
“என்ன சொல்றீங்க பவிக்கா.. நிஜமாவே கார்த்தி த்தான் லவ் பன்றாரா? என்னால நம்பவே முடியல.. ஏங்க இங்க கொஞ்சம் வந்து என்னை கெட்டியா பிடிச்சிக்கோங்க.. எனக்கு மயக்கம் வர மாதிரி இருக்கு.” என சாம்பவி தன் கணவனைப் பார்த்து நெஞ்சைப் பிடித்துக்கொண்டு பேச, அத்தனை பேரும் பக்கென்று சிரித்து விட்டனர்.
“அண்ணி இப்போ இதை சொல்லியே ஆகனுமா?” என கோபமாக கேட்டாலும், கார்த்தியின் முகத்திலும் அத்தனை சிரிப்பு.
“ஹேய் பவிக்கா சீக்கிரம் ஒரு போட்டோ எடு. கார்த்தி அத்தான் வெக்கமெல்லாம் படுறார். இதெல்லாம் எப்பவோ ஒருதடவதான் நடக்கும். போட்டோ எடுத்து நம்ம சந்ததிகளுக்கு காட்டுவோம். அப்படியே வரலாற்றுலயும் பொறிச்சு வைப்போம்..” என பைரவியும் கூற, அந்த இடமே சிரிப்பில் நிறைந்தது.
அதே நேரம் தன் அறையில் இருந்து வெளியில் வந்த மதி இவர்களின் சிரிப்பைப் பார்த்து அப்படியே நின்றாள். அவர்களோடு இன்னும் சகஜமாக பேச முடியவில்லை அவளால். அதனால் அப்படியே நிற்க, அதை முதலில் கவனித்தது கார்த்திதான். தங்கையின் தனிமையும், அவள் வேதனையும் புரிய “ஏன் அம்மு அங்கேயே நின்னுட்ட, இங்க வா” என அழைக்க, தயக்கமாக அவர்களிடம் வந்து நின்றாள்.
“என்ன மதிம்மா? எதுவும் வேனுமா?” என பார்கவி கேட்க,
“இல்லையே அண்ணி சும்மாதான் வந்தேன்..” என தலையை நிமிர்த்தாமல் பேச,
“மதி இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்கியா.?” என பைரவி கேட்க, அமைதியாகவே நின்றாள் மதி.
“மதி… எங்களுக்கு உன்மேல் கோபமெல்லாம் இல்லடா. எவ்வளவு பெரிய பிரச்சினை அத எங்ககிட்ட மறைச்சிட்டியேன்னுதான்..” என சாம்பவியும் கூற,
“ம்ம்..” என்றாலும் அடுத்து பேசவில்லை. அதுவே சொன்னது, அவள் இன்னும் அந்த பிரச்சினையிலிருந்து வெளியில் வரவில்லை என்று.
“அம்மு..” என கார்த்தி வந்து அவள் தோளைப் பிடித்து நிமிர்த்த, அப்படியே அவன் மேல் சாய்ந்தவள் “ஸாரிண்ணா.. எனக்கு தெரியல.. நான் எப்படி அங்க போனேன்.. என்ன ஆனேன்.. எதுவுமே தெரியல.. நிர்மல் இப்படின்னு எனக்குத் தெரியவே இல்லண்னா, ஆனா உங்ககிட்ட சொல்லிருக்கனும். சொல்லாம விட்டது என் தப்புத்தான். ஆனா நான் தெரிஞ்சு எந்த தப்புமே செய்யலன்னா.. பேபி.. பேபி ஃபார்மாகிடுச்சுன்னு தெரிஞ்ச பிறகுதான்… நான் என்ன செய்யன்னு தெரியாம, ஸாரிண்ணா.. என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ்.. வைபவ் கூட சொன்னான், உங்க யார்கிட்டையாவது ஒருத்தர்க்கிட்ட மட்டுமாச்சும் சொல்லுன்னு சொன்னான். நான்தான் பயத்துல.. சாரிண்ணா.. ப்ளீஸ்..” என வெடித்து அழ, அங்கிருந்த அத்தனை பேர் கண்களிலுமே நீர் நிறைந்து போனது.
மற்ற மூவரும் வேகமாக வந்து மதியை சுற்றி அனைத்து “ஹேய் அம்மு… அது அதெல்லாம் ஒன்னுமில்லடா… நீ இதையெல்லாம் யோசிக்கவே யோசிக்காத. அது உன்னையும் அறியாம நடந்த ஒரு விபத்து. விபத்து நடந்தா அதையே நினைச்சிட்டு இருப்போமா சொல்லு. சீக்கிரம் உடம்பையும் மனசையும் சரி செஞ்சிட்டு அதுல இருந்து வெளிய வந்துடனும். நீ தப்பே செஞ்சிருந்தாலும் உன்னை விட்டுருக்க மாட்டோம். இனி எப்பவும் எந்த ஒரு விசயத்தையும் எங்ககிட்ட மறைக்காத..” என ருத்ரேஷ் கூற, மற்றவர்களும் “ம்ம் ஆமா அம்மு..” என அவளை சமாதானம் செய்தனர்.
அப்போது பூஜை முடிந்து தாய்மார் இருவரும் வெளியில் வந்தனர். வந்தவர்கள் இவர்களைப் பார்த்து புருவத்தை சுருக்க, “அம்மு இன்னைக்கு நாம அஞ்சு பேர் மட்டும் வெளிய போகலாம். நீ போய் ரெடியாகி வா..” என கார்த்தி பூமதியை அறைக்கு அனுப்ப, பவிஸ் அன் கோ மூவரும் நகர்ந்துவிட,
“இங்க பாரு கார்த்தி, அந்த பையனைப் பத்தி நல்லா விசாரிசிக்கோங்க. மதி நாளைக்கு அங்கே எந்த பிரச்சினையும் இல்லாம இருக்கனும். அவங்க அம்மா அப்பா எல்லாம் எப்படின்னு எனக்கு கேட்டு சொல்லு. வசதி வேற இல்லன்னு சொல்ற, அங்க போய் நம்ம மதி எப்படிடா இருப்பா.?” என அம்பிகா ஆரம்பிக்க,
“ஆமா எனக்கும் அதுதான் கவலையா இருக்கு..?” என பவானியும் கூற,
“ம்மா என்ன பேசிட்டு இருக்கீங்க. நம்ம அளவுக்கு வசதி இல்லைதான். ஆனாலும் வசதியானவங்கதான். நம்ம பொண்ணுக்கு மூனு நேரம் நல்ல சாப்பாடே போடுவாங்க..” என மாதேஷ் தன் மனைவியை மனதில் வைத்து பட்டென சொல்ல, அந்த பேச்சில் சாம்பவியின் நடை நிற்க,
“இப்போ என்னடா சொல்ற, உன் பொண்டாட்டிக்கு நான் நல்ல சாப்பாடு போடலன்னு சொல்றியா.?” என பவானி வம்புக்கு நிற்க,
“மாது ப்ளீஸ்.. இதெல்லாம் இனி எப்பவும் பேச வேண்டாம்..” என கணவனிடம் கூறிவிட்டு, சாம்பவி விறுவிறுவென தங்கள் அறைக்குள் சென்றுவிட, “ஃபைவ் மினிட்ஸ் நான் இப்போ வரேன்..” என மாதேஷும் மனைவியின் பின்னே சென்றுவிட்டான்.
“இப்போவே பொண்டாட்டி பின்னாடி வால்பிடிச்சு போறான். இவன்தான் நாளைக்கு எங்களை வச்சு பார்க்கப் போறான்..” என பவானி அப்போதும் விடாமல் பேச,
“உன் புருசன் எப்படி இருந்தானோ, அப்படித்தான உன் பையனும் இருப்பான்..” என்று திடீரென்று கேட்ட மாமியாரின் குரலில் அமைதியாகிவிட்டார் பவானி.

Last edited: