• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நதி 9

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
789
597
93
Chennai
அத்தியாயம் 9

"நீ இன்னும் ஆபீஸ் போகாம என்ன பண்ற?" விஷ்வா வீட்டு வாசலில் இறங்கி நின்று அவனிடம் வாசு கேட்க,

"கிளம்பிட்டேன் பாஸ்! நீங்க வர்றிங்களேன்னு தான்" என்றான் விஷ்வாவும்.

"எப்படிங்க இப்படி ஒரு ஆள்கிட்ட வேலையில சேர்ந்திங்க?" என்று விஷ்வா காதருகில் வந்து திக்ஷிதா கேட்ட கேள்வியில் விஷ்வா சத்தமாய் சிரித்துவிட,

வாசு திரும்பிவிட்டான் மனைவி பக்கமாய். "சிறப்பு!" என்றவள் குனிந்த தலையோடு விஷ்வா வீட்டினுள் செல்ல, புன்னகையோடு வரவேற்றார் துளசி அவர்களை.

"சாப்பிட கூப்பிடுறாங்க!" துளசியின் சைகைக்கு விஷ்வா கூற,

"எனக்கு புரிஞ்சது!" என்ற திக்ஷிதா,

"ஆண்ட்டி! இனி உங்களுக்கு கஷ்டமே வேண்டாம்.. நைட்லேர்ந்து நானே சமைச்சுக்குவேன்" என்று திக்ஷிதா கூற, துளசியும் சிரிக்க, அடுத்து திக்ஷிதா எதுவோ சொல்ல வரும் முன் அவள் கைகளை பற்றினான் வாசு.

என்னவென திரும்பிப் பார்க்க, "பேசினா பேசிட்டே இருப்பா.. எனக்கு ஆபீஸ் டைம் ஆச்சு துளசிம்மா!" என்றவன் எழுந்து சாப்பிட சென்று அமர,

"சேட்டையை பார்த்தியா உன் பாஸ்க்கு.. அவரும் நான் பேசுறதை கேட்க மாட்டார்.. யாரையும் கேட்க விடவும் மாட்டார்" விஷ்வாவிடம் திக்ஷிதா புலம்ப,

"ஆனா எங்களுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு.. நல்லா பேசுறீங்க!" விஷ்வா கூற,

"உங்களுக்குன்னா? அந்த இக்குக்கு ஐஷுவையும் சேர்த்துக்கணுமா?" என்று கூறி திக்ஷி கண் சிமிட்ட,

"தெய்வமே!" என வணங்கினான் விஷ்வா.

"திக்ஷி!" என்ற வாசுவின் குரலில்,

"சொல்லல?" என்றவள் வாசு இருக்குமிடம் செல்ல,

"பாஸ்க்கும் உங்களைப் புடிக்கும்.. அதான் பார்த்தாலே தெரியுதே!" என்றான் விஷ்வா.

"என்ன தெரியுதாம்?" என்றவள் வாசு அருகே வந்து நல்ல பிள்ளையாய் அமர்ந்து சாப்பிட, துளசி சைகையில் பேசியப்படியே இருந்தார் வாசுவிடம்.

வாசு துளசியைப் பார்ப்பதும் பின் விஷ்வாவை முறைப்பதுமாய் இருக்க, ஐஸ்வர்யா விஷயம் என்று மட்டும் புரிந்தது திக்ஷிதாவிற்கு.

"நான் கிளம்புறேன் ம்மா!" என்றவன்,

"பை சிஸ்டர்!" என்றுவிட்டு வாசுவை பார்க்காமல் கிளம்பிவிட,

"பொழைக்க தெரிஞ்ச பிள்ளை!" திக்ஷிதா நினைத்து சிரித்துக் கொண்டாள்.

துளசியிடம் சொல்லிக் கொண்டு இருவரும் கிளம்பிவிட,

"ஆண்ட்டி என்ன சொன்னாங்க? சரியா எனக்கு புரியலை" என்றாள் திக்ஷிதா காரில் ஏறியதும்.

"அதான் வளந்து உன்கிட்ட நின்னானே! அவன்கிட்ட கேட்டிருக்க வேண்டியது தானே?" என கோபத்தை இங்கே காட்ட,

"உக்கரத்து இருக்காங்க போலயே!" என நினைத்தவள் வாயை மூடிக் கொண்டாள்.

"நேத்து வந்த பொண்ணுக்கு அவ தாய்மாமா பையன் கூட நிச்சயதார்த்தமாம்.. அந்த பொண்ணோட அப்பன் வந்து மிரட்டிட்டு போயிருக்கான் ரெண்டு நாள் முன்னாடி" என்று வாசுவே கூற,

"ஓஹ்!" என்று கேட்டுக் கொண்டாள் திக்ஷிதா.

"ஆனா அந்த பொண்ணுக்கு விஷ்வாவை தானே புடிச்சிருக்கு.. அப்புறம் எப்படி?" என்று அவளே சில நொடிகள் கழித்து கேட்க,

"அவளுக்கு புடிச்சா போதுமா? பேமிலிக்கு புடிக்க வேண்டாம்? இப்படி தான் பின்னாடியே சுத்துவாங்க.. அப்பா மிரட்டினாங்க அம்மா செத்துடுவேன்னு சொன்னாங்கனு செண்டிமெண்ட்டா பேசி வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிட்டு போவாங்க.. இது தானே நடக்குது உலகத்துல" என்றவன் பேச்சு நியாயம் தான் என்றாலும் முழுதாய் சரி என்று சொல்லிட முடியாதே.

"ஆனா உண்மையா லவ் பண்ற பொண்ணுங்களும் இருக்காங்க தானே?" என்று சின்ன குரலில் அவள் கேட்க,

"உன் அக்காவை சாம்பிளா வச்சு சொல்றியா?" என்றான் சட்டென,

ஆமாம் என்றோ இல்லை என்றோ சொல்ல முடியாத நிலையில் அவள் விழிக்க,

"தைரியம் தேவை இல்லை.. நம்பிக்கை ரொம்ப தேவை.. வீட்டுல கண்வின்ஸ் பண்ண முடியாதவங்க வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணி எதை சாதிக்க போறாங்க? மண்டபத்துல இருந்து ஒரு பொண்ணை காணும்னா அது பெத்தவங்களுக்கும் அவளை நம்பி மனமேடை வரை வந்த மாப்பிள்ளைக்கும் எவ்வளவு அவமானம்னு தெரியாத ஒரு பொண்ணு உலகத்துல எதை சாதிக்க முடியும்?" என்றவன் பேச்சை சத்தியமாய் திக்ஷிதா எதிர்பார்க்கவில்லை.

"வேற யார் பேச்சும் இப்ப தேவை இல்லை.. லவ் பண்றேன் கல்யாணம் பண்ணி வையுங்கன்னு விஷ்வாக்காக அந்த பொண்ணும் அவங்க வீட்டுல பேசணும்.. விஷ்வாவும் பேசி இருக்கனும்.. அப்படி அந்த பொண்ணுக்கு நிச்சயதார்த்தம் மட்டும் நடந்துச்சுன்னா இவனை அவ பக்கம் திரும்ப கூட விட மாட்டேன்" என்றவன் பேச்சின் அழுத்தம் நன்றாய் புரிந்தது இவளுக்கு.

"எவ்வளவு தான் நல்ல பையன் நல்ல பொண்ணுன்னாலும் சிலர் பேமிலி பேக்கிரவுண்டு, பிரெஸ்டிஜ்னு ஒத்துக்க மாட்றாங்க தானே? அதை இல்லனு சொல்ல முடியாதே? அந்த மாதிரி கூட இருக்கலாம் ஐஸ்வர்யா வீட்டுலயும்" என்றவள் முகத்தை வாசு பார்க்க,

"இல்ல! அப்படியும் இருக்க வாய்ப்பு இருக்கு தானே?" என்றாள் அமைதியாய்.

"தன்னால முடியாததுக்கு காரணம் எவ்வளவு வேணா சொல்லலாம்.." என்றவன் அமைதியாகிவிட, திக்ஷிதா தான் அவன் நியாயத்தில் குழம்பிப் போனாள்.

"அப்ப லவ்னாலே பொய்ன்றீங்களா?" திக்ஷிதா கேட்கவும் அவள் கல்லூரி முன் வண்டி நின்றிருந்தது.

"நான் எப்ப அப்படி சொன்னேன்?" என்றவனின் விரிந்த புன்னகையோடு கண்களும் அதில் கலந்து கொள்ள, இவ்வளவு நேரமும் பேசியது நீயா என்று தான் கேட்க தோன்றியது.

"காதலிச்சா சொல்லணும்.. பேசணும்.." என்றவன்,

"சொல்லிடலாம்" என்று முடித்து கையைக் காட்ட, கல்லூரி வந்ததை கவனித்தவள் இறங்கிக் கொண்டாள்.

"ஹாஸ்டல் எப்ப வெக்கெட் பண்ணனும்?" என்றான்.

"தெரியல.. இனி தான் வார்டன்கிட்ட பேசணும்" என்று கூற,

"பேசிட்டு சொல்லு.. நான் வர்றேன்!" என்றவன் தலைசைப்புடன் கிளம்பிவிட,

"இவன் பேசாமல் இருந்தாலே நல்லது போல டி திக்ஷி.. கொஞ்ச நேரத்துல பைத்தியமாக்கிருப்பான் போல" நினைத்து தலையை உலுக்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.

பத்து மணி அளவில் சரியாய் அழைத்துவிட்டாள் சங்கமித்ரா.

அப்பொழுது தான் நண்பர்களுக்கு பதில் சொல்லி ஓய்ந்து போயிருக்க, அய்யோ என்ற ஒரு சலிப்பும் கூடவே நேற்று அவள் பேசியதும் நினைவில் வர அழைப்பை எற்றாள்.

"சொல்லு சங்கு! இப்ப எங்க இருக்கீங்க? எப்படி இருக்க?" என்று கேட்க,

"நான் சென்னை வந்துட்டேன் டி.. அதை விடு.. அம்மா அப்பா ஏன் இப்படி பண்ணினாங்க? இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.. நீயாவது வேண்டாம்னு சொல்லி இருக்கலாம் இல்ல?" என நேற்றைப் போலவே பேச,

"இப்ப என்ன நடந்துச்சுன்னு இப்படி பேசுற?" என்றாள் அமைதியாய் திக்ஷிதா.

"திக்ஷி! ஏன் டல்லா பேசுற? அவன் எதாவது பேசினானா உன்னை? என்கிட்ட பேச கூடாதுனு சொன்னானா? எனக்கு பயமா இருக்கு டி.. நீ அங்கே நல்லா இருக்கியா?" என்று கேட்க, சுருசுருவென தன்னையும் மீறி வந்துவிட்டது திக்ஷிதாவிற்கு.

"நீ யாரை சொல்ற?" என்று அப்போதும் அமைதியாய் கேட்க,

"அதான்! உன்னை கல்யாணம் பண்ணின ஆளை தான் கேட்குறேன்!" என்றாள்.

"தெரியுது இல்ல? என்னை கல்யாணம் பண்ணி இருக்கார்.. என்னோட ஹஸ்பண்ட்.. தெரிஞ்சும் அவன் இவன்ற?" என்று கேள்வியில் அந்த பக்கம் அமைதி.

"இருக்குறியா க்கா?" என்றாள் திக்ஷிதா.

"திக்ஷி! நான் ஏன் சொல்றேன்னு புரியாம பேசுற!"

"புரியுது க்கா! இப்ப என்ன? ஆமா நீ வேண்டாம்னு சொன்னவரை தான் நான் கல்யாணம் பண்ணி இருக்கேன்.. நீ நல்லா தானே இருக்க? அப்புறம் ஏன் எனக்கு கால் பண்ற?"

"திக்ஷி!"

"நீ பேசுறது எந்த விதத்துல சரினு நினைக்குற? உனக்கு பிடிச்சவரோட நீ கிளம்பிட்ட.. அதுக்கு நானும் துணை தான் நான் இல்லைனு சொல்லல.. ஆனா நீ பண்ணினது சரியா? ஒரு முறை ஒரே ஒரு முறை உன் லவ்வை அப்பாகிட்ட சொல்லி பார்த்தியா? இல்லைல? இப்ப வந்து ஏன் கல்யாணம் பண்ணினனு கேட்குற? உன்னை அனுப்பின அப்புறம் தான் நான் பண்ணினது எவ்வளவு பெரிய தப்புன்னு எனக்கு புரிஞ்சது.. அன்னைக்கு அப்பா, அம்மாவை..." என்றவள் பேச முடியாமல் நிறுத்திவிட,

"அதுக்காக நீ கல்யாணம் பண்ணனுமா திக்ஷி?" என்றாள் அப்போதும் சங்கமித்ரா.

"உன்னால தலை குனிஞ்சவங்க திரும்ப மீண்டு வரணும்னா இதை விட வேற வழி இல்லைனு சொன்னாங்க.. அதனால சரினு சொன்னேன்.. அத்தோட அப்பா உனக்குன்னு பார்த்த மாப்பிள்ளை ஒன்னும் சாதாரண ஆள் இல்லை.. அப்பாவோட பொண்ணாவும் சரி இப்ப வாசு தேவனோட மனைவியாவும் சரி நான் சந்தோசமா இருக்கேன்.. இனியும் இருப்பேன்.. இனி என்னோட வாழ்க்கையை பார்த்துக்க எனக்கு தெரியும்.. உன்னோட லைஃப்பை நீ பார்த்துக்கோ.. அவ்வளவு தான் க்கா!" என்று திக்ஷிதா கூறி முடிக்க, சங்கமித்ரா அமைதியாகி இருந்தாள்.

"உன்கிட்ட பேச கூடாதுன்னு சொல்ல அவருக்கு உரிமை இருக்கு க்கா! நம்மளால பாதிக்கப்பட்டவர் பேச தான் செய்வார்.. அதுக்கு நான் மதிப்பு குடுத்து தான் ஆகணும்.. ஏன்னா நானும் உனக்கு துணை போயிருக்கேன் இல்ல?" என்று கேட்க,

"நீயா இப்படி பேசுற திக்ஷி?" என்றாள் அழுகையுடன் சங்கமித்ரா.

"உன்னை கஷ்டப்படுத்த நான் சொல்லல க்கா.. அன்னைக்கு கூட இருந்து அப்பாவை பார்த்ததனால சொல்றேன்.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ! அப்பா, அம்மா கூட என் ஹஸ்பண்ட்க்கும் என்னைக்கு எல்லாம் மறந்து நாம சேரணும்னு இருக்கோ.. அப்ப நாம பேசிக்கலாம்.. ப்ளீஸ்! அதுவரை போன் பண்ணாத க்கா.. அதுக்கும் காலம் வரும்" என்றவள் வைத்துவிட்டாள்.

மதியம் வரையில் இருந்த ப்ராஜெக்ட் வகுப்பில் கவனம் செலுத்தியவள் இரண்டு மணிக்கு பிறகு விடுதிக்கு சென்று நடந்ததை கூற, கடிதம் எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டனர்.

குடும்பத்தினர் கையெழுத்து தேவை என்றதற்கும் வாசு தான் வருவதாய் கூறிவிட, அனைத்தையும் சென்று எடுத்து வைத்து தயாராகிவிட்டு அவனுக்கு அழைக்க, அடுத்த அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தான் வாசு.

வார்டன் கொடுத்த லெட்ஜரில் கையெழுத்து இட்டவன் "போலாமா திக்ஷி?" என்று கேட்க, சரி என தலையசைத்து இரண்டு பெட்டிகளையும் எடுத்து வந்தாள்.

"என்ன இருந்தாலும் கல்யாணம் ஆன பொண்ணுங்களுக்கு தனி மரியாதை தான்.. ஆனாலும் கெத்தா இதுவும் நல்லா தான் இருக்கு" என்று தொலைபேசியில் பேசியபடி பெட்டியினை பின்னால் வைக்க, டிரைவர் சீட்டருகே நின்று அதை கேட்டவனை கவனிக்க மறந்திருந்தாள்.

"ரூல்ஸ் போட்டே கொல்லுவாங்க ம்மா.. எதுவுமே சொல்லாம அதுவும் உடனே அனுப்பி வச்சுட்டாங்க.." என்று தொடர்ந்து மொபைலில் கதை பேசி முன் வந்து அமர, வாசுவும் அவள் பேச்சினை கவனிக்க ஆரம்பித்திருந்தான்.

தொடரும்..
 
  • Love
Reactions: Durka Janani

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
467
188
63
Coimbatore
மாம்ஸ் ரொம்ப மொறைக்காதீங்க
மனசும் மாறும் வேலையும் வரும்
மங்கையிடம் மாட்டிக் கொண்டு
முழிக்க நேரிடும் 😂😂😂😂....
அக்கா கிட்ட சரியா பேசிட்ட தக்ஷி.....
 
  • Haha
Reactions: Rithi