அத்தியாயம் 4
"அம்மா அப்பாவை விட்டுட்டு வர எவ்வளவு கஷ்டமா இருக்கும்.. அழுதுட்டு இருக்கேன்.. உங்க மகன் பக்கத்துல நின்னு பார்த்துட்டு இருக்கார்.. அழாத நான் இருக்கேன்லனு ஒரு வார்த்தை சொன்னா முத்து உதிர்ந்திடுமாமா உங்க புள்ளைக்கு?"
இரவு ஒன்பது மணிக்கு டைனிங் டேபிளில் கை ஊன்றி கன்னத்தில் கைவைத்து சிவகாமி அமர்ந்திருக்க, அவரை இன்னும் விடவில்லை திக்ஷிதா.
"அண்ணி இன்னும் அம்மாவை விடலையா நீங்க?" என்று விஷ்வா வர,
"அதெப்படி விடறது? அவங்க பையனை பத்தி அவங்களுக்கு தெரிய வேண்டாம்?" என்றாள்.
"என்ன தெரியணும்?" என வாசுவே அருகில் வர, பே என விழிக்க வேண்டிய நிலை.
"சொல்லுங்க அண்ணி! அதான் அண்ணா கேட்குறாரு இல்ல?" என்று விஷ்வா வேறு சீண்டி விட,
"நீ தனியா மாட்டு டா.. உனக்கு இருக்கு!" என நினைத்துக் கொண்டவள் வாயை மட்டும் திறந்திடவில்லை.
"இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க மா? தூங்கலையா?" வாசு அன்னையிடம் கேட்க,
"போகணும் வாசு! உன் அத்தை, மாமா எல்லாம் இங்க தான் தங்க போறாங்க.. அவங்களுக்கு வசதி பண்ணிட்டா நானும் தூங்க வேண்டியது தான்.." என்றவர்,
"அம்மு! கிட்சன்ல லதாகிட்ட பாலை காய்ச்ச சொன்னேன்.. நீ போய் பாரு" என்று கூறவும், கவனமாய் சரி என தலையை மட்டும் ஆட்டியவள் வாசுவை ஓரப் பார்வை பார்த்து செல்ல,
"விஷ்வா நீ போய் தூங்கு நேரமாச்சே!" என அவனையும் அனுப்பினார்.
"என்ன தனியா பேசணும்னு எல்லாரையும் அனுப்புறீங்க?" என்ற வாசு சற்று முன் திஷிதா அம்ரிந்திருந்த நாற்காலியில் அமர,
"என்ன வாசு இப்படி இருக்க!" என்றார் எடுத்ததும்.
"என்னனு சொல்லுங்க ம்மா!" என்றவன் ஜக்கில் இருந்தா நீரை ஊற்றிப் பருகினான்.
"வாசு! எதிர்பாராத திருமணம்னாலும் திக்ஷி முழு மனசா தான் சம்மதிச்சிருக்கா.. புரியுது தானே? பின்ன ஏன் நீ இப்படி இருக்க? அவ சின்ன பொண்ணு டா.. அவளுக்கும் ஆசை இருக்கும் தானே?" என்று பேச பேச,
"ம்மா!" என்று நிறுத்தி இருந்தான் வாசு.
"நான் என்ன பண்ணிட்டேன்னு இவ்வளவு பேசறீங்க?" என்று அவன் பார்வை கூர்மை பெற கேட்க, அதிகமாய் பேசிவிட்டோமோ என யோசித்தார் மீனாட்சியும்.
"என்ன சொன்னா உங்க அம்மு?" மீண்டும் அவன் கேட்க,
"எல்லாம் சொன்னா! இன்னைக்கு முழுக்க நீ என்ன பண்ணினன்னு நேருல நான் பார்த்த மாதிரியே இருந்திச்சு அவ சொன்னது " என்று கூறி புன்னகைக்க, அவன் புன்னகைத்தானா என்பது அவனுக்கு தான் வெளிச்சம்.
"முதல் நாளே அவளை மிரட்டுற மாதிரியே பேசி வச்சிருக்க?" என்றவர் திக்ஷிதா கூறியதில் தனக்கு நினைவிருந்த மட்டும் மகனிடம் கூற,
"ஓஹ்!" என்ற ஒற்றை வார்த்தை தான் அவனிடம்.
"சுத்தம்! இப்படி இருந்தா அவளும் தான் என்ன பண்ணுவா?" என்றதும் மகன் முறைப்பாய் பார்க்க,
"இல்ல டா.. அவ சின்ன பொண்ணு!..." என்கவுமே,
"என்ன சின்ன பொண்ணு? நீங்க தானே கல்யாணம் பண்ணி வச்சீங்க?" என்று வாசு கூறிவிட,
'அவ்வளவு தான் இனி இவனிடம் பேச முடியாது' என புரிந்து போனது சிவகாமிக்கு.
"நீ கோபப்பட இதை சொல்லல வாசு.. திக்ஷி கொஞ்சம் வாயாடி தான்.. அதிகமா பேசுறான்னா மனசுல எதுவும் வச்சுக்க மாட்டானு உனக்கு சொல்லனுமா? அப்படிப்பட்ட பொண்ணை நாம அவ இயல்போட ஏத்துக்கனும்.. அதை தான் உன் அம்மா சொல்ல வந்தது" என்று ரத்தினம் கூற,
"இப்ப நான் அவகிட்ட என்ன தப்பா சொல்லிட்டேன்னு ஆளாளுக்கு அட்வைஸ் பண்றீங்க? இனி நான் பேசவே இல்லை அவகிட்ட போதுமா?" என்றவன் அறைக்கு சென்றுவிட,
"இவன் என்னங்க இப்படி இருக்கான்?" என்றார் சிவகாமி கணவனிடம்.
"போக போக சரியாகிடுவான் விடு!" என்று கூறவும் சிவகாமி திரும்ப, பால் ட்ரேயுடன் அங்கே நின்றிருந்தாள் தக்ஷிதா.
அதிர்ச்சியுடன் ரத்தினமும் சிவகாமியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,
"அம்மு!" என அருகே சென்றார் சிவகாமி.
"மாமி! எனக்கு ஒரு சந்தேகம்!" என்றாள் திக்ஷிதா.
"வாசு நீ நினைக்குற மாதிரி எல்லாம் இல்லை டா" என்று சிவகாமி எங்கே மகனை தவறாய் புரிந்து கொள்வாளோ என நினைத்து தவித்துப் பார்க்க,
"உங்க மகனுக்கு பீபி இருக்கா?" என்று கேட்டு இவர்கள் பீபியை ஏற்றினாள்.
"லொள்ளு தான டி உனக்கு..." என சிவகாமி நொடித்துக் கொள்ள,
"பின்ன! இப்ப யாரு நான் சொன்னதை எல்லாம் அவர்கிட்ட சொல்ல சொன்னது? போச்சு.. என்னை என்ன நினைச்சிருப்பார்?" என்று அவள் கேட்க, அதை கேட்ட இரு பெரியவர்களுக்குமே புன்னகை.
"வாசு ரொம்ப பேச மாட்டான் தான்.. அதுக்காக நீ பயப்படுற அளவுக்கு கெட்டவன் எல்லாம் இல்லை" என்று சிவகாமி கூற,
"போட்டுக் குடுத்துட்டு டைலாக் வேற! இனி உங்ககிட்ட எதுவும் சொல்ல மாட்டேன் போங்க!" என்றவள் இரண்டடி முன்னே சென்றுவிட்டு,
"இல்ல இல்ல! வேற யார்கிட்ட சொல்ல முடியும்.. உங்ககிட்ட தான் சொல்லுவேன்.. சமாதானம்.. ஓகே!" என்றவள் பாலை நீட்ட,
"விளையாட்டு பொண்ணு!" என எடுத்துக் கொண்டு நகர்ந்தார் ரத்தினம்.
"உன்னை யார் எடுத்துட்டு வர சொன்னாங்க?" என எடுத்த சிவகாமி,
"இன்னும் நல்ல நேரத்துக்கு நேரம் இருக்கு.. இதை ஹால்ல இருக்கவங்களுக்கு கொடுக்கலாம்.." என்று சிவகாமி கூற,
"உங்க மகனுக்கு?" என்றாள் திக்ஷிதா.
"ஏன் உன் புருஷனுக்குன்னு சொல்ல மாட்டியா?" என அவளிடம் வாயை கொடுக்க,
"ஒவ்வொரு வாட்டியும் என் புருஷனுக்கு, என் புருஷனுக்குன்னு கேட்டா நல்லாவா இருக்கும்?" என்றதும் உனக்கு இது தேவையா என தன்னை தானே நினைத்து மருமகளைப் பார்க்க,
"நான் வேணா வாசுவுக்குன்னு கேட்கவா?" என்றாள்.
"சத்தமா பேசாத டி... வந்துட போறான்" என்று இழுத்து தான் சென்றார் அவளை.
சிவகாமி விருந்தினர்களுக்கு தேவையானதை எடுத்து கொடுத்து என பார்த்துக் கொள்ள, திக்ஷிதாவும் அவருடன் சுற்றிக் கொண்டிருந்தாள்.
அனைவரையும் உறங்க அனுப்பிவிட்டு வெளியே வந்த சிவகாமி, "உன் புருஷனை சாமி கும்பிட கூப்பிடு அம்மு!" என்று திக்ஷிதாவிடம் கூற,
"நீங்க சொன்னதை அப்படியே சொல்லவா?" என்றவளை முறைத்தவர்,
"நீ இங்கேயே இரு!" என்றுவிட்டு மகனுக்கு அங்கிருந்த தொலைபேசியில் அழைத்து வர கூறினார்.
வாசு வந்தவன் சாமி கும்பிட்டுவிட்டு மேலே சென்றுவிட, அமைதியாய் வந்து அமைதியாய் செல்பவனை திக்ஷிதாவும் அமைதியாய் பார்த்து நின்றாள்.
"நீயும் அவன்கிட்ட நல்லா தான் டி நடிச்சுக்குற.. என்கிட்ட அந்த வாய் பேசின.. அவன் வரவும் என்னமா அமைதி ஆகிட்ட?" என சிவகாமி கிண்டல் பேச,
"மாமி! கடுப்பேத்தாதீங்க.. அவரை பார்த்தாலே நாக்கு மேல ஒட்டிக்குது.. அம்புட்டு மிரட்டி வச்சிருக்கார் உங்க புள்ள" என்றவள்,
"இல்ல என் புருஷன்" என்று கூற, சிரித்தபடி உறங்க சென்றுவிட்டார் ரத்தினம்.
"சரி சரி! போய்ட்டு வா! லதா அப்பவே உங்க ரூம்ல பால் கொண்டு வச்சுட்டா!" என்று மருமகள் கன்னம் வழித்து சிவகாமி கூற, அவர் காலில் விழுந்து எழுந்து புன்னகைத்துவிட்டு சென்றாள் திக்ஷிதா.
மகன் மருமகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்றும் தங்க வேண்டும் என்கின்ற வேண்டுதலுடன் தனதறைக்கு சென்றார் சிவகாமி.
ஒற்றை கையை மடித்து முகத்தினை மறைத்தபடி வைத்து படுத்திருந்தான் வாசு.
உள்ளே சென்றவள் அவன் தூங்கி விட்டானோ என பார்த்தபடி நிற்க,
"டோர் கிளோஸ் பண்ணு திக்ஷி!" என்ற சத்தத்தில் திடுக்கிட்டவள்,
'முழிச்சு தான் இருக்கானா?' என நினைத்துக் கொண்டு அவன் கூறியதை செய்து வர,
"நான் என்ன மிரட்டினேன்னு அம்மாகிட்ட கம்பளைண்ட்?" என்றான் எழுந்து கொண்டே.
'போச்சு! மாமி! உங்க மகனுக்கு எங்க பேசனும் என்ன பேசணும்னு எதுவுமே தெரியாம வளர்த்து விட்ருக்கீங்களே!' என்று வாய் வரை வந்த வார்த்தைகளை அவள் விழுங்க,
"ஸ்பீக் அவுட்..!" என்றான் அவளருகில் வந்து.
'நானாடா மாட்டேன்றேன்.. வர மாட்டுதே' என்று நேரம் கெட்ட நேரத்திலும் அவளுக்கு தோன்ற,
"பேசாதனு எப்பவாச்சும் சொன்னேன்னா உன்கிட்ட? ஐயர் மந்திரம் சொல்லும் போது அங்கே தானே கான்சென்ட்ரேஷன் இருக்கனும்? நம்ம லைஃப்க்கு தானே?" என்றவனை ஆ' வென்று அவள் பார்க்க,
"ஆரத்தி சுத்தும் போதும் தனியா பேசிட்டு இருந்த தானே?" என்று கேட்க, இப்பொழுது எதுவுமே நியாபகத்தில் இல்லை அவளுக்கு.
'என்ன இவ்வளவு பேசுறான்! திக்ஷி பேசுறானேனு வாயை குடுத்துடாத.. மூஞ்சில ஒரு எக்ஸ்பிரஸனும் இல்ல.. நோட் பண்ணிக்கோ!' என்று நினைத்து அவள் நிற்க,
"சரி உன்னை பத்தி சொல்லு" அவன் கேட்டு அவள் முன் நின்றான்.
"பே.. பே பே.. பே பே பே!" என ஊமை பாஷை தான் வந்தது அவன் முன்.
"உன்னை தான்!" என்று அவள் கைகளைப் பிடித்து உலுக்க,
"ஹான்!" என நிமிர்ந்து அவனைப் பார்த்து அவள் விழிக்க, அவளை விட்டு வந்து பாலை ஊற்றிக் கொண்டு வந்து நீட்டினான்.
'அதை குடு டா முதல்ல.. நாக்கு வறண்டு போச்சு' நினைத்தவள் வாங்கி மடக் மடக்கென குடித்துவிட்டு அவன் முகம் பார்க்க, முகத்தில் அவளுக்கான எந்த ஒரு ப்ரத்தியேக பாவமும் இல்லை.
"ஹ்ம்! சொல்லு!" என்றவன் கட்டிலில் அமர்ந்து அவள் அமர்வாதற்காக பக்கத்தில் பார்க்கவும் செய்ய,
'ஓஹ்! நீ பார்த்தா நான் உட்காரணுமோ?' என நினைத்து முடிப்பதற்குள் அருகில் சென்று அமர்ந்திருந்தாள்.
"அதான் எல்லாம் வீட்டுல சொல்லி இருப்பாங்களே!" என்றவள் அவன் முகத்தை பார்க்கவே இல்லை அவன் பார்வை முழுதும் அவளிடம் இருப்பதை அறிந்து.
"அவங்க சொன்னது இருக்கட்டும்.. நீ சொல்லு! நீ இவ்ளோ சைலன்ட் இல்லைனு எனக்கு தெரியும்.. நீ இங்க எவ்வளவு பேசினாலும் எனக்கு நோ ப்ரோப்லேம்" என்று கூற,
'என்ன டா பேசாததுக்கு எல்லாம் சேர்த்து வச்சு பேசுறான்' என நினைத்தவள்,
"பேரு திக்ஷிதா.." என்று ஆரம்பிக்கவும்,
"திக்ஷிதா அலைஸ் அம்மு! ரைட்?" என்றான்.
"அட கொஞ்ச நேரம் பேசாம தான் இரேன் ய்யா!" என்று மனம் அலற,
"அது அம்மா அப்பா அப்படியே சின்ன வயசுல இருந்தே கூப்பிட்டு பழக்கம் ஆகிடுச்சு!" என்றாள்.
"ம்ம் நெக்ஸ்ட்?" என்றவன் கைகள் அவள் கை தொடும் தூரத்தில் இருக்க, அதை பார்த்தபடியே பேசினாள்.
"வாட்?" என்றவன் கோபக் குரலில் இவள் துள்ளி எழ,
"என்ன சொன்ன?" என்றான் நேராய் முகம் பார்த்து.
தொடரும்..