• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி - 28

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,136
643
113
Tirupur
நதி - 28

“பவி” என்ற கணவனின் குரல் அருகில் கேட்க,

“இதெல்லாம் எதுக்கு மாது? முடிஞ்சது முடிஞ்சது தானே! எனக்கு மறுபடியும் அதை கேட்க, நினைக்க வேண்டாம்” என்ற சாம்பவி குரலில் அத்தனை வருத்தம்.

“விடுமா! நான் தான் யோசிக்காம அதை பேசிட்டேன். இனி இந்த டாபிக்கே வராமல் பார்த்துக்கிறேன். ப்ளீஸ் பவி, நீ இப்படி அப்செட் ஆகாத.” என்ற மாதேஷை பார்த்து முயன்று சிரித்தாள் சாம்பவி.

“எனக்கு ஒன்னும் இல்ல, நான் நல்லாத்தான் இருக்கேன். நான் பழசை யோசிக்கிறதே இல்ல, அக்காவுங்க ரெண்டு பேரும் என்னை யோசிக்க விடுறதே இல்லை..” என சமாதானமாக பேச,

“என்னதான் நீ சாதாரணமா இருக்கிற மாதிரி இருந்தாலும், ஆனா அப்படி இல்லைன்னு மனசு கிடந்து தவிக்குதுடா. சாரி பவி! அம்மா அப்படி நடந்திருக்கக் கூடாது. அவங்க புத்தியை மாற்ற முடியாது. அவங்களா மாறினா தான் உண்டு. எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டாங்க, என்ன பண்றது!” என வருத்தமாக பேச,

“நான் நார்மலா தான் இருக்கேங்க. நீங்க இதையே நினைச்சு வருத்தப்படாதீங்க. எல்லாம் சரியாகிடும், நீங்கள் கிளம்புங்க. மதிக்கிட்ட பொறுமையா பேசுங்க. அவ கூட நாம எல்லாம் இருக்கோம்னு தைரியம் கொடுங்க. முடிஞ்சா வைபவ் கூட மதிக்கும் அங்கேயே ஸ்டடிஸ்க்கு அரேஞ்ச் பண்ற மாதிரி பாருங்க, அப்போதான் ரெண்டு பேரும் லைப்பை ஈஸியா ஹேண்டில் பண்ணி மூவ் பண்ணுவாங்க.” என சாம்பவி பேச்சை மாற்ற

“நானும் அதையே தான் யோசிச்சேன் பவி, எப்படியும் ரெண்டு பேரும் நார்மல் லைஃப் லீட் பண்ண நாள் எடுக்கும்.”

“அவனும் யுனிவர்சிட்டி போயிட்டா, இவ மட்டும் தனியா இருந்து எதையாவது யோசித்து கொண்டே இருப்பா. அப்படி விடக் கூடாது. அதனால ஒன்னு ஜாப் போல ரெடி பண்ணனும். இல்ல ஸ்டடீஸ் தான் பார்க்கணும். அவங்ககிட்ட சொல்றேன். எல்லாம் டிஸ்கஸ் பண்ணி முடிவு பண்ணுவோம்.” என்றவன் “நீ தனியா இருக்க வேண்டாம், அண்ணிங்க கூட போய் இரு. நாங்க போயிட்டு வந்துடறோம்.” என சொல்லிக்கொண்டு மாதேஷ் கிளம்ப, சாம்பவியின் எண்ண அடுக்கில் அந்த நாள் வந்து போனது.

அவள் வாழ்க்கையில் மறக்கவே முடியாத அந்த நாள்!

சாம்பவியின் குடும்பமும் மிகவும் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் தான். சாம்பவி அவர்களுக்கு ஒரே பெண். சாம்பவியின் தந்தை மிளகு, ஏலக்காய் தேயிலை ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து கொண்டிருந்தார். தொழில் மூலமாக தான் சிவநேசனுக்கு பழக்கம்.

அப்போது தந்தைக்கு வேலையில் உதவியாக, அங்கு இருந்த சாம்பவியை அடிக்கடி பார்த்த சிவநேசனுக்கு, தன்னுடைய வணிக மூளை வேலை செய்ய, ஒன்றும் ஒன்றும் மூன்று என கணக்கிட்டு மாதேஷிற்கு சாம்பவியை பெண் கேட்டார்.

அப்போது சாம்பவியின் வீட்டில் பங்காளிகளுக்குள் சொத்து பிரச்சனை ஓடிக் கொண்டிருக்க, இப்போது மகளுக்கு திருமணம் செய்யும் எண்ணத்தில் இல்லை என்று பெண் வீட்டார் நேராக கூறி விட, சிவனேசன் விடவே இல்லை.

எப்படியும் வழக்கில் தீர்ப்பு இவர்கள் பக்கம் தான் முடிவாகும் என்ற நம்பிக்கையில், பெண் வீட்டாரிடம் பேசிப் பேசியே சம்மதிக்க வைத்து திருமணத்தை சாம்பவிக்கும் மாதேஷிற்கும் முடித்து வைத்தார் சிவநேசன்.

சாம்பவிக்கும் எந்த குறையும் வைக்காமல் தான் திருமணத்தை முடித்தனர் அவளின் பெற்றோர். எல்லாம் நன்றாகவே போனது. மூன்று மாதங்கள் கழித்து திடீரென சாம்பவியின் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வர, என்ன ஏதென்று யோசிக்கும் போதே அனைத்தும் முடித்திருந்தது.

மாதேஷ் தான் அவர்களுக்கு அனைத்தும் செய்தது. காரியம் முடிந்த மூன்றாவது நாள்தான் பிரச்சினையின் முழு உருவமே தெரிந்தது.

சொத்து மொத்தமும் பங்காளிகளுக்கு போய்விட, இருக்கிற வீடும் கூட அவர்கள் வசம்தான் என்று கோர்ட் தீர்ப்பாகிவிட, என்ன செய்வது? என்று எதுவும் தெரியாமல் தான் விரக்தியின் உச்சத்தில் தற்கொலை செய்துகொண்டதாக கூற, முற்றிலும் உடைந்து போனாள் சாம்பவி.

அன்றிலிருந்து சாம்பவியின் மீதான சிவநேசனின் பார்வையும், மாமியார் இருவரின் பார்வையும் வேறுவிதமாக மாறிப்போனது.

அதை உணர்ந்த பார்வதி கூட தன் மருமகள்களை கண்டித்திருக்கிறார். “பெத்தவங்கள ஒரே நாள்ல தூக்கிக் கொடுத்துட்டு வந்துருக்கா? அவளை ஏன் இந்த பாடு படுத்துறீங்க.?” என பேச, அந்த நேரம் அமைதியாக இருந்தாலும், அவர் அகன்றதும் மீண்டும் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

அன்று மதிய நேரம் உணவு வேளையின் ஆண்கள் அனைவரும் சாப்பிட்டு, பெண்கள் சாப்பிட அமர்ந்த நேரம், சிவநேசனைத் தேடி இரண்டு ஆண்கள் வந்திருந்தனர்.

வந்தவர்களைப் பார்த்தாலே நல்லவிதமாக தெரியவில்லை. ஹாலில் மூவருக்கும் மிகவும் காரசாரமான விவாதம் போய் கொண்டிருக்க, பார்கவி தான் முதலில் சென்று பார்த்தது.

பார்த்ததுமில்லாமல் உடனே கணவனையும் அழைத்துவிட்டாள். கார்த்தியும் மாதேஷும் அப்போது தொழில் விசயமாக மூணார் சென்றிருக்க, ருத்ரனும் புவனனும் கீழே வந்திருந்தனர்.

“என்ன தாத்தா? யார் இவங்க.? என்ன பிரச்சினை?” என புவனன் கேட்க,

“ம்ம் பணம் வேணுமாம்? அதை வாங்கிட்டு போக வந்துருக்காங்க.?” என்றவரின் நக்கலில், இனி அவரிடம் கேட்பது பிரயோஜனமில்லை என்று புரிந்து வந்தவர்களிடம் விசாரிக்க, அதேநேரம் பெண்களும் ஹாலுக்கு வந்துவிட்டனர்.

அந்த ஆண்களில் ஒருவர் அப்போது வந்த சாம்பவியைப் பார்த்து, “நல்லா இருக்கியா பாப்பா?” என விசாரித்துவிட்டு, “அப்பா எங்கிட்ட பத்து லட்சம் பணம் வாங்கினார் பாப்பா, அதை இப்போ யாருக்கிட்ட கேட்கன்னு தெரியல. என் குடும்ப சூழல் உனக்கும் தெரியுமில்ல.” என மென்று விழுங்க,

“எனக்குத் தெரியும் அண்ணா.. கொஞ்சம் டைம் கொடுங்க, அவர் வெளிய போயிருக்கார். வந்ததும் கேட்டு சொல்றேன்..” என அவளும் வலித்த இதயத்தை மறைத்து நல்லவிதமாகவே கூற,

“என்ன உன் புருசன் கொடுப்பானா? என்ன வச்சிருக்கான் உன் புருசன்..? அவன்கிட்ட என்ன இருக்கு?” என சிவநேசன் பட்டென பேச,

“தாத்தா.. என்ன பேசுறீங்க.?” என ருத்ரன் அடக்க,

“அவர் கொடுப்பாருன்னு சொல்லல தாத்தா, அவர் வரவும் கேட்டு சொல்றேன்னுதான் சொன்னேன்..” என சிவநேசனின் கோபத்தில் சாம்பவி அரண்டு போய் பதில் சொல்ல,

“அதை மட்டும் அவனே எப்படி முடிவு பண்ணுவான். வீட்டுல பெரியவங்க எதுக்கு இருக்காங்க? அவங்ககிட்ட பேசிட்டு சொல்றேன்னுதான சொல்லிருக்கனும்..” என அப்போதும் பேச,

“தாத்தா போதும்.. அந்த பொண்ணே பயத்துல இருக்கு.. நீங்களும் ஏன் இவ்ளோ கோபப்படுறீங்க.. பொறுமையா பேசலாம். அமைதியா இருங்க..” என்ற புவனன், ருத்ரனைப் பார்க்க, அவனோ வந்தவர்களிடம் “மாது வந்ததும் பேசிட்டு சொல்றோம். நீங்க இனி ஆஃபிஸ்ல வந்து பாருங்க. வீட்டுக்கு எல்லாம் வேண்டாம். தொழில் எல்லாம் நாங்க வீட்டுக்கு கொண்டு வர்ரது இல்ல..” என பேசிக் கொண்டிருக்க,

“புரியுது தம்பி… நானும் பணத்தை பத்தி கேட்க வரல. பாப்பாவை பார்க்கத்தான் வந்தோம். ஐயாதான்..” என சிவநேசனைப் பார்த்து வருத்தமாக புன்னகைத்துவிட்டு, சாம்பவியிடம் “வரேன் பாப்பா” என கிளம்பிவிட்டனர்.

அவர்கள் கிளம்பும் வரை அமைதியாக இருந்த ருத்ரன், “என்ன பேசுறீங்க தாத்தா? இப்படித்தான் பேசி உங்க மரியாதையை குறைச்சிப்பீங்களா? மாது நம்ம தொழில் பார்க்குறான். அவனோட பங்கு அவன் என்னமும் செய்வான், அதை செய்யாதன்னு சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல. தொழில்ல நீங்க என்ன வேனும்னாலும் சொல்லலாம். அவங்க தனிப்பட்ட விசயத்துல எதுவும் பேசாதீங்க. இப்போ நீங்க பேசினது மாதுவுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பான். இல்ல பவிதான் நம்ம மாதுவை என்ன நினைப்பா.” என கடிந்து கொண்டிருக்க,

“இவ என்ன என் பையனைப் பத்தி நினைக்கிறது. பொண்ணு பேசும் போதே ஆயிரம் தடவை யோசிச்சு செய்ங்க மாமானு சொன்னேன் கேட்கல. இப்போ கடன்காரன் குடும்பத்துல பொண்ணு எடுத்ததும் இல்லாம, வீடு வரைக்கும் கடன்காரனும் வந்துட்டு போறான். இனி என்ன என்ன நடக்குமோ..” என இத்தனை நாள் கோபத்தை பவானி வெளிப்படுத்த,

“ஆமா இப்போ நம்ம பையனுக்குத்தான் கஷ்டம். அவன் பொழப்ப பார்ப்பானா? இல்ல இவ அப்பன் வாங்கி வச்ச கடனை கட்டுவானா?” என அம்பிகாவும் பேச, சாம்பவியால் அந்த இடத்தில் நிற்கவே முடியவில்லை.

“அம்மா என்ன பேச்சு இதெல்லாம்?” என புவனன் சத்தம் போட

“எல்லாம் உன் தாத்தா கொடுக்கிற இடம்தான். இவளுங்க எல்லாம் கோடீஸ்வரி வீட்டுக்கு பொண்ணுங்க இல்ல இப்படித்தான் பேசுவாங்க.” என பார்வதி பேசிக் கொண்டிருக்கும் போது சாம்பவி யாரையும் பார்க்காமல் கிச்சனுக்குள் நுழைந்து விட்டாள்.

அது பவானியை மேலும் தூண்டி விட்டது போல் ஆகிவிட்டது. “யாரோ யாரையோ பேசுற மாதிரி போறா பாரு. இவளுக்கெல்லாம் சூடு சொரணை இருக்காதா? இப்ப சாப்பாடு ஒன்னு தான் கேடு, நல்லா கொட்டிக்கோ” என ஆத்திரத்தில் அறிவிழந்து பேச,

“அத்தை.. அம்மா.. சித்தி..” என்ற அனைவரின் சத்தத்தில் கூட அவர் அடங்கவில்லை.

“எதுக்கு என்னை அடக்குறீங்க? உண்மைய சொன்னா எதுக்கு கோபப்படுறீங்க?” என அப்போதும் விடாமல் பேச, கிச்சனில் டம்மென்று கீழே விழும் சத்தத்தில் அனைவரும் அங்கே ஓடினர்.

கத்தியால் தன் கையை அடுத்தடுத்து கீறிவிட்டு அதில் வெளியான ரத்தத்தை பார்த்து அப்படியே மயங்கி கீழே விழுந்து இருந்தாள் சாம்பவி.

“ஐயோ பவி..” என்ற பார்கவியின் சத்தத்தில் தான் அவள் கையில் வழிந்த ரத்தத்தை அனைவரும் பார்த்தனர்.

“தூக்குங்க தூக்குங்க.. பைரவி அந்த துணியை தண்ணில நனைச்சுட்டு வா, ரத்தம் நிறைய போகுது பாரு. சீக்கிரம் வா.” என்ற பார்கவி அடுத்தடுத்து முதலுதவி செய்ய,

ருத்ரன் அவளை தூக்கிக் கொண்டு காரில் கிடத்த, பார்கவியும் பைரவியுவும் காரில் ஏறிக்கொள்ள, வேகமாக காரை எடுத்தான் புவனன்.

புயலடித்து ஓய்ந்தது போல் இருந்தது வீடு. இப்படி நடக்கும் என சிவநேசனே நினைக்கவில்லை. இதுவரை அவர் எடுத்த எந்த முடிவும் தவறாக போனதில்லை. சாம்பவி விஷயத்தில் அது தவறாகப் போக, தொழிலில் அனைவரும் அவரை கேலியாக பார்ப்பது போல் உணர்ந்தவர், அந்த கோபத்தை எப்படி காட்டுவது என தெரியாமல் இன்று கொட்டி விட்டார்.

“வயசு ஏற ஏற புத்தி குறையும்ணு சரியாதான் சொல்லி இருக்காங்க. என்ன செஞ்சு வச்சிருக்கீங்க, ஒரே நாள்ல பெத்தவங்களை இழந்து நிற்கிற பிள்ளையை, நல்லா பாத்துக்கலனாலும் பரவாயில்லை. நிம்மதியாவது இருக்க விடலாம்ல. என்ன பணம் பணம்னு அலையறீங்க. நாளைக்கு அதைத்தான் தூக்கிட்டு போவீங்களா?” என பார்வதி கணவரை கண்டபடி பேசிவிட்டு, அதிர்ந்து நின்ற இரண்டு மருமகளிடமும் எதுவும் பேசாமல் மகனுக்கு அழைத்து வீட்டில் நடந்த அனைத்தையும் கூறி,

“அந்த பொண்ணு வக்கீல் வேற, போலீஸ் கேஸ்னு போகாம இருக்க மாட்டா. எல்லாரும் ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க.” என கத்திவிட்டு, பார்கவிக்கு அழைத்து எந்த மருத்துவமனை என கேட்டு கிளம்பி விட்டார்.

மனைவியின் பேச்சில் சிவனேசன் இடிந்து போய் அமர்ந்திருக்க, மருமகள்கள் இருவரும் அரண்டுதான் போயிருந்தனர்.

“ஏன் பவானி அவசரப்பட்ட, அதான் மாமா பேசிட்டு இருந்தார் இல்ல.” என வழக்கம்போல அம்பிகா பவானியிடம் தன் தப்பையும் சேர்த்து தள்ளிவிட்டு நகர்ந்து விட்டார்.





 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
399
199
43
Tirupur
இந்த அம்பிகா என்னைக்கு வசமா மாட்டப் போகுதோ? யாரு நல்லா வெச்சு செய்யப் போறாங்களோ?