• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நந்தினி ஆறுமுகம் - கனவு

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
கனவு

இன்னும் ரெண்டு நாள்ல பொங்கல் பண்டிகை வந்துடும். எல்லோரும் எதிர்பார்க்கிற மாதிரி குமாரியும் பொங்கல் பண்டிகையை ரொம்ப எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்தாள். வெளியே சைக்கிள் பெல்சத்தம் கேட்டது .அம்மா வெளியே போய் பார்த்தாள்.

"வாங்கண்ணே,உங்களை தான் எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன்.
நாளைக்கு புது துணி படைக்கணும் பரவாயில்லை சரியான நேரத்துக்கு வந்துட்டீங்க" என்று அம்மா பேசும் குரல் கேட்டது .

வந்தது எப்போதும் பொங்கலுக்கு துணி தைத்து தரும் தையல்கார மாமா என்று புரிந்தது.

அம்மா ஆசையாக புது துணிகளை கொண்டு வந்து சாமி மாடத்தில் வைத்தாள். "குமாரி நாளைக்கு சாமி கும்பிட்ட பிறகு பொங்கல் அன்னிக்கு நீ புது துணி போட்டுக்கோ,உனக்கு பிடிச்ச சிவப்பு கலர் பாவாடை தான்.அம்சமா இருக்கும் உனக்கு" என்று சிரித்தவாறு சொன்னாள்.

குமாரிக்கு புது துணியில் மனம் லயிக்கவே இல்லை.அவள் போட்டு இருந்த பிராக் ஐ பார்த்தாள். போன வருடம் பொங்கலுக்கு மெத்தை வீட்டு சுந்தரி அக்கா மெட்றாஸ்ல இருந்து வந்தப்ப அவங்க பொண்ணு போட்டு பழகின துணினு நாலுபிராக் தந்தாங்க.அவங்க பொண்ணு குமாரிய விட சின்ன பொண்ணு தான். ஆனா பட்டணத்தில் இருக்கற சொகுசோ என்னவோ குமாரிய விட வளர்த்தி ஜாஸ்தி.

அந்த பிராக் லாம் போடறப்ப குமாரிக்கு அப்படியே தான் ஒரு தேவதைன்னு நினைப்பு வந்துடும்.அதுவும் அந்த புசு புசு வெள்ளை பிராக் போடறன்னிக்கு தலை குளிச்சு முடி காத்திலே பறக்க விட்டு ராசக்குமாரின்னு அவ பேருக்கு ஏத்த மாதிரி நினைப்பிலேயே நடந்து போவா..

ஊருல நிறைய பேர் குமாரிய பார்த்து சொல்லுவாங்க . "பரவாயில்லைடி கொடுத்து வைச்ச பொறப்பு பொறந்துட்டாடி இவ. அந்த மெத்த வீட்டு மகராசன் எச்ச கையில் காக்கா ஓட்ட மாட்டான்.அவன் பொண்ணு சுந்தரி பரவாயில்லை போல.இந்த பொண்ணு மேல ஏதோ பாசம் வைச்சிருக்கா. வருஷா வருஷம் பட்டணத்து துணி அந்த மகராசி மூலமா வாய்க்குது இந்த பட்டிக்காட்டச்சிக்கு.."ன்னு.அவங்க பொறாமை பேச்சை கேக்கவே பெருமையாதான் இருக்கும்.இன்னும் ஆகாசத்தில பறப்பாள்.

"அந்த புது துணியை எடுத்து பாருடி ராசகுமாரி" என்று அம்மா குரல் சத்தமா கேக்கவே நிதானத்திற்கு வந்தாள்.அம்மா சந்தோஷமா இருக்கும் போது தான் அவ முழு பெயரை ராசக்குமாரின்னு கூப்பிடுவா.
அதே சீட்டி பாவாடை.ஒவ்வொரு வருஷமும் இதே தான்.மொடமொட ன்னு.அடுத்த பொங்கல் வரை கிழியக் கூட கிழியாது.சில வீட்டுல எத்தனை பொண்ணுங்க இருக்காங்களோ அத்தனை பேருக்கும் ஒரே டிசைன் துணி பண்டல் எடுத்து பாவாடை தைப்பாங்க.குமாரி ஒரே பொண்ணு அதுக்கு பின்னாடி ஒரு பையன்.அதனால் அந்த தொல்லை மட்டும் இல்லை.

"அட போம்மா, வருஷம் வருஷம் இதே சீட்டி பாவாடை தான்.. இதோ இந்த மாதிரி பிராக் ஏதாவது வாங்கி தரலாம்ல .எனக்கு எவளோ நல்லா இருக்கு..சரி வாங்கித் தான் தரல.அந்த அக்கா வருஷா வருஷம் ஆசையா தராங்கல்ல .அதையும் பொங்கல் அன்னிக்கு போடவிட மாட்டேன்ற.புது துணி தான் போடணும் சொல்ற.அந்த அக்கா குடுத்த துணி அவங்க முன்னாடி போட்டு காம்பிச்சா அவங்களுக்கு எவளோ சந்தோஷமா இருக்கும்."

"துடப்பக்கட்டைல நாலு வைச்சேனா தெரியும்டி உனக்கு..குடிகாரனுக்கு பொறந்துட்டு உனக்கு பிராக் கேக்குதோ. நானே கூலிக்கும் நூறு நாள் வேலைக்கும் போய் கஞ்சிக்கும் கூழுக்கும் அல்லாடிட்டு இருக்கேன்.இதெல்ல உனக்கு ஆசை வேற இருக்குதோ.. கட்டிக்கொடுக்க போற பொண்ணாச்சே..நாளைக்கு என்னைய மாதிரியே நாள் கிழமைக்கு கூட புது துணி கிடைக்காதே,இங்க இருக்கிற வரைக்குமாவது புது துணி போடட்டுமேன்னு வாங்கி தந்தா உனக்கு ஆசை கப்பல் மேல போகுது போல..முடக்கி மூலையில் உக்கார வைச்சிடுவேன் பார்த்துக்கோ."

"சரி ,கடைசி பொங்கலுக்காவது அவங்க தர கவுன் போடவிடலாம்ல
..அன்னிக்கும் முடியாது,
அழுக்காகிடும்ன்னு சாக்கு சொல்ற."

"அவங்க ஊருக்கு திரும்பி போற வரை அவங்க குடுக்கிற துணியை நீ போட்டு அவங்க கண்ணு முன்னால நிக்க கூடாது. புரியுதா.."

குமாரிக்கு என்ன புரிந்தது என்ன தெரியவில்லை. கண்ணில் வந்த நீரை அடக்கி கொண்டு தலையை ஆட்டினாள்.அம்மாவிடம் இருப்பது இயலாமையா இல்லை வைராக்கியமா என்று அவள் வயதுக்கு புரிவதில்லை. ஆனால் அவளுக்கு குடிகார அப்பாவிடம் படும்பாடு கண்டு அம்மா மேல் ஒருவித பயமும் மரியாதையும் இருந்தன.அமைதியாக ஆகிவிட்டாள்.

இந்த வருடம் அந்த அக்கா என்ன துணி தருவாங்க.எத்தனை தருவாங்க,என்ன கலர்ல இருக்கும் என்ற நினைப்பு வரவே வேறு விதத்தில் சமாதானம் ஆனாள்.

அப்படியே கனவு கண்டுகொண்டிருந்ததில் நாள் செல்ல பொங்கல் நாளும் வந்து விட்டது. குமாரி ஆவலுடன் சுந்தரி அக்காவின் வரவை எதிர்பார்த்துக் காத்து இருந்தாள்.

கார் ஹாரன் சத்தம் கேட்டது.அந்த ஊருக்கு காரில் வரும் ஒரே ஆள் அந்த அக்கா தான்.அதுவும் சிவப்பு கார்.அவளுக்கு பிடித்த நிறம்.போய் ஆசையா தொட்டு பார்ப்பாள்.என்றாவது வாய்ப்பு கிடைத்தால் அதில் போக வேண்டும் என்ற ஆசை.ஓடி போய் அவங்க வீட்டு வாசலில் அந்த அக்கா கண்ணில் படும்படி நின்று கொண்டாள்.

அக்கா காரில் இருந்து ஒய்யாரமாக இறங்கினாள். அட அக்கா கையில் என்ன இது.வெள்ளையா பஞ்சு உருண்டை மாதிரி.அது அக்காவை நக்கிக்கொண்டே எல்லோரையும் பார்த்து குலைத்தது.

குலைக்கும் சத்தம் கேட்டு தான் அது நாய் என்றே தெரிந்தது குமாரிக்கு. என்ன குமாரி நல்லா இருக்கியா என்ற கேட்ட அக்காவிடம் வெட்கமாக தலையை ஆட்டினாள்.பின்னால் அக்காவின் பெண் இறங்கினாள்.இன்னும் வளர்ந்து இருந்தாள். அப்பாடா இன்னும் நிறைய சட்டை கிடைக்கும் என்று மனதுக்குள் மகிழ்ந்துக் கொண்டாள் குமாரி.

அவ்வப்போது சுந்தரி அக்காவின் வீட்டை எட்டி பார்த்த போது அக்காவின் அப்பா காரையும் நாயையும் பார்க்க வந்த எல்லோரையும் பார்த்து நாய் மாதிரியே குலைத்து கொண்டிருந்தார்.

குமாரியின் அம்மா சாயந்திர வேளையில் சுந்தரி அக்காவிடம் நலம் விசாரிக்க அவங்க வீட்டுப்பக்கம் போனாள் . வாசலில் பெண்ணுக்கு சடை பின்னிக்கொண்டிருந்த அக்காவிடம் "எப்படி இருக்கே ராசாத்தி, வருஷத்திற்கு ஒரு முறை தான் வரனுமா என்ன அடிக்கடி வரலாம் ல..என் பொண்ணுக்கு எப்பவும் உன் பெருமை தான். நான் கூட சொல்லுவேன். அப்படியே அந்த அக்கா கூட போய்டேன் ன்னு" சொல்லி சிரித்தாள்..குமாரிக்கு வெக்கமா இருந்தது.

"நீங்க சொன்னா ஓகே தான் அக்கா..கூட்டிட்டி தான் போய்டறேனே. இங்க அவ வெயில கஷ்டப்படறதுக்கு என் கூட நிழல இருந்துக்கிட்டு என் பொண்ணு கூட விளையாடிட்டு இருந்தா நல்லது தானே எனக்கும் சவுகரியம் தான்.. அவளும் பார்க்க பிடிப்பா தான் வளருவா.. குமாரியும் அவ பேருக்கு ஏத்த மாதிரி ராஜகுமாரி ஆகிடுவா.."

குமாரிக்கு தான் கேப்பது எல்லாம் நிஜமா என்றே தெரியல.அப்போதே பிராக் போட்டுட்டு மடியில் அந்த புசு புசு வெள்ளை நாய்குட்டிய கொஞ்சிட்டு காரில் போவது போல கனவு காண ஆரம்பித்து விட்டாள்..

"உண்மையா தான் அக்கா கேக்கறேன். அவரும் ஆபிஸ் போறார்.பாப்பாவும் ஸ்கூல் போகுது.சாயந்திரம் டாக்டருக்கு படிக்க பெஷல் டியுஷன் வேற போகுது .தனியா நான் மட்டும் தான் வீட்டில. எனக்கும் போர் அடிக்குது.குமாரி வந்தா எனக்கும் துணையா இருக்கும்.கூட மாட வீட்டு வேலையில் ஒத்தாசை பண்ணா எனக்கும் உடம்பு நல்லா இருக்கும்.அவளுக்கு நாங்க ஏதாவது அவ கல்யாணத்துக்குன்னு வரப்ப செய்து விடறோம்.."

"அது இல்லம்மா.ஸ்கூல் போற பொண்ணு..படிப்பை எப்படி பாதில நிறுத்தறதுன்னு யோசிக்கிறேன்."

"அட போங்கக்கா,பொட்டை பொண்ணு படிச்சி என்ன கிழிக்க போறா.எல்லாம் பள்ளிக்கூடம் போறதே அங்கே சத்துணவு சாப்பிட தான். இதெல வயசுக்கு வந்த உடனே கல்யாணம் செய்துட போறீங்க.இதெல்ல அவ படிச்சா என்ன படிக்காட்டி என்ன."

"அதில்லம்மா நான் தான் படிக்காம குடிகார மனுஷன கட்டிட்டு லோல் படறேன்.அவளாவது நாலு எழுத்து படிச்சா பட்டணத்தில் ஏதாவது கல்யாணம் பண்ணலாம்ன்னு இருக்கேன்."

அம்மா சொன்னது கேட்டு ஆச்சரியமா இருந்தது குமாரிக்கு. இந்த புள்ளை வயசுக்கு வந்த உடனே ஒருத்தனுக்கு கட்டி கொடுத்துட்டு நான் உத்தரத்தல தொங்க போறேன் பாரு ன்னு எப்ப பார்த்தாலும் குடிச்சிட்டு இருக்கிற அப்பாகிட்ட சண்டை போடும்.இப்ப என்னன்னா படிக்க வைக்க போறேன்னு சொல்லுதே ன்னு அம்மாவை அதிசயமா பார்த்தாள் குமாரி.

"அட போக்கா,நம்மூர் பள்ளிக்கூடத்தில வாத்தியாரா இருக்காங்க நாலு எழுத்து நல்லதா சொல்லி தர.டவுனுக்கு பஸ்ல தான் அனுப்பனும்.அதுக்கு பணத்துக்கு என்ன பண்ணுவே.அப்படி போன நம்ம ஊர் பொண்ணுங்களும் நாலு எழுத்து படிச்ச உடனே காதல் கத்திரிக்காய் ன்னு அசிங்கம் வேற பன்னுதுங்க.அதெல்லாம்நமக்கு தேவையாக்கா.."

"நீ சொல்றது புரியுது.ஆனாலும் பிள்ளையை பிரிஞ்சி இருக்கணும் நினைச்சா நெஞ்சில ஒரு மாதிரி சஞ்சலமா இருக்கு"

'நம்ம வீட்டுக்கு தானே அக்கா அனுப்ப போறே.எதுக்கு பயப்படற.நீயும் நானும் அப்படியா பழகி இருக்கோம்.நானும் ஊருக்கு வரப்ப எல்லாம் குமாரிக்குன்னு ஒரு தனி பையில் எல்லாம் போட்டு ஆசையா எடுத்து வருவேன்.நீ படற அல்லலை பார்த்து தான் நானே ரெண்டு வருஷமா யோசிச்சி இன்னிக்கு கேக்கறேன்.உனக்கும் உன் பிள்ளைக்கும் நல்லது பண்ணனும் நினைக்கிறேன்க்கா."

இவங்க பேசிட்டு இருந்ததை பார்த்து அங்கே ஊர் கிழவிங்க கூடிட்டாங்க.ஆளாளுக்கு அம்மாகிட்ட நியாயம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.

"நல்ல சோறு சாப்பிட்டுட்டு நிழல் இருந்து டிசைன் துணி போட்டுக்கிட்டு ராணி மாதிரி இருக்கப்போறா.அப்படியே சம்பளமும் தர போறாங்க.அவ கல்யாணத்துக்கு ஒத்தாசையா இருக்கும். குடிகார புருஷனை வைச்சிட்டி நீ இன்னா பண்ண முடியும் .நல்ல சோறு தான் போட முடியுமா.இப்பவே சூம்பி போய் நிக்கிறா உன்பொண்ணு.அப்பறம் எவன் கட்டிப்பான் அவளை.வயசுக்கு வர வரைக்கும் அவங்க கூட இருக்கட்டும்.பார்க்கிற மாதிரி ஆகிடுவா.அவங்கசொல்றதை கேளு.புள்ளையாவது நல்லா இருக்கட்டும்."

ஒவ்வொரு பாட்டியும் ஒன்னு ஒன்னு சொன்னாங்க ..அம்மா அரை மனதாக நின்றாள்.

குமாரி அம்மா முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள். அம்மா சரின்னு சொல்ல வேணும்ன்னு ஊரில் உள்ள மொத்த தெய்வங்களையும் உதவிக்கு அழைத்தாள்.

சுந்தரி அக்கா உள்ளே போய் தட்டு நிறைய சுவீட்டும் காரமும் கொண்டு வந்து தந்தாள்.
"குமாரி ,என்ன என் கூட வரியா.இந்த மாதிரி பலகாரம்லாம் பட்டணத்தில் தான் பார்க்க முடியும்.வந்தா உனக்கு தான் நல்லது" என்று ஆசையுடன் பேசினாள்.

"நான் அந்தாளுக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுகிறேன்" என்றாள் அம்மா

"அந்த குடிகார மனுஷன் என்னக்கா சொல்ல போறாரு.
கும்பிடற தெய்வம் கூரைய பிச்சிகிட்டி கொட்டுது னு நினைப்பாரு. நீ சொல்லுக்கா" என்று கேட்டு கொண்டே இருந்தாள் சுந்தரி அக்கா.

'இன்னும் ரெண்டு நாள் இருக்கே. நான் யோசனை பண்ணி சொல்றேன்." குமாரிய இழுத்துட்டு வீட்டுக்கு போனாள் அம்மா.

அன்றிரவு முழுதும் தூக்கம் வரவில்லை குமாரிக்கு.நல்ல காற்றோட்டமா இருக்கற
பின்வாசல்ல அம்மா மேல காலை போட்டுக்கிட்டு தம்பியை சேர்த்து பிடிச்சிட்டு வானத்தில் இருக்க நட்சத்திரத்தை பார்த்துட்டு இருந்தா.எப்பவும் அப்படி தூங்கி தான் பழக்கம்.

மேல இருந்த நிலா கூட இன்னிக்கு கோணயா தெரிஞ்சது. அப்பா குடிபோதையில் ஏதோ உளறிட்டு பாத்திரம் உருட்டற சத்தம் கேட்டது.அப்படியே கொஞ்ச நேரத்தில் தூங்கிட்டா குமாரி.

அக்கா இந்த முறை துணி எதுவும் தரவில்லை.ஒருவேளை அம்மா குமாரிய அனுப்பமாட்டேன்ன்னு சொன்னதால கோச்சிகிட்டங்களான்னு தெரியல. ஆனா அவ்வப்போது கூப்பிட்டு தின்பண்டம் தந்து கொண்டு இருந்தாள்.ஒரு விடலை பையன் இவளை பார்த்து பட்டணம் தான் போக போறா டொய் என்று
பாட அவனை நோக்கி கல்லெறிந்தாள்.அம்மா தான் உம்மென்று இருந்தாள்.

அப்பாகிட்ட பேச மன்றாடிட்டு இருந்தா அம்மா.அப்பா எப்பவும் போல குடிச்சிட்டு எங்கெங்கோ விழுந்து கிடக்கிறார் என்று செய்தி வர அவரை போய் ஆள் வைச்சு தூக்கிட்டு வந்து படுக்க வைக்கவே நேரம் பத்தல அம்மாவிற்கு.

திடீர்னு அம்மா பெரும்சத்தமா அழறது கேட்டு வீட்டுக்குள்ள ஓடி வந்தா குமாரி.
"படைக்க வைச்சிருந்த புது துணிய காணோமே .. இந்த குடிகார மனுஷனும் சேர்த்து காணோமே."

குமாரிக்கு ஒன்னும் புரியல.ஓ ன்னு கத்தி கதறி தீர்த்தாள் அம்மா.திடீர்னு குமாரிய தர தரன்னு இழுத்துட்டு சுந்தரி அக்கா வீட்டுக்கு போனாள்.

பொங்கல்பண்டிகை முடிந்தது.சுந்தரி அக்கா ஊருக்கு கிளம்ப தயாராகிட்டாள். ஊரே அவங்க வீட்டு வாசலில் தான் நின்னுட்டு இருந்தது.அவள் மட்டுமா போறாள், கூட குமாரியும் அழைச்சிட்டுல போறாள்.அதை பார்த்து நாலு கதை நாலு நாளுக்கு பேசவேணாமா..

குமாரி பிராக் போட்டுக்கிட்டு பையில மத்த பிராக்லாம் எடுத்து வைச்சிக்கிட்டு தயாரா நின்னாள்.அம்மா அவளை கட்டிக்கொண்டு அழுதாள். அப்பாவை காணவே இல்லை.எங்கேயோ குடிக்க போய் விட்டார்.இவளுக்கு அம்மாவை பிரிவது கஷ்டமாக இருந்தாலும் குஷியாகவே இருந்தாள்.

"குமாரி ,நீ உன் புது பாவாடையே போட்டுட்டு வா..இந்த பிராக்லாம் பழசா ஆகிடுச்சு..கார்ல போறப்போ ஜம்முன்னு வர வேண்டாமா,உன் மத்த ட்ரஸ் லாம் இங்கேயே வைச்சிடு.அங்கே வேற நிறைய ட்ரஸ் இருக்கு போட்டுக்கலாம்" என்றாள் சுந்தரி அக்கா.

குமாரிக்கு வருத்தமாக இருந்தது.புது பாவாடை வேற இல்லை.இருந்ததில் பளிச்சென்று இருந்த பாவாடை ஒன்றை மாற்றி கொண்டு ஓடி வந்தாள்.

"வாரத்திற்கு ஒரு முறை போன் பண்ணி தரேன்.அப்பா வீட்டில வந்து பேசுக்கா.நான் ராணி மாதிரி பார்த்துக்கிறேன் இவளை" என்று அம்மாவை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தாள் அக்கா.

அவங்க வீட்டுக்காரரிடம் திரும்பி அவங்க செலவுக்கு பணம்குடுங்க.
அப்படியே குமாரி தம்பிக்கிட்ட ஏதாவது பலகாரம் வாங்கி சாப்பிட காசு கொடுங்க என்றாள். அவர் கொடுத்ததை ஊரே பெருமையா பார்த்தது.குமாரிக்கு எப்படா அந்த காரில் உக்காருவோம் என்ற நினைப்பு தான் மேலாக இருந்தது.

காரில் அவள் உக்கார புசு புசு நாய் உர்ர் என்றது அவளை பார்த்து .நீ பாப்பா பக்கத்தில் உக்காந்துக்கோ என்று அக்கா சொல்ல அந்த பாப்பா ஏதோ புரியாத பாஷையில்
அவங்க அம்மாகிட்ட முக சுளிப்போடுபேசியது.சரி சரி என்று சொன்ன அக்கா குமாரி நீ என் பக்கத்தில உக்காருன்னுட்டு நாயை அந்த பாப்பாவிடம் கொடுத்தாள்.சுந்தரி அம்மாக்கும் தம்பிக்கும் டாட்டா காண்பித்தாள்.

கார் கிளம்பி தெரு திரும்பும் வரை எல்லோருக்கும் டாட்டா சொல்லி கொண்டே இருந்தாள்.அக்காவின் பெண் வழி நெடுக அந்த நாயை கொஞ்சி கொண்டே வந்தாள் நாளை அவள் ஸ்கூல் போனபிறகு நாம கொஞ்சலாம் மனதுக்குள் நினைத்து கொண்டாள் குமாரி.

வழியில் ஒரு ஹோட்டலில் நிறுத்தினார்கள்.
"உனக்கு பஸ்ல போனா வாந்தி வருமா குமாரி ?"
" ஒரு முறை வந்தது அக்கா "
"சரி அப்பண்ணா நீ டீ மட்டும் குடி.கூட அந்த பட்டர் பிஸ்கட் சாப்பிடு .
வீட்டுக்கு போய் நீ சாப்பிட்டுக்கலாம் சரியா.. "
"சரிக்கா.."
அவர்கள் ஏதோ வகை வகையா சாப்பிட்டார்கள்.அந்த நாய்கூட அவங்க மடியில் உக்கார்ந்து கொண்டு ஏதோ சாப்பிட்டது .இவள் பக்கத்து டேபிலில் உக்கார்ந்து டீ குடித்தாள்.

ஒண்ணுக்கு கூட போக முடில.கேக்க சங்கோஜமா இருந்தது.வழி நெடுக பஸ் கார் மரம் எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு வந்ததில் வீடும் வந்து சேர்ந்தது.
எம்மாடி எவளோ பெரிய வீடு.சுத்தி பூச்செடிங்க.வெளியே ஒரு மூங்கில் சேர்ல ஊஞ்சல்.அதில் அப்பவே மனதளவில் உக்காந்து ஆடியும் விட்டாள் குமாரி.பக்கத்து வீடெல்லாம் இதை விட பெருசா இருந்துச்சி.நாலு தெரு தாண்டாத குமாரிக்கு அனைத்தும் அதிசயமாக இருந்தது.

அந்த நாய் துள்ளி குதித்து ஓடிவீட்டுல நடுவுல போய் ஒண்ணுக்கு விட்டது.

குமாரி அங்கே பின்னாடி ஒரு பாத்ரூம் இருக்கும்.அங்கே சில துணி இருக்கும் .அதை எடுத்து வந்து டாமி பண்ணதை துடைச்சிடு. அப்படியே அதை துவைத்தும் போட்டுடு.

குமாரி ஓடினாள்.வந்து அக்கா சொன்னதை செய்தாள்.திரும்பி போய் அந்த பாத்ரூம் ல ஒண்ணுக்கு போய் விட்டு கை கால்முகம் கழுவிக்கொண்டு வந்தாள்.பசி வேறு வயிற்றை கிள்ளியது.அதற்குள் அக்கா ,சார் ,அந்த பாப்பா எல்லோரும் போய் ஏதோ நீளமா கவுன் மாதிரி ஒன்னு போட்டுட்டு
டி வி பார்த்திட்டு இருந்தாங்க.

டயர்ட் ஆ இருக்குங்க. சீக்கிரம் தூங்கலாம் என்றாள் அக்கா.

குமாரி நீ பாத்ரூம் போன பாரு அது பக்கத்தில இருக்கிற தாழ்வாரத்தில நீ தூங்கிக்கோ ..பாய் தலையணை எல்லாம் அங்கேயே இருக்கு..காலையில் எழுப்பறேன்

"அங்கே ரொம்ப புழுக்கமா இருக்குமே, ஹால் ல ஃபேன் கீழ படுக்க சொல்லேன்" என்றார் சார்

"அவ என்ன ஊர்ல ஃபேன் கீழயா தூங்கினா.புதுசா எதையும் பழக்க படுத்த வேணாம்.நீங்க போய் படுங்க.
நான் சொல்லிட்டு வரேன்"ன்னு சாரை அனுப்பிட்டாங்க அக்கா.

"குமாரி,நீ தூங்கிற இடத்தில் அட்டை பெட்டில உனக்கு ட்ரெஸ் இருக்கு.காலையில நேரமா எழுந்து குளிச்சிட்டு மாத்திக்கோ. வீடு பெருக்கி கழுவிட்டு தான் சுத்தபத்தமா சமையல் வேலை செய்யணும். புரிஞ்சதா.."

மௌனமாக தலையாட்டினாள் குமாரி.அக்கா தூங்க ரூமிற்கு சென்றாள்.அவள் பின்னாலே அந்த நாயும் துள்ளிக்கொண்டு ரூமிற்குள் ஓடியது.

குமாரிக்கு பசி ஒரு பக்கம்.அக்கா தனக்கு தந்து இருக்கும் துணிகளைபார்க்கும் ஆசை ஒரு பக்கம்.அந்த துணி இருக்கும் அட்டை பெட்டியை ஆசையுடன் திறந்து பார்த்தாள். அங்கே அவள் அளவிற்கு ஏற்ற மாதிரி நாலு பழைய சீட்டி பாவாடை சட்டைகள் இருந்தன. ஜன்னல் வழியே நிலா இப்போதும் கோணயாக சிரித்து கொண்டிருந்தது.

***

நன்றி.
 
Suganya

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 6, 2021
Messages
1
எளிய கதை நடை.. இனிய வாசிப்பு அனுபவம். மேலும் சிறுகதைகள் எதிர்பார்க்கிறோம்.❤️
 
Kalpana ganesan

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 6, 2021
Messages
2
அருமையான கதை!! சிறப்பான எழுத்து நடை! வாழ்த்துகள்!
 
ARUNA KUMARI R

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 7, 2021

உயிரும் உணர்வும் கொண்ட உறவுகளுடன் வாழ்வது தான் உண்மையான வாழ்க்கை...
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த குமாரிக்கு மட்டுமல்ல , இக்கதையில் ஏற்படும் நிலை..,..
அனைவருக்குமான அறிவுரை...
பெற்றோர்கள் ஒருவர் சரியில்லை என்றாலும் குழந்தை நிலை பரிதாபத்துக்குரியது என்று வலியுறுத்துகிறார் எழுத்தாளர்...
வாழ்த்துக்கள் நந்தினி அக்கா.
 
Dharsini

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2021
Messages
20
குடிகார அப்பா,கூலி வேளைக்குப் போகும் அம்மா,அறியா வயதில் இயல்பாய் அனைத்துக் குழந்தைகளுக்கும் தோன்றும் குமாரியின் ஆசைகள்,தேனொழுகப் பேசியும் ஏழ்மை நிலையை சாதகமாகப் பயன்படுத்தித் தன்னுடன் குமாரியை அழைத்துச்சென்ற சுந்தரி என கதை அழகாக நகர்கின்றது.சுந்தரி போன்ற பெண்களை என்ன செய்தால் தகும்:(:(..வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்
 
Top